Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

💥ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள் | நீங்கள் புலியா? | Thusanth vlogs

சிங்களவர்கள் இன்னும் இந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nunavilan said:

சிங்களவர்கள் இன்னும் இந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை.

ஈழ தமிழர்கள் இனக்கலவரங்களை உருவாக்கியதாக சரித்திரங்கள் இல்லை. இதை சிங்கள சமுதாயங்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் ஈழத்தமிழர்களின் அத்தியாவசிய நடவடிக்கையாக இருக்க வேண்டும். இதுதான் எம்மால் ஆன அடுத்த கட்ட நடவடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

🤣 சிரிப்புகள், நகைச்சுவைகள் பகுதிக்குரிய வீடியோ🤣.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

🤣 சிரிப்புகள், நகைச்சுவைகள் பகுதிக்குரிய வீடியோ🤣.

பார்வைகள் அதிகரிக்க வேண்டியோ...

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளை தனியே அனுப்பும் போது அவர்கள் மீது உள்ள அதீத பாசத்தின் காரணமாக மிகைப்படுத்தப்பட்ட பயத்தை ஏற்படுத்துவது பொதுவாக எமது நாடுகளில் பெற்றாரின் பொதுவான இயல்பு. இது தமிழருக்கும் பொதுவான ஒன்றே.

சிங்கள இனவாத அரசியல்வாதிகள் தமிழர் மீது அளவுக்கு அதிகமான பயம் ஏற்படும் விதமாக அப்பாவி சிங்கள மக்களை நம்ப வைக்க பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதுவும் ஒரு காரணம்.

பொதுவாகவே இனவெறியர்களின் தந்திரம் இவ்வாறாக அடுத்த இனத்தின் மீது பயத்தை ஏற்படுத்துவதே. சிங்களவரில் சரத்விஜசேகரா, விமல் வீரவம்ச போன்றோரும் தமிழ் நாட்டில் சீமான் போன்ற இனவெறியர்களும் இதே போன்ற பரப்புரையையே மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான பரப்புரைகளே மிகைப்படுத்தப்பட்ட பயத்தை பெற்றோருக்கு ஏற்படுத்துகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, island said:

சிங்களவரில் சரத்விஜசேகரா, விமல் வீரவம்ச போன்றோரும் தமிழ் நாட்டில் சீமான் போன்ற இனவெறியர்களும்

இரத்த பொட்டு வாங்கிய அமிரும் மங்கையர்கரசியும் இன வெறியர்கள் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அனுபவம் உண்மையாக இருக்கலாம், ஆனால் ஜேர்மனியுட்பட வெளிநாடுகளுக்கு வரும் பெரும்பாலான சிங்களவர்களின் அனுபவம்/பயம் இதுவாக இருக்காதெனக் கருதுகிறேன்.

என்னுடைய அனுபவத்தில், அமெரிக்காவில் இருக்கும் சிங்களவர்கள் பலர் தமிழர்களின் நண்பர்களாக இருக்கிறார்கள். ஒரு சிலர் யுத்தம் நடந்த காலத்தில், தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் என்பவற்றை பொலிசிடம் போட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்திருக்கிறார்கள், அதுவும் இப்போது குறைந்து இல்லாமல் போய் விட்டது. மாவீரர் தினம் உட்பட்ட பல நிகழ்வுகளை வெளிப்படையாகவே அனுசரித்து விட்டுப் போகிறோம். இனி ஜேவிபி அரசு ஏதாவது இதை மாற்ற முயற்சிக்குமோ தெரியாது.

இலங்கையில் கூட நிலைமை மாறியிருக்கிறது என அறிகிறேன். 90 களில் வடக்கு, கிழக்கில் இருந்து தெற்கிற்கு, கல்வி, வேலை என்பவற்றிற்காக சென்ற தமிழ் இளையோரை அவர்களது பெற்றோர் சிங்களவர்களைப் பற்றி எச்சரித்து அனுப்பிய நிலை இருந்தது - அதற்கு நியாயமான காரணங்களும் இருந்தன. இப்போது, வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்கள், சிங்கள இராணுவம் தியத்தலாவ வளாகத்தில் நடத்தும் தலைமைத்துவப் பயிற்சி முகாமுக்கு, தாமாக விரும்பிச் சென்று வருகிறார்கள். குழுவாக சிங்களப் பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

இரத்த பொட்டு வாங்கிய அமிரும் மங்கையர்கரசியும் இன வெறியர்கள் இல்லையா?

தமிழர் தலைவர்களாக இனப்பிரச்சனையை சரியாக கையாண்டு அதை வெற்றி கொள்ள முயலாமல் அதை தங்கள அரசியலுக்கு பயன்படுத்தும் விடயத்திற்கு முன்னுரிமை வழங்கியவர் அதற்காக இளைஞர்களை இவ்வாறான இரத்தப்பொட்டுகளின் மூலம் உசுப்பேற்றும் பேச்சுகளை அவரது கட்சியினருடன் சேர்ந்து செய்தது என்ற அடிப்படையில் அவர் தவறு செய்தவராகிறார். அதற்காக அவர் யாரை உசுப்பேற்றினாரோ அவர்களாலே படுகொலை செய்யப்பட்டார்.

ஆனால், அவர் இனவாத பேச்சுக்களை பேசியதாகவோ அதற்கு ஊக்கம் கொடுத்ததாகவோ எந்த பதிவும் இல்லை. எனவே அவர் இனவெறியர் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

🤣 சிரிப்புகள், நகைச்சுவைகள் பகுதிக்குரிய வீடியோ🤣.

தலையங்கத்தை பாத்து பயந்திட்டன் வா....

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, colomban said:

தலையங்கத்தை பாத்து பயந்திட்டன் வா....

🤣 நான் தலையங்கத்தை பார்த்து விட்டு…இந்த பயங்கரமான ஜேர்மன் வாழ் தமிழர்கள் ஒரு ஐந்து பேரை ஊருக்கு அனுப்பி சிங்களவனுக்கு ஒரு காட்டு காட்டலாம் எண்டு நினைச்சேன் வா🤣

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, colomban said:

தலையங்கத்தை பாத்து பயந்திட்டன் வா....

🤣 நான் அறிய, வட அமெரிக்காவில் இது மறு வளமாகத் தான் நடந்திருக்கிறது: சிங்களவர்களைக் கண்டு தமிழர்கள் நடுங்கினர்.

2009 போர்க்காலத்தில், மினசோட்டா மாநிலத் தலைநகரில் ஒரு கவன ஈர்ப்புப் போராட்டம் செய்தார்கள் மினசோட்டாத் தமிழர்கள். போராட்டத்தில் ஈடு பட்டவர்களை "சம்பல் றெஸ்ரோரன்ற்" என்ற பெயரில் இலங்கை உணவகம் நடத்திய ஒரு சிங்களவர் வந்து புகைப் படம் எடுக்க ஆரம்பித்தார். ஏற்பாட்டாளர்கள் காவல் துறையை அழைக்க, "அனுமதியில்லாமல் ஆட்களின் முகங்களைப் படம் பிடிக்க முடியாதென" எச்சரித்து, காவல் துறை சிங்களவரை அகற்றியது. அதன் பிறகு நடந்த சில மே 2009 தொடர்பான கூட்டங்கள், கவன ஈர்ப்புகளில் ஒரு காவல் துறை வாகனமும், அலுவலரும் காவலுக்கு நிற்கும் நிலை இருந்தது.

கிழக்குக் கரையில், மினசோட்டாவை விட பல மடங்கு ஈழத் தமிழர்கள் வசிக்கும் நகரங்களில், 2009 இற்குப் பின்னரும் மாவீரர் தினம் நிகழும் இடத்தை கடைசி நேரம் வரை இரகசியமாக வைத்திருக்கும் அளவுக்கு சிங்களவரைக் கண்டு தமிழர்கள் அஞ்சினர்.

இந்த அச்சங்கள் எவையும் இல்லாமல் செயல்பட்ட ஒரு தரப்பும் இருந்தது. அவர்கள் ஒன்று இலங்கையோடு தொடர்பில்லாத ஈழத்தமிழ் அமெரிக்கர்களாக இருந்தனர். அல்லது, தமிழ் நாட்டுத் தமிழர்களாக இருந்தனர். தமிழ் நாட்டுத் தமிழர்களில் பெரும்பாலானோர் பெரியாரிஸ்டுகளாக இருந்தனர், இன்றும் செயல்படுகின்றனர். யாரோ ஒரு தமிழ் நாட்டு அரசியல் வாதிக்கு முண்டு கொடுக்கிறோம் பேர்வழி என்று பெரியாரை தூசித்துத் திரியும் வரலாறு தெரியாத ஈழவர்களுக்கு, இந்தத் தகவல் சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, island said:

அவர் இனவாத பேச்சுக்களை பேசியதாகவோ அதற்கு ஊக்கம் கொடுத்ததாகவோ எந்த பதிவும் இல்லை. எனவே அவர் இனவெறியர் அல்ல.

தமிழர் சம்பந்தமாக நிறைய விடயங்கள் ஆதாரம் இல்லாமலே அழிந்து போகும்/ மடக்கப்படும் இனம் தமிழினம்.

தமிழர் விடுதலைக்கூட்டணி முதன் முதலில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாத பிரச்சாரங்களையே முன் வைத்தது.அதன் பின்னராகத்தான் வரலாறுகளை பக்க ஆதாரங்களாக மேடைகளில் பேசி ஆதரவு திரட்டினர்கள். குறிப்பாக சிங்கள மொழியை கூட தரக்குறைவாக பேசி ஆதரவு திரட்டினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அப்படி எதுவும் அழிந்து போகவில்லை. இலங்கை தமிழ் சங்க இணையத் தளத்தில் 1977 ஆண்டு த.வி.கூ தேர்தல் விஞ்ஞாபனம் ஆங்கில மொழி பெயர்ப்பில் இன்னும் இருக்கிறது.

https://www.sangam.org/FB_HIST_DOCS/TULFManifesto77.htm

இதில் இனவாதம் இருக்கிறதா என்பதை வாசகர்கள் வாசித்து அறிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

தமிழர் சம்பந்தமாக நிறைய விடயங்கள் ஆதாரம் இல்லாமலே அழிந்து போகும்/ மடக்கப்படும் இனம் தமிழினம்.

தமிழர் விடுதலைக்கூட்டணி முதன் முதலில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாத பிரச்சாரங்களையே முன் வைத்தது.அதன் பின்னராகத்தான் வரலாறுகளை பக்க ஆதாரங்களாக மேடைகளில் பேசி ஆதரவு திரட்டினர்கள். குறிப்பாக சிங்கள மொழியை கூட தரக்குறைவாக பேசி ஆதரவு திரட்டினார்கள்.

நீங்கள் கூறியது போல் ஆகரோஷமான உசுபேற்றும் தீவிர உணர்ச்சி பேச்சுகளை பேசியவர்கள காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரே. ஆனால் பின்னர் வந்த காலத்தில் இவர்கள் அனைவரும் சுயநல வெத்து வேட்டுகளாக இருந்ததையே வரலாறு காட்டுகிறது.

இவர்களின் வன்முறை பேச்சுகள் சாதித்திது என்ன? அழிவுகளை மட்டுமே கொடுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

🤣 நான் தலையங்கத்தை பார்த்து விட்டு…இந்த பயங்கரமான ஜேர்மன் வாழ் தமிழர்கள் ஒரு ஐந்து பேரை ஊருக்கு அனுப்பி சிங்களவனுக்கு ஒரு காட்டு காட்டலாம் எண்டு நினைச்சேன் வா🤣

12 hours ago, Justin said:

🤣 நான் அறிய, வட அமெரிக்காவில் இது மறு வளமாகத் தான் நடந்திருக்கிறது: சிங்களவர்களைக் கண்டு தமிழர்கள் நடுங்கினர்.

2009 போர்க்காலத்தில், மினசோட்டா மாநிலத் தலைநகரில் ஒரு கவன ஈர்ப்புப் போராட்டம் செய்தார்கள் மினசோட்டாத் தமிழர்கள். போராட்டத்தில் ஈடு பட்டவர்களை "சம்பல் றெஸ்ரோரன்ற்" என்ற பெயரில் இலங்கை உணவகம் நடத்திய ஒரு சிங்களவர் வந்து புகைப் படம் எடுக்க ஆரம்பித்தார். ஏற்பாட்டாளர்கள் காவல் துறையை அழைக்க, "அனுமதியில்லாமல் ஆட்களின் முகங்களைப் படம் பிடிக்க முடியாதென" எச்சரித்து, காவல் துறை சிங்களவரை அகற்றியது. அதன் பிறகு நடந்த சில மே 2009 தொடர்பான கூட்டங்கள், கவன ஈர்ப்புகளில் ஒரு காவல் துறை வாகனமும், அலுவலரும் காவலுக்கு நிற்கும் நிலை இருந்தது.

கிழக்குக் கரையில், மினசோட்டாவை விட பல மடங்கு ஈழத் தமிழர்கள் வசிக்கும் நகரங்களில், 2009 இற்குப் பின்னரும் மாவீரர் தினம் நிகழும் இடத்தை கடைசி நேரம் வரை இரகசியமாக வைத்திருக்கும் அளவுக்கு சிங்களவரைக் கண்டு தமிழர்கள் அஞ்சினர்.

இந்த அச்சங்கள் எவையும் இல்லாமல் செயல்பட்ட ஒரு தரப்பும் இருந்தது. அவர்கள் ஒன்று இலங்கையோடு தொடர்பில்லாத ஈழத்தமிழ் அமெரிக்கர்களாக இருந்தனர். அல்லது, தமிழ் நாட்டுத் தமிழர்களாக இருந்தனர். தமிழ் நாட்டுத் தமிழர்களில் பெரும்பாலானோர் பெரியாரிஸ்டுகளாக இருந்தனர், இன்றும் செயல்படுகின்றனர். யாரோ ஒரு தமிழ் நாட்டு அரசியல் வாதிக்கு முண்டு கொடுக்கிறோம் பேர்வழி என்று பெரியாரை தூசித்துத் திரியும் வரலாறு தெரியாத ஈழவர்களுக்கு, இந்தத் தகவல் சமர்ப்பணம்.

ஐசே நேத்து பூரா சக்தி டீ வீ பர்த்துகொண்டிருந்தன் வா. சிங்களவன் / தமிழன் ஆண் பெண் எல்லோரும் ஒன்றாக அப்படி கிளுப்பு..கிளுப்புவா... அஜல்... குஜால் வா... ஐசே தலவாணி அடி போட்டியில.... தமிழன் தலவாணி வச்சி தூக்கி... தூக்கி... அடிக்கிறாவா.. கீழ இருந்து சிங்கள குட்டிகள் கத்துராள்வள் வா.. சுந்தரலிங்கம் ஒந்தட காஹன்ட... உஸ்ஸ உஸ்ஸ‌ காஹன்டா.. வெடுனத் அபி அல்லனவா.....🤣

ஐசே கயிரு இழுக்கிறான்கள்வா...தமிழ் / சிங்கள..ஆம்பள பொம்பள எல்லாரும் ஒரசி... ஒரசிவா... ........ rubbing shoulder இல்லவா இது rubbing with boobs. அம்மட சிரி ...அப்பிடி ஜொலி வா.. சொல்லி வேல இல்லவா... குளிர்ல வெரச்சி வெரச்சி இருக்கமா இங்க வாங்கா கோசன் தொர...😍

ஒரு தமிழன் கேற்கிறான் வா.. ஒர் அ ழகான சிங்கள குட்டிகிட்ட? "ஒயா காவா ஒந்த கொகிஸ் அச்சுவாக் தியனவா நேதா"? அவள் சொல்லினிறாள் "மகே கொகிஸ் அச்சு சம‌னல வகே என்று".....சிரிப்பு வா..😝

மார சூன் வா... இங்க கொக்கீஸ் அச்சு தேடுகின்றேம் வா நாங்கள்... இவன் இப்படி வீடியோ போடுரான்.....

சாதரண ஒரு இந்திய வம்சாவளி தமிழரை, இந்த அரசாங்கம் யாழில் அமைச்சராக நியமித்ததையே ஏற்றுக்கொள்ளத / சக தமிழ் பேசும் மக்களை மதிக்காத இந்த யாழ் மையவாதம் எப்படி சிங்களவன்களை இனதுவேசம் பிடித்தவன் என கூறலாம்?

"The pot calling the kettle black"

வீடியோவில் இவர் அப்பாவிகள் கொல்லப்படவில்லை என்கிறார்? அப்போ மத்திய வங்கி குண்டு வெடிப்பில் எத்தனை அப்பாவிகள் இறந்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் வன்மையை கட்டவுள்த்து விட்டார்கள்.

தமிழர்கள் வன்முறையை பேசினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

7 hours ago, colomban said:

சாதரண ஒரு இந்திய வம்சாவளி தமிழரை, இந்த அரசாங்கம் யாழில் அமைச்சராக நியமித்ததையே ஏற்றுக்கொள்ளத / சக தமிழ் பேசும் மக்களை மதிக்காத இந்த யாழ் மையவாதம் எப்படி சிங்களவன்களை இனதுவேசம் பிடித்தவன் என கூறலாம்?

"The pot calling the kettle black"

உறவே, தாயகத்தில் என்ன நிலையோ எனக்கு முழுவதும் தெரியாது.

ஆனால், புலம் வாழ் தீவிர தேசியர்களிடையே எல்லாம் இன்னும் தாயகத்தில் 30 வருடங்கள் முன்பு போலவே இருக்கிறது: காசுக்கும் (அல்லது அது இருப்பது போன்ற பகட்டிற்கும்) முதல் மரியாதை, ஆண்-பெண் சமத்துவமின்மை, சாதி, சில சூழ்நிலைகளில் சிறு பான்மை மதங்கள் மீதான சகிப்புத் தன்மையின்மை, வந்த இடத்தின் முற்போக்கான பழக்கங்களை வெறுத்தல் (இதனால் சிலர் homophobic, transphobic ஆகவும் மாறி ட்ரம்ப் போன்றவர்களை ஆதரித்தல்!)- இப்படியானவர்கள் புலத்தில் தீவிர தமிழ் தேசியம் பேசுவதே ஒரு status symbol என்று நான் ஐயம் கொள்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.