Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

495372004_712637821160356_33833594427687

இந்த 6 மாதங்களில் தெற்கில், பல மாவட்டங்களில் மூன்றாமிடத்தில் இருந்தாலும் மொட்டுக் கட்சியின் வாக்குகளில் மீண்டும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

SJB ம் கணிசமான வாக்குகளை அதிகரித்துள்ளது.

NPP தனது வாக்குவங்கியை அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் இழந்துள்ளது. இந்த வீழ்ச்சியின் வேகம் மீண்டும் 3% வெகுதொலைவில் இல்லை என்பதைக்காட்டுகிறது. ஆகையால் இனி அவர்கள் தமது முகமூடிகளை அகற்றத்தொடங்குவார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. அதைக்கொண்டுதான் மாகாண சபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும்.

Monisha Kokul

  • கருத்துக்கள உறவுகள்

495368684_1101564888673551_7954849570638

  • கருத்துக்கள உறவுகள்

496000006_998731102440371_26979326587535

தமிழ்த் தேசிய மண்ணிலிருந்து சுமந்திரன் வெளியேற்றம்.
சுமந்திரனின் வீட்டு வட்டாரமான குடத்தனை வட்டாரத்தில் தமிழரசுக்கட்சி படு தோல்வியடைந்தது. ஆனால் தமிழ்த்தேசியம் வென்றது🔥

சசிகலா ரவிராஜ்

  • கருத்துக்கள உறவுகள்

494473443_1059673645976043_8970702093122

கரைச்சியில் தமிழரசு வரலாறு காணாத வெற்றி💜
வாழ்த்துகள் 💜💕 Shritharan Sivagnanam சேர்
21 வட்டரங்களில் 20 வீடு, ரெலிபோன் 1💜
கிளிநொச்சி மாவட்டத்தின் 40 வட்டாரங்களில் 36 வட்டாரங்களை தமிழரசுக்கட்சி தன்வசப்படுத்தியிருக்கிறது.
கரைச்சி 21 இல் 20 🏠
பூநகரி 11 இல் 10 🏠
பளை 8 இல் 6 🏠

K J Arun Kumar

Edited by தமிழ் சிறி

6 hours ago, கிருபன் said:

யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

யாழ்ப்பாணம் மாநகர சபை

தமிழ் தேசிய பேரவை – 12 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 13 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி – 10 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 04 ஆசனங்கள்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 04 ஆசனங்கள்.

ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம்

ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனம்

வல்வெட்டித்துறை நகர சபை

தமிழ் தேசிய பேரவை – 07 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 05 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி – 03 ஆசனங்கள்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம்

நல்லூர் பிரதேச சபை

தமிழ் மக்கள் கூட்டணி  – 04 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 06 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி – 01 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம்

சாவகச்சேரி நகர சபை

தமிழ் தேசிய பேரவை – 06 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 06 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி – 03 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 02 ஆசனங்கள்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம்

நெடுந்தீவு பிரதேச சபை

தமிழரசு கட்சி – 04ஆசனங்கள்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 03 ஆசனங்கள்.

ஊர்காவற்துறை பிரதேச சபை

தமிழ் தேசிய பேரவை – 3 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 02 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி – 03 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 04 ஆசனங்கள்.

வலி. வடக்கு பிரதேச சபை

தமிழ் தேசிய பேரவை – 06 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 11ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி – 09 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 03 ஆசனங்கள்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 03 ஆசனங்கள்.

தமிழ் மக்கள் கூட்டணி – 01 ஆசனம்

ஐக்கிய மக்கள் சக்தி – 02 ஆசனங்கள்.

வலி.தென் மேற்கு பிரதேச சபை

தமிழ் தேசிய பேரவை – 04 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 13 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனங்கள்

பருத்தித்துறை பிரதேச சபை

தமிழரசு கட்சி – 09 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி – 01 ஆசனம்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம்.

சுயேச்சை குழு – 1 ஆசனம்.

சாவகச்சேரி பிரதேச சபை

தமிழ் தேசிய பேரவை – 02 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 06 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி – 04 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 05ஆசனங்கள்

வேலணை பிரதேச சபை

தமிழ் தேசிய பேரவை – 02 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 08 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி – 04 ஆசனங்கள்.

தமிழ் மக்கள் கூட்டணி – 01 ஆசனங்கள்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 03 ஆசனங்கள்.

ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம்

சுயேச்சை குழு 1, 2 மற்றும் 3 ஆகியவற்றுக்கு தலா  01 ஆசனம்.

வலி.தென் மேற்கு பிரதேச சபை

தமிழ் தேசிய பேரவை – 01 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 08ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி – 02 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 04 ஆசனங்கள்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம்.

பருத்தித்துறை நகர சபை

தமிழ் தேசிய பேரவை – 05 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 03 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம்

வலி. தெற்கு பிரதேச சபை

தமிழ் தேசிய பேரவை – 03 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 14 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம்

காரைநகர் பிரதேச சபை

தமிழ் தேசிய பேரவை – 02 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 01 ஆசனம்.

தேசிய மக்கள் சக்தி – 02 ஆசனங்கள்.

தமிழ் மக்கள் கூட்டணி – 02 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி – 02 ஆசனங்கள்.

சுயேச்சை குழு – 02 ஆசனங்கள்.

வலி தென்மேற்கு பிரதேச சபை

தமிழ் தேசிய பேரவை – 03 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 10 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 01 ஆசனம்.

ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம்

வலி.கிழக்கு பிரதேச சபை

தமிழ் தேசிய பேரவை – 05 ஆசனங்கள்

தமிழரசு கட்சி – 11 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி – 09 ஆசனங்கள்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 05 ஆசனங்கள்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 01 ஆசனம்

ஐக்கிய தேசிய கட்சி – 01 ஆசனம்

தமிழ் மக்கள் கூட்டணி –  02 ஆசனங்கள்.

சுயேச்சை குழு 1 – 2 ஆசனங்கள்.

சுயேச்சை குழு 2 – 1 ஆசனம்.

https://adaderanatamil.lk/news/cmadh1qsd005cqpbs3snrj5ma

இதில் ஒரு சில இடங்களைத் தவிர, எந்த இடங்களிலும் தமிழ் கட்சி எதுவும் பெரும்பான்மை பெறவில்லை.

தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசிய பேரவையும் அதிக உறுப்பினர்களை பெற்ற இடங்களில் ஒன்றில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவில் சபைகளை கொண்டு நடத்த வேண்டும், அல்லது இருவரும் (தமிழரசுக் கட்சி + தமிழ் தேசிய பேரவை) இணைந்து சபைகளை கொண்டு நடத்த வேண்டும். இன்னும் சில இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யின் ஆதவில் சபைகளை நடாத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிடின், தேசிய மக்கள் சக்தியுடன் அல்லது ஈபிடியுடன் தான் கூட்டு சேர வேண்டி வரும்.

முக்கியமாக தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசிய பேரவையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் ஒற்றுமையாக இல்லாவிடின், ஈபிடியும், தேசிய மக்கள் சக்தியும் பலம் பெறும் வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.

.07 May, 2025 | 04:06 PM

image

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களை வெற்றிகொண்டதன் காரணமாக நேற்று (6) இரவு பட்டாசு கொழுத்திக் கொண்டாடியது. 

அத்துடன் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, அவர்கள்  ஊர்வலமாகவும் அழைத்துச் செல்லப்பட்டனர். 

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபை உட்பட பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழ் அரசு கட்சி வெற்றிவாகை சூடியுள்ளது.

WhatsApp_Image_2025-05-07_at_10.46.42.jp

மட்டக்களப்பு மாநகர சபையின் 20 வட்டாரங்களில் 16 வட்டாரங்களை இலங்கை தமிழ் அரசு கட்சி கைப்பற்றிய நிலையில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலான மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாநகர சபையின் பல்வேறு வட்டாரங்களிலும் நேற்று மாலை வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதுடன் வேட்பாளர்களை மக்கள் கொண்டாடிய நிகழ்வும் நடைபெற்றது.

இதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றிபெற்றதையடுத்து அங்கு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளரும் ஊடகவியலாளருமான செ.நிலாந்தனின் ஆதரவாளர்களினால் கட்சியின் சின்னத்தின் வடிவம் கொண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 

WhatsApp_Image_2025-05-07_at_10.46.40__1

WhatsApp_Image_2025-05-07_at_11.51.44.jp

WhatsApp_Image_2025-05-07_at_11.46.34__1

WhatsApp_Image_2025-05-07_at_11.46.30.jp


மட்டக்களப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்  | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2025  : அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சாதனை!  

07 May, 2025 | 04:33 PM

image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2025 இல் நாடு முழுவதும் பெறப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி  அதிகப்படியான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. 

அதன்படி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கிய தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியானது 4,503,930 வாக்குகளையும் 3,927 உறுப்பினர்களையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது. 

இரண்டாவது நிலையாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி  2,258,480 வாக்குகளையும் 1,767 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டது. 

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 4.94 மில்லியன் வாக்குகளைப் பெற்று நாட்டின் அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 2025இல் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 954,517 வாக்குகள், 742 உறுப்பினர்களை பெற்று பின்னடைவை சந்தித்திருக்கிறது. 

2018இல் களத்தில் இறங்கி 693,875 வாக்குகளைப் பெற்றும், பலமற்ற கட்சியாக இருந்த மக்கள் விடுதலை முன்னணி, தற்போது நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 43.26 வீத வாக்கு எண்ணிக்கையான 4,503,930 வாக்குகளையும் 3927 உறுப்பினர்களையும் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2025  : அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சாதனை!   | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

495568010_9749074845146646_5104141116426

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025

1 மொத்தம் 339 உள்ளூராட்சி மன்றங்களில் 266 உள்ளூராட்சி மன்றங்களைத் தேசிய மக்கள் சக்தி வென்று இருக்கிறது. ஆனால் இதில் நூற்று எழுபது சபைகளில் மட்டுமே எந்தப் பிக்கல் பிடுங்கலுமில்லாத தனி ராஜ்யம் சாத்தியமாகிறது. பல இடங்களில் அரசு பெற்றிருக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையானது மொத்த எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் ஆசனங்களின் கூட்டுத் தொகைக்கு சமனாகிறது. இவற்றிலும் எந்தப் பிரச்னையுமின்றி ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை எதிர்க்கட்சிக்கு அதிகமாய் உள்ள சபைகளில் தான் பிரச்னை எழப் போகிறது.தாம் சுயாதீனக் குழுக்களுடன் இணைந்து தான் ஆட்சி அமைக்கப் போவதாகவும் பாரம்பரிய கட்சிகள் மற்றும் எச்சங்களுடன் இணையப் போவதில்லை என்றும் டில்வின் சில்வா சொல்வதைப் பார்க்கும் போது இது தீரப் போகும் பிரச்னை மாதிரி தெரியவில்லை. அநேகமாய் இத்தகு சபைகள் கமிஷனர் ஒருவரின் கீழ் மத்திய அரசில் இருந்து நிர்வகிக்கப்படலாம்.

Zafar Ahmed

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இதில் ஒரு சில இடங்களைத் தவிர, எந்த இடங்களிலும் தமிழ் கட்சி எதுவும் பெரும்பான்மை பெறவில்லை.

தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசிய பேரவையும் அதிக உறுப்பினர்களை பெற்ற இடங்களில் ஒன்றில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவில் சபைகளை கொண்டு நடத்த வேண்டும், அல்லது இருவரும் (தமிழரசுக் கட்சி + தமிழ் தேசிய பேரவை) இணைந்து சபைகளை கொண்டு நடத்த வேண்டும். இன்னும் சில இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யின் ஆதவில் சபைகளை நடாத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிடின், தேசிய மக்கள் சக்தியுடன் அல்லது ஈபிடியுடன் தான் கூட்டு சேர வேண்டி வரும்.

முக்கியமாக தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசிய பேரவையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் ஒற்றுமையாக இல்லாவிடின், ஈபிடியும், தேசிய மக்கள் சக்தியும் பலம் பெறும் வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.

2018-2023 காலத்திலும் பல சபைகளை தமிழரசுக் கட்சி பெரும்பான்மையின்றியே ஆட்சி செய்தது. பல கட்சிகள் எதிர்த்தரப்பில் இருந்தாலும் ஒற்றுமையாக எதிர்க்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

495368684_1101564888673551_7954849570638

2025 - பாணத்தாருக்கு கோபம்/ ரோஷம் வந்துட்டுது போல.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Sasi_varnam said:

2025 - பாணத்தாருக்கு கோபம்/ ரோஷம் வந்துட்டுது போல.

நீங்களே சொல்லுங்க சசி,

ஆனையிறவு உப்புக்கு… “ரஜ லுணு” என்று பெயர் வைத்தால்,

கோவம்… வருமா, வராதா. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Sasi_varnam said:

2025 - பாணத்தாருக்கு கோபம்/ ரோஷம் வந்துட்டுது போல.

பாணத்தாருக்கு எப்பவும் ரோஷம் மானம் கோபத்துக்கு ஒரு குறைச்சலும் இல்லை. இந்த முறை சனாதிபதி தேர்தலுக்கு அனுர புதிசாய் கிடக்கு. எதுக்கும் நூல் விட்டுப் பாப்பம் எண்டு பார்த்திருக்கினம்.அவ்வளவுதான்....🙂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

2025 - பாணத்தாருக்கு கோபம்/ ரோஷம் வந்துட்டுது போல.

நீங்களே சொல்லுங்க சசி,

ஆனையிறவு உப்புக்கு… “ரஜ லுணு” என்று பெயர் வைத்தால்,

கோவம்… வருமா, வராதா

நியாயமான கோபம்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி தேர்தல் முடிந்தது. இனியாவது தெருவில் இருக்கும் குப்பைகளும் சமூக ஊடக குப்பைகளும் குறையும் என்று பார்த்தால் அலப்பறை கொஞ்சமும் குறைந்த பாடில்லை. எப்படி நாங்கள் ஜெயித்தோம் அல்லது ஏன் எதிராளி கட்சி தோற்றார் என்பதற்கு படங்கள் போட்டு ஆராய்ச்சிகள் விளக்கங்கள் வேறு. தேர்தல் முடிவுகள் தமிழினம் தனித்துவமானது என்று காட்டுவதாக பெருமை வேறு. அதிலும் உள்ளூர் மக்களை விட வெளிநாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்கள் போடும் பதிவுகள் ஈழம் கிடைத்து விட்டதா என்று என்ன வைக்கிறது.

தையிட்டி விகாரையை அகற்றுவதற்கு உள்ளூராட்சி முடிவுகளை தான் எதிர்பார்த்து இருந்ததாக ஏமாற்றும் அறிக்கைகள் பல. வரைபடம் போட்டு வடக்கு கிழக்கு இணைந்து விட்டதாக சிலரின் அறிக்கை. வடக்கு கிழக்கில் இந்த தேர்தலில் வென்றவர்கள் பலர் கடந்த காலத்தில் ஈழப் போராட்டத்தை கொச்சை படுத்தியவர்கள் என்பதும் இந்திய மற்றும் உளவுத்துறைகளின் முகவர்களாக செயல்பட்டவர்கள் என்பதும் பலருக்கு மறந்து போய்விட்டது. ஒருபுறம் ஆட்சி அமைப்பதற்கு சிங்கள கட்சிகளுடன் பேரம் பேசிக் கொண்டு மறுபுறம் இந்த வீரமான போலி அறிக்கைகள்

தமிழீழம் கோரி தமது உயிரை தியாகம் செய்த போராளிகளின் ஆன்மாக்கள் எந்த பிரயோசனமும் அற்ற இந்த தேர்தல் முடிவு அலப்பறைகளை பார்த்தால் என்ன செய்திருப்பார்கள் என்று எண்ணி பார்த்தேன்.

உதாரணமாக பருத்தித்துறை பிரதேச சபை கடந்த காலத்திலும் இந்த தேர்தலிலும் தமிழ் தேசிய கட்சிகளின் கையிலேயே இருக்கிறது. கடந்த காலத்தில் குப்பை கழிவுகள் அகற்றாமல் தரிசு நிலங்களுக்கும் வீடுகளுக்கும் வரிகளை அதிகரித்தார்கள். இந்த தேர்தலின் பின்னர் மறுபடியும் மக்களுக்கு எதுவும் செய்யாமல் இன்னும் வரிகளை அதிகரித்து தேர்தலில் செலவழித்த பணத்தை மக்களிடம் இருந்து வசூலிக்க பார்ப்பார்கள்.

இதற்கு பொதுமக்களாகிய நாங்கள் பெருமைப் படவேண்டுமா?

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

நன்றி

Dr முரளி வல்லிபுரநாதன்

7.5.2025

வாட்ஸப்பில் கண்டது..

  • கருத்துக்கள உறவுகள்

495335635_1106130768218561_7085278243628

494660961_1106156484882656_3392736248904

495517846_1106141941550777_2098284920436

495594333_1106138778217760_3800581432284

495686945_1106135584884746_4887797595339

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.