Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

தில‌க் வ‌ர்மா

வெல்ல‌னும் என்று விளையாட‌ வில்லை...................................................

கவலைப்படாதீர்கள் விளையாட்டில் யாராவது ஒருவர் தோற்கத்தானே வேண்டும், அடுத்த போட்டியில் பார்த்துகலாம்.

3 hours ago, செம்பாட்டான் said:

ஆகா.... ரிஷப் மீண்டும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அப்போ இன்றும் ஒரு "கதைத்தல்" இருக்கும் போல. கோயங்கா எங்கையா.

ஆனால் சிறப்பாக அணியினை வழிநடத்தினார், தாக்கூரின் 13 ஓவரில் நன்றாக ஆட்டக்காரர்களை செட் பண்ணினார்கள் ஆனால் விக்கெட் விழவில்லை கவனித்தீர்களா?

  • Replies 3.3k
  • Views 98.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

லக்னோ அணி பவர் பிளேயில் 67/0

மும்பாய் அணி பவர் பிளேயில் 64/2

லக்னோ அணி 7-10 ஓவரில் 100/2

மும்பாய் அணி 7-10 ஓவரில் 101/3

இரண்டு அணிகளும் மிகவும் திட்டமிட்டு போட்டியினை கட்டமைத்திருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

கவலைப்படாதீர்கள் விளையாட்டில் யாராவது ஒருவர் தோற்கத்தானே வேண்டும், அடுத்த போட்டியில் பார்த்துகலாம்.

ஆனால் சிறப்பாக அணியினை வழிநடத்தினார், தாக்கூரின் 13 ஓவரில் நன்றாக ஆட்டக்காரர்களை செட் பண்ணினார்கள் ஆனால் விக்கெட் விழவில்லை கவனித்தீர்களா?

19வது பந்துப் பரிமாற்றத்தைச் சொல்கிறீர்கள். தாக்கூரும் அருமையாக வீசினார். அடிச்சா ஆறு அடி. இல்லாட்டி ஒன்றையும் விடமாட்டம் என்று நின்றார்கள். ஹார்டிக்காலும் திலக்காலும் மட்டையைச் சுழற்றவே முடியவில்லை.

சூரியா ஆட்டமிழந்ததுடன் போட்டி முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

19வது பந்துப் பரிமாற்றத்தைச் சொல்கிறீர்கள். தாக்கூரும் அருமையாக வீசினார். அடிச்சா ஆறு அடி. இல்லாட்டி ஒன்றையும் விடமாட்டம் என்று நின்றார்கள். ஹார்டிக்காலும் திலக்காலும் மட்டையைச் சுழற்றவே முடியவில்லை.

சூரியா ஆட்டமிழந்ததுடன் போட்டி முடிந்தது.

13 ஆவது ஓவரில் களத்தடுப்பினை wide yorker, back of length ஏற்படுத்தியிருந்தார்கள் பின்னர் சரியான மற்றும் அளவு கூடிய பந்துகளை வீசிவிட்டு எதிர்பார்த்த மெதுவான அளவு குறைந்த பந்தில் விக்கெட் எடுக்கும் முயற்சியில் பந்து வீச்னினார்கள் ஆனால் நிறைவேறவில்லை.

19 ஆவது ஓவரும் ஓட்டங்களை கட்டுப்படுத்த சிறப்பாக வீசினார்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.

அல்வாயன் பதவி ஏற்பு வைபவத்தைக் காண லட்சோப லட்சம் பேர் கொழுத்தும் வெய்யிலிலும் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

முதல்வர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.

அல்வாயன் பதவி ஏற்பு வைபவத்தைக் காண லட்சோப லட்சம் பேர் கொழுத்தும் வெய்யிலிலும் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொறுங்கோ...இப்பதன் புது உடுப்பு வாங்கப் போறன்...சனத்தைக் சற்று அமைதிப் படுத்துங்கள்... அதுக்கு ஒரு வழியிருக்கு..மேடையில் ஏறி நாலு பாட்டுப் பாடுங்கோ...பிரியன்

கிருபன் சார் இப்ப முடிவை வெளியிடமாட்டார்☹️

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, vasee said:

லக்னோ அணி பவர் பிளேயில் 67/0

மும்பாய் அணி பவர் பிளேயில் 64/2

லக்னோ அணி 7-10 ஓவரில் 100/2

மும்பாய் அணி 7-10 ஓவரில் 101/3

இரண்டு அணிகளும் மிகவும் திட்டமிட்டு போட்டியினை கட்டமைத்திருந்தனர்.

உண்மைதான். சிறப்பாக சென்று கொண்டிருந்தது. Scoreboard pressureதான் மும்மபையை வீழ்த்தியது. 200க்குள்ள அமத்தியிருந்தால், கொஞ்சம் இலகுவாக இருந்திருக்கும்.

எவ்வளவுதான் திட்டமிட்டாலும், மனித மனம் ஒன்று இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, alvayan said:

பொறுங்கோ...இப்பதன் புது உடுப்பு வாங்கப் போறன்...சனத்தைக் சற்று அமைதிப் படுத்துங்கள்... அதுக்கு ஒரு வழியிருக்கு..மேடையில் ஏறி நாலு பாட்டுப் பாடுங்கோ...பிரியன்

கிருபன் சார் இப்ப முடிவை வெளியிடமாட்டார்☹️

வருகவே . .......வருகவே ........ !😂

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

முதல்வர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.

அல்வாயன் பதவி ஏற்பு வைபவத்தைக் காண லட்சோப லட்சம் பேர் கொழுத்தும் வெய்யிலிலும் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் எங்கட ராசதந்திரம். துமுவை மு ஆக்கி, முவைத் துமுவாக்கி நாங்கள் விளையாட்டுக் காட்டுவம். மக்களாகிய நீங்கள் தாங்கித்தான் ஆகவேண்டும்.

விசாரணைக் குழு பாயப்போக்குது. கவனமாயிருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, alvayan said:

பொறுங்கோ...இப்பதன் புது உடுப்பு வாங்கப் போறன்...சனத்தைக் சற்று அமைதிப் படுத்துங்கள்... அதுக்கு ஒரு வழியிருக்கு..மேடையில் ஏறி நாலு பாட்டுப் பாடுங்கோ...பிரியன்

கிருபன் சார் இப்ப முடிவை வெளியிடமாட்டார்☹️

மும்பை அணியின் தொட‌க்க‌ வீர‌ர்க‌ளும் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்க‌ வில்லை

இங்லாந் வீர‌ர் ஜ‌க்ஸ் 20ஓவ‌ர் விளையாட்டுக்கு ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார்................ஒரு க‌ட்ட‌த்தில் ஓவ‌ருக்கு 10ப‌டி அடிக்க‌ இருந்த‌து , தில‌க் வ‌ர்மா வ‌ந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டு காய‌ம் கார‌ண்மாக‌ வெளிய‌ போன‌து தான் மிச்ச‌ம்.....................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

................ஒரு க‌ட்ட‌த்தில் ஓவ‌ருக்கு 10ப‌டி அடிக்க‌ இருந்த‌து , தில‌க் வ‌ர்மா வ‌ந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டு காய‌ம் கார‌ண்மாக‌ வெளிய‌ போன‌து தான் மிச்ச‌ம்.....................

பாகிஸ்தான் ரிசுவானின் நடிப்புபோல் ...இதுவும் வர்மாவின் நடிப்பு...க்தை வசனம் உடைமாற்றும் அறையினர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025 இன் 16வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மிச்சல் மார்ஷினனதும் எய்டன் மார்கத்தினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஹார்டிக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் 17 ஓட்டங்களில் விக்கெட்டுகளை இழந்து வெளியேற பின்னர் வந்த சூரியகுமார் யாதவின் அதிரடியான 67 ஓட்டங்களுடன் வெற்றியை நோக்கி நகர்ந்தாலும் திலக் வர்மா மெதுவாகவே ஓட்டங்களை எடுத்து பந்துகளை வீணாக்கியதாலும் இறுதி ஓவர்களின் ஓட்டங்களை எடுக்கத் திணறியதாலும் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 191 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0435.jpeg

முதல்வர் பதவியை @alvayan ஓரடி முன்னகர்ந்து கைப்பற்ற @செம்பாட்டான் பின்னே கால்வைத்து அடுத்த நிலையில் தற்காப்பு வேலியைப் போட்டுள்ளார்! கூடவே மூக்குச் சாத்திரம் பார்த்த @நந்தன் உம் நிற்கின்றார்.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

CSK- அஸ்வின் வீடியோ மூலம் அம்பலம்.. சிஎஸ்கே செய்த மிகப்பெரிய தவறு.. 4 இளம் வீரர்கள் மிஸ்ஸிங் By Aravinthan Updated: Wednesday, April 2, 2025, 20:49

[IST] சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த மிகப்பெரிய சொதப்பலை ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனல் வீடியோ ஒன்றின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருக்கிறது. சிஎஸ்கே அணியில் பேட்டிங் வரிசை மிக மோசமாக உள்ளது. குறிப்பாக 34 வயதான ராகுல் திரிபாதியும், 29 வயது தீபக் ஹூடாவும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் பொருந்திப் போகவில்லை என்ற விமர்சனம் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் தீபக் ஹூடாவுக்கு பதிலாக விஜய் சங்கரை ஆட வைத்தும் பலன் அளிக்கவில்லை. Chennai Super Kings Blunder in IPL 2025 mega auction Revealed by Ravichandran Ashwin இளம் வீரர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி மீண்டும் வயதான வீரர்களை தேர்வு செய்து விட்டதாக ஒரு விமர்சனம் இருக்கும் நிலையில் அதன் பின்னணியை உடைக்கும் வகையில் அஸ்வின் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கம் இடம்பெற்றுள்ளது.

சிஎஸ்கே அணிக்காக பல்வேறு உள்ளூர் டி20 தொடர்களில் இளம் வீரர்களை அடையாளம் காணும் பணியை செய்த வித்யுத் சிவராமகிருஷ்ணன் என்பவர் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அவர் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற டி20 தொடர்களில் தான் சில வீரர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு அளித்ததாகவும், அத்துடன் தனது பணி முடிவடைந்து விட்டதாகவும், ஏலத்தில் யாரை வாங்குவது என்பது சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுக்கும் முடிவு தான் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

அவர் அளித்த அந்த பட்டியலில் பிரியன்ஷ் ஆர்யா, ஸ்வஸ்திக் சிக்காரா, விப்ரஜ் நிகாம், அனிக்கேத் வர்மா ஆகிய பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களில் மூவர் தற்போது பல்வேறு ஐபிஎல் அணிகளில் இடம் பெற்று சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் பிரியன்ஷ் ஆர்யா தனது முதல் போட்டியிலேயே 23 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் விப்ரஜ் நிகாம் இரண்டு போட்டிகளில் 39 ரன்கள் சேர்த்து இருக்கிறார். மேலும் பந்துவீச்சில் ஒரு போட்டியில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும், மற்றொரு போட்டியில் விக்கெட் வீழ்த்தாமல் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இருக்கிறார். மேலும், ஃபீல்டிங்கில் அவர் மிக அபாரமாக செயல்பட்டு பாராட்டுகளையும் பெற்றார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்து இருக்கும் அனிக்கேத் வர்மா இதுவரை தான் ஆடிய இரண்டு போட்டிகளில் அதிரடியாக ஆடி 36 ரன்கள் மற்றும் 74 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரது அதிரடி ஆட்டம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டும் வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது போன்ற சிறந்த இளம் வீரர்களை ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்காமல் கோட்டை விட்டுவிட்டு ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின் என மீண்டும் மூத்த வீரர்களை அதிக செலவு செய்து வாங்கியது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இனி வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங் வரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

ராகுல் திரிபாதி நிச்சயமாக துவக்க வீரராக சரியாக விளையாடவில்லை. அவரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கியே ஆக வேண்டும். அதேபோல தீபக் ஹூடா அல்லது விஜய் சங்கரை ஆட வைப்பதும் சரியான முடிவாக இல்லை. அடுத்து ஆல்ரவுண்டராக சாம் கரனை தேர்வு செய்வதா அல்லது முழு நேர வேகப்பந்துவீச்சாளரான ஜேமி ஓவர்டனை தேர்வு செய்வதா என்ற குழப்பமும் உள்ளது.

சிவம் துபேவை இம்பேக்ட் வீரராக விளையாட வைப்பதற்கு பதிலாக அவரையே ஆல்ரவுண்டராக விளையாட வைக்கலாம் என்று ஆலோசனையும் முன்னாள் வீரர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த சிக்கல்களுக்கு தீர்வு என்ன என்று பார்த்தால் துவக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இறங்க வேண்டும். மூன்றாம் வரிசையில் ஆண்ட்ரே சித்தார்த் விளையாடலாம். அவரை தொடர்ந்து நான்காம் வரிசையில் சிவம் துபே களம் இறங்கலாம். சிவம் துபே மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடுவார் என்பதால் நான்காம் வரிசை அவருக்கு ஏற்றதாக இருக்கும்.

பவுலிங் ஆல் ரவுண்டரான சாம் கரன் ஐந்தாம் வரிசையில் இறங்கலாம். அவரைத் தொடர்ந்து தோனி, ரவீந்திர ஜடேஜா, அன்சுல் கம்போஜ் (பவுலிங் ஆல் ரவுண்டர்) ஆகியோர் பேட்டிங் இறங்கலாம். அஸ்வினை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மற்றொரு அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலை சிஎஸ்கே அணியில் சேர்க்கலாம். கடைசி மூன்று இடங்களில் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமது மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் மதீஷா பத்திரனா மற்றும் கலீல் அகமது இடம் பெறலாம்.

இந்த அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பது போன்ற ஒரு தோற்றமும் உள்ளது. எனினும், சாம் கரன் பேட்டிங்கில் கை கொடுக்கும் பட்சத்தில் இது சரியாக இருக்கும். அன்சுல் கம்போஜ் பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுப்பார் என்பதால் அவர் பின்வரிசையில் நம்பிக்கை அளிப்பார். இதன் மூலம் அணியில் நான்கு ஓவர்களையும் வீசும் ஆற்றல் உடைய மூன்று முழு நேர வேகப்பந்துவீச்சாளர்களும், மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும் இருப்பார்கள். (வேகப் பந்துவீச்சாளர்கள் - பதிரானா, கலீல் அகமது, அன்சுல் கம்போஜ், சாம் கரன், சிவம் துபே, சுழற் பந்துவீச்சாளர்கள் - நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் கோபால்),

ஆண்ட்ரே சித்தார்த்தை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தலாம். மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களுடன் பகுதி நேரமாக சாம் கரன் மற்றும் சிவம் துபே வேகப்பந்து வீச வாய்ப்பு உள்ளது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதுமே ஐபிஎல் தொடரின் இடையே மிகப் பெரிய அளவில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யாது. முதல் பாதி முடியும் வரை ஒன்று இரண்டு மாற்றங்கள் மட்டுமே செய்யும். அதைத்தான் நாம் இதுவரை பார்த்து வந்திருக்கிறோம்.

எனவே, 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது பிளேயிங் லெவனை முற்றிலுமாக மாற்றி அமைக்குமா? அல்லது தங்களது திட்டத்திலிருந்து பின்வாங்காமல் பிடிவாதமாக இருந்து வெற்றிகளை பெற முயற்சி செய்யுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more at: https://tamil.mykhel.com/cricket/chennai-super-kings-blunder-in-ipl-2025-mega-auction-revealed-by-ravichandran-ashwin-087269.html?ref_source=MK-TA&ref_medium=Article-Page&ref_campaign=More-Articles-DMP&ref_content=87395-p2

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை சனி 05 ஏப்ரல் முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 02:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்

CSK எதிர் DC

21 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

  • சுவி

  • செம்பாட்டான்

இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? man-climbing_1f9d7-200d-2642-fe0f.png

backhand-index-pointing-down_1f447.png

18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்

PBKS எதிர் RR

14 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 09 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ்

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவைப்பிரியன்

  • பிரபா

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • கோஷான் சே

  • அகஸ்தியன்

ராஜஸ்தான் ராயல்ஸ்

  • வசீ

  • சுவி

  • வாதவூரான்

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? superhero_1f9b8.png

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் alvayan க்கும் துணை முதல்வர் செம்பாட்டானுக்கும்

வெளியுறவுத்துறை அமைச்சர் நந்தனாருக்கும் வாழ்த்துக்கள்

அமெரிக்கன் அய்யாவின் சபதம் வெற்றியில் முடிந்தது 😂

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

21 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

  • சுவி

  • செம்பாட்டான்

2 சிங்கங்கள் சோடியாய் வந்திருக்கினம்.

21 ____ கூட்டமாய் வந்திருக்கிறம்.

நிலமையை பாக்க சிங்கங்கள் கடிச்சு குதறப் போகுது போல.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

ஐபிஎல் 2025 இன் 16வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மிச்சல் மார்ஷினனதும் எய்டன் மார்கத்தினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஹார்டிக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் 17 ஓட்டங்களில் விக்கெட்டுகளை இழந்து வெளியேற பின்னர் வந்த சூரியகுமார் யாதவின் அதிரடியான 67 ஓட்டங்களுடன் வெற்றியை நோக்கி நகர்ந்தாலும் திலக் வர்மா மெதுவாகவே ஓட்டங்களை எடுத்து பந்துகளை வீணாக்கியதாலும் இறுதி ஓவர்களின் ஓட்டங்களை எடுக்கத் திணறியதாலும் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 191 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0435.jpeg

முதல்வர் பதவியை @alvayan ஓரடி முன்னகர்ந்து கைப்பற்ற @செம்பாட்டான் பின்னே கால்வைத்து அடுத்த நிலையில் தற்காப்பு வேலியைப் போட்டுள்ளார்! கூடவே மூக்குச் சாத்திரம் பார்த்த @நந்தன் உம் நிற்கின்றார்.

நாம் மூவர். எங்களை நாங்களே பாத்துக்கொள்கிறோம். மற்ற எல்லாரும் அப்படியே வரிசையில வாங்க. ஏதாவது தேவை என்றால் தயங்காமல் மனுக் கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, செம்பாட்டான் said:

நாம் மூவர். எங்களை நாங்களே பாத்துக்கொள்கிறோம். மற்ற எல்லாரும் அப்படியே வரிசையில வாங்க. ஏதாவது தேவை என்றால் தயங்காமல் மனுக் கொடுக்கலாம்.

நாலாவதாக ஒருவர் பல நாட்களாக வேவுப் பணியில் உள்ளார் கவனிக்கவில்லையா 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

முதல்வர் alvayan க்கும் துணை முதல்வர் செம்பாட்டானுக்கும்

வெளியுறவுத்துறை அமைச்சர் நந்தனாருக்கும் வாழ்த்துக்கள்

அமெரிக்கன் அய்யாவின் சபதம் வெற்றியில் முடிந்தது 😂

வாழ்த்துக்களுக்கு நன்றி வாத்தியாரே...

அசையா தூண்போல்நின்று முதல்வர் பதவிகாத்த அய்யா செம்பாட்டான் ...இந்த அல்வாயானின்பரிதாபம் கண்டு இரங்கி ...மனதுவைத்து..முதல்வர் பதவிவிட்டு இறங்கி..என்னை ஒருநாள் முதல்வராக்கி அழகு பார்த்ததுக்கு நன்றிகள் பல..

மற்றும் வாழ்த்திய ,வாழ்த்தப்போற..அனவருக்கும் நன்றிகள்

முக்கியமான செய்தி ...முதல்வரின் கையெழுத்தால் அலுவல் முடிக்க இருப்போர் உடனடியாக வரவும் ..பார்த்தும் பாராமல் கையெழுத்து இடப்படும் ...இன்னும் 18 மணித்துளிகள் பதவியில் இருப்பேன்...விரைக

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0435.jpeg

முதல்வர் பதவியை @alvayan ஓரடி முன்னகர்ந்து கைப்பற்ற @செம்பாட்டான் பின்னே கால்வைத்து அடுத்த நிலையில் தற்காப்பு வேலியைப் போட்டுள்ளார்! கூடவே மூக்குச் சாத்திரம் பார்த்த @நந்தன் உம் நிற்கின்றார்.

கிருபன் சார் ..இது என்னங்க ..எனக்கு விளங்கவில்லை..எப்படி...மன்னார் ஆலமரம் மாதிரி நின்ற செம்பாட்டான்..எப்புடி பின்வந்தார்...

ரணில் போல எல்லோரும் சேர்ந்து பப்பா மரத்தில்...

கிருபன் ...உங்கள் உயர்ந்த உள்ளத்தையும்..உயர்மிகு புள்ளியிடும் திறனையும் வரவேற்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

கிருபன் சார் ..இது என்னங்க ..எனக்கு விளங்கவில்லை..எப்படி...மன்னார் ஆலமரம் மாதிரி நின்ற செம்பாட்டான்..எப்புடி பின்வந்தார்...

ரணில் போல எல்லோரும் சேர்ந்து பப்பா மரத்தில்...

கிருபன் ...உங்கள் உயர்ந்த உள்ளத்தையும்..உயர்மிகு புள்ளியிடும் திறனையும் வரவேற்கின்றேன்

உதைத்தான் நான் அப்பவே சொல்லிப் போட்டன். ஏத்துறது விழுத்துறதுக்குத்தான் என்று.

இவ்வளவு நாள் அனுபவிச்சது காணும். மீண்டும் எங்களின் வேலையை ஆரம்பிப்போம்.

35 minutes ago, வாத்தியார் said:

நாலாவதாக ஒருவர் பல நாட்களாக வேவுப் பணியில் உள்ளார் கவனிக்கவில்லையா 😀

அவரும் நானும். நானும் அவரும். பிரபா சொன்னமாதிரி இரு சிங்கங்களாக, வீறுநடை போட்டு.....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

CSK- அஸ்வின் வீடியோ மூலம் அம்பலம்.. சிஎஸ்கே செய்த மிகப்பெரிய தவறு.. 4 இளம் வீரர்கள் மிஸ்ஸிங் By Aravinthan Updated: Wednesday, April 2, 2025, 20:49

[IST] சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த மிகப்பெரிய சொதப்பலை ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனல் வீடியோ ஒன்றின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருக்கிறது. சிஎஸ்கே அணியில் பேட்டிங் வரிசை மிக மோசமாக உள்ளது. குறிப்பாக 34 வயதான ராகுல் திரிபாதியும், 29 வயது தீபக் ஹூடாவும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் பொருந்திப் போகவில்லை என்ற விமர்சனம் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் தீபக் ஹூடாவுக்கு பதிலாக விஜய் சங்கரை ஆட வைத்தும் பலன் அளிக்கவில்லை. Chennai Super Kings Blunder in IPL 2025 mega auction Revealed by Ravichandran Ashwin இளம் வீரர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி மீண்டும் வயதான வீரர்களை தேர்வு செய்து விட்டதாக ஒரு விமர்சனம் இருக்கும் நிலையில் அதன் பின்னணியை உடைக்கும் வகையில் அஸ்வின் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கம் இடம்பெற்றுள்ளது.

சிஎஸ்கே அணிக்காக பல்வேறு உள்ளூர் டி20 தொடர்களில் இளம் வீரர்களை அடையாளம் காணும் பணியை செய்த வித்யுத் சிவராமகிருஷ்ணன் என்பவர் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அவர் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற டி20 தொடர்களில் தான் சில வீரர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு அளித்ததாகவும், அத்துடன் தனது பணி முடிவடைந்து விட்டதாகவும், ஏலத்தில் யாரை வாங்குவது என்பது சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுக்கும் முடிவு தான் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

அவர் அளித்த அந்த பட்டியலில் பிரியன்ஷ் ஆர்யா, ஸ்வஸ்திக் சிக்காரா, விப்ரஜ் நிகாம், அனிக்கேத் வர்மா ஆகிய பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களில் மூவர் தற்போது பல்வேறு ஐபிஎல் அணிகளில் இடம் பெற்று சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் பிரியன்ஷ் ஆர்யா தனது முதல் போட்டியிலேயே 23 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் விப்ரஜ் நிகாம் இரண்டு போட்டிகளில் 39 ரன்கள் சேர்த்து இருக்கிறார். மேலும் பந்துவீச்சில் ஒரு போட்டியில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும், மற்றொரு போட்டியில் விக்கெட் வீழ்த்தாமல் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இருக்கிறார். மேலும், ஃபீல்டிங்கில் அவர் மிக அபாரமாக செயல்பட்டு பாராட்டுகளையும் பெற்றார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்து இருக்கும் அனிக்கேத் வர்மா இதுவரை தான் ஆடிய இரண்டு போட்டிகளில் அதிரடியாக ஆடி 36 ரன்கள் மற்றும் 74 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரது அதிரடி ஆட்டம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டும் வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது போன்ற சிறந்த இளம் வீரர்களை ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்காமல் கோட்டை விட்டுவிட்டு ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின் என மீண்டும் மூத்த வீரர்களை அதிக செலவு செய்து வாங்கியது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இனி வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங் வரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

ராகுல் திரிபாதி நிச்சயமாக துவக்க வீரராக சரியாக விளையாடவில்லை. அவரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கியே ஆக வேண்டும். அதேபோல தீபக் ஹூடா அல்லது விஜய் சங்கரை ஆட வைப்பதும் சரியான முடிவாக இல்லை. அடுத்து ஆல்ரவுண்டராக சாம் கரனை தேர்வு செய்வதா அல்லது முழு நேர வேகப்பந்துவீச்சாளரான ஜேமி ஓவர்டனை தேர்வு செய்வதா என்ற குழப்பமும் உள்ளது.

சிவம் துபேவை இம்பேக்ட் வீரராக விளையாட வைப்பதற்கு பதிலாக அவரையே ஆல்ரவுண்டராக விளையாட வைக்கலாம் என்று ஆலோசனையும் முன்னாள் வீரர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த சிக்கல்களுக்கு தீர்வு என்ன என்று பார்த்தால் துவக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இறங்க வேண்டும். மூன்றாம் வரிசையில் ஆண்ட்ரே சித்தார்த் விளையாடலாம். அவரை தொடர்ந்து நான்காம் வரிசையில் சிவம் துபே களம் இறங்கலாம். சிவம் துபே மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடுவார் என்பதால் நான்காம் வரிசை அவருக்கு ஏற்றதாக இருக்கும்.

பவுலிங் ஆல் ரவுண்டரான சாம் கரன் ஐந்தாம் வரிசையில் இறங்கலாம். அவரைத் தொடர்ந்து தோனி, ரவீந்திர ஜடேஜா, அன்சுல் கம்போஜ் (பவுலிங் ஆல் ரவுண்டர்) ஆகியோர் பேட்டிங் இறங்கலாம். அஸ்வினை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மற்றொரு அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலை சிஎஸ்கே அணியில் சேர்க்கலாம். கடைசி மூன்று இடங்களில் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமது மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் மதீஷா பத்திரனா மற்றும் கலீல் அகமது இடம் பெறலாம்.

இந்த அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பது போன்ற ஒரு தோற்றமும் உள்ளது. எனினும், சாம் கரன் பேட்டிங்கில் கை கொடுக்கும் பட்சத்தில் இது சரியாக இருக்கும். அன்சுல் கம்போஜ் பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுப்பார் என்பதால் அவர் பின்வரிசையில் நம்பிக்கை அளிப்பார். இதன் மூலம் அணியில் நான்கு ஓவர்களையும் வீசும் ஆற்றல் உடைய மூன்று முழு நேர வேகப்பந்துவீச்சாளர்களும், மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும் இருப்பார்கள். (வேகப் பந்துவீச்சாளர்கள் - பதிரானா, கலீல் அகமது, அன்சுல் கம்போஜ், சாம் கரன், சிவம் துபே, சுழற் பந்துவீச்சாளர்கள் - நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் கோபால்),

ஆண்ட்ரே சித்தார்த்தை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தலாம். மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களுடன் பகுதி நேரமாக சாம் கரன் மற்றும் சிவம் துபே வேகப்பந்து வீச வாய்ப்பு உள்ளது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதுமே ஐபிஎல் தொடரின் இடையே மிகப் பெரிய அளவில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யாது. முதல் பாதி முடியும் வரை ஒன்று இரண்டு மாற்றங்கள் மட்டுமே செய்யும். அதைத்தான் நாம் இதுவரை பார்த்து வந்திருக்கிறோம்.

எனவே, 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது பிளேயிங் லெவனை முற்றிலுமாக மாற்றி அமைக்குமா? அல்லது தங்களது திட்டத்திலிருந்து பின்வாங்காமல் பிடிவாதமாக இருந்து வெற்றிகளை பெற முயற்சி செய்யுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more at: https://tamil.mykhel.com/cricket/chennai-super-kings-blunder-in-ipl-2025-mega-auction-revealed-by-ravichandran-ashwin-087269.html?ref_source=MK-TA&ref_medium=Article-Page&ref_campaign=More-Articles-DMP&ref_content=87395-p2

அஸ்வின்ட‌ ப‌ந்து வீச்சும் ச‌ரியே இல்லை ,

தீப‌க் கோடா , விஜ‌ய‌ச‌ங்க‌ர் , இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 20ஓவ‌ர் விளையாட்டுக்கு ச‌ரியான‌ வீர‌ர்க‌ள் கிடையாது

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை ஏல‌த்தில் எடுக்க‌மா , வீர‌ர்க‌ளின் சுத‌ப்ப‌ல் விளையாட்டை சுட்டி காட்டி என்ன‌ ப‌ல‌ன்

ல‌க்னோ அணியில் கூப்பில் உக்கார‌ வைச்ச‌ தீப‌க் கோடாவை சென்னை அணி அவ‌ரை வேண்டின‌து மிக‌ப் பெரும் பிழை

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை ப‌ஞ்சாப் ஏல‌த்தில் வேண்டி விட்ட‌து

டோனி ம‌ற்றும் அஸ்வின் முழுதாய் ஓய்வை அறிவிக்க‌னும்

டோனிக்கு 43வ‌ய‌து ஆக‌ போகுது ஓய்வை அறிவித்து இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விட‌னும்

அஸ்வினின் ப‌ந்து வீச்சும் சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம்..............அப்கானிஸ்தான் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் நொர் சிற‌ப்பாக‌ ப‌ந்து போடுகிறார்............மற்ற‌ சென்னை வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சை ந‌ம்ப‌ முடியாது................................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, alvayan said:

கிருபன் சார் ..இது என்னங்க ..எனக்கு விளங்கவில்லை..எப்படி...மன்னார் ஆலமரம் மாதிரி நின்ற செம்பாட்டான்..எப்புடி பின்வந்தார்...

ரணில் போல எல்லோரும் சேர்ந்து பப்பா மரத்தில்...

கிருபன் ...உங்கள் உயர்ந்த உள்ளத்தையும்..உயர்மிகு புள்ளியிடும் திறனையும் வரவேற்கின்றேன்

.

ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

@alvayan அவர்களின் வேண்டுகோளை நீங்கள் ஏற்கலாம். பாத்துப் பண்ணுங்க.

1 hour ago, வீரப் பையன்26 said:

அஸ்வின்ட‌ ப‌ந்து வீச்சும் ச‌ரியே இல்லை ,

தீப‌க் கோடா , விஜ‌ய‌ச‌ங்க‌ர் , இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 20ஓவ‌ர் விளையாட்டுக்கு ச‌ரியான‌ வீர‌ர்க‌ள் கிடையாது

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை ஏல‌த்தில் எடுக்க‌மா , வீர‌ர்க‌ளின் சுத‌ப்ப‌ல் விளையாட்டை சுட்டி காட்டி என்ன‌ ப‌ல‌ன்

ல‌க்னோ அணியில் கூப்பில் உக்கார‌ வைச்ச‌ தீப‌க் கோடாவை சென்னை அணி அவ‌ரை வேண்டின‌து மிக‌ப் பெரும் பிழை

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை ப‌ஞ்சாப் ஏல‌த்தில் வேண்டி விட்ட‌து

டோனி ம‌ற்றும் அஸ்வின் முழுதாய் ஓய்வை அறிவிக்க‌னும்

டோனிக்கு 43வ‌ய‌து ஆக‌ போகுது ஓய்வை அறிவித்து இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விட‌னும்

அஸ்வினின் ப‌ந்து வீச்சும் சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம்..............அப்கானிஸ்தான் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் நொர் சிற‌ப்பாக‌ ப‌ந்து போடுகிறார்............மற்ற‌ சென்னை வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சை ந‌ம்ப‌ முடியாது................................................

எனக்கு உண்மையிலேயே புரியாத புதிர். எந்த வீரரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். எல்லாரையும் கரிச்சுக் கொட்டினா, பிறகு ஒருத்தரும் மிஞ்சமாட்டினமே. 🫣

இது ஒரு அணியின் விளையாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

ஒரு மேல்முறையீடு. நான் இரண்டாவது ஆளாக என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேனே. அதைக் கணக்கில எடுத்தால்......

இடையில் ஏற்பட்ட சில தடங்கல்களினால், மனக்குளப்பத்தினால் எனது பதில்கள் தாமதமாக வந்தன.

(சும்மா பகிடிக்குத்தான் இந்த எதிர்வினை. ஒன்றுமே எதிர்பார்க்கவில்லை)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.