Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Patrick Brown) தெரிவித்துள்ளார்.

கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் மீதான தாக்குதல்

நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது. இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு | Tamil Genocide Memorial In Canada

ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள்.

ஆனால், இலங்கை அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பி வருகின்றது என தெரிவித்த பிரம்டன் முதல்வர், உண்மைக்காகவும் நீதிக்காவும் குரல்கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் அவர்கள் முயன்றனர்.

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு | Tamil Genocide Memorial In Canada

இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழர் படுகொலை நினைவுதூபி என நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilwin
No image preview

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்ட...

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Pa...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இன அழிப்பை நிறுவுவதற்கு போதுமான ஆதாரம் இல்லை அப்படி ஒன்றே நடந்தது இல்லை என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லி திரியும் சுமத்திரன் அவரின் கனடிய பினாமி சொத்துக்களை முடக்குவதுடன் அவரின் கனடிய ஆதரவாளர்களையும் விமானமேற்றி கொழும்புக்கு அனுப்பி விடவும் என்று மெயிலை தட்டி விடனும் இந்த செய்தியை படிக்கும் அனைவரும் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை வாசிதததும் பதறிப் போன கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் அவசரம் அவசரமாக தூதகரத்தை இழுத்துப் பூட்டிவிட்டு தூதரக அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு தலையில் துண்டை போட்டபடி அங்கிருந்து வெளியேறி இலங்கைக்கு பறந்துகொண்டிருப்பதாக இறுதியாக கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, island said:

இந்த செய்தியில் உங்களுக்கு ஏன் நெருடல் வருகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இந்த செய்தியில் உங்களுக்கு ஏன் நெருடல் வருகின்றது?

எங்களுடைய டிசைன் அப்படி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இந்த செய்தியில் உங்களுக்கு ஏன் நெருடல் வருகின்றது?

நடக்க முடியாத விடயங்களைப் பற்றி பேசி ஆவேச உணர்சசி வசப்படுத்தும் பேச்சுக்களும் அதையொட்டிய அரசியலும் தமிழருக்கு எந்த முன்னேற்றதையும் கடந்த 75 வருடத்தில் தராதது மட்டுமல்ல பாரிய பின்னடைவையும் பேரழிவையும் தந்தது என்ற பட்டறிவால் வந்த நெருடலே.

மக்களை அறிவின் பால் சிந்திக்கவிடாது இப்படி உணர்சசிவசப்படுத்தி அதன் மூலம் தாம் இலாபமடைவது சில கும்பல்களின் டிசைன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும், அங்கீகாரமும் கிடைக்ககூடாதென்பதுதான் நானாக்களின் டிசைன்!

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... வெளிநாடுகளில் கவன ஈர்ப்பு போராட்டம் தமிழரால் நடத்தப்படும்போதெல்லாம், சில இலங்கையர்கள் அவர்களை அச்சுறுத்துவதும் குழப்புவதும் அவர்களுக்கெதிராக  கூப்பாடு போடுவதும் வழமை. கடந்த தடவை வழமைபோன்று அவர்கள் பிரச்சனை செய்தபோது, இலங்கையின் பாணியிலேயே பதில் வழங்கப்பட்டது. இந்த பேச்சை கேட்டதும் தாம் இலங்கையர் என்பதை மறைத்து, ஒதுங்கியிருக்க வேண்டும். அல்லது தாங்களும் சேர்ந்து போராட்டம் நடத்தவேண்டும். இது சிங்கள, பவுத்த நாடு தமிழரெல்லாம் வந்தேறு குடிகள் என்று சண்டித்தனம் காட்டுபவர்கள், குடியேறிய நாடுகளிலும் தங்கடை சண்டித்தனத்தை விடவில்லை. கனடாவைப்பின் பற்றி எல்லா நாடுகளும் இந்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். காசை கொடுத்து தமிழரின் போராட்டங்களை தடுக்க களமிறக்கப்பட்ட கூலிப்படைகள் கைதும் செய்யப்படலாம் குழப்பம் விளைவித்தால்.    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, island said:

நடக்க முடியாத விடயங்களைப் பற்றி பேசி ஆவேச உணர்சசி வசப்படுத்தும் பேச்சுக்களும் அதையொட்டிய அரசியலும் தமிழருக்கு எந்த முன்னேற்றதையும் கடந்த 75 வருடத்தில் தராதது மட்டுமல்ல பாரிய பின்னடைவையும் பேரழிவையும் தந்தது என்ற பட்டறிவால் வந்த நெருடலே.

மக்களை அறிவின் பால் சிந்திக்கவிடாது இப்படி உணர்சசிவசப்படுத்தி அதன் மூலம் தாம் இலாபமடைவது சில கும்பல்களின் டிசைன்.

அசர்பைஜான் இனப்படுகொலைகள் நூறு வருடங்களின் பின்னர் தான் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

அசர்பைஜான் இனப்படுகொலைகள் நூறு வருடங்களின் பின்னர் தான் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எனது முதல் கருத்து இனப்படுகொலை பற்றியதல்ல என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இனப்படுகொலை ஏற்றுக் கொள்ளப்படலாம் அல்லது மறுக்கப்படலாம். அது எதிர்காலத்தில் எம்மவர் செய்யும் அறிவுபூர்வமான அரசியலைப் பொறுத்தது.

ஆனால், தமிழர் இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என்று ஒருவர் கூறுவதை நம்பித் துள்ளிக்குதிக்கும் அளவுக்கு அறிவு உடையவர்களுக்கு தமிழர் இனப்படுகொலையை உலகம் ஏற்றுக்கொள்ளவைக்கும் அரசியலைச் செய்யும் திறன் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் போன வருடம் இலங்கையர் துள்ளிக்குதித்து போது, கனேடிய அமைச்சர் ஒருவர் கூறியது, எங்களுடைய நாட்டின் சட்டத்தில் தலையிட முடியாது, வேண்டுமென்றால் கொழும்பில் போய் செய்யுங்கள் என்று கூறியவுடன் அவர்களின் எதிப்புக்குரல் அடங்கிவிட்டது. வழமையாக  கனேடிய அமைச்சரை வரவழைத்து தமது கண்டனங்களை தெரிவிப்பவர்கள் அதையும் செய்ய மறந்து விட்டனர். தமது நாட்டு சட்ட திட்டங்களை எதிர்ப்போரை அவர்கள் நாடுகடத்தலாம், அந்த உரிமை, எங்கள் நாட்டின் இறையாண்மையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறும்  இலங்கைக்கு கிடையாது.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அசர்பைஜான் இனப்படுகொலைகள் நூறு வருடங்களின் பின்னர் தான் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

chatgpt பதில்கள் .

1. அர்மேனிய இனப்படுகொலை (Armenian Genocide) – 1915-1923

  • பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: பெரும்பாலான நாடுகள் 2000களுக்குப் பிறகு மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஏற்றன.

  • இனப்படுகொலை செய்தது: ஒட்டோமன் எமிரேட் (துருக்கி)

  • மரணங்கள்: 1.2–1.5 மில்லியன் அர்மேனியர்கள்

  • நடப்பு நிலை: துருக்கி இன்னும் இது இனப்படுகொலை என்பதை மறுக்கிறது.

2. ஹொலோடோமோர் (Holodomor) – 1932-1933

  • பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: 2006–2020களில் மேற்கு நாடுகள் ஏற்றன.

  • இனப்படுகொலை செய்தது: சோவியத் ஒன்றியம் (உக்ரைனியர்களுக்கு எதிராக)

  • மரணங்கள்: 3–7 மில்லியன்

  • நடப்பு நிலை: ரஷ்யா மறுக்கிறது; உக்ரைன் அதை இனப்படுகொலையாக அறிவித்துள்ளது.

3. ஹெரெரோ மற்றும் நாமா இனப்படுகொலை (1904–1908, நமீபியா)

  • பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: ஜெர்மனி 2021ல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.

  • இனப்படுகொலை செய்தது: கெய்சர் ஜெர்மன் எமையர் (German Empire)

  • மரணங்கள்: ~80,000 ஹெரெரோ மற்றும் நாமா மக்கள்

  • நடப்பு நிலை: இப்போதும் நஷ்ட ஈடு குறித்து விவாதம் நடக்கிறது.

4. ரூவாண்டா இனப்படுகொலை (1994)

  • பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: ஒரே ஆண்டிலேயே பலர் ஏற்றனர், ஆனால் மேற்கு நாடுகள் தாமதமாகவே பதிலளித்தன.

  • இனப்படுகொலை செய்தது: ஹூதூ எக்ஸ்ட்ரீமிஸ்ட் அரசு

  • மரணங்கள்: ~800,000 துட்சி மக்கள்

  • நடப்பு நிலை: ஐ.நா. உட்பட உலகம் இனப்படுகொலையாக ஏற்றது.

5. சுதான் – தர்ஃபூர் இனப்படுகொலை (2003–தொடர்பது)

  • பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: 2000களில், ஐ.நா. மற்றும் பல மனித உரிமை அமைப்புகள்

  • இனப்படுகொலை செய்தது: சுதான் அரசு, ஜஞ்ஜவீட் படைகள்

  • மரணங்கள்: ~300,000+

  • நடப்பு நிலை: சில நாடுகள் மட்டும் இனப்படுகொலையாக அறிவித்துள்ளன.

இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொரு சம்பவமும் காலத்திற்குப் பின் மட்டுமே பொதுவாக ஏற்கப்பட்டது. இது போல ஏராளமான "ஏற்றுக்கொள்ளப்படாத" அல்லது விவாதிக்கப்படும் சம்பவங்களும் உள்ளன (உதா: தமிழீழ யுத்தம், சீனாவின் ஜின்ஜியாங் நிலைமைகள், ரொஹிங்க்யா மேன்முறைகள்).

இங்கு யாரும் துள்ளி குதிக்கவும் இல்லை அழவும் இல்லை தமிழர்களின் ஒவ்வொரு நகர்வுக்கும் அழுது தொலைப்பது சிலரின் வாடிக்கை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, பெருமாள் said:

chatgpt பதில்கள் .

1. அர்மேனிய இனப்படுகொலை (Armenian Genocide) – 1915-1923

  • பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: பெரும்பாலான நாடுகள் 2000களுக்குப் பிறகு மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஏற்றன.

  • இனப்படுகொலை செய்தது: ஒட்டோமன் எமிரேட் (துருக்கி)

  • மரணங்கள்: 1.2–1.5 மில்லியன் அர்மேனியர்கள்

  • நடப்பு நிலை: துருக்கி இன்னும் இது இனப்படுகொலை என்பதை மறுக்கிறது

துருக்கியால் அர்மேனியா மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை அசர்பைஜான் மீது என மாறி எழுதிவிட்டேன்.

உங்கள் விளக்கமான தரவுகளுக்கு நன்றி பெருமாள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயா அரசு பொருளாதார சிக்கலால் வீழ்ந்தபோது, பெருங்குழப்பம் இலங்கையில் நடந்து கொண்டிருந்த காலத்தில் அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் சென்று அங்கு தமிழ்த் தலைவர்களாக இருந்தவர்களைச் சந்தித்தார். ஏன் சந்தித்தார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த சந்தர்ப்பத்தைப் புத்திசாலித்தனமாகத் தமிழர்கள் பாவிக்கின்றார்களா என்று கூடப் பார்க்க அவர் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் தகுதியற்ற தலைமைகள் காரணமாக அதை நோக்கி நாம் நகரமுடியவில்லை. உலக நாடுகளுக்கு ஒரு தேவை இருக்கின்றது. எங்களுக்கும் ஒரு தேவை இருக்கின்றது. இதைப் புரிந்து நகர்வதே சிறப்பு

இன்று பற்றிக் பிரவுண் மாநகர முதல்வராக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அவர் ஒன்ராரியோவுக்கான முதலமைச்சராக வந்திருக்க வேண்டியவர். சில சதிகள் காரணமாக அது கைக்கூடாமல் போய்விட்டிருந்தது . அவர் தமிழ் மக்களுக்கு எந்த அநீதியும் நடக்கவில்லை என்று சொல்கின்ற சிங்களவர்களுக்கு சொன்ன காட்டமான பதில். அவ்வளவே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

துருக்கியால் அர்மேனியா மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை அசர்பைஜான் மீது என மாறி எழுதிவிட்டேன்.

உங்கள் விளக்கமான தரவுகளுக்கு நன்றி பெருமாள்.

அது நான் அல்ல chatgpt யின் பதில்கள் தமிழில் கேள்வி கேட்டால் கூட தமிழில் பதில்கள் வருகின்றன.

நேற்று Cupboard அடிக்க வந்த கிந்தி மட்டுமே தெரிந்த இருவர் வந்தனர் அவர்களுக்கு ஆங்கிலத்தில் சொல்வது ஒன்றும் புரியவில்லை chatgpt மூலம் நாம் தமிழில் சொல்வதை ஹிந்தியில் மொழி மாற்றி மொபைல் சொல்லியவுடன் புரிந்து கொண்டார்கள் உலகம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது இந்த கேட்டுக்குள் சிங்களம் படி கிந்தி படி என்று ஒரு கூட்டம் அலையுது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

17 hours ago, பெருமாள் said:

இங்கு யாரும் துள்ளி குதிக்கவும் இல்லை அழவும் இல்லை தமிழர்களின் ஒவ்வொரு நகர்வுக்கும் அழுது தொலைப்பது சிலரின் வாடிக்கை .

நானாக்களின் டிசைன், அவர்களுக்கென கொடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அப்படியானதே!

  • கருத்துக்கள உறவுகள்

Monument

நினைவுச் சின்னத்துக்கும் நினைவகத்துக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் தமிழர் உரிமை பெற்றுத்தரப்போகிறார்கள்.

நம்பிட்டம்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

அசர்பைஜான் இனப்படுகொலைகள் நூறு வருடங்களின் பின்னர் தான் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆர்மீனியா?

9 hours ago, குமாரசாமி said:

துருக்கியால் அர்மேனியா மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை அசர்பைஜான் மீது என மாறி எழுதிவிட்டேன்.

உங்கள் விளக்கமான தரவுகளுக்கு நன்றி பெருமாள்.

நானும் அப்படித்தான் எழுதி இருப்பீர்கள் என நினைத்தேன்.

சும்மா தேடிபார்த்ததில் - மார்ச் 31 அசர்பைஜானிகளால், அவர்களின் இனவழிப்பு நாளாக கொண்டாடப்படுகிறதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

பிரிட்டனில் friends of Israel என எம்பிகள் கூட்டு, கட்சி தாண்டி உள்ளது.

அதேபோல் ஒன்றை கனடாவில் ஸ்தாபிக்க முயலலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, goshan_che said:

பிகு

பிரிட்டனில் friends of Israel என எம்பிகள் கூட்டு, கட்சி தாண்டி உள்ளது.

அதேபோல் ஒன்றை கனடாவில் ஸ்தாபிக்க முயலலாம்.

ஒற்றுமை, ஒருங்கிணைவு என்றால் என்ன விலை என கேட்கும் எம் இனத்தில் இது சாத்தியமா?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

பிகு

பிரிட்டனில் friends of Israel என எம்பிகள் கூட்டு, கட்சி தாண்டி உள்ளது.

அதேபோல் ஒன்றை கனடாவில் ஸ்தாபிக்க முயலலாம்.

என்ன பெயரில் வைக்கலாம் ? Friends of Tamil Elam. ??. இஸ்ரேல் ஒரு நாடு அங்கீகரிக்கப்பட்ட நாடு ஆனால் நாங்கள்?? இலங்கையர். 🤣🤪

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.