Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெஹ்ரானில் பொதுமக்கள் குடியிருப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் - 60 பேர் பலி

14 JUN, 2025 | 04:50 PM

image

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 20 சிறுவர்கள் உட்பட 60க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானின் அரச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

14 மாடிகளை கொண்ட குடியிருப்பு பகுதியில் இடிபாடுகளை அகற்றுவதில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது.

ஆறுமாத குழந்தை உட்பட 20 சிறுவர்கள் கொல்லபட்பட்டுள்ளனர் பல உடல்கள் இடிபாடுகளிற்குள் உள்ளன என செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/217463

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் மூவர் பலி

15 JUN, 2025 | 09:07 AM

image

இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியின் தென்பகுதியில் உள்ள பட்யாம் கட்டிடத்தின் மீது  ஈரான்மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

d95f809c-efbc-41d9-830d-cfbc31654017.jpg

d39cf38f-85bb-4b1c-9857-1db81b94d57c.jpg

https://www.virakesari.lk/article/217479

  • கருத்துக்கள உறவுகள்

டெஹ்ரானை மீண்டும் தாக்கிய இஸ்ரேல், அலையலையாக ஏவுகணைகளை வீசும் இரான் - என்ன நடக்கிறது?

இஸ்ரேல் - இரான், மத்திய கிழக்கு, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேல் - இரான் ஆகிய இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலைத் தொடர்வதால் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவும் போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது.

இரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையகம், எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

அதே நேரத்தில், இரான் ஒரே இரவில் அலையலையாக இரு முறை ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் இரு நாடுகளிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

டெஹ்ரானில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

டெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதாக இரானிய எண்ணெய் அமைச்சகமும் கூறுகிறது. இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.

அதில் எரிபொருள் அதிகமாக இல்லை என்றும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

டெஹ்ரானில் மக்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில் ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கு அமைந்துள்ளதால், அது அதிக ஆபத்து நிறைந்தது என்று டெஹ்ரானின் தீயணைப்புத் துறை முன்பு எச்சரித்திருந்தது.

இஸ்ரேல் - இரான், மத்திய கிழக்கு, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரானின் அணுசக்தி உள்கட்டமைப்பை தாக்கினோம் - இஸ்ரேல் ராணுவம்

இரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய டெஹ்ரானில் உள்ள உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

இரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமும் தங்களது இலக்குகளில் அடங்கும் என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது இரான் சரமாரி ஏவுகணை வீச்சு

இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அந்நாட்டின் மீது சரமாரியாக ஏவுகணைகளை இரான் ஏவியது. ஒரே இரவில் இரண்டு முறை அலையலையாக இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல் அவிவ் நகருக்கு தெற்கே உள்ள பாட் யாமில் ஒரு கட்டடம் இரான் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று இஸ்ரேலிய அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - இரான், மத்திய கிழக்கு, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல் அவிவ் அருகே நடந்த மற்றொரு தாக்குதலில் 60 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அவசர சேவையான மேகன் டேவிட் அடோம் (MDA) தெரிவித்துள்ளது.

அதே பகுதியில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர், அதே போல் யூடியன் அடிவாரத்தில் நடந்த தாக்குதலில் 24 பேர் காயமடைந்துள்ளனர் என்று MDA இன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இஸ்ரேலின் வடக்கே ஹைஃபா அருகே ஒரு குடியிருப்பு பகுதியை ஏவுகணைகள் தாக்கியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக பல இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கைகளை இந்த நேரத்தில் பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.

இஸ்ரேலுக்கு இரான் எச்சரிக்கை

இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

"இஸ்ரேலில் போர் விமான எரிபொருள் மற்றும் எரிசக்தி விநியோக மையங்களை குறிவைத்து தாக்கியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் இரானின் தாக்குதல் "மேலும் தீவிரமடையும்" என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1j5j07l8deo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- டெல் அவிவ் இராணுவ தலைமையகம் தகர்ப்பு

June 15, 2025 1:25 pm 0 comment

இஸ்ரேல் ஒரே நாளில் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உட்படபல நகரங்கள் மீது ஈரான் நேற்று (14) ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் இராணுவ தலைமையகம் உட்பட பல கட்டடங்கள் தகர்க்கப்பட்டன.

‘ஈரான் 60 சதவீதம் தூய்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துள்ளது. இதை 90 சதவீதம் செறிவூட்டினால் ஈரான் விரைவில் 9 அணுஆயுதங்களை தயாரித்துவிடும்’ என்று ஐக்கிய நாடுகள் சபையில், சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கடந்த மே 31ஆம் திகதி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி 60 நாட்கள் கெடு விதித்திருந்தார். அந்த கெடு முடிவடைந்தது. இதற்கிடையே, அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டியதால், அந்நாட்டின் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் விமானப்படையின் 200 போர் விமானங்கள், ஈரானில் 100 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 9 அணு விஞ்ஞானிகள், 3 இராணுவ தளபதிகள் உட்பட 78 பேர் உயிரிழந்தனர். 320 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 150 இடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இராணுவ மையங்கள், விமானப்படை தளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல நகரங்களிலும் சைரன் மூலம்மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பீதியடைந்த மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர். எதிரி நாடுகளின் வான் தாக்குதலை சமாளிக்க அயர்ன் டோம் என்ற வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இஸ்ரேல் பயன்படுத்தி வந்தது. இந்த ஏவுகணைகள் நேற்று முன்தினம் இரவு முதல் வானில் சீறிப் பாய்ந்தன. ஆனால், நேற்று ஈரான் நடத்திய தாக்குதலை, இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணைகளால் முற்றிலும் தடுக்க முடியவில்லை.

இதனால், டெல் அவிவ் நகரில் உள்ள இராணுவ தலைமையகம் மீது குண்டுகள் விழுந்து வெடித்தன. ஜெருசலேம் நகர், ரிசான் லெசியான் ஆகிய பகுதிகள் மீது நேற்று அதிகாலை ஏவுகணைகள் வீசப்பட்டதில் ஏராளமான குடியிருப்புகள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அனைத்து பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஈரான் தலைவர் அயதுல்லா அலி கொமேனி கூறும்போது, ‘‘இஸ்ரேலுடன் போரிட ஈரான் ராணுவ படைகள் தயார் நிலையில் உள்ளன. மக்கள் அனைவரும் ராணுவத்துக்கு ஆதரவாக உள்ளனர்’’ என்றார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியபோது, ‘‘இன்னும் சில மாதங்களில் ஈரானால் அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும். இது இஸ்ரேலுக்கு ஆபத்து. அதனால்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் மீதான தாக்குதல் தொடரும்’’ என்றார்.

இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடாவ் ஷோசானி கூறுகையில், ‘‘ மத்திய கிழக்கில் தற்போதைய பதற்றத்துக்கு காரணம் ஈரான். அணு ஆயுதங்களை தயாரித்து இஸ்ரேலை அழிக்க ஈரான் திட்டமிடுகிறது. அதனால்தான், அணு ஆயுத தளங்களை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தினோம். இஸ்ரேலில் மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது’’ என்றார். இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் நேற்று கூறியபோது, ‘‘ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால், அதற்கான கடும் விளைவுகளை ஈரான் மக்கள் சந்திப்பார்கள். தலைநகர் டெஹ்ரான் பற்றி எரியும்’’ என்று தெரிவித்தார். இரு நாட்டின் தலைவர்களும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்கா, ரஷ்யா கருத்து: இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியபோது, ‘‘ஈரானுக்கு பல வாய்ப்புகள் அளித்தேன். அப்போதே, என் பேச்சை கேட்டிருக்க வேண்டும். ஈரானில் பேரழிவு ஏற்படுவதற்கு முன்பாக, அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஒப்புக்கொள்ள வேண்டும்’’ என்றார். ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஐ.நா சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கியானுடன் அவர் தனித்தனியாக தொலைபேசியில் பேசினார். இரு நாடுகள் இடையிலான பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் புதின் கூறியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு: இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரே நாளில் பேரலுக்கு 6 டொலர் உயர்ந்து 78 டொலரானது. இதன்மூலம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைக்கு சென்றது. எனினும், இறுதியில் 74 டொலராக நிறைவடைந்தது. இந்த போர் தீவிரமானால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என தெரிகிறது.

இதுகுறித்து எஸ் அன்ட் பி குளோபல் தலைவர் ரிச்சர்டு ஜோஸ்விக் கூறியதாவது: இஸ்ரேல் – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது. ஆனால், ஏற்றுமதி பாதிக்கப்படுமா என்பதுதான் முக்கியம். கடந்த முறை ஈரானும் இஸ்ரேலும் மாறி மாறி தாக்குதல் நடத்தியபோது, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. பின்னர், போர் தீவிரமடையவில்லை என்றும், எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிந்தவுடன் அவற்றின் விலை சரிந்தது. இவ்வாறு அவர் கூறினார். ஈரானிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யவில்லை. ஆனாலும், நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்த சூழலில், இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக சரக்கு போக்குவரத்து தடைபட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, உலக அளவிலான கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்தில் 20% ஈரானுக்கு வடக்கே உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுகிறது. இதனால், இராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


https://www.thinakaran.lk/2025/06/15/breaking-news/135271/இஸ்ரேல்-நகரங்கள்-மீது-ஈர/#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் - இரான் மோதலில் அமெரிக்கா தலையிட்டால் என்ன நடக்கும்? 5 மோசமான சாத்தியக்கூறுகள்

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, வளைகுடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை இரவு இஸ்ரேலும் இரானும் சரமாரியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தின

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜேம்ஸ் லாண்டேல்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 15 ஜூன் 2025, 01:50 GMT

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த ஜூன் 13-ஆம் தேதி அதிகாலையில் இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டதாக அறிவித்தது.

இந்தத் தாக்குதல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற திட்டத்தின் ஓர் அங்கமாக நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.

இதில் இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும் இரானின் புரட்சிகர காவல் படை தளபதி ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் கூறியது.

இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்திருந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன. இஸ்ரேலை நோக்கி 2 அலைகளாக 100க்கும் குறைவான ஏவுகணைகளை இரான் ஏவியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே கூறினார்.

இப்போதைக்கு இஸ்ரேல் - இரான் சண்டை, இந்த இரு நாடுகளுக்கும் இடையிலானது என்றே தெரிகிறது. ஐக்கிய நாடுகள் சபையிலும் மற்ற இடங்களிலும் இரு தரப்பிலும் கட்டுப்பாடு தேவை என்று பரவலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவையனைத்தும் அவர்களது காதில் விழவில்லையெனில் என்ன செய்வது? அப்படி இரு நாடுகள் இடையிலான மோதல் மோசமடைந்தால் நிலைமை எப்படியெல்லாம் மாற வாய்ப்புள்ளது?

அமெரிக்கா தலையிட்டால் என்ன நடக்கும்?

அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்திருந்தாலும், அமெரிக்க படைகள் இஸ்ரேலின் தாக்குதல்களை ஆதரித்ததாகவும், குறைந்தபட்சம் மறைமுகமாக ஆதரித்ததாகவும் இரான் தெளிவாக நம்புகிறது.

இராக்கில் உள்ள சிறப்புப் படை முகாம்கள், வளைகுடாவில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள ராஜ்ஜீய பணிகள் என மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க இலக்குகளை இரான் தாக்கக்கூடும்.

இரான் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹெஸ்பொலா ஆகியவற்றின் பலம் குறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இராக்கில் அதன் ஆதரவுப் போராளிகள் ஆயுதம் ஏந்தியவர்களாக அப்படியே இருக்கின்றனர்.

அமெரிக்கா இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கும் சாத்தியமுள்ளது என அஞ்சி, சில அதிகாரிகளைத் திரும்பப் பெற்றது. தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், அமெரிக்க இலக்குகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா இரானை எச்சரித்துள்ளது.

ஒருவேளை டெல் அவிவ் அல்லது வேறு ஏதேனும் பகுதியில் ஓர் அமெரிக்க குடிமகன் கொல்லப்பட்டால் என்ன நடக்கும்?

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, வளைகுடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒருவேளை அமெரிக்கா நேரடியாக இந்தச் சண்டையில் பங்கெடுத்தால், அது கடுமையான, நீண்டகால மோதலுக்கு வழிவகுக்கும்

டொனால்ட் டிரம்ப் எதிர்செயலாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இரானை தோற்கடிக்க உதவுவதற்கு அமெரிக்காவையும் இழுக்க முயல்வதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது நீண்ட காலமாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இரான் பூமிக்கடியில் நிர்மாணித்துள்ள ஃபோர்டோ போன்ற அணுசக்தி நிலையங்களை தகர்க்கக் கூடிய வகையில், கீழே ஊடுருவிச் சென்று தாக்கக் கூடிய குண்டுகள் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"மத்திய கிழக்கில் நீண்ட போர்களைத் தொடங்க மாட்டேன்" என்று டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கு உறுதியளித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் பல குடியரசுக் கட்சியினர் இஸ்ரேலை வலுவாக ஆதரிக்கின்றனர். இரான் அரசை அதிகாரத்தில் இருந்து அகற்ற முயல்வதற்கு இதுவே சரியான நேரம் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் உடன்படுகிறார்கள்.

ஒருவேளை அமெரிக்கா நேரடியாக இந்தச் சண்டையில் பங்கெடுத்தால், அது கடுமையான, நீண்டகால மோதலுக்கு வழிவகுக்கும்.

வளைகுடா முழுவதும் பரவுமா?

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, வளைகுடா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இஸ்ரேலை தாக்குவது கடினமாக இருந்தால், அதற்கு ஆதரவளிக்கும் வளைகுடா நாடுகள் மீது இரான் குறிவைக்கலாம்

இஸ்ரேல் ராணுவம் மற்றும் பிற இலக்குகளை இரான் சேதப்படுத்தத் தவறும் பட்சத்தில், அதன் கவனம் வளைகுடாவில் உள்ள பிற எளிய இலக்குகளை நோக்கித் திரும்பக்கூடும். குறிப்பாகப் பல ஆண்டுகளாக அதன் எதிரிகளுக்கு உதவியதாகவும் உடந்தையாக இருந்ததாகவும் இரான் நம்பும் நாடுகளை அதன் ஏவுகணைகள் குறிவைக்கலாம்.

இந்தப் பிராந்தியத்தில் ஏராளமான எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகள் உள்ளன. கடந்த 2019-இல் சௌதி அரேபியாவின் எண்ணெய் வயல்களைத் தாக்கியதாக இரான் மீது குற்றம் சாட்டப்பட்டது. இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி படைகள் 2022-இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலக்குகளைத் தாக்கியதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

அதன் பிறகு இரானுக்கும் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளுக்கும் இடையே ஒரு வகையான சமரசம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த நாடுகள் அமெரிக்க விமானப்படைத் தளங்களுக்கு இடம் அளித்துள்ளன. அவற்றில் சில கடந்த ஆண்டு இரானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க உதவின.

ஒருவேளை வளைகுடா நாடுகள் தாக்கப்பட்டால், இஸ்ரேலை போலவே அவையும் அமெரிக்க போர் விமானங்களைத் தனது பாதுகாப்புக்கு வருமாறு கோரக்கூடும்.

இஸ்ரேலின் தாக்குதல் தோல்வியடைந்தால் என்ன நடக்கும்?

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, வளைகுடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டெஹ்ரான் மற்றும் பிற இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளை இஸ்ரேலிய தாக்குதல்கள் சேதப்படுத்தின.

ஒருவேளை, இஸ்ரேல் இரானின் அணுசக்தித் திறனை அழிக்கத் தவறினால் என்ன நடக்கும்?

இரானின் அணுசக்தி நிலையங்கள் மிகவும் ஆழமாகவும், நன்கு பாதுகாக்கப்பட்டதாகவும் இருந்தால் என்ன செய்வது?

இரானின், 60% செறிவூட்டப்பட்ட 400 கிலோ யுரேனியம், முழுமையாக ஆயுதமயமாவதற்கு இன்னும் ஒரு சில படிகள் மட்டுமே உள்ளன. கிட்டத்தட்ட 10 அணுகுண்டுகளை உருவாக்கப் போதுமான அந்த திறன் அழிக்கப்படாவிட்டால் என்ன செய்வது?

இது ரகசிய சுரங்கங்களில் ஆழமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இஸ்ரேல் சில அணு விஞ்ஞானிகளைக் கொன்றிருக்கலாம். ஆனால், எந்தக் குண்டுகளாலும் இரானின் அறிவு மற்றும் நிபுணத்துவத்தை அழிக்க முடியாது.

ஒருவேளை இஸ்ரேலின் தற்போதைய தாக்குதல், இத்தகைய மேலதிக தாக்குதல்களைத் தடுப்பதற்கான ஒரே வழி தனது அணுசக்தித் திறனை வேகமாக நிறைவடையச் செய்வதுதான் என்று இரான் தலைமையை நினைக்க வைத்தால் என்ன செய்வது?

புதிய ராணுவ தலைவர்கள் அதிக தலைக்கனத்துடனும், குறைவான எச்சரிக்கை உணர்வுடனும் இருந்தால் என்ன செய்வது?

இந்தச் சூழ்நிலை ஏற்பட்டால், அது இஸ்ரேலை மேலும் தாக்குதல்களை நடத்தக் கட்டாயப்படுத்தக் கூடும். அது பிராந்தியத்தை தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் எதிர்த் தாக்குதல்களுக்கும் பிணைக்கக் கூடும். இஸ்ரேலியர்கள் இத்தகைய செயலை "புற்களை வெட்டுதல்" என்று அழைக்கின்றனர்.

உலகளாவிய பொருளாதார அதிர்ச்சி

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, வளைகுடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த மோதல் தீவிரமடைவது உலகளாவிய வாழ்க்கைச் செலவுகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் (சித்தரிப்புப் படம்)

எண்ணெய் விலை ஏற்கெனவே உயர்ந்து வருகிறது.

இரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடி, எண்ணெய் போக்குவரத்தை மேலும் கட்டுப்படுத்த முயன்றால் என்ன செய்வது?

அரேபிய தீபகற்பத்தின் மறுபுறத்தில், ஏமனில் உள்ள ஹூத்திகள் செங்கடலில் கப்பல் போக்குவரத்தை தாக்கும் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்கினால் என்ன செய்வது?

ஹூத்தி படையைக் கணிப்பது மிகவும் கடினமானது மற்றும் அவர்கள் ஆபத்துகளின் மீது தீராப்பசி கொண்டவர்களாக அறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். டிரம்பின் வரிக்குவரி யுத்தத்தின் விளைவாக ஏற்கெனவே உருவாகியுள்ள சிக்கலுக்கு நடுவே எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும்.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பயனடையும் ஒரே நபர் ரஷ்ய அதிபர் புதின் மட்டுமே. அதன் பயனாக, யுக்ரேனுக்கு எதிரான அவரது போருக்குத் தேவையான பணம் கிரெம்ளின் கஜானாவில் பில்லியன் கணக்கில் குவியத் தொடங்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

இரான் ஆட்சி வீழ்ந்து, வெற்றிடம் உருவானால்...

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, வளைகுடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரானில் உள்ள தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவது ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தக்கூடும்

இரானில் ஆட்சியை வீழ்ச்சியடையச் செய்யும் தனது நீண்டகால நோக்கத்தில் இஸ்ரேல் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?

இரானின் அணுசக்தித் திறனை அழிப்பதே தனது முதன்மை நோக்கம் என்று நெதன்யாகு கூறுகிறார். ஆனால், ஜூன் 13 அன்று வெளியிட்ட அறிக்கையில் அறிக்கையில் தனது பரந்த நோக்கம் ஆட்சி மாற்றத்தையும் உள்ளடக்கியது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

"இரானின் பெருமை மிக்க மக்களிடம்" அவர் தனது தாக்குதல் "தீய மற்றும் அடக்குமுறை ஆட்சி மீதானது" என்று அவர் குறிப்பிட்டதில் இருந்து "அவர்கள் சுதந்திரத்தை அடைவதற்கான பாதை இது," என்பது தெளிவாகிறது.

இரான் அரசாங்கத்தை வீழ்த்துவது பிராந்தியத்தில் சிலருக்கு, குறிப்பாக சில இஸ்ரேலியர்களுக்கு ஏற்புடையதாக இருக்கக் கூடும். ஆனால் அது விட்டுச் செல்லப்போகும் வெற்றிடம் என்ன? அதன் எதிர்பாராத விளைவுகள் என்னவாக இருக்கும்? இரானில் உள்நாட்டு மோதல் எப்படி இருக்கும்?

வலுவான மையப்படுத்தப்பட்ட அரசாங்கம் அகற்றப்பட்ட போது இராக் மற்றும் லிபியாவில் என்ன நடந்தது என்பது பலருக்கும் நினைவில் இருக்கலாம். எனவே, வரும் நாட்களில் இந்த மோதல் எவ்வாறு பரிணாமம் பெறுகிறது என்பதைப் பொறுத்தே நிலைமை மாறும்.

இரான் எவ்வாறு, எவ்வளவு கடினமாக பதிலடி கொடுக்கும்? இஸ்ரேல் மீது அமெரிக்காவால் எத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்?

இந்த இரண்டு கேள்விகளுக்கான பதிலைப் பொறுத்தே அடுத்து வரக்கூடிய சூழ்நிலைகளும் அமையும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8e60nz2kkxo

  • கருத்துக்கள உறவுகள்

13125831-1749969879.jpg?resize=1170%2C78

Fire and smoke rise from an oil storage in Tehran as Israel continues strikes on Iran. [Abedin Taherkenareh/EPA]

2025-06-15T032306Z_1250064999_RC2O2FA2Q7

People watch from a bridge as flames rise from the Sharan oil depot following Israeli strikes in Tehran. [Majid Asgaripour/WANA via Reuters]

AP25166139640958-1749965392.jpg?fit=1170

Israeli forces inspect a building hit by an Iranian missile near Tel Aviv. [Ohad Zwigenberg/AP Photo]

13126158-1749971746.jpg?fit=1170%2C780&q

2025-06-15T073033Z_451289475_RC2V2FA2D99

A building hit by an Iranian strike in Tamra, northern Israel. [Ammar Awad/Reuters]

Damaged buildings after Iranian missiles hit Rehovot, central Israel. [Abir Sultan/EPA]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 13/6/2025 at 13:39, கிருபன் said:

ஈரானின் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. ஒரு மாற்றம் அங்கு தேவை.

மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள்/அரச தலைவர்கள் எல்லோரும் என்ன செய்கின்றார்கள்? அவர்களும் ஆயுதத்தை தானே கையில் எடுக்கின்றார்கள்? அவர்களும் பதவிக்கு வந்த பின் தாம் நினைத்ததை தானே செய்கின்றார்கள்.

இதில் சர்வாதிகார அரசியலுக்கும் ஜனநாயக அரசியலுக்கும் என்ன வேறுபாட்டை உங்களால் காண முடிகின்றது?

On 13/6/2025 at 18:26, கிருபன் said:

ரஷ்யாவின் புட்டின், சீனாவின் ஷிஜின்பெங், இந்தியாவில் மோடி, வடகொரியவின் கிம் ஜொங் உன் என்று உலகம் முழுவதும் தனிநபர்களிடம் அதிகாரம் குவிந்துள்ளது. கட்டாயம் உலக அழிவுப் பாதையில் கொண்டு செல்லவே இந்த தனிநபர் அதிகாரம் உதவும்

ஜனநாயக நாடுகளான பிரான்ஸ்,இங்கிலாந்து,ஜேர்மனி எதை செய்கின்றனவோ அதையே நீங்கள் குறிப்பிட்டவர்களும் செய்கின்றார்கள்.

On 14/6/2025 at 13:15, இணையவன் said:

பலஸ்தீன் தனிநாட்டை ஆதரிக்கும் அதே வேளை இஸ்ரேலுடன் ஈரானுக்கு எதிரான போரில் பிரான்ஸ் பங்குகொள்ளும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி நேற்று அறிவித்திருந்தார்.

ஈரான் பலஸ்தீனத்தை ஆதரித்துத்தான் இஸ்ரேலுடன் போர் தொடுக்கின்றது என்பதை உங்கள் ஆருயிர் பிரான்ஸ் அண்ணனுக்கு தெரிவித்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மொசாட் ஈரானின் ராடார் செயற்பாட்டினை முற்றாக அழித்த பின்னர் இஸ்ரேல் தற்போது இஸ்ரேல் வான் மேலாதிக்கத்தினை கொண்டுள்ள நிலையில் சீனா ஈரானிற்கு ராடர் சாதனங்களை வழங்குவதாக தமிழ் பொக்கிசம் விக்கி ஒரு காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் இந்தியாவிற்கு கார்கில் போரில் ஆயுத அழித்ததாகவும் அந்த காணொளியில் குறிப்பிடுகிறார், இந்த போரில் இந்தியா இஸ்ரேலும் ஈரானும் சமாதானமாக பேச்சு மூலம் தீர்க்க வலியுறுத்துவதாக கூறுகிறார் ஆனால் இந்த போரில் இந்தியா இஸ்ரேல் ஆதரவு நிலை எடுப்பதற்கே வாய்ப்புண்டு அண்மைய இந்திய பாகிஸ்தான் போரில் சீன ஆயுத உதவி இந்தியாவிற்கெதிராக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இந்தியா தோற்கடிக்கப்பட்ட நிலையில் இந்தியா இஸ்ரேல் ஆதரவு நிலை எடுக்க அதிக வாய்ப்புண்டு.

இந்த போர் ஏற்கன்வே பொருளாதார நெருக்கடியில் உள்ள உலக நாடுகளை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும்.

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இந்த போர் ஒரு அவசியமான ஒன்றாக இருப்பதால் இந்த போர் மேலும் தீவிரமாகலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவரும் பலி

16 JUN, 2025 | 08:43 AM

image

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி ஞாயிற்றுக்கிழமை ஈரானின் தாக்குதலில் கொல்லபட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அவருடன் வேறு சில அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவரும் பலி.ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி ஞாயிற்றுக்கிழமை ஈரானின் தாக்குதலில் கொல்லபட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அவருடன் வேறு சில அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/217574

ஈரானின் ஆன்மீகதலைவர் கமேனியை கொலை செய்யும் இஸ்ரேலின் திட்டம் - தடுத்தார் டிரம்ப் - சிபிஎஸ் நியுஸ்

Published By: RAJEEBAN

16 JUN, 2025 | 07:58 AM

image

ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனியை கொலை செய்யும் இஸ்ரேலின் திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்த்தார் என அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியுசிற்கு  தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிற்கு ஈரானின் ஆன்மீகதலைவரை கொல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது,ஆனால் இது சிறந்த விடயமல்ல என டிரம்ப் இஸ்ரேலிய பிரதமருக்கு தெரிவித்தார் என அதிகாரியொருவர் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலை ஆரம்பித்த பின்னரே இருவருக்கும் இடையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த விடயம் குறித்து ரொய்ட்டரும் செய்தி வெளியிட்டுள்ளது.ஈரானின் ஆன்மீக தலைவரை கொலை செய்வதற்கான நம்பதன்மை மிக்க திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாக இஸ்ரேலியர்கள் வெள்ளை மாளிகைக்கு தெரிவித்தனர் என இந்த விடயம் குறித்து நன்கறிந்த அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்தாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து தெளிவுபடுத்தப்பட்ட பின்னர் வெள்ளை மாளிகை அதிகாரிகள் டிரம்ப் இந்த திட்டத்தை எதிர்க்கின்றார் என இஸ்ரேலிய அதிகாரிகளிற்கு தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/217571

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிற்குள் வைத்து தாக்குதலை மேற்கொள்வதற்காக மொசாட் ஆளில்லா விமானங்களை எப்படி கொண்டு சென்றது? வோல்ஸ்ரீட் ஜேர்னல்

Published By: RAJEEBAN

16 JUN, 2025 | 04:00 PM

image

ஈரான் மீதான தாக்குதல் இடம்பெறுவதற்கு முந்தைய மாதங்களில் இஸ்ரேல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஈரானிற்குள் இரகசியமாக கொண்டு சென்றது என அவற்றை பயன்படுத்தி வான்தாக்குதலை ஈரான் தடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது என அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து நன்கறிந்த வட்டாரங்களின் தகவல்களின்படி சூட்கேஸ்கள் டிரக்குகள் டாங்கர்கள் மூலம் இஸ்ரேல் இந்த ஆளில்லா விமானங்களைவெடி பொருட்களுடன் ஈரானிற்குள் கொண்டு சென்றது என தெரிவித்துள்ளன.

ஈரானிற்குள் வர்த்தக நோக்கங்களுடன் செல்லும் வாகனங்களை பயன்படுத்தி ஆளில்லா விமானங்களை மொசாட் கொண்டு சென்றது ஈரானிற்குள் இருந்த அதன் முகவர்கள் அவற்றை பொருத்தினார்கள். அதன் பின்னர் வார இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட குழுவினரிடம் கையளித்தனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானிற்குள் செயற்படும் குழுக்களின் தலைவர்களிற்கு முதலில் மூன்றாவது நாடொன்றில் வைத்து பயிற்சியளித்தது இஸ்ரேல், அதன் பின்னர் அவர்கள் ஈரானிற்குள் இருந்த தங்கள் அணிகளிற்கு உத்தரவுகளை வழங்கினார்கள்.

நடவடிக்கை ஆரம்பமானதும், இஸ்ரேலின் இரகசிய படைப்பிரிவினர் ஈரானின் வான்பாதுகாப்பு நிலைகளிற்கும் ஏவுகணை ஏவும் பகுதிகளிற்கு அருகிலும் நிலைகொண்டனர்.

வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்ததும் இஸ்ரேலின் சில அணியினர் ஈரானின் விமான எதிர்ப்பு பொறிமுறைகளை செயல் இழக்கச்செய்தனர், ஏனையவர்கள் ஏவுகணை செலுத்திகளை இலக்குவைத்தனர்.

ஏவுகணைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட பல டிரக்குகளும் தாக்கப்பட்டன.

ஈரானால் ஏன் ஆரம்பத்தில் பதில் நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை என்பதை இஸ்ரேலின் இந்த நடவடிக்கை தெளிவுபடுத்துகின்றது.

புதுமையான விதத்தில் செலவின்றி ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது. ரஸ்யாவின் விமானங்களை தாக்குவதற்காக உக்ரைன் இவ்வாறான தந்திரோபாயங்களை பயன்படுத்திய சில நாட்களின் பின்னர் இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள இவ்வாறான விதத்தில் பயன்படுத்தியுள்ளது.

ஈரான் தனது ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை இல்லாமல் செய்வதற்கு மொசாட்டின் ஆளில்லா விமான நடவடிக்கை உதவியது என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

பயன்படுத்துவதற்கான நிலையில் காணப்பட்ட பல ஏவுகணைகளை இஸ்ரேலின் விசேட படைப்பிரிவுகள் அதிகாலையில் அழித்தன.

இதன் பிறகே ஈரான் வெள்ளிக்கிழமை முதல் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதனால் குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டுள்ளன எனினும் இஸ்ரேல் இதனை விட கடுமையான பதில் தாக்குதலை எதிர்பார்த்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொசாட் இந்த நடவடிக்கைக்காக பல வருடங்களாக திட்டமிடல்களை மேற்கொண்டது என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், மற்றும் தனது விசேட படைப்பிரிகளை எங்கு நிறுத்தவேண்டும் போன்ற விடயங்கள் குறித்து திட்டமிடல்களில் இஸ்ரேல் பல வருடங்களாக ஈடுபட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/217633

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2025 at 04:38, விசுகு said:

சகிம்சை --> சமிக்கை

11 hours ago, vasee said:

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இந்த போர் ஒரு அவசியமான ஒன்றாக இருப்பதால் இந்த போர் மேலும் தீவிரமாகலாம்.

உக்ரெய்னில் அமெரிக்கா தனது இராணுவ தளபாட வழங்கலைக் குறைத்துக் கொண்டு அவற்றை ஈரானை நோக்கி நகர்த்துவதாக இரு வாரங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே ட்றம்ப் உக்ரெயின் போரை நிறு த்த முயற்சித்தது இதற்காகவும் இருக்கலாம்.

தேர்தலின் முன் உக்ரெயின் மற்றும் பலஸ்தீன போர்களை நிறுத்துவேன் என்று கூறிய ட்றம்ப், இரண்டாக இருந்த போர் முனைகளை இப்போது மூன்றாக்கியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இணையவன் said:

தேர்தலின் முன் உக்ரெயின் மற்றும் பலஸ்தீன போர்களை நிறுத்துவேன் என்று கூறிய ட்றம்ப், இரண்டாக இருந்த போர் முனைகளை இப்போது மூன்றாக்கியுள்ளார்.

ரஸ்யா v உக்ரேன்

இஸ்ரேல் v ஈரான்

மற்றது எது அண்ணை?

  • கருத்துக்கள உறவுகள்

தெஹ்ரான் வான்வெளியை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ள இஸ்ரேல்

ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களில் நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

மேலும், தெஹ்ரானின் வான்வெளியை இஸ்ரேலிய விமானப்படை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அணுசக்தி அச்சுறுத்தலை நீக்குதல் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை நீக்குதல் ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களை அடைய நாங்கள் எங்கள் பாதையில் செல்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

நாங்கள் தெஹ்ரான் குடிமக்களிடம் பிராந்தியத்தை விட்டு வெளியேறுமாறு கூறியுள்யோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

25-685033bf2f8e6.webp

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது.

இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருகின்றது.

இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போரின் முடிவு தொடர்பில் தெளிவற்ற தன்மை காணப்படுகின்றது.

போர்நிறுத்த பேச்சுவார்த்தை

இந்நிலையில் ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்திவருகிறது.

25-685033bfb4f12.webp

ஆனால் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியமை அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் தூதரகம் சேதமடைந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

https://tamilwin.com/article/israel-has-full-control-of-tehran-s-airspace-1750085552

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெஹ்ரானை விட்டு மக்களை வெளியேறச் சொல்கிறார் டிரம்ப்!

adminJune 17, 2025

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அனைத்து குடிமக்களையும் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ட்ரம்பின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே தலைநகர் தெஹ்ரானில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி  சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்ட பதிவை மேற்கோள் காட்டி இந்த செய்திகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அணு ஆயுத மேம்பாட்டைத் தடுப்பதற்கான ஒப்பந்தத்தை நாடு நிராகரித்ததாகக் கூறி, ஈரானியர்கள் தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“நான் கையெழுத்திடச் சொன்ன ‘ஒப்பந்தத்தில்’ ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன ஒரு அவமானம், மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன்! அனைவரும் உடனடியாக தெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும்!” என டிரம்ப் அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது.

https://globaltamilnews.net/2025/216903/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: நேரலையில் அதிர்ந்த கட்டிடம்

image_d34c6039d6.jpg

ஈரான் மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல் ராணுவம். இதில், ஈரான் நாட்டின் அரசு தொலைக்காட்சி ஊடக நிறுவனமான ஈரானின் இஸ்லாமிய குடியரசு நியூஸ் நெட்வொர்க் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின்போது கட்டிடம் அதிர்ந்து கரும்புகை எழுந்தது, அந்த தொலைகாட்சி நிறுவனத்தின் ஸடூடியோவில் நேரலை நிகழ்ச்சியில் பதிவானது.

முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரானின் அரசு ஊடகத்துக்கு சொந்தமான தொலைகாட்சி, வானொலி நிலையம் அழிக்கப்படும் என கூறி இருந்தது கவனிக்கத்தக்கது. இதனிடையே, ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பை தாக்கி அழிக்கும் வகையில் தெஹ்ரானில் உள்ள பொது மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்திருந்தது. இதையடுத்து அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

ஈரான் அரசு செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல்: திங்கட்கிழமை அன்று நேரலையில் தொகுப்பாளர் ஒருவர் ஈரான் அரசு தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து அந்த தொகுப்பாளர் தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் செயல்பட்டார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தெஹ்ரானில் உள்ள அந்த அலுவலகம் மோசமாக சேதமடைந்தது.

ஈரான் செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக அந்தச் செய்தி நிறுவனத்தின் ஒளிபரப்பு சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. ‘உண்மையின் குரலை ஒடுக்கும் முயற்சி’ என இஸ்ரேலை குற்றம்சாட்டி மீண்டும் ஒளிபரப்பு தொடங்கியது.

முன்னதாக, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பரவலாக தாக்குதலை நடத்தி இருந்தது இஸ்ரேல். மேலும், தாக்குதலுக்கு முன்னதாக தெஹ்ரானில் இருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்தது. இந்த அறிவிப்பை பாரசீக மொழியில் ஈரான் மக்களிடம் இஸ்ரேல் தெரிவித்தது. அதே நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என இஸ்ரேல் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

ஈரான் தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு: திங்கட்கிழமை அன்று இஸ்ரேலின் பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல். ஏற்கெனவே, கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் தொடரும் நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் போர் மூளும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது.

கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது. அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்று பெயரில் இந்த தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலை சேர்ந்த 24 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதை அந்த நாட்டின் பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. இதில் காயமடைந்த சுமார் 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

ஈரானில் 224 பேர் உயிரிழப்பு: கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானை சேர்ந்த 224 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. சுமார் 1,277 பேர் காயமடைந்து உள்ளதாக தகவல். இஸ்ரேல் - ஈரான் மோதலில் ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலில் ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு வழங்கியுள்ளது.  

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஈரான்-அரசு-தொலைக்காட்சி-அலுவலகம்-மீது-இஸ்ரேல்-தாக்குதல்-நேரலையில்-அதிர்ந்த-கட்டிடம்/50-359405

மாணவர்கள் வெளியேற தரைவழி எல்லைகளை திறந்தது ஈரான்

image_ebb0643fa4.jpg

ஈரான் - இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானில் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாணவர்கள். ஈரானில் உள்ள பெரும்பாலான இந்திய மாணவர்கள் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர்கள்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அங்கு வசிக்கும் இந்திய மாணவர்கள் வெளியேற தரைவழி எல்லைகளை ஈரான் அரசு திறந்துள்ளது.

இந்நிலையில் ஈரானில் படிக்கும் மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு ஈரான் அரசை, இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தங்களது தரைவழி எல்லைகளை திறந்துள்ளதாகவும், அதன் வழியாக மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என்றும் ஈரான் அரசு நேற்று அறிவித்துள்ளது.

ஈரான் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஈரான் மீதான வான்வழி மூடப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறும் வகையில் அனைத்து தரைவழி எல்லைகளும் திறந்திருக்கும். மாணவர்கள் பாதுகாப்பாக செல்லலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/மாணவர்-கள்-வெளி-யேற-தரைவழி-எல்-லைகளை-திறந்தது-ஈரான்/175-359403

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் – இஸ்ரேல் பிரதமர்

June 17, 2025 9:09 am

அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் – இஸ்ரேல் பிரதமர்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
அமெரிக்க சேனலான ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியின் போது நெதன்யாகு இந்த அறிக்கையை வெளியிட்டார்.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நெதன்யாகு நியாயப்படுத்தினார், மேலும் கமேனியை ‘நவீன கால ஹிட்லர்’ என்று அழைத்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காமெனியைக் கொல்லும் திட்டத்தை நிராகரித்ததாக வெளியான செய்திகளை நெதன்யாகு மறுத்தார். “இது (காமெனியின் படுகொலை) மோதலை அதிகரிப்பதற்காக அல்ல, அதை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக” என்று நெதன்யாகு கூறினார்.

நெதன்யாகுவின் வாதம் என்னவென்றால், ஈரான் இஸ்ரேலைப் போருக்குத் தள்ளுகிறது. ஈரான் எப்போதும் போரை விரும்புகிறது. அது நம்மை அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குக் கொண்டு செல்கிறது.

இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது. தீய சக்திகளை எதிர்ப்பதன் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்று நெதன்யாகு கூறினார்.

இஸ்ரேல்-ஈரான் மோதல் முழு அளவிலான போரை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நினைத்து உலகம் கவலை கொண்டுள்ளது. நேற்று, தொடர்ந்து நான்காவது இரவும் இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடந்தன.

ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் உள்ள மாவட்டம் 3 உட்பட பல இடங்களில் இஸ்ரேல் பரந்த அளவிலான தாக்குதலை நடத்தியது. ஈரானின் அரசு தொலைக்காட்சியின் தலைமையகத்தையும் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது.

பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஸ்டேட் டிவியில் நேரடி செய்தி ஒளிபரப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது.

ஒரு பெரிய வெடிப்பு மற்றும் ஒரு செய்தி தொகுப்பாளர் வெளியேறுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதேபோன்ற எச்சரிக்கையை இஸ்ரேலுக்கும் விடுத்த ஈரான், டெல் அவிவ் மக்கள் விரைவில் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இலக்குகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது.

https://oruvan.com/war-will-end-if-ayatollah-khamenei-is-killed-israeli-prime-minister/

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் போர்க்கால தலைமைத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்'' - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

17 JUN, 2025 | 02:13 PM

image

டெல் அவிவ்: தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ராணுவ தளபதி அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்தன. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி ஷத்மானி, துல்லியமான உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து, மத்திய தெஹ்ரானில் ஐஏஎஃப் தாக்குதலில் கொல்லப்பட்டார்" என்று ஐடிஎஃப் ட்வீட் செய்தது.

ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதி அலி ஷத்மானி ஈரானிய ஆயுதப் படைகளின் அவசரகால கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார். அவர் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ஈரானிய ராணுவம் இரண்டிற்கும் கட்டளை தளபதியாக இருந்தார்.

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் விளைவாக ஈரான் மற்றும் இஸ்ரேலில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானில், இதுவரை 224 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில், ஈரானின் பதிலடி தாக்குதல்களில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 592 பேர் காயமடைந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/217715

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் ஹைஃபா நகரை இரான் குறி வைப்பது ஏன்? இந்தியாவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு?

ஹைஃபா, இரான் - இஸ்ரேல், இந்தியா

பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ஹைஃபா நகர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பிந்தைய படம் (ஜூன் 16,2025)

2 மணி நேரங்களுக்கு முன்னர்

இரான் மற்றும் இஸ்ரேல் இடையே தொடர் தாக்குதல் தொடர்கிறது. இரானின் அணு ஆயுத திட்டத்தை குறிவைத்து இஸ்ரேல் பல வான்வழி தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

பதிலடியாக, இரானும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, அவற்றில் சில இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை தாண்டி குடியிருப்புப் பகுதிகளை அடைந்தன.

இரான் சுகாதாரத்துறை கூற்றின்படி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு அந்நாட்டில் 224 பேர் உயிரிழந்துள்ளனர். மறுபக்கம் இஸ்ரேலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஐ எட்டியுள்ளது.

இரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் டெல் அவிவ், ஹைஃபா மற்றும் பிற நகரங்களை சேர்ந்தவர்கள் என இஸ்ரேல் சொல்கிறது.

இரான் தாக்குதலில் இஸ்ரேலின் இரண்டு முக்கிய நகரங்களான டெல் அவிவ் மற்றும் ஹைஃபா ஆகியவை இலக்காயின.

ஹைஃபா என்பது இஸ்ரேலின் வடக்கு துறைமுக நகரம். இங்கு ஒரு பெரிய துறைமுகமும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் உள்ளன.

முன்னதாக, டெல் அவிவ், ஹைஃபா மற்றும் பிற இஸ்ரேல் நகரங்கள் பல இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்கப்பட்டதாக இரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

இது போன்ற ஒரு சூழ்நிலையில், இஸ்ரேலின் ஹைஃபா நகரை குறிவைப்பதற்கான காரணங்கள் மற்றும் இந்த நகரத்திற்கு இந்தியாவுடன் இருக்கும் தொடர்பு குறித்தும் தெரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.

ஹைஃபா நகரம் இஸ்ரேலுக்கு ஏன் முக்கியமானது?

இஸ்ரேல் விவகாரங்களில் நிபுணரான மூத்த பத்திரிகையாளர் ஹரேந்திர மிஸ்ரா, தற்போது ஜெருசலேமில் உள்ளார்.

பிபிசி செய்தியாளர் அபய் குமார் சிங்குடன் பேசுகையில், இஸ்ரேலுக்கு ஹைஃபா நகரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறுகிறார். "ஹைஃபா இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமாகும். இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் அமைந்த இந்த நகரம், மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமல்லாமல், பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் மிகவும் முக்கியமானது." என்றார் அவர்.

உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த நகரில் அதிகம் இருப்பதாக கூறும் அவர், "மைக்ரோசாஃப்டாக இருக்கட்டும், கூகுளாக இருக்கட்டும், இன்டெல்லாக இருக்கட்டும், அனைத்து ஹை-டெக் நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களை ஹைஃபாவில் வைத்திருக்கின்றன," என்கிறார்.

இஸ்ரேலின் மிகப்பெரிய கச்சா சுத்திகரிப்பு மையம் ஹைஃபா நகரில் இருக்கிறது, இது அதன் பொருளாதார முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.

ஹைஃபாவில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது இரானின் தாக்குதல் நடத்தியிருப்பது உறுதி செய்யப்ப்பட்டது

திங்கட்கிழமை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து புகை எழுவது போன்று காணப்பட்ட ஒரு காணொளி அதனை உறுதிசெய்தது.

இந்த வீடியோவில், இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள பகுதியிலிருந்து புகை எழுவது தெரிகிறது. இந்த வீடியோ இரானின் தாக்குதல்களுக்குப் பின்னர் எடுக்கப்பட்டது.

ஹைஃபா, இரான் - இஸ்ரேல், இந்தியா

பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ஹைஃபா நகரில் இரான் ஏவுகணை தாக்கிய இடத்தில் இஸ்ரேலின் அவசர கால மற்றும் பாதுகாப்பு சேவை தொழிலாளர்கள்

பிபிசி, வீடியோவின் பல முக்கிய பிரேம்களைப் பயன்படுத்தி ரிவர்ஸ் இமேஜ் சர்ச் எனப்படும் ஆய்வை மேற்கொண்டு, அவற்றை செய்தி முகமை படங்களுடன் பொருத்தி, சுத்திகரிப்பு ஆலை தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது. பின்னர், வீடியோவிலும் செய்தி முகமை படங்களிலும் காணப்பட்ட முக்கிய அம்சங்களை கூகுள் எர்த் மற்றும் அப்பகுதியின் பழைய காட்சிகளுடன் ஒப்பிட்டது.

இஸ்ரேலிய ஊடக செய்திகளின்படி, சுத்திகரிப்பு ஆலை இரவில் இரானிய ஏவுகணைகளால் குறி வைக்கப்பட்டதாகவும், இதனால் விநியோக குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் சுத்திகரிப்பு ஆலையை இயக்கும் பசன் குழுமம்,தெரிவித்துள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், மற்ற பகுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் பசன் குழுமம் கூறியது.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தவிர, ஹைஃபாவில் இஸ்ரேலின் துறைமுகமும் அமைந்திருப்பது இந்நகரத்தை பலவகையிலும் முக்கியமானதாக்குகிறது.

ஹரேந்திர மிஸ்ரா கூறுகையில், "ஹைஃபா துறைமுகம் மிகவும் முக்கியமானது. அங்கு ஏராளமான சரக்குகள் வந்து செல்கின்றன. வரலாற்று கோணத்தில் பார்த்தால், இஸ்ரேலின் முதல் வெளியுலகத் தொடர்பு இந்நகரத்திலிருந்தே தொடங்கியது" என்றார்.

2023 ஆம் ஆண்டு, ஹைஃபாவில் ஒரு துறைமுகத்தை அதானி குழுமம் கையகப்படுத்தியது. இதில் 70 சதவீத பங்கு அதானி குழுமத்திடமும், 30 சதவீத பங்கு இஸ்ரேலின் கடோட் குழுமத்திடமும் உள்ளது.

நகரத்தின் மக்கள் தொகை குறித்து விளக்கும் ஹரேந்திர மிஸ்ரா, சுமார் நான்கு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நகரம் ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுவதாகக் கூறுகிறார்.

"இங்கு கணிசமான அரபு மக்கள் உள்ளனர், இதில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அடங்குவர். பஹாய் சமூகத்திற்கு ஒரு மத வழிபாட்டு இடமும் உள்ளது. டெல்லியில் உள்ள லோட்டஸ் டெம்பிள் போன்று, இங்கு பஹாய் தோட்டம் உள்ளது." என்கிறார் அவர்.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமான பஹாய் உலக மையமும் ஹைஃபாவில் அமைந்துள்ளது.

ஹைஃபா, இரான் - இஸ்ரேல், இந்தியா

பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES

டெல் அவிவ், ஹைஃபா மட்டுமே இரானின் இலக்குகளாக உள்ளன?

ஹைஃபாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இரான், அதை இலக்காக்கியிருக்கலாமா?

இது குறித்து ஹரேந்திர மிஸ்ரா பேசுகையில், "மிக அதிக மூலோபாய மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை இரான் குறிவைப்பதாக நம்புகிறேன். பல மதங்களுக்கு புனித தலமாக இருப்பதால் ஜெருசலேம் இதுவரை தாக்கப்படவில்லை." என்றார்.

இரானின் ஏவுகணைகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளதாக அவர் சொல்கிறார். " இதுவரை பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் சொல்கிறது, ஆனால் 10-12 ஏவுகணைகள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன." என்று அவர் கூறுகிறார்.

ஹைஃபா மற்றும் டெல் அவிவ் போன்ற நகரங்கள் மக்கள் தொகை அதிக அடர்த்தி கொண்டவை என்பதுடன், இஸ்ரேல் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் கருதப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"ஜெருசலேம் மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நகரமாக இருந்தாலும், அங்கு இஸ்லாமிய தலங்கள் அதிகம் இருப்பதால், ஒருவேளை இரான் இதுவரை அதை குறிவைக்காமல் இருக்கலாம்." என்பது அவரது கூற்று.

ஹைஃபா, இரான் - இஸ்ரேல், இந்தியா

பட மூலாதாரம்,UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES

ஹைஃபாவுடன் இந்தியாவுக்கு என்ன தொடர்பு?

இந்தியாவுக்கும் ஹைஃபாவுக்கும் இடையிலான உறவு 1918-ஆம் ஆண்டின் ஒரு வரலாற்று கதையுடன் ஆழமாகப் பிணைந்துள்ளது.

முதலாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் பேரரசின் சார்பில் போரிட்ட இந்திய குதிரைப்படை வீரர்கள், துருக்கி, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகியவற்றின் கூட்டுப்படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து ஹைஃபா நகரத்தை விடுவித்தனர்.

இந்த வரலாறு இஸ்ரேலில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஹரேந்திர மிஸ்ரா கூறுகிறார். "ஹைஃபாவின் பள்ளிகளில் இந்த வரலாறு கற்பிக்கப்படுகிறது. 'ஹைஃபாவின் நாயகன்' யார் என்று குழந்தைகளிடம் கேட்டால், அவர்கள் மேஜர் தள்பத் சிங் என சொல்வார்கள்." என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் போரில், ஜோத்பூர் லான்சர்ஸின் தளபதியான மேஜர் தள்பத் சிங் ஷெகாவத் கொல்லப்பட்டார். அவருக்கு பின்னர் மிலிட்டரி கிராஸ் விருது வழங்கப்பட்டது. பிரிட்டனுக்காக போரிட்ட 44 இந்திய வீரர்கள் இந்தப் போரில் உயிரிழந்தனர். இது குதிரைப்படை முக்கிய பங்காற்றிய கடைசி யுத்தமாக வரலாற்றில் பார்க்கப்படுகிறது.

ஹரேந்திர மிஸ்ரா கூறுகையில், "இந்திய தூதரகமும் ஹைஃபா நகராட்சியும் ஒவ்வொரு ஆண்டும் ஹைஃபா தினத்தை இணைந்து கொண்டாடுகின்றன. பிரதமர் நரேந்திர மோதி இங்கு வருகை தந்தபோது, அவர் அங்கு சென்று இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்." என்றார்.

இந்திய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள தீன் மூர்த்தி சௌக்கின் பெயர், தீன் மூர்த்தி ஹைஃபா சௌக் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இதற்கான விழாவில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கலந்து கொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c79qwvqqn0eo

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல்-ஈரான் போர் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? பம்மிக்கொண்டு நிற்கிறது போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நியாயம் said:

இஸ்ரேல்-ஈரான் போர் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? பம்மிக்கொண்டு நிற்கிறது போலும்.

அது தான் இன்றைய நவீன புத்திசாலித்தனம் மற்றும் ராஜதந்திரம்.

தாய்வானை அண்டியுள்ள கடலில் நிலைகொண்டிருந்த அமெரிக்காவின் நிமிற்ஸ் விமானத் தாங்கிக் கப்பலும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் வேகமாக வளைகுடா நோக்கி நகர்கிறன. இன்னொரு விமானத் தாங்கியும் இக் கடல் பகுதிக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் தாக்குதல் விமானங்கள் தயார்படுத்தப்படுகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரான் செய்த தவறு என்ன?

யாராவது தகவல் தர முடியுமா? 🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஈரான் செய்த தவறு என்ன?

யாராவது தகவல் தர முடியுமா? 🙏

அண்ணா,

ஈரான் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்று மேற்குநாடுகள் சிலவற்றை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நீண்டகாலமாக தொடரும் தவறுகள், குறுகியகாலத்தில் நடந்த தவறுகள் என்று இரண்டாகப் பார்க்கலாம்.

நீண்டகாலம்:

  • ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல். ஈரானிடம் அணு ஆயுதப்பலம் கிடைக்கும் என்பது இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளுக்கு மிக ஆபத்தானது, இஸ்ரேல் என்னும் நாடே இல்லாமல் போகலாம் என்ற, உண்மையோ பொய்யோ, ஒரு கருத்து இவர்களிடையே உள்ளது.

  • ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் சிரியா, ஈராக், யேமன் என்று பல நாடுகளில் ஈரான் ஆயுதக் குழுக்களை வளர்த்து வைத்திருக்கின்றது. இந்தக் குழுக்கள் இஸ்ரேல் மீது இடைக்கிடையே தாக்குதலை மேற்கொள்ளுகின்றன.

குறுகியகாலம்:

  • ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை மிகவும் நெருங்கி விட்டது என்னும் தகவல். இது உண்மையில்லாமல் கூட இருக்கலாம். ஈராக்கின் இரசாயன ஆயுதங்கள் போன்ற ஒரு அவசரமான, ஆனால் பிழையான தகவலாகவும் இது இருக்கலாம். முன்னர் ஈராக்கின் அணு ஆயுத முயற்சிகளையும் இஸ்ரேல் அழித்திருந்தது.

  • அதிபர் ட்ரம்ப் ஈரானுடன் அணு ஆயுதம் தொடர்பாக பேச்சுவார்த்தை ஆரம்பித்தார். 60 நாட்கள் கெடு என்றார். ஈரான் எந்த உடன்பாட்டிற்கும் வரவில்லை. 61ம் நாள் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. அமெரிக்கா முதலில் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது என்றது.

  • ட்ரம்ப் முற்றிலுமாக உறுதித்தன்மை அற்றவர். மற்றும் பழிவாங்கும் இயல்பும் கொண்டவர். ஈரான் மீதான் எந்த விதமான தாக்குதலுக்கும் மிகவும் வெளிப்படையாகவே இஸ்ரேலை ஆதரிப்பது மட்டும் இல்லை, உதவிகளும் செய்வார்.

ஈரானிடம் மொத்தமாகவே இரண்டாயிரம் ஏவுகணைகள், ballistic missiles, தான் உள்ளன என்கின்றனர். முதல் நாள் அன்று ஈரான் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. இப்பொழுது இன்னும் சிலவற்றை ஏவிக் கொண்டிருக்கின்றது. இதே வேகத்தில் போனால் இரண்டு வாரங்களுக்குள் அவை முடிந்துவிடும். ஈரானுக்கு ரஷ்யாவோ அல்லது சீனாவோ உடனடியாக எந்த உதவியும் செய்யப் போவதில்லை. வெறும் வார்த்தைகள் மட்டுமே அவர்களின் ஆதரவு. வெளியே பலமான ஒன்றாக தெரியும் ஈரான் உண்மையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நீண்ட ஒரு சண்டைக்கு தயாராகவில்லை என்பதே இன்றைய நிலை.

இஸ்ரேல் ஈரானுக்குள் எந்த இடத்தையும், எந்த வேளையிலும் தாக்கி அழிக்கலாம் என்பது ஈரானியர்கள் உட்பட எல்லோருக்குமே ஒரு அதிர்ச்சி.

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.