Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

நான் உங்களுடைய PA அல்ல😂! இருக்கிறது, தேடுங்கள். அல்லது, தமிழ்சிறியிடம் கேளுங்கள்😎!

இதே பதில் தான் வருமென்று தெரியும் சும்மா கேட்டுப்பாத்தன்😂. சுமந்திரன் சர்வதேச விசாரணை கோரினார் என்று கூறியதுநீங்கள் தான் அப்ப ஆதாரம்நீங்கள் தான் தர வேண்டும்

Edited by வாதவூரான்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாதவூரான் said:

இதே பதில் தான் வருமென்று தெரியும் சும்மா கேட்டுப்பாத்தன்😂. சுமந்திரன் சர்வதேச விசாரணை கோரினார் என்று கூறியதுநீங்கள் தான் அப்ப ஆதாரம்நீங்கள் தான் தர வேண்டும்

இப்படிப் பல பேரைப் பார்த்தாயிற்று இங்க, but nice try😎! தகவல்களை உங்கள் உழைப்பால் பெறுங்கள், சோம்பேறித்தனத்தை நான் ஊக்குவிப்பதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, putthan said:

சிங்கள தேசியவாதிகள் 70 வருடங்களாக இனவாதம் பேசி,இனவழிப்பு செய்து ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தற்பொழுது தமிழர் என்ற இனமில்லை என சொல்லும் ஜெ.வி...பி...யை விட தமிழ் தேசியம் பேசுவது சிறப்பு ...

தமிழ் தேசியத்தை பேசுகிறோம் பேசுகிறோம் என்று சிறப்பாக பேசிக்கொண்டு தமிழர் இருப்புக்கு கொள்ளி வைத்ததே உண்மையில் நடந்த விடயம். சிறுபான்மை இனங்கள் தம்மை காத்துகொள்ளவும் பேரினவத ஒடுக்கு முறைகளில் இருந்து தப்பி பிழைக்க இயல்பான மக்கள் தொகை அதிகரிப்பு மிக அவசியம். ஆனால் இலங்கையின் மக்கள் தொகையில் தமிழரின் வீதம் கடந்த 40 ஆண்டுகளில் மிக குறைந்தே வருகிறது. உதாரணத்துக்கு யாழ் மாவட்டத்தையும் வட மாகாணத்தையும் எடுத்துக் கொண்டால் 1963 ல் இருந்து 1981 வரையான காலப்பகுதியில் யாழ் மாவட்ட சனத்தொகை ஏறத்தாழ 35 வீதத்தால் அதிகரித்தது. 2025 ல் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. வடமாகாணம் முழுவதையும் பார்ததால் 1963 - 1981 வரை கிட்டத்தட்ட 49 சத வீத வளர்சசி. 2025 ல் 45 வருடங்களின் பின்னர் அதே எண்ணிக்கை நகரமல் அப்படியே உள்ளது. மக்கள் தொகை இவ்வாறு வீழ்சசியடைந்தால் இன பரம்பல் குறைவடையும். யாழ் மாவட்ட மக்களை வன்னியில் குடியேற்றுவதற்கு 1970 களில் இலங்கை அரசு செய்த ஊக்குவிப்பை கூட( படித்த வாலிபர் திட்டம் போன்ற) தமிழர் தேசியம் பேசியவர்கள் செய்யவில்லை. குறைந்தது 1977 கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கு வந்த மலையக மக்களை கூட பாரிய இடவசதி இருந்த வன்னி பகுதியுல் குடியேற்ற தமிழ் தேசியவாதிகள் எவரும் முயற்சி எடுக்கவில்லை. அவர்களில் மிக பெரும்பானமையானோர் திரும்பி மலையகம் சென்றார்கள். உண்மையில் தமிழ் தேசியத்தை விரும்பி இருந்தால் அதை செய்திருப்பார்கள்.

தமிழ் தேசியம் பேசிய தலைமைகள் எல்லோருமே தமது தவறான கொள்கைகள் மூலமும் வரட்டு பிடிவாதத்தின் மூலமாகவும் கடந்த பல தசாம்பங்களாக தமிழ் தேசியத்தை தொடர்ந்து சிதைத்தே வந்துள்ளனர் என்பதைக் கடந்த காலங்களை நடு நிலையுடன் பார்ததால் தெளிவாக தெரியும். இதில் அரசியல்வாதிகள் ஆயுத போராளிகள் என்று எவரும் விதி விலக்கு இல்லை. அனைத்து தலைமைகளும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

மக்களின் அனைத்து பிரிவினரையும் வெவ்வேறு அரசியல் திலைப்பாடு இருந்தவர்களும் இணைத்து மக்களின் வாழ்வியலூடாக ப நிலை நாட்டியிருக்க வேண்டிய தமிழ் தேசியத்தை வெறும் அரசியல் சுலோகமாக மாற்றி இன்று சாதாரண கருத்து வேறுபாடுகள் கூட துரோகி என ஆளையாள் திட்டி தீர்ககும் நிலை. துரோகி என்ற சொல்லுக்கான அர்த்தமே கேள்விக்கிடமாக்குள்ளது. அந்தளவுக்கு தமிழ் மக்கள் பலவேறு பிரிவுகளாக பலிந்து கிடக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2025 at 11:39, வாதவூரான் said:

தேர்தல் வருதல்லோ

இந்த செய்தி 5 வருடம் பழையது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாதவூரான் said:

இதே பதில் தான் வருமென்று தெரியும் சும்மா கேட்டுப்பாத்தன்😂. சுமந்திரன் சர்வதேச விசாரணை கோரினார் என்று கூறியதுநீங்கள் தான் அப்ப ஆதாரம்நீங்கள் தான் தர வேண்டும்

1 hour ago, vaasi said:

இந்த செய்தி 5 வருடம் பழையது.

ம்..வாதவூரான்😂?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

அவர்களில் மிக பெரும்பானமையானோர் திரும்பி மலையகம் சென்றார்கள். உண்மையில் தமிழ் தேசியத்தை விரும்பி இருந்தால் அதை செய்திருப்பார்கள்.

On 18/4/2025 at 00:58, island said:

தமிழ் தேசியத்தை பேசுகிறோம் பேசுகிறோம் என்று சிறப்பாக பேசிக்கொண்டு தமிழர் இருப்புக்கு கொள்ளி வைத்ததே உண்மையில் நடந்த விடயம். சிறுபான்மை இனங்கள் தம்மை காத்துகொள்ளவும் பேரினவத ஒடுக்கு முறைகளில் இருந்து தப்பி பிழைக்க இயல்பான மக்கள் தொகை அதிகரிப்பு மிக அவசியம். ஆனால் இலங்கையின் மக்கள் தொகையில் தமிழரின் வீதம் கடந்த 40 ஆண்டுகளில் மிக குறைந்தே வருகிறது. உதாரணத்துக்கு யாழ் மாவட்டத்தையும் வட மாகாணத்தையும் எடுத்துக் கொண்டால் 1963 ல் இருந்து 1981 வரையான காலப்பகுதியில் யாழ் மாவட்ட சனத்தொகை ஏறத்தாழ 35 வீதத்தால் அதிகரித்தது. 2025 ல் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. வடமாகாணம் முழுவதையும் பார்ததால் 1963 - 1981 வரை கிட்டத்தட்ட 49 சத வீத வளர்சசி. 2025 ல் 45 வருடங்களின் பின்னர் அதே எண்ணிக்கை நகரமல் அப்படியே உள்ளது. மக்கள் தொகை இவ்வாறு வீழ்சசியடைந்தால் இன பரம்பல் குறைவடையும். யாழ் மாவட்ட மக்களை வன்னியில் குடியேற்றுவதற்கு 1970 களில் இலங்கை அரசு செய்த ஊக்குவிப்பை கூட( படித்த வாலிபர் திட்டம் போன்ற) தமிழர் தேசியம் பேசியவர்கள் செய்யவில்லை. குறைந்தது 1977 கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கு வந்த மலையக மக்களை கூட பாரிய இடவசதி இருந்த வன்னி பகுதியுல் குடியேற்ற தமிழ் தேசியவாதிகள் எவரும் முயற்சி எடுக்கவில்லை. அவர்களில் மிக பெரும்பானமையானோர் திரும்பி மலையகம் சென்றார்கள். உண்மையில் தமிழ் தேசியத்தை விரும்பி இருந்தால் அதை செய்திருப்பார்கள்.

தமிழ் தேசியம் பேசிய தலைமைகள் எல்லோருமே தமது தவறான கொள்கைகள் மூலமும் வரட்டு பிடிவாதத்தின் மூலமாகவும் கடந்த பல தசாம்பங்களாக தமிழ் தேசியத்தை தொடர்ந்து சிதைத்தே வந்துள்ளனர் என்பதைக் கடந்த காலங்களை நடு நிலையுடன் பார்ததால் தெளிவாக தெரியும். இதில் அரசியல்வாதிகள் ஆயுத போராளிகள் என்று எவரும் விதி விலக்கு இல்லை. அனைத்து தலைமைகளும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

மக்களின் அனைத்து பிரிவினரையும் வெவ்வேறு அரசியல் திலைப்பாடு இருந்தவர்களும் இணைத்து மக்களின் வாழ்வியலூடாக ப நிலை நாட்டியிருக்க வேண்டிய தமிழ் தேசியத்தை வெறும் அரசியல் சுலோகமாக மாற்றி இன்று சாதாரண கருத்து வேறுபாடுகள் கூட துரோகி என ஆளையாள் திட்டி தீர்ககும் நிலை. துரோகி என்ற சொல்லுக்கான அர்த்தமே கேள்விக்கிடமாக்குள்ளது. அந்தளவுக்கு தமிழ் மக்கள் பலவேறு பிரிவுகளாக பலிந்து கிடக்கிறார்கள்.

30 வருடங்களுக்கு மேலாக அரசுடன் சேர்ந்து இயங்கிய வடமாகண அமைச்சருக்கே நல்ல திட்டங்களை பெரிதாக அமுல் படுத்த முடியவில்லை ....

சீனக்காரனின் கொள்கை பிடிப்பிற்காக ஜெ.வி.பி தொடர்ந்து போராடும் பொழுது ஏன் நாங்கள் தமிழ் தேசியம் பேசக் கூடாது ..

அரசுகள் திட்டமிட்டபடி இன அழிப்பு செய்யும் பொழுது மக்கள் புலம்பெயர்வது தடுக்க முடியாத ஒன்று....

தமிழ் தேசியம் பேசினாலும் அழிக்கப்படுவார்கள் பேசாமல் விட்டாலும் அழிக்கப்படுவார்கள்...

இலங்கை தமிழ்மக்களின் தனித்துவமும் ,தமிழ்நாட்டின் அருகில் இருப்பதாலும், சிங்கள ஆட்சியாளர்கள் இதை ஒர் அபாயகரமான ஆபத்தான பூலோக /அரசியல் நிலவரமாக நினைக்கின்றனர் ....

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2025 at 14:36, ரஞ்சித் said:

.

எமது இனத்தின் இருப்பைப் பற்றி நாமே பேசாதுவிட்டால் வேறு எவர்தான் பேசுவார்கள்?

உண்மை ஆனால் பேசினால் அது சிங்கள தேசியவாதிகளின் கோபத்திற்கு ஆளாகி எமது இருப்புக்கே ஆபத்தாகிவிடும் என்ற பயம்காட்டாலும் உண்டு...

இன்று ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர் பகிரங்கமாக சொல்லுகின்றார் குறிப்பாக வடமாகணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு அபிவிருத்திக்கு பணம் வேண்டுமென்றால் தேசிய மக்கள் சக்திக்கு வாக்கு போடுங்கள் என்று

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

30 வருடங்களுக்கு மேலாக அரசுடன் சேர்ந்து இயங்கிய வடமாகண அமைச்சருக்கே நல்ல திட்டங்களை பெரிதாக அமுல் படுத்த முடியவில்லை ....

சீனக்காரனின் கொள்கை பிடிப்பிற்காக ஜெ.வி.பி தொடர்ந்து போராடும் பொழுது ஏன் நாங்கள் தமிழ் தேசியம் பேசக் கூடாது ..

அரசுகள் திட்டமிட்டபடி இன அழிப்பு செய்யும் பொழுது மக்கள் புலம்பெயர்வது தடுக்க முடியாத ஒன்று....

தமிழ் தேசியம் பேசினாலும் அழிக்கப்படுவார்கள் பேசாமல் விட்டாலும் அழிக்கப்படுவார்கள்...

இலங்கை தமிழ்மக்களின் தனித்துவமும் ,தமிழ்நாட்டின் அருகில் இருப்பதாலும், சிங்கள ஆட்சியாளர்கள் இதை ஒர் அபாயகரமான ஆபத்தான பூலோக /அரசியல் நிலவரமாக நினைக்கின்றனர் ....

இவ்வாறு பூச்சாண்டி காட்டி காட்டியே தமிழ் தேசியவாதிகள் தமது தவறுகளை மறைத்துக் கொண்டு தமிழரின் இருப்பை இலங்கை தீவில் அழிப்பதற்க்காக இனவாதிகளின் வேலையை சுலபமாக்கி வருகின்றனர்.

அதி தீவிர தமிழ் தேசியம் பேசும் கஜே கும்பல் 2009 ல் இருந்து தமது ஒரு நாடு இரு தேசம் கொள்கையை அமுப்படுத்த எடுத்த வினை திறனான நடவடிக்கைகள் முன்னேற்றங்கள் பூச்சியமே! ஆளையாள் துரோகி என்று திட்டி தமது தவறுகளை மறைப்பது தான் அன்றில் இருந்து இன்று வரை தமிழ் தேசியம் பேசிய அதை வைத்து வாழ்ந்துவரும் அனைவரும் தவறாமல் செய்த ஒரு விடயம். தமிழரின் இருப்பு பலவீனப்பட்டாலும் தமது இருப்பு பாதிக்கப்படாமல் இருந்தால் சரி என்பதே அவர்களது கொள்கை.

1963 ல் இருந்து 1981 வரை 20 ஆண்டுகளில் பாரியளவில் மற்றைய மாகாணங்களையொத்த அளவில் அதிகரித்த தமிழரின் சனத்தொகை 1981 இற்கு பின்னர் ஏன் பாரிய வீழ்சசியை கொடுத்தது தமிழரின் அரசியலை பலவீனமாக்கியது என்று கேட்டால் இன அழிப்பால் மக்கள் வெளியேற்றதால் வந்தது என்று சப்பை கட்டு வேறு. அப்படியானால் 1963 ல் இருந்து 1981 வரை ஏன் சனத்தொகை அதிகரித்தது?

சோறா சுதந்திரமா என்று வெற்று சுலோகத்தை வைத்து இரண்டையும் பலவீனப்படுத்தியதுதான் தமிழ் தேசியம் பேசியோரின் சாதனை.

தமிழ் மக்களை அறிவு ரீதியில் பலப்படுத்திய யாழ் பலகலைகழகம் என்றாலும் சரி , யாழ் நூலக கட்ட நிர்மாணம் என்றாலும் சரி தமிழ் தேசிய பேசாது புத்திசாலித்தனமாக செயற்பட்டவர்களாலே உருவானதொழிய வெற்று கோஷம் போட்ட தமிழ் தேசியம் பேசியவர்களால் வந்ததல்ல. 1950 களில் யாழ் நூலக கட்ட உருவாக்ககத்தில் பங்களிக்காத வெற்று சுலோக்காரர்கள் அது இனவாதிகளால் தீ வைக்கப்பட்டவுடன் அதை தமது இனவாத அரசியலுக்கு திறமையாக பயன்படுத்தினர்.

இவ்வாறாக தாம் பேசும் தமிழ் தேசியம் தொடர்ந்து தமது அரசியல் நடவடிக்கைகளால் பலவீனப்பட்டு வருவதை மறைக்க இன்றும் தமது வழமையான பாணி உசுப்பேற்றும் சென்றிமென்ற பரப்புரைகளை மட்டுமே தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் / நபர்கள் செய்து வருகின்றனர்.

தமிழ் மக்களை பலப்படுத்தும் விதமாக தமது தவறான முன்னைய தந்திரோங்களை மாற்றுவதோ மக்களுக்காக செயற்படுவதை விட இந்த வெற்று கோஷ அரசியல் தமக்கும் தமது குடும்பத்துக்கும் நன்மை பயக்கும் என று தாயக/ புலம் பெயர் தீவிர தமிழ் தேசியம் பேசும் தரப்புகள் நினைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மக்கள் சக்தியின் போலிமுகம் தையிட்டி திஸ்ஸ விகாரையில் அம்பலம்!

[Saturday 2025-04-19 06:00]

தொல்பொருள் சான்றுகள் எவையும் கண்டறியப்படாத யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரையை நிர்மாணிப்பதற்கு நாம் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பை வெளிப்படுத்திவந்தோம். அதற்கு முரணாக அவ்விகாரை சட்டவிரோதமான முறையிலேயே நிர்மாணிக்கப்பட்டது என்ற உண்மை சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் நாம் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நீதிக்காகப் போராடுவதை இனவாதம் என ஜனாதிபதி  கூறுவாராயின், அவரது அரசாங்கமும் கடந்தகால இனவாத அரசாங்கங்களைப் போன்றுதான் செயற்படப்போகிறது என்பதே அர்த்தம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 'திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இலகுவானதாகும். இருப்பினும் இந்தப் பிரச்சினையை மையப்படுத்தியதாக நிலவும் வடக்கு மற்றும் தெற்கு அரசியல் அகலவேண்டும்.

அரசியல்வாதிகள் தான் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வுகாண இடமளிப்பதில்லை. அவர்களுக்கு இனவாதம் தேவை. எங்கேனும் தொல்பொருள் சின்னங்கள் கிடைக்கப்பெற்றால் அவற்றை தொல்பொருள் மரபுரிமை அடிப்படையில் நோக்கவேண்டுமே தவிர, அது இந்துக்களுக்கு உரியதா அல்லது பௌத்தர்களுக்கு உரியதா என இன, மத அடிப்படையில் நோக்கக்கூடாது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தற்போதைய அரசாங்கம் இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த தமிழர் விரோத இனவாத அரசாங்கங்களைப் போன்றதா? அல்லது உண்மையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பப்புள்ளியா? என்ற விடயம் இதனூடாக வெளிப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.

'யாழ் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தொல்பொருள் சார்ந்த எந்தவொரு சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. மாறாக அது தனியார் காணியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரை என்பதை சகலரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக அவ்விகாரையை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு நாட்களுக்குள் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் நாம் இவ்விடயம் தொடர்பில் எடுத்துரைத்ததுடன், இந்த சட்டவிரோத விகாரை நிர்மாணம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலாளர் உள்ளடங்கலாக சகல தரப்பினராலும் குறித்த விகாரை நிர்மாணம் சட்டவிரோதமானது என ஏற்றுக்கொள்ளப்பட்டே அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே அந்த விகாரையை நிர்மாணிக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு, நிர்மாணப்பணிகள் முடிவடைந்ததன் பின்னர் நாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறப்படும் சகல கருத்துக்களும் அப்பட்டமான பொய்கள் மாத்திரமே' எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

மேலும் உண்மைப் பின்னணி இவ்வாறிருக்கையில் தாம் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நீதிக்காகப் போராடுவதையும், அவர்களுக்கு ஆதரவாக நிற்பதையும் இனவாதம் என ஜனாதிபதி கூறுவாராயின், அவரது அரசாங்கமும் கடந்தகால இனவாத அரசாங்கங்களைப் போன்றுதான் செயற்படப்போகிறது என்பதே அர்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

'ஏனெனில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான் தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்ததாகக் கூறியது. அவ்வாறிருக்கையில் இவ்விவகாரத்தில் சுமுகமான தீர்மானமொன்றை எடுக்காமல், ஒவ்வொரு காரணத்தைக் கூறிக்கொண்டிருப்பது ஏன்? தேசிய மக்கள் சக்தி முழுவதுமாக மக்கள் விடுதலை முன்னணியின் கைகளுக்குள்ளேயே இருக்கிறது.

மக்கள் விடுதலை முன்னணி என்பது நீண்டகாலமாக தமிழர் விரோத கொள்கையுடன் இனவாத அடிப்படையில் செயற்பட்டுவந்த அமைப்பாகும். எனவே தேசிய மக்கள் சக்தியின் போலி முகம் இந்த தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் அம்பலமாகியிருக்கிறது' எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

https://seithy.com/breifNews.php?newsID=332204&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

1963 ல் இருந்து 1981 வரை 20 ஆண்டுகளில் பாரியளவில் மற்றைய மாகாணங்களையொத்த அளவில் அதிகரித்த தமிழரின் சனத்தொகை 1981 இற்கு பின்னர் ஏன் பாரிய வீழ்சசியை கொடுத்தது தமிழரின் அரசியலை பலவீனமாக்கியது என்று கேட்டால் இன அழிப்பால் மக்கள் வெளியேற்றதால் வந்தது என்று சப்பை கட்டு வேறு. அப்படியானால் 1963 ல் இருந்து 1981 வரை ஏன் சனத்தொகை அதிகரித்தது?

போராட்டம் நடைபெறும் பொழுது மக்கள் இடம் பெயர்வது தவிர்க்க முடியாத ஒன்று...

திட்டமிட்ட குடியேற்றம் ஊடாக இனப்பரம்பலை இன்றும் செய்து கொண்டே இருக்கின்ற்னர் ...1944 இல் பண்டரநாயக்கா தமிழ்மொழிக்கு சமந்தஸ்து என கூறினார் ஆனால் அவரே 1958 இல் தனி சிங்கள சட்டத்தை அறிமுகப்படுத்தினார் .சொன்ன காரணம் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்களுக்கு தமிழ் மொழியினுடாக அறிவு வளர்ந்துவிடும் ஆகவே சிங்கள மொழிக்கு அதிக அங்கிகாரம் கொடுக்க வேணும் என்று...

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

50 களில் யாழ் நூலக கட்ட உருவாக்ககத்தில் பங்களிக்காத வெற்று சுலோக்காரர்கள் அது இனவாதிகளால் தீ வைக்கப்பட்டவுடன் அதை தமது இனவாத அரசியலுக்கு திறமையாக பயன்படுத்தினர்.

இந்த நூலக எரிப்பை வைத்து தானே சிங்களதேசியவாதிகளான ஜெ.வி.பி யினர் வாக்கு கேட்கின்றனர் 2025 ...ஜெ.வி.பி பதவிக்கு வந்த பின்பு அமைச்சர் சந்திரா எத்தனை தடவைகள் பாராளுமன்றில் நூலக் எரிப்பை உச்சரித்து அரசியல் செய்துள்ளார்....

"தமிழ் தேசியம்" பேசுவது ஒர் பயங்கர வாத செயல் அல்ல ..தமிழ் தேசியம் ஒர் இனத்தின் அடையாளத்தை நிறுத்த பேசப்படும் அரசியல்... ...

இந்த நூலக எரிப்பை வைத்து தானே சிங்களதேசியவாதிகளான ஜெ.வி.பி யினர் வாக்கு கேட்கின்றனர் ...ஜெ.வி.பி பதவிக்கு வந்த பின்பு அமைச்சர் சந்திரா எத்தனை தடவைகள் பாராளுமன்றில் நூலக் எரிப்பை உச்சரித்து அரசியல் செய்துள்ளார்....

தமிழ் பிரதேசத்தில் நடைபெற்ற இனவழிப்பு மற்றும் மனித புதைகுழிகளை பேச தயங்கும் ஜெ.வி.பி யினர் நூலக எரிப்பை வைத்து அரசியல் செய்ய தயங்குவதில்லை...

மனிதனை புதைகுழியில் போடுவதா அல்லது புத்தகத்தை புதைகுழியில் போட்டு எரிப்பதா தண்டனைக்கு

றிய குற்றம் என கேட்டா புத்தகத்தை எரிப்பதைஎன ஜெ.வி.பி யினர் சொல்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அப்படியானால் 1963 ல் இருந்து 1981 வரை ஏன் சனத்தொகை அதிகரித்தது?

அப்போ போர் நடக்கவில்லை. அதற்கு பின் ஏற்பட்ட போரால் மக்கள் டம் பெயர்ந்தனர். கொல்லப்பட்டனர். ஆகவே சனத்தொகை குறைந்தது. போர்க்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nunavilan said:

அப்போ போர் நடக்கவில்லை. அதற்கு பின் ஏற்பட்ட போரால் மக்கள் டம் பெயர்ந்தனர். கொல்லப்பட்டனர். ஆகவே சனத்தொகை குறைந்தது. போர்க்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணம்.

1958,77 இனக்கலவரங்களினால் பலர் வடக்கு மாகாணத்துக்கு வந்து குடியேறினர்,அத்துடன் பல மலையக பகுதிகளில் சிறு சிறு இனக்கலவரங்களை ஏறபடுத்தினார்கள் இதனாலும் மலையக தமிழர்கள் வன்னி நிலப்பரப்பில் குடியேறினார்கள் ....இதனால் அந்த கால கட்டத்தில் சனத்தொகை அதிகரித்திருந்தமை ஒர் காரணம்...

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2025 at 18:34, nunavilan said:

சிறுபான்மை மக்களுக்கான நீதியை பெறவே முடியவில்லை: சர்வதேச விசாரணை வேண்டும் - சுமந்திரன்

Published By: J.G.STEPHAN

10 DEC, 2020 | 04:53 PM

image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகாலமாக இழுத்தடிப்புகளே காணப்பட்டு வருகின்றது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் இருந்தே வெளியாகிவிட்டது. அதனால் தான் இந்த நாட்டில் இடம்பெற்ற மோசமான குற்றங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் குற்றங்கள் பல நடந்துள்ள காரணத்தினால் சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கொண்ட  சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/140568/sfkghjghj.jpg

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கங்கள் உருவாகும், வீழும் ஆனால் நீதிமன்ற சுயாதீனம் பலமானதாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் நீதிமன்ற சுயாதீனம் உறுதியானதாக இல்லை என்பது சபையில் பேசியவர்களின் கருத்தில் தெரிகின்றது. இது ஆரோக்கியமான ஒன்றல்ல. அதேபோல் மனித உரிமை வழக்குகள் மாகாண மேல் நீதிமன்றங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். எனினும் இந்த நாட்டின் நீதிமன்ற சுயாதீனம் குறித்த முரண்பாடுகள் எமது நாட்டின் மீதான தவறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. குறிப்பாக சிறும்பான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. தசாப்த காலமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமைகள் உருவாகியுள்ளது. அரசியல் தலையீடுகள் நீதிமன்றங்கள் மீது பிரயோகிக்கப்படுவதன் காரணமாகவே இந்த நிலைமைகள் உருவாகின்றது என கருதுகிறேன். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்தும் வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்பட்டும் வருகின்றது. இது குடியுரிமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து இன்று வரையில் நீட்டிக்கப்படுகின்றது.

அண்மைக்கால நடவடிக்கைகளை கருத்தில் கொண்டாலும் கூட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் எழுகின்ற நேரங்களில் எல்லாம் நீதி அமைச்சர் டுவிட்டர் மூலமாக கருத்துக்களை கூறுவதை மட்டுமே செய்து வருகின்றார். அவரால் அதனை மாத்திரமே செய்ய முடியும். முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகள் குறித்த பிரச்சினை எழுந்த நேரமும் அதனையே அவர் செய்தார். பெரும்பான்மையின் நிலைப்பாட்டுக்கு அமைய நியாயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அதேபோல் வேறு சில காரணிகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. உதாரணமாக 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் இன்னமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை. அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருப்பவர்கள் அரச பாதுகாப்பிலேயே உயிரிழக்கின்றனர் என்றால் அது பாரிய பிரச்சினையாகும். அண்மையில் மஹர சிறையிலும் கைதிகள் கொல்லப்பட்டனர். 2000 ஆம் ஆண்டில் பிந்துனுவெவ சிறையில் 27 பேர் கொல்லப்பட்டனர் . 2012 வவுனியா சிறையில் நிமலரூபன், டில்ருக்ஷன் கொல்லப்பட்டனர். இவர்கள் அடித்து கொல்லப்பட்டனர். கை கால்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதற்கான சாட்சியங்கள் உள்ளது.

இவ்வாறு பட்டியலை நீட்டித்துக்கொண்டே செல்ல முடியும். அரசாங்கம் ஜனநாயகத்தை உயரியதாக கருதுவதாக கூறுகின்றது. சிறந்த நீதிமன்ற கட்டமைப்பு உள்ளதாக கூறுகின்றது. அவ்வறு இருந்தும் எவ்வாறு சிறைக்குள் கொல்லப்படும் நபர்கள் குறித்த உண்மைகளை கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்காது இருக்க முடியும். நீதிமன்ற சுயாதீனமே இல்லாத ஒரு நாட்டிற்கு எதற்கு நீதி அமைச்சர் என்ற கேள்வியே எழுகின்றது. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை என்பது மிக மோசமான நீதி கட்டமைப்பாகும். 

திருகோணமலை ஐந்து மாணவர் கொலை விவகாரத்தில் நீதி எங்கே? கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் விடயத்தில் என்னவானது? சிவநேசன் விடயத்தில் என்னவானது? ரவிராஜ் விடயத்தில் நீதி எங்கே? பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டனர். அவர்கள் குறித்த விசாரணைகள் என்னவானது? லசந்த விக்கிரமதுங்க, கீத் நோயர், பிரகீத் எக்னளிகொட, 34 தமிழ் ஊடகவியலாளர்கள் காணமால் போனமை, கொல்லப்பட்டமை குறித்தெல்லாம் ஏன் நீதி நிலைநாட்டப்படவில்லை. ஒரு சிலரது கொலைகளில் பாதுகாப்பு படையினர் தொடர்புபட்டுள்ளனர். இந்த விடயங்களில் குறைந்த பட்சம் விசாரணைக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஜனநாயக, சட்ட வல்லமை கொண்ட நாடென்றால் ஏன் இவ்வாறு நடக்கின்றது. எனவே நீதிமன்றம் மீது நம்பிக்கை எமக்கு இல்லை என நேரடியாக எம்மால் கூட முடியும். இதற்கான எம்மை நீங்கள் திட்ட முடியாது. இந்த நாட்டில் மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது. சர்வதேச குற்றங்கள் பல நடந்துள்ளது. அதனால் தான் சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம். சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கோருகின்றோம். அதனை நீங்கள் வேண்டாம் என கூற முடியாது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் வெளியாகிவிட்டது. நாம் புதிதாக கூறத் தேவையில்லை, நீங்களே அதனை கூறிக்கொண்டுள்ளீர்கள் என்றார். 

https://www.virakesari.lk/article/96329

இந்தக் கூற்று எப்போ கூறப்பட்டது? 

On 16/4/2025 at 18:34, nunavilan said:

அதனால் தான் சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம். சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கோருகின்றோம்.

 சர்வதேச தலையீட்டை கோருவோம், அதோடு காலாவகாசமும் கொடுப்போம், ஆனால் அங்கே எல்லாம், போய் உண்மையை கூற மாட்டோம். அது அமெரிக்கா பாத்துக்கொள்ளும். இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க, கால நேரம் பாக்காமல் அமெரிக்கா பறப்போம்.  அவர்கள் இனப்படுகொலை செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லையென்று மறுவளம் விவாதிப்போம்.

On 17/4/2025 at 08:19, putthan said:

நீங்கள் பத்திரிகை பேட்டியில் மட்டுமே செய்து செய்து வருகின்றீர்கள்🤣

கண் முன்னே எவ்வளவோ சாட்சிகள் இருந்தும் தீர்வோ அல்லது நீதியோ வழங்கப்படவில்லை ...ஐயா...

அதென்ன சுமந்திரனின் மேடையில் ஒரு பூத்தெரிகிறதே! கார்த்திகைப்பூவா? தேர்தல் வந்தால்; கார்த்திகைப்பூ. வென்றால்; பொப்பிப்பூ. ஆமா.... காலங்காலமாக தமிழரசுக்கட்சிக்கு மக்கள் வாக்களித்து காத்திருந்தபோது எதை சாதித்தீர்கள், இனிமேலும் சாதிப்பதற்கு? நீங்கள்தான் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூவித்திரிந்ததைவிட. அப்படி சாதித்திருந்தால் நீங்கள் கேட்க்காமலேயே மக்கள் வாக்களித்திருந்திருப்பார்கள், மேலும் பல கட்சிகள் தோன்றியிருக்காதே. தேர்தல் வந்தால் நடை, உடை, பேச்சு எல்லாவற்றிலும் மாற்றம் தெரியும் என்பது மக்கள் உங்கள் ஊடாக கண்டுகொண்டவையே.  

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2025 at 14:36, vaasi said:

இந்த செய்தி 5 வருடம் பழையது.

16 minutes ago, satan said:

இந்தக் கூற்று எப்போ கூறப்பட்டது? 

 சர்வதேச தலையீட்டை கோருவோம், அதோடு காலாவகாசமும் கொடுப்போம், ஆனால் அங்கே எல்லாம், போய் உண்மையை கூற மாட்டோம். அது அமெரிக்கா பாத்துக்கொள்ளும். இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க, கால நேரம் பாக்காமல் அமெரிக்கா பறப்போம்.  அவர்கள் இனப்படுகொலை செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லையென்று மறுவளம் விவாதிப்போம்.

அதென்ன சுமந்திரனின் மேடையில் ஒரு பூத்தெரிகிறதே! கார்த்திகைப்பூவா? தேர்தல் வந்தால்; கார்த்திகைப்பூ. வென்றால்; பொப்பிப்பூ. ஆமா.... காலங்காலமாக தமிழரசுக்கட்சிக்கு மக்கள் வாக்களித்து காத்திருந்தபோது எதை சாதித்தீர்கள், இனிமேலும் சாதிப்பதற்கு? நீங்கள்தான் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூவித்திரிந்ததைவிட. அப்படி சாதித்திருந்தால் நீங்கள் கேட்க்காமலேயே மக்கள் வாக்களித்திருந்திருப்பார்கள், மேலும் பல கட்சிகள் தோன்றியிருக்காதே. தேர்தல் வந்தால் நடை, உடை, பேச்சு எல்லாவற்றிலும் மாற்றம் தெரியும் என்பது மக்கள் உங்கள் ஊடாக கண்டுகொண்டவையே.  

Published By: J.G.STEPHAN

10 DEC, 2020 | 04:53 PM

சர்வதேச விசாரணை வேண்டாம் என்று அவர் சொன்னார் என்று சிலர் சொன்னதால் அதை இணைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, putthan said:

போராட்டம் நடைபெறும் பொழுது மக்கள் இடம் பெயர்வது தவிர்க்க முடியாத ஒன்று...

திட்டமிட்ட குடியேற்றம் ஊடாக இனப்பரம்பலை இன்றும் செய்து கொண்டே இருக்கின்ற்னர் ...1944 இல் பண்டரநாயக்கா தமிழ்மொழிக்கு சமந்தஸ்து என கூறினார் ஆனால் அவரே 1958 இல் தனி சிங்கள சட்டத்தை அறிமுகப்படுத்தினார் .சொன்ன காரணம் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்களுக்கு தமிழ் மொழியினுடாக அறிவு வளர்ந்துவிடும் ஆகவே சிங்கள மொழிக்கு அதிக அங்கிகாரம் கொடுக்க வேணும் என்று...

ஆனால் இன்று தமிழும் இலங்கையில் ஒரு உத்தியோகபூர்வ ஆட்சி மொழி. இதை கொண்டு வந்தது தமிழ் தேசியவாதிகளால் இன்றும் நிராகரிக்கப்படும் இந்திய இலங்கை ஒப்பந்தம்.

17 hours ago, putthan said:

1958,77 இனக்கலவரங்களினால் பலர் வடக்கு மாகாணத்துக்கு வந்து குடியேறினர்,அத்துடன் பல மலையக பகுதிகளில் சிறு சிறு இனக்கலவரங்களை ஏறபடுத்தினார்கள் இதனாலும் மலையக தமிழர்கள் வன்னி நிலப்பரப்பில் குடியேறினார்கள் ....இதனால் அந்த கால கட்டத்தில் சனத்தொகை அதிகரித்திருந்தமை ஒர் காரணம்...

49 வீத சனத்தொகை அதிகரிப்புக்கு சிறு இனக்கலவரம் மூலம் மலையக மக்கள் வடமாகாணத்தில் குடியேறியது காரணம் என்பது தவறான தகவல். அவ்வளவு பெரிய ஜனக்கூட்டம் வடமாகாணம் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும் அதை உண்மை என ஒரு பேச்சுக்கு வைத்தாலும் அதன் மூலம் தமிழரின் ஜனத்தொகை வட பகுதியில் அதிகரிக்க தமிழ் தேசியத்தின் பலம் அதிகரிக்க சிங்களவர்கள் காரணமாக இருந்தார்கள் என்றே கூறவேண்டும்.

ஆனால் அதன் பின்னர் தமிழ் தேசியவாதிகளின் அரசியல் தமிழரின் ஜனதொகை குறைய காரணமானது.1950 ல் இலங்கை சுதந்திர மடைந்த காலப்பகுதில் மொத்த சனத்தொகை 78 லட்சம் மட்டுமே. இன்று இரண்டு கோடிக்கு மேல். கிட்ட தட்ட மூன்று மடங்கு. வட கிழக்கு தமிழரின் எண்ணிகை மேலும் தேய்வடைந்து செல்வது தமிழ் தேசிய இருப்புக்கு துணை புரியாது. சர்வதேசத்திடம் நீதி கேட்கும் போது அவர்களும் இதை ஏற்கப்போவதில்லை. இந்த தாயகம் தேசியம் எல்லாம் எமக்குள் மட்டும் அரசியல் சுய நலத்திற்காக பேசிக்கொள்ளும் அளவுக்கு சுருங்கிவிட்டது.இன்றும் கூட ஒற்றுமையாக நடை முறை சாத்தியமான ஒரு தீர்வை பெற்று தமிழரை அரசியல், கல்வி பொருளாதார ரீதியில் பலப்படுத்துவோம் என்ற பொறுப்புணர்வு தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளுக்கும் புலம்பெயர்ந்து தேசிய வேட தாரிகளுக்கும் அறவே இல்லை.

எப்படியோ யுத்தம் முடிந்தது நல்லதே. இல்லையெனில் தமிழ் தேசியத்திற்கான விலை என்று கூறி இருப்பவர்களையும் கடந்த 15 வருடங்களில் காவு கொடுத்திருப்பார்கள். ஒட்டு மொத்தமாக தமிழ் தேசியவாதிகளின் அரசியல் என்பது தமிழருக்கு கொடுத்தது அழிவுகளையும் தமிழ் தேசியத்தை மேலும் சிதைத்ததை மட்டுமே என்பது தான் உண்மை. வாயால் மட்டுமே தமிழ் தேசியம் கதைப்பார்கள். அதுவும் தமது சுய நலத்திற்காக. இன்று மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதற்கு காரணமே தமிழ் தேசிய வாதிகளின் அழிவு அரசியலை புரிந்திருப்பதாலேயே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

ஒற்றுமையாக நடை முறை சாத்தியமான ஒரு தீர்வை பெற்று தமிழரை அரசியல், கல்வி பொருளாதார ரீதியில் பலப்படுத்துவோம் என்ற பொறுப்புணர்வு தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளுக்கும் புலம்பெயர்ந்து தேசிய வேட தாரிகளுக்கும் அறவே இல்லை.

புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு தாயக மக்களின் நிலையை பலமடங்கு உயர்த்தியிருக்கு ...இதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை ...இன்றும் டோழர் அனுரா புலம் பெயர் தமிழர்களிடம் கையெந்துகின்றார் நாட்டை முன்னேற்ற வாருங்கள் என்று...

4 hours ago, island said:

49 வீத சனத்தொகை அதிகரிப்புக்கு சிறு இனக்கலவரம் மூலம் மலையக மக்கள் வடமாகாணத்தில் குடியேறியது காரணம் என்பது தவறான தகவல். அவ்வளவு பெரிய ஜனக்கூட்டம் வடமாகாணம் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும் அதை உண்மை என ஒரு பேச்சுக்கு வைத்தாலும் அதன் மூலம் தமிழரின் ஜனத்தொகை வட பகுதியில் அதிகரிக்க தமிழ் தேசியத்தின் பலம் அதிகரிக்க சிங்களவர்கள் காரணமாக இருந்தார்கள் என்றே கூறவேண்டும்.

இன்று தமிழர்கள் வெளிநாடுகளில் வசதிவாய்ப்புக்களுடன் இருப்பதற்க்கும் சிங்களவர்கள் தான் காராணம் .🤣...ஆனால் அதற்காக நம் இனம் இழந்ததும் அதிகம் ..என்பதை மறக்க முடியாது ...🥲

4 hours ago, island said:

வட பகுதியில் அதிகரிக்க தமிழ் தேசியத்தின் பலம் அதிகரிக்க சிங்களவர்கள் காரணமாக இருந்தார்கள் என்றே கூறவேண்டும்.

கொடுத்த விலை அதிகம் ...சொத்துக்கள் உயிர் இழப்புக்கள் அதிகம்

நீங்கள் கூறுவது உங்கள் நிலைப்பாட்டில் சரியாக இருக்கலாம் ..யுத்தம் நிறுத்தப்பட்டது நல்லது ...

தமிழ் தேசியம் ஒர் பயங்கரவாத செயலோ,அல்லது தனி நாட்டு கோரிக்கையோ அல்ல..

சலுகை அரசியலில் மக்கள் ஈடுபடுவது தவிர்க்க முடியாத ஒன்று ...இதே மக்கள் 10 வருடங்களின் பின்பு வேறு வித அரசியலை நோக்கி நகர்வார்கள் ...ஆனால் தமிழ் தேசியம் தொடர்ந்து நிலைக்க வேண்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.