Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ஜேர்மனியை சென்றடைந்தார் - ஜேர்மனி ஜனாதிபதியை பிற்பகல் சந்திக்கவுள்ளார்

11 JUN, 2025 | 03:06 PM

image

ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (11) முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறும்.

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெறவுள்ளது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர். 

https://www.virakesari.lk/article/217167

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர : அரச மரியாதையுடன் வரவேற்பு

11 JUN, 2025 | 07:57 PM

image

ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் - வோல்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) இன்று புதன்கிழமை (11) சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

பேர்லினின் பெல்வீவ் மாளிகைக்கு (Bellevue Palace) சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜேர்மன் முப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், முப்படைகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வின் பின்னர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வோல்டர் ஸ்டெய்ன்மையருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தொழில் பயிற்சி மற்றும் சுற்றுலாக் கைத்தொழில் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

WhatsApp_Image_2025-06-11_at_19.43.41.jp

WhatsApp_Image_2025-06-11_at_19.43.34.jp

WhatsApp_Image_2025-06-11_at_19.43.33__1

WhatsApp_Image_2025-06-11_at_19.43.32.jp

WhatsApp_Image_2025-06-11_at_19.43.31.jp

WhatsApp_Image_2025-06-11_at_19.43.30.jp

WhatsApp_Image_2025-06-11_at_19.43.29.jp

https://www.virakesari.lk/article/217213

  • கருத்துக்கள உறவுகள்

மன்னரின் திக்விஜயம் சிறப்பாக அமைந்திருக்கும் ......... பாராட்டுக்கள் . ........ ! 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

மன்னரின் திக்விஜயம் சிறப்பாக அமைந்திருக்கும் ......... பாராட்டுக்கள் . ........ ! 😁

அட நீங்க வேறை

அனுர ஜெர்மனிக்கு வந்தது எங்களை சந்திப்பதற்காகவே

என்று அங்கே தேரர்கள் ஒப்பாரி வைக்கின்றார்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாத்தியார் said:

அனுர ஜெர்மனிக்கு வந்தது எங்களை சந்திப்பதற்காகவே

எனக்கு முதலில் ஒன்றுமே விளங்கவே இல்லை அநுரகுமார திசாநாயக்கவின் திக்விஜயம் எப்படி சிறப்பாக அமைந்திருக்கும் ? பாராட்டுக்கள் யாருக்கு ? இப்போது தான் விளங்கியது எல்லா சிறப்புக்களும் பாராட்டுக்களும் அங்கே உள்ள ஈழதமிழர்க்கே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அநுரவுக்கும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

12 JUN, 2025 | 08:56 AM

image

ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதன்கிழமை (11) பிற்பகல் பெர்லினின் வொல்டொப் எஸ்டோரியா (Waldorf Astoria) ஹோட்டலில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann Wadephul) சந்தித்து கலந்துரையாடினார்.

அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) சுகீஷ்வர குணரத்ன மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-06-12_at_8.27.51_AM.

WhatsApp_Image_2025-06-12_at_8.27.51_AM_

https://www.virakesari.lk/article/217217

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த நெடியவனை சந்திக்கவே, ஜனாதிபதி ஜேர்மனிக்குப் பயணம்! புரளியை கிளப்புகின்றார் கம்மன்பில

717634501.jpeg

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த நெடியவனை சந்திக்கவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜேர்மனிக்குச் சென்றுள்ளார் என்று சமூகவ லைத்தளங்களில் கருத்துகள் வெளியாவதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே உறுதிப்படுத்தப்படாத இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஜேர்மனியில் சான்சலர்தான் அரசாங்கத்தின் பிரதானி. எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஜேர்மனியப்பயணத்தின் போது சான்சலர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திப்பதற்குரிய ஏற்பாடுகள் இல்லை எனக் கூறப்படுகின்றது. அப்படியானால் இந்தப் பயணத்தில் வேறு நோக்கம் இருக்கக்கூடும். 
எமது நாட்டில் ஜனாதிபதிதான் அரசதலைவர். எனவே, அவர் வெளிநாடு சென்றால் அந்த நாட்டிலுள்ள அரச தலைவரை சந்திக்கவேண்டும். ஐரோப்பாவிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களை சந்திப்பதற்கான தனிப்பட்ட விஜயமா இது என்ற கேள்வியும் எழுகின்றது.  புலிகள் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான நெடியவன் ஜேர்மனிக்குச் செல்லவுள்ளார். அவர் இலங்கைக்கு வந்து ஜனாதிபதியைச் சந்தித்தால் அது பெரும் பிரச்சினையாகக் கூடும் என்பதால், நெடியவனைச் சந்திக்கவே ஜனாதிபதி ஜேர்மனிக்குச் சென்றுள்ளார் என சில அரசியல்வாதிகளும், சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். அரசியல் களத்தில் உலா வரும் கதைகளே இவை. இவற்றின் உண்மைத்தன்மை என்னவென்பதை ஜனாதிபதியால் மட்டுமே வெளிப்படுத்த முடியும் - என்றார்.

https://newuthayan.com/article/விடுதலைப்_புலிகள்_அமைப்பை_சேர்ந்த_நெடியவனை_சந்திக்கவே,_ஜனாதிபதி_ஜேர்மனிக்குப்_பயணம்!#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

@தமிழ் சிறி யரை கொஞ்ச நாட்களாக காணவில்லை. ஜனாதிபதியை வருவது தெரிஞ்சதும் இவர் ஒளிந்துவிட்டாரோ. சிறியர் இவ்வளவு பயந்தாங்கொள்ளி என நான் எதிர்பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

thumb_large_18.jpg

24 minutes ago, நியாயம் said:

மேலே உள்ள படத்தில் இடது பக்கம் நீல ரவுசருடன் காலுக்கு மேல் கால் போட்டு கொண்டு முகம் வராமல் மறைத்து கொண்டு கடைசியாக இருப்பவர் தான் நீங்கள் தேடும் யாழ்கள உறவாக இருக்க வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று

13 JUN, 2025 | 01:05 PM

image

ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெள்ளிக்கிழமை (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்களின் (Tourism and Travel Industry Associations) பிரதிநிதிகளின் சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளார்.

அதன் பின்னர், ஜனாதிபதி ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் (DIHK) ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மாநாட்டிலும் கலந்து கொள்வார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனுக்கும் (Reem Alabali-Radovan) இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் பேர்லினில் உள்ள வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

பின்னர், ஜனாதிபதி ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்திக்க உள்ளார். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

https://www.virakesari.lk/article/217351

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விளங்க நினைப்பவன் said:

thumb_large_18.jpg

மேலே உள்ள படத்தில் இடது பக்கம் நீல ரவுசருடன் காலுக்கு மேல் கால் போட்டு கொண்டு முகம் வராமல் மறைத்து கொண்டு கடைசியாக இருப்பவர் தான் நீங்கள் தேடும் யாழ்கள உறவாக இருக்க வேண்டும்

இலையான் கில்லர் எங்கோ ஊர் சுற்ற சென்றுவிட்டார் போல. @தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நியாயம் said:

இலையான் கில்லர் எங்கோ ஊர் சுற்ற சென்றுவிட்டார் போல. @தமிழ் சிறி

கண்டு கொண்டேன். மகிழ்ச்சி.😷

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு; இலங்கையில் சுற்றுலாத் துறையில் முதலீடு செய்ய அழைப்பு

Published By: VISHNU

14 JUN, 2025 | 02:12 AM

image

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெள்ளிக்கிழமை (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் (Tourism and Travel Industry Associations) மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள்(Outbound Travel/Tour Operators) உடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார்.

WhatsApp_Image_2025-06-13_at_20.25.08_ce

இலங்கையில் நிலைபேறான சுற்றுலாத் துறைக்காக அரசாங்கம் எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகள் குறித்து இங்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, விசேடமாக சுற்றுலா வசதிகளை அதிகரித்தல், ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, நிலைபேறான சுற்றுலா பொறிமுறைகள் மூலம் இலங்கை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-06-13_at_20.25.09_87

சுற்றுலாத் துறையில் மனித வளங்களை மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரித்தல், கலாசார மற்றும் சூழல்சார் சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

WhatsApp_Image_2025-06-13_at_20.25.10_57

இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-06-13_at_20.25.06_e5

இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் ஜெர்மனி தற்போது 4 ஆவது இடத்தில் உள்ளது.

WhatsApp_Image_2025-06-13_at_20.25.05_86

2024 ஆம் ஆண்டில் 136,000 ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், இந்த ஆண்டு மே மாதம் வரை அந்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 69,000 பேர் இங்கு வருகை தந்துள்ளனர்.

WhatsApp_Image_2025-06-13_at_20.25.06_12

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-06-13_at_20.25.03_1b

WhatsApp_Image_2025-06-13_at_20.25.02_f7

https://www.virakesari.lk/article/217412

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (13) ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்துள்ளார். 

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டதுடன், அவர்கள் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பை அளித்தனர். 

இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எந்தவித பேதங்களும் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார். 

மேலும், நமது பொருளாதாரத்திற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டுவதோடு, வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை, மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எமது அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

https://adaderanatamil.lk/news/cmbvzln7i01ulqpbs04jir2ic

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடியவனை சந்திக்கச்சென்ற அனுராவுக்கு ஜேர்மனிய அரசாங்க வரவேற்பு என்றால்; நெடியவனின் அந்தஸ்து விளங்கவேண்டும் கம்மன்பிலவுக்கு. அதோடு விஜித ஹேரத்தின் ஆலோசனையில் இந்தச் சந்திப்பு நடந்ததாம். எப்போதுமே புலிகள் நினைப்பு. இவர்களே முன்னாள் புலிகளை அரசியலில் இணைக்க அனுராவை வற்புறுத்துகிறார்கள் போலிருக்கிறது. ஏன் இந்த அச்சம்? அவர்களின் அரசியல் வாழ்வு நிறைவடைந்துவிடுமென அஞ்சுகிறார்கள். தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை விரைவில் தூசு தட்டி விசாரணைக்கு எடுக்க வற்புறுத்துகிறர்கள்.

On 13/6/2025 at 08:05, விளங்க நினைப்பவன் said:

மேலே உள்ள படத்தில் இடது பக்கம் நீல ரவுசருடன் காலுக்கு மேல் கால் போட்டு கொண்டு முகம் வராமல் மறைத்து கொண்டு கடைசியாக இருப்பவர் தான் நீங்கள் தேடும் யாழ்கள உறவாக இருக்க வேண்டும்

அவரை நான் நெடியவன் என்றெல்லோ நினைத்தேன். ஒருவேளை நெடியவனின் பேச்சாளர் சிறியராக இருக்குமோ? அப்படியானால் பேச்சு சீரியஸாக இருக்குமென எதிர்பார்க்கலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை கட்டியெழுப்புவதற்கு சகலரும் முன்வாருங்கள் - ஜேர்மனியிலுள்ள இலங்கை பிரஜைகளிடம் ஜனாதிபதி கோரிக்கை

15 JUN, 2025 | 11:02 AM

image

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளது. எனவே இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எந்தவித பேதங்களும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சனிக்கிழமை (14) அங்கு வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு உரையாற்றினார்.

ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றுமுன்தினம் ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.

இதனியடைடுத்து ஜனாதிபதி பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை சந்தித்து கலந்துரையாடினார்.

இதனைத்தொடர்ந்து ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததுடன் அவர்கள் ஜனாதிபதியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

வெளிநாட்டலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்இ ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது அங்கு உரையாற்றிய ஜனாதிபதி,

இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எந்தவித பேதங்களும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் நமது பொருளாதாரத்திற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டுவதோடு வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நமது அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளது என்றும் ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிட்டார்.

FB_IMG_1749890130942.jpg

FB_IMG_1749890124591.jpg

FB_IMG_1749890139032__1_.jpg

FB_IMG_1749890127170.jpg

https://www.virakesari.lk/article/217495

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஏராளன் said:

நாட்டை கட்டியெழுப்புவதற்கு சகலரும் முன்வாருங்கள் - ஜேர்மனியிலுள்ள இலங்கை பிரஜைகளிடம் ஜனாதிபதி கோரிக்கை

நாட்டை கட்டியெழுப்பதற்கல்ல....

புத்த விகாரைகளை கட்டியெழுப்புவதற்கு முன் வாருங்கள் என மாற்றுங்கள்.

இலங்கையில் தானாக விளையும் உப்பு காலநிலை கொண்ட நாடு. அதை இனவாத புத்தியில் ஒதுக்கி விட்டு இன்று நாடு நாடாக கையேந்திக்கொண்டு திரிகின்றார்கள்.

இனவாதத்தை தவிர...

சூடு சுரணை இல்லை. வெட்கம் இல்லை.மனிதாபிமானம் இல்லை,உலக நியதி சட்ட திட்டங்கள் தெரியாத இனம் என்றால் அது சிங்களம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை கட்டியெழுப்ப விரும்புவோரை வரவேற்கிறார், தன் நாட்டுக்கு திரும்பிய வயோதிபரை கைது செய்கிறார். இவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2025 at 23:38, நியாயம் said:

@தமிழ் சிறி யரை கொஞ்ச நாட்களாக காணவில்லை. ஜனாதிபதியை வருவது தெரிஞ்சதும் இவர் ஒளிந்துவிட்டாரோ. சிறியர் இவ்வளவு பயந்தாங்கொள்ளி என நான் எதிர்பார்க்கவில்லை.

200.webp

தேடியமைக்கு நன்றி நியாயம்.

குறுகிய கால பிரயாணமாக இலங்கை சென்று....

Battery ஐ Recharge பண்ணிக் கொண்டு வந்துள்ளேன். 😂 🤣

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.