Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gazzeet_1200px_22_12_06.jpg?resize=750%2

வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்.

வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28,  அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 வெளியிடப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கம் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக உறுதியளித்த போதிலும் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, இந்த வர்த்தமானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

வடக்கில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு அந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1433387

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளப்பெற்றது அரசாங்கம்

27 MAY, 2025 | 12:02 PM

image

வடமாகாண காணிதொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது.

அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின் அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன் அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/215797

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளபெற்றமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் சுமந்திரன் - இன்றிரவே வர்த்தமானியில் இதனை பிரசுரிக்கவேண்டும் என வேண்டுகோள்

27 MAY, 2025 | 01:48 PM

image

வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளபெற்றமைக்காக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கும் அமைச்சரவைக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளருமான எம் ஏ சுமந்திரன் நன்றியை தெரிவித்துள்ளார்

காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ்பிரசுரித்த வர்த்தமானியை மீள்கைவாங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. நாம் விதித்த காலக்கெடுவுக்கு முன் இத் தீர்மானம் எடுக்கப்படுள்ளது. இது உடனடியாக இன்றிரவே வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்

என அவர் தெரிவித்துள்ளார்

சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதிக்கு இன்று இலங்கை தமிழரசுக்கட்சி எழுதிய கடிதமொன்றையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மேற்படி வர்த்தமானி அறிவிப்பில் அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான நிலங்கள் அமைந்துள்ள வடமராட்சி கிழக்கு முல்லைத்தீவில் மூன்று சட்ட ஆலோசனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

முன்னர் அனுப்பிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டதற்கு மேலதிகமாக சுனாமிக்கு பின்னர் அரசாங்க பொறிமுறைகள் மூலம் பணம் கொடுக்கப்பட்டுஇ பல்வேறு திட்டங்கள் ஊடாக பலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் அவற்றிற்கான உறுதிகள் எவையும் பலருக்கு வழங்கப்படவில்லை.

அவர்கள் இந்த காணிகளில் வீடுகளில் 10 வருடங்களிற்கு மேல் வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்த தருணத்தில் இந்த சட்டத்தை பிரயோகிப்பது இன்னமும் குழப்பகரமான நிலையை உருவாக்கும்.

இந்த பகுதிகளில் காணி நிர்ணய கட்டளை சட்டத்தின் விதிகளை குறிப்பாக இந்த காலகட்டத்தில் பயன்படுத்துவதுமிகவும் பொருதமற்றது என்பதை நாங்கள் மீள வலியுறுத்துகின்றோம்.

இந்த திட்டத்தை முன்னெடுத்துச்செல்வதுதாங்கள் எந்த தவறும் இழைக்காத நிலையிலும்தங்கள் நிலங்களிற்கு முழுமையாக உரிமை கோரும் நிலையிலும் இல்லாத பலருக்கு பாரிய சிரமங்களை ஏற்படுத்தும்.

இந்த செயற்பாடு தமிழ் மக்களிடையே பாரிய சமூக அமைதியின்மையை உருவாக்கும் என்பதுடன்போருக்கு பின்னரான சூழலில் நல்லிணக்கத்தை பாதிப்பதாக அமையும்.

அத்தோடு ஏராளாமான தனியார் நிலங்கள் இன்னமும இராணுவகட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்பதுடன் தேர்தல் வாக்குறுதியில் நீங்கள் விடுவிப்பதாக கூறியும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

எனவே மேலும் தாமதிக்காமல்மேற்படி வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு மீண்டும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

இல்லையெனில் இது எமது மக்களை வெகுஜனபகிஷ்கரிப்புகளிலும்சட்டமறுப்பு போராட்டங்களிலும் நாம் வழிநடத்தவேண்டிய நிலையேற்படும்.

நல்லிணக்கம் சம்பந்தமாக உங்கள் அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவில் இருத்திஇவ்வர்த்தமானி பிரகடனத்தை உடனடியாக மீள கைவாங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/215806

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக பாடுபட்ட கஜேந்திரனுக்கும் மற்றையோர்களுக்கும் பாராட்டுக்கள்.

ஆரம்பத்தில் இருந்தே இதனை சாத்தியமான வழிகளில் எதிர்த்து வந்த தமிழரசுக் கட்சிக்கும் சுமந்திரனுக்கும் பாராட்டுகள்.

இந்த வர்த்தமானியை பிரசுரிக்கும் வரைக்கும் அரசுக்கு முடிந்தளவு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

விமல் வீரவன்சவுக்கு இன்னொரு விடயம் கிடைத்து விட்டது இனவாதத்தை கக்குவதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

ஆரம்பத்தில் இருந்தே இதனை சாத்தியமான வழிகளில் எதிர்த்து வந்த தமிழரசுக் கட்சிக்கும் சுமந்திரனுக்கும் பாராட்டுகள்.

இந்த வர்த்தமானியை பிரசுரிக்கும் வரைக்கும் அரசுக்கு முடிந்தளவு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

விமல் வீரவன்சவுக்கு இன்னொரு விடயம் கிடைத்து விட்டது இனவாதத்தை கக்குவதற்கு.

நேற்று சுமந்திரன் இது சம்பந்தமாக சட்ட ஆலோசனை மற்றும் பதிவுகளை செய்திருந்தார். இது பெரும்பாலும் அரசுக்கே உதவும் என்ற கருத்து நிலவுகிறது ( குறைந்தளவு மக்கள் மட்டுமே உரிமை கோரும் போது)

  • கருத்துக்கள உறவுகள்

காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபொற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 

Published By: VISHNU

27 MAY, 2025 | 06:57 PM

image

காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபெற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்பட்டதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டது என தெரிவித்தார் .

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

வடமாகாணத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கு மிக மோசமான பின்னடைவை ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து இந்த வர்த்தமானி வாபஸ்பெற வைத்தது பெரும் வெற்றி என்றே செல்லவேண்டும்.

அந்த வகையில் பாராளுமன்றத்தில் இதனை கொண்டுவந்து பாரிய அழுத்தத்தை எற்படுத்துவதற்கு பலர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதில் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேணை கொண்டுவந்தபோது அதனை வழிமொழிந்து அதனை ஆதரித்த இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன் எனைய தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கும் நன்றியைக் கூறுவதுடன் நாங்கள் தமிழ்த்தேசிய பேரவையாகக் கொழும்பில் இருக்கக் கூடிய வெளிநாட்டு தூதரங்களுக்கு சென்று இந்த விடயம் தொடர்பில் வர்தகமானியை வாபஸ்பொறவைக்கவேண்டும் என்று கூறியிருந்தோம். அவர்களும் எமக்கு வாக்குறுதியளித்திருந்தார்கள். நாங்கள் இவற்றைக் கலந்துரையாடுவோம் என்று அவர்களும் இதனைச் செய்திருக்காவிட்டால் இவற்றைச் செய்திருக்க முடியாது எனவே இவர்களுக்கும் எமது நன்றிகள். இந்த அரசாங்கம் எங்கள் கருத்துகளைக் கேட்டு இவற்றைச் செய்யும் என்றால் இனப்பிரச்சினையே இருக்காது.

பாராளுமன்றத்தில் இவற்றை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த அழுத்தங்களை வழங்காது விட்டால் இதனைச் செய்திருக்க முடியாது. மேலும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி நிசாம் காரியப்பர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் றவுப் ஹக்கிம் அவர்களுக்கும் விசேட நன்றிகள். பிரதமருடன் சந்திப்பில் இவர்கள் இருவரும் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தி இருந்தார்கள்.

இதில் முக்கியமாக இந்த வர்தகமானி வாபஸ் பெறப்பட்டமையானது தமிழ்பேசும் மக்களாக நாங்கள் இணைந்து விவாதித்தது கூட்டு முயற்சியாக வெற்றியளித்தது. இதனைத் தமிழ், முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய ஆட்சியாளர்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் எமக்கு வாக்களித்தார்கள் என்று கூறுவது மட்டுமல்லாது பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பொருன்பான்மைக்கு அதிகமாக அவர்கள் இருக்கும் நிலையில் தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இணைந்து செயற்பட்டதன் வெற்றியாகும்.

சிங்கள மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள மக்களுக்கு நாம் கேடுதல் செய்யவில்லை என்பதைச் சிங்கள மக்கள் உணரவேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சிங்கள மக்களுக்கு எதிராக நடக்க வேண்டும் என்பது எமது அடிப்படை கோட்பாடு அல்ல. முஸ்லிம் மக்களையும் நாம் இணைத்துச் செயற்படுவதன் மூலம் நாம் அசைக்க முடியாத பலத்தை வெற்றியை அடையலாம்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன், மற்றும் அருந்தவபாலன் கலந்து கொண்டார்கள்.

https://www.virakesari.lk/article/215846

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தரணி நோகாமல் நொங்கு சாப்பிட்ட கதை...

Edited by Sasi_varnam
caption

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இதற்காக பாடுபட்ட கஜேந்திரனுக்கும் மற்றையோர்களுக்கும் பாராட்டுக்கள்.

🤣அது தானே? மறந்தும் "மற்றையோருக்கும்" என்பதற்குள் அடங்கிய முக்கியமான நபரின் பெயரைக் குறிப்பிட்டு விடாதீர்கள்! "தமிழ் தேசியக் காளி" கண்ணைக் குத்தி விடும்🤣!

  • கருத்துக்கள உறவுகள்

நிஸாம் காரியப்பர் 🙏

அத்தனை ஆணித்தரமாக இந்தச் சட்டம் மீழப் பெறப்பட வேண்டும் என்று பாராளுமன்றில் சகல தமிழ்ப் பா ஊக்களுக்கும் எடுத்துரைத்தது மறக்கப்படக் கூடிய செயல் அல்ல.

இவரைப் போன்ற மனிதர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

🤣அது தானே? மறந்தும் "மற்றையோருக்கும்" என்பதற்குள் அடங்கிய முக்கியமான நபரின் பெயரைக் குறிப்பிட்டு விடாதீர்கள்! "தமிழ் தேசியக் காளி" கண்ணைக் குத்தி விடும்🤣!

எனக்கு மற்றையோர் பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை.

கஜேந்திரகுமாரே முதலில் குரல் கொடுத்ததாக நினைக்கிறேன்.

இப்போ இதில உங்களுக்கு எங்க நோவு எடுக்குது?

ஏனையோர்களின் விபரங்கள் தெரிந்தால் நீங்களும் எழுதலாம்.

நாங்களும் பாராட்டலாம்.

அதைவிட்டுட்டு எங்க பிழை பிடிக்கலாம் என்று காத்திருப்பதை தவிர்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28,  அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.

large.IMG_8381.jpeg.1afce4f4b3b396f10e17

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு மற்றையோர் பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை.

கஜேந்திரகுமாரே முதலில் குரல் கொடுத்ததாக நினைக்கிறேன்.

இப்போ இதில உங்களுக்கு எங்க நோவு எடுக்குது?

ஏனையோர்களின் விபரங்கள் தெரிந்தால் நீங்களும் எழுதலாம்.

நாங்களும் பாராட்டலாம்.

அதைவிட்டுட்டு எங்க பிழை பிடிக்கலாம் என்று காத்திருப்பதை தவிர்கலாமே.

எந்த தமிழ் பா.உ/ அரசியல்வாதியின் முயற்சி பற்றியும் நான் மெனக்கெட்டு எழுதப் போவதில்லை! ஏனெனில், அதற்குத் தானே மக்கள் தெரிவு செய்து அனுப்பி பாராளுமன்றக் கன்ரீனில் "சத்தான" உணவைச் சாப்பிட அனுமதித்திருக்கிறார்கள்😂? பிறகேன் தனியாக நன்றி பாராட்டுதல் இவர்களுக்கு?

ஆனால், உங்களைப் பொறுத்த வரை, நன்றி பாராட்டுவதிலும் குறை உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினேன். சுமந்திரன் இதைப் பற்றி பாராளுமன்றத்திற்கு வெளியே பேசியதும், பேட்டிகள் கொடுத்ததும், முயற்சிகள் செய்ததும் யாழிலேயே செய்தியாக இருக்கிறது. ஆனால், கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் பேசியது மட்டும் தான் உங்கள் பார்வைக்குத் தெரிந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். இது ஒரு கூட்டு முயற்சியின் பயன், ஆனால் அதைக் கூட ஒரு ஒற்றைப் பா.உ வின் resume யில் போடும் அவசரம் உங்களிடம்.

இது உங்களிடமும், ஏனைய "சுமந்திரன் லவ்வர்சிடமும்" அடிக்கடி நான் காண்பது தான். சில ஆண்டுகள் முன்னர், கண்ணதாசன் என்ற யாழ் பல்கலை விரிவுரையாளரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சிறையில் அடைத்தார்கள். அவருக்காக மன்றில் ஆஜராகி அவரை விடுதலை செய்ய உதவியது சுமந்திரன். அங்கேயும் "இதற்காக உழைத்த எல்லோருக்கும் நன்றி" என்று மட்டும் நீங்கள் எழுதிய போதும் இதே போல "சில பெயர்களை உச்சரிக்கக் கூடாது" என்ற கட்டுப் பாட்டுடன் இருக்கிறீர்கள் என அறிந்து கொண்டேன்😂!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.