Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.

1)கணவன் மனைவி ஒரு கிளாசில் தண்ணீர் குடிப்பதில்லை.இதனால் கிருமி பரவுகிறதாம்.இப்படி பல விடயத்தில் ஒருவர் பாவிப்பதை மற்றவர் பாவிப்பதில்லை.

எனக்கு ஒன்று கேட்க வேணும் போல உள்ளது.ஆனாலும் கேட்க முடியவில்லை என்று கோபி சொல்கிறார்.

2)இருவரும் இளமையான டாக்ரர்கள்.

படுத்தால் கட்டில் மெத்தை போர்வை எதுவுமே கசங்கக் கூடாது என்று மனைவியின் கட்டளை.

ஒருபக்கமாக சரிந்து கூட படுக்க முடியாது.

நீட்டி நிமிர்ந்து தென்னை பனை கற்றி மாதிரி படுக்க வேண்டும்.

இப்படியான ஆசையுள்ளவர்கள் தனியாவே படுத்திருக்கலாமே.

தம்பதிகள் என்றால் கட்டில் ஆடும் முறியும் போர்வையில் இருந்து ஆடைகள் வரை கசங்கும்.

இன்னமும் எப்படி தம்பதிகளாக வாழ்கிறார்கள்?

3)வயது போன தம்பதிகள்.கணவனின் முறைப்பாடு

வெளியே போய்வந்தால் கால்துடைக்க போட்டிருக்கும் மற்றில் கால் துடைக்க கூடாது.அது ஊத்தையாகிவிடும்.

இன்னொன்று ரொம்பரொம்ப சுவாரிசமானது.

மழைக்கு குடை பிடித்து கொண்டு போனால் குடை நனையாமல் பிடிக்க வேண்டும்.

என்ன கொடுமை சரவணா?

இப்படி பல சைக்கோ.

சுத்தம் என்ற பெயரில் கணவன் மனைவியை கொடுமைப் படுத்துவதும்

மனைவி கணவனை கொடுமைப் படுத்துவதும் கெளரவமாக நடக்கிறது.

இதற்குள் பிள்ளைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

முறைப்பாடுகளை செய்தாலும் சேர்ந்தே வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு வீட்டில் கவனித்தேன். கணவர் நெயில் கட்டரால் நகம் வெட்டி விட்டு மனைவியிடம் கொடுக்க, மனைவி அதை வாங்கி நீரில் கழுவி வைக்கிறார்.

கிருமிகள் இருக்குமாம்…!

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளுக்கு நன்றி சொல்வோம், இப்படியான ஒரு தாரத்தைத் தராமைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

3) வயது போன தம்பதிகள்.கணவனின் முறைப்பாடு

வெளியே போய்வந்தால் கால்துடைக்க போட்டிருக்கும் மற்றில் கால் துடைக்க கூடாது.அது ஊத்தையாகிவிடும்.

இன்னொன்று ரொம்பரொம்ப சுவாரிசமானது.

மழைக்கு குடை பிடித்து கொண்டு போனால் குடை நனையாமல் பிடிக்க வேண்டும்.

என்ன கொடுமை சரவணா?

இப்படி பல சைக்கோ

மூன்றாவது…. முற்றிய கேஸ் போல் உள்ளது. 😂

உடனடியாக மனநோய்க்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

நானும் ஒரு வீட்டில் கவனித்தேன். கணவர் நெயில் கட்டரால் நகம் வெட்டி விட்டு மனைவியிடம் கொடுக்க, மனைவி அதை வாங்கி நீரில் கழுவி வைக்கிறார்.

கிருமிகள் இருக்குமாம்…!

புங்கை இது பரவாயில்லை.

நிகழ்ச்சியைப் பார்த்தால் சிலர் இதை வைத்தே மனைவியை அடிமையாக வைத்திருக்கிறார்கள்.

விருந்தினர்களுக்கு தனி கோப்பை கிளாஸ் கப்.அவர்களுக்கு ஏதும் வருத்தம் இருந்தால் எமக்கு வராமல் இருக்க வேண்டும்.

இன்னொருதன் உறவினர்கள் வந்து இருந்த கதிரை கவர் எல்லாம் கழட்டி தோய்ப்பாராம்.

9 hours ago, நந்தி said:

கடவுளுக்கு நன்றி சொல்வோம், இப்படியான ஒரு தாரத்தைத் தராமைக்கு.

உண்மையிலேயே இப்படி நடக்கிறதா?

அல்லது நிகழ்ச்சிக்காக நடிக்கிறார்களா?

8 hours ago, தமிழ் சிறி said:

மூன்றாவது…. முற்றிய கேஸ் போல் உள்ளது. 😂

உடனடியாக மனநோய்க்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். 🤣

சிறி இதில் மூன்றாவது மட்டுமல்ல சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே சிகிச்சை கொடுக்க வேண்டும்.

எதிர் தரப்பில் இருக்கும் ஆண் பெண் இருபாலரையும் பார்க்க ரொம்ப பாவமாக உள்ளது.

ஒரு பெண் ஐயோ கணவன் வரும் நேரமாச்சே என்ன குறைகுற்றம் கண்டு பிடிக்கப் போகிறாரோ என்று பயந்தபடியே இருப்பதாக சொல்கிறார்.

மனைவி எனக்கு பேச்சு.ஏதாவது நல்ல நிகழ்ச்சியை பார்ப்பம் என்று இல்லை.உதவாக்கரை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருங்கோ என்று நடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நீயா நானா வே மல்லாக்கப்படுத்து எச்சில் துப்பும் நிகழ்ச்சி ...ஊர் உலகமறியவா..டி வீ யில் வந்து சொல்வார்கள். நாளைக்கு மானம் கப்பலேறிவிடும். இப்படியும் சில மனிதர்கள். 😠

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

உண்மையில் நீயா நானா வே மல்லாக்கப்படுத்து எச்சில் துப்பும் நிகழ்ச்சி ...ஊர் உலகமறியவா..டி வீ யில் வந்து சொல்வார்கள். நாளைக்கு மானம் கப்பலேறிவிடும். இப்படியும் சில மனிதர்கள். 😠

சில நிகழ்ச்சிகள் அறிவுபூர்வமானதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்தேன் . ........... சிலருக்கு அது ஒரு ஒவ்வாமை போன்ற செயற்பாடு . ........ சிலர் அப்பப்ப பெட்றோல் ராங்க் மூடியைத் திறந்து மனப்பார்கள் ......... சிலர் தலைமுடியை மோந்து பாப்பினம் ........ இப்படி பல சுபாவங்கள் உண்டு ..........! 😁

அதுவும் அந்த வேலை அலுப்பில் வாற மனிதனை நிம்மதியாய் படுக்க விடாமல் தென்னை , பனை மாதிரி படு என்பது கொஞ்சம் ஓவர் ........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

அதுவும் அந்த வேலை அலுப்பில் வாற மனிதனை நிம்மதியாய் படுக்க விடாமல் தென்னை , பனை மாதிரி படு என்பது கொஞ்சம் ஓவர் .......

சுவி இவர்கள் இளமையான டாக்ரர்கள் வேற.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் திட்டமிடப்பட்டு.....எடிட் பண்ணப்பட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகள். வியாபர நோக்கங்களுக்காக....

பார்த்து ரசிப்பதுடன் நிறுத்தி விட வேண்டும். விவாதித்தால் மன உழைச்சல் தான் வரும். ☹️

  • கருத்துக்கள உறவுகள்

487508609_29225030097110903_391980754135

இந்தத் தலைப்பிற்கு, பொருத்தமான நகைச்சுவை. 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.