Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி திறமைசாலிகள் வித்தைகள்(மஜிக்) செய்து உங்கள் கண்களே நம்பும்படியாக உங்களை ஆச்சரியப்பட வைக்கின்றார்களோ

அப்படித்தான் ஜோதிடமும்

உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லையும் வைத்து அவர்கள் உங்கள் நிலையைக் கணித்து

உங்கள் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொண்டு உங்களை தன்வசமாக்கிவிடுவார்கள்

பின்னர் அவர் கூறியது எல்லாமே சரியாக இருக்கும்

  • Replies 58
  • Views 3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    அண்ணா, அறுதியாக பொய்கள் என்றோ அல்லது உண்மைகள் என்றோ எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதிகளாக நிறுவ முடியாத நம்பிக்கைகள் பல இங்கே காலம் காலமாக இருக்கின்றன. உதாரணமாக, ஒரு நடுப்புள்ளித் தேற்றம் போன்றோ அல்லது

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • goshan_che
    goshan_che

    என்னை பொறுத்தமட்டில் நான் ஒரே ஒரு விடயத்தை மட்டும்தான் பொய் என ஐயம் திரிபற நம்புகிறேன். அது மதம். கடவுள் எனும் ஒரு சூப்பர் பவர் இருக்கிறதா இல்லையா என்றால் என்பதில் தெரியவில்லை என்பதே - ஆனால் நிச்சயமாக

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு சோதிடம் நம்பிக்கை ஒன்று உள்ளது நாங்கள் நிற்கின்ற புகைபடம் ஒன்றை பார்த்துவிட்டு இன்னொருவர் கோபபட்டாலோ அல்லது சபித்தாலோ எங்களுக்கு கான்சர் போன்ற நோய்கள் வரலாம் அல்லது கார் விபத்து விமான விபத்து கூட வரலாம் .அதனால் நான் நிற்கின்ற குரூப் படங்களை ஒருவருக்கும் அனுப்பி போடாதையுங்கோ என்று நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு சொல்லிவைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

எப்படி திறமைசாலிகள் வித்தைகள்(மஜிக்) செய்து உங்கள் கண்களே நம்பும்படியாக உங்களை ஆச்சரியப்பட வைக்கின்றார்களோ

அப்படித்தான் ஜோதிடமும்

உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லையும் வைத்து அவர்கள் உங்கள் நிலையைக் கணித்து

உங்கள் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொண்டு உங்களை தன்வசமாக்கிவிடுவார்கள்

பின்னர் அவர் கூறியது எல்லாமே சரியாக இருக்கும்

இந்த கருத்துகள் சோதிடர் பற்றியது இது முறறிலும். உண்மை ஆனால் சோதிடம். என்பது வேறு

சோதிடர் ....இது பொய் ...அடுத்தது

சோதிடம். உண்மை அது எவருக்கும் தெரியாது பிறகு எப்படி சொலல முடியும்???

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன கதை . ஊரில் உள்ள ஒரு குடும்பத்தில் அருகில் இருந்த லாண்டரி(சலவை ) கடைக்கு தாயார் சிறுவனிடம் அவசரமாக மூன்றுநாட்களில் தேவை என விடுதியில் படித்த அக்கா வின் வெள்ளை ஆடைகளை சலவைக்கு கொடுப்பார். அவரும் கொண்டு சென்று எண்ணிப்பார்த்து 9 (உருப்படி)என்று சொல்வார். மூன்றாம் நாள் பையன் சென்று காஸைக் கொடுத்து வாங்கி வர தாயார் பட்டணத்தில் உள்ள மகளின் விடுதிக்கு கொண்டு சென்று , தின்பண்டங்களும் வாங்கிக்கொண்டு மகளைப்பார்த்து வருவார் .

இது தொடந்து சில வருடங்களாக நடந்தது அடிக்கடி உருப்படி 9 ஆகி இருக்கும் .எண்ணிக்கை 9ஆனால் பையன் இன்னொமொன்று சேர்த்து தாருங்கள். அந்த தாத்தா என்னை ஒன்பது என்று கூப்பிடுகிறார் என்பான் . அங்கு கடைக்காரரின் அப்பா நல்ல வயதானவர் அருகில் இருந்த வாங்கிலிருந்து கவனித்து கொண்டு இருப்பர் . ஒருநாள் பையனுடன் தாயார் சென்றார் . எண்ணிக்கை 9 ஆகி இருந்தது . தாத்தா தாயிடம் கேடடார் பையனின் பிறந்த திகதி என்னவென்று என்று ..அவர் 18 என்றார். பின்னர் இவர் நெருப்பு ராசி நேர்மையான பையன் .உயர்கல்வி கற்பான் மூன்று நான்கு மொழித்தேர்ச்சி பெறுவான் என்றார் காலம் உருண்டது

அவன் வளர்ந்து சிறந்த கல்விமானாக வாழ்ந்தான் வெளிநாட்டில் சென்று தமிழ் ஆங்கிலம் சிங்களத்துடன் அந்நாடு மொழி கற்று

பகுதிநேர மொழிபெயர்ப்பாளராக கடமை செய்தான் . ஏற்கனவே மெக்கானிக்கல், சிவில், இன்ஜினியர் பிஎச் டீ வரை படித்தார் அந்நாட்டு யூனிவெர்சிற்றி ப்ரொபசர்.

ஒன்பதுக்கு அன்றாட வாழ்வுக்கும் தொடர்பு உண்டா? நல்ல விடயங்கள் அந்த நம்பர் இல் நடக்குமா ?

.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

ஒன்பதுக்கு அன்றாட வாழ்வுக்கும் தொடர்பு உண்டா? நல்ல விடயங்கள் அந்த நம்பர் இல் நடக்குமா ?

ஆமாம் அது ஒரு சிறந்த இலக்கம். .......இந்த இலக்கத்தில். மற்ற இலக்களில். எண்களில் இருப்பது போல். பிச்சைகரனுமுண்டு படிப்பு அறிவு இல்லாதவனுமுண்டு ..இது எண்ணின். பிரச்சனை இல்லை மேற்படி நபர்கள் முயற்சி அற்றவர்கள்.

9

99=9+9=18=1+8=9

999=9+9+9=27=2+7=9

... ....எப்போதும் 9 தான் வரும் மற்ற எண்களை கூட்ட. அப்படி வாராது

77=7+7=14=1+4=5.

777=7+7+7=21=2+1 =3.

இங்கே 7. வரவில்லை இந்த 9 இலக்கம். பற்றி ஒரு புத்தகமுண்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kaffee.jpg

துருக்கியர்களும்,அரேபியர்களும் தடிப்பான கோப்பி குடித்த கப்பில் சாத்திரம் பார்ப்பார்கள். அவர்களது இன்றைய இளம் சமுதாயத்தில் கூட புனிதமாக பார்க்கப்படுகின்றது.

விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகளிலும் தினசரி நாளிதழ்களில் இன்றைய நாள் பலன்கள் வரும்.

On 6/6/2025 at 23:04, Kandiah57 said:

இந்த பத்து எண்களிலிருந்து கோடிக்கணக்கில் எண்கள் பிறக்கும் என்றால்,....ஏன் இந்த பத்து எண்களை வைத்து கோடிக்கணக்கானவர்களில். பலனை கூற முடியாது ......முடியும் நான் நம்புகிறேன் உங்களை நம்பும்படி கூறவில்லை .....

நான் நம்ப வேண்டுமானால் நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். கோடிக் கணக்கானவர்களை விடுங்கள். சில ஆயிரம் நபர்களை எடுத்து அவர்களின் வாழ்க்கை முறை எண்கணித சாத்திரத்தின்படிதான் நடக்கிறது என்று யாராவது நிறுவியுள்ளார்களா ? எனக்குத் தெரிந்தவரை இல்லை. நிச்சயம் நிறுவவும் முடியாது.

21 hours ago, குமாரசாமி said:

விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகளிலும் தினசரி நாளிதழ்களில் இன்றைய நாள் பலன்கள் வரும்.

எல்லாத் தினசரிகளிலும் இல்லை. அதுவும் ஒதுக்குப் புறமாகப் போட்டிருப்பார்கள். ஏனென்றால் மிகக் குறைந்தவர்களே இதனை வாசிக்கிறார்கள். அதுவும் பலர் இதனைப் பொழுது போக்காகத்தான் வாசிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இணையவன் said:

நான் நம்ப வேண்டுமானால் நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். கோடிக் கணக்கானவர்களை விடுங்கள். சில ஆயிரம் நபர்களை எடுத்து அவர்களின் வாழ்க்கை முறை எண்கணித சாத்திரத்தின்படிதான் நடக்கிறது என்று யாராவது நிறுவியுள்ளார்களா ? எனக்குத் தெரிந்தவரை இல்லை. நிச்சயம் நிறுவவும் முடியாது.

உங்களை நம்ப சொல்லவில்லை,..உங்கள் எழுத்திலிருந்து நீங்கள் எண் சோதிடப்புத்தகங்களை படிக்கவில்லை என்பது தெரிகிறது,..எனவே நீங்கள் எப்படி நம்ப முடியும்??? இந்த புத்தகங்கள் எழுதியது ஆயிரக்கணக்கானோரின். வாழ்க்கையை ஆராய்ந்து தான்,. இது ஆயிரக்கணக்கானோரின். வாழ்க்கை வரலாறு தான் ஆகவே இதை மீண்டும் ஆயிரக்கணக்கானோரில். நடக்கிறதா?? என்று நிறுவ வேண்டிய தேவை இல்லை காரணம் இந்த எண் சோதிடம். ஆயிரக்கணக்கானோரின். வாழ்க்கை வரலாறு என்று தான் அந்த புத்தகங்கள் சொல்கிறது ...நான் சொல்லவில்லை

மேலும் எண் சோதிடப்படி M ...T,.V,....என்று எழுத்துக்கள் பெயரின். முதல் எழுத்து அல்லது தந்தையின் பெயரில் முதலாவது எழுத்தாக வருவது நல்லது அதிஷ்டம். என்கிறார்கள்

எனது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவரெட்ணம் ....அவர் N .நவரெட்ணம் ஆனால்

V.N.நவரெட்ணம் என்று தான் எழுதுவர். இது 41. ....5 ஆகும் இவரை சுற்றி மக்கள் இருந்து கொண்டு இருப்பார்கள் இது 5. நம்பரின். இயல்பு அடுத்து

ஜி.பொன்னம்பலம் .. . ஏன் ஜி.ஜி.பொன்னம்பலம் என்று எழுத வேண்டும் ???

தந்தை செல்வாவின். பெயரின். முன். S.J.V,. .என்று ஏன் எழுத வேண்டும்???

M.G.இராமசந்திரன். என்று ஏன். எழுத வேண்டும்

S.W.R.D,.பண்டாரநாயக்க. என்று ஏன். எழுத வேண்டும் ...

...இவர்கள் எல்லாம் எண். சோதிடத்தை நம்புகிறார்கள் ...அதன்படி வாழ்ந்துமிருக்கிறார்கள்.

நன்றி வணக்கம்… 🙏.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ கோடிக்கணக்கான கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள செவ்வாய்கிரகமும், வியாழன் கிரகமும், சனிக்கிரகமும் எப்படி பூமிக்கு தேடிவந்து ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டும் தேடிப்பிடித்து அவர்கள் வாழ்வில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக அது பூமியை நோக்கி பயணிக்கும் மீடியம் என்ன? குறிப்பிட்ட மக்களை தாக்கி முடிய அது எப்படி தான் தாக்க வேண்டிய அடுத்தவர்களை தேடி செல்கிறது என்பதை ஆதாரங்களுடன் எவரவது விளக்க முடியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.