Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gn2GG9iWUAAAPoX?format=jpg&name=4096x409

தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக தலைவர்களிடமிருந்து பல கடிதங்களைப் பெற்றாலும், அவர்களில் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை என்றும், அவர்கள் தங்கள் மொழியைப் பற்றி உண்மையிலேயே பெருமைப்படுவார்கள் என்றால், குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறினார்.

ராம நவமியை முன்னிட்டு, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து மண்டபம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

Gn2GKQHW4AE2HfP?format=jpg&name=4096x409

இது குறித்து மேலும் பேசிய இந்தியப் பிரதமர் மோடி,

தமிழ் மொழி மற்றும் தமிழ் பாரம்பரியம் உலகின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

சில நேரங்களில், தமிழ்நாட்டின் சில தலைவர்களிடமிருந்து கடிதங்களைப் பெறும்போது நான் ஆச்சரியப்படுகிறேன் – அவர்களில் யாரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை.

நாம் தமிழைப் பற்றி பெருமைப்படுகிறோம் என்றால், அனைவரும் குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் – என்றார்.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பயனடையும் வகையில் தமிழ் மொழியில் மருத்துவப் படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தமிழக அரசை இதன்போது வலியுறுத்தினார்.

மத்திய பாஜக அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக மாநில அரசு குற்றம் சாட்டியதால், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் மத்திய அரசும் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன.

புதிய கல்விக் கொள்கையின் (NEP) மும்மொழி சூத்திரம் அண்மைய முக்கிய அம்சமாகும்.

இந்த நடவடிக்கைகள் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அச்சுறுத்துவதாக தமிழக மாநில அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கிடையில், பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்வை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புறக்கணித்தார்.

ஊட்டியில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய அவர், மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் வரவிருக்கும் எல்லை நிர்ணய நடவடிக்கையில் தண்டிக்கப்படாது என்றும், நாடாளுமன்ற இடங்களின் சதவீதத்தில் அவற்றின் பங்கு மாறாமல் இருக்கும் என்றும் பிரதமர் தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

https://athavannews.com/2025/1427702

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

சில நேரங்களில், தமிழ்நாட்டின் சில தலைவர்களிடமிருந்து கடிதங்களைப் பெறும்போது நான் ஆச்சரியப்படுகிறேன் – அவர்களில் யாரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை.

ஸ்ராலின் தமிழ் பெயர் இல்லை. அவர் ஏன் தமிழில் கையெழுத்து இட வேண்டும்?🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

ஸ்ராலின் தமிழ் பெயர் இல்லை. அவர் ஏன் தமிழில் கையெழுத்து இட வேண்டும்?🙂

ஸ்ராலினின் உண்மையான பெயர் வெள்ளைச்சாமி என்று எங்கோ வாசித்த நினைவு.

பின்.. கருணாநிதியின் "தில்லாலங்கடி" வேலையால் ஸ்ராலின் என்ற பெயர் வைக்கப்பட்டது என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

'குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள்' - ராமேஸ்வரத்தில் தமிழ்நாட்டு தலைவர்களை விமர்சித்த மோதி

நரேந்திர மோதி, ராமேஸ்வரம், பாம்பன் பாலம், பாம்பன் ரயில் பாலம், மண்டபம்

பட மூலாதாரம்,ANI

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

இன்று இலங்கை பயணத்தை நிறைவு செய்து விட்டு மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி வருகை தந்தார்.

அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்திற்கு வந்த மோதி ரூ.550 கோடி செலவில் பாம்பன் - மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார்.

நரேந்திர மோதி, ராமேஸ்வரம், பாம்பன் பாலம், பாம்பன் ரயில் பாலம், மண்டபம்

தொடர்ந்து பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மண்டபத்திலிருந்து புறப்பட்டு வந்த சிறப்பு ரயில் ராமேசுவரத்திற்கு சென்றது.

அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோதி வந்தார்.

பின்னர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவில் ராமேஸ்வரம்-தாம்பரம் தினசரி விரைவு ரயிலை தொடங்கி வைத்தார்.

மேலும், இத்துடன் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது, தொடங்கி வைக்கப்பட்டது.

நரேந்திர மோதி, ராமேஸ்வரம், பாம்பன் பாலம், பாம்பன் ரயில் பாலம், மண்டபம்

விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பேசுகையில், "பாம்பன் புதிய பாலத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ரயில் பாலம் தான், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலம். இந்த பாலத்தினடியில் பெரிய கப்பல்களும் பயணத்தை மேற்கொள்ள முடியும். ராமேஸ்வரத்திலிருந்து பிற பகுதிகளுக்கு இடையிலான இணைப்பினை இந்த பாலம் ஏற்படுத்துவதுடன், தமிழ்நாட்டின் சுற்றுலா மற்றும் வணிகங்களுக்கு பயனுள்ளதாக அமையும்'' என்றார்

"வளர்ச்சிப் பயணத்தில் தமிழ்நாட்டுக்கு பங்கு"

நரேந்திர மோதி, ராமேஸ்வரம், பாம்பன் பாலம், பாம்பன் ரயில் பாலம், மண்டபம்

"முன்பிருந்த அரசை விட கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கு அதிக அளவில் உதவி புரிந்துள்ளது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட தமிழ்நாட்டுக்கு அதிக நிதி தந்துள்ளோம் கடந்த 10 ஆண்டுகளிலே, தமிழ்நாட்டின் ரயில்வே துறை பட்ஜெட்டில் 7 மடங்குக்கும் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்த பின்னரும் சிலர் அழுதுகொண்டே இருக்கின்றனர். அவர்களால் அழ மட்டுமே முடியும்; அவர்கள் அழுது விட்டு போகட்டும்." என்றார் மோதி

நரேந்திர மோதி, ராமேஸ்வரம், பாம்பன் பாலம், பாம்பன் ரயில் பாலம், மண்டபம்

தமிழ்நாடு மீனவர்கள் கைது சம்பவங்களை குறிப்பிட்டு பேசிய பிரதமர், "மீனவர்களின் ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கிறது. மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 3,700 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த ஒரு வடத்தில் 600 மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்." என்றார்.

"தமிழ்நாட்டு தலைவர்களிடம் இருந்து எனக்கு வரும் கடிதங்களில் அவர்கள் யாருமே தமிழில் கையெழுத்து போடுவதில்லை. தமிழ் குறித்து நீங்கள் பெருமையாக உணர்ந்தால், குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள்" என்றார் மோதி.

மேலும், தமிழில் மருத்துவப் படிப்புகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திய மோதி, இதனால், ''ஏழை குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவ கனவு நனவாகும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி நவாஸ்கனி. எம்.பி, தர்மர், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1me58kzvp0o

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்நியாவில் வாழும் பல கோடிக்கணக்கான மக்களுக்கு கையெழுத்து போடவே தெரியாது. அதை முதல் மோட(டி)ர் கவனிக்க வேண்டும். வட மாநிலங்களை விட தென் மானிலங்களில் கல்வியறிவு மிக மிக அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, island said:

வட இந்நியாவில் வாழும் பல கோடிக்கணக்கான மக்களுக்கு கையெழுத்து போடவே தெரியாது. அதை முதல் மோட(டி)ர் கவனிக்க வேண்டும். வட மாநிலங்களை விட தென் மானிலங்களில் கல்வியறிவு மிக மிக அதிகம்.

உங்களது குறைகளை சுட்டி காட்டினால் தவறுகளை திருத்திக் கொள்ள முயல வேண்டுமே தவிர நீ சுத்தமா என்பதல்ல அதற்கான பதில்.

மேலும் தனது மொழி தவிர்ந்த வேறு மொழிகளில் கையெழுத்து வைப்பது தான் அறிவாளி என்பதற்கு அடையாளமுமல்ல....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ராலினின் உண்மையான பெயர் வெள்ளைச்சாமி என்று எங்கோ வாசித்த நினைவு.

பின்.. கருணாநிதியின் "தில்லாலங்கடி" வேலையால் ஸ்ராலின் என்ற பெயர் வைக்கப்பட்டது என்கிறார்கள்.

நான் எங்கே எப்போதே வாசித்த ஞாபகம் உண்டு” கருணாநிதி ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த போது அவருக்கு பிள்ளை பிறந்ததும். ரஷ்யாவில் ஸ்டாலின் இறந்ததும். அடுத்து அடுத்து அறிவிக்கப்பட்டது ...உடனே கருணாநிதி அந்த பெயரை வைத்து உள்ளார் ...பிழை என்றால் திருத்தம் செய்யலாம்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக தலைவர்களிடமிருந்து பல கடிதங்களைப் பெற்றாலும், அவர்களில் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை என்றும், அவர்கள் தங்கள் மொழியைப் பற்றி உண்மையிலேயே பெருமைப்படுவார்கள் என்றால், குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறினார்

பல மொழிகளை பேசும் மக்கள் வாழும் நாட்டில் ஒரு தலைவர்

அவர் பேசும் மொழியில் அவரது கையெழுத்தினை இடுவதால்

அவரது இனம் அந்தப் பிரதேசத்தில் தனது சுதந்திரத்தை அனுபவிக்கும் என்று அர்த்தம் இல்லை

கையெழுத்து என்பது ஒரு தனிப்பட்டவரின் அடையாளம்

அதற்கு மொழிக்காப்பு முலாம் பூச நினைப்பது மோடியாரின்

தேர்தல் காழ்ப்பு பேச்சு அவ்வளவே

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

உங்களது குறைகளை சுட்டி காட்டினால் தவறுகளை திருத்திக் கொள்ள முயல வேண்டுமே தவிர நீ சுத்தமா என்பதல்ல அதற்கான பதில்.

ஆமாம் இங்கு கதைப்பது சொந்த மொழியில் கையெழுத்திட்டதில்லை என்பது பற்றி மட்டுமே படித்தது படியாதது பற்றி இல்லை இந்த விடயத்தில் மோடியின் கேள்வி சரியாகும் தமிழ்நாட்டு தலைவர்கள் மத்திய அரசிடமிருந்து என்ன உரிமையை கேட்டு அல்லது போராடி பெற்று உள்ளார்கள்?? போராடவில்லை என்றால் இவர்கள் சகல உரிமைகளுடனும். வாழ்கிறார்களா???

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் சொந்த மொழியில் விருப்பம் இல்லாதவர்கள் தமிழ்நாட்டவர்கள் என்று அங்கே இருந்த இலங்கையர் பொதுவாக தெரிவிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

உங்களது குறைகளை சுட்டி காட்டினால் தவறுகளை திருத்திக் கொள்ள முயல வேண்டுமே தவிர நீ சுத்தமா என்பதல்ல அதற்கான பதில்.

மேலும் தனது மொழி தவிர்ந்த வேறு மொழிகளில் கையெழுத்து வைப்பது தான் அறிவாளி என்பதற்கு அடையாளமுமல்ல....

அதே வேளை அடுத்தவன் எப்படி கையெழுத்து இடவேண்டும் என்பதை வெறு ஒருவன் தீர்மானிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, island said:

அதே வேளை அடுத்தவன் எப்படி கையெழுத்து இடவேண்டும் என்பதை வெறு ஒருவன் தீர்மானிக்க முடியாது.

அதேவேளை வேற்று மொழியில் கையெழுத்தை எல்லோரும் வைக்கும் பகுதியில் இருந்து வேற்று மொழி தேவையற்றது என்பதும் அர்த்தமற்ற வேண்டுகோளே.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

அதேவேளை வேற்று மொழியில் கையெழுத்தை எல்லோரும் வைக்கும் பகுதியில் இருந்து வேற்று மொழி தேவையற்றது என்பதும் அர்த்தமற்ற வேண்டுகோளே.

அதை முடிவு செய்யும் உரிமை மோடிக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, island said:

அதை முடிவு செய்யும் உரிமை மோடிக்கு இல்லை.

அப்படி என்றால் மோடிக்கு ஏன். கடிதம் எழுதுகிறீர்கள் ?? மோடிக்கு கடிதம் எழுதியபடியால் தான் அவர் கதைக்கும் சந்தர்ப்பம் வந்தது ...அவருக்கு கடிதம் எழுதும் போது உங்கள் சொந்த மொழியில் கையெழுத்திடும்படி சொல்ல ஒரு பிரதமருக்கு பூரண உரிமையுண்டு அவரை நாட்டின் பிரதமர் எங்களது பிரதமர் என்று சொல்லி தான் கடிதம் எழுதுகிறீர்கள் அதை தா. இதை தா. கச்சதீவை மீள். என்றெல்லாம எப்படி கடிதம் எழுத முடியும் ??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினால் அந்த கடிதத்தில் கூறப்பட்ட விடயங்களை வாசித்து பரிசீலித்து அந்த விடயங்களுக்கு சாதகமாகவோ பாதாகமாகவோ உரிய காரணங்களை விளக்கி பதிலெழுதும் உரிமை அல்லது அதை விவாதிக்கும் உரிமை மட்டுமே மோடிக்கு உள்ளது . அதை விடுத்து கையெழுத்து எப்படி போட்டாய் என்று கேட்கும் உரிமை மோடிக்கு இல்லை. கச்சதீவை மீள் என்று கடிதம் எழுதினால், அதை மீட்க முடியாது. அது இரு நாடுகளுக்கு இடையில் ராஜதந்திர உறவை பாதிக்கும். எனவே கொடுத்தது கொடுத்தது தான், திருப்பி எல்லாம் கேட்க முடியாது என்று வேண்டுமானால் பதில் கடிதம் போடலாம்.

எந்த மொழியில் கையொப்பம் இடவேண்டும் என்று கூறும் உரிமை இந்திய பிரதமராக பதவி வகிப்பதால் மோடிக்கு உள்ளது என்று நீங்கள் கூறி இருப்பதால் இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவின் பிரகாரம் அந்த உரிமை பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று நீங்கள் தெரிவித்தால் நீங்களும் அதை தெரிந்து கொள்வோம்.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அதேவேளை வேற்று மொழியில் கையெழுத்தை எல்லோரும் வைக்கும் பகுதியில் இருந்து வேற்று மொழி தேவையற்றது என்பதும் அர்த்தமற்ற வேண்டுகோளே.

திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழமையாக ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதால் அவரது தமிழ் மொழி உரிமை தொடர்பான வேண்டுகோள்கள் எல்லாம் அர்ததமற்றவை என்று கூற வருகின்றீர்களா? large.IMG_9450.png

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினால் அந்த கடிதத்தில் கூறப்பட்ட விடயங்களை வாசித்து பரிசீலித்து அந்த விடயங்களுக்கு சாதகமாகவோ பாதாகமாகவோ உரிய காரணங்களை விளக்கி பதிலெழுதும் உரிமை அல்லது அதை விவாதிக்கும் உரிமை மட்டுமே மோடிக்கு உள்ளது . அதை விடுத்து கையெழுத்து எப்படி போட்டாய் என்று கேட்கும் உரிமை மோடிக்கு இல்லை. கச்சதீவை மீள் என்று கடிதம் எழுதினால், அதை மீட்க முடியாது. அது இரு நாடுகளுக்கு இடையில் ராஜதந்திர உறவை பாதிக்கும். எனவே கொடுத்தது கொடுத்தது தான், திருப்பி எல்லாம் கேட்க முடியாது என்று வேண்டுமானால் பதில் கடிதம் போடலாம்.

எந்த மொழியில் கையொப்பம் இடவேண்டும் என்று கூறும் உரிமை இந்திய பிரதமராக பதவி வகிப்பதால் மோடிக்கு உள்ளது என்று நீங்கள் கூறி இருப்பதால் இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவின் பிரகாரம் அந்த உரிமை பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று நீங்கள் தெரிவித்தால் நீங்களும் அதை தெரிந்து கொள்வோம்.

1,.பதில்கள் எழுதாமல் விடலாம்

2,.வாசிக்கமால். விடலாம்

3,...கிழித்து குப்பைத் தொட்டியில் போடலாம்

4,....இந்தி மொழியில் பதில்கள் போடலாம்

5,...தமிழ் மொழியில் பதில் போடலாமா. ??? இப்படி தான் செய்ய வேண்டும் என்று ஏதாவது சட்டம் உண்டா ???

உங்கள் தாய் மொழியில் கையெழுத்து வையுங்கள் என்று நாட்டின் பிரதமர் சொல்லக்கூடாது என்று ஏதாவது சட்டம் உண்டா ?? இல்லை இதுக்கெல்லாம் சட்டம்கள். இல்லை அதேபோன்று செல்ல வேண்டும் என்றும் சட்டம் இல்லை

மோடி சிறந்த புத்திசாலி தமிழனை கொண்டே நாங்கள் தமிழ் மொழியில் கையெழுத்து வைக்க மாட்டோம். என்று செல்ல வைத்து விட்டார் .....நீங்கள் தாராளமாக தமிழ் தவிர்ந்து மற்றைய மொழிகளில் கையெழுத்து வைக்கலாம் அந்த மொழிகள் மேலும் மேலும் வளர்ச்சி அடையும்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் அண்ணைமார், தமது உத்தியோகபூர்வ கையெழுத்தை என்ன மொழியில் போடுவார்கள்?

தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி மொழி, ஆனால் ஆங்கிலம் இணைப்பு மொழி என்பதே தமிழக தலைவர்கள் நிலைப்பாடு.

ஆகவே தமிழில் அல்லது ஆங்கிலத்தில் போடலாம்.

ஹிந்தியில் போட்டால்தான் பிழை.

இங்கே N M என ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவது எந்த பானிபூரிவாயன்?

https://commons.m.wikimedia.org/wiki/File:Signature_of_Narendra_Modi_(English).svg

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!

மோடி கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை ஒருநாளும் பார்ப்பதில்லை.

கடிதம் திறந்தவுடன் யார் போட்டது?கையெழுத்து தனது மொழியில் போட்டிருக்கிறாரா?

இல்லை என்றால் குப்பைத் தொட்டிக்குள் போடு.

இதனால தான் இதுவரை தமிழ்நாட்டு தலைவர்கள் எழுதும் கடிதங்களுக்கு மோடியிடமிருந்து பதிலேதும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

மோடி கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை ஒருநாளும் பார்ப்பதில்லை.

கடிதம் திறந்தவுடன் யார் போட்டது?கையெழுத்து தனது மொழியில் போட்டிருக்கிறாரா?

இல்லை என்றால் குப்பைத் தொட்டிக்குள் போடு.

இதனால தான் இதுவரை தமிழ்நாட்டு தலைவர்கள் எழுதும் கடிதங்களுக்கு மோடியிடமிருந்து பதிலேதும் இல்லை.

கருணாநிதி தொடக்கம் உதயநிதி வரை...

மினைக்கெட்டு, முத்திரை ஒட்டி எழுதிய கடிதம் எல்லாம்,

குப்பைத் தொட்டிக்குள் போய் விட்டது. ஐயோ... பாவங்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

கருணாநிதி தொடக்கம் உதயநிதி வரை...

மினைக்கெட்டு, முத்திரை ஒட்டி எழுதிய கடிதம் எல்லாம்,

குப்பைத் தொட்டிக்குள் போய் விட்டது. ஐயோ... பாவங்கள். 🤣

ம் எல்லாமே ஒரு கையெழுத்தால் வந்தவினை.

இதை முதலே சொல்லியிருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

1,.பதில்கள் எழுதாமல் விடலாம்

2,.வாசிக்கமால். விடலாம்

3,...கிழித்து குப்பைத் தொட்டியில் போடலாம்

4,....இந்தி மொழியில் பதில்கள் போடலாம்

5,...தமிழ் மொழியில் பதில் போடலாமா. ??? இப்படி தான் செய்ய வேண்டும் என்று ஏதாவது சட்டம் உண்டா ???

உங்கள் தாய் மொழியில் கையெழுத்து வையுங்கள் என்று நாட்டின் பிரதமர் சொல்லக்கூடாது என்று ஏதாவது சட்டம் உண்டா ?? இல்லை இதுக்கெல்லாம் சட்டம்கள். இல்லை அதேபோன்று செல்ல வேண்டும் என்றும் சட்டம் இல்லை

மோடி சிறந்த புத்திசாலி தமிழனை கொண்டே நாங்கள் தமிழ் மொழியில் கையெழுத்து வைக்க மாட்டோம். என்று செல்ல வைத்து விட்டார் .....நீங்கள் தாராளமாக தமிழ் தவிர்ந்து மற்றைய மொழிகளில் கையெழுத்து வைக்கலாம் அந்த மொழிகள் மேலும் மேலும் வளர்ச்சி அடையும்

மற்றயவர்கள் எந்த மொழியில் கையெழுத்து இடவேண்டும் என்று கட்டளையிடும் உரிமை மோடிக்கு இருப்பதாக எழுதிய நீங்களே அவருக்கு அந்த உரிமை இல்லை என்ற புரிதலுக்கு வந்திருப்பது நல்லது. உங்களுக்கு உள்ள புரிதல் கூட மோடிக்கு இல்லை.

நிற்க, குஜராத் மொழியை தாய் மொழியாக கொண்ட மோடி இந்தியில் கையெழுத்து இடுவதை யாரும் மோடியை போல் மோட்டுதனமாக கேள்வி கேட்கப்போவதில்லை. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

ம் எல்லாமே ஒரு கையெழுத்தால் வந்தவினை.

இதை முதலே சொல்லியிருக்கலாமே?

மோடியும்... இவர்கள், தாங்களாகவே திருந்துகின்றார்களா விட்டுப் பிடித்திருப்பார்.

திருந்துகின்றமாதிரி தெரியவில்லை என்றவுடன், இப்ப சொல்லியிருக்கின்றார்.

இனி இவர்கள்... தமிழ் படித்து, கையெழுத்து வைக்கப் பழகவே... பத்து வருசம் எடுக்கும். 😂

அது மட்டும்... மோடி ஜீ, வெயிட்டிங். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கடிதம் போடாமல்…

கள்ளன் கூரையை பிரித்து இறங்குவது போல, இரவோடு இரவாக நிர்மலா சீதாராமனை போய் சந்தித்து காரியம் சாதிக்கும் இயலுமையை வளர்த்து கொள்ள வேண்டும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழமையாக ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதால் அவரது தமிழ் மொழி உரிமை தொடர்பான வேண்டுகோள்கள் எல்லாம் அர்ததமற்றவை என்று கூற வருகின்றீர்களா? large.IMG_9450.png

1- இதுவும் எமது தவறே நான் உட்பட. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது.

2- தமிழகத்தின் தலைவர்கள் அதாவது பொறுப்பில் உள்ளவர்கள்.

3- கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நீங்கள் தமிழ் மக்களின் தலைமையாக ஏற்றிருப்பது புரிகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.