Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே 19 போர் வீரர் நினைவஞ்சலி உரை: குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!

கடந்த 19 ஆந் திகதி தலைநகர் கொழும்பு போர் வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் இலங்கையின் உள்நாட்டுப் போரில் (1979 - 2009) உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் 16 ஆவது தேசிய நிகழ்வு இடம்பெற்றது. அதில் பங்கேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரை தென்னிலங்கை அரசியலில் ஒரு பெரும் சூறாவளியை கிளப்பியிருப்பதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்களில் ஓரளவுக்கு பலவீனமடைந்திருந்த NPP இன் வாக்கு வங்கியில் அநேகமாக மேலும் ஒரு சரிவு ஏற்படுவதற்கு வழிகோலள முடியும்.

அடுத்து இந்த உரை நிகழ்த்தப்பட்டிருக்கும் காலம் (Timing) அரச தரப்புக்கு பெருமளவுக்கு உசிதமற்றதாகவே இருந்து வருகிறது என்ற விடயத்தையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். அதாவது, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் NPP பெற்றுக் கொண்ட அமோக வெற்றியையடுத்து சில காலம் பதுங்கிக் கிடந்த தீவிர தேசியவாத / இனவாத சக்திகள் (உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர்) ஓரளவுக்குப் புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் 'இனம்' மற்றும் 'மதம்' போன்ற தேசாபிமான சுலோகங்களுடன் களமிறங்கியிருக்கும் ஒரு சூழ்நிலையலேயே சிங்களப் பொதுச் சமூகம் பூஜித்து வரும் 'ரணவிருவாக்களை' (War Heroes) வெறும் சிப்பாய்களாக (Soldiers) 'தரமிறக்கும்' விதத்தில் ஜனாதிபதி பேசியிருக்கிறார்.

போரில் உயிர் நீத்த வீரர்களை குறிப்பிடுவதற்கென கடந்த 25 ஆண்டுகளாக பொது வழக்கில் உள்ள சிங்களச் சொல் 'ரணவிருவா' (War Hero) என்பது. ஆனால், ஜனாதிபதி தனது உரை நெடுகிலும் அச்சொல்லை பயன்படுத்துவதை மிகக் கவனமாக தவிர்த்துக் கொண்டதுடன், அதற்குப் பதிலாக 'சிப்பாய்கள் (Soldiers) என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

தென்னாசிய கலாச்சார பாரம்பரியங்களை பொருத்தவரையில் போர் வீரர்களை 'வெற்றி வீரர்கள்' என வர்ணிப்பதும், அவர்களை அதிமானுடர்களாக கட்டமைப்பதும் வரலாறு நெடுகிலும் இடம்பெற்று வந்திருக்கும் இயல்பான ஒரு செயல். தமிழில் கலிங்கத்துப் பரணி தொடக்கம் கலைஞரின் 'பாயும் புலி பண்டார வன்னியன்' வரையில் அனைத்துப் போர் இலக்கியங்களும் இந்த ரணவிரு ' Concept' ஐயே முன்வைக்கின்றன. எவரும் அந்தப் போர் வீரர்களை வெறும் சிப்பாய்களாக பார்ப்பதுமில்லை; வர்ணிப்பதுமில்லை.

'இரத்தத் திலகம்' (1963) தொடக்கம் 'அமரன்' (2024) வரையில் திரையிடப்பட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களும் 'ஜவான்களை' வீரமும், தேச பக்தியும் நிறைந்த உத்தம புரிஷர்களாக சித்தரித்துக் காட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் என்று சொல்லலாம்.

'எம்மைப் பொருத்தவரையில் அவர்கள் எமது தாய் மண்ணுக்காக போராடி உயிர் நீத்தவர்கள். வெறும் Soldiers அல்லது Officers அல்ல. தாய் மண்ணை உயிரினும் மேலாக நேசித்த ரணவிருவாக்கள். ஜனாதிபதி ஆனாலும் சரி அவர்களை இவ்விதம் சிறுமைப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது' என்பது எதிர் தரப்பினர் ஆவேசத்துடன் முன்வைக்கும் வாதம்.

'டயஸ்போரா' புலிகளிடமிடமிருந்து காசு மற்றும் இன்னபிற காணிக்கைளைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதி மாபெரும் தேசத் துரோகத்தை இழைத்திருக்கிறார்' என கடும் உணர்ச்சிவசப்பட்ட தொனியில் பேசியிருக்கிறார் விமல் வீரவங்ச -

"ஜனாதிபதி தனது உரையில் எந்தவொரு இடத்திலும் வாய் தவறியும் கூட 'ரணவிருவா' என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அது மட்டுமன்றி, அவர் 'இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாடு', 'இறைமை' மற்றும் 'பிரிவினைவாத பயங்கரவாதம்' போன்ற சொற்களையும் தவிர்த்துக் கொண்டார்........ இதுவரையில் எந்தவொரு அரச தலைவரும் செய்யத் துணியாத ஒரு செயல் இது..........."

"டயஸ்போரா" புலிகளின் மனதை கொஞ்சமும் புண்படுத்தக் கூடாது என்ற கரிசனையுடன் நிகழ்த்தப்பட்ட உரை இது" என்கிறார் உதய கம்மன்பில.

மறுபுறம், 1983 வன்செயல்களைத் தூண்டிய முக்கிய புள்ளிகளில் ஒருவரான எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதிக்கு இது தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

மற்றொரு யூடியூப் சண்டியராக எழுச்சியடைந்திருக்கும் ராஜாங்கன சந்தாரதன தேரர் என்ற சர்ச்சைக்குரிய பிக்கு 'அடேய் அநுர, நீ புலிகளுக்கு ....... தை கொடுக்கும் துரோகி....... உன்னை நாங்கள் சும்மா விடப் போவதில்லை....' எனக் கடுமையாக ஜனாதிபதிக்கு அச்சுறுத்துல் விடுத்திருக்கிறார்.

தீவிர சிங்கள தேசியவாதிகள், அந்த முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (பலங்கொடை கஸ்ஸப தேரர் போன்ற) ஒரு சில முன்னணி தேரர்கள் மற்றும் பிரபல்யமான யூடியூபர்கள் பலரும் இது தொடர்பாக AKD ஐ கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறார்கள்.

"கடும் மத வெறுப்பாளர்களான எமது ஆட்சியாளர்களும், அவர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டிருக்கும் ஒரு சில காவியுடை கயவாளிகளும் புத்த சாசனத்தையும், நமது இனத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்....."

"இதனைப் பார்த்துக் கொண்டு மகாநாயக்க தேரர்கள் வாளாவிருக்கக் கூடாது. 'இந்த ஆட்கள் இனிமேலும் நமது நாட்டை ஆட்சி செய்வதற்கு இடமளிக்க முடியாது' என்ற செய்தியை அவர்கள் மக்களுக்கு விடுக்க வேண்டும்" என்று ஆவேசத்துடன் பேசுகிறார் மட்டக்களப்பிலிருந்து சண்டித்தனம் செய்து கொண்டிருக்கும் அம்பிட்டியே சுமனரதன தேரர்.

'இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்' என்ற விதத்தில் சமூக ஊடகங்களில் வாதப்பிரதிவாதங்கள் நிகழும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்திருக்கிறது.

வடக்கிலும், தெற்கிலும் வருடாந்த போர் நினைவேந்தல் நிகழ்வுகள் வங்குரோத்து அரசியல்வாதிகளின் சுயநல அஜென்டாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான கருவிகளாக மாறி வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் பின்னணியில், ஜனாதிபதியின் உரைக்கு எதிராக வெகுண்டெழுந்திருக்கும் தென்னிலங்கையின் 'மாபெரும் தேசாபிமானிகளுக்கு' சவால் விடுக்கும் விதத்திலான ஓர் அங்கதக் குறிப்பு இது -

"சிங்களவர்களின் வேண்டுகோளின் பேரில் இராணுவ சட்ட திட்டங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 'சிப்பாய்' (சொல்தாதுவா) என்ற சொல்லை நீக்கி விட்டு, 'ரணவிருவா' எனப் பெயரிடுவதற்கும், ரணவிரு நலன்புரிச் சேவைகளுக்கென ஒரு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கும் ஒவ்வொரு சிங்களப் பிரஜையிடமிருந்தும் வருடாந்தம் ரூ. 1000/- ரணவிரு நினைவேந்தல் வரி ஒன்றை அரவிடுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்".

- பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி

மறுபுறம், வடக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் அரசியல் குறித்த சிவா முருகுப்பிள்ளையின் இந்த முகநூல் பதிவு முக்கியமானது -

"...............மே 18, 2009 அன்று பல ஆயிரம் பொதுமக்களும் கொல்லப்பட்டது உண்மை. இந்தக் கொலைகளை இலங்கை ராணுவம் எவ்வளவு செய்ததோ அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாது புலிகளும் செய்தனர்."

"இது ஒரு மிருகம் மக்களை கேடயமாக கைது செய்து. தம்மை காப்பாற்றிக் கொண்டு சென்று, இன்னொரு அரசு மிருகம் கொல்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த உச்ச பலி கொடுப்பு நிகழ்வு ஆகும்".

"இந்தத் தேர்தலில் பிரதான நீரோட்டத்திலிருக்கும் அனைத்து 'தேசியம்' பேசும் தமிழ் கட்சிகளும் அன்று 'மனிதக் கேடயங்களை விடுவியுங்கள்' என்று குரல் கொடுக்கவில்லை".

"மாறாக 'உள்ளுக்கை வரவிட்டு அடிப்பார்கள்' என்று கூறி உசுப்பேத்தியவர்கள்".

"........கனடா போன்ற நாடுகள் தமது மண்ணில் வாழ்ந்த பூர்வீக மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்த நாடுகள். இவ்வாறான ஒரு நாட்டின் அரசியல் தலைவர்களிடமிருந்து எமது அரசியல் விடுதலையை தேடி நிற்கிறோம் என்பது எமது சமூகத்தின் அவலம்............."

"உங்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியும், நினைவுச் சின்னங்களும் அழிந்த மக்கள் பற்றியதோ எதிர்காலம் நாசமாய் போன எங்கள் இனம் பற்றியதோ அல்ல. முழுக்க முழுக்க உங்களைப் பற்றியது".

"அது வேண்டுமென்றால் உங்களுக்கான வாக்கு வங்கி சரிவடையாமல் பார்த்துக் கொள்ளலாம்."

"தீர்வுகளை, அதிகாரப் பரவலாக்கத்தை நாங்கள் உள்ளுக்குள்ளே தான் போராடி, பேச்சுவார்த்தை நடத்தி தந்திரோபாயங்கள் மூலம் (கடந்த காலத்தில் தவறவிட்டது போல அல்லாது) பெற்றுக்கொள்ள வேண்டும்."

ஒரே வரலாற்று நிகழ்வுக்கு இரு தரப்புக்கள் வேறு வேறு வியாக்கியானங்களை வழங்குவதை 'Contested Histories' என்று சொல்வார்கள். இலங்கையை பொருத்தவரையில் 1956 ஆட்சி மாற்றத்தையும், 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரையும் சிங்கள மற்றும் தமிழ் தரப்புக்கள் முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டங்களில் நோக்கி வருகின்றன.

2009 முள்ளிவாய்க்கால் அவலத்தை தமிழர்கள் மாபெரும் இனப் படுகொலை என வர்ணித்து, அங்கு மரணித்தவர்களுக்கு வருடாந்தம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் அதே வேளையில், தெற்கு சிங்கள தரப்பு அதனை ஒரு வெற்றி விழாக் கொண்டாட்டமாக பெருமிதத்துடன் நினைவு கூர்ந்து வருகின்றது.

ஆனால், இந்த ஆண்டு போர் வீரர்களை நினைவு கூரும் அரச வைபவத்தில் பங்கேற்று ஜனாதிபதி ஆற்றிய உரையையும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய பின்வரும் உரையையும் போர் குறித்த தெற்கின் பார்வையில் ஒரு 'Paradigm Shift' ஏற்பட்டு வருவதைக் காட்டும் குறியீடுகளாக கருத முடியும் -

".....இதனை வெற்றி விழாவாக கொண்டாட முடியாது. அது ஒரு தரப்பினரின் மனதை புண்படுத்த முடியும். அதற்குப் பதிலாக, போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஒரு நிகழ்வாகவே அது இருந்து வருதல் வேண்டும்..........."

".........தெற்கு இளைஞர்களைப் போலவே, உண்மை மற்றும் நீதி என்பவற்றுக்கு குரலெழுப்பிய வடபுல இளைஞர்களும் வீரர்கள் ஆவார்கள் ......... தெற்கில் போலவே வடக்கிலும் இளைஞர்கள் மரணித்த பொழுது நாங்கள் கண்ணீர் வடித்தோம். எங்களிடம் துளியும் இனவாதமில்லை........... நாங்கள் அவர்களையும் நினைவு கூர வேண்டும்................ அதில் எந்தத் தவறுமில்லை."

- அமைச்சர் கிரிசாந்த அபேசிங்க

May be an image of 4 people and text

https://www.facebook.com/mlm.mansoor/posts/pfbid0MAZ5EBPAkVhDL6vVh7YV1QtA4avPLmscx71aHRBaWxm8NwLL82Q3e6SRYNrQTN8Al

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுஅனுரா இனவாதிகளுக்கு பணிந்து போக வேண்டும், அப்படியானால் நாட்டில் சமாதானத்தை, நல்லிணக்கத்தை அவரால் கட்டியெழுப்ப முடியாது. கட்டியெழுப்ப வேண்டுமாயின் இந்த அச்சுறுத்தலுக்கு பணியாது, உண்மையில் இவர்கள் செய்த வேலைக்கு,  இவர்களை சிப்பாய் என்று அழைத்ததே மேல், போரில் என்ன நடந்தது என நடந்தவற்றை காட்டுகிறேன் பார்க்க தயாரா என கொக்கரிப்பவர்களிடம் கேட்க வேண்டும். அப்படி போரில் நடந்த அக்கிரமங்களை நீங்கள் பார்க்கதயாரென்றால் இவர்கள் போர்க்குற்ற வாளிகள் ஆவர், பிரச்சனையில்லையா என கேள்வி கேட்க வேண்டும். ஆனால் அனுரா அதை செய்யமாட்டார், அதை செய்யவில்லையென்றால்; இந்த பிரச்சனை தொடர்கதைதான். ஆனாலும் சர்வதேசம் ஒருநாள் இவற்றை வெளியிடத்தான் போகிறது. இலங்கையில் இனவழிப்பு நடைபெறவில்லை என்பவர்கள். அப்போ என்ன சொல்லப்போகிறார்கள்? இனவழிப்பு நடைபெறவில்லையென்றால் ஏன் சணல் நான்கை பார்ப்பதற்கு இலங்கையில் தடை செய்துள்ளார்கள்? உங்கள் வீரர்களின் வீரத்தை, தியாகத்தை பார்க்க அவ்வளவு வெறுப்பு உங்களுக்கே. ஆனால் வெற்றி விழா, கோசம். அவர்கள் ஒன்றும் சும்மா போரிடவில்லை. இருக்கும்போது சம்பளம், இறந்தபின் குடும்பத்தினருக்கு சம்பளம். அதுவும் ஏம்மாற்றப்பட்டே போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.    

52 minutes ago, satan said:

சாத்தான்,

இந்தக் கட்டுரையில் சிங்கள இனவாதிகளை பற்றி மட்டுமல்ல, தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்துக் கொண்டு சிங்கள இராணுவத்தால் இலகுவாக படுகொலை செய்ய ஏதுவான சூழ் நிலையை உருவாக்கியவர்களை கண்டிக்காமல், உள்ளுக்கை வரவிட்டு அடிப்போம் என்று சூளுரைத்த தமிழ் அரசியல்வாதிகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்துக் கொண்டு சிங்கள இராணுவத்தால் இலகுவாக படுகொலை செய்ய ஏதுவான சூழ் நிலையை உருவாக்கியவர்களை கண்டிக்காமல்,

14 hours ago, nunavilan said:

வடக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் அரசியல் குறித்த சிவா முருகுப்பிள்ளையின் இந்த முகநூல் பதிவு முக்கியமானது -

"...............மே 18, 2009 அன்று பல ஆயிரம் பொதுமக்களும் கொல்லப்பட்டது உண்மை. இந்தக் கொலைகளை இலங்கை ராணுவம் எவ்வளவு செய்ததோ அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாது புலிகளும் செய்தனர்."

"இது ஒரு மிருகம் மக்களை கேடயமாக கைது செய்து. தம்மை காப்பாற்றிக் கொண்டு சென்று, இன்னொரு அரசு மிருகம் கொல்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த உச்ச பலி கொடுப்பு நிகழ்வு ஆகும்".

“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” இது மனித அறிவிற்கும் பொருந்தும். புலிகள் பற்றிய மிகவும் கீழ்தரமான சிந்தனை. தாய் பிள்ளைக்குப் பாலூட்டும்போது, பிள்ளைக்குப் புரையேறி உயிராபத்துக்கு உட்பட்டதும் அறிந்துள்ளோம். ஆகவே தாய்மார்கள் பிள்ளைகளுக்குப் பால் ஊட்டக்கூடாது என்று விமர்ச்சிப்பதற்கு ஒப்பானது.🫨

17 minutes ago, Paanch said:

இறுதிக் காலங்களில் புலிகளால் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் இந்த விடயங்கள் தொடர்பாக நீங்கள் எவ்வாறு மறுதலித்து அது ஒரு கீழ்த்தரமான சிந்தனை என்று குறிப்பிடுகின்றீர்களோ, அதே போன்று தான் சிங்களவர்களும் தம் ரணவிருவாக்களை பற்றிய குற்றச்சாட்டுகளை தெரிவிப்பவர்களை, விமர்சிப்பவர்களை, அவர்கள் ரணவிருவாவாக ஏற்றுக் கொள்ளாதவர்களையிட்டும் குறிப்பிடுகின்றார்கள்.

இங்கு யார் அதிகம் குற்றச்சாட்டுகளுக்கு உரியவர், யார் குறைந்த குற்றச்சாட்டுகளுக்கு உரியவர் என்ற கணக்கீடுகளுக்கு அப்பால், இரு தரப்புமே (சிங்களவர் / தமிழர்) என்றுமே தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவிதமான பொறுப்புக் கூறல்களுக்கு விரும்புவதில்லை.

விருப்பமோ, விருப்பம் இல்லையோ, இலங்கை நாட்டில் இவ் இரு இனங்களும் இணைந்தே தான் வாழ வேண்டிய சூழ்நிலையில் இரு தரப்புமே தாம் எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் உரியவர்கள் இல்லை என்று மறுத்துக் கொண்டே இருக்கும் வரைக்கும் ஒரு போதும் அங்கு அமைதி ஏற்படப் போவதும் இல்லை, முன்னேற்றம் வரப் போவதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நிழலி said:

இது தான் உண்மையான கருத்து. இரு தரப்பும் பரஸ்பரம் நம்பிக்கைகளை கட்டியெழுப்பும் அரசியலை நோக்கி நகவர்வதே தீர்வை நோக்கிய பாதையில் அடியெடுத்து வைப்பதற்கான முதல் காலடியாக இருக்கும். இதனையே இரு தரப்பு அரசியல்வாதிகளும் சிந்திக்க வேண்டும். இரு தரப்பு அரசியல்வாதிகளும் தத்தமது அரசியல் இலாபத்திற்காக வெறுப்புகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு செல்வதானது, ஆபத்தை நோக்கி ஓடும் ஒரு றிலே ஒட்டம் போலவே இருக்கும். இந்த றிலே ஓட்டத்தில் அதிகம் ஆபத்தை எதிர் நோக்குவது சிறுபான்மை மக்களே என்ற பட்டறிவை உணர்ந்து அந்த மக்களின் அரசியலை முன்னெடுக்கும் அரசியல்வாதிகள் அதிக பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினம் ஏன் அநியாயத்திற்கு தன்னை நல்லினமாகக் கட்டமைக்க முயன்று அழிந்து போகிறது.? போரில் ஒரு இனத்தை வென்றாலும் அங்கு தன் ஆட்சியை நிறுவாமல் தோற்ற இனத்திடமே ஆட்சியை ஒப்படைத்து வருவதைச் சரித்திரரீதியாகவும் அறிய முடிகிறது. ஆனால் அந்த தோற்ற இனமே தன்னை அழிக்க முற்பட்டு வருவதை இன்றுவரை உணராமல் தமிழினம் எதற்காகத் தன்னையே அழித்து வருகிறது.????🤔

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2025 at 22:47, நிழலி said:

சாத்தான்,

இந்தக் கட்டுரையில் சிங்கள இனவாதிகளை பற்றி மட்டுமல்ல, தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்துக் கொண்டு சிங்கள இராணுவத்தால் இலகுவாக படுகொலை செய்ய ஏதுவான சூழ் நிலையை உருவாக்கியவர்களை கண்டிக்காமல், உள்ளுக்கை வரவிட்டு அடிப்போம் என்று சூளுரைத்த தமிழ் அரசியல்வாதிகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

புலிகளும் வேண்டாம், இராணுவமும் வேண்டாம் என்று இடம்பெயராமல் தங்கள் வீட்டிலிருந்தவர்களையே இராணுவம் கொலை செய்து குழிதோண்டி புதைத்ததும் கிணறுகள் மலசல குழிக்குள் மூடியதும் தாங்கள் அறியாதது வியப்பே எனக்கு. தங்கள் காணிகளை, வீடுகளை பார்க்க சென்றவர்களை சுட்டுக்கொன்றதும் தெரியாததும் ஆச்சரியமே. கோவில்களிலும் வைத்திய சாலைகளிலும் தஞ்சம் புகுந்தவர்கள் மேல் குண்டுமழை பொழிந்ததும் கேள்விப்படாதது உங்கள் தவறே. எங்கெங்கோ வாழ்ந்தவர்களை விரட்டி புலிகளின் பின்னால் குவித்தது யார்? புலிகள் உருவாகமுதலே தமிழரை தேடித்தேடி கொன்றவர்கள் யார்? ஏதோ புலிகள் மக்களை தடுத்ததால்தான் இராணுவம் மக்களை கொலைசெய்ததுபோல் கதை பேசக்கூடாது. தங்கள் கைகளால் இராணுவத்திடம் கையளித்த தந்தையர், பிள்ளைகள், கணவன்மார் எங்கே? இவர்களை நம்பித்தானே கையளித்தார்கள்? பாடசாலைகள், வீடுகள் எல்லாம் ஏன் குண்டு வீசினார்கள்? புலிகளினாலா? புலிகளை அழித்தபின் தீர்வு என்று சொன்னார்களே, அந்த தீர்வு எங்கே? இன்னும் ஏன் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கிறார்கள்? விகாரைகளை எழுப்புகிறார்கள்? தன்னார்வ தொண்டு நிறுவனங்களை, போர்நிறுத்த கண்காணிப்பு குழுவை ஏன் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்? சிறுவன் பாலச்சந்திரன்! அவன் ஆயுதம் ஏந்தவில்லை, அரசியல் பேசவில்லை, தனக்கு என்ன நிகழப்போகுது என்பதையே அறியாதவன். அவனை ஏன் கொன்றார்கள்? புலிகள் பயங்கரவாதிகள் என்கிறார்கள், இவர்கள் மனிதரை மீட்க போர்புரிந்தவர்கள், பொறுப்புள்ளவர்கள் இவ்வாறு செய்யலாமா? எங்கு போனாலும் தங்களுக்கு பாதுகாப்பில்லையென மக்களே புலிகள் பின்னால் ஓடினார்கள். மக்களை மீட்பதற்காக போர் புரிந்தவர்கள் அந்த மக்களை தங்க வைக்க வசதிகள் செய்திருந்தார்களா? அடிப்படை வசதியேதும்......? மக்கள் வெளியேறா வண்ணம் பாதைகளை, உணவு மருந்து விநியோகத்தை தடுத்தவர் யார்? யாரையும் உள்ளே அனுமதிக்காததன் நோக்கம் என்ன? மக்கட்தொகையை குறைத்து சொன்னதன் காரணம் என்ன? எப்படியாகிலும் அங்குள்ள மக்களை ஒரே இடத்தில் கூட்டி கொன்றுவிட்டு, புலிகளை அழித்துவிட்டோம் என்று பரப்புரை செய்வதற்கே. அதைத்தான் இன்றுவரை சொல்கிறார்கள். ஆயுத விநியோகம் தடை செய்யப்பட்டுவிட்டது, புலிகள் சரணடைய வெள்ளைக்கொடியோடு செல்ல பேச்சுவார்த்தை, காத்திருப்பு நடந்திருக்கிறது. இதில உள்ளுக்கை வரவிட்டு அடிப்போமென யாரிடம் புலிகள் சொன்னார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலரது நோக்கம் புலிகளின் தியங்களை அர்பணிப்புக்களை மறைத்து நடந்து முடிந்த சில தற்செயல்களையும் சில தன்னிச்சையான முடிவுகளையும் வைத்து அவர்களை பயங்கரவாதிகளாகவே தக்க வைத்துக்கொண்டால் தாங்கள் மகாத்மாக்கள் மக்களுக்கா வெட்டி புடுங்கியவர்கள் என்ற எண்ணத்தில் மிதப்பதுதான்.

புலிகள் முள்ளிவாய்களில் இருந்த அத்தனை மக்களையும் கொன்றிருந்தால்கூட .... எதிர்கால தற்கால நல்லிணக்கங்களுக்கும் ஒற்றுமைக்கும் என்ன வில்லங்கங்கம் இருக்கப்போகிறது? இல்லாத புலிகளின் ஆதிக்கம் இப்போ எந்த வகையில் இப்போதைய அரசியல் முடிவுகளை தடுத்து நிறுத்த போகிறது?

இருவராலும் பாதிக்கப்பட்ட்து தமிழ் மக்கள்தானே ? எங்களை நாங்களே சுட்ட்து தப்புதான் அது மாபெரும் குற்றம் என்று சிங்களவர்களுக்கு சென்று சொலவதில் ........ அதில் சிங்கள தரப்பிற்கு என்ன வில்லங்கம் / வியாக்கினம் இருக்கிறது?

ஐநா சபை யாப்பிற்கு எதிரான முழுதான இனவழிப்பை ௩௦ வருடமாக செய்தவர்கள் சிங்களவர்களும் அவர்கள் அரசுகளும் இராணுவமும்.

அதுக்கு இணையாக எங்கள் காணி சண்டை வேலி சண்டையையும் ஆக்கினால்தான் ........ சிங்களவர்கள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தருவார்கள் என்று மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவதுக்கு என்ன பெயர் என்று எனக்கு தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2025 at 00:05, Maruthankerny said:

இறுதி யுத்தத்தின் போது புலிகளால் வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப் பட்டு, தப்பியோடினால் கண்டு பிடிக்கும் வகையில் தலை மயிர் கட்டையாக கத்தரிக்கப் பட்டு, சில சந்தர்ப்பங்களில் இத்தகையோரை வெளியேறும் தறுவாயில் புலிகளே சுட்டுக் கொன்றது..இவையெல்லாம் அமெரிக்காவில் பனி வனத்தில் வசிக்கிற உங்களுக்கு "காணிச் சண்டை எல்லைச் சண்டை" ரேஞ்சுக்குச் சுருங்கி விட்டது அதிசயமில்லை😂.

ஆனால், இந்த அனுபவங்களூடாக வாழ்ந்து வந்த மக்களுக்கு இவை சாதாரண நிகழ்வுகளாக இருக்காது. இப்படிப் பாதிக்கப் பட்ட மக்கள்- அவர்கள் சிங்களவரால் பாதிக்கப் பட்டவர்களை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்- கவனமாகக் கையாளப் பட வேண்டியோர்.

யாழ் களத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் சுய வாக்குமூலங்களின் படி, இதைச் சொல்லும் நீங்களே, ஒரு காலத்தில் உங்கள் உயிர் முக்கியம் என்று விமானமேறி அமெரிக்கா வந்த ஒருவர். உங்களுக்கிருக்கும் சொந்த உயிர் மீதான அக்கறையை விட ஏன் வன்னி மக்கள் குறைவாக அக்கறை கொள்ள வேண்டுமென நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு புலிகள் எப்படியோ…

அப்படித்தான் சிங்களவருக்கு ஆமி…

வடமாகாண முதலமைச்சர் மாவீரர் நினைவு நிகழ்வில் “மாவீரர்” என்ற பதத்தை தவிர்த்து “போராளிகள்” என அழைத்தால் எம் எதிர் வினை எப்படி இருக்கும்.

எனக்கு வந்தா தக்காளி சோஸ், உனக்கு வந்தா இரத்தம் என்பதே இரு பகுதியினரதும் நிலைப்பாடு.

உண்மையில் அனுர செய்தது ஏமாற்று வேலை.

ஆமியை ரணவிரு என அழைக்க வேண்டாம் என எந்த தமிழரும் கேட்டோமா?

சிங்கள இன மேலாண்மையை பேண, உங்களது என நீங்கள் கோரும் நிலத்தினை உடையாது பேண உயிரை கொடுத்த அவர்கள் உங்களுக்கு எப்போதும் மேன்மக்களே.

நாம் கேட்பது எமது அரசியல் உரிமையை.

அதை தராமால் பேய்காட்ட இப்படி ஒரு கலக நாடகத்தை அனுரா நடத்துகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2025 at 19:26, goshan_che said:

எமக்கு புலிகள் எப்படியோ…

அப்படித்தான் சிங்களவருக்கு ஆமி

எமக்கு புலிகள் பாதுகாவலர்கள்.

சிங்களவருக்கு ஆமி வேட்டைநாய்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Paanch said:

எமக்கு புலிகள் பாதுகாவலர்கள்.

சிங்களவருக்கு ஆமி வேட்டைநாய்கள்.

சிங்களவர் மனநிலையில்:

புலிகள் காட்டு மிருகங்கள்.

ஆமி பாதுகாவலர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சிங்களவர் மனநிலையில்:

புலிகள் காட்டு மிருகங்கள்.

ஆமி பாதுகாவலர்கள்.

செய்திமூலமோ, பிறர்சொல்லியோ அறியாமல், சிங்கள அரசின் ஆமிபற்றி என் அனுபவத்தில் நான்கண்ட உண்மைகள் உங்கள் பதிவை ஏற்பதற்கு மறுக்கிறது.

சிங்களவர் போகட்டும், உங்கள் மனநிலை என்னவென்று அறிய மனம் விளைகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Paanch said:

செய்திமூலமோ, பிறர்சொல்லியோ அறியாமல், சிங்கள அரசின் ஆமிபற்றி என் அனுபவத்தில் நான்கண்ட உண்மைகள் உங்கள் பதிவை ஏற்பதற்கு மறுக்கிறது.

சிங்களவர் போகட்டும், உங்கள் மனநிலை என்னவென்று அறிய மனம் விளைகிறது.

நானும் நீங்களும் தமிழர்கள் அல்லவா? ஆகவே உங்கள் மனநிலைதான் எனதும்.

உங்களை போலவே, நானும் நேரடியாக கண்டும், அனுபவித்ததுமான அடிப்படையில் உருவான மனநிலை இது.

ஆனால் சிங்கள மக்களில் மிக பெரும்பான்மையானோருக்கு ஆமியுடன் இந்த அனுபவம் இல்லை. அவர்கள் அறிந்தது எல்லாம், அறந்தலாவ, அனுராதபுரம், புறக்கோட்டை, மத்திய வங்கி போல சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களை செய்பவர்கள் புலிகள், அவர்களிடம் இருந்து சிங்கள இனத்தையும், சிங்கள நாட்டையும் காப்பாவர்கள் ஆமி.

கொஞ்சம் சிங்களவர்களுக்கு ஜேவிபி காலத்தில் தமக்கு என்ன நடந்தது என்பது நினைவிருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் அனுரா. உண்மையில் அவர் ஆமியை ரணவிரு என அழைக்காமல் இட இதுவும் (நாடகம் ஆடுவதும்) ஒரு காரணம்.

தன் தோழர்களை, சகோதரனை கொண்ட ஆமியை ரணவிரு என அழைக்க அனுர விரும்பவில்லை. எம்மை கொண்டதால் அல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.