Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் பயணம் குறித்து வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வு பயணம் மேற்கொள்வார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட பல மூத்த பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஃ

அத்துடன், ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி கலந்து கொண்டு, முக்கிய உரையை நிகழ்த்துவார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஜனாதிபதி கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.

இராஜதந்திர உறவுகளின் 55 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிலையில், வியட்நாம் விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன்  அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மூத்த அரச அதிகாரிகள் குழுவும் வருவார்கள் செல்வார்கள் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதியின்-வியட்நாம்-பயணத்தின்-போது-பல-ஒப்பந்தங்கள்/175-356595

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-27.jpg?resize=750%2C375&ssl=

ஜனாதிபதியின் வியட்நாம் பயணம் தொடர்பான அறிவித்தல்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வியட்நாமுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் தொடர்பில் இலங்க‍ை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் மே 04 முதல் மே 06 வரை வியட்நாம் சோசலிச குடியரசிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்துவார்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட மூத்த பிரமுகர்களையும் சந்திப்பார்.

ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின விழாவில் ஜனாதிபதி பிரதம விருந்தினராகவும் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்துவார்.

இந்த அரசு பயணத்தின் போது இரு தரப்பினரும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களை முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வணிக சமூகத்துடனான சந்திப்புகளும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளின் 55 ஆண்டுகளைக் குறிக்கும் நிலையில், வியட்நாம் சோசலிசக் குடியரசிற்கான பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1430326

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம் 04 ஆம் திகதி ஆரம்பம்

Published By: DIGITAL DESK 2

02 MAY, 2025 | 03:43 PM

image

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக, ஜனாதிபதி மே 03 ஆம் திகதி இரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இடம்பெறும் ஜனாதிபதியின் இந்த வியட்நாம் அரச விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அரச விஜயத்தின் போது ஜனாதிபதி, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன்,  கம்யூனிஸ கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரையும் சந்திக்கவுள்ளார்.

மேலும், ஹோ சி மிங் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதன்போது சிறப்புரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  கைச்சாத்திடவும், வர்த்தக சமூகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்லுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழு ஒன்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இந்த அரச விஜயத்தில் பங்கேற்க உள்ளனர்.

https://www.virakesari.lk/article/213504

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வியட்நாமியர்கள் சுய நம்பிக்கை உடையவர்கள். தம் உழைப்பை நம்புபவர்கள்.சுறுசுறுப்பானவர்கள். அநேகமான சுயதேவை பொருட்களை தாங்களே உற்பத்தி செய்பவர்கள்.

அப்படியிருக்கும் போது பல்லுக்குத்தும் ஊசியை கூட இறக்குமதி செய்யும் சிங்கள ஸ்ரீலங்காவிற்கு அங்கு என்ன வேலை?

ஓ....ஒரு வேளை பௌத்த கம்யூனிச கொள்கை வரவேற்கின்றதோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஓ....ஒரு வேளை பௌத்த கம்யூனிச கொள்கை வரவேற்கின்றதோ?

அநுர அதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, nunavilan said:

அநுர அதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

இனி வரும் காலங்களில் ஈழத்தமிழர்கள் மதத்தையும் பேசு பொருளாக எடுக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அனுரவுக்கு வியட்நாமில் அமோக வரவேற்பு

image_8387285b59.jpg

வியட்நாமுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம்  நோய் பாய் சர்வதேச விமான நிலையத்தில்   அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டு சனிக்கிழமை (03) நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமின் நோய் பாய் (Noi Bai International Airport) சர்வதேச விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை (04) முற்பகல் சென்றடைந்தார்.

அங்கு, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் வெளியுறவுத் துறை பிரதி அமைச்சருமான நுயென் மான் குவோங் (Nguyen Manh Cuong) உள்ளிட்ட அரச பிரதிநிதிகளால் அமோகமாக வரவேற்கப்பட்டனர்.

இந்த வரவேற்பு நிகழ்வில் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டேம்  (Trinh Thi Tam),வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் போசித பெரேரா மற்றும் இலங்கைத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டனர்.

  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸ கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை  ( Tô Lâm), ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் சந்திக்க உள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களிலும், திங்கட்கிழமை (05)  ஈடுபட உள்ளார்.

ஹோ சி மிங் நகரில், மே 06 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிறப்புரை நிகழ்த்துவார்.

இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடவும், வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அரச விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழுவும் இணைந்துகொண்டுள்ளது.  

image_2cfd36c61a.jpg

https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதி-அனுரவுக்கு-வியட்நாமில்-அமோக-வரவேற்பு/175-356662

  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாம் சென்றடைந்தார் ஜனாதிபதி

Published By: DIGITAL DESK 3

04 MAY, 2025 | 12:26 PM

image

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை  (03) நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று ஞாயிற்றுக்கிழமை (04) முற்பகல் வியட்நாமின் நோய் பாய் (Noi Bai International Airport) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அங்கு, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் வெளிவிவகார பிரதி அமைச்சருமான நுயென் மான் குவோங் (Nguyen Manh Cuong) உள்ளிட்ட அரச பிரதிநிதிகளால் அமோகமாக வரவேற்கப்பட்டனர்.

இந்த வரவேற்பு நிகழ்வில் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டேம்  (Trinh Thi Tam),வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் போசித பெரேரா மற்றும் இலங்கைத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-05-04_at_11.48.50_AM

இன்றைய தினம் பிற்பகல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸ கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை  ( Tô Lâm) சந்திக்க உள்ளார்.

ஜனாதிபதி நாளை திங்கட்கிழமை (05) வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களிலும் ஈடுபட உள்ளார்.

மேலும், மே 06 ஆம் திகதி ஹோ சி மிங் நகரில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிறப்புரை நிகழ்த்துவார்.

இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடவும், வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அரச விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழுவும் இணைந்துகொள்கின்றது.

https://www.virakesari.lk/article/213635

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கும் வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

Published By: DIGITAL DESK 2

04 MAY, 2025 | 04:58 PM

image

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை ( Tô Lâm) சந்தித்து கலந்துரையாடினார்.

வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான 55 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டமை குறிப்பித்தக்கது.

WhatsApp_Image_2025-05-04_at_16.25.19.jp

WhatsApp_Image_2025-05-04_at_16.25.13.jp

 WhatsApp_Image_2025-05-04_at_16.25.20.jp

https://www.virakesari.lk/article/213660

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி பாய் டின் (Bai Dinh) விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்; ஜனாதிபதிக்கு வியட்நாம் மக்களின் அமோக வரவேற்பு 

Published By: VISHNU

04 MAY, 2025 | 09:16 PM

image

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை (04)  தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றான பாய் டின் (Bai Dinh) விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.

WhatsApp_Image_2025-05-04_at_20.03.20_97

இலங்கை மற்றும் வியட்நாம் தேசியக் கொடிகளை ஏந்திய வியட்நாம் மக்களால் ஜனாதிபதிக்கு அதன் நுழைவாயிலில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

WhatsApp_Image_2025-05-04_at_20.03.20_2a

விகாரை வளாகத்தை சுற்றிப் பார்த்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை காண வீதியின் இருபுறமும் ஏராளமானோர் கூடியிருந்தனர், மேலும் அவர்கள் இரு நாடுகளின் தேசியக் கொடிகளையும் அசைத்து தமது மரியாதையை செலுத்தினர்.

WhatsApp_Image_2025-05-04_at_20.03.21_20

ஜனாதிபதி,  விகாரையில்  வழிபாடு நடத்திய பிறகு, தேரர்கள் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியை ஆசிர்வதித்தனர்.

WhatsApp_Image_2025-05-04_at_20.03.21_aa

பின்னர், ஜனாதிபதி விகாரை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா போதியை வழிபட்டதுடன்,   இந்த போதி,  2023 ஆம் ஆண்டு பாய் டின்  (Bai Dinh) விகாரை வளாகத்தில் நடுவதற்காக இலங்கையிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட அநுராதபுரம் ஸ்ரீ மகா போதியின் ஒரு கிளையாகும்.

WhatsApp_Image_2025-05-04_at_20.03.22_81

இலங்கை மத்திய கலாசார நிதியத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ்  போதியை சுற்றி நிர்மாணிக்கப்பட்ட  மதிலையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திறந்து வைத்தார்.

WhatsApp_Image_2025-05-04_at_20.03.23_50

பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விகாரை வளாகத்தில் சால் மரக்கன்றை நட்டார். இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகையையும் பார்வையிட்டார்.

WhatsApp_Image_2025-05-04_at_20.03.23_b3

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விகாராதிபதி தேரருக்கு  நினைவுப் பரிசும் வழங்கிவைக்கப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-05-04_at_20.03.29_a6

WhatsApp_Image_2025-05-04_at_20.03.29_91

WhatsApp_Image_2025-05-04_at_20.03.28_3b

WhatsApp_Image_2025-05-04_at_20.03.27_ce

WhatsApp_Image_2025-05-04_at_20.03.25_37

WhatsApp_Image_2025-05-04_at_20.03.27_90

WhatsApp_Image_2025-05-04_at_20.03.24_f2

WhatsApp_Image_2025-05-04_at_20.03.25_05

https://www.virakesari.lk/article/213674

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடனான பகிர்வுக்கு நன்றி ஏராளன் ......... ! 😁

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் 04 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

Published By: VISHNU

05 MAY, 2025 | 07:32 PM

image

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் பல்வேறு துறைகள் சார்ந்த நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒரு இணக்கப்பாட்டு ஒப்பந்தமும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

WhatsApp_Image_2025-05-05_at_18.55.18_0f

வியட்நாம் ஜனாதிபதி மாளிகையில் திங்கட்கிழமை (05) இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன.

WhatsApp_Image_2025-05-05_at_18.55.17_e9

இதன்போது, வியட்நாம் சோசலிச குடியரசுக்கும்  இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையே சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பாக  உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2025-05-05_at_18.55.19_8a

வியட்நாமின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இலங்கையின் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையிலான இயந்திர உற்பத்தி ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்,வியட்நாம் விவசாய விஞ்ஞான அகாடமிக்கும் இலங்கை விவசாயத் திணைக்களத்திற்கும் இடையிலான விவசாய ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் வியட்நாமின் இராஜதந்திர அகாடமிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், மற்றும் வியட்நாம் வர்த்தக ஊக்குவிப்பு முகவர் நிறுவனத்திற்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்கள் (MoU) கைச்சாத்திடப்பட்டன.

WhatsApp_Image_2025-05-05_at_18.55.25_48

இந்த ஒப்பந்தங்கள் மூலம் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளல், இராஜதந்திரிகள், நிபுணர்கள்,அதிகாரிகள், வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றம் அதேபோன்று, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிகழ்ச்சிகள், பல்வேறு பாடநெறிகள், கருத்தரங்குகள், இராஜதந்திரத் துறையில் ஏனைய கல்வி நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி தொடர்பான நிபுணத்துவத்தை ஒழுங்கமைக்கவும் பரிமாறிக்கொள்ள வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp_Image_2025-05-05_at_18.55.22_85

இரு தரப்பினருக்கும் பொருத்தமான வர்த்தகத் தகவல் மற்றும் சந்தை நுண்ணறிவு பரிமாற்றம், இரு நாடுகளிலும் நடைபெறும் வர்த்தக கண்காட்சிகள் மற்றும் ஊக்குவிப்பு வாய்ப்புகளில் கூட்டு பங்கேற்பு மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கு இடையே சந்திப்புகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பரந்த அளவில் வர்த்தக ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்வேறு வகையான வாய்ப்புகளை வழங்கும்.

WhatsApp_Image_2025-05-05_at_18.55.30_d7

இந்த இணக்கப்பாடுகள் ஊடாக குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், கடற்றொழில் நடவடிக்கைகள், ஆடைக் கைத்தொழில் மற்றும் பெறுமதி கூட்டப்பட்ட விவசாயத்திற்கு குறிப்பிடத்தக்க சந்தை வாய்ப்புகளை இரு நாடுகளுக்கும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp_Image_2025-05-05_at_18.55.27_4b

WhatsApp_Image_2025-05-05_at_18.55.32_17

https://www.virakesari.lk/article/213760

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2025 at 08:34, குமாரசாமி said:

ஓ....ஒரு வேளை பௌத்த கம்யூனிச கொள்கை வரவேற்கின்றதோ?

சிவப்பு தொப்பி,சிவப்பு சேர்ட் போன்றவற்றை அதிஉயர் பிராண்ட்களில்(கில்விகர்,கெல்வின் கல்ன்,போலோ) செய்ய முயற்சி எடுக்கின்றார் போலும்..

  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாம் சென்ற ஜனாதிபதி அநுரகுமார நாடு திரும்பினார்

06 MAY, 2025 | 05:17 PM

image

வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் 01.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,  கடந்த 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். 

இந்த அரச விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாம் ஜனாதிபதியுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்து வியட்நாம் அரச பிரதானிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார்.

மேலும், ஜனாதிபதி கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமுடனும் (To Lam)  கலந்துரையாடினார். கடந்த 55 ஆண்டுகளாக உயர்ந்த அரசியல் நம்பிக்கை, நெருக்கமான மக்கள் உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட பாரம்பரிய நட்புறவு மற்றும் பன்முக ஒத்துழைப்பின் வளர்ச்சியை இரு நாடுகளும் இதன்போது வலியுறுத்தின.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பையும், வலுவான ஒத்துழைப்பையும் எதிர்காலத்தில் தேசிய அபிவிருத்தியில் இன்னும் வலுவாகப் பேணுவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

மேலும், ஜனாதிபதி வியட்நாம் போர் வீரர்கள் நினைவிடம் மற்றும் சுதந்திரப் போராட்டத் தலைவரும் சுதந்திர வியட்நாமின் முதல் ஜனாதிபதியுமான ஹோ சி மின் அவர்களின் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந்த அரச விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விங்குரூப் (Vingroup), சன் குழுமம் (Sun group), எப். பி. டி. கூட்டுத்தாபனம் (FPT Corporation), சொவிகொ (SOVICO) குழுமம் ரொக்ஸ் (ROX) குழுமம் ஆகிய வியட்நாமில் உள்ள பாரிய அளவிலான தொழிலதிபர்களுடன் பல கலந்துரையாடல்களை நடத்தினார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றான பாய் டின் (Bai Dinh) விகாரையின் புதிய போதி மதிலையும்  திறந்து வைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பௌத்த உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்  அங்கு சிறப்புரையாற்றினார். 

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் இணைந்தார்.

WhatsApp_Image_2025-05-06_at_17.08.44__1

WhatsApp_Image_2025-05-06_at_17.08.43.jp

WhatsApp_Image_2025-05-06_at_17.08.44.jp

https://www.virakesari.lk/article/213821

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.