Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2025 at 14:42, goshan_che said:

நீலனை சுப்பர் பவர் ஏமாற்றி விடும் எனவே அதை தடுக்க அவரை கொன்றோம் என்பது உங்கள் வாதம் எனில். புலிகளை நோர்வேயும் ஏமாற்றியது என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

எனும் போது ஒரு சமூக விரோதியை கூட கொன்றிருக்க கூடாது. சமூகம் தான் அவனை சமூக விரோதி ஆக்கியது. ஏன் சுட்டு கம்பத்தில் கட்ட வேண்டும்???

  • Replies 134
  • Views 5.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Thumpalayan
    Thumpalayan

    இதை எழுதுவதால் பல விமர்சனங்கள் வரும், ஆனாலும் அந்த சமயம் நடந்த விடயங்கள் எனது கண் முன்னாலேயே நடந்ததால் எழுதுகிறேன் 2002 O/L படித்துக்கொண்டிருந்தேன். யுத்த நிறுத்தம் ஆரம்பித்து புலிகளின் அரசியல் துறை ந

  • goshan_che
    goshan_che

    நன்னிக்கு நன்றி. உங்கள் கருத்தும் நியாயப்படுத்தலும் ஏற்றுகொள்ளவே முடியாதது. ஆனால் பல தரவுகளை தந்துள்ளீர்கள். அதற்குதான் நன்றி. இந்த தரவுகளின் அடிப்படையில்: பாலா அண்ணை “ஏற்புடையது” என கூறிய தீர்வைத்தான

  • நிழலி
    நிழலி

    ஆயுத வழியின்றி அரசியல் வழியில் தன்னால் முடிந்த அளவுக்கு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற முனைந்த ஒரு தமிழர் இன்னொரு தமிழ் தாய் பெற்ற ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட அவலமும் விடுதலையின் ப

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2025 at 05:19, goshan_che said:

ஒரு முக்கியமான கேள்வி?

யாரும் பதில் சொல்ல விழையலாம்.

ஜூலை 99 இல் நீலனை கொல்கிறார்கள்.

டிசம்பர் 2000 தில் தன்னிச்சையான போர் நிறுத்தம் அறிவிக்கிறார்கள்.

இது ஏப்ரல் 2001 இல் முறிந்தாலும் - விரைவிலேயே 2002 தொடக்கதில் சமாதான உடன்படிக்கை எழுதி விடுகிறார்கள்.

இடையே 2001 தேர்தலுக்கு முதலே கரிகாலன் மூலம் புலிகளின் மறைமுக ஆசி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க சிவராமுக்கு கிடைக்கிறது.

இதன் பின் கூட்டமைப்பு உருவாகி 2001 தேர்தலுக்கு பின் புலிகள் அதை தம் அரசியல் முகமாகவும் பயன் படுத்தி, அதற்காக செல்வம், சுரேஸ் என மிக மோசமான தமிழர்/புலி விரோதிகளை கூட மன்னித்து ஏற்று கொண்டனர்.

இவை எல்லாம் நீலன் கொல்லப்பட்டு இரு வருடத்துள் நிகழ்ந்து விட்டன.

நீலனை விட்டு வைத்திருந்தால் - அவர் பின்னாளில் புலிகளுக்கு சார்பான ஒரு எம்பியாக கூட ஆகி இருக்கலாம்.

அதேபோல் சங்கரி முறுகிகொண்டு நிண்டபோது கூட அவரை கொல்லவில்லை. ஆனால் சர்வதேச அரங்கில் கதிர்காமருக்கு அடுத்து பாரிய பின்னடைவை புலிகளுக்கு ஏற்படுத்தியவர் சங்கரி. அவர் மீது ஒரு கல்லை கூட எறியவில்லை.

நீலனுக்கு அமெரிகாவில் உள்ள நட்பு வட்டம் பற்றி தெரிந்து கொண்டே, தற்கொலை போராளியை பாவித்து கொல்லும் அளவுக்கு அவர் விளைவித்த, அல்லது விளைவிக்க போகும் ஆபத்து என்ன என புலிகள் கருதினார்கள்? ஏன் இதை செய்தார்கள்?

தவறான முடிவினால் எடுக்கப்பட்ட உயிர். இதனைச் செய்திருக்கத் தேவையில்லை. அமெரிக்கச் சார்பு நீலன் அமெரிக்க நலன்களை முன்னிறுத்தியே தீர்வினை வரைய உதவியிருக்கலாம், இதுகூட அனுமானம் தான்.

இவரைக் கொன்றதால் எமக்கு சர்வதேசத்தில் ஏற்பட்ட அவப்பெயரும், பாதிப்பும் மிகக் கடுமையானது. கதிர்காமர் கொல்லப்பட்டதைக் காட்டிலும் நீலனின் கொலை பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சிலவேளைகளில் கதிர்காமை சந்திரிக்காவிற்கு அறிமுகம் செய்துவைத்தவர் நீலன் என்பதாலேயே இவரை புலிகள் குறிவைத்தார்களோ என்றும் நினைப்பதுண்டு. எதுவாகவிருந்தாலும் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய கொலை.

ஒரு விவாதத்திற்கு இவரைக் கொன்றதாலேயே அமெரிக்கா புலிகளை அழித்தது அல்லது அழிக்கத் துணை நின்றது என்று எடுத்துக்கொண்டாலும், அமெரிக்கா எப்போதுமே தர்மத்தின்பால் நின்றிருக்கிறதா என்கிற கேள்வியும் வருகிறதே? 1980 களின் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா சிங்கள ஆக்கிரமிப்பிற்குத் துணையாகவே நின்றிருக்கிறது. புலிகளை அழிப்பதே இலங்கையுடனான தனது வெளியுறவுக் கொள்கை என்றளவிற்குச் செயற்பட்டு வந்திருக்கிறது. ஆகவே அமெரிக்கா, நீலனின் இறப்பின் பின்னர்தான் புலிகளை அழிக்க எண்ணியது என்று நான் நினைக்கவில்லை. தமிழர் போராட்டத்தை எவர் முன்னெடுத்திருப்பினும் அதனை அமெரிக்கா எதிர்த்தே இருக்கும். நீலனின் கொலை இதில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் என்று நான் கருதவில்லை.

Edited by ரஞ்சித்
spelling

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

புலிகள் அளவுக்கு அல்லது அதை விட மேலாக எமக்கான ஒரு கெளரவமான தீர்வை நீலன் விரும்பினாரா?

இது தனிப்பட்ட ஒருவரின் கருத்து. 2009 இற்குப் பின்னர் புலிகள் மீது ஏற்பட்ட வெறுப்பினால் உமிழப்படுவது. ஆகவே இதனை சரியா தவறா என்று அமிலப் பரிசோதனை செய்து உங்களின் நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.

தமிழர் நலனில் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக அக்கறை கொண்டவர்கள் எமதினதில் முன்னரும் இருக்கவில்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

ஆம். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து, மேலே இருப்பதும் உங்களுடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பது போல😎!

மிக அண்மைய உதாரணமாக, தமிழர் நலனில் நீண்டகால அடிப்படையிலான அக்கறை 2002 சமாதான முயற்சியில் தமிழர் தரப்பில் இருந்து வெளிப்படவில்லை என்பதைப் பொது வெளியில் கிடைக்கும் தகவல்களே உறுதி செய்திருக்கின்றன. ஜப்பானுக்குப் போகாமல் விட்டது முதல், மாவிலாற்றை மறித்தது வரையில் இவை எல்லாவற்றையும் பல இடங்களில் எழுதியாகி விட்டது. தலையை மண்ணுக்குள் புதைத்த படி "சே, இவையள் புலி வெறுப்பில் சொல்லுகீனம்" என்பதையும் பல இடங்களில் வாசித்த படி தான் இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

  நீலன் "தீர்வுப் பொதி" பற்றிய தகவல்கள் இந்த Pod Cast / உரையாடலிலும் கூட நல்ல தரவுகள் இருக்கின்றன.

  1. https://open.spotify.com/episode/2yFDuEECgxibkTiiKrA6xQ?si=HqgkRH8cTXihgm5pFxAbVQ

  2. https://www.clubhouse.com/room/m3NZlOLv?utm_medium=ch_room_pxr&utm_campaign=La3Jfj4GY_4zaOBl0GzNOA-1758659&chs=WX9TOo7DV%3AYkp4SC8nZ1m2IezzceF5gy5wQc4n-7qKs4HFhWt3VRs

  3. https://www.clubhouse.com/room/my9Q8RE4?utm_medium=ch_room_pxr&utm_campaign=La3Jfj4GY_4zaOBl0GzNOA-1758660&chs=WX9TOo7DV%3AYkp4SC8nZ1m2IezzceF5gy5wQc4n-7qKs4HFhWt3VRs

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தர்மத்தின் பால் நின் றதில்லை என்றால் தமிழர் தரப்பு தர்மத்தின் பால் நின்றதா?

சிங்கள பேரினவாத இன ஒதுக்கலுக்கு எதிராக போராட்டத்தில் உள்ள நியாயப்பாட்டை தவிர தமிழர் போராட்ட தரப்பின் செயற்பாடுகளும் தர்மத்தின் பால் நிற்கவில்லை. இதற்கு பல உதாரணங்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

எனும் போது ஒரு சமூக விரோதியை கூட கொன்றிருக்க கூடாது. சமூகம் தான் அவனை சமூக விரோதி ஆக்கியது. ஏன் சுட்டு கம்பத்தில் கட்ட வேண்டும்???

நீலனை தவிர மற்றவர்களை சுடலாம். ......இது என்னுடைய கருத்து இல்லை ஆனால் யாழ் களத்திலுள்ள பலருடைய. கருத்தாக இருக்கிறது அதற்கு அவர்கள் கூறும் வியாக்கியானம் நீலன். சிறந்த தீர்வை எழுதினார் என்பது நீலன,..

படித்தவர்.

பல நாடுகளுக்கு யாப்புகள். வரைய. உதவினார் பிரபலமானவர். .....இவற்றை எற்றுகொள்ள முடியும் உண்மையும்கூட

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு .....நல்ல தீர்வு எழுதினார் என்பதை நான் எற்கவில்லை ..எப்படி ஏற்க முடியும்??? தான் எழுதும் தீர்வை

1,..இலங்கை பாராளுமன்றம் ஏற்காது

2,...புத்தபிக்குகள். மாகசங்கங்கள். நிராகரித்து விடும்

3,. இலங்கையில் உள்ள அனைத்து நீதிமன்றம்களும். தள்ளுபடி செய்யும்

4,...பக்கத்து நாடு டெல்லிக்கு வருமாறு உத்தரவு பிறப்பிபார்கள்.

இவை அனைத்தும் திருவாளர். நீலனுக்கு தெரியும் மொத்தத்தில் தன் எழுதும் தீர்வு அமுலுக்கு வாராது எனபதை அவர் நன்கு அறிவார். 100%. தெரியும் அமுலுக்கு வரவில்லை என்றால் யாரை குற்றம் சாட்டலாம்....குற்றவாளி ஆக்கலாம். என்பதும் அவருக்கு தெரியும் நல்ல தீர்வு எழுதினால் மட்டுமே போதுமா?????? குறைந்த பட்சம்

1,.2,.3,..தடைகளை அகற்ற வேண்டமா?? இதை அகற்றும்படி நீலன். கேட்டாரா.?? சந்திரிக்காவிடம். ஏன் கேட்கவில்லை .......அவருக்கு அமுல்படுத்துவது அல்லது அமுல்படுத்தப்படவில்லை என்பது பற்றி எள்ளவும் கவலை இல்லை காரணம் இந்த தீர்வை எழுதியது புலிகளை குற்றம் சாட்டுவதுக்குகாக மட்டுமே அதை இலங்கை தமிழர்கள் வடிவாக. திறமையாக. செய்கிறார்கள் இன்னும் 100 ஆண்டுகளுக்கு செய்வார்கள் எனவேதான் இந்த நீலன் எழுதிய தீர்வு மிகவும் நல்லது சிறந்தது

எதிர்பார்த்ததை விட புலிகளை நன்றாகவே குற்றம் சாட்டுகிறாது 🙏

புலிகளால். தான் இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை தீர்க்கப்படவில்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

கொலைகள் தான் ஈழத்தமிழினத்தின் விதிகளை மாற்றியது என்றால் ஆரம்பத்திலிருந்து இன்று வரைக்கும் அனைத்தையும் மீள அலச வேண்டும் அல்லவா?

ஓம்…

ஆனால் ஆங்கிலத்தில் all men are equal but some men are more equal than others என்பார்கள் - அதே போல் சில கொலைகள் எம் சரிதிரத்தின் போக்கையே மாற்றின.

17 hours ago, nunavilan said:

போகவில்லை.நோர்வேயின் ந(டி)டுநிலைமையை நம்பி தான் புலிகள் பேச்சுவாத்தைக்கு போனார்கள்.

இல்லை - வேறு வழியில்லை இப்போதே முடிப்போம் என மேற்கில் இருந்து சொல்லபட்டதால், போனார்கள். இதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக புலிகள் இருந்த்தார்கள்.

இப்படி இருந்தார்கள் என்பது உண்மை ஆனால் இதில் புலிகள் தேவையில்லாமல் ஏனைய பிரதிநிதிகளை மழுங்கடிக்க அதிக சிரத்தை எடுத்து கொண்டார்கள்.

ஏக பிரதிநிதிகளாக எம்மை ஏற்கிறீர்களோ இல்லையோ, தீர்வு வேண்டும் எனில் எம்மோடு தான் பேச வேணும் என சொல்லி விட்டு சும்மா இருந்திருக்கலாம்.

இந்த ஏக பிரதிநிதிகள் விடயத்தில் புலிகள் அழுங்கு பிடியாக நின்றது - அவர்கள் சர்வாதிகாரிகள் என்ற இலங்கையின் பிரச்சாரத்துக்கு துணை போனது.

17 hours ago, nunavilan said:

சந்திரிக்காவோ அல்லது நீலனோ ஒரு பேச்சும் நடத்தாமல் தீர்வு கண்டு விடுவார்களா??

இல்லை தீர்வு புலிகளிடம் பேசாமல் சாத்தியபட்டிருக்காது.

ஆனால் ஒரு புறம் புலிகள், மறு புறம் இனவாதிகள் - இடையே ஒரு தீர்வை ஆராய, தொடக்க புள்ளியாக நீலனின் முயற்சி இருந்திருக்கலாம்.

அப்படிதான் அதை மேற்கு நாடுகள் பார்த்திருக்கும்.

17 hours ago, nunavilan said:

அல்லது ஒரு திணிப்பை திணிப்போம் என தொடங்கினார்களா?

புலிகள் அப்போ இருந்த நிலையில், இலங்கை எதையும் திணித்து வென்றிருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

அல்லது உலகத்துக்கு தாங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயல்கிறோம் என நடிக்க சந்திரிக்கா நீலனை பயன்படுத்தினாரா??

இருக்கலாம்.

இதற்கு நீலன் தெரிந்தே உடன்பட்டிருக்கலாம்…

அல்லது பயன்படுவது போல் இருந்து, ஒரு தீர்வை முந்தள்ளுவோம் என நீலன் நினைத்திருக்கலாம்..

அல்லது நீலனை பயன்பட அனுமதிப்பது போல் நடித்து, சந்திரிகா, நீலன் இருவரையும் அமெரிக்கா பயன் படுத்தி இருக்கலாம்..

ஆனால் நீலனை கொன்று, சந்திரிக்கா எதிர்பார்க்காத அதீத நற்பலனை அவருக்கு புலிகள் கொடுத்தனர்.

17 hours ago, nunavilan said:

எனும் போது ஒரு சமூக விரோதியை கூட கொன்றிருக்க கூடாது. சமூகம் தான் அவனை சமூக விரோதி ஆக்கியது. ஏன் சுட்டு கம்பத்தில் கட்ட வேண்டும்???

தமக்கு இராணுவ தகவல், போராளி, மக்கள் உயிர் இழப்பை ஏற்படுத்தியவர்களை தவிர ஏனையோர் எவரையும் கொன்றது தப்பே.

ஆனால்…மேலே குசா அண்ணைக்கு கொடுத்த பதிலை பார்க்கவும்.

6 hours ago, ரஞ்சித் said:

ஒரு விவாதத்திற்கு இவரைக் கொன்றதாலேயே அமெரிக்கா புலிகளை அழித்தது அல்லது அழிக்கத் துணை நின்றது என்று எடுத்துக்கொண்டாலும், அமெரிக்கா எப்போதுமே தர்மத்தின்பால் நின்றிருக்கிறதா என்கிற கேள்வியும் வருகிறதே? 1980 களின் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா சிங்கள ஆக்கிரமிப்பிற்குத் துணையாகவே நின்றிருக்கிறது. புலிகளை அழிப்பதே இலங்கையுடனான தனது வெளியுறவுக் கொள்கை என்றளவிற்குச் செயற்பட்டு வந்திருக்கிறது. ஆகவே அமெரிக்கா, நீலனின் இறப்பின் பின்னர்தான் புலிகளை அழிக்க எண்ணியது என்று நான் நினைக்கவில்லை. தமிழர் போராட்டத்தை எவர் முன்னெடுத்திருப்பினும் அதனை அமெரிக்கா எதிர்த்தே இருக்கும். நீலனின் கொலை இதில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் என்று நான் கருதவில்லை.

நீங்கள் சொல்வது நியாயமானதே.

அமெரிக்கா தனது நலனை ஒட்டி, இலங்கை சார்பு நிலையை ஆரம்பம் முதலே எடுத்தாலும்….

அதை மாற்றியமைக்க வேண்டிய நிலையில், மாற்ற முயல வேண்டிய நிலையில் நாம் இருந்தோம்.

நீலனின் கொலை, இதற்கு நேர் எதிராக - அமெரிக்காவின் எம் மீதான நிலைப்பாட்டை மேலும் இறுக செய்தது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நன்னி,

2 பக்கத்துக்கே சந்தோசப்பட்டனியள்…

4 பக்கம் அண்ணன் மூச்சை பிடித்து இழுத்து வந்துள்ளேன்…

சந்தோசம்தானே🤣.

பாதி பெருமை கந்தையா அண்ணை, நுணாவுக்கும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

தம்பி நன்னி,

2 பக்கத்துக்கே சந்தோசப்பட்டனியள்…

4 பக்கம் அண்ணன் மூச்சை பிடித்து இழுத்து வந்துள்ளேன்…

சந்தோசம்தானே🤣.

பாதி பெருமை கந்தையா அண்ணை, நுணாவுக்கும்🤣.

நன்னியருக்கு இன்னொரு அசைன்மென்ற் இருக்கிறது. "அமிரைச் சுட்ட போது குறுக்கே வந்து தடுக்க முயன்ற யோகேஸ்வரனும் பலியானார்"- இது தான் அந்த இடத்தில் தப்பியவர்கள் வெளிப்படுத்தியது.

ஆனால், யாழ் களத்திலேயே அமிரோடு சேர்த்து யோகேஸ்வரனையும் (புலிகளின் குண்டு அவரைக் கொன்று விட்டதால்😂) துரோகி என்று எழுதும் "மண்ணு லாறிகள்" இருக்கிறார்கள்.

அவர்களுக்காக நன்னியர், "யோகேஸ்வரனின் துரோகம்" என்ற ஒரு புதிய தேடலைத் தொடங்க வேண்டுமென்று "புலி வெறுப்பாளர்கள் சங்கம்"😎 சார்பில் கேட்டுக் கொள்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு செய்த யுத்த குற்றங்களை சர்வதே நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமாம். ஆனால் புலிகள் செய்த படு கொலைகளை அவர்களின் ஆதரவாளர்களே தங்களுக்குள் விசாரணை செய்து அந்த கொலைகள் எல்லாம் நியாயமானவை தான் என்று தீர்ப்பு எழுதுவார்களாம். 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, island said:

இலங்கை அரசு செய்த யுத்த குற்றங்களை சர்வதே நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமாம். ஆனால் புலிகள் செய்த படு கொலைகளை அவர்களின் ஆதரவாளர்களே தங்களுக்குள் விசாரணை செய்து அந்த கொலைகள் எல்லாம் நியாயமானவை தான் என்று தீர்ப்பு எழுதுவார்களாம். 😂😂

உயிருடன் இருப்பவர்களை தான் விசாரணை செய்ய முடியும்

இறந்துபோனவர்களை. எப்படி விசாரணை செய்யலாம்??? இது இயற்கையான மரணங்கள் இல்லை கொல்லப்பட்டார்கள் ஆகவே புலிகளிற்கு தண்டனை” வழங்கப்பட்டு விட்டது தண்டனை பெறமாலிருப்பது இலங்கை அரசாங்கம் தான் எனவே சர்வதேச விசாரணை வேண்டும் .......புலிகள் இருந்தால் பெயர்கள் முகவரிகளைத். தாருங்கள்” அவர்களையும் விசாரணை செய்யலாம் சாதரண பொதுமக்கள் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் தெரியாத?? கோத்தா சொன்னார் தமிழன் தான் புலிகள் ......புலிகள் தான் தமிழர்கள் இதன்படி கொல்லப்பட்ட எல்லா தமிழரும். புலிகள் தான் உயிர் வாழும் எல்லா தமிழர்களும் கூட. புலிகள் தான் இதனை எந்தவொரு தமிழனும் மறுக்கவில்லை கோத்தா சொன்னது ஏற்றுகொண்டு விட்டார்கள் ஆகவே புலிகள் சுட்டார்கள். என்றால் தமிழர்கள் சுட்டார்கள். என்பது ஆகும்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

நீலனை கொன்றது சரி என்று இதே திரியில் எழுதி கொலையாளிக்கு வக்காலத்து வாங்கினீர்கள். இப்போது அது கொலைக் குற்றம், அதற்கு தான் புலிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்கின்றீர்கள். எப்படியோ நீலனை கொன்றது தவறு, அது குற்றம் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. சர்வதேச நாடுகள் குற்றம் என்று சொல்லி விட்டது. இவ்வாறான தவறுகள், கொலைகள் தமிழர்களையும் அவர்களது போராட்டதையும் பாதித்தது என்பதே எனது வாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, island said:

எனது வாதம் புலிகளால். தீர்வு தடைப்படவில்ல என்பது .....நான் நீலனை கொன்றது சரி என்று சொல்லவில்லை நீலன் தீர்வு எழுதியது பிழை என்கிறேன் அவர் எழுதிய தீர்வு புலிகளால் தடைப்படவில்லை என்கிறேன் ஏனென்றால்

1,..இலங்கையில் நீதிமன்றம்கள். புலிகளின். கட்டுப்பாட்டில் இல்லை

2,....இலங்கை பாராளுமன்றம் புலிகளின். ஆளுமையில். இல்லை

3,......பௌத்த புக்குமிருக்கு புலிகள் படியளப்பவர் இல்லை எனவே அவர்கள் புலிகளிற்கு கட்டுபட்டவர்களில்லை

நீலனின் தீர்வு அமுலுக்கு வர மேலே உள்ள மூன்றும். அனுமதிக்கவில்லை இவற்றை நீலனால் ஏன் அகற்ற முடியவில்லை???? அல்லது விரும்பவில்லை ???

இலங்கையில் தமிழருக்கு தீர்வுக்காக. புலிகளை போல். அர்ப்பணிப்புடன் எவருமே உழைத்தது இல்லை இது தான் உண்மை எனவே புலிகள் தீர்வு திட்டங்களை தடுத்தார்கள். குழப்பினார்கள் .......என்று தயவுசெய்து சொல்ல வேண்டாம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

கந்தையர் நீங்கள் எதையும் உங்கள் விருப்படி கூறிவிட்டு போகலாம். அதை உலகம் கணக்கில் கூட எடுக்கப்போவதில்லை.

சர்வதேச சமூகம், சக்தி வாய்ந்த நாடுகள் என்ன நினைக்கிறார்களோ அது தான் முக்கியம். அவர்களை பகைத்து ஒரு போதும. தனி நாடு எடுக்க முடியாது. உலகம் எமக்கு தேவையில்லை அவர்களது நல்லுறவு தேவையில்லை என்று தான் தோன்றி தனமாக நடந்தால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டும். அது தான் நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, island said:

என்ன சொல்லுகிறீர்கள். ?? உலகத்தை பகைக்கவில்லை என்றால் ..தமிழ் ஈழம் கிடைத்திருக்குமென்றா.???

உங்களால் தடைகளை இல்லை என்று நிறுவ முடியவில்லை நீலன் எழுதினார். நீலன் எழுதினார். உங்கள் கருத்துகள் சந்தர்பவாதம். ஆனாது புலிகள் வென்றிருந்தால். புலி பாட்டு பாடுவதும் தோற்றால். இகழுவதும். .........கருத்துகள் ஆகாது பிரபாகரன் பற்றி நீங்கள் எப்படி கதைக்க முடியும் ?? சர்வதேசம் சர்வதேசம். என்கிறீர்கள் .....இலங்கையில் தமிழருக்கு அவர்களிடம் என்ன தீர்வு உண்டு” ??? அவர்களிடம் ஏதுமில்லை .....ஏதுமில்லாத. சர்வதேசம். பற்றி கவலைப்பட முடியாது நீங்கள் கண்ணீர் வடிப்பது உங்கள் பலவீனம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

சர்வதேசத்திடம் ஒன்றுமே இல்லை என்றால் கடந்த 40 வருமா வருடத்துக்கு இரண்டுமுறை ஜேனிவா ஐக்கிய நாடுகள் சபைக்கு மினக்கெட்டு பஸ் பிடிச்சு போய் ஒரு நாள் முழுவதும் „We want Tamil eelam“என்று ஏன் கத்தினார்கள்? இப்போதும் வருடத்திற்கு இரண்டுமுறை அங்கே ஏன் போகிறார்கள்? ஒன்றுமிலாத இடத்துக்கு போவது லூசுத்தனம் தானே! 😁

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, island said:

என்ன. தாருவார்கள் என்று அறியத் தான் போவது,...ஆனால் எங்களுக்கு தெரியும் ஒன்றும் தரமாட்டார்கள் என்று .....ஏனெனில் நாங்கள் ஆசியாவிலிருக்கிறோம். ஐரோப்பாவில் இருந்தால் போகாமல் தருவார்கள் அங்கு போவதை. வைத்து தாருவார்கள். என்பது முட்டாள்தனம் சர்வதேசம் கண்டத்துக்கு கண்டம் செயல்பாடுகள் வேறுபாடும். 40 வருடம் ஒன்றும் தரவில்லையென்றால் புரிய வேணும் உப்பு சப்பற்ற. கேள்விகள் கேட்க கூடாது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

என்ன தருவார்கள. என றதை அறிய 40 வருடம் போனவர்கள் என்றால் அந்த அடி முட்டாள்களுக்கு தீர்வு கொடுக்க கூடாது. அது தான் நல்லது. Enjoy 😂😂😂😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

என்ன தருவார்கள. என றதை அறிய 40 வருடம் போனவர்கள் என்றால் அந்த அடி முட்டாள்களுக்கு தீர்வு கொடுக்க கூடாது. அது தான் நல்லது. Enjoy 😂😂😂😂😂😂😂

அடிமுட்டாள்களா ??? யார்????????? இலங்கை தமிழர்களா??

ஜேர்மனியில் ஏதாகினும் ஒரு மருத்துவமனைக்கு போங்கள். அங்கேயே தமிழன் தான் மருத்துவர்

ஏதாவது ஒரு தொழில்சாலைக்கு வாருங்கள் அங்கும் தமிழன் தான் ஐயா பொறியியலாளர்

இப்படி ஒவ்வொரு துறையையும். தமிழன் தான் நிர்வாகிக்கிறான்.

இந்த நிலமை தான் அனைத்து நாடுகளிலும்

கனடாவில் நிதியமைச்சரும். சட்டமா அதிபரும். தமிழன். தான்

ஆகவே தமிழர்களை அடிமுட்டாள்கள் என்பதை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்

இலங்கையை மிகப்பெரிய கடனாளி ஆக்கியதும். தமிழன் தான் தமிழன் இல்லாத நாடு இல்லை தமிழனுக்கு என்று ஒரு நாடும் இல்லை அப்படியிருந்தும்.

தரைப்படை. கடல் படை. விமானபடை என்று மூன்று படையணிகள் . வைத்திருந்தவனும்.தமிழன் தான் இந்த படையணிகளை கண்டு பல நாடுகள் பயந்தன.

அப்படி இருந்த தமிழன் இலங்கை தமிழன் எப்படி எப்படி முட்டாள் என்று அழைக்கலாம். 😀😀🤪

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

அடிமுட்டாள்களா ??? யார்????????? இலங்கை தமிழர்களா??

சிலர் இவ்வாறான கருத்தாடல்களுக்கு வருவதே தமது புலியெதிர்ப்பு வக்கிரத்தைக் கொட்டுவதற்காகத்தான். என்னதான் தமிழர்களுக்கான நலன்கள் குறித்தே தாம் பேசுவதாகக் கூறினும் அவர்களின் கருத்துக்களில் மிகத்தீவிரமான புலியெதிர்ப்பு உணர்வு இழையோடியிருப்பதை அவதானிக்கலாம். புலிகளை மட்டுமல்லாமல், தமிழர்களில் பெரும்பாலானவர்கள் (இவர்களையொத்த சிலரைத் தவிர) இன்றும் புலிகளை ஆதரிப்பதால் ஏற்படும் இயல்பான வெறுப்பும் இவர்களை இவ்வாறு எழுதத் தோன்றுகிறது.

இவர்களின் சில வருடங்களுக்கு முன்னரான கருத்துக்களைப் படித்திருப்பீர்கள் என்றால், "தமிழ்த்தேசியம் தவறானது, தமிழருக்கென்று தனிநாடு தேவையற்றது, தமிழினத்திற்கென்று தனியேயான அடையாளம் தேவையற்றது, தமிழ்ப் பிரிவினைவாதத்தினையும், இனவாதத்தையும் உருவாக்கியவர்கள் தமிழரசுக் கட்சியும் கூட்டணியும்தான், சிறிமாவும் பண்டாரநாயக்கவும் தமிழர்களுக்கு நண்மை புரிந்தவர்கள், தமிழர்கள் அடையாளம் துறந்து இலங்கையராக தம்மை அடையாளப்படுத்துவதே சரியானது" என்று இவர்கள் வாதித்ததைப் படித்திருப்பீர்கள்.

தமிழர்கள் நலன் தொடர்பாக இவர்களுக்கு ஒரு உரோமம் தன்னும் அக்கறை இல்லை. புலிகளையும், பெரும்பாலான தமிழர்களையும் அவமதிக்கக் களம் திறக்கப்பட்டிருக்கிறது. அதனால் இங்கு வந்து கடை விரிக்கிறார்கள். இவர்களுடன் வாதிட்டு உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரஞ்சித் said:

நன்றி உறவே

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

அடிமுட்டாள்களா ??? யார்????????? இலங்கை தமிழர்களா??

ஜேர்மனியில் ஏதாகினும் ஒரு மருத்துவமனைக்கு போங்கள். அங்கேயே தமிழன் தான் மருத்துவர்

ஏதாவது ஒரு தொழில்சாலைக்கு வாருங்கள் அங்கும் தமிழன் தான் ஐயா பொறியியலாளர்

இப்படி ஒவ்வொரு துறையையும். தமிழன் தான் நிர்வாகிக்கிறான்.

இந்த நிலமை தான் அனைத்து நாடுகளிலும்

கனடாவில் நிதியமைச்சரும். சட்டமா அதிபரும். தமிழன். தான்

ஆகவே தமிழர்களை அடிமுட்டாள்கள் என்பதை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்

இலங்கையை மிகப்பெரிய கடனாளி ஆக்கியதும். தமிழன் தான் தமிழன் இல்லாத நாடு இல்லை தமிழனுக்கு என்று ஒரு நாடும் இல்லை அப்படியிருந்தும்.

தரைப்படை. கடல் படை. விமானபடை என்று மூன்று படையணிகள் . வைத்திருந்தவனும்.தமிழன் தான் இந்த படையணிகளை கண்டு பல நாடுகள் பயந்தன.

அப்படி இருந்த தமிழன் இலங்கை தமிழன் எப்படி எப்படி முட்டாள் என்று அழைக்கலாம். 😀😀🤪

கந்தையர், கதையை மாற்ற வேண்டாம்.

கேள்விக்கு விடை தெரியாத ஒரு பரீட்சாத்தி தனது வசதிக்காக தானே ஒரு கேள்வியை எழுதி அதற்கு பதிலெழுதுவது போல் எழுதி உள்ளீர்கள்.

சர்வதேத்திடம் தீர்வு இல்லை அவர்களால் எந்த தீர்வையும் தர முடியாது, என்று கூறியவர் நீங்கள். அவ்வாறு நீங்கள் கூறியதற்கு, அப்படியானால் ஏன் வருடா வருடம் ஜெனிவா ஜநாவுக்கு தீர்வை வலியுறுத்தி செல்கிறார்கள் என்று நான் கேட்டேன். அதற்கு நீங்கள், என்ன தருவார்கள் என்று சும்மா அறிவதற்கே அதாவது விடுப்பு அறிவது போல அறிவதற்கே 40 வருடங்களாக தமது வேலைகளை விட்டு விட்டு வருடாவருடம் இருமுறை ஜநாவுக்கு செல்கிறார்கள் என்று கூறி அங்கு செல்பவர்களை அவமானப்படுத்தியதும் நீங்கள் தான். அதற்கான பதிலடியே எனது பதில். அதற்கு பதிலெழுத முடியாததால் அதை மடை மாற்றுவதற்கு முழு தமிழர்களையும் தேவையில்லாமல் உங்கள் வசதிக்காக இங்கு இழுத்தது நீங்கள் தான்.

ஐநவுக்கு போராட்டங்களுக்கு சென்ற தமிழர்கள் எவரும் எவரும் சர்வதேச நல்லுறவு எமக்கு தேவையில்லை என்று அடி முட்டாள்கள் போல் கூறவும் இல்லை கூறவும. மாட்டார்கள். அப்படிப் பேசுவது அடி முட்டாள்தனம் என்து அவர்களுக்கும் தெரியும்.

கந்தையர் நாம் எதை பற்றி விவாதித்தோமோ அதற்குள் மட்டும் நிற்கவும். தேவையில்லாமல் நான் கூறாத விடயங்களை நீங்களே இதற்குள் திணித்து அதற்கு பதில் எழுத வேண்டாம். நீங்கள் பட்டியலிட்ட அந்த பெரும் பாலான அறிவுசார் தமிழர் எவரும் இப்படியான லூசுத்தனமாக கருத்தை கூறவும் இல்லை கூறவும் மாட்டார்கள். அதனால் தான் அவர்கள் பல துறைகளில் முன்னேறி உள்ளார்கள் என்பதை மனதில் கொள்க.

(அதற்கிடையில் கிடைத்தது சாட்டு என்று வரலாறு என்ற பெயரில் இராமாயணம், மகாபாரத காவியங்கள் எழுதும் ஒருவர் வேறு வந்து வேறு புலம்பி விட்டுச் சென்றுள்ளார். பாவம் 😂😂😂)

Edited by island

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.