Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த பகிடிவதைக்குள் அகப்பட்டு பல பழிவாங்கல்கள் ஓரங்கட்டல்கள் (இரண்டாம் ஆண்டு மாணவர்கள், மற்றும் ஒரு மூன்றாம் ஆண்டு மாணவன்) எல்லாவற்றையும் எதிர்கொண்டேன் (இது வரப்பிரகாஸுக்கு பிந்திய காலம்). எனக்கு பகிடி வதை செய்தவர்கள் எந்த வகையிலும் எனக்கு பிற்காலத்தில் உதவவில்லை (அதுக்குப்பிறகு என்னோடு கதைப்பது கூட இல்லை). பகிடிவதை செய்யும் போது தாங்கள் எங்களுடன்நெருங்கிப் பழகுவதற்காகவே இதைச்செய்வதாக சொன்னார்கள். ஒரேஒரு ஆறுதல் எங்கள் சக மாணவர்களும் மிகுதி மூன்றாம் வருட மாணவர்களும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை சிங்கள மாணவர்களும் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை (இதில் தமிழ் சிங்கள வேறுபாடு என்று இல்லை). மட்டக்களப்பு மாணவர்கள் தான் கூட அனுபவித்தது தமிழ் மாணவர்களைப்பொறுத்தவரையில். வரப்பிரகாசுக்கு பின்னர் சிறிது குறைந்தகாலத்தில் அகப்பட்டதால் பல்கலைக்கழகத்திலும் சிறிது இறுக்கம் கூட (இது பொறியியல் பீடத்தில் மற்றப்பீடங்களில் சிறிது வித்தியாசமாக இருக்க்டலாம்)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

பகிடிவதை என்பது இன்னொரு மனிதன் மீது, தனக்கிருக்கும் வக்கிரத்தை, சீனியர் என்ற தகுதியினை மட்டுமே வைத்துக்கொண்டு கட்டவிழ்த்துவிடுவது என்பது எனது கணிப்பு. சாதாரண சூழ்நிலையில் ஒரு மனிதன் மீது செய்ய முடியாத சில வக்கிரங்களை சீனியர் எனும் தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட பதவியினை வைத்து அவிழ்த்துவிட்டு சுய இன்பம் காணுவது. இது ஒரு மனோவியாதி என்பதைத்தவிர வேறு வழியில் விளக்கமுடியாது.

1995 இல் இருந்து 2000 வரை மொறட்டுவை பல்கலைக் கழகத்தில் நான் அனுபவித்த, நேரால் கண்ட வக்கிரங்களில் இருந்து நான் உணர்ந்துகொண்டது இதனைத்தான்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து வரும் தமிழ் மாணவர்களும், தெற்கின் கிராமப் புரங்களில் இருந்து வரும் சிங்கள மாணவர்களும் பகிடிவதைக்கு அதிகம் முகம் கொடுப்பதோடு, இவர்களே அடுத்தவருடம் நடக்கும் பகிடிவதைகளுக்குத் தலைமையும் தாங்குவார்கள். நான் கொழும்பு மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தமையினால் என்மீது விசேட கவனம் செலுத்தினார்கள் எனது சீனியர்கள். "கொழும்பெண்டால் பெரிய கொழுப்போ உனக்கு, உனக்கிருக்கு, மாட்டுவாய்தானே, அப்ப பார்த்துக்கொள்ளுவோம்" என்று ன் நான் அவர்களின் பிடியில் இருந்து நழுவித் தப்பித்துச் சென்ற தருணங்களில் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இரண்டுமாத காலம் அவர்களின் வக்கிரங்களைத் தாங்கிக்கொள்ளவில்லை என்பதற்காகவே வெகு சிலரைத் தவிர‌ பல தமிழ் மாணவர்கள், எனது ஆண்டில் படித்தவர்கள் உட்பட, இன்றுவரை என்னுடன் பேசுவதில்லை. பல்கலை முடிந்தவுடன் நேராக வீட்டிற்குச் சென்றுவிடும் வசதி எனக்கிருந்தது. ஆனால் வட கிழக்கில் இருந்து வந்திருந்த பல மாணவர்களுக்கு அந்த வசிதியில்லை. ஆகவே சீனியர்கள் கட்டளையிட்டதற்கு அமைய மாலை 5 மணிக்கெல்லாம் அவர்களின் சித்திரவதைக் கூடங்களில் தவறாது ஆஜராகி, வக்கிரங்களைத் தாங்கி, உடலிலும் மனதிலும் வலிகளைச் சுமந்து தமது அறைகளுக்கு வரும் பல தமிழ் மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த வக்கிரங்களை வாரி வழங்குவதில் மாணவர்களிடையே வர்க்க வேறுபாடு இருப்பதில்லை. எஞ்சினியரிங்கில் இருந்து ஆரம்பித்து, குவான்ட்டிட்டி சேவயரிங், என் டி டி என்று எல்லாப் பாடநெறிகளிலும் இது நடந்தது. சில வேளைகளில் எஞ்சினியரிங் மாணவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு, அறைதிரும்பிக்கொண்டிருக்கும் மாணவர்களை குவான்ட்டிட்டி சேவயரிங் மாணவர்களோ அல்லது என்.டி.டி மாணவர்களோ தமது பங்கிற்கு இழுத்துச் செல்வதும் நடந்திருக்கிறது. எஞ்சினியரிங்கிற்கு வரும் மாணவர்களை குவான்ட்டிட்டி சேவயரிங் அல்லது என்.டி.டி மாணவர்களே அதிகம் கொடுமைப்படுத்துவது நடந்திருக்கிறது. இப்படி இவர்கள் நடந்துகொள்வதற்கு தமக்குக் கிடைக்காத பொறியியல்ப் பீடம் இவனுக்குக் கிடைத்துவிட்டதே என்கிற பொறாமையும் காரணமாக இருக்கலாம்.

இன்னும் சில சீனியர்களுக்கு பகிடிவதைக் காலமே பெண்களுடன் பேசுவதற்குக் கிடைத்திருக்கும் பொற்கால‌ம். ஆகவே சொற்களால் பெண்களைச் சித்திரவதை செய்து சுய இன்பம் காணுவார்கள். சாதாரண சூழ்நிலையில் தம்மைப் பெண்கள் ஏறெடுத்தும் பார்க்கப்போவதில்லை என்கிற நிலையில் பகிடிவதைக் காலத்தை தமது வக்கிரங்களைக் கொட்டும் காலமாகப் பாவிப்பது இவர்களின் வழமை.

வரப்பிரகாஷின் படுகொலையின்போது மொறட்டுவைப் பல்கலைக் கழகத்திலிருந்து பகிடிவதைக்குப் பெயெர்பெற்ற வக்கிரப் புத்தி கொண்டோர் ஒரு பேரூந்தினை வாடகைக்கு அமர்த்தி பேராதனைக்குச் சென்றுவந்தார்கள். அப்படிச் சென்றுவந்தவர்களில் எனது ஆண்டில் படித்துக்கொண்டிருந்த பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் தற்போது இங்கிலாந்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிபவருமான ஒருவரும் இருந்தார். பகிடிவதையின் உச்சமான பாலியல் வதையினைப் புரிவதில் இவர் பிரசித்தமானவர். பாலியல் வன்புணர்வைத்தவிர மீதி பாலியல் வக்கிரங்கள் இவரது சித்திரவதைக் கூடத்தில் நடைபெறும். வலியில் மாணவர்கள் அலறும்போது சிரித்துக்கொண்டு அதனை அனுபவிப்பவர். இவரது பிடிக்குள் அகப்பட்ட சில மாணவர்களை பகிடிவதையினை ஆதரிக்கும் இன்னும் சில மாணவர்கள் மீட்டெடுத்து வந்திருக்கிறார்கள். கொழும்பிலிருந்து தெரிவான சில மாணவர்கள் மீது இவர் தெரிரியாமல் கையை வைக்க, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, மயூராபதி அம்மண் கோயில் என்று பலவிடங்களில் அடிவாங்கியவர்.

1990 ஆம் ஆண்டில் என்று நினைக்கிறேன். முன்னர் யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலும் உயர்தரக் கணிதத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய ஆசிரியரான பிரேம்நாத்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகிச் சென்றார். பிரேம்நாத்திடம் முன்னர் கல்விகற்ற ஒரு பழைய மாணவர் அப்போது பேராதனையில் பொறியியல்ப் படித்துக்கொண்டிருந்தார். பிரேம்நாத்திற்கும் தனக்கும் இருந்த பழைய பகமை ஒன்றிற்காக அந்த புதிய மாணவரைக் கடுமையாகச் சித்திரவதை செய்து தனது வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டார். பகிடிவதையின்போது இரு முழங்கால்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் பார்த்தீபன் என்கிற அந்த புதிய மாணவர் அனுமதிக்கப்பட்டார். தன்னால் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்ட பார்த்தீபன் இறந்துபோகலாம் என்கிற செய்தியை தனது சகமாணவர்கள் மூலம் சித்திரவதை செய்த மாணவர் அறிந்துகொண்டபோதிலும், அவரைச் சென்று பார்க்கவோ, தனது ஈனச்செயலுக்கு மன்னிப்புக் கோரவோ அவருக்கு மனம் வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல பார்த்தீபன் உடல்நிலை மோசமாகி வருவதாகவும், இதற்காக சித்திரவதை செய்தவர் சிறை செல்ல நேரலாம் என்கிற செய்திகள் பரவத் தொடங்கியபோது வேறு வழியின்றி வைத்தியசாலைக்குச் சென்றார். ஆனால் மன்னிப்புக் கோர அவரது மனம் முன்வரவில்லை. சற்றுநேரம் அமைதியாக நின்றுவிட்டு, கூடவிருந்த சொந்தங்களின் மனக்குமுறலை கேட்டுவிட்டு வந்துவிட்டார். பார்த்தீபன் நீண்டகால சிகிச்சையின் பின்னர் பிழைத்துக்கொண்டார். அன்று மனோவியாதியால் சக மாணவனை சித்திரவதை புரிந்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிய அந்த மாணவர் இன்று குடும்பத்துடன் சென்று புத்த சமயத்தைத் தழுவி, கண்டியில் வாழ்ந்து வருகிறார். இவரது தந்தையார் எனது தகப்பனாரின் சொந்தச் சகோதரன் என்பது வேறு விடயம்.

இவர்கள் வக்கிரம் கொண்டவர்கள். மனோவியாதியினால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

இந்த விடயத்தில் நானும் உங்களைப் போல அதிர்ஷ்டக் காரன் தான். யாழ்ப்பாண இடம்பெயர்வு, புலிகளின் பாஸ், பின்னர் ஆமியின் பாஸ் போன்றவை காரணமாக தாமதமாக நான் போய்ச் சேர்ந்த போது பகிடிவதை முடிய 2 வாரங்கள் இருந்தன. மிருக வைத்திய பீடத்திலும் ஒரு "சைக்கோ" தமிழ் சீனியர் இருந்தார். மதிய சாப்பாட்டு வரிசையில் முதல் நாள் நின்று கொண்டிருந்த போது, அவரது எச்சில் தெறிக்கும் தூரத்தில் முகத்திற்கு கிட்டவாக வந்து "நீ இண்டைக்கு 6 மணிக்கு இன்ன இடத்துக்கு வாறாய், தப்பியோட எண்ணம் இருந்தால் நாளைக்கு வராமலே போயிரு, தப்பியோடி நாளைக்கு நீ இங்க வந்தால், நீ செத்தாய்!" என்றார்.

அருகில் நின்று கொண்டிருந்த இன்னொரு தமிழ் மாணவரை இவர் பல முறை இப்படி அழைத்துப் போய் வன்முறை செய்ததில், அவரது சிறு நீரில் இரத்தம் (hematuria) போயிருக்கிறது என அறிந்தேன். இந்த சக கனிஷ்ட மாணவர் தற்போது என்னையும் சைக்கோவிடம் மாலை அழைத்துப் போவதில் அக்கறையாக இருந்தார். "ஏன் தேடிப் போய் ராக்கிங் வாங்கிறாய்?" என்று நான் அப்பாவியாகக் கேட்டேன் இவரிடம். "சீனியர்களிடம் நோட்ஸ் வாங்கிப் படிக்காமல் பாஸ் ஆகி வெளியே செல்ல முடியாது" என்ற புளிச்சுப் போன பல்லவியைப் பதிலாகச் சொன்னார்.

அன்று மாலையும், அடுத்த 9 மாலைகளும் நான் இந்த சைக்கோவிடம் போகாமல், ஒவ்வொரு வழிகளால் தப்பி, என் தங்குமிடம், நண்பனொருவரின் அறை, கண்டி ஏரிப் பகுதி என்று போய் வந்து கொண்டிருந்தேன். யாருடைய நோட்சும் எனக்குத் தேவைப் படவில்லை. ராக்கிங் காலம் முடிந்த பின்னர் "சைக்கோ" சீனியரை நான் ஏனையோரை விட ஒரு மட்டம் கீழே வைத்துத் தான் பழகி வந்தேன்.

தற்போது இந்த "சைக்கோ" சீனியர் கட்டுநாயக்காவில் சுங்க உதவி ஆணையாளராக இருக்கிறார். கடந்த முறை ஒரு நண்பன் போன போது கண்ணாடி அறையினுள், அலுவலக நாற்காலியில் இருந்த நிலையிலேயே உறங்கிக் கொண்டிருந்தாராம்😂!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

நானும் இந்த பகிடிவதைக்குள் அகப்பட்டு பல பழிவாங்கல்கள் ஓரங்கட்டல்கள் (இரண்டாம் ஆண்டு மாணவர்கள், மற்றும் ஒரு மூன்றாம் ஆண்டு மாணவன்) எல்லாவற்றையும் எதிர்கொண்டேன் (இது வரப்பிரகாஸுக்கு பிந்திய காலம்). எனக்கு பகிடி வதை செய்தவர்கள் எந்த வகையிலும் எனக்கு பிற்காலத்தில் உதவவில்லை (அதுக்குப்பிறகு என்னோடு கதைப்பது கூட இல்லை). பகிடிவதை செய்யும் போது தாங்கள் எங்களுடன்நெருங்கிப் பழகுவதற்காகவே இதைச்செய்வதாக சொன்னார்கள். ஒரேஒரு ஆறுதல் எங்கள் சக மாணவர்களும் மிகுதி மூன்றாம் வருட மாணவர்களும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தார்கள்.

இது எனக்கும் நடந்தது. நான் பகிடிவதையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக தமிழ் யூனியனிலிருந்தும், தமிழ் மாணவர்களின் பட்ஜ் ட்ரிப் உள்ளிட்ட இன்ன பிற நிகழ்வுகளிலிருந்தும் ஒதுக்கிவிட்டார்கள். கூடவே "அன்டி" ரஞ்சித் எனும் நாமமும் எனக்குச் சூட்டப்பட்டது. கூட்டமாகக் கதைத்துக்கொண்டிருக்கும் என்னுடன் கூடப்படித்தவர்களே "அன்டி வாறான்" என்று பேச்சை மாற்றிய பல தருணங்களை நான் சந்தித்திருக்கிறேன். ஒரு மூன்று அல்லது நான்கு சக மாணவர்களைத் தவிர வேறு எவருமே என்னுடன் பேசியதில்லை. பகிடிவதையினை ஏற்றுக்கொள்ளாதது ஒரு குற்றமா? எனக்குப் புரியவில்லை.

நீங்கள் கூறியதுபோலவே, என்னை பிந்தொடர்ந்து வந்து, பஸ்ஸில் ஏறி கட்டுப்பெத்தை வரை வந்து மிரட்டியவர் என்.டி.டி எனும் கற்கை நெறியைச் சார்ந்த, மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவானந்தன் என்பவர். அவர் படிக்கும் கற்கை நெறிக்கும் எனது பொறியியல் கற்கை நெறிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அன்று தன்னுடன் வரவில்லையென்றால் "உனக்குக் கோஸ் வேர்க் தரமாட்டேன்" என்று கூட கூறிப்பார்த்தார். நாம் மசியவில்லை. சில வாரங்களுக்குப் பின்னர் அவரை பல்கலை வாயிலில் சந்தித்தேன். "நீ படிப்பது என்.டி.டி, நீ எப்படி எனக்கு கோஸ் வேர்க்கில் உதவுவாய்?" என்று அவரைப் பார்த்துக் கேட்டேன். பதில் இல்லை. இவரைப்போன்றே ரஜீவ் என்று என்னுடன் மட்டக்களப்பு மிக்கேல் கல்லூரியில் கல்விகற்று மொறட்டுவையில் குவான்ட்டிட்டி சேவயரிங் படித்துவந்த எனது முன்னால் நண்பரும் என்னை துன்புறுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். "நீ என்னுடன் படித்தவன் தானே? என்னைத் தெரியவில்லையா உனக்கு ?" என்று கேட்டேன். தெரியாதவர் போலவே நடந்து கொண்டார். ராக்கிங் காலம் முடிந்தவுடன் ஒருநாள் கன்டீனில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது வந்து முன்னால் அமர்ந்து, "மச்சான்" என்றார். "என்னட்ட அடிவாங்க முதல் போயிடு" என்று சொல்லவும், கண்கள் கலங்கி அருகில் இருந்த எனது நண்பனிடம், "பாரடா இவனை, ராக்கிங்கில செய்ததையெல்லாம் வைச்சுச் சாதிக்கிறான்" என்று முறையிட்டார். "அவனைப் போகச் சொல்லு" என்றுவிட்டு வேறுபக்கம் பார்த்துக்கொண்டேன். இறுதிவரை அவருடன் பேச விரும்பவில்லை.

என்னுடன் பாடசாலைக் காலத்தில் படித்தவர்கள், என்னை நன்றாக அறிந்திருந்த உறவினர்கள் என்று பலர் என்னை பகிடிவதைக்கு உட்படுத்த விரும்பினார்கள். ஏனென்று எனக்குத் தெரியவில்லை. இதற்கெல்லாம் என்னிடம் இருக்கும் ஒரே பதில் மனநோய்தான். அப்படியில்லையென்றால் இவர்களால் இதனைச் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

இந்த வக்கிரங்களை வாரி வழங்குவதில் மாணவர்களிடையே வர்க்க வேறுபாடு இருப்பதில்லை

அத்துடன் இனம்,மொழி,சாதி,பிராந்திய ,மற்றும் ஏற்ற தாழ்வுகள் இருப்பதில்லை ...ஆனால் "பகிடிவதை" என்ற கொள்கையை பல்கலைகழகங்கள் சிரிலங்காவில் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை செய்து வருகின்றனர்....ஏன்?

ஆனால் சில சமயங்களில் சில மனிதர்கள் இதை ஒர் இனம் சார்ந்து அல்லது பிராந்தியம் சார்ந்து முத்திரையை குத்தி செல்கின்றனர் ...

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2025 at 10:08, குமாரசாமி said:

இப்படியான பகிடி வதைகளை செய்து ஊக்குவித்தவர்கள்/ தொடர வழி வகுத்தவர்கள் அன்றைய பழைய மாணவர்கள் தான்.அன்றைய பழைய மாணவர்கள் அன்றே நினைத்திருந்தால்/மாற்று நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இன்று இந்த நிலைமைகள் வந்திருக்காது.

பழைய பகிடிவதை மாணவர்கள் தான் புதிய மாணவர்களை பகிடிவதைக்குள் உட்படுத்துவது....இதை தடுப்பது பெரிய விடயம் அல்ல தடுக்க முடியும் ஆனால் பல்கலைகழக நிர்வாகம் செய்ய முன்வராது...இதற்கு தலமைதாங்குபவர்கள் சிலசமயம் மாணவர் தலைவர்களாகவும் வரும் வாய்ப்பும் உண்டு ,ஏன் நாட்டு தலைவர்களாகவும் வர வாய்ப்பு உண்டு ...

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மாணவர்களிடம் சித்திரவதை நடத்துகின்ற கொடூர மனோவியாதி கொண்ட காட்டுமிராண்டிகள் பற்றி விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள் 👍

5 hours ago, ரஞ்சித் said:

"அவனைப் போகச் சொல்லு" என்றுவிட்டு வேறுபக்கம் பார்த்துக்கொண்டேன். இறுதிவரை அவருடன் பேச விரும்பவில்லை.

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

பகிடி வதையை இலங்கையின் தென் பகுதியில் பல வருடங்களாக அவதானித்தமையால் இந்த வேறு பாட்டை இங்கே விளக்கியிருக்கிறேன்.

தென்னிலங்கையில் நடப்பதை அவதானிப்பதால் நீங்கள் கூறுவது சரி...அதுபோல அவுஸ்ரேலியாவில் நடப்பதை பற்றி நாங்கள் கூறுகின்றோம் அது எங்களுக்கு சரியாக இருக்கும்...

தமிழேன்டா என் வீர வசனம் பேசினால் பொங்கி எழும் நீங்கள்.. சிங்களவன்டா என சொல்லி கிழக்கு பலக்லைகழக்த்தில் பொங்கி எழுவதையும் அவதானியுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலை கழகத்து பகிடிவதை ஒரு தொற்று வியாதி.

பகிடிவதைக்கு உள்ளாகுபவர்களே பகிடிவதையை தொடர்கின்றார்கள்.

இந்த தொற்று வியாதிக்கு ஒரே ஒரு மருந்துதான் உள்ளது.

பகிடிவதை செய்யும் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதன் மூலமே பகிடிவதைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

பகிடிவதை செய்யும் மாணவர்களை பல்கலை கழகத்தை விட்டு நீக்கும் அதிகாரம் பல்கலை நிருவாகத்திற்கு வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரஞ்சித் said:

இது ஒரு மனோவியாதி என்பதைத்தவிர வேறு வழியில் விளக்கமுடியாது.

நூறு வீதம் உண்மை. "தாம் பெற்ற துயரம் மற்றவர்களும் பெறவேண்டும்." என விரும்புபவர்கள். பல வருங்கால  கனவுகளுடன், எதிர்பார்ப்புகளுடன், லட்சியங்களுடன் வரும்  புதுமுக  மாணவர்களை அன்புடன் வரவேற்று, அவர்களின் தயக்கத்தை போக்கி, விதிகளை அறிமுகப்படுத்துவதுதான் மூத்த மாணவர்களின்  கடமை, ஆரோக்கியமான பண்பு. இதுகளெல்லாம், பகிரங்கமாக செய்ய முடியாதவற்றை பல்கலையில் செய்து வீரம் காட்டும் கோழைகள். சமுதாயத்திற்கு வேண்டப்படாதவர்கள். இவர்கள் படித்து என்னத்தை சாதிக்கப்போகிறார்கள்? சமுதாயத்தை நாசம் செய்யவே படிக்கிறார்கள்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலை புதுமுக மாணவன் மீது தாக்குதல் - சிரேஷ்ட மாணவர்கள் இருவர் விளக்கமறியலில்.

06 Apr, 2025 | 04:05 PM

image

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், தலைக்கவசத்தாலும் தாக்கியுள்ளனர். 

தாக்குதல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளான நாத்தாண்டிய பகுதியை சேர்ந்த மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு சிரேஷ்ட மாணவர்களை கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து இரு மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்கள் தொடர்பிலும் தாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ,  தலைமறைவாகவுள்ள அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.பல்கலை புதுமுக மாணவன் மீது தாக்குதல் - சிரேஷ்ட மாணவர்கள் இருவர் விளக்கமறியலில் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.