Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

19 Apr 2025, 8:33 AM

NTK Seeman Speech

மே 18-ஆம் தேதி கோவையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழின பேரெழுச்சி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் விடுதியில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சீமான், “2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் நான் சொல்பவர்கள் தான் வேட்பாளர்கள். நான் சொல்வதற்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள். நானே உங்களை சேர்த்து விடுகிறேன்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து சென்றால் ஸ்டாலின், விஜய் ஆகியோர் தேர்தலில் நிற்க உடனடியாக சீட் கொடுத்துவிடுவார்கள்.

இந்தப் படையை சரியாக வழிநடத்திக் கொண்டுபோய் நான் வென்று காட்டுவேன் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் என்னுடன் வாருங்கள். உங்களுக்கு ஒதுக்கும் தொகுதியில் நீங்கள் வென்று காட்ட வேண்டும்.

நீங்கள் வெற்றி பெற்றால் பல்லக்கில் ஏற்றி மாலை போட்டு அழைத்து வருவேன். தோற்றால் பாடையில் ஏற்றி மாலை போடுவேன். எப்படி பார்த்தாலும் மாலை கன்ஃபார்ம். தோற்றால் சிறிது பால்டாயிலை வாங்கி குடித்துவிட்டு நீங்களே பாடையில் படுத்துவிடுங்கள். வேறு வழியே கிடையாது.

நம்முடைய கட்சி பிளக்ஸ் பேனரில் தொண்டர்கள், நிர்வாகிகள் நல்ல புகைப்படங்களை வைக்க வேண்டும். தறுதலைகளை போல தலையை விதவிதமாக அலங்காரம் செய்து கொண்டு ஃபோட்டோ வைக்க கூடாது. எங்கெங்கு நிராகரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்களோ அங்கு நம்முடைய குரல் ஒலிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

https://minnambalam.com/ntk-seeman-speech-about-win-in-2026-election/

  • கருத்துக்கள உறவுகள்

வென்றால் மாலை, தோற்றால் பாடை… ]

😄

இந்த வசனம் அழகாக உள்ளது

1 hour ago, கிருபன் said:

நாம் தமிழர் கட்சியில் நான் சொல்பவர்கள் தான் வேட்பாளர்கள். நான் சொல்வதற்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள். நானே உங்களை சேர்த்து விடுகிறேன்.

விஜய் கட்சிக்கு இவர் பயப்படுகின்றது போல் உள்ளதே

  • கருத்துக்கள உறவுகள்

சிமான் கட்சியே எப்படியும் தோற்கத்தானே போகிறது. அப்ப கட்சியையே பாடையில் ஏற்றி மாலை போடுவாரா? 😂😂😂😂

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தொடர்ந்து தோற்று கொண்டு தான் வருகின்றார் இம் முறை பாடை என்கின்றார் விஜய் கட்சிக்கு போங்கோ நானே சேர்த்துவிடுகின்றேன் என்கின்றார் யோசனையாக உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, island said:

சிமான் கட்சியே எப்படியும் தோற்கத்தானே போகிறது. அப்ப கட்சியையே பாடையில் ஏற்றி மாலை போடுவாரா? 😂😂😂😂

கட்சிக்கு இல்லை வேட்பாளர்களுக்கு கட்சி அவர் இருக்கும் வரை இருக்கும் சீமான் தமிழ் ஈழம் பெற்று தருவார் எனறு நம்பும் இலங்கை தமிழர்கள் இருக்கும் வரை கட்சி இருக்கும்

இந்த உலகில் இருந்து கஸடப்பட விரும்பாத தமிழர். சீமான் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போடடி இட்டால் .எப்படியும் தோற்ப்பார்கள். அவர்களை பாடையில் கட்டி மாலை போட்டு சகல இராணுவ மரியாதையுடன் அனுப்பி வைப்பார் இந்த வேலைக்கு உலகத்தில் உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் ஆகும் ஒரே தலைவரும் சீமான் ஆகும் 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் கொ.ப.செ பாஜக ஆதரவு பிரச்சாரம் செய்கிறார்.

அதை அண்ணன் கண்டிக்கவும் மாட்டார், அவரை கட்சியை விட்டு நீக்கவும் மாட்டார்.

ஆனால் அண்ணனும் கட்டிசியும் பாஜக எதிர் அரசியல் செய்கிறார்களாம் 🤣.

எப்படியோ 2026 தேர்தலுக்கு என நல்ல லம்பான அமவுண்டாக அண்ணன் பிஜேபி டம் வாங்கி விட்டார்.

சொகுசு பங்களா, வெளிநாட்டு ஜீப் என திரைதுறையில் இருந்து சம்பாதிக்க முடியாததை எல்லாம் அரசியலிற்கு வந்து சம்பாதித்து விட்டார்.

அண்ணனுக்கு எப்போதும் மலர் மாலையும் மாப்பிள்ளை கோலமும்தான். தமது இன உணர்சியை, உழைப்பை அண்ணன் போல தரகர்களிடம் நம்பி இழக்கும் தம்பிகளுக்கு அன்றும், இன்றும், என்றும் பாடை கன்பார்மிடு.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அல்லது நாம் தமிழர் கட்சி பாடையில் போகக்கூடாது என்று ஆண்டவனை வேண்டுவோமா.

அப்புறம் கட்டிப்புரள நமக்கெல்லாம் வேறு கெதி.????🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விசுகு said:

சீமான் அல்லது நாம் தமிழர் கட்சி பாடையில் போகக்கூடாது என்று ஆண்டவனை வேண்டுவோமா.

அப்புறம் கட்டிப்புரள நமக்கெல்லாம் வேறு கெதி.????🤣

சீமான் அரசியலுக்கு வந்த நாள் தொடக்கம் படபடத்துக்கொண்டு இருக்கிறார்களே ஒழிய......சீமானின் வளர்ச்சியை ஒரு வீதமேனும் தடுக்க முடியவில்லை. 😂

வெற்றிலை பாக்கு புகையிலை சுண்ணாம்பு தடவி மெல்லுவதை போல் மெல்லுகிறார்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சீமான் அரசியலுக்கு வந்த நாள் தொடக்கம் படபடத்துக்கொண்டு இருக்கிறார்களே ஒழிய......சீமானின் வளர்ச்சியை ஒரு வீதமேனும் தடுக்க முடியவில்லை. 😂

வெற்றிலை பாக்கு புகையிலை சுண்ணாம்பு தடவி மெல்லுவதை போல் மெல்லுகிறார்கள்.🤣

சும்மா படபடக்குமா ??

வளர்ச்சி இனித் தான் இருக்கு. நேற்று ஒரு மேடையில் நீ தான் தலைவன் என்று விஜயின் அப்பா சந்திரசேகரனே சொல்லும் நிலையில் வளர்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் இந்த கேடு கெட்ட அயோக்கிய அரசியல்வாதியின் தமிழ் தேசியம் என்பது பொலிடோல் குடிச்சிட்டு பாடையில் போ படு என்ற நிலைக்கு வந்து நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

கட்சியின் கொ.ப.செ பாஜக ஆதரவு பிரச்சாரம் செய்கிறார்.

அதை அண்ணன் கண்டிக்கவும் மாட்டார், அவரை கட்சியை விட்டு நீக்கவும் மாட்டார்.

ஆனால் அண்ணனும் கட்டிசியும் பாஜக எதிர் அரசியல் செய்கிறார்களாம் 🤣.

எப்படியோ 2026 தேர்தலுக்கு என நல்ல லம்பான அமவுண்டாக அண்ணன் பிஜேபி டம் வாங்கி விட்டார்.

சொகுசு பங்களா, வெளிநாட்டு ஜீப் என திரைதுறையில் இருந்து சம்பாதிக்க முடியாததை எல்லாம் அரசியலிற்கு வந்து சம்பாதித்து விட்டார்.

அண்ணனுக்கு எப்போதும் மலர் மாலையும் மாப்பிள்ளை கோலமும்தான். தமது இன உணர்சியை, உழைப்பை அண்ணன் போல தரகர்களிடம் நம்பி இழக்கும் தம்பிகளுக்கு அன்றும், இன்றும், என்றும் பாடை கன்பார்மிடு.

பாஜக விடம் காசை வாங்கிக் கொண்டு பாஜகவிகவுக்கு என்ன செய்தார்?கூட்டணிவைத்துவிட்டாரா?திமுக ரீம் என்று சொல்வது போல தொடர்ந்து சொன்ன பொய்யைக் காப்பாற்ற மேலும் பொய்கைகைளக் கூறிக்கொண்டிருக்கிறீர்கள். எந்தவித ஆதாரமும் இல்லாமல் பாஜக முத்திரைகுத்துவது. திமுக வின் ஸ்டையில். திமுகவின் கனிமொழி>துரைமுகுருகன் எல்லோரும் சந்திக்கலாம் என்றால் அவர்கள் சங்கிகள் இல்லையென்றால் சீமான் சந்த்தித்தால் என்ன தவறு?(சந்திக்கவில்லை எனபது வேறு விடயம்).இப்பொழுது அந்தரத்தில் நிற்பது விஜய் கட்சிதான். அதிமுகவுடன்அதிக பேரம் பேசி அதிமுக விஜையைக்கழட்டிவிட்டது.இப்பொழுது பாமாவுடன் பேசுகிறராம். பாமக இந்தப் பேச்சுவார்த்தையை அதிமுக திமுக கூட்டணியுடன் பேரம் பேசுவதற்காகப் பாவிக்கிறது. பாமக கடைசிவரைக்கும் போக்குக் காட்டி விஜையைக் கழட்டிவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விசுகு said:

சும்மா படபடக்குமா ??

வளர்ச்சி இனித் தான் இருக்கு. நேற்று ஒரு மேடையில் நீ தான் தலைவன் என்று விஜயின் அப்பா சந்திரசேகரனே சொல்லும் நிலையில் வளர்ச்சி.

உண்மைதான் விசுகர்!

சீமானின் அரசியல் மேடைகளை தவிர..... அவர் பங்குகொள்ளும் பொது மேடைகளில் அரசியல் சலசலப்பு இல்லாத யதார்த்த பேச்சுக்களால் அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல்கள் வானை பிளக்கின்றது.

இதனால் தான் அவர்கள் பதட்டப்படுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான மக்கள் திரள் உள்ள வரை புதிய சிந்தனைகளோ தத்துவங்களோ வெற்றி பெற வாய்ப்பு இல்லை ..

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2025 at 16:25, விசுகு said:

சும்மா படபடக்குமா ??

வளர்ச்சி இனித் தான் இருக்கு. நேற்று ஒரு மேடையில் நீ தான் தலைவன் என்று விஜயின் அப்பா சந்திரசேகரனே சொல்லும் நிலையில் வளர்ச்சி.

அதான் இன்னொரு திரியில் இந்த படபடப்பை பார்த்தோமே அண்ணை🤣.

சீமான் தனித்து நின்று 2026 இல் எத்தனை வாக்கு வீதம் வாங்குவார் என ஒரு அருமை அண்ணனிடம் பந்தயம் கட்ட கோரினேன் - ஆள் எஸ்🤣.

பிகு

சீமான் கிடக்கட்டும், லா செஷப்பலுக்கு என்ன ஆயிற்று? கூட்டம், கூட்டமாக ஆபிரிக்க, அரேபிய இளைஞர்கள் மொய்த்து நிற்கிறார்கள்.

தமிழ் கடைகள் அருகில் பார்க்கிங் கிடைக்கவில்லை - கொஞ்சம் தள்ளி போய் பார்க் பண்ணலாம் என போனால் வீதியிலேயெ டெண்ட் அடித்து வாழ்கிறார்கள்.

காரை அங்கே பார்க் பண்ண பயத்தில் இறங்காமலே வந்து விட்டேன்.

On 20/4/2025 at 21:40, குமாரசாமி said:

உண்மைதான் விசுகர்!

சீமானின் அரசியல் மேடைகளை தவிர..... அவர் பங்குகொள்ளும் பொது மேடைகளில் அரசியல் சலசலப்பு இல்லாத யதார்த்த பேச்சுக்களால் அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல்கள் வானை பிளக்கின்றது.

இதனால் தான் அவர்கள் பதட்டப்படுகின்றார்கள்.

நீங்களாவது பதட்டபடாமல் பந்தயம் கட்ட தயாரா?

செய்வீர்களா?

செய்வீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, goshan_che said:

நீங்களாவது பதட்டபடாமல் பந்தயம் கட்ட தயாரா?

செய்வீர்களா?

செய்வீர்களா?

பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதை நிறுத்துவீர்களா? நிறுத்துவீர்களா?

நிவாரண பொதி கொடுக்குறோம் எனும் பெயரில் கட்சி வளர்ப்பதை கண்டிப்பீர்களா? கண்டிப்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2025 at 10:51, குமாரசாமி said:

பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதை நிறுத்துவீர்களா? நிறுத்துவீர்களா?

நிவாரண பொதி கொடுக்குறோம் எனும் பெயரில் கட்சி வளர்ப்பதை கண்டிப்பீர்களா? கண்டிப்பீர்களா?

இதெல்லாம் திமுக, அதிமுக வை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி.

நான் எந்த கட்சியும் சாராதவன்.

ஆனால் சீமான் வெறுப்பாளன்.

என்னோடு பந்தயம் கட்ட கேட்டா,

முக்கு சந்தில் நின்று…

நான் சதாம் ஹுசைனை பார்த்து கேட்கிறேன்…

நான் ஜார்புஷ்சை பார்த்து கேட்கிறேன்…

என சவால் விடுவது நியாமில்லை🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

நான் எந்த கட்சியும் சாராதவன்.

ஆனால் சீமான் வெறுப்பாளன்.

இங்கே தான் இடிக்குது......

நான் எந்தக்கட்சியும் சாராதவனாம்.

ஆனால் சீமான் எதிர்ப்பாளனாம்.

இஞ்சை என்ன கோழிச்சண்டையா நடக்குது?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இங்கே தான் இடிக்குது......

நான் எந்தக்கட்சியும் சாராதவனாம்.

ஆனால் சீமான் எதிர்ப்பாளனாம்.

இஞ்சை என்ன கோழிச்சண்டையா நடக்குது?

இந்த கதை எல்லாம் வேணாம்.

சீமான் கட்சி வளர்வதால் அவரின் (நானுட்பட்ட) எதிர்பாளருக்கு படபடப்பு என்றீர்கள்.

சரி 2026 இல் சீமான் தனியே நிண்டு 12% எடுப்பாரா - இல்லையா?

பந்தயம் கட்ட ரெடியா?

இல்லை எண்டால் சீமான் கட்சி வளர்கிறது என்பதை நீங்களே நம்பவில்லை என்பதே அர்த்தம்.

பிகு

மற்ற அண்ணன் இந்த திரியிலும் எஸ். ஒளிச்சு நிண்டு பச்சை அடிக்கிறார்🤣.

அட லாசெப்பல் பற்றி மட்டும் கதைப்போம் வாங்கோ அண்ணை 🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

சீமான் கட்சி வளர்வதால் அவரின் (நானுட்பட்ட) எதிர்பாளருக்கு படபடப்பு என்றீர்கள்.

சரி 2026 இல் சீமான் தனியே நிண்டு 12% எடுப்பாரா - இல்லையா?

பந்தயம் கட்ட ரெடியா?

இல்லை எண்டால் சீமான் கட்சி வளர்கிறது என்பதை நீங்களே நம்பவில்லை என்பதே அர்த்தம்.

மூலக்கருத்து முதலே சொல்லப்பட்டு விட்டது. லஞ்சங்களையும் வாக்குக்கு லஞ்சம் கொடுப்பதையும் நிறுத்துங்கள். அதன் பின் நிதர்சன அரசியலைப்பற்றி பேசலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இந்த கதை எல்லாம் வேணாம்.

சீமான் கட்சி வளர்வதால் அவரின் (நானுட்பட்ட) எதிர்பாளருக்கு படபடப்பு என்றீர்கள்.

சரி 2026 இல் சீமான் தனியே நிண்டு 12% எடுப்பாரா - இல்லையா?

பந்தயம் கட்ட ரெடியா?

இல்லை எண்டால் சீமான் கட்சி வளர்கிறது என்பதை நீங்களே நம்பவில்லை என்பதே அர்த்தம்.

பிகு

மற்ற அண்ணன் இந்த திரியிலும் எஸ். ஒளிச்சு நிண்டு பச்சை அடிக்கிறார்🤣.

அட லாசெப்பல் பற்றி மட்டும் கதைப்போம் வாங்கோ அண்ணை 🤣.

தமிழகத்தை தமிழர்கள் ஆளவேண்டும் என்பதை மறுத்துக்கொண்டு ல சப்பலில் நம்ம ஆட்சி ஏன் குறைவடைகிறது என்றால் தலை சுத்துமா இல்லையா?🙃

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 21/4/2025 at 06:03, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இப்படியான மக்கள் திரள் உள்ள வரை புதிய சிந்தனைகளோ தத்துவங்களோ வெற்றி பெற வாய்ப்பு இல்லை ..

மன்னிக்கவும்.

இதை நான் கேவலமாக நினைக்கவில்லை.நடத்தை கெட்டதாகவும் நினைக்கவில்லை.இப்படியான சம்பவங்கள் எல்லா நாடுகளிலும் பார்க்கக்கூடியதகவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2025 at 00:03, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இப்படியான மக்கள் திரள் உள்ள வரை புதிய சிந்தனைகளோ தத்துவங்களோ வெற்றி பெற வாய்ப்பு இல்லை ..

எல்லோரும் முற்போக்காக சித்திப்பார்கள் எனில் உலகம் எங்கோ போயிருக்கும். சமுதாயம் என்பது பலதரப்பட்டவர்களையும் கொண்டது. அனைவரையும் உள்வாங்குபவனே உண்மையான தலைவன். இது பொதுத்தளத்துக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மூலக்கருத்து முதலே சொல்லப்பட்டு விட்டது. லஞ்சங்களையும் வாக்குக்கு லஞ்சம் கொடுப்பதையும் நிறுத்துங்கள். அதன் பின் நிதர்சன அரசியலைப்பற்றி பேசலாம்.

அப்போ லஞ்ச லாவண்யாவோ, பிஞ்ச பிரமிளாவோ…ஏதோ ஒரு காரணத்தால் சீமானின் கட்சியின் வளர்ச்சி 2026 இல் இல்லை என்பதை ஏற்கிறீர்கள்?

1 hour ago, விசுகு said:

தமிழகத்தை தமிழர்கள் ஆளவேண்டும் என்பதை மறுத்துக்கொண்டு ல சப்பலில் நம்ம ஆட்சி ஏன் குறைவடைகிறது என்றால் தலை சுத்துமா இல்லையா?🙃

தமிழ் நாட்டை தெலுங்கு வம்சாவழி ஆளக்கூடாது எனில், மலையாளி வம்சாவழியும் ஆளக்கூடாது என்பதில் தலைசுத்து, மசக்கை எதுவும் வரத்தேவையில்லை.

லாசப்பல் என்ன பாரம்பரிய தமிழர் வாழிடமா? ஒவ்வொரு குடியேறி கூட்டமும் “மேட்டுகுடி” ஆகி வெளியேற அதை புதிய குடியேறிகள் நிரப்புவது வழமைதான்.

ஆனால் நான் கண்டது கலேயின் முகாம்களில் இருப்பது போல ஒரு நிலைமையை.

அதைத்தான் கேட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, goshan_che said:

அப்போ லஞ்ச லாவண்யாவோ, பிஞ்ச பிரமிளாவோ…ஏதோ ஒரு காரணத்தால் சீமானின் கட்சியின் வளர்ச்சி 2026 இல் இல்லை என்பதை ஏற்கிறீர்கள்?

வாக்கு லஞ்சத்திற்கும், கொள்கையற்ற வாக்களிப்புகளுக்கும் உங்கள் ஆதரவு உண்டு என ஒத்துக்கொள்வதாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஒருவர் சீமான் கட்சியை எதிர்க்கின்றார் என்றால் அவர் மாற்றுக்கட்சியை ஆதரிக்கின்றார் என்பதே பொருள் படும்.

சீமான் கட்சி ஆரம்பித்த காலங்களிலிருந்து வளர்ச்சியே தவிர வீழ்ச்சி இல்லை என்பதை யாவரும் அறிவர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஒரு மநகூ அவசரமாக தேவைப்படுகின்றது. மநகூ என்றால் மக்கள் நலக் கூட்டணி.

கடைசியாக இப்படியான ஒரு கூட்டணியை விஜய்காந்த் தலமையில் வைகோ உருவாக்கி இருந்தார். அத்துடன் அரசியலில் விஜய்காந்த் விலாசமே இல்லாமல் போனார். வைகோவின் அரசியல் சாணக்கியம் மீண்டும் ஒரு முறை அடிவாங்கியது. இந்த வாரம் அவரது மகன் துரை வைகோ விவகாரத்தில் அந்த சாணக்கியம் மீண்டும் அடிவாங்கிக் கொண்டிருக்கின்றது.

அதிமுக - பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணத்தை இந்த தடவை வாரி இறைக்கும். இது கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் பாஜகவின் இறுதி முயற்சி. திமுகவிற்கு எவ்வளவு தடைகள் ஒன்றிய அரசால் வந்தாலும், செந்தில் பாலாஜி முற்று முழுதாக சுற்றி வளைக்கப்பட்டாலும், திமுகவும் சளைக்காமல் பணத்தை கொட்டும்.

'ஆட்சியில் பங்கு...............' என்ற கோஷத்துடன் வந்த விஜய்யும், 'வென்றால் முயற்சி, தோற்றால் பயிற்சி...............' என்று இவ்வளவு நாளும் சொல்லிக் கொண்டிருந்த சீமானும் இந்த இரு கூட்டணிகளின் முன்னும் ஒன்றுமேயில்லை. நாதக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கும், ஆனால் தொகுதிகளுக்கு பூத் ஏஜண்டுகள் கூட போதியளவில் கிடைக்கமாட்டார்கள். விஜய்க்கு 234 வேட்பாளர்கள் கிடைப்பதே சிரமம். இந்த இருவரிடமும் தேர்தலை சமமாக எதிர்கொள்ளும் வசதி வாய்ப்புகளும் கிடையாது. இவர்கள் இருவரும் சேர்ந்தால், இன்னும் சில உதிரிக் கட்சிகளையும் சேர்த்தால், மீண்டும் ஒரு மநகூ உருவாகும்.

அப்படி ஒன்று உருவாகினால், தேர்தல் முடிய இருவரும் விலாசம் இல்லாமல் போகவும் கூடும். அப்படி ஒரு கூட்டணி உருவாகாமல் விட்டாலும், இவர்கள் இருவரும் பெரிதாக எந்த தாக்கத்தையும் 2026ம் ஆண்டில் ஏற்படுத்தப் போவதும் இல்லை. எப்படிப் பார்த்தாலும், ஆகக் குறைந்தது 234 வேட்பாளர்களுக்கு வைப்புப்பணம் திரும்பிக் கிடைக்கப் போவதில்லை.

அதற்கு மேலேயும் இவர்களின் ஒவ்வொரு வேட்பாளரும் கைகளில் கொஞ்ச பணம் வைத்திருக்க வேண்டும் போல........... தேர்தல் முடிந்த பின் கட்சித் தலைமை சொல்வதைச் செய்ய.................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.