Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

சீமான் விதைக்கும் இனவெறியானது சிங்கள இனவாதிகளை விட மோசமானது என்று நான் கூறியதற்கு காரணம் ஒரு சிங்கள இனவாதி தனது நாட்டில் வாழும் சக தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமே இனவாதத்தை கக்குவார்

அந்த கக்கல் தானே இன்று தமிழ் தேசியம் உருவாக காரணம் ....புலம் பெயர் தற்குறிகளின் இனவாத செயல்களினால் ஏனைய தேசிய இனங்கள் தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக கிளர்ந்து எழும் என எண்ண முடியாது....காரணம் ஏற்கனவே பல இனவாத வன்செயல்கள் அங்கு நடை பெறுகின்றது ...

  • Replies 187
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    உண்மை தோழர் .. ராமதாஸ் vs MRK பன்னீர் செல்வம்(திமுக) C.Ve சண்முகம்(அதிமுக) அண்ணாமலை (பாஜக) VS ஈ.பி.எஸ்(அதிமுக) VS செந்தில்பாலாஜி(திமுக) ஒபிஎஸ்(அதிமுக தனி) VS உதயகுமார் (அதிமுக) சக்கரபாணி(திமுக) கடம்பூ

  • Justin
    Justin

    எனக்கு 2016 இல் ட்ரம்ப் ரீம் தந்த பாடம் தான் நான் சீமான் போன்றோரைத் துகிலுரியக் காரணம். அமெரிக்காவில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பெரிய காட்சிப் பலகைகளில் காட்டுவார்கள்: "If you see somethin

  • காவல்துறை அழைப்பாணையை கிழித்தெறிந்து மட்டுமல்லாமல், காவல்துறையை துப்பாக்கியால் சுட முற்பட்டுள்ளார், சீமானை போல் அவர்களுடைய தம்பிகளும்/பாதுகாவலரும் தற்குறிகளாக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, putthan said:

அந்த கக்கல் தானே இன்று தமிழ் தேசியம் உருவாக காரணம் ....புலம் பெயர் தற்குறிகளின் இனவாத செயல்களினால் ஏனைய தேசிய இனங்கள் தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக கிளர்ந்து எழும் என எண்ண முடியாது....காரணம் ஏற்கனவே பல இனவாத வன்செயல்கள் அங்கு நடை பெறுகின்றது ...

இவர்கள் கோபப்படுகிறார்கள் என்றாலே தமிழ்த்தேசியம் வளர்வது தெரிகிறது என்று அர்த்தம். அதற்கு சான்றாக இவர்கள் பாவிக்கும் சொற்களே சான்று. அதை நேரடியாக குறிப்பிட்டு எழுத முடியாமல் தமக்கு பிடிக்காதவைகளுக்காகவும் ஆடு நனைகின்றது என்று அழுவது இவர் போன்றவர்களின் வழக்கம். இவர்கள் என்ன தான் ஓலமிட்டாலும் நாம் தமிழர் கட்சி தமிழகத்தை மட்டும் அல்ல யாழ் தளத்தையும் கதற விட்டிருப்பது தான் நிஜம்.

நாம் தமிழர் கட்சி சம்பந்தமான திரிகள் மட்டுமே இங்கே எரிகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, putthan said:

அந்த கக்கல் தானே இன்று தமிழ் தேசியம் உருவாக காரணம் ....புலம் பெயர் தற்குறிகளின் இனவாத செயல்களினால் ஏனைய தேசிய இனங்கள் தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக கிளர்ந்து எழும் என எண்ண முடியாது....காரணம் ஏற்கனவே பல இனவாத வன்செயல்கள் அங்கு நடை பெறுகின்றது ...

நான் கூறிய விடயத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் கூறியது சீமான் விதைத்த இனவெறி சிங்கள இனவாதத்தை விட மோசமானது என்பதை மட்டுமே. சீமானால் உண்மையான தமிழ் தேசியம் சிதைக்கப்பட்டே வருகிறது.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இவர்கள் என்ன தான் ஓலமிட்டாலும் நாம் தமிழர் கட்சி தமிழகத்தை மட்டும் அல்ல யாழ் தளத்தையும் கதற விட்டிருப்பது தான் நிஜம்.

நாம் தமிழர் கட்சி சம்பந்தமான திரிகள் மட்டுமே இங்கே எரிகின்றன.

ஏரிப்தே அண்ணனைதான்.

றோவின் அதிகாரிகள் வந்து நிற்பதை கூட உணரமுடியாத “போலிக்கா” ஆதரவு, அருணா அண்ணி ஆதரவாளருக்கு அடியும் நுனியும் விளங்காமை வியப்பல்ல.

வீடு ஏரிகிறது, நல்ல கத கதப்பாக இருக்கிறது என சந்தோசப்படும் நிலைதான்🤣.

உங்களை போன்ற போலிக்காவுக்கும் துவாரகாவுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியாத கெட்டிக்காரர்கள் இந்த இனத்தின் சாபக்கேடுகளில் ஒன்று.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:
23 hours ago, ரசோதரன் said:

மேலும் சீமானின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் எவரும் அவர் இதை ஒத்துக் கொண்டால் கூட, அவரை விட்டு நீங்கப் போவது கிடையாது.

கொகேயின் பாவனையாளர்கள் திருந்த வாய்புகள் அதிகம்.

22 hours ago, வாலி said:

ஆமா தட்ஸ் ட்ரூ!

You can’t teach an old dog new tricks. 😂

வெளிநாடுகளில் வாழ்கின்ற ஈழதமிழ் சீமான் ஆதரவாளர்களின் உண்மை நிலை அது தான். சீமான் கத்திகொண்டு கேட்பாராம் கருணாநிதியின் மகனா ( ஸ்ராலின் ) அல்லது பிரபாகரனின் மகனா ( அது இவர் தானாம் ) பார்ப்போமா பார்ப்போமா உடனே ஈழதமிழர்கள் ஒரு டோஸ் ஏத்திய நிலைக்கு சென்றுவிடுவார்களாம் Island சொன்ன மாதிரி இவர் ஒரு போதுமே ஆட்சி அதிகாரத்துக்கு வரப்போவது இல்லை நஞ்சை விதைத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

ஏரிப்தே அண்ணனைதான்.

றோவின் அதிகாரிகள் வந்து நிற்பதை கூட உணரமுடியாத “போலிக்கா” ஆதரவு, அருணா அண்ணி ஆதரவாளருக்கு அடியும் நுனியும் விளங்காமை வியப்பல்ல.

வீடு ஏரிகிறது, நல்ல கத கதப்பாக இருக்கிறது என சந்தோசப்படும் நிலைதான்🤣.

உங்களை போன்ற போலிக்காவுக்கும் துவாரகாவுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியாத கெட்டிக்காரர்கள் இந்த இனத்தின் சாபக்கேடுகளில் ஒன்று.

நன்றி சகோ

எனக்கு தெரியும் இறுதியில் கொண்டு வந்து இந்த தூற்றுதலில் தான் முடிப்பீர்கள் என்று.

நீங்கள் சொல்வது அதை நீங்களே நிறுவ முயல்வது அதை மற்றவர்கள் ஏற்கும் வரை கலைத்து கலைத்து வறுப்பது அதுவும் சரிவராத போது இவ்வாறு தூற்றுவது இங்கே எங்கும் கொட்டிக்கிடக்கிறது. இவற்றை யாழ் களம் அறியவில்லை என்று தொடர்கிறீர்கள்.

இதைத் தான் சீமான் சார்ந்தும் செய்கிறீர்கள். அதனால் தானோ என்னவோ அவற்றில் சில உண்மைகள் இருந்த போதிலும் நீங்கள் எழுதுவதால் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

மேலும் யாழில் மட்டுமல்ல பொது வெளியிலும் தலைவர் குடும்பம் சார்ந்த பொய்களை பேசுவோரை கண்டால் செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன ஒரேயொரு ஆள் நான் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

என்னத்தை சொல்லி என்ன அண்ணை…

நீங்கள் போலிகளை நம்பி ஏமாறுபவர் என்பது யாழில் தெள்ள தெளிவாக நிறுவப்பட்ட ஒரு விடயம்.

போலிகா மட்டும் அல்ல, அண்மையில் போஸ்கோ, கிருபா விடயத்திலும் நீங்கள் கிருபாவை பற்றி முரண்பாடாக எழுதியதை சுட்டி இருந்தேன்.

அதைத்தான் நான் மேலே சுட்டி காட்டினேன் தவிர தூற்றல் அல்ல.

இப்படியான உங்கள் வேலைகள் மூலம் நீங்கள் மேலும் மேலும் நச்சுகளை ஊக்குவிக்குறீர்கள்.

இதற்கு நீங்கள் கொடோனிலேயே இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும்.

வறுத்தல் - நிச்சயமாக, கருணா, கேபி, பிள்ளையான், சீமான் இவர்களுக்கு ஆதரவாக எந்த கருத்து எழுந்துதாலும், அதை என்னால் முடிந்தவரை திரத்தி அடிப்பேன்.

கோஷான் எழுதுவதால் உண்மையை கூட நான் கண்டுகொள்வதில்லை என்பதில் பல்லிளிக்கிறது உங்கள் மெச்சூரிட்டி🤣.

உண்மை யார் சொன்னாலும் உண்மைதான்.

முடிந்தால் சீமான் பற்றிய என் விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள், பேடித்தனமாக கீழே உள்ளது போல் “இவர்கள் எல்லாம் தமிழின துரோகிகள்” என எழுதாமல்.

நீங்கள் போலிக்கா, அருணாவுக்கு முட்டு கொடுத்து, அது உண்மை என முன் தள்ளி இந்த இனத்துக்கு செய்த துரோகம் போல் நான் ஒரு போதும் செய்ததில்லை.

14 hours ago, விசுகு said:

இவர்கள் கோபப்படுகிறார்கள் என்றாலே தமிழ்த்தேசியம் வளர்வது தெரிகிறது என்று அர்த்தம். அதற்கு சான்றாக இவர்கள் பாவிக்கும் சொற்களே சான்று. அதை நேரடியாக குறிப்பிட்டு எழுத முடியாமல் தமக்கு பிடிக்காதவைகளுக்காகவும் ஆடு நனைகின்றது என்று அழுவது இவர் போன்றவர்களின் வழக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

இவர்கள் என்ன தான் ஓலமிட்டாலும் நாம் தமிழர் கட்சி தமிழகத்தை மட்டும் அல்ல யாழ் தளத்தையும் கதற விட்டிருப்பது தான் நிஜம்.

நாம் தமிழர் கட்சி சம்பந்தமான திரிகள் மட்டுமே இங்கே எரிகின்றன.

நிச்சயம் கதறத்தான் வேண்டும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மிக எளிதாக பேசும் இந்த வக்கிர மனிதனை தலைவனாக ஏற்றுக்கொண்டு கண்ணெதிரே தெரியும் உண்மைகளை மறுதலிக்கும் போக்கை கண்டு கதறத்தான் முடியும், வேறு என்ன செய்ய முடியும்.

இந்த குற்றத்தின் உண்மைத்தன்மை எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் இந்த இரு நாட்களாக அவர் பேசிய பேச்சுகளை ஏற்று கொள்கிறீர்களா? ஒரு மாண்பானவன் இந்த குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன், நீதிமன்றத்தில் என் தரப்பு நியாயங்களை தெரிவிப்பேன் என கூறியிருப்பான், ஆனால் இந்த அறமற்ற மனிதர் பெண்களின் பாலியல் குற்றங்களை கேவலமாக பேசிவிட்டு, புலிகள் பின்னால் ஒளிந்து கொள்கின்றார். இந்த சம்பவத்திருக்கும் இயக்கத்திற்கும் என்ன சம்பந்தம்?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, செவ்வியன் said:

நீங்கள் விசுகரிடம் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள். "பிரபாகரனை தலையில் வைத்திருக்கிறார்கள்" என்ற ஒரே காரணத்திற்காக விசுகர் இது வரை தடவிக் கொடுத்த அல்லது கண்டிக்காமல் மொள்ளக் கடந்து போன றௌடிகள், கள்ளர்கள், முடிச்சு மாறிகள் பலர் இருக்கிறார்கள். தற்போது சீமான், அவ்வளவு தான்.

ஒரு எடுகோளுக்காக: நாளை இனப்படுகொலையாளி கோத்தா ரீம் வந்து "பிரபாகரன் எங்களுக்கு வழி காட்டி தெரியுமா?" என்று ஒரு போடு போட்டால், விசுகர் கோத்தாவையும் தடவிக் கொடுக்க வழி தேடுவார்😂!

No offense விசுகர்! இது உங்களுக்கே நான் பல முறை நேரடியாகச் சொன்னது தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டு அரசியலில் யோக்கியர்கள் எவருமில்லை.

அதே போல்....

சினிமாத்துறையிலும் யோக்கியர்கள் எவருமில்லை.நிலைமை இப்படியிருக்க சீமான் நடத்தைகளை மட்டும் தூக்கிப்பிடிப்பதும் ஒரு வித அயோக்கியம். அதிலும் அன்றைய பிரச்சனையை இன்று சூடாக்குவதும் பழிவாங்கல் தான்.

இது சீமானுக்கு வக்காளத்து வாங்கும் கருத்தல்ல.நடு நிலைமையாக யோசித்து பார்த்ததில்.....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செவ்வியன் said:

நிச்சயம் கதறத்தான் வேண்டும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மிக எளிதாக பேசும் இந்த வக்கிர மனிதனை தலைவனாக ஏற்றுக்கொண்டு கண்ணெதிரே தெரியும் உண்மைகளை மறுதலிக்கும் போக்கை கண்டு கதறத்தான் முடியும், வேறு என்ன செய்ய முடியும்.

இந்த குற்றத்தின் உண்மைத்தன்மை எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் இந்த இரு நாட்களாக அவர் பேசிய பேச்சுகளை ஏற்று கொள்கிறீர்களா? ஒரு மாண்பானவன் இந்த குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன், நீதிமன்றத்தில் என் தரப்பு நியாயங்களை தெரிவிப்பேன் என கூறியிருப்பான், ஆனால் இந்த அறமற்ற மனிதர் பெண்களின் பாலியல் குற்றங்களை கேவலமாக பேசிவிட்டு, புலிகள் பின்னால் ஒளிந்து கொள்கின்றார். இந்த சம்பவத்திருக்கும் இயக்கத்திற்கும் என்ன சம்பந்தம்?

உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்கள் கருத்துடன் நான் மாறுபட்டால் என் பிறவிக்குணத்திலிருந்து என் மொள்ளமாரித்தனங்கள் என நீங்கள் ஊகிக்கும் அனைத்தையும் வைத்து என்னை கடைந்தெடுத்த சொற்களால் கதற விடுபவர்கள் சீமானின் சொற்களுக்கான கதறுவதை கண்டு கொள்ளாமை வருத்தம் தருகிறது. உங்கள் உள் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செவ்வியன் said:

நிச்சயம் கதறத்தான் வேண்டும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மிக எளிதாக பேசும் இந்த வக்கிர மனிதனை தலைவனாக ஏற்றுக்கொண்டு கண்ணெதிரே தெரியும் உண்மைகளை மறுதலிக்கும் போக்கை கண்டு கதறத்தான் முடியும், வேறு என்ன செய்ய முடியும்

இதில் பாலியல் வன்கொடுமை எங்கே வருகிறது? சீமானுடன் நெருங்கிப்பழகமுதலே உங்கள் விஜி அன்னிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று அவரே சொல்லியிருக்கிறார்! அப்படியானால் சீமானுடன் ஏன் பழகினார்? சரி சீமானுடனான பிரிவின் பின் எத்தனைபேருடன் நெருக்கமாக இருந்தார்?

இருவர் மனமொத்து இருந்த உறவையே பாலியல் வல்லுறவு, செக்ஸ் சைக்கோ என்றெல்லாம் சொல்பவர்கள் விலைமாதர் மாடமே கதியென கிடந்தது பதினாறுவயதில் பதின்மூன்று வயது சிறுமியை மணமுடித்த செக்ஸ் தந்தை ஈவேராவை எப்படி போற்றி கொண்டாடுகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்கள் கருத்துடன் நான் மாறுபட்டால் என் பிறவிக்குணத்திலிருந்து என் மொள்ளமாரித்தனங்கள் என நீங்கள் ஊகிக்கும் அனைத்தையும் வைத்து என்னை கடைந்தெடுத்த சொற்களால் கதற விடுபவர்கள் சீமானின் சொற்களுக்கான கதறுவதை கண்டு கொள்ளாமை வருத்தம் தருகிறது. உங்கள் உள் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது அல்லவா?

உங்களின் கோபம் எனக்கு முழுமையாக விளங்காவில்லை, கருத்தியல்ரீதயாக வேறுபாடு இருக்கலாம், நாம் வெவ்வேறு பாதையில் பயணிக்கலாம், அது அனைவரது உரிமை. ஆனால் அடிப்படை மனிதத்தன்மை என்பது பொதுவானது, நம் கொள்கைகளுக்கு என்ற தனி மனிததன்மை கிடையாது.

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை, அடக்குமுறை எவ்வித தயக்கமின்றி, வேறுபாடின்றி கண்டிக்கப்பட வேண்டும், அதை எக்காரணம் கொண்டு நியாயபடுத்த முடியாது. அதுவும் நம்மினம் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டு இன்னும் மீளாமல் இருக்கிறோம். நாம் இக்கொடுஞ்செயல் செய்கிறவன் நம்மொழி பேசுகிறான், நம் கொள்கையை தூக்கிபிடிக்கிறான் என்ற காரணத்திற்காக அவன் பின்னால் நின்றால் அது மனிததன்மையற்றது, நம் போராட்டத்தையும், அதன் நியாய குரலையும் நீர்த்து போக செய்வதேயாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செவ்வியன் said:

உண்மை தான்

ஆனால் இது ஈழத்தில் நடந்தால் என் கருத்து வேறாக இருக்கும். ஆனால் நடக்கும் களம் வேறு. அத்துடன் திரைப்படத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்று.

எனவே இதிலிருந்து நாம் தள்ளி நிற்போம் என்று தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன்.

ஆனால் கழுவி கழுவி ஊத்துகிறோம் என்கின்ற போது மற்றும் முக்கியமாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது நாமே குற்றவாளி என்று தீர்ப்பெழுதும் போது வேறு வழியின்றி சிலவற்றை தடுக்க வேண்டி வருகிறது. தவறாக இருந்தால் தீர்ப்பின் பின்னர் திருத்தலாம்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Eppothum Thamizhan said:

இதில் பாலியல் வன்கொடுமை எங்கே வருகிறது? சீமானுடன் நெருங்கிப்பழகமுதலே உங்கள் விஜி அன்னிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று அவரே சொல்லியிருக்கிறார்! அப்படியானால் சீமானுடன் ஏன் பழகினார்? சரி சீமானுடனான பிரிவின் பின் எத்தனைபேருடன் நெருக்கமாக இருந்தார்?

இருவர் மனமொத்து இருந்த உறவையே பாலியல் வல்லுறவு, செக்ஸ் சைக்கோ என்றெல்லாம் சொல்பவர்கள் விலைமாதர் மாடமே கதியென கிடந்தது பதினாறுவயதில் பதின்மூன்று வயது சிறுமியை மணமுடித்த செக்ஸ் தந்தை ஈவேராவை எப்படி போற்றி கொண்டாடுகிறார்கள்?

நான் முதலிலேயே குறிப்பிட்டது போல் இந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மை நீதிமன்றத்தில் முடிவு செய்யவேண்டியது. நான் கண்டிப்பது சீமானின் வக்கிரமான பேச்சையே.

இந்திய நீதிமன்ற தீர்ப்புகளின்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என உறுதியளித்துவிட்டு உறவுகொள்ளுதல் பாலியல் குற்றமே. ஆனால் இதை நிரூப்பிக்க படவேண்டியது நீதிமன்றத்தில்

1 minute ago, விசுகு said:

உண்மை தான்

ஆனால் இது ஈழத்தில் நடந்தால் என் கருத்து வேறாக இருக்கும். ஆனால் நடக்கும் களம் வேறு. அது திரைப்படத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்று.

எனவே இதிலிருந்து நாம் தள்ளி நிற்போம் என்று தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன்.

ஆனால் கழுவி கழுவி ஊத்துகிறோம் என்கின்ற போது மற்றும் முக்கியமாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது நாமே குற்றவாளி என்று தீர்ப்பெழுதும் போது வேறு வழியின்றி சிலவற்றை தடுக்க வேண்டி வருகிறது. தவறாக இருந்தால் தீர்ப்பின் பின்னர் திருத்தலாம்.

உங்களது கருத்தை முழுமையாக ஏற்கிறேன். நான் அவரை குற்றவாளியென்று சொல்லவில்லை, சொல்லுவதும் தவறு, ஆனால் முறையற்று பேசுகிறார், அதையே கண்டிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

1 minute ago, செவ்வியன் said:

இந்திய நீதிமன்ற தீர்ப்புகளின்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என உறுதியளித்துவிட்டு உறவுகொள்ளுதல் பாலியல் குற்றமே. ஆனால் இதை நிரூப்பிக்க படவேண்டியது நீதிமன்றத்தில்

அப்படி நிரூபிக்கப்படமுன் எப்படி நீங்கள் சீமானை பாலியல் குற்றவாளி என்று கூறிக்கொண்டே இருக்கிறீர்கள்?

ஏற்கனவே நிச்சயமான ஒருவர் இதை எப்படி நிரூபிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, செவ்வியன் said:

உங்களது கருத்தை முழுமையாக ஏற்கிறேன். நான் அவரை குற்றவாளியென்று சொல்லவில்லை, சொல்லுவதும் தவறு, ஆனால் முறையற்று பேசுகிறார், அதையே கண்டிக்கிறேன்.

இது இன்றைய பத்திரிகை மற்றும் வீடியோ செய்தியாளர் என்ற போர்வையில் பெருகிவரும் இணையத்தள உலகால் வரும் சிக்கல். இதையே சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிலும் காண்கிறோம். இதை காயாள்வது மிக மிக கடினமானது. எனக்கு அனுபவ ரீதியாக இதில் சில உண்டு. அதனால் இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி. கருத்துக்களம் மற்றும் கருத்து பரிமாற்றம் என்பது இப்படி இருக்க வேண்டும் இருந்தால் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அப்படி நிரூபிக்கப்படமுன் எப்படி நீங்கள் சீமானை பாலியல் குற்றவாளி என்று கூறிக்கொண்டே இருக்கிறீர்கள்?

ஏற்கனவே நிச்சயமான ஒருவர் இதை எப்படி நிரூபிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இது 12 ஆண்டுகள் முன்னர் கொடுக்கப்பட்ட வழக்கு, எவ்வித விசாரணையும் செய்யப்பட்டதாக தெரியவில்லை, இதற்கு அரசியல் காரணங்கள் கூறப்படுகிறது. அதோடு நீங்கள் கூறியது போல் பாலியல் குற்றங்கள் நிருப்பிக்கப்படுவது கடினம், இதிலும் அதுவே நடக்கும் என நினைக்கிறேன். நான் மீண்டும் சொல்லவருவது, குறை சொல்வது, கடந்த 2 நாட்களாக சீமான் என்னும் நபர் பேசும் மிகவும் மோசமான பேச்சை பற்றிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தமிழ் நாட்டு அரசியலில் யோக்கியர்கள் எவருமில்லை.

அதே போல்....

சினிமாத்துறையிலும் யோக்கியர்கள் எவருமில்லை.நிலைமை இப்படியிருக்க சீமான் நடத்தைகளை மட்டும் தூக்கிப்பிடிப்பதும் ஒரு வித அயோக்கியம். அதிலும் அன்றைய பிரச்சனையை இன்று சூடாக்குவதும் பழிவாங்கல் தான்.

இது சீமானுக்கு வக்காளத்து வாங்கும் கருத்தல்ல.நடு நிலைமையாக யோசித்து பார்த்ததில்.....

இரெண்டு வித்தியாசங்களை கவனிக்க தவறுகிறீர்கள்.

  1. இதே போல் எந்த தமிழ் நாட்டு அரசியல்வாதியின் மீதும் எந்த ஒரு பெண்ணும், பொலிஸ் முறைப்பாடு, கோர்ட் எண்டு போகவில்லை.

    அப்படி போனால் அவர்கள் நடத்தையும் தூக்கி பிடிக்கப்படும்.

  2. சீமான் ரோவின் பணிப்பில், ஈழதமிழர்-தமிழக தமிழர் இடையே பகைமூட்டும் ஒரு ஏஜெண்ட் என்பது என் நம்பிக்கை. ஆகவே அவரை அடிக்க கிடைக்கும் சந்தர்பத்தை எல்லாம் பயன்படுத்தி கொள்வேன்.

  • இது என் நிலைப்பாடு மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

என் பிறவிக்குணத்திலிருந்து என்

அதை இங்கே சுட்டிகாட்டியது. உங்களை தாக்க அல்ல.

மாறாக நீங்கள் ஒரு சமூக பிரமுகர். உங்கள் சொல்லை கேட்பவர் பலர் இருப்பார்கள்.

போலிக்கா, அருணா, சீமான் போன்றவர்களிடம் நீங்களும் ஏமாந்து ஏனையோரும் ஏமாற துணை போகாதீர்கள் என்பதை சொல்லவே.

நீங்களே பலதடவை எழுதியுள்ளீர்கள் உங்களுக்கு சீமானில் நல்ல அபிப்பிராயம் இல்லை என. கன விடயங்கள் தெரியாது என.

அப்போ ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்?

ஏன் சீமான் ex Indian Army wing ஒன்றை வைத்துள்ளார் என யோசித்து கூட பார்க்காமல் அதை ஏதோ தமிழர் இராணுவம் என்ற பீடிகையோடு பகிர்கிறீர்கள்.

நீங்கள் ஏமாந்தால் ஓக்கே. மக்களையும் கூடவே அழைத்து சென்று கிணத்தில் தள்ளி விடாதீர்கள்🙏.

2 hours ago, Eppothum Thamizhan said:

செக்ஸ் சைக்கோ

இப்படி சொன்னது விஜி அண்ணி விவகாரத்துக்கு அல்ல.

தாயை புணருமாறு பெரியார் கூறினார் என சீமான் ஆதரமில்லாத ஒன்றை கூறினார்.

மனோதத்துவத்தின் படி projection என்ற ஒரு விடயம் உள்ளது. தம் மனதில் இருக்கும் செக்ஸ் சைக்கோ எண்ணங்களை, இப்படி இன்னொருவர் செய்தார் அல்லது கூறினார் என “சுமத்துவதுதான்” இந்த projection.

அப்படி சொல்லிய திரியிலே இது பற்றிய விளக்கத்யும் கொடுத்தேன். நீங்கள் எப்போதாவது யாழுக்கு வருவதால் அது கண்ணில் படவில்லை போலும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

விலைமாதர் மாடமே கதியென கிடந்தது பதினாறுவயதில் பதின்மூன்று வயது சிறுமியை மணமுடித்த

அவர் பாலியல் தொழிலாலிகளிடம் போனார் உண்மைதான் - இங்கே சீமான் பாலியல் தொழிலாலிகளோடு போனார் என்பது அல்ல வழக்கு.

வழக்கு சீமான் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார் என்பது. புகார் அந்த பெண் கூறியது.

பெரியார் மீதோ வேறு எவர் மீதோ இப்படி ஒரு பெண் புகார் கூறவில்லை.

இதுதான் வித்தியாசம்.

இப்போ சீமான் அவரோடு கணிசமான காலம் கூடி வாழ்ந்த பெண்ணை - பாலியல் தொழிலாளி என்கிறார். அப்போ சீமான் யார்? Pimp ஆ?

பெரியார் மட்டும் அல்ல, எனது பாட்டனர், காந்தி உட்பட அநேகர் அப்போ பால்ய திருமணம்தான். அது 80 வருடம் முந்திய உலகு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

இதில் பாலியல் வன்கொடுமை எங்கே வருகிறது? சீமானுடன் நெருங்கிப்பழகமுதலே உங்கள் விஜி அன்னிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று அவரே சொல்லியிருக்கிறார்! அப்படியானால் சீமானுடன் ஏன் பழகினார்? சரி சீமானுடனான பிரிவின் பின் எத்தனைபேருடன் நெருக்கமாக இருந்தார்?

இருவர் மனமொத்து இருந்த உறவையே பாலியல் வல்லுறவு, செக்ஸ் சைக்கோ என்றெல்லாம் சொல்பவர்கள் விலைமாதர் மாடமே கதியென கிடந்தது பதினாறுவயதில் பதின்மூன்று வயது சிறுமியை மணமுடித்த செக்ஸ் தந்தை ஈவேராவை எப்படி போற்றி கொண்டாடுகிறார்கள்?

ஒரு பெண் திருமண வாழ்க்கையில் வெற்றிகரமாக பதினைந்தாவது வருடத்தை கடத்தி குழந்தைகள் வளர்ந்து குடும்பமாக சமுதாயத்தில் வளர்ந்து நிற்கும்போது பதினைந்து வருடங்களுக்கு முன்பான காதலன் வந்து அப்பெண்ணின் வாழ்க்கையில் தொந்தரவு கொடுத்தால் என்ன செய்ய வேண்டும்.....?

பதினைந்து வருடங்களாக தொழிலில் தோற்று நாலைந்து பெண்களோடு வாழ்ந்து அதிலும் தோற்று உறுவுச்சிக்கல்களினால் மனப்பிறழ்ந்து தன் முதல் காதலியின் வெற்றிகரமான வாழ்க்கையில் ரீ எண்ட்ரி கொடுத்தால் அது எப்படியாக இந்த சமுதாயம் பார்க்கும்.....?

தன் முன்னாள் காதலியின் குடும்பமே அவளோடு கூட நின்றாலும் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை முன்னாள் காதலன் டார்கெட் செய்தால் சமுதாயம் யாரோடு நிற்க வேண்டும்.....? பணத்திற்காக என்னோடு இருந்தாள் அவள் இப்போது வேறொருவனோடு இருக்கிறார் என்று அபாண்டத்தை சுமத்தினால் யாரோடு நிற்க வேண்டும்....?

சீமான் திருமணம் முடிந்து பதினைந்து வருடமாகிறது......

துணை நடிகை விஜயலட்சுமி சீமான் மேல் புகார் கொடுக்கும் காலக்கோடுகளை போட்டு பார்த்தால் தெரியும் அவர் வரும் நேரங்கள் எப்படியான நேரங்கள் என்று.....?

தேர்தலுக்கு தேர்தல் அல்லது சீமான் எதாவது ஒரு முக்கியமான பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்தால் உடனே விஜயலட்சுமி வந்துவிடுகிறார். அவரது நூற்றி எத்தனையாவது வரவு என்று தெரியவில்லை இந்த இடைத்தேர்தலுக்கு பின்பான அவரது வரவு......

ஒருமுறை புகார் இல்லைனு எழுதிகொடுத்துவிட்டு போகிறார் அடுத்தமுறை மீண்டும் வருகிறார் எதையாவது பேசுகிறார் பின்பு காணாமல் போகிறார்.இது மீண்டும் மீண்டும் என்று நடந்து கொண்டிருக்கிறது........

சீமானை தாக்குபிடிக்க முடியாமல் தன்னை இங்கே அழைத்து வருபவர்கள் யாரென்றும் யார் வீடியோ போட சொன்னார்கள் எவ்வளவு பணம் தந்தார்கள் மணம் தராமல் ஏமாற்றினார்கள் என்று அவர் பேசிய வீடியோவும் இருக்கிறது. இந்த பதினைந்து வருடங்களில் அவர் சீமானின் மேல் புகார் சொன்னதுபோல் மூன்று பேர் மேல் புகார் சொல்லி ஒருவரிடம் லம்பாக பணமும் வாங்கியிருக்கிறார்.....

அவரது சில வீடியோக்களில் சீமானை இழிவுபடுத்துகிறேன் என்று தேடுனியா மகன் தேடுனியா மகன் என்று சீமானின் ஒட்டுமொத்த குடும்பத்தயும் தெருவுக்கு இழுக்கவும் செய்திருக்கிறார்.......

இதில் சீமானின் தவறு ஒன்றுதான்....

ஆமா நாங்கள் லிவிங்டுகெதரில் இருந்தோம் சரியாவரலை இப்போது பிரிந்துவிட்டோம் எனக்கு திருமணமாகிவிட்டது என்று போயிருந்தால் இத்தனை பெரியதாக இது இழுத்திருக்காது........

சரி சீமான் இந்த விடயத்தில் தொடக்கம் முதலே விஜயலட்சுமியை தவறாக பேசினாரா என்றால் இல்லை கவனமாக வார்த்தை பிரயோகங்களைத்தான் கடந்த பதினான்கு வருடங்களாக உபையோகித்திருக்கிறார் ஆனால் இந்த முறை அவரை அவரால் கட்டுபடுத்த முடியவில்லை.......

காரணங்கள்

பதினான்கு வருடமாக இல்லாமல் அவர் எப்ஐஆரை க்வாஷ் செய்ய சொன்ன வழக்கு வரும்போது என்னை அவர் ஏழுமுறை கருக்கலைப்பு செய்தார் என்ற அபாண்டத்தை தூக்கி வீசுகிறார் விஜயலட்சுமி ......

சீமானின் எதிர் அரசியலை தாக்குபிடிக்க முடியாமல் ஒட்டுமொத்த மீடியாவும் அவரது வழக்கை நடிகை பாலியல் பலாத்கார வழக்கு என்று தவறாக குறிப்பிடுகிறது.....

நேற்று ஒரு இடதுசாரி மலையாள பெண் அரசியல் வாதி அவரை ரேப் அக்யுஸ்ட் என்கிறு குறிப்பிட்டு எழுதுகிறார்.....

ஒரு மாதர் சங்க லெட்டர் பேட் அமைப்பு அவரை பாலியல் வண்புணர்வு குற்றவாளி என்கிறுது......

தமிழக முதல்வர் கையில் பரிசில் பெற்ற முக்தார் எனும் ஊடக எச்சை ஒட்டுமொத்த நாதக மகளிர்களயும் சீமானயும் இணைத்து ஸ்லைடு போட்டு கேவலபடுத்துகிறான்.........

இதற்குமேலும் சீமான் ஏன் கண்ணியம் காக்கவேண்டும்....? அவர் வார்த்தைகளில் வெடிக்கிறார்......

அவர் வார்த்தையில் வெடிப்பதை மீண்டும் அரசியலாக்குகிறார்கள் அதனால் சீமான் அமைதி காக்க வேண்டும்......நாவை அடக்க வேண்டும்.......

சீமான் பேசும் தமிழ்தேசிய அரசியலில் ஏற்புடயதா இல்லையா அவரை நான் ஏற்கிறோமா எதிர்க்கிறோமா என்பதை தாண்டி சீமான்தான் இன்றைய தமிழ்தேசிய அரசியலின் வாக்கரசியல் முகம். அந்த வாக்கரசியல் முகத்தை ஒரு நடிகையின் ப்ளாகமெயில் வழக்குக்கு பதில் பேசுகிறேன் என்ற பெயரில் தரம் தாழ்த்த அனுமதிக்க முடியாது........

அப்புறம்...

விஜயலட்சுமியும் ஒரு பெண்தானே என்று பக்கமாக எழுதி தள்ளும் திடீர் பெண்ணியவாத லும்பச்சிகளை என்ன சொல்ல.. தமிழ்நாட்டில் கடந்த மூன்றுமாதங்களில் நடந்த எந்த ஒரு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிர்வினையாற்றாத , மீசை பாண்டி வகையறா மேல் இருக்கும் அடுக்கடுக்கான பாலியல் பஞ்சாயத்துகளுக்கு சப்பை கட்டுற இந்த லும்பச்சிகள் அல்ல தமிழ்நாட்டின் மனசாட்சி..........

இந்த லும்பச்சிகள் சீமானை திட்டுவதற்கு முன்பு விஜயலட்சுமி என்ற பெண்ணின் மனச்சிதைவை அரசியலாக்கி சீமானுக்கு எதிராக தேர்தல் காலங்களில் பயன்படுத்திய திராவிட லும்பன்களின் மேல் கல்லெறிந்துவெட்டு சீமானை திட்டட்டும் அவருக்கு நாவடக்க பாடம் எடுக்கட்டும்.......

அப்படியே இணையத்தில் சீமானை பாலியல் குற்றவாளி என கூச்சலிடுபவர்களுக்கும்..

இன்னொன்றையும் இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.. நான்காம் கலைஞர் எனப்படும் இன்பநிதி ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் லிவ்விங் ருகெதரில் இருக்கிறார்.. அந்த படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது ஞாபகம் இருக்கும்.. நாளை அவர் தமிழ்நாட்டின் முதல்வர் என்பதால் இந்தியா பெண்ணைத்தான் திருமணம் செய்வார்.. இந்த உறவுதான் சீமானுக்கும் விஜலட்சுமிக்குமென்பதை திமுக உடன்பிறப்புகளுக்கு நாம் தமிழர் விளக்கட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அதை இங்கே சுட்டிகாட்டியது. உங்களை தாக்க அல்ல.

மாறாக நீங்கள் ஒரு சமூக பிரமுகர். உங்கள் சொல்லை கேட்பவர் பலர் இருப்பார்கள்.

போலிக்கா, அருணா, சீமான் போன்றவர்களிடம் நீங்களும் ஏமாந்து ஏனையோரும் ஏமாற துணை போகாதீர்கள் என்பதை சொல்லவே.

நீங்களே பலதடவை எழுதியுள்ளீர்கள் உங்களுக்கு சீமானில் நல்ல அபிப்பிராயம் இல்லை என. கன விடயங்கள் தெரியாது என.

அப்போ ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்?

ஏன் சீமான் ex Indian Army wing ஒன்றை வைத்துள்ளார் என யோசித்து கூட பார்க்காமல் அதை ஏதோ தமிழர் இராணுவம் என்ற பீடிகையோடு பகிர்கிறீர்கள்.

நீங்கள் ஏமாந்தால் ஓக்கே. மக்களையும் கூடவே அழைத்து சென்று கிணத்தில் தள்ளி விடாதீர்கள்🙏.

இப்படி சொன்னது விஜி அண்ணி விவகாரத்துக்கு அல்ல.

தாயை புணருமாறு பெரியார் கூறினார் என சீமான் ஆதரமில்லாத ஒன்றை கூறினார்.

மனோதத்துவத்தின் படி projection என்ற ஒரு விடயம் உள்ளது. தம் மனதில் இருக்கும் செக்ஸ் சைக்கோ எண்ணங்களை, இப்படி இன்னொருவர் செய்தார் அல்லது கூறினார் என “சுமத்துவதுதான்” இந்த projection.

அப்படி சொல்லிய திரியிலே இது பற்றிய விளக்கத்யும் கொடுத்தேன். நீங்கள் எப்போதாவது யாழுக்கு வருவதால் அது கண்ணில் படவில்லை போலும்.

எனக்கும் உங்களுக்கும் உள்ள வேறுபாடு இது தான் சகோ. எனது செயல்களுக்கு நீண்ட கால பார்வையும் தேவையும் பொறுமையும் காத்திருப்பதும் இருக்கும். அவசியம்.

நீங்கள் குறிப்பிடும் அருணா எனது இலக்கல்ல என்று இங்கே முதலிலேயே எழுதிவிட்டேன். எனக்கு அவரை இயக்குபவனை தெரியணும். அதற்கு அருணா வெளியே வரணும். அண்மையில் வந்தார் உங்களை போன்ற அவசரக்காரர்களால் மீண்டும் ஒளித்துக்கொண்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு பெண் திருமண வாழ்க்கையில் வெற்றிகரமாக பதினைந்தாவது வருடத்தை கடத்தி குழந்தைகள் வளர்ந்து குடும்பமாக சமுதாயத்தில் வளர்ந்து நிற்கும்போது பதினைந்து வருடங்களுக்கு முன்பான காதலன் வந்து அப்பெண்ணின் வாழ்க்கையில் தொந்தரவு கொடுத்தால் என்ன செய்ய வேண்டும்.....?

பதினைந்து வருடங்களாக தொழிலில் தோற்று நாலைந்து பெண்களோடு வாழ்ந்து அதிலும் தோற்று உறுவுச்சிக்கல்களினால் மனப்பிறழ்ந்து தன் முதல் காதலியின் வெற்றிகரமான வாழ்க்கையில் ரீ எண்ட்ரி கொடுத்தால் அது எப்படியாக இந்த சமுதாயம் பார்க்கும்.....?

தன் முன்னாள் காதலியின் குடும்பமே அவளோடு கூட நின்றாலும் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை முன்னாள் காதலன் டார்கெட் செய்தால் சமுதாயம் யாரோடு நிற்க வேண்டும்.....? பணத்திற்காக என்னோடு இருந்தாள் அவள் இப்போது வேறொருவனோடு இருக்கிறார் என்று அபாண்டத்தை சுமத்தினால் யாரோடு நிற்க வேண்டும்....?

சீமான் திருமணம் முடிந்து பதினைந்து வருடமாகிறது......

துணை நடிகை விஜயலட்சுமி சீமான் மேல் புகார் கொடுக்கும் காலக்கோடுகளை போட்டு பார்த்தால் தெரியும் அவர் வரும் நேரங்கள் எப்படியான நேரங்கள் என்று.....?

தேர்தலுக்கு தேர்தல் அல்லது சீமான் எதாவது ஒரு முக்கியமான பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்தால் உடனே விஜயலட்சுமி வந்துவிடுகிறார். அவரது நூற்றி எத்தனையாவது வரவு என்று தெரியவில்லை இந்த இடைத்தேர்தலுக்கு பின்பான அவரது வரவு......

ஒருமுறை புகார் இல்லைனு எழுதிகொடுத்துவிட்டு போகிறார் அடுத்தமுறை மீண்டும் வருகிறார் எதையாவது பேசுகிறார் பின்பு காணாமல் போகிறார்.இது மீண்டும் மீண்டும் என்று நடந்து கொண்டிருக்கிறது........

சீமானை தாக்குபிடிக்க முடியாமல் தன்னை இங்கே அழைத்து வருபவர்கள் யாரென்றும் யார் வீடியோ போட சொன்னார்கள் எவ்வளவு பணம் தந்தார்கள் மணம் தராமல் ஏமாற்றினார்கள் என்று அவர் பேசிய வீடியோவும் இருக்கிறது. இந்த பதினைந்து வருடங்களில் அவர் சீமானின் மேல் புகார் சொன்னதுபோல் மூன்று பேர் மேல் புகார் சொல்லி ஒருவரிடம் லம்பாக பணமும் வாங்கியிருக்கிறார்.....

அவரது சில வீடியோக்களில் சீமானை இழிவுபடுத்துகிறேன் என்று தேடுனியா மகன் தேடுனியா மகன் என்று சீமானின் ஒட்டுமொத்த குடும்பத்தயும் தெருவுக்கு இழுக்கவும் செய்திருக்கிறார்.......

இதில் சீமானின் தவறு ஒன்றுதான்....

ஆமா நாங்கள் லிவிங்டுகெதரில் இருந்தோம் சரியாவரலை இப்போது பிரிந்துவிட்டோம் எனக்கு திருமணமாகிவிட்டது என்று போயிருந்தால் இத்தனை பெரியதாக இது இழுத்திருக்காது........

சரி சீமான் இந்த விடயத்தில் தொடக்கம் முதலே விஜயலட்சுமியை தவறாக பேசினாரா என்றால் இல்லை கவனமாக வார்த்தை பிரயோகங்களைத்தான் கடந்த பதினான்கு வருடங்களாக உபையோகித்திருக்கிறார் ஆனால் இந்த முறை அவரை அவரால் கட்டுபடுத்த முடியவில்லை.......

காரணங்கள்

பதினான்கு வருடமாக இல்லாமல் அவர் எப்ஐஆரை க்வாஷ் செய்ய சொன்ன வழக்கு வரும்போது என்னை அவர் ஏழுமுறை கருக்கலைப்பு செய்தார் என்ற அபாண்டத்தை தூக்கி வீசுகிறார் விஜயலட்சுமி ......

சீமானின் எதிர் அரசியலை தாக்குபிடிக்க முடியாமல் ஒட்டுமொத்த மீடியாவும் அவரது வழக்கை நடிகை பாலியல் பலாத்கார வழக்கு என்று தவறாக குறிப்பிடுகிறது.....

நேற்று ஒரு இடதுசாரி மலையாள பெண் அரசியல் வாதி அவரை ரேப் அக்யுஸ்ட் என்கிறு குறிப்பிட்டு எழுதுகிறார்.....

ஒரு மாதர் சங்க லெட்டர் பேட் அமைப்பு அவரை பாலியல் வண்புணர்வு குற்றவாளி என்கிறுது......

தமிழக முதல்வர் கையில் பரிசில் பெற்ற முக்தார் எனும் ஊடக எச்சை ஒட்டுமொத்த நாதக மகளிர்களயும் சீமானயும் இணைத்து ஸ்லைடு போட்டு கேவலபடுத்துகிறான்.........

இதற்குமேலும் சீமான் ஏன் கண்ணியம் காக்கவேண்டும்....? அவர் வார்த்தைகளில் வெடிக்கிறார்......

அவர் வார்த்தையில் வெடிப்பதை மீண்டும் அரசியலாக்குகிறார்கள் அதனால் சீமான் அமைதி காக்க வேண்டும்......நாவை அடக்க வேண்டும்.......

சீமான் பேசும் தமிழ்தேசிய அரசியலில் ஏற்புடயதா இல்லையா அவரை நான் ஏற்கிறோமா எதிர்க்கிறோமா என்பதை தாண்டி சீமான்தான் இன்றைய தமிழ்தேசிய அரசியலின் வாக்கரசியல் முகம். அந்த வாக்கரசியல் முகத்தை ஒரு நடிகையின் ப்ளாகமெயில் வழக்குக்கு பதில் பேசுகிறேன் என்ற பெயரில் தரம் தாழ்த்த அனுமதிக்க முடியாது........

அப்புறம்...

விஜயலட்சுமியும் ஒரு பெண்தானே என்று பக்கமாக எழுதி தள்ளும் திடீர் பெண்ணியவாத லும்பச்சிகளை என்ன சொல்ல.. தமிழ்நாட்டில் கடந்த மூன்றுமாதங்களில் நடந்த எந்த ஒரு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிர்வினையாற்றாத , மீசை பாண்டி வகையறா மேல் இருக்கும் அடுக்கடுக்கான பாலியல் பஞ்சாயத்துகளுக்கு சப்பை கட்டுற இந்த லும்பச்சிகள் அல்ல தமிழ்நாட்டின் மனசாட்சி..........

இந்த லும்பச்சிகள் சீமானை திட்டுவதற்கு முன்பு விஜயலட்சுமி என்ற பெண்ணின் மனச்சிதைவை அரசியலாக்கி சீமானுக்கு எதிராக தேர்தல் காலங்களில் பயன்படுத்திய திராவிட லும்பன்களின் மேல் கல்லெறிந்துவெட்டு சீமானை திட்டட்டும் அவருக்கு நாவடக்க பாடம் எடுக்கட்டும்.......

அப்படியே இணையத்தில் சீமானை பாலியல் குற்றவாளி என கூச்சலிடுபவர்களுக்கும்..

இன்னொன்றையும் இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.. நான்காம் கலைஞர் எனப்படும் இன்பநிதி ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் லிவ்விங் ருகெதரில் இருக்கிறார்.. அந்த படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது ஞாபகம் இருக்கும்.. நாளை அவர் தமிழ்நாட்டின் முதல்வர் என்பதால் இந்தியா பெண்ணைத்தான் திருமணம் செய்வார்.. இந்த உறவுதான் சீமானுக்கும் விஜலட்சுமிக்குமென்பதை திமுக உடன்பிறப்புகளுக்கு நாம் தமிழர் விளக்கட்டும்..

உங்கள் விஜயலட்சுமி வந்து போகும் டைம்லனையும், சீமான் அரசியல் ஜம்ப் அடிக்கும் டைம்லைனையும் ஒப்பிட்டு பாருங்கள் உண்மை உறைக்கும்.

நீங்கள் உங்கள் “ஆண்கள் சங்கம்” கண்ணோட்டாதில் (பழைய ஐடி காலத்தில் இருந்து) இதை பார்பதால் பலதை தவறவிடுகிறீர்கள்.

  1. விஜி அண்ணி இங்கே தான் தான் முதல் மனைவி, கோவிலில் மாலை மாற்றினோம் என்கிறார். கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாற்றினார் ஆகவே அவர் என்னுடன் வைத்த உறவு பாலியல் வல்லுறவு என்பது அவர்வாதம்.

  2. இன்னொரு விசயம். உங்களுக்கும் இதே போல் எழுதிய ஏனையோருக்கும் - பாலியல்தொழிலாளி என்றாலுமே கூட அவர்களும் மனிதர்கள்தான். எமக்குரிய சட்டம் தான் அவர்களுக்கும். ஒரு பாலியல்தொழிலாழியை திருமணம் செய்வதாக பொய்சொல்லி ஏமாற்றி, உறவு வைப்பதும் குற்றம்தான்.

  3. சீமான் முதலில் எதுவும் இல்லை என மறுத்து விட்டு இப்போ வெறும் பாலியல்தொழிலாளியுடனா உறவே அது என்கிறார்.

  4. இதில் விஜயலட்சுமி ஆணாலவும், சீமான் பெண்ணாகவும் இருந்தால் என்ற உங்கள் கேள்விக்கு விடை - அப்படியே இருந்தாலும் - இது விசாரிக்கப்பட வேண்டிய வழக்குத்தான்.

  5. இங்கே நாம் எப்போதும் வலியுறுத்தியது - நியாயமான விசாரணையை மட்டுமே.

  6. இப்போ அரிதாக ஒரு நீதிபதி - ஏன் இத்தனை ஆண்டு தாமதம் என கேட்டு வழக்கை துரிதப்படுத்தி உள்ளார்.

  7. சீமான் குற்றம் ஏதும் இழைக்காவிடில் இதற்கு சந்தோசப்பட்டு, கேட்டவுடன் பொலிஸுக்கு போய், விசாரணைக்கு ஒத்துழைத்து, வழக்கை வெல்ல அல்லவா முயலவேண்டும்?

  8. ஏன் டெல்லிக்கு ஓடி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் நேர்மையான தீர்ப்புக்கு, டெல்லி உச்ச நீதிமன்றத்தை தடை போட கோருகிறார்?

தமிழ்தேசியத்தை சீமான் தூக்கி நிற்பதால் அவரின் மீதான பாலியல் வன்புணர்வு குற்றசாட்டை நாம் மழுங்கடிக்க வேண்டும் என்பது மிக கீழ்தரமான நிலைப்பாடு.

சீமான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, வழக்கை டெல்லி போய் முடக்காமல், சென்னை ஹைகோர்ர்டில் தான் நிரபராதி என்பதை நிறுவ வேண்டும்.

43 minutes ago, விசுகு said:

எனக்கும் உங்களுக்கும் உள்ள வேறுபாடு இது தான் சகோ. எனது செயல்களுக்கு நீண்ட கால பார்வையும் தேவையும் பொறுமையும் காத்திருப்பதும் இருக்கும். அவசியம்.

நீங்கள் குறிப்பிடும் அருணா எனது இலக்கல்ல என்று இங்கே முதலிலேயே எழுதிவிட்டேன். எனக்கு அவரை இயக்குபவனை தெரியணும். அதற்கு அருணா வெளியே வரணும். அண்மையில் வந்தார் உங்களை போன்ற அவசரக்காரர்களால் மீண்டும் ஒளித்துக்கொண்டுள்ளார்.

அப்போ நீங்கள் போலிக்காவை முந்தள்ளி அவர் துவாரகாதான் என சொல்லியது - அருணா ரோவின் கையாள் என்பதை வெளிகொணர?

அதேபோல் இப்போ சீமானை ஆதரிப்பதும் - அவர் ரோவின் ஆள் என இனம் காட்ட?

நாங்கள்தான் அவசரடுகிறோம்😂?

அப்படியா அண்ணை?

பிகு

நண்பா..ஓ…நண்பா..

என் காதென்ன punchbag ஆ?

இந்த குத்து குத்துகிறீர்களே?

காதுகள் பாவம் இல்லையா?

(இதன் ஒரிஜினல் வேர்ஷனில் கெட்டவார்த்தை இருப்பதால் மாற்றியுள்ளேன்).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

இரெண்டு வித்தியாசங்களை கவனிக்க தவறுகிறீர்கள்.

  1. இதே போல் எந்த தமிழ் நாட்டு அரசியல்வாதியின் மீதும் எந்த ஒரு பெண்ணும், பொலிஸ் முறைப்பாடு, கோர்ட் எண்டு போகவில்லை.

    அப்படி போனால் அவர்கள் நடத்தையும் தூக்கி பிடிக்கப்படும்.

இங்கே நீங்களும் ஒன்றை கவனிக்க தவறுகின்றீர்கள். அரசியல் பலம்,பண பலம்,அடியாட்கள் பலம் இங்கே முதலிடம் வகிக்கின்றது.நீதி நேர்மை இல்லாத கொலைகளும் மிரட்டல்களும் ஊடகங்களிலையே தினசரி வாசிக்க முடிகின்றது. சீமான் - விஜயலட்சுமி சம்பவங்கள் நடந்து நீண்டகாலமாகியும்,புகார் கொடுத்து நீண்ட காலமாகியும்.... தற்போது இந்த விவகாரத்தை தூக்கிபிடிப்பதன் மர்மம் எல்லோருக்கும் தெரியும். கருத்து வெற்றிக்காக இதை பலர் வெளியே சொல்வதில்லை.

நியாயமான சட்டங்களும் அரசியல்துறையும் இருந்தால் விஜயலட்சுமி புகார் கொடுத்த சந்தர்ப்பத்திலேயே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா?

3 hours ago, goshan_che said:

இரெண்டு வித்தியாசங்களை கவனிக்க தவறுகிறீர்கள்.

2.சீமான் ரோவின் பணிப்பில், ஈழதமிழர்-தமிழக தமிழர் இடையே பகைமூட்டும் ஒரு ஏஜெண்ட் என்பது என் நம்பிக்கை. ஆகவே அவரை அடிக்க கிடைக்கும் சந்தர்பத்தை எல்லாம் பயன்படுத்தி கொள்வேன்.

"ரோ" ஏற்கனவே ஈழ விடயத்தில் செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டது.கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தில் நீங்கள் உணரவில்லையாயின்.......?????

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.