Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நூருல் ஹுதா உமர்

முஸ்லிம்கள் ஓர் இனம் இல்லை, அவர்களும் தமிழர்கள் தான் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் (24) பாராளுமன்றத்தில் பேசிய இனவாதப் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். சிங்களவர், தமிழர் எனும் இரண்டு இனங்களே இலங்கையில் உள்ளன. முஸ்லிம்கள் தமிழர்களுக்கு தான் உள்ளனர் என்று நாடாளுமன்றில் அவர் இனவாதம் பேசினார். அர்ச்சுனா ராமநாதன் எம்.பியின் இந்த கருத்து தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் எம்.பியும் கண்டனம் வெளியிடவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கண்டனம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், விடுதலை புலிகள் ஆயுதமுனையில் கடந்த காலங்களில் செய்தவற்றை பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு செய்யலாம் என விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் முனைவது பல்லினம் வாழும் சோஷலிச ஜனநாயக குடியரசு நாடான இலங்கையில் எப்போதும் நடக்காது என்பதை அவர் உணர்ந்து கொள்ளவேண்டும்.

தான் பாராளுமன்றம் சென்ற முதல் நாளிலிருந்து முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர அர்ச்சுனா ராமநாதன் பற்றி கூறியதை மெய்ப்பிக்கும் விதமாக நடந்து வருவதை நாட்டுமக்கள் அறியாமலில்லை. தனக்கு வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்வதாக கூறிக்கொண்டு நாட்டின் இறையாண்மையையும், அரசியலமைப்பையும் மீறும் விதமாக நடப்பது அர்ச்சுனா ராமநாதன் போன்றவர்களுக்கு பொருத்தமில்லை. இந்த உரைக்காக அவர் இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரி இந்த கருத்தை வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் தலைவர்களும், எம்.பிக்களும் மௌனத்தை கலைத்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் இன்று (24) பாராளுமன்றத்தில் பேசிய இனவாதப் பேச்சை கண்டிக்க வேண்டும் என்பதுடன் அவரது உரையின் இனவாத கருத்தை பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://madawalaenews.com/15188.html

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் தாங்கள் ஒரு தனிப்பட்ட இனம் என கூறிக்கொள்வது 50 வருடத்துக்குள் தான் இருக்கும். அதெப்படி இச்சிறிய காலத்தில் தனிப்பட்ட இனமானார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

செயற்கை நுண்ணறிவு செயலி DeekSeek இடம் நான் கீழ்வரும் வினாவை தொடுத்தேன். அதன் பதில் தொடர்கின்றது.

ஒரு இனமாக அடையாளம் பெறவும், அங்கீகாரம் அடையவும் மக்கள் கூட்டம் ஒன்றில் காணப்படவேண்டிய தன்மைகள் எவை?

ஒரு இனமாக அடையாளம் பெறவும், அங்கீகாரம் அடையவும் மக்கள் கூட்டம் ஒன்றில் காணப்பட வேண்டிய தன்மைகள் பின்வருமாறு:

1. பொதுவான வரலாறு மற்றும் பாரம்பரியம்: ஒரு இனம் பொதுவான வரலாறு, பண்பாடு, மொழி, மதம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவை அவர்களின் அடையாளத்தை வரையறுக்க உதவுகின்றன.

2. பொதுவான மொழி: ஒரு இனம் பொதுவாக ஒரு மொழியை பேசுவதோ அல்லது புரிந்து கொள்வதோ அவர்களின் அடையாளத்தை வலுப்படுத்துகிறது.

3. பொதுவான பண்பாடு மற்றும் சடங்குகள்: பண்டிகைகள், விழாக்கள், உணவு முறைகள், கலை மற்றும் இசை போன்றவை ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்துகின்றன.

4. பொதுவான புவியியல் பகுதி: ஒரு இனம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் வாழ்வதோ அல்லது அந்த பகுதியுடன் தொடர்பு கொண்டிருப்பதோ அவர்களின் அடையாளத்தை வலுப்படுத்துகிறது.

5. சமூக ஒற்றுமை: ஒரு இனத்தின் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருப்பதும், ஒரே குறிக்கோள்கள் மற்றும் மதிப்புகளை பகிர்ந்து கொள்வதும் அவர்களின் அங்கீகாரத்தை வலுப்படுத்துகிறது.

6. அரசியல் அங்கீகாரம்: ஒரு இனம் அரசியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இது அவர்களின் உரிமைகள் மற்றும் தன்னாட்சிக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

7. சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை: ஒரு இனத்தின் உறுப்பினர்கள் தங்கள் பண்பாடு மற்றும் அடையாளத்தைப் பற்றி பெருமைப்படுவதும், அதைப் பாதுகாப்பதற்கான உணர்வு கொண்டிருத்தல் அவசியம்.

8. பொதுவான சவால்கள் மற்றும் போராட்டங்கள்: ஒரு இனம் பொதுவான சவால்கள், போராட்டங்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது அவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது.

இந்த தன்மைகள் ஒரு இனத்தின் அடையாளத்தை வரையறுக்கவும், அங்கீகாரம் பெறவும் உதவுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, nunavilan said:

முஸ்லிம்கள் தாங்கள் ஒரு தனிப்பட்ட இனம் என கூறிக்கொள்வது 50 வருடத்துக்குள் தான் இருக்கும். அதெப்படி இச்சிறிய காலத்தில் தனிப்பட்ட இனமானார்கள்?

புலிகளும் முஸ்லிம்களும் 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு தனி பண்பாடு உள்ளதை புலிகள் ஏற்றதோடு அவர்கள் தனி இனம் என்பதையும் ஏற்றுக்கொண்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நன்னிச் சோழன் said:

புலிகளும் முஸ்லிம்களும் 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு தனி பண்பாடு உள்ளதை புலிகள் ஏற்றதோடு அவர்கள் தனி இனம் என்பதையும் ஏற்றுக்கொண்டனர்.

இந்த ஒப்பந்தம் முக்கியமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகளைப் பற்றிய கவலைகளைத் தீர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இது அக்காலத்தில் ஈழப் போரின் சூழலில் முக்கியமான ஒரு நிகழ்வாக கருதப்பட்டது என அறிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்+
20 minutes ago, nunavilan said:

இந்த ஒப்பந்தம் முக்கியமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகளைப் பற்றிய கவலைகளைத் தீர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இது அக்காலத்தில் ஈழப் போரின் சூழலில் முக்கியமான ஒரு நிகழ்வாக கருதப்பட்டது என அறிந்து கொண்டேன்.

சரியாகச் சொன்னீர்கள். இதனால் அவர்கள் தமது தனித்துவம் எனக் கருதிய அனைத்தையும் புலிகள் ஏற்றனர்.

10 hours ago, nunavilan said:

முஸ்லிம்கள் தாங்கள் ஒரு தனிப்பட்ட இனம் என கூறிக்கொள்வது 50 வருடத்துக்குள் தான் இருக்கும். அதெப்படி இச்சிறிய காலத்தில் தனிப்பட்ட இனமானார்கள்?

இல்லை 50 ஆண்டுகள் இல்லை... அதற்கும் மேல்.

நானறிந்த வரை இலங்கை பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஒரு நிகழ்வு நடந்ததாம்.

அப்போதைய அமைச்சரவையில் பொன்னம்பலம் இராமநாதன் (இவர் என்று எனது நினைவில் உள்ளது) முஸ்லிம்களை தமிழர்கள் என்றபோது முஸ்லிம்கள் கடும் போர்க்கொடி தூக்கி தாம் தனி இனம் என்றனர் என்பது வரலாறு. இவர்கள் இவ்வாறு செய்வதற்கு ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்த சலுகையே காரணமாகும்.

இந்தத் தனி இனம் தொடர்பில் ஒரு வாதாட்டம் ஐ.பி.சி தமிழில் முன்னர் ஒரு காலத்தில் ஒரு ஒளிபரப்பானது என்பது கூடுதல் தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயம் said:

செயற்கை நுண்ணறிவு செயலி DeekSeek இடம் நான் கீழ்வரும் வினாவை தொடுத்தேன். அதன் பதில் தொடர்கின்றது.

ஒரு இனமாக அடையாளம் பெறவும், அங்கீகாரம் அடையவும் மக்கள் கூட்டம் ஒன்றில் காணப்படவேண்டிய தன்மைகள் எவை?

ஒரு இனமாக அடையாளம் பெறவும், அங்கீகாரம் அடையவும் மக்கள் கூட்டம் ஒன்றில் காணப்பட வேண்டிய தன்மைகள் பின்வருமாறு:

1. பொதுவான வரலாறு மற்றும் பாரம்பரியம்: ஒரு இனம் பொதுவான வரலாறு, பண்பாடு, மொழி, மதம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவை அவர்களின் அடையாளத்தை வரையறுக்க உதவுகின்றன.

2. பொதுவான மொழி: ஒரு இனம் பொதுவாக ஒரு மொழியை பேசுவதோ அல்லது புரிந்து கொள்வதோ அவர்களின் அடையாளத்தை வலுப்படுத்துகிறது.

3. பொதுவான பண்பாடு மற்றும் சடங்குகள்: பண்டிகைகள், விழாக்கள், உணவு முறைகள், கலை மற்றும் இசை போன்றவை ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்துகின்றன.

4. பொதுவான புவியியல் பகுதி: ஒரு இனம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் வாழ்வதோ அல்லது அந்த பகுதியுடன் தொடர்பு கொண்டிருப்பதோ அவர்களின் அடையாளத்தை வலுப்படுத்துகிறது.

5. சமூக ஒற்றுமை: ஒரு இனத்தின் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருப்பதும், ஒரே குறிக்கோள்கள் மற்றும் மதிப்புகளை பகிர்ந்து கொள்வதும் அவர்களின் அங்கீகாரத்தை வலுப்படுத்துகிறது.

6. அரசியல் அங்கீகாரம்: ஒரு இனம் அரசியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இது அவர்களின் உரிமைகள் மற்றும் தன்னாட்சிக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

7. சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை: ஒரு இனத்தின் உறுப்பினர்கள் தங்கள் பண்பாடு மற்றும் அடையாளத்தைப் பற்றி பெருமைப்படுவதும், அதைப் பாதுகாப்பதற்கான உணர்வு கொண்டிருத்தல் அவசியம்.

8. பொதுவான சவால்கள் மற்றும் போராட்டங்கள்: ஒரு இனம் பொதுவான சவால்கள், போராட்டங்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது அவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது.

இந்த தன்மைகள் ஒரு இனத்தின் அடையாளத்தை வரையறுக்கவும், அங்கீகாரம் பெறவும் உதவுகின்றன.

நல்ல தகவல்கள் ......அப்படியென்றால் ஒரே மொழி பேசுகிறவர்கள். பல இனங்கள் இருக்க முடியுமா??? இது மற்ற மொழிகள் பேசுவர்களிடம். இருக்கிறதா??? சிங்கள மொழி பேசுவோர் ஒரு இனமா ??? இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட இனமா??

தமிழ்நாட்டில் முஸ்லிம்கள். தமிழ் இனம். தமிழர்கள் மலேசியா சிங்கப்பூர் .....மற்றும் தமிழர்கள் வாழும் எல்லா நாட்டிலும். தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழ் இனமே  தான்

ஆனால் இலங்கையில் மட்டுமே தமிழ் பேசும் முஸ்லிம்கள். ஒரு தனி இனம்  குறிப்பாக அவர்கள் தமிழ் இனமில்லை 🙏.

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் ஒரு இனம் என்றால், பலஸ்தீனியர்கள் ஒரு இனம் என்றால் முஸ்லிம்களும் ஒரு இனம் தானே? மத அடையாளத்தை தங்கள் பாரம்பரிய அடையாளமாக வைத்துக் கொண்ட இனம் என்று சொல்ல முடியாதா?

அரேபியாவில் இருந்து வந்தோரின் வழித்தோன்றல்களை "மூர்"கள் (Lankan Moors) என்று ஆங்கிலேயர் காலத்தில் அழைத்திருக்கிறார்கள். ஆனால், பின்னர் உள்ளூரில் முஸ்லிம்களாக மாறியோரை அப்படி அழைப்பதில்லை. எனவே "இலங்கை முஸ்லிம்கள்" தனி இனம் என்று தான் நான் நினைக்கிறேன்.

பிகு: ஒரு பக்கம் சைவர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மதம் மாறிய தமிழர்கள் , தமிழர்கள் தானா? என்ற முணுமுணுப்பு. மறு பக்கம், தனி இனமாக இருக்க விரும்பும் முஸ்லிம்கள் "தமிழர்" என்று அடம் பிடிப்பு! இது "ஆளவந்தான் கமல் கொம்ப்ளெக்ஸ்"😎!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

முஸ்லிம்கள் தாங்கள் ஒரு தனிப்பட்ட இனம் என கூறிக்கொள்வது 50 வருடத்துக்குள் தான் இருக்கும். அதெப்படி இச்சிறிய காலத்தில் தனிப்பட்ட இனமானார்கள்?

இல்லை அவர்கள் இலங்கை என்ற தேசிய நாடு(1948) உருவான பொழுது தங்களது இனத்தை அடையாளப்படுத்தும் வகையில் இலங்கை தேசிய கொடியில் தங்களது இனத்தை அடையாளப்படுத்தி விட்டார்கள் ...அவர்கள் ஒர் தனி தேசிய இன்ம் என்பதை ஏற்று கொள்ள தான் வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

யூதர்கள் ஒரு இனம் என்றால், பலஸ்தீனியர்கள் ஒரு இனம் என்றால் முஸ்லிம்களும் ஒரு இனம் தானே? மத அடையாளத்தை தங்கள் பாரம்பரிய அடையாளமாக வைத்துக் கொண்ட இனம் என்று சொல்ல முடியாதா?

அண்ணா

யூத இன மக்கள் யூத மதத்தை பின்பற்றுகின்றனர்.பெர்சிஷ் இன மக்கள் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகின்றனர் . இலங்கை தமிழ் இன மக்கள் இந்து ,கிறிஸ்தவம், முஸ்லிம் மதங்களை பின்பற்றுகின்றனர். இதில் முஸ்லிம் மதங்களை பின்பற்றுகின்ற தமிழர்களுக்கு மட்டும் ஏன் தனி இனத்துக்கான அடையாளம் என்று முஸ்லிம் மதம். முஸ்லிம். ஒரு மதம் தானே

அந்த முஸ்லிம் மதத்தை பின்பற்றும் தமிழர்களில் மதங்களை நிராகரிக்கும் சிலர் உருவானால் அவர்கள் இன அடையாளம் முஸ்லிமா பெர்சிஷ்களில் முஸ்லிம் மதத்தை நிராகரிப்பவர்கள் இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் தம்மை சிங்கள இனம் என்றே அடையாளப் படுத்துகிறார்கள். அவர்கள் தம்மைப் பௌத்த இனம் என்று கூறுவது இல்லையே. பௌத்தம் ஒரு மதமல்லவா? ஜப்பானியர்கள் தங்களை ஆசியர் என்று தானே வகைப் படுத்துகிறார்கள்.

இனம் எனும் போது பெரிய பரிமாணம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

யூதர்கள் ஒரு இனம் என்றால், பலஸ்தீனியர்கள் ஒரு இனம் என்றால் முஸ்லிம்களும் ஒரு இனம் தானே

இவர்களின் மொழி அதாவது தாய்மொழி. ஒன்றா ??? முஸ்லிம்கள். ஒரு இனம் என்பது பிரச்சனையில்லை ஆனால் அது உலகம் முழுவதும் ஏன் கடைப்பிடிக்கவில்லை இலங்கையில் மட்டுமே தனி இனம் என்கிறார்கள் ....இது தேர்தலுக்காகவா. ?? வாக்கு சேகரிக்கவா ?? என்பது தான் என கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kandiah57 said:

முஸ்லிம்கள். ஒரு இனம் என்பது பிரச்சனையில்லை

பிரச்னை இல்லை ஆனால் ஹீப்ரு மொழியை சொந்தமாக கொண்ட யூத மதத்தை பின்பற்றுகின்ற யூத இன மக்கள் இருக்கின்றார்கள் . இங்கே இலங்கை முஸ்லிம் இன மக்கள் இலங்கை தமிழ் இனத்து மக்களின் மொழியை அல்லவா பேசுகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

அண்ணா

யூத இன மக்கள் யூத மதத்தை பின்பற்றுகின்றனர்.பெர்சிஷ் இன மக்கள் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகின்றனர் . இலங்கை தமிழ் இன மக்கள் இந்து ,கிறிஸ்தவம், முஸ்லிம் மதங்களை பின்பற்றுகின்றனர். இதில் முஸ்லிம் மதங்களை பின்பற்றுகின்ற தமிழர்களுக்கு மட்டும் ஏன் தனி இனத்துக்கான அடையாளம் என்று முஸ்லிம் மதம். முஸ்லிம். ஒரு மதம் தானே

அந்த முஸ்லிம் மதத்தை பின்பற்றும் தமிழர்களில் மதங்களை நிராகரிக்கும் சிலர் உருவானால் அவர்கள் இன அடையாளம் முஸ்லிமா பெர்சிஷ்களில் முஸ்லிம் மதத்தை நிராகரிப்பவர்கள் இருக்கின்றனர்.

ஆங்கிலத்தில், ஒருவரது உடலைமைப்பியல், உயிரியல் இயல்புகளின் அடிப்படையில் உருவாகும் குழுக்களை race என்பார்கள். உதாரணமாக கறுப்பினத்தவர் என்பது race.

பாரம்பரிய வாழ்விடம், மொழி, பண்பாடுகள், கடவுள் நம்பிக்கை, இவற்றின் அடிப்படையில் உருவாகும் வகைப்படுத்தலை ethnicity என்பார்கள். யூதர்கள் இதற்கு உதாரணம். ஹீப்று மொழியைத் தாய் மொழியாகப் பேசாத கறுப்பின யூதர்கள் இருக்கிறார்கள்.

Race என்பது உயிரியல் - biological features அடிப்படையில் எழுவது. Ethnicity என்பது ஒரு cultural, political construct.

தமிழில் நாம் இரண்டு வகைப்படுத்தலையும் "இனம்" என்று அழைப்பதால் இந்தக் குழப்பம் விளைகிறதென நினைக்கிறேன்.

அமெரிக்காவில் வளரப் போகும் என் பிள்ளை, தமிழ்ப் பாரம்பரியத்தைப் பின்பற்றாமல் வளர்ந்தால் அவரைத் "தமிழ் இனம்" என்று சொல்ல முடியாது. அதே போல, அல்லாவை நிராகரிக்கும் இலங்கை முஸ்லிம் ஒருவரை "முஸ்லிம் இனத்தவர்" என்று சொல்ல முடியாது. இப்படி இன அடையாளம் - ethnic identity இல்லாமல் இருப்பதில் தவறொன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

நல்ல தகவல்கள் ......அப்படியென்றால் ஒரே மொழி பேசுகிறவர்கள். பல இனங்கள் இருக்க முடியுமா??? இது மற்ற மொழிகள் பேசுவர்களிடம். இருக்கிறதா??? சிங்கள மொழி பேசுவோர் ஒரு இனமா ??? இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட இனமா??

தமிழ்நாட்டில் முஸ்லிம்கள். தமிழ் இனம். தமிழர்கள் மலேசியா சிங்கப்பூர் .....மற்றும் தமிழர்கள் வாழும் எல்லா நாட்டிலும். தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழ் இனமே  தான்

ஆனால் இலங்கையில் மட்டுமே தமிழ் பேசும் முஸ்லிம்கள். ஒரு தனி இனம்  குறிப்பாக அவர்கள் தமிழ் இனமில்லை 🙏.

அண்ணை, திரு அப்துல் ஹமீட் அவர்களின் உரையில் 3 - 4 நிமிடங்களை அவதானித்துப் பாருங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.