Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரிக்கு மொத்தம் எத்தனை உடன்பிறப்புகள் ????

  • Replies 82
  • Views 3.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பிக்கரிங் இல் ஜுனித்தா நாதன் எனும் தமிழ் பெண்ணும் வெற்றி. டிரம்பின் புண்ணியத்தில் மீண்டும் ஆட்சியில் அமர்கிறது லிபரல் கட்சி. நிழலி, வாலி செம அப்செட்டில் இருப்பார்கள் என நினைக்கிறேன்🤣. ரிருடோ வைவிட கா

  • "தம்புவின்" ஆட்சியில் 100 வது நாள் நிறைவுக்கான பரிசு, கனடாவிடமிருந்து😂!

  • நிழலி
    நிழலி

    லிபரல் தான் ஆட்சிக்கு வருவார்கள் என தெரியும். இதனை நான் மார்ச் 16 இலேயே எழுதியிருந்தேன். இந்த திரியில் நான் எழுதிய ஒரு விடயத்தை மட்டும் இறுதி நேரத்தில் செய்யவில்லை. அதாவது பழமைவாத கட்சிக்கு வாக்களிக்க

  • கருத்துக்கள உறவுகள்

சோழர் இங்குள்ளவர்களை விட மாதாக்கள் தமது வம்சத்துக்கு வரும் போது.

இதுவரை கிடைத்த 'சோழ வம்ச' குறிப்புக்கள், உலோக ஏடுக்களில் மாத்திரம்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு பாவம் பார்த்து இன்னொரு 😀

3 hours ago, Kandiah57 said:

சங்கரிக்கு மொத்தம் எத்தனை உடன்பிறப்புகள் ????

கொஞ்சம் பொறுங்கோ…

மகாவம்சம் மாரி இப்பதான் கார்னி வம்சம் கதை எழுதி கொண்டிருக்கிறம். அதுக்கே கற்பனை கையிருப்பு தீர்ந்து விடும் போல உள்ளது.

இதை எழுதி முடித்த பின், கற்பனை மிச்சம் இருந்தால் - சோழ வம்சகதையோடு, சங்கரிக்கு எத்தனை சகோதரம் என்பதையும் எழுதுவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடி கொத்தனாரு, மாட்டிக் கிட்டாரு. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

Honorary citizenship எல்லாம் நம்ம கடஞ்சா, கடைந்த பருப்பு துவையல்

என்னுடைய பெயர் இருப்பதால் மாத்திரம்.

உறுதி செய்யாத தமிழ் மொழியாடலும் புரியாத பொத்தாம் பொது விற்பன்னர்.

18 hours ago, Kadancha said:

(தேடியதில் 2018 என்று இருக்கிறது, சிலவேளைகளில் honorary ஆக வழங்கப்பட்டு இருக்கலாம்.)

விடயங்கள் தெரியாவிட்டால் தள்ளி நிற்க வேண்டும்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

அப்படியென்றால் பெயர் பிழையாகவிருக்கலாம்.

நிச்சயம் யோகசங்கரி இல்லை. அவர் 90 இலேயே இறந்து விட்டார்.

விக்கியின் சான்றுப்படி, வீரசிங்கம் என்ற பருத்திதுறையை சேர்ந்த பிரின்சிப்பலுக்கு 6 ஆண் பிள்ளைகள்.

அனைவர் பெயரும், அவர்களின் ஆண் பிள்ளைகளின் பெயரும் சங்கரி என முடியும்.

6 பேரில் மூத்தவர் இராஜ சங்கரி, ஈபியால் கொல்லப்பட்டுள்ளார்.

1988 இல் இன்னொரு ஆனந்தசங்கரியின் சகோதரரான ஞான சங்கரியும், 1990 இல் ஞானசங்கரியின் மகனான யோகசங்கரியும் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

வீரசிங்கம் பிரின்சிப்பலுக்கு பிறகு அந்த குடும்பத்தில் பிறந்த ஆண்கள் அனைவரின் பெயரும் சங்கரி என முடிவதால் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

7 minutes ago, Kadancha said:

என்னுடைய பெயர் இருப்பதால் மாத்திரம்.

உறுதி செய்யாத தமிழ் மொழியாடலும் புரியாத பொத்தாம் பொது விற்பன்னர்.

முறைப்படி மார்க்கானி 5 வருடம் பூர்த்தி செய்த பின் naturalization மூலம் பிரிதானிய பிரஜை ஆனவர் என ஆதராம் மூலம் நிறுவியவன் நான்.

Registration, honorary citizenship என எங்கோ கேள்விபட்டதை எல்லாம் வாயில் வந்த கோலத்தில் எழுதியவர் நீங்கள்.

யார் பொத்தாம் பொதுவில் எழுதுபவர் என்பதும், ஆதாரபூர்வமாக தான் எழுதியதை பிழை என இன்னொருவர் நிறுவியதும், அது தியரி நான் சொல்வது நடைமுறை என சடைபவர் யார் என்பதும் களம் அறியும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kadancha said:

விடயங்கள் தெரியாவிட்டால் தள்ளி நிற்க வேண்டும்.

அரைகுறை புரிதல், அரைகா போத்தல் ஆங்கில புலமையோடு - கோமாளிதனம் பண்ணும் நீங்களே கருத்து எழுதும் போது, நான் ஏன் தள்ளி நிற்க வேண்டும்😀.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

விக்கியின் சான்றுப்படி, வீரசிங்கம் என்ற பருத்திதுறையை சேர்ந்த பிரின்சிப்பலுக்கு 6 ஆண் பிள்ளைகள்.

நீங்கள் சொல்வது சரி .....அதில் ஒருவர் 2003 இல் இலங்கை அரசுடன். இணைந்து செயல்ப்பட்டவர். யாழ்ப்பாணத்தில். ஆமி. பாதுகாப்புடன் திரிவார். அவரைத் தான் சொன்னேன் மற்றும் அந்த வீரசிங்கம். இரண்டு மனைவிகள். இருந்தது

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அரைகுறை புரிதல், அரைகா போத்தல் ஆங்கில புலமையோடு - கோமாளிதனம் பண்ணும் நீங்களே கருத்து எழுதும் போது, நான் ஏன் தள்ளி நிற்க வேண்டும்

சாதரண தமிழே புரியவில்லை, பின்பு என் வேறு மொழிக்கு?

எனவே, உங்களக்கு தான் நீங்கள் சொல்லும் புரிதல், கோமாளித்தனம் எல்லாம், செய்வது கூட தெரியாமல்,

26 minutes ago, goshan_che said:

Registration, honorary citizenship என எங்கோ கேள்விபட்டதை எல்லாம் வாயில் வந்த கோலத்தில் எழுதியவர் நீங்கள்.

Citizenship by registration நான் நேரடியாக பார்த்து இருக்கிறேன் (சிறுவயதினருக்கு, இந்த விடயத்தில் அப்படி நடந்து இருக்க கூடிய சாத்திய கூறுகள் இருப்பதும்).

மற்றத்துக்கும் சொன்ன தமிழை விளங்காமல் ...

30 minutes ago, goshan_che said:

ஆதாரபூர்வமாக தான் எழுதியதை பிழை என இன்னொருவர் நிறுவியதும்

முதலில் தமிழில் சொன்னதை விளங்கினால் தானே, நிறுவுவதோ, எதுவோ

முதலில் தமிழை கற்கவும்.

(மற்றது இந்த விடயம் 2011 - 2015/6 செய்தி, ஆய்வு, நேரடி உரையாடல் நினைவுகள், உங்களை போல இப்பொது தேடி சொல்லுது அல்ல.)

உங்களிடம் உள்ள பிரச்சனை மற்றவருக்கு ஒன்று தெரியாது என்ற மனப்போக்கு, அதுவே உங்களின் பாதாளம், உங்களுக்கு தெரியாமல்.

(நான் மார்க் கானி பற்றி சொல்லியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தேடி பார்க்கவும், இப்போதும் ஆங்காங்கே இருக்கலாம்.)

உதாரணத்துக்கு, மார்க் கானி Oxford PhD in Economics, MSc உம் அங்கு செய்ததாக, அதிலே தன மனைவியுடன் பழக்கம் வந்ததாக

இதை போன்ற விபரங்களை நன் சொல்லவில்லை ஏனெனில் அத கதைக்கு தேவை இல்லை

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

Citizenship by registration நான் நேரடியாக பார்த்து இருக்கிறேன் (சிறுவயதினருக்கு,

கார்னி என்ன 2018 இல் பபாவா… ரெஜிஸ்டிரேசன் மூலம் பிரித்தானிய பிரஜை ஆக😂😂😂.

இப்போதுதான் ரெஜிஸ்டிரேசன் என்பது சிறுவருக்கு என ஓடி விழித்துள்ளீர்கள்.

எனக்கு அதற்கு பதில் எழுதும் போதே தெரியும். ஆகவேதான் அதை கஞ்சா கப்ஸா கதை என அடையாளம் காட்டினேன்.

அதே போலத்தான் honorary citizenship கதையும். சும்மா ஏதோ வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவது பின் மற்றையொருக்கு பாடம் எடுக்க முனைவது.

நான் மேலே தந்த இணைப்பில் மிக தெளிவாக ஐந்து வருடத்தை சட்டபூர்வமாக பூர்த்தி செய்து (நேசுரல்சைசேசன்) மூலம் அவர் பிரிதானிய பிரஜை ஆகினார் என்பது சொல்லபடுகிறது.

4 hours ago, Kadancha said:

உங்களிடம் உள்ள பிரச்சனை மற்றவருக்கு ஒன்று தெரியாது என்ற மனப்போக்கு, அதுவே உங்களின் பாதாளம், உங்களுக்கு தெரியாமல்

இல்லை….

இளையராஜ திரி யை போய் வாசிக்கவும். நிழலி பல விடயங்களை ஆணித்தரமாக எடுத்து சொன்ன போது…அதை ஏற்று கொண்டதோடு…என் நிலைப்பாட்டையும் தளர்த்தி கொண்டேன்.

இப்படி பல திரிகளில் - விடயம் தெரியாத போது நான் கேட்டறிந்த பல உதாரணங்கள் உண்டு.

ஆனால் உங்களை போல் அரைகுறை அறிவு+குறை ஆங்கில புரிதல்+ சதிகோட்பாட்டு மனநிலை என ஒரு வினோத கலவையினால் விடயங்களை தலை கீழாக விளங்கி கொண்டு அதையே சரி என வந்தாடினால் - நிச்சயம் அதற்குரிய (அவ) மரியாதையை கொடுப்பேன்.

4 hours ago, Kadancha said:

உதாரணத்துக்கு, மார்க் கானி Oxford PhD in Economics, MSc உம் அங்கு செய்ததாக, அதிலே தன மனைவியுடன் பழக்கம் வந்ததாக

இதை போன்ற விபரங்களை நன் சொல்லவில்லை ஏனெனில் அத கதைக்கு தேவை இல்லை

இந்த திரியில் நீங்கள் எழுதியது 90% இப்படி சம்பந்தமே இல்லாத துணுக்குகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

எனவே, உங்களக்கு தான் நீங்கள் சொல்லும் புரிதல், கோமாளித்தனம் எல்லாம், செய்வது கூட தெரியாமல்,

கார்னி பிரிட்டிஷ் அரச வம்சம் என அவிட்டு விட்டவர் நீங்கள்.

இன்னொரு உறவு ஆதாரம் கேட்க - நம்பினால் நம்புங்கள் என பதில் எழுதியவர் நீங்கள்.

பின்னர் அவர் registration மூலம், honorary citizenship மூலம் பிரிட்டிஷ் ஆகி இருக்கலாம் என ஒரு ஊகத்தை அவிழ்த்து விட்டீர்கள்.

நான் அவர் எப்படி கவர்னர் ஆகி சில வரிடங்களின் பின், ஏனையோரை போல பிரிட்டிஷ் பிரஜை ஆகினார் என்ற ஆதாரத்தை பகிர்ந்த பின்னும் …

அவர் மனைவி பிரிட்டிஷ், ஆக்ஸ்போர்ட் என ஏதேதோ எழுதுகிறீர்கள்.

அவர் மனைவி பிறப்பால் பிரிட்டிஷ் எண்டால் போல அவர் ஆட்டோமேடிக்கா பிரிட்டிஷ் ஆக முடியாது.

மேய்வது முழுக்க நுனிப்புல் - இதற்குள் எனக்கு தமிழ் விளங்கவில்லை என்ற முறைப்பாடு வேறு 😀.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

அவர் மனைவி பிறப்பால் பிரிட்டிஷ் எண்டால் போல அவர் ஆட்டோமேடிக்கா பிரிட்டிஷ் ஆக முடியாது.

முடியாத????? ஏன். ?? அப்படி என்றால் பிரித்தானியா குடியுரிமை உள்ள இலங்கையை பூர்வீகமாக கொண்ட மணமக்கள் வெளிநாட்டில் திருமணம் செய்து வாழ்க்கைத்துணையை கூப்பிட முடியாது ....மேலும் வாழ்க்கைதுணைக்கு குடியுரிமை கிடையாது ஐந்து வருடங்களுக்கு காத்திருக்க வேண்டுமா??

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

தூத்துக்குடி கொத்தனாரு, மாட்டிக் கிட்டாரு. 😂 🤣

யாராகவிருக்கும். ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

யாராகவிருக்கும். ??

அவருடைய பெயர்... "க" வரிசையில் தொடங்குகின்றது.

உதாரணம்: க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ.

இதற்கு மேல்... உதவிகள் வழங்கப்பட மாட்டாது.

நீங்களாக கண்டு பிடிக்க வேண்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

முடியாத????? ஏன். ?? அப்படி என்றால் பிரித்தானியா குடியுரிமை உள்ள இலங்கையை பூர்வீகமாக கொண்ட மணமக்கள் வெளிநாட்டில் திருமணம் செய்து வாழ்க்கைத்துணையை கூப்பிட முடியாது ....மேலும் வாழ்க்கைதுணைக்கு குடியுரிமை கிடையாது ஐந்து வருடங்களுக்கு காத்திருக்க வேண்டுமா??

ஒரு பிரிட்டிஷ் பிரஜை, அல்லது பிரித்தானியவில் வதிவிட உரிமை உள்ள ஒருவரின் வாழ்க்கை துணையையை இங்கே வாழ கூப்பிடலாம், அதற்கு சில விதிகள் உள்ளன. அவற்றை பூர்த்தி செய்து கூப்பிடலாம்.

இப்படி வரும் ஒருவர் இதன் மூலமாக பிரிட்டிஷ் பிரஜை ஆக ஆட்டோமெடிக்காக ஆக முடியாது.

சட்டபூர்வமாக பிரிதானியாவில் 5 வருடம் வாழ்தல், அதில் கடைசி வருடம் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இங்கே வாழ்தல், ஆங்கில சோதனை, பிரித்தானியா பற்றிய சோதனை, மேலும் சில நியமங்களை பூர்த்தி செய்து, நேச்சுரலைசேசன் எனும் முறை மூலம் பிரிதானிய பிரசை ஆக மாற விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விண்னப்பத்தை அரசு ஏற்பதும் விடுவதும் அவர்கள் இஸ்டம். ஏற்று கொண்டால் அதன்பின் அந்த நபருக்கு பிரித்தானிய பிரசை சான்றிதழ் கொடுக்கப்படும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அவருடைய பெயர்... "க" வரிசையில் தொடங்குகின்றது.

உதாரணம்: க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ.

இதற்கு மேல்... உதவிகள் வழங்கப்பட மாட்டாது.

நீங்களாக கண்டு பிடிக்க வேண்டும். 🤣

க,.கா,...கு,.......கோ,...........நாலு பேர். தான் உண்டு” மற்ற எழுத்துகளில் எவருமில்லை  இவர்களில் எவரையும் சொல்ல நான் விரும்பவில்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கார்னி பிரித்தானிய பிரஜை ஆகியது இந்த வழியில் அல்ல.

அவர் முன்பு கனேடி சிட்டிசனாக இருக்கும் போதே பாட்டன்/பாட்டி வழியில் ஐரிஸ் சிட்டிசன்.

Common Travel Area விதிகளின் படி பிரிதானியா, ஐரிஷ் பிரசைகள் அவரவர் நாட்டில் எந்த தடையும் இன்றி வாழலாம், தொழில் செய்யலாம்.

ஆகவே கார்னி கவர்னாகிய போது ஏலவே ஒரு ஐரிஸ் சிட்டிசனாக அவருக்கு யூகேயில் வாழ, வேலை செய்ய முழு சுதந்திரம் இருந்தது.

அதன் மூலம் 5 வருடத்தை பூர்த்தி செய்து - விண்ணப்பித்து, பிரித்தானிய பிரசை ஆகினார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

எப்பிடித்தான் சுத்தி சுத்தி போனாலும் கனடா,அமெரிக்கா,அவுஸ் எல்லாம் பெரிய பிரித்தானியா எண்ட ஒரு தாய் வீட்டு பிள்ளையள் தானே 🤭

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எப்பிடித்தான் சுத்தி சுத்தி போனாலும் கனடா,அமெரிக்கா,அவுஸ் எல்லாம் பெரிய பிரித்தானியா எண்ட ஒரு தாய் வீட்டு பிள்ளையள் தானே 🤭

ஜேர்மனை விட்டு விட்டீர்கள். அமெரிக்காவை கிண்டினால் ஜேர்மன் தான் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

எப்பிடித்தான் சுத்தி சுத்தி போனாலும் கனடா,அமெரிக்கா,அவுஸ் எல்லாம் பெரிய பிரித்தானியா எண்ட ஒரு தாய் வீட்டு பிள்ளையள் தானே 🤭

உண்மையில் இவர் எல்லோரினதும் தாய் வீடு - இத்தாலியின் ரோம், ஸ்கெண்டிநேவியன் நோர்ஸ், ஜேர்மனியின் சக்சனியும், பிரான்ஸின் நோர்மண்டியும் எண்டும் சொல்லலாம்.

ஒரு காலத்தில் செல்டிக் அல்லது கெல்டிக் எனப்படும் குழுவே பிரிதானிய+ஐரிஷ் தீவுகளில் இருந்தது.

இவர்களின் கடைசி அரசி பூடீக்கா.

இவர்களை ரோம சாம்ராஜ்ய படை வெற்றி கொண்டு, அதேபோல் வட பகுதிகளை வைகிங்கள் ஆளுகைக்கு உட்படுத்தி, ரோம் விலக, சக்சனியில் இருந்து வந்தோர் ஆண்டு, அதன்பின் நோமன் படை எடுத்து வந்து ஆங்கிலோ சக்சனை வீழ்த்தி -

இப்படியாக, ரோமன், வைகிங், ஜேர்மன், பிரெஞ் + உள்ளூர் செல்டிக் எல்லாம் கலந்த கலவைதான் நாம் அறியும் ஆங்கில இனம்.

ஓரளவு கலப்பு இல்லாதவர்கள் ஸ்கொட்லாந்து, அயர்லாந்து மக்கள். அதிலும் பின்னாளில் ஆங்கிலேய கலப்பு உண்டு.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆகவே கார்னி கவர்னாகிய போது ஏலவே ஒரு ஐரிஸ் சிட்டிசனாக அவருக்கு யூகேயில் வாழ, வேலை செய்ய முழு சுதந்திரம் இருந்தது.

இதேபோல் அப்போ யூகே, ஈயூ உறுப்பினர் என்பதால் - அயர்லாந்து சிட்டிசனான கார்னி - ஈயூ freedom of movement அடிப்படையிலும் யூகேயில் வாழ, வேலை செய்ய இயன்றிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, nunavilan said:

ஜேர்மனை விட்டு விட்டீர்கள். அமெரிக்காவை கிண்டினால் ஜேர்மன் தான் அதிகம்.

உண்மை. எப்படி பிரிதானியா இரெண்டு ஆயிரம் ஆண்டு ஐரோப்பிய இனக்கலவையோ….

அதேபோல் இரு நூறு ஆண்டு ஐரோப்பிய இனக்கலவைதான் அமெரிக்கா.

பிகு

உலகை கட்டி ஆளும் இனங்கள் பலரும் இப்படி கலப்பினமாக இருப்பது - ஒரு மரபணு கலப்பால் கிடைத்த அனுகூலத்தின் பலன் என்பது என் கருதுகோள்.

ஜஸ்டின் அண்ணா போன்றோர் என்ன நினைக்கிறார்கள் என அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

விலங்குகளிலும், தாவரங்களிலும் hybrid vigor என்று ஒன்று இருக்கிறது. ஒரே மாதிரியான இயல்புடைய சோடிகளை விட வெவ்வேறு இயல்புடைய சோடிகள் உருவாக்கும் கலப்பின வழித்தோன்றல்கள், சில நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியைக் காட்டும், நல்ல வளர்ச்சியைக் காட்டும், எனவே சந்ததி பிழைக்க உதவும். இது உயிரியல் ரீதியானது.

குடியேற்றம், பல்லினத்தன்மை என்பவற்றின் காரணமாக மனித சமூகத்திற்குக் கிடைக்கும் நன்மை உயிரியலையும் தாண்டிய ஒன்று: எண்ணங்களின் பல்லினத்தன்மை - diversity of ideas. இது தான் ஐரோப்பாவில் நடந்திருக்கும் என நினைக்கிறேன். ஆக்கிரமிக்கும் எல்லா மக்களையும் முற்று முழுதாகத் தங்களைப் போலவே யோசிக்கும் படி வற்புறுத்தாமல், அவர்களது ஐடியாக்களையும் உள்வாங்கிக் கொண்ட ரோமர்கள் இந்த எண்ணங்களின் பல்லினத்தன்மைக்கு உதவியிருக்கிறார்கள்.

இதற்கு நேர் எதிரான நிலைக்கு உதாரணம் ஜப்பான். ஒரு ஆய்வில், கடந்த 3000 ஆண்டுகளில் ஜப்பான் நோக்கி மக்கள் குடியேறிய (population influx) சந்தர்ப்பங்கள் இரண்டு தான் என்று கண்டறிந்திருக்கிறார்கள். தற்போது கூட நவீன ஜப்பானில் ஒரு தெளிவான குடியேற்றக் கொள்கையோ, அகதி அந்தஸ்துக் கொள்கையோ இல்லை என நினைக்கிறேன். மக்களும் பல்லினம் அல்ல, ஐடியாக்களும் பல்லினத் தன்மையை இழந்து விட்டன. இதன் விளைவு, ஜப்பானின் சனத்தொகையும், பொருளாதார நிலையும் தேங்கி விட்டது.

இதன் அடிப்படையில் தான் diversity is a blessing என்று நான் நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, nunavilan said:

ஜேர்மனை விட்டு விட்டீர்கள். அமெரிக்காவை கிண்டினால் ஜேர்மன் தான் அதிகம்.

எல்லாம் முதலாம் ,இரண்டாம் உலகப்போரினாலை புலம்பெயர்ந்த ஜேர்மனியர்கள். அப்பிடி புலம் பெயர்ந்த சந்ததியிலை வந்தவராலை தான் இப்ப ஜேர்மனிக்கு தலையிடி. 🤣

கடுவன் பூனை தனக்கு பிறந்த பூனைக்குட்டியளையே கடிச்சு கொல்லுமாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எல்லாம் முதலாம் ,இரண்டாம் உலகப்போரினாலை புலம்பெயர்ந்த ஜேர்மனியர்கள். அப்பிடி புலம் பெயர்ந்த சந்ததியிலை வந்தவராலை தான் இப்ப ஜேர்மனிக்கு தலையிடி. 🤣

கடுவன் பூனை தனக்கு பிறந்த பூனைக்குட்டியளையே கடிச்சு கொல்லுமாம். 😂

இல்லை.

ஜேர்மனியர்களின் அமெரிக்கா நோக்கிய குடிபெயர்வு…

முதலாவது ஆங்கிலேய குடியேற்றவாசிகளுடனேயே ஆரம்பித்து விட்டது. ஜேம்ஸ் டவுன் எனும் முதல் குடியேற்றத்தை ஸ்தாபித்தவர்களில் ஒரு ஜேர்மனியரும் இருந்தார்.

பெரும் எண்ணிக்கையிலான ஜேர்மானிய மக்களின் குடியேற்றம் 1600 களின் பின் அரைப்பாதியில் ஆரம்பித்து விட்டது. முதலாவது ஜேர்மனிய காலனி இந்த காலகட்டத்தில் பென்சில்வேனியாவில் அமைக்கப்படுகிறது.

2020 குடிசன மதிப்பீட்டின் படி ஏறத்தாழ 14% அமேரிக்கர் ஏதோ ஒருவழியில் ஜேர்மன் வம்சாவழியினர்.

இன்றைக்கு நாம் அமெரிக்கன் விடயங்கள் என அறியும் ஹாம் பேர்கர், ஹாட் டாக், கிறிஸ்மஸ்து மரம், எல்லாமுமே ஜேர்மானிய குடியேற்றவாசிகள் கொண்டு போனவைதான்.

இரு உலகபோர்களின் பின் மேலும் குடியேற்றம் அதிகரித்தாலும்.. ஐக்கிய அமேரிக்க நாடுகள் என்ற எண்ணக்கரு கருத்தரிக்கும் முன்பே, ஜேர்மானிய மக்கள் அந்த மண்ணில் கணிசமான அளவில் வாழ தொடங்கி விட்டனர்.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.