Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

22 APR, 2025 | 08:58 PM

image

தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் இன்று (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் சில சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கிடைக்கப்பெற்ற தகவலின் படி, பஹல்காமில் உள்ள சாலைக்கு அப்பாற்பட்ட புல்வெளியான பைசரன் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

"பைசரானில் சுற்றுலாப் பயணிகள் மீது இரண்டு அல்லது மூன்று தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எங்கள் அறிக்கைகள் கூறுகின்றன" என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். 

பைசரன் பகுதிக்கு கால் நடையாக மட்டுமே செல்ல முடியும். இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். சுற்றுலாப் பருவத்தில் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.

தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீஸ் குழு, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு காயமடைந்த சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியிலும், தாக்குதல் நடத்தியவர்களை கண்டறியும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

https://www.virakesari.lk/article/212684

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: சவுதி பயணத்தில் இருந்து பாதியில் திரும்பும் மோடி

22 Apr 2025, 11:54 PM

pm-modi-sacudi-arabia.jpg

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பிரதமர் மோடி தனது சவுதி அரேபிய பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இன்றிரவே இந்தியா திரும்புகிறார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. ஆனாலும் எண்ணிக்கையை இதுவரை அரசு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் இத்தாக்குதலைக் கண்டித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தக் கொடூரமான செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறினார்.

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சவுதி அரேபியாவில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் மோடி. இதையடுத்து அமித் ஷா இன்று மாலையே காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்குச் சென்றார். அங்கே பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகளோடு அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

image-1502.png

இரண்டு நாள் பயணமாக இன்று சவுதி அரேபியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு ஜெட்டாவில் சவுதி அரேபியா ஏற்பாடு செய்திருந்த அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் கலந்து கொள்ள இருந்த நிலையில், விருந்தை ரத்து செய்துவிட்டு, தனது சவுதி அரேபிய பயணத்தையும் பாதியில் முடித்துக் கொண்டுள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, சவுதி இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மானை சந்திக்க அவர் திட்டமிடப்பட்டிருந்தார்.

ஆனால் காஷ்மீர் தாக்குதலையடுத்து பிரதமர் இன்றிரவே இந்தியாவுக்கு புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை வருவார் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோடி டெல்லி திரும்பிய பிறகு ஏப்ரல் 23 புதன் காலை, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, இறப்பு எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும், பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார். “சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை நோக்கி நடத்தப்பட்ட எந்தவொரு தாக்குதலையும் விட இந்தத் தாக்குதல் மிகப் பெரியது” என்று கூறினார் ஓமர்.

https://minnambalam.com/pm-cuts-short-saudi-visit-after-jk-attack/

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-277.jpg?resize=750%2C375&ssl

ஜம்மு காஷ்மீரில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்; 26 பேர் மரணம்!

ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக பஹல்காமில் செவ்வாய்க்கிழமை (22) தீவிரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒரு அதிகாரியும், உளவுத்துறைப் பணியகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்காக இராணுவ ஹெலிகொப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

ஏனெனில் அந்தப் பகுதிக்கு கால்நடையாகவோ அல்லது குதிரையில் சென்றோ மட்டுமே செல்ல முடியும்.

தாக்குதலின் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை ஸ்ரீநகருக்கு விஜயம் மேற்கொண்டார்.

அங்கு ஜம்மு-காஷ்மீர் காவல்துறை பணிப்பாளர் ஜெனரல் நளின் பிரபாத் அவருக்கு விளக்கம் அளித்தார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி – தனது இரண்டு நாள் சவுதி அரேபியா பயணத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவுக்கு திரும்பினார்.

அவருடன் பேசி தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக் கொண்டார்.

பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில், ஒரு மலையின் உச்சியில் உள்ள புல்வெளியில் துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டன.

தீவிரவாதிகள் காடுகளிலிருந்து வெளியேறி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியதாக சாட்சியங்கள் தெரிவித்தன.

துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் வெளியான காட்சிகளில் பலர் அசையாமல் தரையில் கிடப்பதையும், பல பெண்கள் உதவிக்காக மன்றாடுவதையும் வெளிக்காட்டியுள்ளது.

பிரதமர் மோடி சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்து கொண்டிருந்த நேரத்திலும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த நேரத்திலும் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இன்று அதிகாலை டெல்லி திரும்பிய பிரதமர், சவுதி அரேபியா நடத்திய அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லை.

அவர் முதலில் புதன்கிழமை (23) இரவு இந்தியாவுக்குப் புறப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் தாக்குதலுக்குப் பின்னர் தனது பயணத்தை முடித்துக்கொண்டார்.

இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த அவர், “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் உறுதி அசைக்க முடியாதது, அது இன்னும் வலுவடையும்” என்றார்.

Prime Minister Narendra Modi held a meeting with National Security Adviser Ajit Doval and External Affairs Minister S. Jaishankar on Wednesday (April 23, 2025) morning at the airport upon his arrival from Saudi Arabia to discuss the situation following the terror attack in Pahalgam.“அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றிபெறாது,” என்று அவர் மேலும் கூறினார்.

New-Project-276.jpg?resize=600%2C338&ssl

“பேரழிவு தரும் பயங்கரவாத தாக்குதலை” திரு. வான்ஸ் கண்டனம் செய்தார். “கடந்த சில நாட்களாக, இந்த நாட்டின் அழகையும் அதன் மக்களையும் நாம் கண்டு வியந்து போயுள்ளோம். “ஆழ்ந்த தொந்தரவான” காஷ்மீர் தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்கா இந்தியாவுடன் “வலுவாக நிற்கிறது” என்றும் அவர் கூறினார்.

இதேவேளை,பஹல்காம் சுற்றுலாப் பயணிகளின் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பயங்கரவாதியின் பிரத்யேக முதல் படம் வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் உள்ளூர் கிளையான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தற்போது முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

https://athavannews.com/2025/1429191

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டனர்' - ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பஹல்காமில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப்படை வீரர்

22 ஏப்ரல் 2025

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, சௌதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோதி அவசரஅவசரமாக டெல்லி திரும்பியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் உடனடியாக முக்கிய ஆலோசனை நடத்தினார் என்று ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளதாக, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் தகவலை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

இந்த தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில், டாக்டர் பரமேஸ்வரம் மற்றும் 83 வயது சந்துரு ஆகியோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர சம்பவ இடத்திலிருந்த 57 வயது பாலச்சந்திராவுக்கு மன அழுத்தம் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம்,PTI

உயிரிழப்புகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் காயமடைந்தவர்களில் சிலர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீர் ஜம்மு காஷ்மீரில் இருந்து தெரிவித்தார்.

திடீர் துப்பாக்கிச் சூடு காரணமாக, குழப்பம் ஏற்பட்டதாகவும், அனைவரும் அழுது கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர் என்று குஜராத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி பிபிசியிடம் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷுபம் திவேதி, இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இவர், தனது மனைவியுடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய ஷுபம் திவேதியின் உறவினர் சௌரப் திவேதி, "ஷுபமுக்கு, இந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதிதான் திருமணம் நடந்தது. அவர் தனது மனைவியுடன் பஹல்காமில் இருந்தார். சம்பவத்திற்கு பிறகு, அவரது மனைவி என் மாமாவை தொலைபேசியில் அழைத்து ஷுபம் தலையில் சுடப்பட்டதாகக் கூறினார். தனிநபர்களின் பெயர்களைக் கேட்ட பிறகு துப்பாக்கிச் சூடு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. அனைத்து நடைமுறைகளும் முடிந்து 2-3 நாட்களுக்குப் பிறகு ஷுபமின் உடல் விடுவிக்கப்படும் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது" என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,சௌரப் திவேதி

'ஆண்களை குறிவைத்து தாக்குதல்'

'ஆயுததாரிகள் பெண்களை விட்டுவிட்டு ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது' என்று தாக்குதலை நேரில் கண்டவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

"தீவிரவாதிகள் எத்தனை பேர் என்று என்னால் சொல்ல முடியவில்லை, ஒரு ஒரு சிறிய புல்வெளிக்கு அருகில் உள்ள காட்டில் இருந்து வெளியே வந்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்," என்று ஒரு பெண் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறினார்.

"அவர்கள் தெளிவாக பெண்களை விட்டுவிட்டு, ஆண்களை மட்டுமே குறிவைத்துச் சுட்டனர். சில ஆண்களை ஒரே தோட்டா மூலமும், சில ஆண்களை பல தோட்டாக்கள் மூலமும் கொன்றனர். அந்த இடமே ஒரு புயல் வீசியது போல இருந்தது," என்று அவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்காக பேசியுள்ள பல்லவி ராவ் என்ற மற்றொரு பெண் (சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் அவரது கணவரும் ஒருவர்) 'ஆண்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக்' கூறினார்.

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

படக்குறிப்பு,அனந்த்நாக் மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இந்திய பிரதமர் மோதி அவசர ஆலோசனை

பிரதமர் மோதி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று (ஏப்ரல் 22) சௌதி அரேபியா சென்றிருந்தார். இன்றிரவு (ஏப்ரல் 23) அவர் டெல்லி திரும்புவதாக இருந்தது. ஆனால் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக தனது சௌதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு, இன்று காலை டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோதி.

அதன் பின்னர், ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் பிரதமர் மோதி கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோதி நடத்திய ஆலோசனை கூட்டம்

பஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை உச்சியில் உள்ள புல்வெளியான பைசரனில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பருவம் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பஹல்காம் பகுதி, சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. அதன் பசுமையான புல்வெளிகள் மற்றும் ஏரிகள் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

"இந்தியாவின் சுவிட்சர்லாந்து" என்று பஹல்காம் அழைக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் 1989 ஆம் ஆண்டு முதல் நீண்டகாலமாக கிளர்ச்சி நடந்து வருகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் வன்முறை குறைந்துள்ளது.

ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகளில், தாக்குதல் நடந்த இடத்தை நோக்கி இந்திய படையினர் ஓடுவதைக் காட்டுகின்றன. வேறொரு வீடியோவில், துப்பாக்கி ஏந்தியவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களை மட்டும் குறிவைத்து தாக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதை கேட்க முடிந்தது.

டெல்லியிலும் பலத்த பாதுகாப்பு

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம்,ANI

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி முகமையான பிடிஐ தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு டெல்லி போலீசார் நகரம் முழுவதும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

குறிப்பாக சுற்றுலா தலங்கள் மற்றும் நகர எல்லைகளில், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயலையும் உடனடியாகக் கண்டறியும் வகையில் கடுமையான சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மறுபுறம், ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு அதிகாரிகள், காவலர்கள் பல்வேறு இடங்களில் வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர், மேலும் சாலைகளில் விரிவான தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் இருந்து இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டங்களின் படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி வருகின்றன. பஹல்காமில் உள்ள சிலரும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்று, தாக்குதல் குறித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரதமர் மோதி என்ன சொன்னார்?

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

இந்த சம்பவம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

"இந்த கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்', என்று குறிப்பிட்ட அவர், "இந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு நான் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்க வழிவகை செய்யப்படும்", என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் கூறியது என்ன?

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

அமெரிக்க அதிபர் டிரம்ப தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் மிகவும் கவலையளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மாவுக்காகவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோதிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும், ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு." என்று கூறியுள்ளார்.

புதின் கூறியது என்ன?

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், "இந்த கொடூரமான குற்றத்தை நியாயப்படுத்த முடியாது. குற்றவாளிகள் தக்க தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தயார் நிலையில் உள்ளோம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்." என்று கூறியுள்ளார்.

'காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்'- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மோதியுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (கோப்புப் படம்)

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலில் அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டிருப்பது, காயமடைந்திருப்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

'நான் அதிர்ச்சியடைந்தேன்' - முதல்வர் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

"நான் அதிர்ச்சியடைந்தேன். இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியாக தெரியவில்லை. அங்குள்ள நிலைமை பற்றி தெளிவாக தெரிய வந்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது", என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் கூறியதென்ன?

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

"பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலால் நான் வருத்தமடைந்தேன். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என்றும், முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.

"இந்த சம்பவம் குறித்து வீடியோ அழைப்பு மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோதி ஒரு கூட்டம் நடத்த இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,அனந்த்நாக்கில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்

"பாதிக்கப்பட்டோரில் தமிழர்கள்"

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

"அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், விலைமதிப்பற்ற பல உயிர்களை பலியாக்கியது. இது மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இது மிகவும் கடுமையான கண்டனத்திற்கு உரியது.

பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு டெல்லியில் உள்ள உள்ளுறை ஆணையருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்", என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை பாதுகாக்கும் வகையில் முதற்கட்டமாக புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த உதவி மையத்தை தொடர்புகொள்ள தமிழ்நாடு அரசு சார்பாக 011-24193300, 9289516712 என்ற உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியரான அப்தாப் ரசூலை, ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்கு நேரடியாக சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

"பஹல்காமில் நடந்த இந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த வகையான வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வரலாற்று ரீதியாக, காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்றுள்ளது. ஆனால் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன", என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி இந்த தாக்குதலை கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் இறந்தது மற்றும் பலர் காயமடைந்தது பற்றிய செய்திகள் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் மனதை உடைக்கிறது" என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்,

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c87przv5rx8o

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: அவசரமாக நாடு திரும்பிய பிரதமர் மோடி விமான நிலையத்திலேயே ஆலோசனை!

April 23, 2025

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்த நிலையில், சவுதி அரேபியாவுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

இன்று (ஏப்.23) காலை சவுதியில் இருந்து புதுடெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, விமான நிலைய வளாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில், பஹல்காம் பகுதியில் அப்பா மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தரை வழியாக இராணுவத்தினர்  தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின், இத்தாலி பிரதமர் மெலோனி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

https://www.ilakku.org/காஷ்மீரில்-சுற்றுலா-பயணி/

  • கருத்துக்கள உறவுகள்

22.jpg?resize=524%2C312&ssl=1

பஹல்காம் தாக்குதல்: மனதை உலுக்கும் புகைப்படம்.

காஷ்மீரின், பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர்.

இத் தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் என்பவரும் உயிரிழந்தார். 7 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், கணவனை இழந்த மனைவி அவர் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரது மனங்களையும் உலுக்கியுள்ளது.

https://athavannews.com/2025/1429225

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-283.jpg?resize=750%2C375&ssl

பஹல்காம் துப்பாக்கிச் சூட்டின் சில நாட்கள் முன்பு தாக்குதலுக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாத குழு தளபதி!

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் நகரில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட படுகொலைக்கு சில நாட்களுக்கு முன்பு, பல பயங்கரவாதத் தலைவர்கள் கலந்து கொண்ட பேரணியில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) தளபதி ஒருவர் காஷ்மீரில் ஜிஹாத் மற்றும் இரத்தக்களரிக்கு அழைப்பு விடுத்தமை தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 18 அன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ராவல்கோட்டின் கை காலாவில் இந்தியப் படைகளால் கொல்லப்பட்ட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் நினைவாக இந்தப் பேரணி நடைபெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீர் ஐக்கிய இயக்கம் (JKUM) என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான LeT தளபதி அபு மூசா, கூட்டத்தில் உரையாற்றுகையில் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

இந்திய புலனாய்வு அமைப்புகளால் சரிபார்க்கப்பட்ட ஒரு வைரல் வீடியோவில் மூசா,

“மக்கள்தொகையை மாற்றுவதற்காக இந்தியா 370 மற்றும் 35A சட்டப்பிரிவை நீக்கியது.

நீங்கள் உங்கள் 10 இலட்சம் இராணுவத்தை நிறுத்தினீர்கள்.

புல்வாமா, பூஞ்ச், ரஜோரி ஆகிய இடங்களில் ‘ராம் ராம்’ என்பதை எதிரொலிக்க விரும்பினீர்கள்.

லஷ்கர்-இ-தொய்பா உங்கள் சவாலை ஏற்றுக் கொள்கிறது.

மோடி, உங்கள் மூடிய நீதிமன்ற அறைகளுக்குள், நீங்கள் உங்கள் உத்தரவுகளை நிறைவேற்றினீர்கள்.

ஆனால் போர்க்களம் முஜாஹிதீன்களுக்கு சொந்தமானது.

முயற்சி செய்து பாருங்கள், இன்ஷா அல்லாஹ், நாங்கள் தோட்டாக்களை பொழிவோம்.

உங்கள் கழுத்தை அறுப்போம், எங்கள் தியாகிகளின் தியாகங்களை மதிப்போம் – என்று கூறியுள்ளார்.

வன்முறைக்கான அழைப்பு விடுக்கப்பட்ட நேரம் குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் படுகொலைக்கு சில நாட்களுக்கு முன்பு இந்த அழைப்பு வந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் அண்மைய ஆண்டுகளில் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாகும்.

i0j38itg_pahalgam-attack_625x300_22_Apri

https://athavannews.com/2025/1429240

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-288.jpg?resize=750%2C375&ssl

பஹல்காம் தாக்குதல்; தாக்குதல்தாரிகளின் புகைப்படம் வெளியீடு!

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த மற்றும் பலர் காயமடைந்த தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படத்தையும், அவர்களின் ஓவியங்களையும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

அவர்களில் மூன்று பயங்கரவாதிகள் ஆசிப் புஜி, சுலேமான் ஷா மற்றும் அபு தல்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

1%20%2880%29.jpg?ssl=1

தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டைச் சேர்ந்த தாக்குதல்காரர்கள், பஹல்காமில் உள்ள பிரபலமான பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை (22) துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இது அண்மைய ஆண்டுகளில் காஷ்மீரில் நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாகும்.

குறைந்தது 5–6 பயங்கரவாதிகள், உருமறைப்பு உடைகள் மற்றும் குர்தா-பைஜாமாக்களை அணிந்து, பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள அடர்ந்த பைன் காட்டில் இருந்து பைசரன் புல்வெளிக்கு வந்து AK-47 துப்பாக்கிகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தக் குழுவில் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு பள்ளத்தாக்கில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் அடங்குவர் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்ட தளபதியான காலித் என்கிற சைஃபுல்லா கசூரி, படுகொலையின் மூளையாக செயல்பட்டதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன.

காட்டுப் பகுதியைப் பயன்படுத்தி அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்ற பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் மிகப்பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

முதற்கட்ட தடயவியல் பகுப்பாய்வு மற்றும் உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்களின்படி, பயங்கரவாதிகள் இராணுவ தர ஆயுதங்கள் மற்றும் மேம்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

https://athavannews.com/2025/1429260

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோடியிடம் போய்ச் சொல்; தன்னையும் சுடச் சொல்லி கெஞ்சிய பெண்; பஹல்காம் தாக்குதலில் வெளியான பகீர் தகவல்

காஷ்மீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பிரதமர் மோடியிடம் போய்ச் சொல் என கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணிடம், தீவிரவாதி கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புல்வெளியில் குதிரை சவாரி உள்ளிட்ட கேளிக்கைகளில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அங்கு நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோரத் தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர்.

மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும் தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதற்கிடையே, காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வேதனைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். காஷ்மீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பிரதமர் மோடியிடம் போய்ச் சொல் என கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணிடம், தீவிரவாதி கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலின்போது, கர்நாடகாவைச் சேர்ந்த பல்லவி என்ற பெண், தனது கண்முன்னே கணவர் மஞ்சுநாத்தைப் பறிகொடுத்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தானும், கணவர் மஞ்சுநாத் மற்றும் மகன் அபிஜயாவும் சுற்றுலாவுக்கு பஹல்காம் வந்ததாகவும், பிற்பகல் 1.30 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் தன் கண்முன்னே கணவர் மஞ்சுநாத் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறினார். மேலும், கண்முன்னே கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தன்னையும் தனது மகனையும் சுட்டுக் கொன்று விடுமாறு தீவிரவாதிகளிடம் கெஞ்சியதாகவும், அதற்கு அந்த தீவிரவாதிகளில் ஒருவர், “நான் உன்னை கொல்ல மாட்டேன்.. இங்கே நடந்ததை உங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் போய் சொல்” என கூறியதாகவும் பல்லவி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/317217

மதத்தை கேட்டு சுட்டுக்கொன்றார்கள்; கணவரை இழந்த பெண் தகவல்

தனது கணவர் இஸ்லாமியர் அல்லாதவர் என்ற காரணத்திற்காக தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக காஷ்மீர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புல்வெளியில் குதிரை சவாரி உள்ளிட்ட கேளிக்கைகளில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அங்கு நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் கண்டுமூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோரத் தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர்.

மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும் தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதற்கிடையே, காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வேதனைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன்படி, காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் தனது கணவர் இஸ்லாமியர் அல்லாதவர் என்ற காரணத்திற்காக தீவிரவாதி சுட்டுக் கொன்றதாக பெண் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டியில், தனது கணவருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த தீவிரவாதி, துப்பாக்கி முனையில் தனது கணவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டதாகவும் கூறினார்.

மேலும் “நீ இஸ்லாமியர் இல்லை” எனக் கூறி கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்த தம்பதி திருமணம் முடிந்து தேனிலவு சுற்றுப்பயணத்துக்காக காஷ்மீர் வந்துள்ளனர். வந்த இடத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இதற்கிடையே, தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் சடலங்களை கட்டியணைத்து உறவினர்கள் கதறி அழும் காட்சி காண்போரை கணக்கச் செய்தது.

இந்தத் தாக்குதலில் இந்துக்களை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி முஸ்லிம் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரின் அனந்த்நாக்கை சேர்ந்த சையத் ஹுசைன் ஷா என்பவர் உயிரிழந்துள்ளார்.

https://thinakkural.lk/article/317220

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

துப்பாக்கி முனையில் தனது கணவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டதாகவும் கூறினார்.

மேலும் “நீ இஸ்லாமியர் இல்லை” எனக் கூறி கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

குர்ரான் வசனங்களை சொல்லும் படியும் கட்டாயபடுத்தி கொன்று இருக்கின்றார்கள் தமிழ்நாட்டில் அனேகமாக முஸ்லிம் மதத்தின் அடிப்படையில் நடந்த பயங்கரவாத செயல்களை வாக்குகள் பெற்று கொள்வதற்காக கண்டிக்க மாட்டார்கள் இம் முறை ஸ்டாலினும் விஜய்யும் கண்டித்திருருக்கிறார்கள் நல்லது.

vijayiftar.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திரமோதி கொலையில் எவ்விதத்தில் குறைந்தவர். குஜராத்தில் முதலமைச்சராக இருந்து கொன்ற முஸ்லிம் மக்கள் எத்தனை? அமெரிக்காவால் ஒரு தடவை அங்கு வர தடை செய்யப்பட்டவர். மதத்தால் மதம் கொண்டு இரு மதங்கள் கொலை செய்து கொல்கிறார்கள் என எடுக்க வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் கான் ,ஸ்டாலின் கான் இது பற்றி வாய் திறக்கவில்லையே!!!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

குர்ரான் வசனங்களை சொல்லும் படியும் கட்டாயபடுத்தி கொன்று இருக்கின்றார்கள்

1983 ஆம் ஆண்டு ஜூலை இனவழிப்பு கலவரத்தின் பொழுது, வாகனத்தில் சிங்கள உறவினருடன் மொறட்டுவாவிலிருந்து வெள்ளவத்தைக்கு செல்லும் பொழுது "பாள்தீய கியன்ட" என இனவாதிகள் கத்தியை காட்டி கேட்க அருகில் இருந்த சிங்கள‌ உறவினர் சரியாக உச்சரித்த காராணத்தால் தப்பி பிழைத்து இனறு அந்த சம்பவம் ஞாபகம் வருகின்றது

தேங்காய் எண்ணையா நல்லெண்ணையா பூசியிருக்கின்றார் என மனந்து பார்த்து இனத்தை கண்டுபிடித்து தாக்குவது.

9 hours ago, ஏராளன் said:

இந்தத் தாக்குதலில் இந்துக்களை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி முஸ்லிம் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரின் அனந்த்நாக்கை சேர்ந்த சையத் ஹுசைன் ஷா என்பவர் உயிரிழந்துள்ளார்.

https://thinakkural.lk/article/317220

ஒரு முஸ்லீம் இறந்த காரணத்தால் அது மதகலவரம் அல்ல என தடித்த எழுத்துக்களில் தினகுரல் சமாதானம் பேசியினம் போல...

  • கருத்துக்கள உறவுகள்

பஹல்காம் தாக்குதல்

AVvXsEhno8eLDAjb8sJ4CnOLs63SBKAjWmmTzRo-RA4lZeXp3GDBEDRbFtxv00lgf5dbnzP3mQggaXKjm3JAeuYmNA1RLkc-2z3p1kmgGMfvHbWeAUWO9SpyueS_7lKV3vOFS80zBtSmlph9m_IsMMxznuFfaqWUKmFLLAupNsqUfrAGVxS3jKUCNODFI05EtpBY=w640-h360


 

காஷ்மீரில் அமைதி ததும்புகிறது, அங்கு வருடத்திற்கு ரெண்டு கோடிக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்கள், கார்ப்பரேட்டுகள் பெருமுதலீடுகளைச் செய்யவிருக்கிறார்கள் எனும் செய்திகளைக் கேட்டபோது ஏதோ ஒன்று இடறலாகத் தோன்றியது. ஒரு மாநிலத்தின் எல்லா சிக்கல்களையும் சில ஆண்டுகளில் ஒழித்து சொர்க்க பூமியாக்க முடியாது. எந்த ஊரும் அதன் வரலாற்றின் தொடர்ச்சியிலே நின்றுகொண்டிருக்கிறது. வரலாறு எதையும் மறக்கவோ முழுக்க மாறவோ போவதில்லை. ஆனாலும் சற்று சபலம் ஏற்பட்டது, என் மாணவர் ஒருவர் காஷ்மீருக்கு சுற்றுலா வரும்படி கேட்டபோது. அங்கு அவரது வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என்று கூறியபோதும், அங்கு கிடைக்கும் இளஞ்சிவப்பு தேநீரை எனக்குப் பரிசளித்தபோதும். நல்லவேளை நான் என் விவாகரத்து செட்டில்மண்டின்போது ஏற்பட்ட கடனில் இருந்து மீளவில்லை. கடன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நான் பஞ்சப்பரதேசியாக இருப்பதனால் இம்மாதிரிப் பயணங்கள் செல்வதில்லை. இல்லாவிட்டால் காஷ்மீருக்குப் போய் ஒருவேளை சிக்கியிருப்பேன் எனத் தோன்றுகிறது, ஏனென்றால் அந்த அற்புதமான இயற்கைப் பேரெழிலின் தொட்டிலைக் காண்பது என் வாழ்நாள் கனவுகளில் ஒன்று.

இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம், ஏன் வணிக நோக்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தளர்த்தினார்கள் என்பதெல்லாம் வேறுவிசயம். அனேகமாக எல்லா தாக்குதல்களின் பின்னாலும் இப்படியான அரசியல் பொருளாதாரக் கணக்குகள் உள்ளன. இத்தனை பேர்கள் கொல்லப்பட்ட பிறகு தீவிரவாதிகளின் படத்தை அரசு வெளியிட்டிருக்கிறது. எதற்கு விருது கொடுப்பதற்கா? இவ்வளவு வேகமாக துல்லியமாக விவரத்தைத் தோண்டியெடுக்க முடியுமெனில் இவ்வளவு நாட்கள் என்ன செய்தார்கள்? பெஹல்கம் அருகிலுள்ள மலைப்பகுதியில் தீவிரவாதிகள் திரிவதாக கடந்த வாரம் செய்தி வந்துள்ளது. ஆனாலும் அங்கு பயணிகள் பாதுகாப்பற்றுத் திரிய அனுமதித்திருக்கிறது அரசும், காவல்துறையும், ராணுவமும். ஒவ்வொரு முறை தாக்குதல் நடக்கும்போதும் நாம் இதைச் சொல்லலாம். அதனால் எந்த பயனும் இருக்காது என நினைக்கிறேன். மக்கள் இம்மாதிரி பகுத்தறிந்து அரசைக் கேள்வி கேட்க மாட்டார்கள். அவர்கள் உணர்ச்சிகரமாகவே முடிவெடுப்பார்கள். அதனாலே நான் இந்த மயிர்பிளக்கும் விவாதங்களிலோ, வளர்ச்சிக் கதையாடலுக்காகவும், அரசியல் நோக்கத்துக்காகவும் அப்பட்டமான பாதுகாப்புப் பிரச்சினைகளை அரசு காணாமல் விடுவதன், நடந்தபின் பெரிய டிராமா போடுவதன் அபத்தத்தைப் பற்றிப் பேசுவதில் நம்பிக்கை இழந்துவிட்டேன்.

இந்தத் தாக்குதல் மிகப்பெரிய வடுவை இந்திய சமூகத்தில் ஏற்படுத்தும் - இஸ்லாமியர் அல்லாதோரை அடையாளம் கண்டு குறிவைத்துச் சுட்டிருக்கும் செய்தி வெறுப்பரசிலை வளர்க்க உதவும். அதை நினைத்தால்தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் சொல்வதைப்போல தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை. அவர்கள் எல்லைதாண்டி வருகிறார்கள், எப்போதெல்லாம் பாதுகாப்புப் படைகள் விலக்கப்படுகின்றனவோ அப்போதெல்லாம் அவர்கள் திட்டமிட்டுத் தாக்குவார்கள். மேலும் இது ஒரு வெளியுறவுத் துறை பிரச்சினை - பாகிஸ்தானின் பொருளாதாரம் உருக்குலைந்து வருகிறது. அங்கு நிலங்களை ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தனியாருக்கு தாரை வார்ப்பதால் பாதிக்கப்படும் மக்கள் போராடுகிறார்கள். அங்குள்ள ராணுவத்துக்கும் அரசுக்கும் இம்மாதிரி தாக்குதல்கள் மக்களைத் திசைதிருப்பும் காய்நகர்த்தல்கள். இதையெல்லாம் இரும்பு, உருக்கு, பித்தளைக் கரம் வைத்தெல்லாம் தடுக்க இயலாது. உஷாராக இருக்க மட்டுமே இயலும். பாகிஸ்தானில் தாக்குதல் தொடுக்காமல் அங்கு நேரடியாக பெரும் முதலீடுகளைச் செய்து அந்த அரசு, சமூகத்தின் நன்மதிப்பை வளர்த்து, பொருளாதார ரீதியாகவும் (சீனா இலங்கைக்குச் செய்வதைப்போல) நம்மைச் சார்ந்து இருக்கும் நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தினால் அவர்களுடைய ராணுவமும் நம் சொல்லுக்குக் கட்டுப்படும், இயல்பாகவே எல்லை தாண்டிய பயங்கரவாதம் அருகும். இதை நாம் கடந்த இரு பத்தாண்டுகளாக செய்திருக்க வேண்டும். இவர்கள் அரசியலின்பொருட்டு நேர்மாறாகவே செயல்படுகிறார்கள்.

கொல்லப்பட்ட 26 பேர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். பலரும் தேனிலவு கொண்டாடவும் சில நாட்கள் மகிழ்ந்திருக்கவும் சென்றவர்கள். குழந்தைகள் முன்னால் அப்பாவைக் கொல்வது கொடூரமானது. என்னமாதிரி மனிதர்கள் இவர்கள்! ரொம்ப பழமையான தீவிரவாதிகள் போதும் - ஆண்களைக் கொன்றாலே குடும்பம் நிலைகுலையும், நாடு தத்தளிக்கும் என நம்பி ஆண்களை மட்டுமே தேர்ந்து சுட்டிருக்கிறார்கள். காலம் மாறிவிட்டது - இன்றைய இந்திய சமூகம் ஆணின் உயிரைப் பெரிதாக மதிப்பதில்லை (ராணுவ வீர்கள் விதிவிலக்கு). அப்பெண்களும் 'விதவைகளாகப்' போவதில்லை. இது ஒரு பேரிழப்பு, அதிர்ச்சிதான் என்றாலும் படித்த அறிவுள்ள அவர்கள் மீண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள், சொந்தமாய் சம்பாதிது வாழ்வார்கள். அந்தக் குழந்தைகளைத்தாம் இது ஆயுள் முழுக்கவும் பாதிக்கும். அவர்களை பயமிக்கவர்களாகவோ வன்முறையாளர்களாகவோ மனச்சிக்கல் கொண்டவர்களகவோ மாற்றும். இது ஒரு கொடுங்கனவாக நீடிக்கும்.

இம்மாதிரித் தாக்குதல் நூறு கலவரங்களுக்குச் சமமானது. அது மக்களின் மனத்தில் நீங்காமல் நிலைத்திருக்கும். நமது புறநானூற்றுப் பாடல்களைப் பாருங்கள். பண்பாட்டு மனம் முழுக்க பிணங்களும் ரத்த ஆறுமே நிறைந்திருக்கிறது. எதிரியின் ரத்தத்தைக் கொண்டாடிப் பாடுவதும் நம் ரத்ததுக்காக காலங்காலமாய் இரங்குவதுமே சமூக உளவியல், இலக்கியம், பண்பாடு. இது உருவாக்கும் வெறுப்பரசியலைத்தான், ஆழமான சமூகப் பிளவைத்தான் நாம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது. தீவிரவாதிகளைக் கொன்றாலும் அது முடிவுறாது. அதற்கு இச்செய்திகளை நற்செய்திகளால் நிரப்ப வேண்டும். அதற்கு ஊடகங்களும், மத அமைப்புகளும், ஆளுமைகளும் ஒன்றிணைய வேண்டும்.

இந்த அமைதியற்ற காலம் முடிவுக்கு வரவேண்டும்.

https://thiruttusavi.blogspot.com/2025/04/blog-post_23.html

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-305.jpg?resize=750%2C375&ssl

தீவிரவாதிகளுடன் பரஸ்பர துப்பாக்கி சூடு; இந்திய இராணுவ வீரர் மரணம்!

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று (24) பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் மரணடைந்தார்.

அதைத் தொடர்ந்து பரஸ்பர துப்பாக்கிச் சூடு நடந்ததாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் உதம்பூரில் இந்த மோதல் நடந்துள்ளது.

உதம்பூர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில் இந்திய இராணுவத்தின் வெள்ளை நைட் கார்ப்ஸ் செயல்பட்டு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1429382

  • கருத்துக்கள உறவுகள்

492401951_9751335444913106_6078344396612

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு வந்தால் இரத்தம், அதே மற்றவருக்கு வந்திருந்தால் தக்காளி சட்னியா, பயங்கரவாத தாக்குதல்கள் எங்கு நடந்தாலும், யார் நடத்தினாலும் கண்டிக்கப்படவேண்டும், 2019 இல் இலங்கையில் நடை பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் உள்ளடங்கலாக.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

1983 ஆம் ஆண்டு ஜூலை இனவழிப்பு கலவரத்தின் பொழுது, வாகனத்தில் சிங்கள உறவினருடன் மொறட்டுவாவிலிருந்து வெள்ளவத்தைக்கு செல்லும் பொழுது "பாள்தீய கியன்ட" என இனவாதிகள் கத்தியை காட்டி கேட்க அருகில் இருந்த சிங்கள‌ உறவினர் சரியாக உச்சரித்த காராணத்தால் தப்பி பிழைத்து இனறு அந்த சம்பவம் ஞாபகம் வருகின்றது

உறவினர் சரியாக உச்சரித்த காராணத்தால் தப்பி பிழைத்து ] 😂

எனக்கு சிங்களம் பேசவே தெரியாதே சுற்றுலாவில் நின்றபோது காலி பென்தோட் பகுதிகளில் உறவினர்கள் சொன்ன கதைகள் நினைவுக்கு வந்து என்னையும் பயமுறுத்தியது தான் சிங்களம் படித்து காட்டு என்று சொல்லியும் அடி நடந்திருக்காம் பழை காலத்தில்

7 hours ago, putthan said:

ஒரு முஸ்லீம் இறந்த காரணத்தால் அது மதகலவரம் அல்ல என தடித்த எழுத்துக்களில் தினகுரல் சமாதானம் பேசியினம் போல..

முஸ்லிம் மத பயங்கரவாதம் அதனால் அதற்கு வெள்ளை அடிக்க வேண்டும் என்ற இவர்களின் அட்டகாசங்கள் 😒

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

ராகுல் கான் ,ஸ்டாலின் கான் இது பற்றி வாய் திறக்கவில்லையே!!!

12 hours ago, விளங்க நினைப்பவன் said:

இம் முறை ஸ்டாலினும் விஜய்யும் கண்டித்திருருக்கிறார்கள் நல்லது.

இம் முறை ராகுல் கான் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் மத பயங்கரவாதத்தை கண்டித்துள்ளனராம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஹல்காம் பயங்கரவாதிகள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி

24 APR, 2025 | 02:31 PM

image

மதுபானி(பிஹார்): பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள் என்று 

இந்திய பிரதமர்பிரதமர் நரேந்திர மோடி  தெரிவித்துள்ளார்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தைக் குறிக்கும் நிகழ்வு பிகாரின் மதுபானி நகரில் நடைபெற்றது. பிரதமர் மோடி முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றும் முன் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்துமாறு பிரதமர் மோடிட்டுக்கொண்டார்.

மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்துப் பேசிய பிரதமர் மோடி "பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சதிகாரர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள். ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா அடையாளம் கண்டு கண்காணித்து தண்டிக்கும் என்று நான் முழு உலகிற்கும் கூறுகிறேன். பூமியின் கடைசி வரை அவர்களைத் துரத்துவோம்.

அவர்களுடைய (பயங்கரவாதிகளின்) மீதமுள்ள மண்ணைப் பறிக்கும் நேரம் வந்துவிட்டது. கார்கில் முதல் கன்னியாகுமரி வரை முழு நாடும் இந்த பயங்கரவாதத் தாக்குதலால் வருத்தமாகவும் கவலையாகவும் உள்ளது. இந்த சம்பவத்தால் முழு நாடும் கோபமாக உள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள்.

மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் உள்ளனர். இந்த நேரத்தில் எங்களுடன் நின்ற பல்வேறு நாடுகளின் மக்களுக்கும் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்" என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/212813

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

உறவினர் சரியாக உச்சரித்த காராணத்தால் தப்பி பிழைத்து ] 😂

எனக்கு சிங்களம் பேசவே தெரியாதே சுற்றுலாவில் நின்றபோது காலி பென்தோட் பகுதிகளில் உறவினர்கள் சொன்ன கதைகள் நினைவுக்கு வந்து என்னையும் பயமுறுத்தியது தான் சிங்களம் படித்து காட்டு என்று சொல்லியும் அடி நடந்திருக்காம் பழை காலத்தில்

முஸ்லிம் மத பயங்கரவாதம் அதனால் அதற்கு வெள்ளை அடிக்க வேண்டும் என்ற இவர்களின் அட்டகாசங்கள் 😒

பொட்டுவைத்திருந்தால் போதும் அடி விழும்...இன்று பொட்டு,விபூதி,குல்லா போட்டவன் எல்லாம் சிறிலங்கன்ஸ் என அடிச்சு துவசம் பணிணைனவையளே கூவிக்கொண்டு திரியினம் ...

7 hours ago, ஏராளன் said:

பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள் என்று 

மோடி ஜீ இது கிரிக்கட் விளையாட்டு அல்ல....

பங்காளதேஷ் மீண்டும் பாகிஸ்தானுடன் இணையப்போகின்றதாம் என முஸ்லீம் ஆய்வாளர்கள் கருத்து சொல்லுயினம்...மோடி ஜீ தடுப்பாரா?உங்களுக்கு உதவிகள் தேவை என்றால் டோழர் அனுராவிடம் கேளுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

492217296_697642709602900_38714393378154

•அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி

இந்திய அரசு பாகிஸ்தானுடன் செய்துகொண்ட நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பது தவறான முடிவு ஆகும்.

யாரோ மூன்று பேர் அதுவும் அவர்கள் யார் என்று உறுதிப்படுத்தாத நிலையில் அவர்கள் செய்த செயலுக்காக இப்படி நீரை நிறுத்துவது தவறான ஒரு முன்னுதாரணம்.

ஏனெனில் நாளைக்கு இதே போன்று சீனா பிரமபுத்ரா நதி நீரை நிறுத்தினால் அப்போது இந்திய அரசால் குரல் எழுப்ப முடியாது.

தேர்தல் நெருங்குவதால் மோடி அரசு வழமைபோல் பயங்கரவாதத்தை வைத்து தேசபக்தி விளையாட்டு காட்டுகிறது.

இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவி இந்திய மக்களும் பாகிஸ்தானிய மக்களுமே.

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்

493316785_697699209597250_42334057070273

•ஒரு டவுட்!

இலங்கையில் எப்போது எத்தனை மணிக்கு ஈஸ்டர் குண்டு வெடிக்கப்போகிறது என்பதை துல்லியமாக கண்டறிந்து கூறிய இந்திய புலனாய்வு அமைப்புகளால்,

தங்கள் சொந்த நாட்டில் எல்லை தாண்டி வந்து கொல்லப் போகின்றனர் என்பதை எப்படி கண்டறியாமல் போனது?

தோழர் பாலன்

தற்போது 26 பேர் கொல்லப்பட்டபோது இந்திய அரசுக்கு வரும் இந்தக் கோவம், 657 தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது ஏன் வரவில்லை? தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? அல்லது இந்துக்கள் இல்லையா?

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2025 at 22:39, putthan said:

பங்காளதேஷ் மீண்டும் பாகிஸ்தானுடன் இணையப்போகின்றதாம் என முஸ்லீம் ஆய்வாளர்கள் கருத்து சொல்லுயினம்...மோடி ஜீ தடுப்பாரா?உங்களுக்கு உதவிகள் தேவை என்றால் டோழர் அனுராவிடம் கேளுங்கோ...

அநுரகுமார திசாநாயக்க மோடிக்கு போன் போட்டு 15 நிமிடம் கதைத்தவராம் இந்த பயங்கரவாதிற்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைக்கு இலங்கை தனது முழுமையான ஆதரவை கொடுக்கும் என்று சொல்லியுள்ளாராம்.ஜேவிபியின் தமிழ் அமைச்சரின் ஆதரவாளர்கள் தமிழ் மீன் தொழிளார் தலைவரை பிரச்சனைகள் பற்றி பேசியதற்கு போட்டு அடித்து தாக்கியுள்ளாராம்.


டோழர் பாலன் தனது பெயரை ஜிஹாத் பாதுகாப்பு தோழர் பாலன் என்று மாற்றி கொள்வதே பொருத்தமானது

  • கருத்துக்கள உறவுகள்

B53rYggCUAE0ylB?format=jpg&name=900x900

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.