Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழுநிலைப் போட்டிகளின் இறுதிப் போட்டி நாளை செவ்வாய் 27 மே GMT நேரப்படி பிற்பகல் 02:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதன் பின்னர் குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு இடத்தில் உள்ள அணிகள் அடுத்த கட்ட Play-Off போட்டிகளில் விளையாடவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

70) செவ்வாய் 27 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

LSG எதிர் RCB

ஆறு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • சுவி

  • கந்தப்பு

  • அகஸ்தியன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

  • வசீ

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • சுவைப்பிரியன்

  • பிரபா

  • செம்பாட்டான்

  • வாதவூரான்

  • ஏராளன்

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

  • புலவர்

  • கோஷான் சே

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குழுநிலைகளில் முதலாவதாக வருமா? leopard_1f406.png

  • Replies 3.3k
  • Views 95k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

முதலமைச்சர் லொட்டோ எடுத்துப் பார்க்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

அடுத்த தடவை எல்லோரும் நந்தனை பின்பற்றுங்கள் . ( கொப்பியடியுங்க)😄

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

@வீரப் பையன்26, @செம்பாட்டான் இந்த திரியில் ஈ ஓடுகின்றது.

@ஈழப்பிரியன்

எப்பிடி. என்ன ஆச்சு. எல்லாருக்கும் அலுத்துப் போச்சா. இன்றுதானே கடைசிப் போட்டி.

ஒரு சிறு பயணம் போகவேண்டி வந்ததால், இந்தப் பக்கம் வரமுடியவில்லை. இன்றும் ஒரே அலுப்பாக் கிடக்கு. என்றாலும், குப்பையைக் கொட்டுவம்.

  • கருத்துக்கள உறவுகள்

LIVE

70th Match (N), Lucknow, May 27, 2025, Indian Premier League

RCB chose to field.

Lucknow Super Giants FlagLucknow Super Giants

(14/20 ov) 149/1

Current RR: 10.64 • Last 5 ov (RR): 65/0 (13.00)

Live Forecast: LSG 224

Royal Challengers Bengaluru FlagRoyal Challengers Bengaluru

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் எதிர்பார்த்த பாந்த் இன்றைக்கு வந்துவிட்டார். போட்டு இந்த அடி அடிக்கிறான். இம்முறை, தனது இரண்டாவது அரைச் சதத்தைப் பெற்றுக்கொண்டார்.

மீண்டும் நமக்குப் புள்ளி கிடைக்கக் கூடாதென்பதற்காகவே போட்டு அடிக்கிற மாதிரிக் கிடக்கு. ஏன் இப்பிடி.

  • கருத்துக்கள உறவுகள்

100 அடிச்சான் பாந்த். தலைகீழா சுழன்று குதிச்சான் பயல்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி. 228 அடிக்க வேணும். அடிச்சால் RCB குறைந்தது இரண்டாவதா வரலாம். நமக்கும் புள்ளி கிடைக்கும்.

நமக்கு புள்ளி கிடைப்பதற்காக, யார் அடிக்கப் போறான்.

  • கருத்துக்கள உறவுகள்

அரைவாசிக் கிணறு தாண்டியாச்சு. ஆனால், மூன்று பேரை இழந்துவிட்டார்கள். கோலி முடிச்சு வைப்பாரா

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா. இன்றைக்கு ஒருநாள்த்தான் நமக்கு புள்ளி கிடைக்க வேணும் என்றதுக்காக, முழு அணியும் சேர்ந்து அடிச்சாங்கள். அணித்தலைவன் ஜித்தேஷு. அடிச்சான் பாரு ஆறு ஆறா.

மொத்தமா 30 நான்குகளும் 7 ஆறுகளும். யார் சொன்னது ஆறு ஆறா அடிக்க வேணும் என்று. நாலு நாலா அடிச்சே வெல்லுவோம் என்று காட்டிவிட்டாங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த குழுநிலைப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர் மிச்சல் மார்ஷின் அதிரடியான 67 ஓட்டங்களுடனுன் ரிஷப் பந்தில் புயல்வேக சதத்துடனும் (ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்கள்) 3 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சவாலான ஓட்ட இலக்கை எட்டும் நோக்கில் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆட்டத்தில் இறங்கினர். விராட் கோலியின் 54 ஓட்டங்களுடனும், மயங் அகர்வாலின் 41 ஓட்டங்களுடனும், ஜிதேஷ் ஷர்மாவின் மின்னல்வேகத்தில் 33 பந்துகளில் எடுத்த 85 ஓட்டங்களுடனும் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 230 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_1163.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

வசி... என்ன பின்னால வந்து நிக்கிறியல். நல்ல வேளை, இன்றோடு, போட்டிகள் முடிஞ்சுது. இனி இடக்கு முடக்கு கேள்விகள்தான் பதில் சொல்ல வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

Playoff

Qualifier - தெரிவாகும் அணி - RCBயா PBKSஆ

Eliminator - நீக்கப்படும் அணி - MIயா GTயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழுநிலைப் போட்டிகளின் நிறைவின் பின்னர் அணிகளின் நிலைகள்:

large.IMG_1164.jpeg

பஞ்சாப் கிங்ஸ் முதல் இடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி இடத்தையும் பிடித்துள்ளன!

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

முதலமைச்சர் லொட்டோ எடுத்துப் பார்க்கலாமே.

முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள் 🙏

எந்த அடாவடியும் இல்லாமல் மக்களோடு மக்களாக

தலமைப் பதவியில் அமர்ந்து நல்லாட்சி செய்பவரே

எங்களுக்குத் தேவை . 😇

ஆதலால் தொடர்ந்தும் முதல்வர் பதவியை உங்கள் கையில் ஒப்படைக்க நாம் தயார்.😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

பஞ்சாப் கிங்ஸ் முதல் இடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி இடத்தையும் பிடித்துள்ளன!

அதச் சொல்ல வேற வேணுமா. இக்களத்தில் எத்தினை பேரின் மனது புண்பட்டிருக்கும். கடைசி என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழுநிலைப் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளமையால் கேள்விகள் 71) - 73) வரைக்கும் புள்ளிகள் வழங்கலாம் 😃

71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

ஒருவரும் முதலாவது இடத்தைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணி play-off போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்படும் எனக் கணிக்கவில்லை!

large.IMG_1165.jpeg

72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)

மும்பை இந்தியன்ஸ் நான்காவது இடத்தில் வரும் என நான்கு பேர் கணித்துள்ளனர். மற்றைய அணிகளின் நிலைகளை ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை!

large.IMG_1166.jpeg

73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

ஒருவரும் இறுதி இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிற்கும் எனக் கணிக்கவில்லை!

large.IMG_1167.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வாத்தியார் said:

முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள் 🙏

எந்த அடாவடியும் இல்லாமல் மக்களோடு மக்களாக

தலமைப் பதவியில் அமர்ந்து நல்லாட்சி செய்பவரே

எங்களுக்குத் தேவை . 😇

ஆதலால் தொடர்ந்தும் முதல்வர் பதவியை உங்கள் கையில் ஒப்படைக்க நாம் தயார்.😂

நந்தனுக்குக் கோபம் வந்து பார்த்ததில்லை போல. போன கிழமை நடந்ததப் பார்த்தீங்கள் என்றால் தெரியும்.

அவரின் தெரிவுகள் எல்லாம் இம்முறை அந்தமாதிரி. என்ன மாயமோ மந்திரமோ 41 போட்டிகளைச் சரியாக தெரிவு செய்திருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழுநிலைப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் கேள்விகள் 1-73 வரையான பதில்களின் அடிப்படையில் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_1168.jpeg

தொடர்ந்து முதல் நிலையில் இருக்கும் @நந்தன் க்கு வாழ்துக்கள் spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள் 🙏

16 minutes ago, கிருபன் said:

குழுநிலைப் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளமையால் கேள்விகள் 71) - 73) வரைக்கும் புள்ளிகள் வழங்கலாம் 😃

71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

ஒருவரும் முதலாவது இடத்தைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணி play-off போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்படும் எனக் கணிக்கவில்லை!

large.IMG_1165.jpeg

72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)

மும்பை இந்தியன்ஸ் நான்காவது இடத்தில் வரும் என நான்கு பேர் கணித்துள்ளனர். மற்றைய அணிகளின் நிலைகளை ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை!

large.IMG_1166.jpeg

73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

ஒருவரும் இறுதி இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிற்கும் எனக் கணிக்கவில்லை!

large.IMG_1167.jpeg

என்ன வியப்பு!நானும்நந்தனும் இறுதியாக வரும் அணியைும் ஒரேமாதிரி DC கணித்திருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, புலவர் said:

முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள் 🙏

என்ன வியப்பு!நானும்நந்தனும் இறுதியாக வரும் அணியைும் ஒரேமாதிரி DC கணித்திருக்கிறோம்.

அப்பிடியாங்க. அப்ப சரி.😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

வசி... என்ன பின்னால வந்து நிக்கிறியல். நல்ல வேளை, இன்றோடு, போட்டிகள் முடிஞ்சுது. இனி இடக்கு முடக்கு கேள்விகள்தான் பதில் சொல்ல வேணும்.

அதுதான் எனக்கும் விளங்கவில்லை, எனது பதிலுக்கு நேர்மாறாக எழுந்துங்கள் என கூறியிருந்தேன் பல தடவை எதிர் எதிர் அணியில் இருந்தும் கடைசியாக இப்படி பக்கத்தில் பக்கதில் வந்துள்ளோம்?

அடுத்த ஐ பி எல் இல் ஓரளவு புரிந்துணர்வு இருக்கும் என கருதுகிறேன், போட்டியில் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கலந்து கொண்டேன் எங்கு வந்தாலும் சந்தோசம், ஆனால் எதிர்பார்த்தது கடைசியாக வரக்கூடும் என ஆனால் இன்னமும் போட்டி முடியவில்லை, அதனால் எதுவும் நிகழலாம், பையன் வேறு கூறினார் போட்டியின் முடிவில் பாருங்கள் எங்குள்ளேன் என அது போல இப்போது இருக்கும் நிலை தடாலடியாக சரியுமோ தெரியவில்லை?

நமக்கு நடந்ததும் அதேதான். குருடன் யானை கீறினமாதிரி கீறி விட்டது. சென்னைதான் களத்தைக் கவிட்டுவிட்டுது. இல்லாவிட்டால், நாமெல்லாம் கீழையிருந்து இதே நிலைமில் இருந்திருப்போம். தோனியின் காலம் முடிந்தது என்ற ஒரு எண்ணத்தோட செய்த தெரிவுகள் நம்மளோடது.

RCB எதிர் MI இறுதிப்போட்டி எப்படி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

ஆதலால் தொடர்ந்தும் முதல்வர் பதவியை உங்கள் கையில் ஒப்படைக்க நாம் தயார்.

வேறவழி இல்லையே வாத்தியார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.