Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

ஆனாலும் இந்த மழை இரண்டு புள்ளிகளை அநியாயமாக தூக்கிவிட்டது! எப்பவாவது அருமை பெருமையாய் வாற புள்ளிகளைக்கூட இந்த வருணபகவான் விடமாட்டார்போல இருக்கு! அதுசரி இவர் எப்ப சனீஸ்வரனோட சேர்ந்தவர்!

இதைத் தான் சொல்லுறது

சாமி விடை கொடுத்தாலும்

பூசாரி விடை கொடுக்க மாட்டார் என்று.

எதிரணியின் நேர்த்தி ரொம்ப ஸ்ரோங்காம்.

11 hours ago, சுவைப்பிரியன் said:

நந்தனுக்கு வாழ்த்து சொல்பவ்கள் எனக்கும் வாழ்த்து சொல்ல வேணும்.அது தானே மரபு.😂

ஓரிரு நாட்கள் முகத்தைக் காட்டினால் சரிவராது தம்பீ.

@goshan_che மாதிரி தொடர்ந்தும் நின்று இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டும்.

6 hours ago, suvy said:

Alice Capsey ·

Kavya Maran appear after long time Hello everyone....... !

493313027_122145207548424959_70276507313

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ...... ! 😂

நேற்றைய போட்டி முடிவில் தனது அணி வீரர்களை நொங்கு நோண்டுவது போல நோண்டி எடுத்து விட்டது இந்த அம்மா.குறிப்பா ராகுலுக்கு.

  • Replies 3.3k
  • Views 95k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை முடிஞ்சுது! இவ்வளவு கேட்சுகளை விட்டும் அவுட் ஆவம் என்று அடம் பிடிக்கிறாங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

மும்பை முடிஞ்சுது! இவ்வளவு கேட்சுகளை விட்டும் அவுட் ஆவம் என்று அடம் பிடிக்கிறாங்கள்!

இரண்டு பேரும் தோக்கிறதுக்காகவே விளையாடுற மாதிரி விளையாடுறாங்கள். யார் அதில் வெற்றி காண்பார்கள்.

55 minutes ago, ஈழப்பிரியன் said:

நேற்றைய போட்டி முடிவில் தனது அணி வீரர்களை நொங்கு நோண்டுவது போல நோண்டி எடுத்து விட்டது இந்த அம்மா.குறிப்பா ராகுலுக்கு.

என்ன நடந்தது. ராகலுக்கும் இவவுக்கும் என்ன சம்பந்தம். ராகுல் மற்ற அணியெல்லோ.

அதோட அவவின்ர அணி நல்லாத்தானே விளையாடிச்சு.

12 hours ago, சுவைப்பிரியன் said:

நந்தனுக்கு வாழ்த்து சொல்பவ்கள் எனக்கும் வாழ்த்து சொல்ல வேணும்.அது தானே மரபு.😂

இன்று உங்களுக்குப் புள்ளி போல. மேல வந்திடுவீங்கள். அதனாலதான் நாம ஒன்றும் சொல்லேல. சுமைதாங்கியா இருக்கிறதும் அவ்வளவு சுலபமில்லை. நிற்கணும். தாங்கி நிற்கணும். 😁

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத்தின் எல்லா பந்தாளர்களுக்கும் தலா ஒரு விக்கட். ஆர் போட்டாலும் விக்கட் விழுது.

ரசித்கானுக்கு இந்தத் தொடரில் அதிகமா விக்கட்டுகள் விளேல. அதுக்காக அவரின் திறமையை குறைத்து மதிப்பிடலாமா. இன்று இருமுறை DRS க்குப் போனார். இரு முறையும் அதில் மாற்றம் ஒன்றும் நடக்கவில்லை. கவாஸ்கர் சொல்லுறார் ரசீத் தனக்கு விக்கட் வேணும் என்டு DRS கேக்கிறார் என்று. என்ன கதை இது. வீரர்கள் அப்பிடியா இருப்பினம். அதுவும் முன்னால் வீரருக்கு இது புரியாதா. இப்பிடி ஏதேன் அடிச்சு விடுறது. அவரும் வர வர இப்பிடி ஏதாவது சொல்லிவிட்டுப் போயிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூவரும் மாத்தி மாத்தி தொப்பியை போட்டுக்கொண்டிருக்கினம். இன்னும் கொஞ்ச நேரத்தில சுதர்சன் மாட்டுவார் என்று நினைக்கிறேன்.

Screenshot-20250506-084923-ESPNCricinfo.

அதிக ஓட்டங்கள் பெற்ற முதல் ஆறுபேரில் நால்வர் இன்று விளையாடுகிறார்கள். பட்லர் இன்று மேலே வந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை.

தரமான போட்டி.

  • கருத்துக்கள உறவுகள்

INNINGS BREAK

56th Match (N), Wankhede, May 06, 2025, Indian Premier League

GT chose to field.

Mumbai Indians FlagMumbai Indians

(20 ov) 155/8

Current RR: 7.75 • Last 5 ov (RR): 39/2 (7.80)

Gujarat Titans FlagGujarat Titans

Win Probability:MI 28.25% • GT 71.75%

  • கருத்துக்கள உறவுகள்

155 ஒரு நல்ல எண்ணிக்கை. பந்தாளர்களுக்கு சந்தர்ப்பங்கள் இருக்கு. போல்டும் பும்ராவும் என்ன செய்யப் போகினம் என்று பாரக்க ஆவல். உதவிக்கு சாரும் சர்மாவும்.

அங்கால முதல் மூன்று துடுப்பர்களும் தயாராக.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, செம்பாட்டான் said:

இந்த மூவரும் மாத்தி மாத்தி தொப்பியை போட்டுக்கொண்டிருக்கினம். இன்னும் கொஞ்ச நேரத்தில சுதர்சன் மாட்டுவார் என்று நினைக்கிறேன்.

Screenshot-20250506-084923-ESPNCricinfo.

அதிக ஓட்டங்கள் பெற்ற முதல் ஆறுபேரில் நால்வர் இன்று விளையாடுகிறார்கள். பட்லர் இன்று மேலே வந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை.

தரமான போட்டி.

ஹாக்.... சுதர்சா ஒரு ஓட்டம் எடுத்திருந்தா தொப்பி உனதே. தவற விட்டுட்டியே ராசா.

போல்ட் போட்டு உறுட்டி விட்டானே.

3 hours ago, கந்தப்பு said:

இன்றைய போட்டியிலும் சிலவேளை மழை வந்து குழப்ப வாய்ப்பு இருக்கிறது.

ரபாடா இன்று குஜராத் அணிக்கு விளையாட வாய்ப்பு இருக்கிறது.

மழை இல்லை. ஒரே தூசும் காத்துமாம். போட்டி நின்றாலும் நிற்கும் போல.

  • கருத்துக்கள உறவுகள்

மும்பையும் குஜராத்தும் ஒதுங்கி நிக்க வந்திருந்த ரசிகர்கள் பதுங்கிப் பார்க்க மழை விளையாடுகிறது மைதானத்தில் ....... ! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழையால் போட்டி தடைப்பட்டுள்ளது. போட்டி மீண்டும் ஆரம்பிக்காவிட்டால் குஜராத் டைட்டன்ஸ் DLS முறையால் வெல்லும். ஏற்கனவே 8 ஓட்டங்கள் DLS bar ஐ விட அதிகமாக எடுத்துவிட்டார்கள்.

MATCH DELAYED BY RAIN

56th Match (N), Wankhede, May 06, 2025, Indian Premier League

MI FlagMI

155/8

GT FlagGT

(14/20 ov, T:156) 107/2

GT need 49 runs in 36 balls.

CRR: 7.64

 • RRR: 8.16

 • Last 5 ov (RR): 44/1 (8.80)

forecasterWin Probability:GT 76.28% • MI 23.72%

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி ஒரு போட்டியைத்தான் எதிர்பார்த்தேன். விறுவிறுப்பாப் போகுது

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மழை வந்து இந்த thrillerஅ குழப்புது. எப்பிடி மாறிச்சு எல்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்பிடி. முதல் 5 பேரும் 10 ஓட்டங்களுக்கிடையில். மூன்று GT துடுப்பர்களுடன்

1222.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஓ... ஒரு பந்து பரிமாற்ற போட்டி

ஒரு பரிமாற்றத்தில் 15 ஓட்டங்கள் அடிக்க வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நொபோல் போட்டு தோல்வி மும்பைக்கு!

அட விக்கெட் போட்டுது!

ஒரு பந்தில் ஒரு ஓட்டம் குஜராத்துக்கு வெல்ல!

ஒரு மாதிரி குஜராத் வெற்றி!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத் - எங்களுக்கு ஏன்டா ஆறு பந்து. இந்தா வாங்கிக்கோ என்டு அடிச்சாங்களே

5 minutes ago, கிருபன் said:

நொபோல் போட்டு தோல்வி மும்பைக்கு!

அட விக்கெட் போட்டுது!

கடைசி ஓட்டமிழப்பைத் தவறவிட்டாங்களே

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

நொபோல் போட்டு தோல்வி மும்பைக்கு!

அட விக்கெட் போட்டுது!

ஒரு பந்தில் ஒரு ஓட்டம் குஜராத்துக்கு வெல்ல!

ஒரு மாதிரி குஜராத் வெற்றி!

16 minutes ago, செம்பாட்டான் said:

குஜராத் - எங்களுக்கு ஏன்டா ஆறு பந்து. இந்தா வாங்கிக்கோ என்டு அடிச்சாங்களே

கடைசி ஓட்டமிழப்பைத் தவறவிட்டாங்களே

ஆகா நமக்கு இரண்டு புள்ளி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 56வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறியபோதும் வில் ஜாக்ஸின் அரைச் சதத்துடனும், சூர்யகுமார் யாதவின் 35 ஓட்டங்களுடனும் 10.4 ஓவர்களில் 97 ஓட்டங்களுடன் நல்ல நிலையில் இருந்தது. எனினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களில் சுப்மன் கில்லின் நிதானமான 43 ஓட்டங்களுடனுன், ஜொஸ் பட்லரின் 30 ஓட்டங்களுடனும், புயல்வேகத்தில் அடித்தாடிய ஷேர்ஃபேன் ரதஃபோட்டின் 28 ஓட்டங்களுடனும் வெற்றி இலக்கை நோக்கி விரைவில் முன்னேற மழைவந்து குழப்பியது. திரும்பவும் ஆட்டம் ஆரம்பித்தபோது விக்கெட்டுகள் சரிய போட்டி விறுவிறுப்பானது. இன்னுமோர் மழைத் தடைக்குப் பின்னர் இறுதி 19வது ஓவரில் 15 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் தீபக் சாகர் இறுக்கமாகப் பந்துபோடததால் கடைசிப் பந்தில் ரண் அவுட் சந்தர்ப்பத்தை நழுவவிட்டதால் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை எடுத்து DLS முறையில் வெற்றி இலக்கை எட்டியது.

முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி DLS முறையில் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0807.jpeg

மீளவும் @Ahasthiyan எல்லோரையும் தாங்கிப் பிடிக்க கீழே நகர்ந்துள்ளார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை புதன் 07 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

KKR எதிர் CSK

10 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் 13 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • பிரபா

  • வாதவூரான்

  • ஏராளன்

  • தமிழ் சிறி

  • கிருபன்

  • குமாரசாமி

  • எப்போதும் தமிழன்

  • கோஷான் சே

சென்னை சூப்பர் கிங்ஸ்

  • வசீ

  • ஈழப்பிரியன்

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • ரசோதரன்

  • நுணாவிலான்

  • நந்தன்

  • புலவர்

  • அகஸ்தியன்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? gorilla_1f98d.webp

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா நமக்கு இரண்டு புள்ளி.

என்னது உங்களுக்கு இரண்டு புள்ளியா. அப்பிடிச் சொன்னாப்போல கிருபன் புள்ளி குடுப்பார் என்று நினைச்சீங்களோ.

வாங்க நாளைக்கு சென்னையை வெல்ல வைப்பம். அப்பவாவது புள்ளி கிடைக்குதா பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, செம்பாட்டான் said:

என்னது உங்களுக்கு இரண்டு புள்ளியா. அப்பிடிச் சொன்னாப்போல கிருபன் புள்ளி குடுப்பார் என்று நினைச்சீங்களோ.

வாங்க நாளைக்கு சென்னையை வெல்ல வைப்பம். அப்பவாவது புள்ளி கிடைக்குதா பார்ப்போம்.

உங்கட புள்ளியை விட மற்றவனுக்கு புள்ளி போகுதான்னு பார்க்கிறதே இவங்களுக்கு வேலையா போச்சு.

57 minutes ago, கிருபன் said:

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

உங்கட புள்ளியை விட மற்றவனுக்கு புள்ளி போகுதான்னு பார்க்கிறதே இவங்களுக்கு வேலையா போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 56வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறியபோதும் வில் ஜாக்ஸின் அரைச் சதத்துடனும், சூர்யகுமார் யாதவின் 35 ஓட்டங்களுடனும் 10.4 ஓவர்களில் 97 ஓட்டங்களுடன் நல்ல நிலையில் இருந்தது. எனினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களில் சுப்மன் கில்லின் நிதானமான 43 ஓட்டங்களுடனுன், ஜொஸ் பட்லரின் 30 ஓட்டங்களுடனும், புயல்வேகத்தில் அடித்தாடிய ஷேர்ஃபேன் ரதஃபோட்டின் 28 ஓட்டங்களுடனும் வெற்றி இலக்கை நோக்கி விரைவில் முன்னேற மழைவந்து குழப்பியது. திரும்பவும் ஆட்டம் ஆரம்பித்தபோது விக்கெட்டுகள் சரிய போட்டி விறுவிறுப்பானது. இன்னுமோர் மழைத் தடைக்குப் பின்னர் இறுதி 19வது ஓவரில் 15 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் தீபக் சாகர் இறுக்கமாகப் பந்துபோடததால் கடைசிப் பந்தில் ரண் அவுட் சந்தர்ப்பத்தை நழுவவிட்டதால் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை எடுத்து DLS முறையில் வெற்றி இலக்கை எட்டியது.

முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி DLS முறையில் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0807.jpeg

மீளவும் @Ahasthiyan எல்லோரையும் தாங்கிப் பிடிக்க கீழே நகர்ந்துள்ளார்!

என்ன @vasee .... சத்தத்தக் காணோம். மெல்ல மெல்ல அடிச்சுத் தூக்கிறியல். ஆனா என்ன ஒரு பஜனைக் கோஷ்டியோடதான் எப்பவும் வாறியல். பார்ப்போம் நாம எப்ப பஜனை போடுறம் என்டு.

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி DLS முறையில் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இப்படியும் நமக்கு புள்ளி இழப்பு வருமா...எல்லாம் விதி

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, alvayan said:

இப்படியும் நமக்கு புள்ளி இழப்பு வருமா...எல்லாம் விதி

iPl என்றால் என்ன கொக்கா என்று நினைக்கக் கூடாது

அவர்கள் நினைப்பது மட்டுமே இங்கே செல்லுபடி ஆகும்:

அதற்கேற்றவாறே விதிகளை அமைத்துள்ளார்கள்

எல்லாம் ரசிகர்களின் தலைவிதி

முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள்

அவரைப் பின்தொடரும் அடியார்க்கும் வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.