Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை தொடர்பாக தேடப்படும் பெண் சந்தேக நபரான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தியின்  சமீபத்திய புகைப்படங்களை பொலிஸார் திங்கட்கிழமை (24) வெளியிட்டுள்ளதுடன் அவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

சந்தேக நபர்,  243/01, ஜெயா மாவத்தை, நீர்கொழும்பு வீதி, கட்டுவெல்லகம என்ற முகவரியில் வசிக்கும் 25 வயதான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது தேசிய அடையாள அட்டை எண் 995892480V. ஆகும்.

வழக்கறிஞர் போல் நடித்த செவ்வந்தி, நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு ரிவால்வரை கடத்தி வந்து கொலையில் ஈடுபட்ட  துப்பாக்கிதாரியிடம் ஒப்படைத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், கொழும்பு குற்றப் பிரிவின் பணிப்பாளரை  071-8591727 என்ற எண்ணில் அல்லது சிசிடியின் பொறுப்பதிகாரியை 071-8591735 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கிறார்கள்.

சந்தேக நபரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கவும் பதில் பொலிஸ் மா அதிபர்  பிரியந்த வீரசூரிய முடிவு செய்துள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தகைய தகவல்களை வழங்குபவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும்  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

image_964c7e8a90.jpg

image_d605254ac3.jpg



  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பிழம்பு said:

சந்தேக நபரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கவும் பதில் பொலிஸ் மா அதிபர்  பிரியந்த வீரசூரிய முடிவு செய்துள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

பின்புர செவ்வந்தியை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு...

எவ்வளவு சன்மானம் கொடுக்கின்றார்கள்.

அதன் தொகையையும் சொன்னால் தானே... மக்கள் உற்சாகமாக தேடுவார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

பின்புர செவ்வந்தியை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு...

எவ்வளவு சன்மானம் கொடுக்கின்றார்கள்.

அதன் தொகையையும் சொன்னால் தானே... மக்கள் உற்சாகமாக தேடுவார்கள்.

10 லட்சம் என எண்ணுகிறேன்.

பிழம்பு இதனை தனித் திரியாக இணைத்தமைக்கு ஏதாவது உள் நோக்கம் இருக்கின்றதா என யோசிக்கின்றேன்.😃

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

பிழம்பு இதனை தனித் திரியாக இணைத்தமைக்கு ஏதாவது உள் நோக்கம் இருக்கின்றதா என யோசிக்கின்றேன்.😃

பின்புற செவ்வந்தி என்றவுடன்... பிழம்பார் மதி மயங்கி விட்டார். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

10 லட்சம் என எண்ணுகிறேன்.

ஸ்ரீலங்காவில் விலைவாசி உயர்ந்திருக்கின்ற நிலையில்...

10 லட்சம் ரூபாய் ரொம்ப கம்மியாய் இருக்கே... 😂

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நிழலி said:

பிழம்பு இதனை தனித் திரியாக இணைத்தமைக்கு ஏதாவது உள் நோக்கம் இருக்கின்றதா என யோசிக்கின்றேன்.😃

கொஞ்சம் அம்சமாக இருந்தால் விடமாட்டாங்களே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

பிழம்பு இதனை தனித் திரியாக இணைத்தமைக்கு ஏதாவது உள் நோக்கம் இருக்கின்றதா என யோசிக்கின்றேன்.😃

இங்கை பார்றா தன்ரை மற்ற ஐடிலை செய்தியை இணைச்சுப்போட்டு இந்த ஐடியிலை டவுட் கேட்கிறாராம்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாதவூரான் said:

இங்கை பார்றா தன்ரை மற்ற ஐடிலை செய்தியை இணைச்சுப்போட்டு இந்த ஐடியிலை டவுட் கேட்கிறாராம்

ராணுவ ரகசியங்கள் வெளிய சொல்லக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆவலோடு ஓடி வந்து பார்த்தால்…

செவ்வந்தியின் படங்கள் எல்லாம் முன்புற படங்களாகவே இருக்கிறது…

அதுவும் சரிதான்…அடையாளம் காண முகம்தானே உதவும் 😂

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வந்தியின் தாயும் சகோதரனும் கைது

editorenglishFebruary 25, 2025

Sewwandi.jpg

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இஷாரா செவ்வந்தியின் தம்பி மற்றும் தாயாரும் அடங்குகிறார்கள்.

இஷாரா செவ்வந்தியே கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை வழங்கிய பெண் என அடையாளம் காணப்பட்டுத் தேடப்பட்டு வரும் முக்கிய சந்தேக நபராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/212077/

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா ஊர் புதினம் பகுதியில் நாலு பெயர் எழுதி இருக்கினம் எண்டு பார்த்தேன் 😂

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2025-02-24-at-17.04.34.jp

ஒரு மில்லியன் ரூபாய் சன்மானம்-பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விசேட அறிவிப்பு!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் தலைமறைவாகியுள்ள இஷார செவ்வந்தி என்ற பெண் சந்தேக நபரைப் பற்றி தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் சஞ்சீவ குமார சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்த பிரதான சந்தேகநபர் இன்னும் நாட்டிற்குள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறுகையில், நாட்டை விட்டு வெளியேறக்கூடியதாகக் கருதப்படும் அனைத்து இடங்களுக்கும் தற்போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 19ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில், கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பிரதான சந்தேகநபருக்கு ஆயுதத்தை வழங்கியவர் கட்டுவெல்லேகம, நீர்கொழும்பு முகவரியில் வசிக்கும் 25 வயதான இஷாரா செவ்வந்தி என்ற இளம் பெண்ணாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2025/1422939

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-365.jpg?resize=750%2C375&ssl

கணேமுல்ல சஞ்சீவ விவகாரம்; பிரதான பெண் சந்தேக நபரின் தாய், சகோதரர் கைது!

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ” என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக நபரான சஞ்சீவ குமார சமரரத்னவின் படுகொலை சம்பவத்துடன் தெடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றப்பிரிவு (CCD) அதிகாரிகளினால் சந்தேக நபர்கள் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், குற்றத்திற்கு உதவியதாகவும், தகவல்களை மறைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட பிரதான பெண் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் இளைய சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியில் வசிக்கும் 23 வயதான பிங்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க மற்றும் 48 வயதான சேசத்புர தேவகே சாமந்தி ஆகியேரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் கூற்றுப்படி, சந்தேகநபர்கள் இருவரும் குற்றம் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்தனர், ஆனால் அது தொடர்பில் முறைப்பாடு அளிக்க தவறியதுடன், குற்றவாளிகளுக்கு உதவியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவியதாகக் கூறப்படும் பெண் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பிங்புர தேவகே இஷார செவ்வந்தி என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், 243/01, நீர்கொழும்பு வீதி, ஜயா மாவத்தை, கட்டுவெல்லேகமவில் வசிக்கும் 25 வயதுடையவர்.

995892480V என்ற தேசிய அடையாள அட்டையை (NIC) கொண்டவர்.

இந்த கைதுகளின் மூலம் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதான நபர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2025/1422871

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

ஆவலோடு ஓடி வந்து பார்த்தால்…

செவ்வந்தியின் படங்கள் எல்லாம் முன்புற படங்களாகவே இருக்கிறது…

அதுவும் சரிதான்…அடையாளம் காண முகம்தானே உதவும் 😂

tenor.gif

சரி... சரி... வந்ததற்கு, இந்த பின்புறத்தையாவது பாருங்க. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

tenor.gif

சரி... சரி... வந்ததற்கு, இந்த பின்புறத்தையாவது பாருங்க. 😂 🤣

😛 ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

😛 ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை 🤣

அதே... சரியாக சொன்னீர்கள். 😂

பின்புற செவ்வந்தியை பார்க்க வந்தவர்கள்,

வெறுங்கையுடன் போகக் கூடாது என்பதற்காக,

வடிவேலுவின் பின்புறத்தை பார்த்து விட்டு போகட்டுமன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

480173809_3896298400612126_1872384900225

5 hours ago, தமிழ் சிறி said:

ஒரு மில்லியன் ரூபாய் சன்மானம்-பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விசேட அறிவிப்பு!

இலங்கையில் ஒரு மில்லியனுக்கு அரைவாசி Auto / 3 wheeler கூட வாங்க முடியாது. செவ்வந்தி தன்னை காட்டிக் கொடுக்காமல் இருக்க 10 மில்லியன் ரூபாவுக்கும் மேல் கொடுக்கும் அளவுக்கு போதைப் பொருள் விற்பனை மூலம் பணக்காரியாக இருப்பார் என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

’வேலை முடிந்தது‘ ’வேலை சரி’ குறுஞ்செய்தியால் சிக்கல்

'வேலை முடிந்தது.'  'வேலை சரி’ .ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் என்று கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவாவைக் கொன்ற பிறகு, சந்தேக நபரான வழக்கறிஞர் வேடமணிந்த பெண், அவரது சகோதரருக்கு ’வேலை முடிந்தது’ 'வேலை சரி’ என்று குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கணேமுல்ல சஞ்சீவாவை சுட்டுக் கொன்ற பிறகு தப்பி ஓடிய வழக்கறிஞர் வேடமணிந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, தனது தம்பியுடன் குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டு வந்ததாகவும் பொலிஸார் அறிந்துள்ளனர்.

இந்த சர்ச்சைக்குரிய கொலைக்குப் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அல்ல, மாறாக வழக்கறிஞர் வேடமணிந்த சந்தேக நபரான பெண்தான் என்ற தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளது.

Tamilmirror Online || ’வேலை முடிந்தது‘ ’வேலை சரி’ குறுஞ்செய்தியால் சிக்கல்

  • கருத்துக்கள உறவுகள்

gane-fe.jpeg?resize=750%2C375&ssl=1

கெஹல்பத்தர பத்மேவின் குடும்பத்தினர் மீது கொலை முயற்சி!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் பெற்றோரைக் கொல்ல முன்னெடுக்கப்பட்ட முயற்சி பன்னல பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை முயற்சியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கெஹல்பத்தர பத்மே என்ற குற்றவாளி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, கெஹல்பத்தர பத்மேவின் பிரிவுடன் தொடர்புடைய  தரப்பினரையும் கொலை செய்யப்போவதாக கணேமுல்ல சஞ்சீவவின் பிரிவு மிரட்டியுள்ளதாக பாதுகாப்புப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

இத்தகைய சூழலில் பன்னலவில் உள்ள கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் வீட்டை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பன்னல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து? பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது? கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் அங்கு இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நேரத்தில், கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் தாய், தந்தை மற்றும் தம்பி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 21 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைஞர்களிடம் விசாரித்தபோது, துபாயைச் சேர்ந்த சமீரா என்ற குற்றவாளியிடமிருந்து கிடைத்த பணிப்புரைக்கு அமைய குறித்த வீட்டை வீடியோ எடுத்ததாகக் கூறியுள்ளனர். மேலும் வீட்டிற்கு செல்லும் வழியை வீடியோ எடுத்து தமக்கு அனுப்புமாறு துபாய் சமீரா அறிவுறுத்தியதாகவும் அவ்வப்போது அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதற்காக பணம் கொடுத்ததால் அவ்வாறு செய்ததாகவும் சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, பன்னல கொஸ்வத்தை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இருவரும் தயாராகி வந்ததாக சந்தேகிக்கப்படுவதால், அவர்கள் நாளை (27) வரை தடுத்து  நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1423196

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.