Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

விசுகர்!

நான் புட்டினின் வெற்றிக்காக உழைக்கவுமில்லை. டொனால்ட் ரம்பின் வெற்றிக்காக உழைக்கவுமில்லை.செலென்ஸ்கியின் கொள்கைக்காக உழைத்து பாடுபடவுமில்லை.

இன்றைய அரசியலில் எது நடக்கின்றதோ அதை வைத்தே என் கருத்துக்களை எழுதினேன்.உக்ரேன் போரை எதிர்த்தவர்கள் காசா அழிவை ஆதரித்தார்கள் அல்லது வேடிக்கை பார்த்தார்கள். அவ்வளவுதான்.நாம் அந்த இரு யுத்தங்கள் பற்றி கருத்துக்கள் எழுதலாமே ஒழிய வரலாறுகள் எதுவுமே படைக்கப்போவதில்லை.அது முடியாத விடயம்.

இந்த பிரச்சனை ஐரோப்பாவிற்கு புதிதான ஒன்றல்ல. டொனால்ட் ரம் முதல் நான்கு வருடம் ஆட்சியில் இருந்த போதும் அல்லல் பட்டதுதான்.ரம்ப் அன்று விட்ட குறையை இன்று தொடர்கின்றார்.அவ்வளவுதான். அடுத்த நான்கு வருடங்களுக்கு பல்லைக்கடித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

மற்றும்படி ரஷ்யா ஐரோப்பாவை தன் கைக்குள் கொண்டு வரும் என்ற கருத்துக்கள் எல்லாம் ஒரு வித தேவையில்லாத பகல் கனவுகள் தான்.

அன்று நான் ரஷ்யா சார்பாக கருத்துக்கள் எழுதியிருக்கா விட்டால்....... பந்தி பந்தியாக உக்ரேன்,ரஷ்ய,ஐரோப்பிய வரலாறுகள் ஆவேசமாக எழுதப்பட்டிருக்காது.மாற்றுக்கருத்துக்கள் எழுதப்பட்டதால் தான் நல்லகெட்ட கருத்துக்கள் வெளியே வந்தது. நீங்களும் நானும் ஒரே மாதிரியாக எழுதினால் சுவாரசியம் இருக்குமா விசுகர்? 🤣

இப்போது ஏதோ காணி,கதியால்,வரம்பு பிரச்சனை மாதிரி உக்ரேன் பிரச்சனை எமக்குள் வந்து நிற்கின்றது.😉

அண்ணா மீண்டும் உக்ரைன் போர் தொடங்கிய ஆரம்பத்தில் உங்களுக்கும் சிறிக்கும் நான் எழுதிய பதிலை மீண்டும் வாசியுங்கள். அண்ணன் தம்பிடா...🤩

  • Replies 65
  • Views 3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    ரஸ்ஸியாவின் நிலப்பரப்பை உக்ரேன் ஆக்கிரமித்து வைத்திருப்பது போல டிரம்ப் எனும் கோமாளி கருதுகிறது போலும். ஆக்கிரமிப்பவனை ஆதரித்துக்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவனை போரிற்கான காரணம் என்று அழைப்பதற்கு ஒரு ம

  • கிருபன்
    கிருபன்

    உலகில் பலர் அறம் சார்ந்து இயங்குவதில்லை.. ஆனால் நாம் அறம் எது என்று புரிந்து அதனை விட்டுக்கொடுக்கக்கூடாது. வலியவர்களும் வஞ்சகர்களும் வெல்கின்றார்கள் என்பதற்காக நாம் அறத்தை விட்டுக்கொடுக்கமுடியாது..

  • ரசோதரன்
    ரசோதரன்

    ஆணவம் இல்லாத மனிதர்கள் யார். அதுவே சிலருக்கு அதிகமான உயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மையாக மாறியும் விடுகின்றது. 'என்னுடைய ஒப்பந்தத்தில் நீ கையெழுத்து இடமாட்டாயோ.........' என்பதே இப்படி மாறி நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வதெல்லாம் ரொம்ப ரொம்ப கரெக்டு....

அதிலும் ஒரு சிக்கல் பாருங்கோ..

செலென்ஸ்கி தனி ஆளாக நின்று அமெரிக்காவை அதாவது டொனால்ட் ரம்ப எதிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் ரம்ப் அவர்களின் உக்ரேன் கொள்கையை எதிர்க்கின்றது.அதனோடு சேர்ந்து செலென்ஸ்கியும் முட்டுக்கொடுக்கின்றார் அவ்வளவுதான். டொனால்ட் ரம்பின் முன்னைய ஆட்சியில் பத்திரிக்கையாளர் முன்பே வைத்து செலென்ஸ்கியின் மூக்கை உடைத்தவர் ரம்ப். அதாவது உங்களுக்கு பிரச்சனை என்றால் ரஷ்ய புட்டினுடன் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என முகத்தில் அடித்தாற்போல் வாங்கிக்கட்டியவர் செலென்ஸ்கி. அப்போது வாய் மூடி இருந்துவிட்டு இப்போது ஐரோப்பிய ஒன்றியம் பின்னால் நிற்கின்றது என்றவுடன் நெஞ்ச நிமித்துகின்றார்.என்றாலும் ரம்ப் இரும்பு வரி அந்த வரி இந்தவரி என உயர்த்தா விட்டால் ஐரோப்பிய ஒன்றியமும் வாய்மூடிக்கொண்டுதான் இருந்திருக்கும்.

நாம் செய்ய முடியாததை உக்ரேனியர்கள் செய்து முடிப்பார்கள். ஏனென்றால் எமது நாட்டு பிரச்சனை வேறு. உக்ரேனியர்களின் பிரச்சனை வேறு. ஏனென்றால் உக்ரேனியர்கள் சுதந்திரமாக வாழ்ந்தவர்கள். நேட்டோ ஆசையில் நனைச்சு சுமப்பதற்கு யாரும் எதுவும் செய்யமுடியாது.

என்னது தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாததை!?!?!?!?!?!

தலைவர் எதை செய்து காட்டவில்லை என்பதை இங்கே சொல்லித்தொலையுங்கள்.

ஐரோப்பிய யூனியன் ஒரு பிஸ்கோத்து. குறிப்பாக ஜேர்மனியும் பிரான்சும்.

ஒன்றில் அமெரிக்காவின் காலில் கிடப்பார்கள் அல்லது ரஸ்யாவின் காலில் கிடப்பார்கள்.

பின்லாந்துக்கும், போலந்துக்கும் உள்ள ரோசத்தில் பாதி கூட இவர்களுக்கு இல்லை.

இந்த இரு சோத்துமாடுகளை (இராணுவ ஓர்மத்தில்) விட துருக்கி கூட ஒரு படி மேல்.

அத்தோடு டிரம்ப் கேட்டதுக்கு செலன்ஸ்கி ஒத்து கொண்டிருந்தால், ஜேர்மனியை விட டிரம்புக்கு நெருங்கியவராக செலன்ஸ்கி வந்திருப்பார்.

ஆகவே ஒன்றுக்கும் உதவாத - ஈயூவை நம்பி செலன்ஸ்கி டிரம்ப்போடு முண்டவில்லை.

முந்தைய டிரம்ப் ஆட்சியில் கூட முண்டினார். ஏன்?

டிரம்ப் - உக்ரேனிடம்/செலனஸ்கியிடம் இருந்து எதிர்பார்த்த சிலதை செலன்ஸ்கி கொடுக்க மறுத்தமையால். இதன் அடிப்படையில்தான் டிரம்ப் இம்பீச் பண்ண பட்டார்.

இங்கேயும் காரணம் டிரம்ப் கேட்டதுபோல் உக்ரேனின் நலனை செலன்ஸ்கி விட்டு கொடாமையே.

29 minutes ago, குமாரசாமி said:

தலைவர் எதை செய்து காட்டவில்லை என்பதை இங்கே சொல்லித்தொலையுங்கள்.

இறைமையுள்ள, நிலம் உட்பட அதன் அத்தனை வளங்கள் பற்றியும் அது மட்டுமே தீர்மானிக்கும் உரிமை உடைய, ஈழத்தமிழருக்கான இனவழி தேசியத்தின் அடிப்படையில் அமைந்த சுதந்திர தனியரசை நீண்டகால நோக்கில் நிலை பெறச் செய்தல்.

இதுதான் அவரின் வாழ்வின் ஒற்றை நோக்கம்.

இதை அவரால் செய்து முடிக்க, முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஐரோப்பிய யூனியன் ஒரு பிஸ்கோத்து. குறிப்பாக ஜேர்மனியும் பிரான்சும்.

இது நாள் வரை பலரும் கேட்கும் ஒரு கேள்வி ஏன் அமெரிக்கா உலகம் முழுவதும் எல்லாப் பிரச்சனைகளிலும் தலையிடுகின்றது. இந்த வாரம் வந்த ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்தின் படைபலம், நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்புச் செலவீனங்கள் பற்றிய கட்டுரைகள் ஒரு தெளிவைக் கொடுத்தன. உண்மையிலேயே ஐரோப்பிய யூனியனும், இங்கிலாந்தும் வெறும் வெற்றுக் கோதுகள் தான். அவர்கள் இன்றிருக்கும் நிலையில் அவர்களால் எவரையும் எதிர்க்கமுடியாது. அமெரிக்காவின் பின்னால் பதுங்கி நிற்பது தான் அவர்களால் செய்யமுடிந்தது. இனிமேலாவது வேறு திசையில், சொந்தக் கால்களில் செல்ல முயற்சி செய்யலாம்.

கடந்த வாரம் ஜே டி வான்ஸ் இதையே தான் இப்படிச் சொன்னார், 'பெரியவர்களின் மேசையில் சிறியவர்களுக்கு இடமில்லை......'

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

பிரித்தானிய ஈயுவை விட மோசம்.

அமெரிக்கா குதி என்றால்…

எங்கே என்பது மட்டுமே இவர்கள் கேட்கும் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பிரித்தானிய ஈயுவை விட மோசம்.

அமெரிக்கா குதி என்றால்…

எங்கே என்பது மட்டுமே இவர்கள் கேட்கும் கேள்வி.

கனடாவை ஏன் அவமானப் படுத்துகிறீர்கள் ராசா. குதி என்றால் நான் செல்லப் பிராணி முதலில் குதிப்பேன் என்று அடம் பிடிப்பார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

கனடாவை ஏன் அவமானப் படுத்துகிறீர்கள் ராசா. குதி என்றால் நான் செல்லப் பிராணி முதலில் குதிப்பேன் என்று அடம் பிடிப்பார்கள். 🤣

அமெரிக்கா குதி என நினைத்தாலே…🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய பாதுகாப்பு மாநாட்டில் கூட ஐரோப்பிய ஒற்றுமையை காண முடியவில்லை…சில நாடுகள் அழைத்து கொள்ளப்படவில்லை… ஐரோப்பா சிதைவடைய ஆரம்பித்து விட்டதாக நோக்கர்கள் கூறுகிறார்கள்…அமெரிக்க அதிபர் ஐரோப்பாவை கணக்கில் எடுப்பதாக தெரியவில்லை…அதாவது இன்று ஐரோப்பாவில் ஜக் சிராக்குக்கு பின்னர் ஆளுமை மிக்க தலைவர்கள் யாரும் இல்லை…

தற்போதைய பிரான்ஸ் தலைவர் தன்னை ஒரு பலமிக்க தலைவராக காட்ட முனைகிறார்… அவரால் தனது நாட்டை கூட சரியாக வழிநடத்த முடியவில்லை... இதற்க்குள் ஐரோப்பாவை எப்படி காப்பாற்றுவது…

நேட்டோ அமைப்பில் அமெரிக்கா இல்லை என்றால் அதோ கதிதான்... ட்ரம் சொல்வது போல் உக்ரைனை காப்பாற்ற வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்கிறார்... முன்னதாக பைடன் அவர்கள் ஐரோப்பாவோடு இணைந்து இறஸ்சியாவை யுத்தம் மூலம் பலவீனம் செய்ய நினைத்தார்... ட்ரம் மாறாக புற்றினுடன் கை கோர்த்து சீனா, ஈரான், வடகொரியா நாடுகளை அடக்கி ஆழுவதும் உக்ரைனில் இருந்து கனிமவளத்தை அபகரிப்பதுமே நோக்காக உள்ளது…

அமெரிக்கா பிரித்தானியாவை கூட மதிக்கவில்லை… அமெரிக்க துணை ஜனாதிபதி பிரித்தானியா வெகு விரைவில் முஸ்லிம் நாடாக மாறும் என்று தெரிவித்துள்ளார்…

இப்படியே ஆளாளுக்கு போட்டு தாக்கி ஒட்டு மொத்த ஐரோப்பாவும் வீழ்ச்சி காணப்போகிறது... அமெரிக்க உதவி இல்லாத போருக்கு குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி அதிக நிதியை ஒதுக்க நேர்ந்தால் பாரிய பண வீக்கத்தால் ஐரோப்பா தலைகீழாக மாறும்...

அதன் பின்னர் போர் உக்ரைனை கைப்பற்றுவதோடு நிற்க்கப்போவதில்லை…

ஐரோப்பாவில் தற்போது நிலை கொண்டுள்ள அமெரிக்க படைகள் விரைவில் வாபஸ் பெற படப்போகிறார்கள்.:. வரும் வாரங்களில் ட்ரம் - புற்றினுடன் சந்திப்பு நடைபெறும்... அதன்பிறகு செலன்ஸ்கி சமாதானம் நோக்கி செல்லவில்லை என்றால் இது எல்லாம் சாத்தியமாகும்…

அமெரிக்கா இதுவரை 500 பில்லியன் டொலர்களை உக்ரைன் யுத்தத்திற்கு வழங்கி உள்ளது... இனிமேல் அந்த பணமோ அல்லது ஏவுகணைகளோ கிடைக்காது…

ஐரோப்பாவை யாரும் காப்பாற்ற முடியாமல் போகும்…

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு கட்டுரை பார்த்தேன்.. பிரான்ஸ் ஜேர்மனி பிரித்தானியா இன்னும் ஒரு ஜரோப்பிய நாடு(அல்லது ஒட்டுமொத்த ஜரோப்பாவோ) இவை எல்லாம் ஒன்று சேர்ந்தால்கூட ஒரே ஒரு அமெரிக்காவின் ஜிடிபிக்கு கிட்டவும் வரமுடியாது என்று.. அமெரிக்கா ஒரு பொருளாதார திமிங்கிலம்.. வரப்போகும் 30 வருசத்துக்கு இப்பவே திட்டமிட்டு இருப்பவர்கள்.. ஜரோப்பா கிட்டவும் நெருங்க முடியாது..அமெரிக்கவின் காலில் நெடுஞ்சான் கிடையாக விழுந்துகிடப்பதை தவிர..

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான் ராசாக்கள். ஆனால் அமெரிக்க சந்தை இங்கே தான் இருக்கிறது. அது இருக்கும் வரை.....???

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஐரோப்பிய பாதுகாப்பு மாநாட்டில் கூட ஐரோப்பிய ஒற்றுமையை காண முடியவில்லை…சில நாடுகள் அழைத்து கொள்ளப்படவில்லை… ஐரோப்பா சிதைவடைய ஆரம்பித்து விட்டதாக நோக்கர்கள் கூறுகிறார்கள்…அமெரிக்க அதிபர் ஐரோப்பாவை கணக்கில் எடுப்பதாக தெரியவில்லை…அதாவது இன்று ஐரோப்பாவில் ஜக் சிராக்குக்கு பின்னர் ஆளுமை மிக்க தலைவர்கள் யாரும் இல்லை…

தற்போதைய பிரான்ஸ் தலைவர் தன்னை ஒரு பலமிக்க தலைவராக காட்ட முனைகிறார்… அவரால் தனது நாட்டை கூட சரியாக வழிநடத்த முடியவில்லை... இதற்க்குள் ஐரோப்பாவை எப்படி காப்பாற்றுவது…

நேட்டோ அமைப்பில் அமெரிக்கா இல்லை என்றால் அதோ கதிதான்... ட்ரம் சொல்வது போல் உக்ரைனை காப்பாற்ற வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்கிறார்... முன்னதாக பைடன் அவர்கள் ஐரோப்பாவோடு இணைந்து இறஸ்சியாவை யுத்தம் மூலம் பலவீனம் செய்ய நினைத்தார்... ட்ரம் மாறாக புற்றினுடன் கை கோர்த்து சீனா, ஈரான், வடகொரியா நாடுகளை அடக்கி ஆழுவதும் உக்ரைனில் இருந்து கனிமவளத்தை அபகரிப்பதுமே நோக்காக உள்ளது…

அமெரிக்கா பிரித்தானியாவை கூட மதிக்கவில்லை… அமெரிக்க துணை ஜனாதிபதி பிரித்தானியா வெகு விரைவில் முஸ்லிம் நாடாக மாறும் என்று தெரிவித்துள்ளார்…

இப்படியே ஆளாளுக்கு போட்டு தாக்கி ஒட்டு மொத்த ஐரோப்பாவும் வீழ்ச்சி காணப்போகிறது... அமெரிக்க உதவி இல்லாத போருக்கு குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி அதிக நிதியை ஒதுக்க நேர்ந்தால் பாரிய பண வீக்கத்தால் ஐரோப்பா தலைகீழாக மாறும்...

அதன் பின்னர் போர் உக்ரைனை கைப்பற்றுவதோடு நிற்க்கப்போவதில்லை…

ஐரோப்பாவில் தற்போது நிலை கொண்டுள்ள அமெரிக்க படைகள் விரைவில் வாபஸ் பெற படப்போகிறார்கள்.:. வரும் வாரங்களில் ட்ரம் - புற்றினுடன் சந்திப்பு நடைபெறும்... அதன்பிறகு செலன்ஸ்கி சமாதானம் நோக்கி செல்லவில்லை என்றால் இது எல்லாம் சாத்தியமாகும்…

அமெரிக்கா இதுவரை 500 பில்லியன் டொலர்களை உக்ரைன் யுத்தத்திற்கு வழங்கி உள்ளது... இனிமேல் அந்த பணமோ அல்லது ஏவுகணைகளோ கிடைக்காது…

ஐரோப்பாவை யாரும் காப்பாற்ற முடியாமல் போகும்…

இப்போ—

டிரம்ப் புட்டினின் கையாள் என்ற என் தத்துவத்தை இங்கே அப்பிளை பண்ணி பாருங்கள்.

ஒரு சதிக் கோட்பாடு நிஜமாகும் தருணம் இது.

அமெரிக்காவினை நேரே எதிர்த்து உடைக்க முடியாது என்பதால், உள்ளே இருந்து உடைக்கிறார் புட்டின்.

கிரேக்க இதிகாசத்தில் Trojan குதிரை எனப்படும் ஒரு மரக்குதிரை வரும்.

ஒரு அரசை போரில் வெல்ல முடியாத எதிரி அரசு, ஒரு பெரும் மரகுதிரையை செய்து அதனுள் போர்வீரர்களை பதுக்கி அனுப்பி வைக்கும். அந்த நாட்டினரும் பெரும் குதிரையை சுற்றி ஆடி பாடி மகிழ்ந்து, இரவில் தூங்க சென்ற பின், வீரர்கள் வெளிவந்து, அனைவரையும் போட்டு தள்ளுவார்கள்.

இப்படியான நகர்வுகளை ஆங்கிலத்தில் Trojan Horses என்பார்கள்.

IT யில் பின்னாளில் இப்படியான வைரஸ்சுகளை Trojan என அழைக்கவும் இதுவே காரணம்.

புட்டின் அமெரிக்காவுள் அதன் மூலம் மேற்குக்குள் அனுப்பி உள்ள Trojan Horse நாசகாரி தான் டிரம்ப்.

டென்மார்க்கோடு, கனடாவோடு, உக்ரேனோடு - டிரம்ப் எடுக்கும் நிலைப்பாடு எல்லாம் அமெரிக்காவை பலவீனப்படுத்தவே.

ஆனால் டிரம்பும், வான்சும், மஸ்கும் அதிதீவிர ஆமெரிக்க வலது தேசியவாதம் என்ற Trojan குதிரைக்குள் பதுங்கி இருந்து இதை செய்கிறார்கள்.

15 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நேற்று ஒரு கட்டுரை பார்த்தேன்.. பிரான்ஸ் ஜேர்மனி பிரித்தானியா இன்னும் ஒரு ஜரோப்பிய நாடு(அல்லது ஒட்டுமொத்த ஜரோப்பாவோ) இவை எல்லாம் ஒன்று சேர்ந்தால்கூட ஒரே ஒரு அமெரிக்காவின் ஜிடிபிக்கு கிட்டவும் வரமுடியாது என்று.. அமெரிக்கா ஒரு பொருளாதார திமிங்கிலம்.. வரப்போகும் 30 வருசத்துக்கு இப்பவே திட்டமிட்டு இருப்பவர்கள்.. ஜரோப்பா கிட்டவும் நெருங்க முடியாது..அமெரிக்கவின் காலில் நெடுஞ்சான் கிடையாக விழுந்துகிடப்பதை தவிர..

இது அதி தீவிர வலதுசாரி கொள்கை போல இன்னுமொரு பேய்காட்டும் கதை.

அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் என்ன வித்தியாசம்?

அமெரிக்காவின் இராணுவ பலம்.

இராணுவ பலம், ஐரோப்பாவில் இருக்கும் கூட்டுக்கள், இவை எல்லாமும்தான் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஒரு அசுரனாக்கி வைத்துள்ளன.

இதேபோல் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆளுமையும்.

இவற்றை படிப்படியாக உடைத்தால் -அமெரிக்காவின் பொருளாதாரமும் அடி வாங்கும்.

ஆனால் இது உடனடியாக நடக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நேற்று ஒரு கட்டுரை பார்த்தேன்.. பிரான்ஸ் ஜேர்மனி பிரித்தானியா இன்னும் ஒரு ஜரோப்பிய நாடு(அல்லது ஒட்டுமொத்த ஜரோப்பாவோ) இவை எல்லாம் ஒன்று சேர்ந்தால்கூட ஒரே ஒரு அமெரிக்காவின் ஜிடிபிக்கு கிட்டவும் வரமுடியாது என்று.. அமெரிக்கா ஒரு பொருளாதார திமிங்கிலம்.. வரப்போகும் 30 வருசத்துக்கு இப்பவே திட்டமிட்டு இருப்பவர்கள்.. ஜரோப்பா கிட்டவும் நெருங்க முடியாது..அமெரிக்கவின் காலில் நெடுஞ்சான் கிடையாக விழுந்துகிடப்பதை தவிர..

கலிபோனியா மாகாண GDP யே பிரான்ஸ் நாட்டு GDP யை விட கூடுதல் ஆகும்

அமரிக்காவின் Finacial மாகாணம் நியூ யார்க். அப்போ கணக்கை பாருங்களேன்.

அவர்கள் மூவரின் GDPயை கூட்டினால் கூட $ 7.5 Trillions தான்

எங்கள் GDP $18 Trillions

எங்கள் அரசன் ட்ரம் இருக்குமவரை எங்களை யாராலும் கனவிலும் தொட்டு பார்க்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா உக்ரேனுக்கு கொடுத்த மொத்த உதவிகள் 500 பில்லியன்கள் அல்ல. இது அமெரிக்கா உக்ரேனிடம் இருந்து இலாபத்துடன் சேர்த்து எடுக்க நினைக்கும் தொகையின் அளவு. அமெரிக்கா கொடுத்தது கிட்டத்தட்ட 150 பில்லியன் டாலர்கள். அதிலும் 119 பில்லியன் டாலர்களே கணக்கில் வந்திருக்கின்றது. மிகுதி இன்னும் அங்கே போய்ச் சேரவில்லை. அதற்கிடையில் பென்டகனில் ஆடிட்டிங் ஆரம்பமாகிவிட்டது. கொடுத்த உதவிகளில் பெரும்பங்கு அமெரிக்க ஆயுத தயாரிப்பு மற்றும் பாதுகாப்புச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

ஐரோப்பிய யூனியன் ஒரு பிஸ்கோத்து. குறிப்பாக ஜேர்மனியும் பிரான்சும்.

ஒன்றில் அமெரிக்காவின் காலில் கிடப்பார்கள் அல்லது ரஸ்யாவின் காலில் கிடப்பார்கள்.

உலகின் யதார்த்த அரசியலை புரிந்து கொண்டால் அதுவும் சரியானதே. உலகில் எந்த நாடும் தனித்து இயங்க முடியாது. அது எந்தா நாடாகினும் சரி.

அதை விட இன்னுமொரு பகிடி. ஜேர்மனியை அமெரிக்காவின் இன்னொரு மாகாணம் என இங்கு நக்கலுக்கு சொல்வார்கள்.🤣

இன்றைய தேர்தலுக்கு பின்(23.02.2025) அதாவது ஆட்சி மாறும் CDU கட்சி தான் முதன்மையாக வரும். அதன் பின்னர் புதிய நாடகங்கள் கூத்துகளை கண்டு களிக்கலாம்.cool

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஐரோப்பிய யூனியன் ஒரு பிஸ்கோத்து. குறிப்பாக ஜேர்மனியும் பிரான்சும்.

ஒன்றில் அமெரிக்காவின் காலில் கிடப்பார்கள் அல்லது ரஸ்யாவின் காலில் கிடப்பார்கள்.

பின்லாந்துக்கும், போலந்துக்கும் உள்ள ரோசத்தில் பாதி கூட இவர்களுக்கு இல்லை.

நன்றாக சொன்னீர்கள். அந்த யேர்மனி அதற்குள்ள பலத்திற்கு நடந்து கொள்வது மிகவும் மோசம்.அன்கெலா மார்க்கல் காலத்தில் புதினுடை காலடியில் விழுந்து கிடந்தார்கள் என்று நினைக்கிறேன்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

அவல நாயகன்

sudumanal

அமெரிக்காவின் நரித்தனம் உக்ரைனில் அரங்கேறுகிறது. 2000 களிலிருந்து -குறிப்பாக 2008 இலிருந்து- ரசியாவை சீண்டியபடி இருந்த அமெரிக்கா ரசியா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சூழலை படிப்படியாக உருவாக்கி உச்ச நிலையில் கொணர்ந்து விட்டது. ரசியா ஆக்கிரமித்தது.

நடுநிலையாக இருந்த உக்ரைனை நேற்றோ அமைப்பில் சேர்க்க வேண்டும் என ஜோர்ஜ் புஷ் 2008 இல் றுமேனியாவில் நடந்த நேற்றோ மாநாட்டில் முன்மொழிந்தார். உக்ரைன் மறுத்தது. ஜேர்மனியும் பிரான்ஸ் உம் இது ரசியாவுடனான போரை உருவாக்கும் ஆபத்தை கொண்டது என எச்சரித்தன.

2014 இல் அமெரிக்கா உக்ரைன் ஆட்சி கவிழ்ப்பை செய்து தனக்கு தலையாட்டும் அரசை நிறுவியது. பின்னர் செலன்ஸ்கி உக்ரைன் அதிபராக ஜனநாக முறையில் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டார். அவரும் அமெரிக்காவின் எடுபிடியாக இருந்தார். நேற்றோவில் உக்ரைனை சேர்க்கும் முயற்சியை -மக்கள் விருப்பத்தை அறிவதற்கான வாக்கெடுப்பு இன்றி- தன்னிச்சையாக முடிவுசெய்தார்.

உக்ரைன் நடுநிலையாக இருக்கவேண்டும் எனவும், நேற்றோ தனது எல்லைவரை வருவது ரசியாவுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையும் எனவும் திரும்ப திரும்ப புட்டின் வலியுறுத்தினார். புட்டினின் இந்த சிவப்பு எச்சரிக்கை கோட்டை உக்ரைன் தாண்டியதால் ரசியா உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடுத்தது. உக்ரைன் இதை எதிர்பார்து இருக்கவில்லை.

போர் தொடங்கி 7 நாளின் பின் செலன்ஸ்கி தாம் நேற்றோவில் சேர மாட்டோம் நடுநிலையாக இருப்போம் என அறிவித்து ரசியாவுடனான (இஸ்தான்புல்) பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார். உடனே அமெரிக்காவும் பிரித்தானியாவும் செலன்ஸ்கியை பேச்சுவார்த்தை மேசையைவிட்டு வெளியேறுமாறும், தாம் போருக்கு உதவி செய்வதாகவும் கூறி உக்ரைனை அழிவுக்குள் தள்ளினர்.

இவ்வாறாக இந்தப் போரை கனடா ஐரோப்பா சகிதம் 3 வருடமாக நடக்கவிட்டு நாட்டை நாசமாக்கி மக்களை மரணிக்கவிட்டு உக்ரைனை தமது நலன் சார்ந்து பலிக்கடா ஆக்கினர். இப்போ செலன்கி சர்வாதிகாரி எனவும் அவர்தான் இந்த போருக்கு முழுக் காரணம் எனவும் ட்றம்ப் வாய்கூசாமல் பேசுகிறார். இனி தான் உதவிசெய்ய மாட்டேன் எனவும் இதுவரை தாம் செய்த உதவி 450 பில்லியனுக்கான திரும்பச் செலுத்தலாக உக்ரைன் நாட்டின் கனிமவளத்தில் 50 வீதம் தமக்கு சொந்தமாகும் என ஒரு எதேச்சாதிகார ஒப்பந்தம் ஒன்றிற்கு செலன்ஸ்கி கையெழுத்திட வேண்டும் என்றும் ட்றம்ப் மிரட்டுகிறார். (450 பில்லியன் என்பது பொய் எனவும் உண்மையில் 100 பில்லியன் எனவும் சொல்லப்படுகிறது).செலன்ஸ்கி உடன்படாத படத்தில் உக்ரைனில் இன்னொரு ஆட்சி கவிழ்ப்பை செய்து அமெரிக்கா தனது இலக்கை சாத்தியமாக்கும் என ஊகிக்க இடமுண்டு. செலன்ஸ்கி ஒரு தேர்ந்த அரசியல்வாதி அல்ல என்பதாலும் போருக்கு வழங்கப்பட்ட உதவிகளில் பெரும் ஊழல் நடந்திருப்பதாலும் செலன்ஸ்கி அமெரிக்க கொள்ளைக்கு உடன்பட நேரலாம்.

அமெரிக்கா களவெடுக்க இருப்பது போக மிகுதி வளத்தை களவெடுக்க பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒரு பகுதியும் “சமாதானப்படை” அல்லது “உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படை” என்ற பெயரில் உக்ரைனுக்குள் போக ஆயத்தமாகின்றனர். இதுதான் மேற்குலகின் மேக்அப் ஜனநாயகம்.

சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதி மேற்குலகம் உக்ரைனை நாசமாக்கிய வரலாறு இது. வண்டியை ஓட்டிய அமெரிக்கா இப்போது ஐரோப்பாவை கழற்றி விட்ட பின்னும், ஐரோப்பா இப் போரை இல்லாமலாக்கி சமாதான வழியில் உக்ரைனை மீட்க தயாரில்லை. அவர்கள் உக்ரைனின் கோவணத்தையும் உருவ தயாராகின்றனர். ஐரோப்பாவை அமெரிக்காவின்றி சுயாதீனமான வண்டியாக ஓடவைத்து காட்டும் ஆரம்பப் புள்ளியை நலிந்துபோன உக்ரைனிலிருந்து தொடங்கிக் காட்டும் கங்கணத்தோடு நிற்கிறார்களோ என்று இன்னொரு பக்கத்திலும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

உக்ரைனுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நேரடி போர் அல்ல இது என்பதை -நேற்றோ குடும்பத்தின் பெரியண்ணனாக இருக்கும்- அமெரிக்காவின் மிரட்டல்களும், உக்ரைனை புறம்தள்ளி ட்றம்ப்- புட்டின் பேச்சுவார்த்தை நடைபெறுவதும் தெளிவாக நிரூபிக்கிறது. இந்த பேச்சுவார்த்தை அணுகுமுறையில் ட்றம் புட்டின் இருவருமே தவறிழைக்கிறார்கள். இதை எதன் பெயரிலும் நியாயப்படுத்த முடியாது. செலன்ஸ்கி ஒரு அவல நாயகனாக தோற்றமளிக்கிறார். பாவம் உக்ரைன் மக்கள்!

https://sudumanal.com/2025/02/24/அவல-நாயகன்/#more-7071

6 hours ago, கிருபன் said:

இந்தக் கட்டுரை ஓரளவுக்கு நியாயமாக உள்ளது. இன்றைய உக்ரைனின் அவலத்துக்கு அமெரிக்காவும், ஐரோப்பாவும், இவர்களின் திட்டத்துக்கு துணை போன செலன்ஸ்கியும் தான் காரணம் என ஓரளவுக்கு தெளிவாக எழுதி உள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.