Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணை - பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு நீங்கள் தவறியதால் இன்று சர்வதேச சட்டங்களை புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது என கருதுகின்றீர்களா? - ரணிலிடம் கேள்வி எழுப்பிய கலும்மக்ரே

Published By: Rajeeban

07 Mar, 2025 | 01:09 PM

image

சர்வதேச விசாரணை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு நீங்கள் தவறியதால் இன்று சர்வதேச சட்டங்களை புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது என கருதுகின்றீர்களா என இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் நிகழ்ந்த பாரிய மனித உரிமைமீறல்களை வெளிக்கொணர்ந்த கலும் மக்ரே முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிடம் கேள்விஎழுப்பினார்.

அல்ஜசீரா பேட்டியின் போது  ஹமாசை அழிப்பதற்கான ராஜபக்ச மாதிரி  குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

காசாவில்  யுத்தம் ஆரம்பித்து ஒரு மாதத்தின் பின்னர் அமெரிக்காவின் புத்திஜீவிகள் அமைப்பொன்று ஹமாசினை  முற்றாக அழிப்பதற்கான  ராஜபக்ச திட்டம்  என கட்டுரையொன்றை வெளியிட்டது.

இஸ்ரேல் ராஜபக்சாக்கள் பயன்படுத்திய தந்திரோபாயத்தை பயன்படுத்தவேண்டும் என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர்கள் குறிப்பிட்ட மூலோபாயம் என்பது பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை, யுத்தசூன்ய வலயம் என அழைக்கப்படும் பகுதியை நோக்கி செல்லவைத்து அதன் பின்னர் அவர்கள் மீது குண்டுவீசுவதாகும்.

ராஜபக்சாக்கள் செய்ததை இஸ்ரேல் செய்யவேண்டும், என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டதுடன் இஸ்ரேல் எந்த வகையான சர்வதேச விசாரணை பொறுப்புக்கூறலிற்கும் உடன்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச விசாரணை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு நீங்கள் தவறியதால் இன்று சர்வதேச சட்டங்களை புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது, அவ்வாறு சர்வதேச சட்டங்களை புறக்கணிப்பதை நியாயப்படுத்தும்  அதன் விளைவுகளை நியாயப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது , அதனை  காசாவில் பார்க்கவேண்டியுள்ளது என்பது குறித்து நீங்கள் கவலையடைகின்றீர்களா? என கேட்டார்.

இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க நான் அந்த கட்டுரையை படிக்கவில்லை, ஆகவே அதில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியாது. இதனால் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த மெஹ்டி ஹசன் இஸ்ரேலை ஆதரிக்கும் சிலர் யுத்தகுற்றங்கள் மருத்துவமனைகள் மீதுதாக்குதலை மேற்கொள்வது போன்ற ராஜபக்ச பாணியை  பின்பற்றவேண்டும் என கருதுகின்றார்களே என கேள்வி எழுப்பினார்.

மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் இடம்பெறவில்லை என இதற்கு பதிலளிக்க ஆரம்பித்தவேளை பார்வையாளர்கள் மத்தியிலிருந்து குரல்கள் எழுந்தன.

அதற்கு ரணில் எனது பதிலை முடிக்க விடுகின்றீர்களா? என தெரிவித்துவிட்டு, முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே முக்கியமானது, வேறு சில சம்பவங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.  மருத்துவமனைகள் மீது விமானப்படை தாக்குதலை மேற்கொண்டுள்ளது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் பாரியளவில் பெருமளவில் இது இடம்பெற்றது என நான் தெரிவிக்கமாட்டேன்.

மருத்துவமனைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளகூடாது என வலியுறுத்தியவன் நான் அதனை நாங்கள் உறுதி செய்தோம்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் என்ன நடந்தது என்றால்,  ஆம் அங்கு பிரச்சினைகள் உள்ளது. அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன், நான் இல்லை என தெரிவிக்கமாட்டேன் என குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/208530

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

“நான் உள்ளூர் ஊடகங்களுடன் பேசும்போது, அது நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது, எனவே நல்லது கெட்டது இரண்டும் வெளிவரும். இருப்பினும், அல் ஜசீரா இரண்டு மணி நேரம் என்னை நேர்காணல் செய்தது, ஆனால் ஒரு மணி நேர பகுதியை மட்டுமே வெளியிட்டது, அதில் பெரும்பகுதியைத் திருத்தியது” என்று அவர்  தொிவித்துள்ளாா்.

உள்ளூரில் பத்திரிகைச் சுதந்திரம் உள்ளதா?

எத்தனை பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்?

அவர்களைக் கொன்றவர்ளை கைது செய்தீர்களா?இல்லையென்றால்

ஏன் கைது செய்யப்படவில்லை.

உங்களுக்கு அரசுக்கு விரும்பாதவைகளை ஒலிஒளிபரப்பு செய்தால் அவர்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லை.

பாராளுமன்றில் உரை நிகழ்த்தும் உறுப்பினர்களையே சிஐடி ரிஐடி என்று ஏவல்நாய்களை அவிழ்த்து விடுவீர்களே.

உங்களைப் பற்றிய உண்மைகளை எழுதுபவர்களை மாத்திரம் விட்டு வைப்பீர்களா?

இதெல்லாம் தெரியாத முட்டாள்களா பத்திரிகையாளர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

அல்ஜசீரா நேர்காணல் குறித்து ரணில் அதிருப்தி

editorenglishMarch 7, 2025

“மனித உரிமைகள் வழக்கறிஞரும் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையருமான அம்பிகா சத்குணநாதன் இந்த விவாதத்தில் பங்கேற்பார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. எங்கள் சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், நான் அவரை அறிந்திருப்பதால், அதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். இருப்பினும், பின்னர் அவருக்குப் பதிலாக விடுதலைப் புலிகள் ஆதரவு குழுக்களுடன் தொடர்பு கொண்ட இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதை அறிந்தேன்,” என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

https://globaltamilnews.net/2025/212831/

தமிழ் மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் இதை கொஞ்சம் கவனத்தில் எடுத்து ஞாபகத்தில் வைத்திருப்பது நன்று. இவாறான கொழும்பு எலீட் (Clombo Elites) களை சிங்கள பேரினவாதமே உருவாக்கி வைத்திருக்கிறது. அவர்கள் வெளி தோற்றத்துக்கு காயோ மாயோ என்று கத்தினாலும் அவர்களுக்கான வேலை திட்டங்கள் வேறு.

இந்த பெயர் பட்டியல்கள் நீளமானது.

90 களில் இவ்வாறு எமது விடுதலை போராட்த்தை தீவிரவாதிகள் போராடடம என்றும் சிங்கள பேரினவாதம் தமிழர்களுக்காக போராடுகிறது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் அரசியல் வாதிகளை நம்ப வைத்த ஒரு புறம்போக்கு தமிழ் கூடடம் இருக்கிறது ..... அதில் சில விஷமிகள் இப்போது இங்கு அமெரிக்காவிலும் வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிழம்பு said:

இலங்கை எதிர்ப்பு உணர்வு கொண்ட பார்வையாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

ஆமா.... ரணில் சொல்வதை வாய்மூடி கேட்டுக்கொண்டிருப்பார்கள் என நினைத்திருப்பாரோ இவர்? அதைத்தான் பலமுறை கேட்டாயிற்றே. இனியென்ன புதுசா சொல்லப்போறார்? அலிசப்ரிக்கு கடுப்பை ரணில் மீது காட்டமுடியாது, உண்மையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் யுத்தக்குற்றம் நடைபெறவேயில்லை என்று சாதித்தவர்கள் வாயை திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனி இவரின் பதிலுக்கான விளக்கத்தை ஒவ்வொருவரும் கொடுத்தேயாக வேண்டும். அப்போ தெரியும் ரணிலின் முட்டாள்தனம். நாட்டில் பிரச்சனை இருக்கிறது, யார் பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை, என ஒப்புக்கொள்கிறார். அப்போ, நான் பதவியில் இருக்கவில்லை என ஒப்புக்கொள்கிறார். ஆனா ஆறு தடவை நாட்டின் தலைமைப்பதவியில் இருந்திருக்கிறார், எதிர்க்கட்சித்தலைவராக இருந்திருக்கிறார், ஏன் இந்த முரண்பாட்டை தீர்த்து வைக்க முயற்சிக்கவில்லை, குரல் எழுப்பவில்லை? என கேட்டிருந்தால் இந்த ராஜதந்திரி என்ன பதில் சொல்லியிருப்பார்? பார்வையாளராக வந்தவர்களுக்கு ஏன் இலங்கை மீது பகையுணர்வு வரவேண்டும்? பாதிக்கப்பட்டவர்களுக்கே நிஞாயம் வேண்டும் மற்றவர்களுக்கல்ல. அங்கு கேள்வி கேட்டவர்கள் இலங்கை அரசின் பயங்கரவாதத்தால் நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள், அவர்களுக்கு கேள்வி கேட்க்கும் அதிகாரம் இருக்கு. அதனாலேயே அவர் பதில் சொல்ல மறுத்து அமைதி காத்தார். அமைதி என்பது ராஜதந்திரமல்ல, பதில் சொல்லி மாட்டுப்பட விரும்பவில்லை.  அவர் விரும்புகிறாரோ இல்லையோ உண்மை வெளிவரத்தான் போகிறது, ரணிலும் பதில் சொல்லியேயாகவேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

தமிழ் மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் இதை கொஞ்சம் கவனத்தில் எடுத்து ஞாபகத்தில் வைத்திருப்பது நன்று. இவாறான கொழும்பு எலீட் (Clombo Elites) களை சிங்கள பேரினவாதமே உருவாக்கி வைத்திருக்கிறது. அவர்கள் வெளி தோற்றத்துக்கு காயோ மாயோ என்று கத்தினாலும் அவர்களுக்கான வேலை திட்டங்கள் வேறு.

அதே போல ஜெ.வி.பி யினரும் கீழ்மட்டத்தில் பணியாற்ற ஒர் தமிழ் எலைட் குறூப்பை களம் இறக்கி வெற்றி கண்டுள்ளனர் ...அந்த வலதுசாரி சிங்கள எலைட் குறூப் உருவாக்கிய தமிழ் எலைட் குறூப்பினால் ஏற்பட்ட பாதிப்பை விட இந்த இடது சாரி எலைட் குறூப்பினால் தமிழ் தேசியம் மிகப்பெரிய பாதிப்பை எதிர் நோக்கும்...நோக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அணில் பற்றி எனது முகநூலில் வந்ததன் ..பிரதி பண்ணி போட்டிருக்கின்றேன்

யார் இந்த மெகதி ஷசன், நேற்றிலிருந்து இலங்கை முழுவதும் ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறி போன நபர்.

ஒரு சிலருக்கு இவர் புதிதாக இருக்கலாம் ஆனால் உலக அரசியலை அவதானிப்பவர்களுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பனம் தான்.

நேற்றைய பேட்டியில் ரணில் ஒரு இடத்தில் shout என்கிற வார்த்தையை மெகதி ஷசனை நோக்கி சொல்லுவார். காரணம் இவருடைய கேள்விகள் யாராக இருந்தாலும் அம்பை போல பாயும். இஸ்ரேல் -காசா , ரஷ்யா- உக்ரைன், விக்கிலீக்ஸ் என உலக அரசியலை மையமாக கொண்டவர்களை இவர் பேட்டி எடுத்துள்ளார்.

அல் ஜசீரா என்பது கட்டாரை தலைமையகமாக கொண்ட சர்வதேச தொலைகாட்சி ஒன்றாகும்,செனல் 4 போல இனி ரணில் ராஜபக்ச தரப்புக்கு அல் ஜசீரா இவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு செய்திகள் சொல்லுகிறது என்று சர்வ சாதாரணமாக சொல்லுவார்கள்.

நேற்றைய உள்ளூர் பேட்டியில் ரணிலின் இனவாத கருத்து தெள்ளத்தெளிவாக விளங்ககியது.

எங்கேயோ போய் அடிபட்டு தூர வந்து கத்தும் நாய் போல அங்கே அடிபட்டு இலங்கையில் வந்து மகாநாயக்கர்கள் பெரியவர்கள் எனும் கருத்தை ரணில் சொல்லியது, இன்னும் சிறுபிள்ளை போல எண்ணுவதாக உணர்கிறேன்.

ரணில் அனுபவமிக்க தலைவர், அரசியல் சாசனம் கரைத்து குடித்தவர் என்பது உண்மையே ஆனால் இலங்கைக்குள் மட்டுமே அவரின் சாணக்கியதனம் பலிக்கும். சாதாரணமாக 6 முறை பிரதமராகவும் 1 முறை ஜனாதிபதி பதவியில் இருந்து ஒருவருக்கு உள்ளூர் அரசியல்வாதிகளை சமாளித்து விடுவார்.

ஒன்று கல்வி அறிவு இல்லாத அரசியல்வாதிகள், இன்னொன்று லஞ்சம், இன்னொன்று அவர்களுடைய குற்றங்கள் அட்டவணைப்படுத்தி பயமுறுத்தல், என்று சொல்லி கொண்டே போகலாம்.

ரணில் நாட்டை காப்பாற்றினார் என்பது கட்டமைக்கப்பட்ட நாடகம், இலங்கையின் பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யப்பட்டால் போதும், உதாரணமாக இலங்கைக்கு ஒரு மாதம் சுற்றாலா பயணிகளும் ஒரு மாதம் ஏற்றுமதியும் சீராக இருந்தாலே பிரதான பிரச்சினைகள் தீரும்.

காரணம் இலங்கையின் புவியியல் அமைப்பு பிரதான காரணம் ஆகும்.

சர்வதேச அரங்கில் ரணில் பற்றி தெரிந்து இருந்தும் IMF முதற்கட்டமாக பணத்தை ரணில் கையில் எதற்காக வழங்கினார்கள் என்றால் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்தார். உதாரணமாக ஜப்பான் அரசாங்கம் ஊழல் லஞ்சம் காரணமாக உதவி திட்டங்களை நிறுத்தி இருந்தது, ஆனாலும் IMF கொடுத்ததுக்கான காரணம் உறுப்பு நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு ஆகும்.

அது அவ்வாறு இருக்க நேற்று ரணில் Head to head நிகழ்சியில் பங்குபற்ற பிரதான காரணம், உலக அரங்கில் பலராலும் பார்க்கபடுகிற நிகழ்ச்சி , அடுத்த வருகிற பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சிறிய பின்னடைவு சந்திக்க வாய்ப்பு உள்ளது, காரணம் பிரதான கட்டமைப்பு வேகத்தை மக்கள் ஏற்று கொள்ள நேரம் தேவைபடுகிறது.ஆகவே அதை சாதமாக கொண்டு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையை கொண்டுவந்து

மீண்டும் அரகல போல ஒன்றை‌ உருவாக்கும் திட்டத்தின் முதற் கட்டமாகும்.

தன் கதையாலும்,நகைச்சுவை பேச்சாலும் இலங்கை ஊடகவியலாளர்களை மயக்கியது போல மெகதி ஷசனை மயக்காலாம் என்று எதிர்பார்ப்போடு, ரணில் ராஜபக்ச கருத்தியலை விதைத்து சர்வதேச அரசியலை திசை திருப்பலாம் என்றே யோசித்து இருந்து இருப்பார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சர்வதேச ஊடகத்திற்கு வழங்கி செவ்வியில் "do you think we are second class country" எனும் கவுண்டரை போட்டு செவ்வி எடுப்பவரை மடக்கியது போல

பெரும் கனவோடு சென்றிருந்தார்.

ஆனால் பட்டலந்த அறிக்கை முதல் அவர்கள் வைத்திருப்பார்கள் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் விடையளிக்க முடியாமல் அவருடைய கைகள் நடுங்க தொடங்கியது அவதானிக்க கூடியதாக இருந்தது. இலங்கை தேவாலயங்கள் தாக்குதல் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நகைச்சுவையாக அனுக முற்பட்ட ரணிலை " it's not a funny, they were killed 100 of people" என்று சொன்னதும் ரணில் நிலை தடுமாறி போனார்.

ரணிலுக்கு ஆதரவு வழங்க வந்த European parliament member ஒருவர் ரணிலால் சமாளிக்க முடிவில்லை என்று அறிந்தும் " you were bringing wrong person,and u should bring gottabaya rajagapaksha , because he destroyed ranil political " என்று சொன்னதும் உடனடியாக சுதாகரித்து கொண்ட மெகதி"எவ்வாறு இவருடைய அரசியல் வாழ்வை சிதைத்தவர் பிறந்தநாள் பார்ட்டியில் பாட்டுபாடினார் " என்றே கேட்டதும் ரணிலின் முகம் கோபத்தால் நிலை குழைந்து போனது.

ரணில் ஓநாய் என்பது அரசியலை அதிகமாக நோக்குகிறவர்களுக்கு தெரியும்.மகிந்தவுக்கு இணையான ஒரு இனவாதி தான் ஆனால் "slow poison" என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி எதற்காக இவ்வளவு தடுமாறுகிறது என்றால் இலங்கையின் முழு system மும் மாற்ற வேண்டும். அதற்கு மிக நீண்ட காலம் தேவை. இலங்கையின் முழு அரசியல் கட்டமைப்பு மக்களுக்கானது இல்லை, அது இலகுவான விடயமில்லை , வியாபார‌ அரசியலை மக்கள் அரசியலாக மாற்ற வேண்டியதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும், அதில் அரைவாசி கடந்தும் விட்டார்கள்.

என்னதான் அரசியல் சாணக்கியனாக இருந்தாலும், சரியான இடத்தில் மூக்கு உடைப்படும் என்பதற்கு ரணில் சான்று!

Via அருண் செல்வராஜ்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

பல விடயங்களை அறியக் கூடியதாக இருந்தது.

பகிர்விற்கு நன்றி அல்வாயன்.

  • கருத்துக்கள உறவுகள்

482056477_1054791130019192_8545756278234

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் இருந்து…

https://www.facebook.com/share/p/165oXSWwgF/?mibextid=wwXIfr

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்ஜசீரா ஊடகத்துக்கு ரணில் குறிப்பிட்ட விடயங்களுக்கு முறையான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் - பாட்டலி சம்பிக்க ரணவக்க

Published By: VISHNU

09 MAR, 2025 | 07:06 PM

image

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா ஊடகத்துக்கு குறிப்பிட்ட விடயங்களை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் முறையான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து பட்டியல்களை வெளியிட்டுக் கொண்டிருப்பது பயனற்றது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 கடந்த கால அரசாங்ககளின் மோசடிகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக பட்டியல்களை வெளியிடுகிறது. ஆனால் அதற்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. 75 ஆண்டுகால அரசியலையும், அரசியல்வாதிளையும் ஊழல்மோசடியாளர்கள் என்று வாய்க்கு வந்ததை போல் குற்றஞ்சாட்டினார்கள்.இதனால் நாட்டுக்கு சேவையாற்றிய சிறந்த அரசியல்வாதிகளும் அவமதிக்கப்பட்டார்கள்.

 கடந்த அரசாங்கத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்ட நபர்களின் பெயர்கள் இதுவரையில் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றதை போன்ற சித்தரிப்பையே மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தினார்கள்.

அரசியல்வாதிகள் ஊழல் மோசடி செய்துள்ளார்கள் என்று அரசாங்கம் பொதுவாக குறிப்பிடுகிறது. அவர்கள் யார் என்பதை மக்களுக்கு பகிரங்கமாக அறிவித்து விட்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து பாராளுமன்றத்திலும், பொது இடங்களிலும் பரீட்சை பெறுபேற்றை அறிவிப்பதை போன்று செயற்பட்டுக் கொண்டிருந்தால் ஏதும் மாற்றமடையாது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட விடயங்களை அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ளாமல் முறையான சட்ட நடவடிக்கைளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். தேசிய மட்டத்தில் ஒரு விடயத்தை கையாள்வதற்கும், சர்வதேச மட்டத்தில் ஒரு விடயத்தை கையாள்வதற்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/208736

  • கருத்துக்கள உறவுகள்

செந்தூர் தமிழ்

May be an image of 2 people

Thas Re

7h  ·

இது 1987 - 90 காலப்பகுதியில் பியகமவில் செயல்பட்டிருந்த பட்டலந்த வதைக்கூடத்தின் புகைப்படமாகும்.

புகைப்படத்தின் நடுவில் இருப்பவர், பயங்கர காலத்தில் கைது செய்யப்பட்டு வதைக்கூடத்திற்கு கொண்டுவரப்பட்ட கைதியாவார்.

இரு பக்கங்களிலும் ஆயுதம் ஏந்தியிருப்பவர்கள், அரச பாதுகாப்பு படையினருக்கு உட்பட்டவர்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெளிவாக தெரியும்.

இவர்கள், அற்கால காபினட் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பரான போலீஸ் அதிகாரி டக்லஸ் பீரிஸின் இரு மகன்கள்.

கைது செய்யப்பட்டு முகாமிற்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் கை, கால்களை உடைத்து சித்திரவதை செய்வது இவர்கள் மேற்கொண்ட ஒரு விளையாட்டு என எடுத்துக் கொள்ளலாம்.

பின்னாளில் ஆட்சி மாற்றத்துடன், டக்லஸ் பீரிஸ் இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்றார்.

பின்னர் நீதிமன்றத்தின் சிறப்பு நடவடிக்கையால், அவர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு, பட்டலந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும்,

சந்திரிகா குமாரதுங்க அரசின் அலட்சியம் காரணமாக, அந்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தன.

டக்லஸ் பீரிஸ் பின்னர் உயிரிழந்தார்.

அவர் மகன்கள் இருவரும் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அவர்களில் ஒருவன் அங்கே தீ விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டக்லஸ் பீரிஸின் நெருங்கிய நண்பரான அந்த காபினட் அமைச்சர், இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதி ஆனார்.

அந்த காலத்தில் ரணிலின் குற்றங்களை அம்பலப்படுத்த வந்த சந்திரிகா குமாரதுங்க, தற்காலத்தில் ரணிலை ஜனாதிபதி கதிரையில் அமர்த்த மறைமுகமாக உதவி செய்தார்

அந்த காலத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசு, 1987ஆம் ஆண்டு முதல் மக்கள் விடுதலைப் முண்ணனியை (JVP) இரத்தமும் இரும்பும் கொண்டு அடக்க முயற்சிகள் மேற்கொண்டது.

மாத்தறையில் H.R. பியசிறி,

வட மத்திய மாகாணத்தில் நெல்சன், M.S. அதிகாரி, மஹிந்தசோம,

களுத்துறையில் ரணவக்க,

காலியில் M.S. அமரசிறி,

குருநாகலில் காமினி ஜயவிக்ரம பெரேரா,

ஹலாவத்த, புத்தளம் பகுதிகளில் பெப்டஸ் பெரேரா, ஜான் அமரதுங்க, ஜோசப் மைக்கேல் பெரேரா,

கம்பஹாவில் போல் பெரேரா,

இவர்கள் ஒவ்வொருவருக்கும் J.R. ஜெயவர்தன அரசு அதிகாரங்களை வழங்கியது.

பின்னர், கொழும்பு மாவட்டத்தின் அடக்குமுறையை ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தது.

1987 ஆம் ஆண்டில், பட்டலந்த வதைக்கூடத்தை நிறுவியது அவரே.

அதற்காக, கொழும்பிற்கு அருகில் இருந்த சில அரசியல் ஆதரவாளர்களின் கட்டளைக்கிணங்கி, எந்தவொரு தீவிர செயலும் செய்யத் தயங்காத காவல்துறையினரை தேர்ந்தெடுத்தார்.

அந்த தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவராக கான்ஸ்டபிள் டக்லஸ் பீரிஸ் இருந்தார்.

அவர் ஒரு மனித உருவை உடைய மிருகம் எனக் கூறலாம்.

பட்டலந்த வதைக்கூடத்தின் தலைவராக, ரணில் விக்ரமசிங்கவினால் டக்ளஸ் பீரிஸ் உயர் காவல் துறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

இதற்காக காவல்துறை விதிகளையும் சட்டங்களையும் முற்றிலும் மீறப்பட்டது.

இந்த பதவி உயர்வுக்கு R. பிரேமதாச, ஜோசப் மைக்கேல், ஜான் அமரதுங்க ஆகியோர் முக்கிய பங்கை வகித்தனர்.

பட்டலந்த வத்காகாரத்திற்குக் கொண்டுவரப்பட்ட 5000க்கும் மேற்பட்ட தேசப்பற்றுள்ள பொதுமக்களை கொலை செய்ய, ரணிலின் நேரடி கட்டளையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த கொடூர கொலைகள் மேற்கொண்ட முக்கிய நபர், இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தைகளின் தந்தையான டக்லஸ் பீரிஸ்தான்.

2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டார் என்ற ஒரே வாதத்தை வைத்து ரணிலை மாபெரும் புத்திசாலியாக சிலர் சித்தரிக்கிறார்கள். ஆனால் அவர் நாட்டை மீட்டார் என்பதை விட நாட்டின் பல விலைமதிப்பற்ற இடங்களையும், சொத்துக்களையும் விற்று நாட்டை மீட்டார் என்று கூறுவது சாளச் சிறந்தது என நினைக்கிறேன்.

எது எப்படியோ ரணிலின் ஆரம்ப கால அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பல அப்பாவிகளின் இரத்தக் கறைகள் அவர் ஆடையில் பதிந்து தான் இருக்கிறது.

எவ்வளவு நல்லவனாக நீங்கள் அவரை சித்தரிக்க முயன்றாலும் அவர் ஓர் சிறிய ஹிட்லர் தான்.

நன்றி: சமூக வலைத்தளம்

  • கருத்துக்கள உறவுகள்

482318936_1056933589804946_4265336305107

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2025 at 14:47, satan said:

ஜே .ஆர் .சொன்னார், போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம். புலிகளை அழிப்பதற்கு எந்தப்பேயுடனும் பேசத்தயார்

இந்த வசனம் இன்னும் ஞாபகம் இருக்கின்றது ..வானொலியில் தான் செய்தியில் வாசித்தார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

செந்தூர் தமிழ்

May be an image of 2 people

Thas Re

7h  ·

இது 1987 - 90 காலப்பகுதியில் பியகமவில் செயல்பட்டிருந்த பட்டலந்த வதைக்கூடத்தின் புகைப்படமாகும்.

எவ்வளவு நல்லவனாக நீங்கள் அவரை சித்தரிக்க முயன்றாலும் அவர் ஓர் சிறிய ஹிட்லர் தான்.

நன்றி: சமூக வலைத்தளம்

நன்றாக ஞாபகம் இருக்கின்றது முன்னாள் வட மாகாண அமைச்சர் இடதுசாரி போராளி ...பாராளுமன்றில் ஒர் அறிக்கை விட்டார் ...கதிர்காம அழகி மன்னன்பேரி யை படுகொலை செய்தமைக்கு கண்டனம் தெரிவித்தார்....1972 நடந்த சம்பவத்துக்கு ...1990 களில் ...அவ்வளவுக்கு முப்போக்கு சிந்தனையாம் ...

  • கருத்துக்கள உறவுகள்
On 10/3/2025 at 03:31, ஏராளன் said:

அரசியல்வாதிகள் ஊழல் மோசடி செய்துள்ளார்கள் என்று அரசாங்கம் பொதுவாக குறிப்பிடுகிறது. அவர்கள் யார் என்பதை மக்களுக்கு பகிரங்கமாக அறிவித்து விட்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மோசடி, கொலை, கொள்ளை செய்தவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. அரகலய போராட்டம் யாருக்கு எதிராக நடந்தது? தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் யார்? என்பது ஒன்றும் இவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், மக்களுக்கு நன்றாகத் தெரிந்துதான் உரியவர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கத்தான் ஓடி ஒளிகிறார்கள் ஊழல் மோசடி செய்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், அவர்களின் ஏவலர்கள். நாட்டுக்கு யாராவது ஒருவர் சேவையாற்றி இருந்தால்; நாடு பாதாளத்திற்கு போயிருக்காது, இவ்வளவு ஊழல்வாதிகள் பெருகியுமிருக்க வாய்ப்பில்லை. உதயன் கம்மன்பில கூறினார் "நாங்கள் உழைத்துச்சாப்பிடவில்லை 1950 ல் இருந்து கடன் வாங்கியே வாழ்ந்த தேசம்." மைத்திரி சொன்னார் "நிரந்தர பகிர்வு பொறி முறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது." அப்படி யாராவது நாட்டுக்கு  சிறந்த சேவையாற்றியிருந்தால்; அவரை நீங்கள் வெளிப்படுத்துங்கள் மக்களுக்கு.   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.