Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கை கொலை - கைதான அண்ணன் அளித்த வாக்குமூலம் என்ன?

பல்லடம் ஆணவக்கொலை, வித்யா

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தில் 22 வயது கல்லுாரி மாணவியைக் கொலை செய்ததாக அவரது உடன் பிறந்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இது, இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே இருந்த காதலின் காரணமாக நடந்த ஆணவக்கொலை என்று தகவல்கள் பரவியுள்ள நிலையில், இருவருமே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் ஆணவக்கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டால் இத்தகைய கொலைகள் நிகழ்வது தடுக்கப்படும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி–தங்கமணி தம்பதியினரின் மகள் வித்யா (வயது 22). இவர் கோவை அரசு கலைக்கல்லுாரியில் தமிழ் முதுகலை பயின்று வந்துள்ளார். கடந்த ஞாயிறன்று அவர் வீட்டில் இருந்தபோது, பீரோ விழுந்து அவர் இறந்து விட்டதாகக் கூறி, அவரின் உடலை அருகிலுள்ள மயானத்தில் புதைத்துள்ளனர்.

ஆனால் அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக, அவருடைய காதலர் வெண்மணி அளித்த தகவலின்பேரில், பருவாய் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, காமநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஏப்ரல் முதல் தேதியன்று, வித்யாவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, அதே இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மீண்டும் புதைக்கப்பட்டது.

அவசர அவசரமாக புதைக்கப்பட்ட வித்யாவின் உடல்!

பிரேத பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பே, தன் தங்கையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு விட்டதன் அடிப்படையில் வித்யாவின் அண்ணன் சரவணகுமார் (வயது 24) கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜவேல்.

வித்யாவின் மீதிருந்த பாசத்தால்தான் திடீரென உணர்ச்சிவசப்பட்டு இந்த கொலையைச் செய்து விட்டதாக தங்களிடம் சரவணகுமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக அவர் மேலும் தகவல் பகிர்ந்தார்.

கொலைச்சம்பவம் குறித்து விளக்கிய காவல் ஆய்வாளர் ராஜவேல், ''வெண்மணி என்ற இளைஞரை வித்யா காதலித்துள்ளார். இருவரும் எம்பிசி பிரிவில் வேறுவேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். இந்த காதல் பிரச்னையால், வித்யாவும், சரவணகுமாரும் கடந்த சில மாதங்களாக பேசிக்கொள்ளவில்லை. சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில், இவர்களின் பெற்றோர் தண்டபாணி–தங்கமணி இருவரும் சர்ச்சுக்குச் சென்றுள்ளனர்.

பெற்றோர் இருவரும் மட்டும் மதம் மாறியுள்ளனர். பிள்ளைகள் இருவரும் மாறாததால் வீட்டில் இருந்துள்ளனர். தாயும், தந்தையும் சென்ற பின்பு, அண்ணனுக்கும், தங்கைக்கும் இடையில் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது அரிவாளால் வித்யாவின் தலையில் சரவணகுமார் தாக்கியதில் அவர் இறந்துள்ளார். அதன்பின் பீரோவைத் தள்ளிவிட்டு அதில்தான் அவர் இறந்துவிட்டதாக மற்றவர்களிடம் கூறியுள்ளார்.'' என்றார்.

வித்யா

படக்குறிப்பு,வித்யாவின் குடும்பத்தினர்

அன்று காலையிலிருந்து காதலர் வெண்மணி, வித்யாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தன்னுடைய நண்பர் ஒருவரை அனுப்பிப் பார்த்தபோது, வித்யா இறந்து, அவரை அடக்கம் செய்யப்போவதாகத் தகவல் கிடைத்ததாக பிபிசி தமிழிடம் தகவல் தெரிவித்தார் வெண்மணியின் வழக்கறிஞர் ஆர்தர் குமார். அதன்பின் வெண்மணி அளித்த தகவலின்பேரில்தான், பருவாய் கிராம நிர்வாக அலுவலர், வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்து, உடல் தோண்டியெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

"வித்யா இறந்ததை அறிந்து கொண்ட அவரின் தோழிகள் வீட்டுக்குச் சென்று வித்யாவை பார்ப்பதற்குள் வித்யாவின் உடல் புதைக்கப்பட்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே நான் காவல்துறையில் புகார் அளித்தேன்," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் வெண்மணி.

முதலில் சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து இருப்பதாக காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜவேல் தெரிவித்தார்.

காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெண் வீட்டார்

வித்யாவை பெண் கேட்டு, வெண்மணியின் குடும்பத்தார் சென்றதால் ஏற்பட்ட கோபத்தில்தான் கொலை நடந்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. காதலர் வெண்மணியிடம் பேசிய போது சொந்த சாதியில் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் திருமணத்திற்கு மறுத்ததாகக் கூறினர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வெண்மணி, ''ஊடகங்களில் தெரிவிப்பதைப் போன்று நான் பெண் கேட்டு செல்லவில்லை. ஆனால் பிப்ரவரி மாதம் எங்களுடைய காதல் குறித்து வித்யாவின் அண்ணனிடம் போனில் பேசினேன். என்னுடைய அம்மாவும், அவருடைய அம்மாவிடம் பேசினார். ஆனால் அவர்கள், இது சரிப்பட்டு வராது என்று கூறி எங்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்." என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த அவர், "ஆரம்ப காலம் தொட்டே வித்யாவின் அண்ணனுக்கு எங்களின் காதல் மீது எதிர்ப்பு இருந்தது. இருவரும் ஒரே (மிகவும் பிற்படுத்தப்பட்ட) வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, சொந்த சாதியில் திருமணம் செய்து தர வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் மேலோங்கி இருந்தது. நாங்கள் காதல் குறித்து வீட்டில் தெரிவித்த பிறகும், படிப்பு முக்கியம் என்று வித்யாவை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். " என்றார். வித்யா உயிரிழந்த முந்தைய நாள் அதாவது சனிக்கிழமையன்றும் தான் தொலைபேசியில் பேசியதாக வெண்மணி கூறினார்.

வித்யா, பல்லடம் ஆணவக் கொலை

இருவருமே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர்!

வித்யா, நாவிதர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். வெண்மணி மண்பானைகள் செய்யும் குலாலர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இருவருமே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது சட்டப்படி தீண்டாமை குற்றமாகாது என்று பிபிசி தமிழிடம் தகவல் பகிர்ந்தனர் காமநாயக்கன்பாளையம் காவல் அதிகாரிகள்.

கோவை அரசு கலைக்கல்லுாரியில் வித்யா தமிழ் இளங்கலை படிக்கும்போது, அதே கல்லுாரியில் வெண்மணி தமிழ் எம்.பில் படித்து வந்துள்ளார். அப்போதே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். வித்யா தற்போது முதுகலை படித்து வந்துள்ளார்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய வெண்மணியின் வழக்கறிஞர் ஆர்தர் குமார், ''வெண்மணி தேசிய அளவிலான ஆசிரியர் தகுதித்தேர்விலும் (NET) தேர்ச்சி பெற்றுவிட்டார். அடுத்து JRF (Junior Research Fellowships) தேர்விலும் தேர்ச்சி பெற்று விட்டதால் தனக்கு உதவித்தொகையே ரூ.45 ஆயிரம் வருமென்று கூறி, தனக்குத் திருமணம் செய்து தருமாறு வித்யாவின் அண்ணன் சரவணகுமாரிடம் வெண்மணி பேசியுள்ளார். இருவருமே சமவகுப்பினராக இருந்தும் அதற்கு மறுத்து கொலை செய்துள்ளார் சரவணகுமார்.'' என்று குற்றம் சாட்டினார்.

காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் சரவணகுமார் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், பிபிசி தமிழ் அங்கு நேரில் சென்றது. வித்யாவின் தாய் தங்கமணி, தந்தை தண்டபாணி, அவர்களின் உறவினர்கள் மற்றும் பருவாய் கிராமத்தைச் சேர்ந்த பலரும் அங்கு இருந்தனர். அவர்களில் யாரும் பேசுவதற்கு முன் வரவில்லை. பேச வந்தவர்களையும் மற்றவர்கள் அனுமதிக்கவில்லை.

வித்யா, பல்லடம் ஆணவக்கொலை

வித்யாவின் தாயார் தங்கமணியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, ''நான் என் மகளை இழந்து நிற்கிறேன். எதுவும் பேசுவதற்கில்லை.'' என்றார். சற்று தயக்கத்துடன் பிபிசி தமிழிடம் பேசிய வித்யாவின் தந்தை தண்டபாணி, ''அவர்கள் குடும்பத்திலிருந்து யாரும் எங்களிடம் பெண் கேட்டு வரவில்லை. நாங்கள் அந்தப் பையனைப் பார்த்ததே இல்லை. ஆனால் எங்கள் மகள் எங்களிடம் இதைப் பற்றிச் சொன்னாள். படித்து முடித்தபின், பதிவுத்திருமணம் செய்து வைப்பதாகக் கூறியிருந்தோம். அதற்குள் இப்படி நிகழ்ந்துவிட்டது. வேறு எதுவும் பேசக்கூடாது என்று போலீசார் கூறியுள்ளனர்.'' என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய பருவாய் முன்னாள் கிராம ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், ''எங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்புமில்லை. ஆனால் ஊருக்குள் திடீரென ஒரு பெண் அசாதாரணமான முறையில் இறந்தது பற்றி போலீசுக்கு ஏன் தகவல் சொல்லவில்லை என்றே எங்களிடம் விசாரித்தனர். இவர்கள் இருவருமே எம்பிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள். இதை ஆணவக்கொலை என்று ஊடகங்கள் சொல்வது மிகத்தவறு.'' என்றார்.

வித்யா

ஆணவக்கொலைக்கு எதிரான சட்டத்துக்கு வலுக்கும் கோரிக்கை!

இந்த வழக்கில் குற்றவாளியாக சரவணகுமார் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் வேறு யாரும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்தார்களா என்றும் சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''இப்போதைக்கு சரவணகுமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளோம். மேல் விசாரணை நடந்து வருகிறது. அதற்குப் பின்பே எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்.'' என்றார்.

இருவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில், இது ஆணவக்கொலை இல்லை என்று பலரும் வாதிட்டு வரும் நிலையில், வெவ்வேறு சமுதாயம் என்பதற்காக நடக்கும் அனைத்துக் கொலைகளுமே ஆணவக்கொலையாகத்தான் கருதப்படவேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

வித்யா

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கனகராஜ், ''ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டமியற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக பல இடங்களில் சமூக செயற்பாட்டாளர்கள் குரல் எழுப்பி வருகின்ற சூழலில், இத்தகைய கொலைகள் வெறும் கொலை வழக்கின் கீழ் பதிவு செய்யப்பட்டு அதற்கான தண்டனை மட்டுமே வழங்கப்படும். இது ஒரு ஆணவக் கொலை என்பதே கருத்தில் கொள்ளப்படாது. அரசு இது போன்ற கொலைகள் நடப்பதை தடுக்க, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்," என்றார்.

ஆனால் இதை முற்றிலும் மறுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ், ''தங்கையை கொன்றதை அண்ணனே ஒப்புக் கொண்டு விட்டார் என்பதால் இந்த வழக்கில் வேறு எந்தக் குழப்பங்களும் இல்லை. குற்றவாளியைக் கைது செய்து விட்டோம்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c98ge3zgy9eo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான செயல்களை வைத்துத்தான் நான் திராவிடத்தை எதிர்க்கின்றேன். தமிழ்நாடு முன்னேறி விட்டது என்பவர்களுடன் தர்க்கபடுகின்றேன்.

சங்கர் போன்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து தமிழ்நாட்டை மதிப்பிட முடியாது. இன்றும் பல ஊர்களில் உயர்சாதிகள் வாழும் வீடுகளின் முன்பு பிறப்பால் தாழ்த்தப்பட்டவர்கள் செருப்புகளை கழட்டி வெறும் காலுடன் நடக்க வேண்டும். இதே போல் இன்னும் பல தாழ்த்தப்பட்டவர்களுக்கான கொடுமைகள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

இப்படியான செயல்களை வைத்துத்தான் நான் திராவிடத்தை எதிர்க்கின்றேன்.

இதற்கும்

திராவிடத்துக்கும் என்ன

தொடர்பு?

இப்படியான அரைவேக்காட்டுத்தனமான

சாதிப்பிரச்சனைகளின் அடித்தளமான

வர்ணாச்சிரம் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல்

கண்டபாட்டுக்கு வந்து கருத்தெழுவதும்

என்றே உங்கள்

பொழுது போகுது

அச்சு அச்சோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது திராவிடத் தத்துவம். உலகளாவிய சமநிலை மானுடம் மலர வேண்டும் என்ற குறிக்கோளோடு, ‘பேதமற்ற இடம் தான் மேலான திருப்தியான இடம்” என்பார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். இது சுயமரியாதை - சமத்துவம் - சமதர்மம் என்னும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும்.

periyar 358மதம், ஜாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், திருமணம், குடும்பம், பொருளாதாரம் இவற்றின் தற்போதைய அடிக்கட்டுமானத்தை மாற்றி எல்லார்க்கும் எல்லாமுமான சமநிலை உருவாக்குவதாகும்.

‘ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது. மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கிறார்கள். நாட்டில் அறிவும், ஒழுக்கமும், நாணயமும், சமநிலையும் வளர்ந்து வளர்கிறது என்பதற்கு அடையாளம் என்னவென்றால் நாட்டில் எல்லாத் துறைகளிலும்...

சம தர்மம்
சம ஈவு
சம உடைமை
சம ஆட்சித் தன்மை
சம நோக்கு
சம நுகர்ச்சி
சம அனுபவம்
இருக்க வேண்டும்.
ஏற்பட வேண்டும்..
ஏற்பட்டாக வேண்டும்...”
- தந்தை பெரியார்

இது ஒரு சுருக்கப் பிழிவாகும்.

திராவிடக் கொள்கை - கோட்பாடு என்பவை

1. அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்களே.

2. பாலின சமத்துவம்

3. சமுகநீதி

4. பகுத்தறிவுக்கும், அறிவியல் சிந்தனைக்கும் பொருந்ததாத கடவுள், மதம் மற்றும் இவற்றைச் சார்ந்த ஆன்மா, மோட்சம், நரகம், பழக்க வழக்கம், மூடத்தன நெடியேறும் முன்னோர்கள் கூற்று உள்ளிட்டவற்றை மறுப்பது.

5. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, எதையும் கேள்விக்கு உட்படுத்தி ஆய்வின் அடிப்படையில் ஏற்பதும் அல்லது மறுப்பதுமான புத்தாக்க உருவாக்கம்.

6. பேதம் பேசும் இந்துத்துவா கோட்பாட்டை எதிர்ப்பது.

7. அறிவியலை ஏற்பதுடன், அது மனித குலத்தின் நலனுக்கு - வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கவேண்டுமே தவிர கேடாக அமையக்கூடாது.

8. தீண்டாமை - அதற்கு மூல வேரான ஜாதி - ஜாதிக்கு அரணான கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணங்களை - பழைமைவாத குலப்பெருமைகளை எதிர்த்து அழிப்பது.

9. ஏற்றத் தாழ்வுள்ள இந்த சமுக அமைப்பில் உரிைம மறுக்கப்பட்ட மக்களுக்கு சமுகநீதி வழங்குவது - தனியார் துறை, பொதுத்துறை, அரசுத் துறை அனைத்திலும்.

10. ஆண் எஜமானன் - பெண் அடிமை என்ற தற்போதைய நிலைக்கு மாறாக பாலின சமத்துவம், எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராகக் கல்வி, உத்தியோகம, அரசியல், பொருளாதார நிலைக்கு உத்தரவாதம்.

11. தற்போதைய நிலையில் வழிபாட்டில், அர்ச்சகத் தன்மையில் ஆண்களுக்குள்ள எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் தேவை - இது எல்லா மதங்களுக்குமே.

12. ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே என்ற அடிப்படையில் அனைத்து உரிமைகளின் நுகர்வுக்கும் உரியவர்களே.

13. கிராம - நகர பேதம் கூடாது.

14. மதங்களைக் காரணம் காட்டி ஏற்றத் தாழ்வுகளை நிலை நிறுத்தும் போக்கு முற்றாக மாற்றி அமைக்கப்படுதல். எந்தக் காலத்திலோ, யாரோ சூழ்ச்சியாக ஆதிக்கத்தை நிலை நிறுத்த எழுதிக் குவித்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தல்.

15. ஒவ்வொரு இனத்துக்குமான மொழிக்குரிய மதிப்புப் பேணப்படுதல் - இதில் ஒரு மொழி, இன்னொரு மொழியை ஆதிக்கம் செலுத்துவதற்கு அறவே இடம் தராமை. கால வளர்ச்சிக்கு ஏற்ப மொழியில் விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு மாற்றம் கொணர்தல். பன்மொழிகள் கொண்ட இந்தியாவில், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் எட்டாம் அட்டவணையில் இடம் பெற்ற மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழி என்பது உறுதிப்படுத்தப்படுதல். அகில இந்திய அளவில் தொடர்பு மொழி என்பது ஆங்கிலமே.

16. பொருளாதார நிலையில் மனிதனுக்குத் தேவையான அடிப்படைகள் பூர்த்தி செய்யப்படல்: இதற்கு அரசே முழுப் பொறுப்பு ஏற்றல்: பணக்காரன், ஏழை என்ற பேதத்தைக் குறிக்கும் சொல்லாடலுக்கே இடமில்லாது செய்தல். தொழிலாளி - முதலாளி என்ற பேதமின்றி ‘பங்காளி” எனும் தன்மை நிலைநிறுத்தப்படுதல்: சுருக்கமாக சொல்லப்போனால், வருண பேதம், வர்க்க பேதம், பாலியல் பேதமற்ற ஒப்புரவு சமுதாயம் உருவாக்கப்படுதல்.

17. ஒரு மொழி, ஓர் இனத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் நாட்டில் அனைத்து மொழிகள், இனங்களுக்கான உரிமை, பண்பாடு, பங்களிப்பு, வளங்களுக்கு இடையே பாரபட்சமற்ற, ஆதிக்கமற்ற சமன்பாட்டை நிலை நிறுத்துதல்; மாநிலங்களுக்கான தன்னாட்சி உரிமை நிலைப்படுத்தப்படுதல்.

18. அரசுக்கும், மதத்துக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லாத உண்மையான மதச்சார்பின்மை நிலைப்பாடு.

19. ஜாதி ஒழிக்கப்படும் காலகட்டம் வரை அனைத்துப் பிரிவினருக்கும் சகல இடங்களிலும், துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம்.

20. கல்வி என்பது எல்லோருக்கும் அடிப்படை உரிமை. விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமான எதுவும் கல்வியில் இடம்பெறாமை, வளர்ச்சித் தத்துவம், சிந்தனையூற்றம் - விடாமுயற்சி, ஊக்கம் தரும் தன்மை இவற்றோடு உலகப் போட்டிக்குத் தயாரிப்பான கல்வி முறை, ஒழுக்கம் பொதுச் சொத்து என்ற வார்ப்பு, பாடத் திட்டங்கள்: தகுதி திறமையை அளவிட மனப்பாட மதிப்பெண் முறைக்குப் பதிலாக செய்முறை, வினையூக்கத்தை உள்ளடக்கிய அறிவியல் அடிப்படையில் அமைந்த தொழில்நுட்பம் உள்ள கல்வி முறை.

21. கடவுள் நம்பிக்கைக் கொண்டோர் கடவுள் நம்பிக்கையற்றோர் - இரு நிலையில் உள்ளவர்களுக்கும் பிரச்சார உரிமையுடன் கூடிய சமநிலைச் சட்டங்கள் உருவாக்கப் பாடுபடுதல்.

22. குழந்தை வளர்ப்பில் முழுக்கவனம், உடல், மூளை வளர்ச்சிக்கான உணவு, சூழல், தூய்மை, அறிவுத் தூண்டல், நற்பழக்கம் பேணப்படுதல்.

23. முதியவர்களை அக்கறையுடன் உரிய மதிப்புடன் பாதுகாத்தல்.

24. சுற்றுச் சூழல், இயற்கை வளங்கள் பாதுகாப்பு.

25. ஆணோ, பெண்ணோ 20 வயதுக்கு மேல் எந்த வயதில் திருமணம் செய்து கொள்வது என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுதல். திருமணம் என்பதில் வேறு யாருடைய தலையீடோ, குறுக்கீடோ கூடாத நிலை. வயது அடைந்த ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்தலில் மூன்றாவது மனிதனுக்கு இடம் என்பது அத்துமீறிய நடவடிக்கையே. குழந்தைப்பேறு குறித்த முடிவில் பெண்ணுக்கு மட்டுமே பிரத்தியேக உரிமை.

26. மரண தண்டனையை ரத்து செய்தல்.

27. கருத்துரிமை, பிரச்சார உரிமைக்கு தடையற்ற நிலை.

28. கலை, கலைக்காக என்பதை ஏற்க இயலாது - மனிதத்தையும், சுயமரியாதைக் கருத்துருவையும் கொண்டதாக ஆக்கப்பூர்வமாக அமைதல் வேண்டும்.

29. ‘அனைவருக்கும் அனைத்தும்” அமைந்து, சமூக நுகர்வுக்கான விரிந்த இலக்கு நோக்கி நடக்கட்டும் இந்த வையம்.

30. மனிதன் தானாகப் பிறக்கவில்லை - எனவே, தனக்காக வாழக்கூடாதவன் என்ற சமுக நோக்க - தொண்டறப் பண்பு.

31. ஆடம்பரம் தவிர்ப்பு - சிக்கனப் பெருவாழ்வு.

32. குருதி உறவு என்பதையும் கடந்து மனிதனுக்கு மனிதன் நேச உறவு-சகோதரத்துவம், சமத்துவம் பேணலே மனிதனுக்குப் பகுத்தறிவு இருப்பதின் பலனாகும்.

33. சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு.

கடவுளை மற - மனிதனை நினை என்னும் சுயமரியாதை சமத்துவ உலகம் மலரட்டும், மலரட்டும்..

‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்! ‘உலகமே ஒரு குடும்பம்” என்னும் பரிணாம நிலை வளரட்டும்.

பகைமை, ஆதிக்கம், ஆக்கிரமிப்பு போன்ற கொடிய நோய்களற்ற, ஆரோக்கியமான புத்துலகம் புரட்சியுகமாக பூத்துமலர நமது பயணங்களும், திட்டங்களும் அமையட்டும்.

- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.
தஞ்சாவூர், 23.2.2019

தமிழ்நாட்டில் இன்னும் வர்ணாச்சிர ஆட்சி உதிக்கவில்லை. அன்றும் இன்றும் திராவிடம். அந்த திராவிடம் இதுவரைக்கும் எதையும் சாதிக்கவில்லை.

கலர் அடிச்சது என்ர கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

என் கேள்வி:

இதில் சொல்லப்பட்ட செய்தியிற்கும்

திராவிடத்துக்கும் என்ன

சம்பந்தம்?

இன்னொரு விதத்தில்

கேட்கின்றேன்.

இரண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட

சாதியில் உள்ள இருவர்

காதலை ஏற்காத ஒரு

அற்பன், தன் தங்கையை

கொன்று விட்டான்.

இந்த குற்றத்திற்கும்

திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம்?

31 minutes ago, குமாரசாமி said:

மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கை கொலை

அதுசரி பெடி என்ன சாதியாம்? பெட்டை என்ன சாதியாம்?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வாலி said:

மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கை கொலை

அதுசரி பெடி என்ன சாதியாம்? பெட்டை என்ன சாதியாம்?

வலி. இது கூட தெரியாத ?? பெடி ஆண்சாதி பெட்டை பெண்சாதி 🤣🤣

ஒருபோதும் மறக்க கூடாது

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, வைரவன் said:

என் கேள்வி:

இதில் சொல்லப்பட்ட செய்தியிற்கும்

திராவிடத்துக்கும் என்ன

சம்பந்தம்?

இன்னொரு விதத்தில்

கேட்கின்றேன்.

இரண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட

சாதியில் உள்ள இருவர்

காதலை ஏற்காத ஒரு

அற்பன், தன் தங்கையை

கொன்று விட்டான்.

இந்த குற்றத்திற்கும்

திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம்?

அதென்னன்னாக்க, திராவிடம் இலக்கை அடையவில்லையாம்! அதனால் "திராவிடத்தை வெறுக்கிறோம், அதை சங்கிகளோடு கூட்டுச் சேர்ந்து அழிப்போம்" என்கிறார்கள்.

தாயகத்தில் 30 வருடம் கோலோச்சிய ஆயுதம் தரித்த தமிழ் தேசியம் சாதியையும் ஒழிக்கவில்லை, பெண் வெறுப்பையும் ஒழிக்கவில்லை, சிறு பான்மை மதங்கள் மீதான வெறுப்பையும் ஒழிக்கவில்லை. அப்படியானால் ஈழ தமிழ் தேசியத்தை ஏன் இன்னும் தலையில் தூக்கித் திரியுறம்? அதுவும் பெய்லியர் தானே😎?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் இன்னும் வர்ணாச்சிர ஆட்சி உதிக்கவில்லை. அன்றும் இன்றும் திராவிடம். அந்த திராவிடம் இதுவரைக்கும் எதையும் சாதிக்கவில்லை.

தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலும் ஈழத்தமிழர் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவில் அமைப்புகளிலும் அவர்களது திருமணங்களிலும் வருணாசிரம ஆட்சியே கோலோச்சுகிறது. சாதி வெறியில் யாழ்பாணம் முன்னிலை வகிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சாதி இரண்டு மூன்று இல்லை அதிகம் உண்டு” ஆகக் கீழ் சாதிகாரன். தான் உண்மையில் சாதி ஆழிய வேண்டும் என்று விரும்கிறான். இது மிகவும் குறைந்த எண்ணிக்கை அல்லது வீதம் ....ஆகும் மற்றைய சாதிக்காரர்கள் எல்லாம் தங்களுக்கு கீழே சாதி இருக்க விரும்பும் அதேவேளை தங்களுக்கு மேலே சாதி இருப்பதை விரும்பவில்லை இந்த காரணங்களால் சாதி ஒருபோதும் அழியாது

சாதி ஆழியாமல். இருப்பதற்கு ஒவ்வொரு சாதியினரும் காரணம் தான் இல்லையா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, வைரவன் said:

என் கேள்வி:

இதில் சொல்லப்பட்ட செய்தியிற்கும்

திராவிடத்துக்கும் என்ன

சம்பந்தம்?

இன்னொரு விதத்தில்

கேட்கின்றேன்.

இரண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட

சாதியில் உள்ள இருவர்

காதலை ஏற்காத ஒரு

அற்பன், தன் தங்கையை

கொன்று விட்டான்.

இந்த குற்றத்திற்கும்

திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம்?

தமிழ் நாடு என்றால் திராவிட நாடு என சொல்லப்படுகின்றது.திராவிடம் உருவாகிய காலம் தொடக்கம் திராவிட கட்சிகளே தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்றன.திராவிட கொள்கைகளாக சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண ஆதிக்க எதிர்ப்பு, பகுத்தறிவு,சமத்துவம்,சமூக முன்னேற்றம்,பெண்ணுரிமை,நாத்திகம்,இட ஒதுக்கீடு,அதிகாரப் பகிர்வு என இன்னும் பல கொள்கைகள் அடக்கப்பட்டு உள்ளது.

எனது கேள்வி என்னவென்றால் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள் ஏன் இதுவரைக்கும் சாதியை ஒழிக்கவில்லை.சாதி வாரியான கட்சிகளை ஏன் வளர்க்கின்றனர்?

திராவிட ஆட்சி நிலவினாலும் இன்னும் 13 வீதமான பார்ப்பனியர்களே தமிழ்நாட்டில் உயர் பதவி வகிக்கின்றனர்.திராவிட கட்சிகளும் அவர்கள் சார்பாகவே இருக்கின்றன.

இப்படியான தோற்றுப்போன நிலையில் திராவிட கட்சிகள் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் வியாக்கியானம் தேவையில்லை.

திராவிடம் சாராத கட்சிகளும் தமிழ் நாட்டை ஆட்சி செய்யலாம்.

2 hours ago, island said:

தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலும் ஈழத்தமிழர் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவில் அமைப்புகளிலும் அவர்களது திருமணங்களிலும் வருணாசிரம ஆட்சியே கோலோச்சுகிறது. சாதி வெறியில் யாழ்பாணம் முன்னிலை வகிக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள கோவில்களில் வருணாச்சிரம ஆட்சி நடக்கின்றது உண்மைதான். ஆனால் அதுவும் மெல்ல மெல்ல தவிர்க்கபட்டுக்கொண்டு வருகின்றது.இதை எப்படி இந்த வருணாச்சிரம முறையை முறியடிக்கலாம் என உங்கள் ஆலோசனையை சொல்லுங்கள்? ஆனால் ஊர்களில் பல இடங்களில் பூசகர்களாக எம்மவர்களே ஈடுபட தொடங்கிவிட்டார்கள்.அது மட்டுமல்லாமல் தமிழில் தான் ஆராதனைகளும் நடைபெறுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

கீழ் சாதிகாரன். தான் உண்மையில் சாதி ஆழிய வேண்டும் என்று விரும்கிறான்.

மற்றைய சாதிக்காரர்கள் எல்லாம் தங்களுக்கு கீழே சாதி இருக்க விரும்பும் அதேவேளை தங்களுக்கு மேலே சாதி இருப்பதை விரும்பவில்லை

இந்தியர்கள் , தமிழர்கள் தங்களுக்கு கீழே ஒரு குழு மனிதர்களை வைத்திருந்து அவர்களை நசுக்கி ஒடுக்கி அதிகாரம் செய்து இன்பம் அடையும் கேவலமான மனநிலை கொண்டவர்கள். அவர்களின் இந்த கேவலமான மனநிலை தான் சாதி அமைப்பை அவர்கள் வைத்திருக்க விரும்புகின்றது. யாழ்பாணத்து பல்கலைகழகத்தில் புதிய மாணவர்கள் மீது மேற்கொண்ட சித்திரவதைகளும் இந்த கேவலமான மனநிலையில் தோற்றியதே.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர் நாடுகளில் உள்ள கோவில்களில் வருணாச்சிரம ஆட்சி நடக்கின்றது உண்மைதான். ஆனால் அதுவும் மெல்ல மெல்ல தவிர்க்கபட்டுக்கொண்டு வருகின்றது.இதை எப்படி இந்த வருணாச்சிரம முறையை முறியடிக்கலாம் என உங்கள் ஆலோசனையை சொல்லுங்கள்? ஆனால் ஊர்களில் பல இடங்களில் பூசகர்களாக எம்மவர்களே ஈடுபட தொடங்கிவிட்டார்கள்.அது மட்டுமல்லாமல் தமிழில் தான் ஆராதனைகளும் நடைபெறுகின்றது.

தமிழ் நாட்டிலும் சரி, ஈழத்திலும் சரி நீண்ட காலமாகவே கிராமங்களில் உள்ள பல சிறிய கோவில்களில் சாதாரணமக்கள் பூசகர்களாக உள்ளனர். அவ்வாறாக அவர்களால் தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில்களில் பூசகர்களாக பிராமணர்களை அழைத்தாலும் வரமாட்டார்கள். ஆனால் பெரிய கோவில்கள் எல்லாவற்றிலுமே பிராமணர்கள் மட்டும் தான் பூசை செய்யலாம். தமிழ் நாட்டில் அனைத்தை சாதியினரும் அர்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு கொண்டுவரப்பட்ட சட்டதை எதிர்தது பிரமணர்கள் நீதிமன்றம் சென்று சைவ ஆகமங்களில் அந்த உரிமை பிறப்பால் பிராமணர்களாக பிறந்தவர்களுக்கே உரித்தானது என்று தடை உத்தரவு வாங்கியுள்ளனர். தமிழ் நாட்டிலாவது அப்படியான விழிப்புணர்வு ஏற்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டதை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால், ஈழத்தை பொறுத்தவரை கோவில்களில் பிராமணர்களின் மேலாண்மையை தாங்களாக ஏற்றுக கொண்ட அடிமை நிலையே நிலவுகிறது. பிராமணகளை உயர்ததிப் பிடித்து அவர்களுக்கு அரணாக தாம் நின்று தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கவதே யாழ்பாண வெள்ளாள மனநிலை. ஆறுமுக நாவலர் யாழ்பாண மக்களுக்கு கற்றுக்கொடுத்தது இதுவே. ஆகவே, சாதி ஒடுக்குமுறை, சமூக நீதி ஆகிய விடயங்களில் தமிழ் நாட்டுமக்களை குறை சொல்லும் தார்மீக உரிமை ஈழத்தமிழருக்கு இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.