Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

ஈரான் சமாதானமாக போவதே சிறப்பு, தேவையற்ற உயிரிழப்புக்களை தவிர்க்கலாம், சா மன்னரின் வாரிசு மூலமாக ஒரு ஆட்சி மாற்றத்தினை (பொருண்மிய நலன் அடிப்படையில்) அமெரிக்கா விரும்புவதாக கூறுகிறார்கள், ஆனால் அதற்கு முன்னராக பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுவிடும்.

செலன்ஸ்கி போல் வளங்களை கொடுத்தால் பிரச்சினை இருக்காது என கருதுகிறேன்.

இரான் ஏன் தற்கொலை, அதுவும் சண்டை இல்லாமல் செய்வ வேண்டும்

மேட்ற்கு / உச சொல்வது இரான் அணுத்துறையை கைவிட வேண்டும் - அப்படி கைவிட்ட பின் மேட்ற்கு ஏமாற்ற்றாது என்பதற்கு எந்த ஒரு இடமும் இல்லை (ஏமாற்றுவதே திட்டம்), அணுத்துறை இல்லை என்றபடியால் உள்ளே என்றது இன்னும் வசதி us, மேற்கிடம்.

(பொதுவாக இங்கே இதை சொல்லி இருந்தேன், இப்படியான வ்விடயங்களில் இனிமேல் ஒருவரும் மேற்குடன் ஒப்பந்தம் செய்யமாட்டார்கள் (செய்வது மடைத்தனம்).

மரபு வழி ஏவுகணைகளை கூட கைவிட வேண்டும் என்கிறது.

வேறு நாடுகளில் உள்ள அந்தந்த எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவு இருக்க கூடாது.

இது நான் முதலில் சொன்னதே - இஸ்ரேல் எ மத்தியகிழக்கில் நடப்பதை தீர்மானிக்க வேண்டும், அதாவது hegemon, பிராந்திய தாதா.

8 மில்லியன் உள்ள இஸ்ரேல் இடம், ஆகக்குறைந்தது, விவிலியப்படி, யூதரை விடுவித்த சைரஸ் இராச்சியத்தின் (அதனால் தான் இப்போதாவது இஸ்ரேல் க்கு நாடு உள்ளது) தொடர்சியான 90 மில்லியன் இரான் இஸ்ரேல் இன் சொல்ல கேட்க வேண்டும்

ஈரான் இந்த இப்போதைய ஆட்சி ஷா இன் ஆட்சியுடன் உடம உடன் ஒப்பிடும் பொது எவ்வளவோ மேல்.

ஷா இன் ஆட்சி , கொலையால் ஆட்சிக்குக்கு என்று cia ல் பயிற்றப்பட்ட SAVAK என்னும் இரகசிய போலீசால் கொலைகளே கொண்டே ஆட்சி. (அதனால் தான் ஷா இன் ஆட்சியை மக்கள் புரட்சியாக தூக்கி எறியப்பட்டு, ஆயதொல்லா கொமெய்னி இஸ்லாமிய அரசாங்கத்தை கொண்டுந்தார்)

இங்கே சிலருக்கு வரலாறு தெரியாமல், இரானை பற்றி கதைப்பது, அல்லது வரலாற்று அம்சங்களைவேறு விடயங்களுடன் போட்டு குழப்புவது. (பின் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது).

Youtube இல் விடயம் இருக்கிறது எங்கே என்று தெரிந்தால். இதன் மூல காரணத்தை இந்தபேட்டி சொல்கிறது ( அனால் 99% இப்படியானது மிகவும் சலிப்பு. ஏனெனில் விளாசல் இல்லை)

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா த‌ன‌து நாட்டில் பாதுகாப்பை ப‌ல‌ப் ப‌டித்தி இருக்காம்...............எங்கையோ இருக்கும் ஈரானை க‌ண்டு இம்ம‌ட்டு ப‌ய‌மா.......................அப்ப‌ ர‌ஸ்சியா சீனா கூட‌ போர் வ‌ந்தால் அமெரிக்காவின் நிலை என்ன‌ ஆகிர‌து ஹா ஹா..........................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நன்னிச் சோழன் said:

அச்சோ...

பெரிய மன்னர் பரம்பரை, மண்ணாங்கட்டி பரம்பரை என்டெல்லாம் ஈரான் கதைச்சுது... கடைசில அமெரிக்கன் மாவுக்கட்டு பரம்பரை ஆக்கிட்டான்... 🤣🤣

ஒரே ஒரு அடிதான்... மொத்த ஈரானும் சோலி முடிஞ்சுது!

vadivelu-sarath-kumar.gif

https://www.nytimes.com/live/2025/06/21/world/iran-israel-trump

எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது.

பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு நாடி அறுந்து இரத்தம் வேகமாக வெளியேறும் போது அதிர்ச்சியடைந்து சிலர் மயக்கமாவதும் உண்டு அது தவிர அந்த காயம் பற்றிய மிகைப்படுத்தலான எண்ணம் ஏற்படுதல் என மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சரியான வலி நிவாரணி இல்லாத மருத்துவ வசதியற்ற நாட்டில் சிறு குழந்தைகள் இந்தப்போரிற்கு இரையாக போகிறார்கள் அவர்கள் பலர் அவயங்களை கூட இழக்க நேரிடும்.

இந்த அழிவினால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிப்படைகிறார்கள், கடைசியாக அந்த மக்களையே மனித கேடயமாகெளம் பாவிப்பார்கள்.

இந்த போர் சிலருக்கு இலாபமக இருக்கலாம், இந்த போரினால் எமக்கென்ன இலாபம், எதற்காக இந்த கொண்டாட்டம்?

பொதுவாக போரின் வலிகளை உணராதாவர்களும் அல்லது பார்க்காதவர்களும் கொண்ட்டாடலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இனமாக இருந்து இவ்வாறான மனித குல அழிவினை கொண்டாட முடியுமா?

15 minutes ago, Kadancha said:

இரான் ஏன் தற்கொலை, அதுவும் சண்டை இல்லாமல் செய்வ வேண்டும்

மேட்ற்கு / உச சொல்வது இரான் அணுத்துறையை கைவிட வேண்டும் - அப்படி கைவிட்ட பின் மேட்ற்கு ஏமாற்ற்றாது என்பதற்கு எந்த ஒரு இடமும் இல்லை (ஏமாற்றுவதே திட்டம்), அணுத்துறை இல்லை என்றபடியால் உள்ளே என்றது இன்னும் வசதி us, மேற்கிடம்.

(பொதுவாக இங்கே இதை சொல்லி இருந்தேன், இப்படியான வ்விடயங்களில் இனிமேல் ஒருவரும் மேற்குடன் ஒப்பந்தம் செய்யமாட்டார்கள் (செய்வது மடைத்தனம்).

மரபு வழி ஏவுகணைகளை கூட கைவிட வேண்டும் என்கிறது.

வேறு நாடுகளில் உள்ள அந்தந்த எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவு இருக்க கூடாது.

இது நான் முதலில் சொன்னதே - இஸ்ரேல் எ மத்தியகிழக்கில் நடப்பதை தீர்மானிக்க வேண்டும், அதாவது hegemon, பிராந்திய தாதா.

8 மில்லியன் உள்ள இஸ்ரேல் இடம், ஆகக்குறைந்தது, விவிலியப்படி, யூதரை விடுவித்த சைரஸ் இராச்சியத்தின் (அதனால் தான் இப்போதாவது இஸ்ரேல் க்கு நாடு உள்ளது) தொடர்சியான 90 மில்லியன் இரான் இஸ்ரேல் இன் சொல்ல கேட்க வேண்டும்

ஈரான் இந்த இப்போதைய ஆட்சி ஷா இன் ஆட்சியுடன் உடம உடன் ஒப்பிடும் பொது எவ்வளவோ மேல்.

ஷா இன் ஆட்சி , கொலையால் ஆட்சிக்குக்கு என்று cia ல் பயிற்றப்பட்ட SAVAK என்னும் இரகசிய போலீசால் கொலைகளே கொண்டே ஆட்சி. (அதனால் தான் ஷா இன் ஆட்சியை மக்கள் புரட்சியாக தூக்கி எறியப்பட்டு, ஆயதொல்லா கொமெய்னி இஸ்லாமிய அரசாங்கத்தை கொண்டுந்தார்)

இங்கே சிலருக்கு வரலாறு தெரியாமல், இரானை பற்றி கதைப்பது, அல்லது வரலாற்று அம்சங்களைவேறு விடயங்களுடன் போட்டு குழப்புவது. (பின் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது).

Youtube இல் விடயம் இருக்கிறது எங்கே என்று தெரிந்தால். இதன் மூல காரணத்தை இந்தபேட்டி சொல்கிறது ( அனால் 99% இப்படியானது மிகவும் சலிப்பு. ஏனெனில் விளாசல் இல்லை)

அணுவாயுதம் ஏவுகணை என்பதெல்லாம் ஒரு சாட்டாக கருதுகிறேன், ஈரானின் வளம்தான் குறியாக உள்ளதாக கருதுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; உலகிற்கு பேரழிவு”

போர் பதற்றத்தை தணிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர்அன்டோனியோ குட்டெரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அன்டோனியோ குட்டெரெஸ் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும்.

மேலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும்.
இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஐ.நா. சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் கீழ், ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தவும், போர் பதற்றத்தை தணிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆபத்தான நேரத்தில், மேலும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம். இராணுவ நடவடிக்கை எதற்கும் தீர்வு இல்லை. பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி. அமைதி மட்டுமே ஒரே நம்பிக்கை." என்று தெரிவித்துள்ளார்.

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஈரான்-மீது-அமெரிக்கா-தாக்குதல்-உலகிற்கு-பேரழிவு/50-359672

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, vasee said:

அணுவாயுதம் ஏவுகணை என்பதெல்லாம் ஒரு சாட்டாக கருதுகிறேன், ஈரானின் வளம்தான் குறியாக உள்ளதாக கருதுகிறேன்.

ஆம், (எண்ணெய், இயற்கை எரிவாயு) போன்ற வளங்கள் ஒரு முக்கிய பரிமாணம், குறிப்பாக சீனாவுக்கு அது கிடைப்பது, us / மேற்கின் கட்டுப்பாட்டில் இல்லாதது. முன்பு சொன்னது போல, இரான் சீனாவுக்கு இடையே நேரடியான சரக்கு புகையிரத சேவை.

எண்ணெய் வழங்குவதில் பாரிய கடற்கலங்களுக்கு முற்றிலும்ஒப்பானதாக இப்போது இல்லாவிட்டாலும், புகையிரத தொழில்நுட்பத்தில் நடந்து வரும் மாற்றத்தால் அடுத்த 5-10 ஆண்டுகளில் புகையிரத்தே சேவை சிலவேளைளில் கடற்கலன்களை விட கொள்ளவு விநியோக வினைத்திறன் கூட, மற்றும் விலை , நேரமும் குறைவாக (இப்போதே 15 நாட்களே எடுக்கிறது முழுவதும் நிரம்பிய நிலையில் சீன - ஈரான் சரக்கு புகையிரத சேவை. பாரிய கடற்கலம் எடுப்பது 30 - 40 நாட்கள், அத்துடன் கடலில் ஆபத்தும் கூட)

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, vasee said:

எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது.

பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு நாடி அறுந்து இரத்தம் வேகமாக வெளியேறும் போது அதிர்ச்சியடைந்து சிலர் மயக்கமாவதும் உண்டு அது தவிர அந்த காயம் பற்றிய மிகைப்படுத்தலான எண்ணம் ஏற்படுதல் என மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சரியான வலி நிவாரணி இல்லாத மருத்துவ வசதியற்ற நாட்டில் சிறு குழந்தைகள் இந்தப்போரிற்கு இரையாக போகிறார்கள் அவர்கள் பலர் அவயங்களை கூட இழக்க நேரிடும்.

இந்த அழிவினால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிப்படைகிறார்கள், கடைசியாக அந்த மக்களையே மனித கேடயமாகெளம் பாவிப்பார்கள்.

இந்த போர் சிலருக்கு இலாபமக இருக்கலாம், இந்த போரினால் எமக்கென்ன இலாபம், எதற்காக இந்த கொண்டாட்டம்?

பொதுவாக போரின் வலிகளை உணராதாவர்களும் அல்லது பார்க்காதவர்களும் கொண்ட்டாடலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இனமாக இருந்து இவ்வாறான மனித குல அழிவினை கொண்டாட முடியுமா?

எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது.

பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு நாடி அறுந்து இரத்தம் வேகமாக வெளியேறும் போது அதிர்ச்சியடைந்து சிலர் மயக்கமாவதும் உண்டு அது தவிர அந்த காயம் பற்றிய மிகைப்படுத்தலான எண்ணம் ஏற்படுதல் என மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சரியான வலி நிவாரணி இல்லாத மருத்துவ வசதியற்ற நாட்டில் சிறு குழந்தைகள் இந்தப்போரிற்கு இரையாக போகிறார்கள் அவர்கள் பலர் அவயங்களை கூட இழக்க நேரிடும்.

இந்த அழிவினால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிப்படைகிறார்கள், கடைசியாக அந்த மக்களையே மனித கேடயமாகெளம் பாவிப்பார்கள்.

இந்த போர் சிலருக்கு இலாபமக இருக்கலாம், இந்த போரினால் எமக்கென்ன இலாபம், எதற்காக இந்த கொண்டாட்டம்?

பொதுவாக போரின் வலிகளை உணராதாவர்களும் அல்லது பார்க்காதவர்களும் கொண்ட்டாடலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இனமாக இருந்து இவ்வாறான மனித குல அழிவினை கொண்டாட முடியுமா?

அணுவாயுதம் ஏவுகணை என்பதெல்லாம் ஒரு சாட்டாக கருதுகிறேன், ஈரானின் வளம்தான் குறியாக உள்ளதாக கருதுகிறேன்.

என‌க்கு அடிப்ப‌டையில் அமெரிக்கா அர‌சிய‌லை பிடிக்காது.....................அத‌ன் வெளிப்பாட்டை என‌து எழுத்தின் மூல‌ம் பார்க்க‌லாம்.....................சும்மா இருந்த‌ ஈரான் மீது ப‌ல‌ வாட்டி இஸ்ரேல் சீண்டி பார்த்த‌து..................

உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இஸ்ரேல் என்ர‌ நாடு எங்கை இருக்குதென்ரே தெரியாது , சூம் ப‌ண்ணி பார்த்தால் சிறு கோடு தான் தெரியுது அந்த‌க் கோடும் மெது மெதுவாய் அழிய‌ நெத்த‌னியாகுவும் ர‌ம்பும் வ‌ழி வ‌குக்கின‌ம்...................இன்று தானே அமெரிக்கா ஈரான் மீது நேர‌டியாக‌ தாக்கி இருக்கின‌ம்

இனி வ‌ரும் நாட்க‌ளில் பாப்போம்

அமெரிக்கா காங்ர‌ஸ் ச‌வை ர‌ம்புக்கு க‌டும் எதிர்ப்பு தெரிவித்து X த‌ள‌த்தில் ப‌திவு போடுகின‌ம் , ர‌ம் செய்த‌து பிழையென‌..........................

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிய‌ ம‌க்க‌ள் ந‌ல்ல‌வை

அதோட‌ அவ‌ர்க‌ள் எத‌ற்க்கும் துணிந்த‌வை.................இப்போதுவ‌ரை ம‌ற்ற‌ நாடுக‌ளின் உத‌வி இல்லாம‌ தான் 9நாளாக‌ இஸ்ரேல் ம‌ற்றும் அமெரிக்காவுக்கு எதிராக‌ போர் செய்யின‌ம்...............இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஆத‌ர‌வாக‌ ஜ‌ரோப்பிய‌ ப‌ல‌ நாடுக‌ள் பின்புல‌த்தில்

இனி ஈரானுக்கு அவ‌ர்க‌ளின் ந‌ட்பு நாடுக‌ளின் ஆத‌ர‌வு வெளிப்ப‌டையா கிடைக்க‌ அல்ல‌து மறைமுக‌மாய் கிடைக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு............................

  • கருத்துக்கள உறவுகள்

511192463_735629022287031_82642735982898

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, வீரப் பையன்26 said:

ஈரானிய‌ ம‌க்க‌ள் ந‌ல்ல‌வை

fake news 😎

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20250622-115955-Chrome.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ; மத்திய கிழக்கு வான்வெளியைத் தொடர்ந்து தவிர்க்கும் விமான நிறுவனங்கள்

Published By: DIGITAL DESK 3

22 JUN, 2025 | 03:13 PM

image

ஈரானின் அணுசக்தித் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து விமான நிறுவனங்கள், மத்திய கிழக்கில் உள்ள பெரும்பகுதிகளைத் தவிர்க்க முற்படுகின்றன. 

அங்கு நடக்கும் இருபக்க ஏவுகணை தாக்குதல்களால் விமானச் சேவை நிறுவனங்கள் மத்திய கிழக்கின் பெரும்பகுதி வான்வெளியைத் தவிர்க்க முற்படுகின்றன. 

ஈரானின் அணுசக்தித் தளங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த வாரம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இணங்க அந்த வட்டாரத்திலுள்ள விமானச் சேவை நிறுவனங்கள் வான்வெளியைத் தவிர்த்து வருகின்றன என்று ‘ஃப்ளைட்ரேடார்24’ விமானப் போக்குவரத்துக் கண்காணிப்புத் தளம் தெரிவித்துள்ளது.  ஈரான், ஈராக், சிரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வான்வெளியில் விமானப் போக்குவரத்து இல்லை என ‘ஃப்ளைட்ரேடார்24’  தளம் காண்பிக்கிறது.

கேஸ்பியன் கடல் வழியே வடக்குமுகமாக அல்லது எகிப்து, சவூதி அரேபியா வழியே தெற்குமுகமாக விமானங்கள் செல்கின்றன. இதனால் பயண நேரம் கூடுதலாக நீள்வதுடன் எரிபொருள், பணியாளர் செலவும் அதிகரிக்கின்றன.

பதற்றமிக்க வட்டாரங்களில் ஏவுகணைகளை, ஆளில்லா வானுர்தி ஆகியவற்றால் விமானப் போக்குவரத்திற்கு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. 

ஜூன் 13ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு  விமான நிறுவனங்கள் தனது சேவைகளை நிறுத்தியுள்ளது. 

இருந்தபோதும் பக்கத்து நாடுகளிலிருந்து அவர்களது குடிமக்களை வெளியேற்றும் சேவைகள் இயங்கி வருகின்றன. வேறு சில சேவைகள், ஈரானில் சிக்கியுள்ள இஸ்ரேலியர்களை அவர்களது நாடுகளுக்குக் கொண்டுவரவுள்ளன.

https://www.virakesari.lk/article/218142

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

என‌க்கு அடிப்ப‌டையில் அமெரிக்கா அர‌சிய‌லை பிடிக்காது.....................அத‌ன் வெளிப்பாட்டை என‌து எழுத்தின் மூல‌ம் பார்க்க‌லாம்.....................சும்மா இருந்த‌ ஈரான் மீது ப‌ல‌ வாட்டி இஸ்ரேல் சீண்டி பார்த்த‌து..................

உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இஸ்ரேல் என்ர‌ நாடு எங்கை இருக்குதென்ரே தெரியாது , சூம் ப‌ண்ணி பார்த்தால் சிறு கோடு தான் தெரியுது அந்த‌க் கோடும் மெது மெதுவாய் அழிய‌ நெத்த‌னியாகுவும் ர‌ம்பும் வ‌ழி வ‌குக்கின‌ம்...................இன்று தானே அமெரிக்கா ஈரான் மீது நேர‌டியாக‌ தாக்கி இருக்கின‌ம்

இனி வ‌ரும் நாட்க‌ளில் பாப்போம்

அமெரிக்கா காங்ர‌ஸ் ச‌வை ர‌ம்புக்கு க‌டும் எதிர்ப்பு தெரிவித்து X த‌ள‌த்தில் ப‌திவு போடுகின‌ம் , ர‌ம் செய்த‌து பிழையென‌..........................

ஈரான் இந்த தீவிர மதவாத ஆட்சியில் இருந்து விடுதலை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் அந்த மக்களுக்கு வந்துள்ளது, மன்னராட்சி தற்போதுள்ள ஆட்சியினை போல மிக மோசமாக இருக்காது என நம்புகிறேன், கெட்டதிலும் ஒரு நல்லது நடைபெறுகிரது.

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20250622-121946-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, vasee said:

ஈரான் இந்த தீவிர மதவாத ஆட்சியில் இருந்து விடுதலை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் அந்த மக்களுக்கு வந்துள்ளது, மன்னராட்சி தற்போதுள்ள ஆட்சியினை போல மிக மோசமாக இருக்காது என நம்புகிறேன், கெட்டதிலும் ஒரு நல்லது நடைபெறுகிரது.

வசியவர்களே, எப்படி எண்ணெய் சட்டியிலிருந்து அடுப்பினுள் வீழ்வது போன்றா? இது இன்னும் நிலைமையை மோசமாக்குவதோடு மேலும் கொதிநிலைக்கான வழியாக மாறாதா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

ஈரான் இந்த தீவிர மதவாத ஆட்சியில் இருந்து விடுதலை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் அந்த மக்களுக்கு வந்துள்ளது, மன்னராட்சி தற்போதுள்ள ஆட்சியினை போல மிக மோசமாக இருக்காது என நம்புகிறேன், கெட்டதிலும் ஒரு நல்லது நடைபெறுகிரது.

பெரும்பாலான‌ ஈரான் ம‌க்க‌ள் ayatollah ali khameneiயின் ஆட்சிய‌ விரும்புகின‌ம் , இல்லையெனில் ஈரானில் எப்பவோ க‌ல‌வ‌ர‌ம் வெடித்து இருக்கும் , 36வ‌ருட‌மாய் இந்த‌ ஆட்சிக்கு கீழ் தானே வாழ்ந்த‌வை

பெண்க‌ளுக்கு சிறு அட‌க்குமுறை இருக்கு அது அவ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம்........................த‌லைவ‌ர் ஈழ‌ ம‌ண்ணில் வாழ்ந்த‌ கால‌த்தில் பெண்க‌ள் இர‌வு நேர‌ம் சுத‌ந்திர‌மாய் ந‌ட‌மாட‌ முடியும் , இப்போது அந்த‌ நிலை இருக்கா , பெண் பிள்ளைக‌ளை பெத்த‌ பெற்றோர்க‌ள் ப‌ய‌ப்பிடுகின‌ம் இர‌வு நேர‌ங்க‌ளில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் வெளியில் விட‌

அப்ப‌டி ஈரானிலும் க‌லாச்சார‌ ச‌ட்ட‌ திட்ட‌ம் இருக்கு👍.............................

28 minutes ago, vasee said:

ஈரான் இந்த தீவிர மதவாத ஆட்சியில் இருந்து விடுதலை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் அந்த மக்களுக்கு வந்துள்ளது, மன்னராட்சி தற்போதுள்ள ஆட்சியினை போல மிக மோசமாக இருக்காது என நம்புகிறேன், கெட்டதிலும் ஒரு நல்லது நடைபெறுகிரது.

அமெரிக்க‌ன் த‌லைகீழாக‌ நின்றாலும் ஈரானில் ஒரு போதும் ஆட்ச்சி மாற்ற‌ம் வ‌ராது...................அமெரிக்க‌ன் ஈராக்கில் செய்த‌ ச‌தி , அது ஈரானில் எடுப‌டாது.........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

ஈரான் இந்த தீவிர மதவாத ஆட்சியில் இருந்து விடுதலை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் அந்த மக்களுக்கு வந்துள்ளது, மன்னராட்சி தற்போதுள்ள ஆட்சியினை போல மிக மோசமாக இருக்காது என நம்புகிறேன், கெட்டதிலும் ஒரு நல்லது நடைபெறுகிரது.

மற்ற மேற்றகில் உள்ளவர்கள் தங்களுக்கு எதோ ஈரானை பற்றி முழுமையாக தெரியும் என்றது போலவே நீங்கள் சொல்வது இருக்கிறது.

முதலில் இரான், காலனித்துவதில் இருந்து விடுதலை பெற்றதாயினும், புதிய நாடு இல்லை.

இரான் அரசின் இருப்பு ஆகக்குறைந்தது சைரஸ் கி.மு 600 இல் இருந்து. அதுக்கு முதல் மெடியன் பேரரசு. அதுக்கும் முதல் Elam (Elamites, கி.மு 2700 அளவில்) பெரிய அரசு உட்பட, மற்றும் சிற்றரசுகள் இப்பொது உள்ள இரானையும், இராக்கின் பகுதிகளையும் உள்ளடக்கி. தெற்கில் பாரசீக (Persian), Achaemenid இராச்சியங்கள்,

இந்த தென் இராச்சியங்களில் இருந்தே சைரஸ் இன் Achaemenid பேரரசாக எழும்பியது.

இப்போதைய நிலையில், ஒரு சிறு உதாரணம் இஸ்லாமிய அரசு 1979 இல் வந்தபோது, யாப்பு கூட கொண்டுவந்தது எல்லோரும் சமம், சம உரிமை ... என்று

(அமெரிக்காவின் / மேற்றுகின் அரபு நாடுகள் வால்கள் இப்போதும் இருப்பது மன்னர் இராச்சியங்களாக)

சிறிய உதாரணம் ஈரானில் பெண்கள் வாகனம் ஓடலாம் என்பது 1979 யிலேயே கொண்டு வரப்பட்டு அனுமதிக்க படுகிறது.

அமெரிக்காவின் வாலான சவூதியில் 2018 இல் இருந்தே குறியீடாக அனுமதிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

💪🙏

Screenshot-20250622-134015-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து முற்றாகத் துடைத்தழித்து விடுவோம் என்பதே ஈரானின் தாரக மந்திரம். இவ் இலக்கினை நோக்கியே ஈரான் தனது இராணுவ, ஆயுத பலத்தினை உருவாக்கி வந்திருக்கிறது. இஸ்ரேலினைத் தொடர்ச்சியாக முற்றுகைக்குள் வைத்திருக்கும் நோக்கத்திலேயே இஸ்ரேலினைச் சூழ்வுள்ள இஸ்லாமிய நாடுகள், மற்றும் தனது முகவர் அமைப்புக்களை உருவாக்கி, வள‌ர்த்து, இராணுவ மயப்படுத்தி வந்திருக்கிறது. பலஸ்த்தீன அமைப்புக்களான ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத், லெபனானின் ஹிஸ்புள்ளா, ஆசாத்தின் சிரிய அரசு, ஈராக்கின் இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள், யெமெனின் ஹூத்தீக்கள் என்று பல முகவர் அமைப்புக்களை இஸ்ரேலின் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துமாறு ஊக்குவித்து வந்திருக்கிறது. ஆக 1967 ஆம் ஆண்டின் ஆறு நாள் யுத்தம் மற்றும் 1973 ஆம் ஆண்டின் யொம் கிப்புர் யுத்தம் ஆகியவற்றை நடத்தி இஸ்ரேலினை முற்றாக அழித்துவிட சூழவுள்ள இஸ்லாமிய நாடுகள் முயன்று, தோற்றதன் பின்னர், நவீன காலத்தில் ஈரான் தனது முகவர்களைக் கொண்டு இவ்வாக்கிரமிப்பினை நடத்த முயல்கிறது.

யூத இனம் இரண்டாம் உலக யுத்தத்தின்போது சுமார் ஆறு மில்லியன் மக்கக்ளை இழந்திருந்தது. கடந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் இனக்கொலையாக இது பார்க்கப்படுகிறது. இன்று வெறும் 9 மில்லியன் மக்களை மட்டுமே கொண்டு, 20,000 சதுரக் கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்டிருக்கும் இஸ்ரேல் மீது நடத்தப்படும் எந்தவொரு அணுவாயுதத் தாக்குதலும் நிச்சயமாக இன்னொரு பாரிய இனக்கொலையாகவே முடிய வாய்ப்பிருக்கிறது. ஆகவேதான், தமது இனம் இரண்டாவது முறையாகவும் இன்னொரு இனக்கொலையினைச் சந்தித்துவிடக் கூடாதென்பதில் யூதர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். (கிறீஸ்த்துவிற்குப் பின்னரான காலத்தில் அன்றைய இஸ்ரேலில் இருந்து அகதிகளாக உலகெங்கும் அடித்துவிரட்டப்பட்ட யூதர்களைத் தேடித்தேடி மீளவும் தமது சரித்திர நிலத்திற்குக் கொண்டுவந்துசேர்க்க இஸ்ரேலிய அரசாங்கங்கள் கடந்த 70 வருடங்களாக முயன்று வருகின்றன. இதன் ஒரே நோக்கம் யூதவினம் அழியாது, ஓரினமாக ஓரிடத்தில் வாழவேண்டும் என்பதுதான்).

தனது இனத்தை முற்றாக அழித்தும், தனது சின்னஞ்சிறிய நாட்டை முற்றாக ஆக்கிரமிக்கவும் மட்டுமே ஒரு நாடு அணுவாயுதத்தினைத் தயாரிக்கின்றது என்றால், அவ்வணுவாயுதத்தை எப்பாடுபட்டாவது அழித்துவிட பாதிக்கப்பட்ட அவ்வினம் முயல்வதில் தவறு இருக்கின்றதா? ஈரானினால் உருவாக்கப்பட்டு வரும் அணுச்சக்தி எதற்காகப் பயன்படுத்தப்படப் போகின்றது? தனது சக்தித் தேவைக்காக வெறும் 1 வீதத்தினை மட்டுமே அணுச்சக்தியில் இருந்து பெற்றுக்கொண்டுவரும் ஈரானிற்கு மிகப்பெரும் அணுச்சக்தியைக் கொடுக்கப்போகும் பல அணுவாலைகள் எதற்கு? தனது நிலப்பரப்பில் பெருமளவு எண்ணெய்வளத்தையியும், இயற்கை வாயுவையும் கொண்டிருக்கும் ஈரான், அணுச்சக்தியில் மிகுந்த கவனம் செலுத்த விரும்புவது எதற்காக? அணுவாயுதம் ஒன்றினை உருவாக்குவதற்கான மிகத்தூய . செறிவான யுரேனியத்தை உருவாக்கியும் சேமித்து வைப்பது எதற்காக? மருத்துவத் தேவைக்காகவும், சக்தித் தேவைக்காகவும் என்று கூறிக்கொண்டே இத்தேவைகளை நிவர்த்திசெய்யும் அளவினை விட பலமடங்கு சக்திவாய்ந்த யுரேணியம் பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டு வருவது எதற்காக? தான் உருவாக்கும் அணுச்சக்தி வெறுமனே மருத்துவத் தேவைக்காகவும், மின்சாரத்திற்காகவும் மட்டும்தான் என்றால், இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து முற்றாகத் துடைத்தழிப்போம் எனும் கொள்கையினை ஈரானின் முல்லாக்கள் இதுவரை கைவிடாது இருப்பதும், அக்கொள்கையினை நோக்கி தமது கவனத்தை தொடர்ச்சியாக வைத்திருப்பதும் எதற்காக?

அணுவாயுதத்தை தயாரிக்கும் நோக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தன்னைச் சுற்றியிருக்கும் நாடுகளுடன் சுமூகமான முறையில் பயணிப்பதற்கு ஈரானிற்கு பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. ஒபாமாவின் ஆட்சியில் அணுவாயுத நோக்கத்தினைக் கைவிட்டு ஏனைய துறைகளில் கவனம் செலுத்தவென அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன ஈரானுடன் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டபோதும், 2006 இல் எதிரிகள் எவரிடமிருந்து வரும் தாக்குதல்களில் இருந்து தனது அணுவாயுதத் திட்டத்தைப் பாதுக்காகவென‌ போர்ட்டொவில், மலைகளுக்கு நடுவில், 300 அடிகள் ஆளத்தில், மிகப்பாதுகாப்பான அணு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி, அணுவாயுத உற்பத்திக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் பாதுகாத்து வருகிறது. இந்த அணு ஆராய்ச்சி நிலையம் உட்பட மூன்று அணுவாராய்ச்சி நிலையங்களே இன்று தகர்க்கப்பட்டிருக்கின்றன.

என்னைப்பொறுத்தவரையில் சர்வாதிகாரிகளிடமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமும் இருக்கும் மிகப்பெரும் அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மனித குலத்தின் இருப்பிற்கே ஆபத்தானவை. வட கொரியா, ஈரான், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை இதற்காகக் குறிப்பிடலாம். ஏனெறால், தமது சொந்த நலனிற்காகவும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், மதவெறியினால் உந்தப்பட்டும் இவர்கள் தம்மிடமிருக்கும் நாசகார ஆயுதத்தினை எப்போது வேண்டுமானாலும் பாவித்துவிடுவார்கள்.

ஆகவேதான் இவர்களிடம் அணுவாயுதங்கள் உட்பட நாசகார ஆயுதங்கள் சேர்வதை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பது அவசியமாகிறது.

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியும். தவறேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

512178986_1168687001940823_4225115013894

இன்று மாலை துருக்கியில் வைத்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் சர்வதேச ஊடகவியலாளர்களை சந்தித்து பேசினார்!

Vaanam.lk

  • கருத்துக்கள உறவுகள்

35 minutes ago, ரஞ்சித் said:

யூத‌ர்க‌ளை வ‌ள‌ர‌ விட்டால் இன்னும் நூறாண்டு க‌ழித்து சொல்லுவானுங்க‌ள்

த‌ங்க‌ட‌ பைப்பில்ல‌ போட்டு இருக்கு 1000வ‌ருட‌த்துக்கு முத‌ல் யூத‌ர்க‌ள் தான் யாழ்பாண‌த்தில் வாழ்ந்த‌வை ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு அந்த‌ இட‌ம் தேவை என‌ போர் தொடுத்தாலும் தொடுப்பாங்க‌ள்

ஹாசாவில் ஈன‌ இரக்க‌ம் இன்றி ம‌க்க‌ளை கொன்று உண‌வுக‌ள் போக‌ விட‌மா ப‌ண்ணி அந்த‌ ம‌க்க‌ள் ம‌ர‌ணிக்க‌ அந்த‌ இட‌ங்க‌ளை யூத‌ர்க‌ள் த‌ங்க‌ளின் சொந்த‌ நில‌ம் ஆக்கி அக‌ன்ட‌ இஸ்ரேல் நாட்டை உருவாக்குவாங்க‌ள் அது தான் அவ‌ங்க‌ளின் திட்ட‌ம்........................கோமாளி ர‌ம்ப் என்ன‌ சொன்ன‌வ‌ர் , ஹாசாவில் வ‌சிக்கும் ம‌க்க‌ள் வேறு நாடுக‌ளுக்கு போங்கோ....................

நாம‌ த‌மிழீழ‌ம் வேண்டும் என்று இப்ப‌வும் அகிம்சை வ‌ழியில் போராடுவ‌து எத‌ற்காக‌......................

ஈழ‌ ம‌ண்ணில் வ‌சிக்கும் ம‌க்க‌ளுக்கு உங்க‌ளுக்கு நாங்க‌ள் வேறு ஒரு இட‌ம் த‌ருகிறோம் அங்கு போய் வ‌சியுங்கோ ஈழ‌ நில‌ப் ப‌ர‌ப்பை விட்டு விடுங்க‌ள் என்றால் நாங்க‌ள் ஏற்று கொள்ளுவோமா........................

அடுத்த‌வ‌ன்ட‌ நாட்டை ஆட்டைய‌ போட்ட‌ யூத‌ர்க‌ள் இவ‌ங்க‌ளை அட‌க்கா விட்டால் இவ‌ங்க‌ள் வ‌ரும் கால‌ங்க‌ளில் ப‌ல‌ நாடுக‌ளுக்கு பெருத்த‌ த‌லையிடிய‌ கொடுப்பாங்க‌ள்.....................

அதுக்கு ந‌ல்ல‌ உதார‌ன‌ம் ஹாசா , போர் தொட‌ங்கி இர‌ண்டு ஆண்டும் முடிய‌ வில்லை 60ஆயிர‌ம் ம‌க்க‌ளை கொன்று விட்டாங்க‌ள் யூத‌ர்க‌ள்................

ஈரான் எத்த‌னையோ விடைய‌த்தில் பொறுமை காத்த‌து , உக்கிரேனுக்காக‌ முட்டை க‌ண்ணீர் விட்ட‌ கூட்ட‌ம் , ஈரான் விடைய‌த்தில் தொப்பிய‌ மாற்றி போடுவ‌தை நினைக்க‌ அருவ‌ருப்பாக‌ இருக்கு

ஈரான் த‌ன‌து நாட்டின் இறையான்மைக்காக‌ அணுகுண்டு செய்வ‌தில் த‌வ‌று எதுவும் இல்லை.......................இவை ம‌ட்டும் அணுகுண்டை வைத்து மிர‌ட்டுவின‌ம் ஆனால் ஈரான் அணுகுண்டு த‌யாரித்தால் அது குற்ற‌மாம்...........................

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் புனித பூமி என்று இத்துணை காலம் கதை விட்டுட்டு இருந்தாங்க இப்போ அந்த புனித பூமியை அப்படியே விட்டு விட்டு உயிருக்கு பயந்து ஓட்டம் பிடிக்கும் (யூத) வந்தேறி திருடர்கள் உணவு உட்பட அடிப்படை வசதிகள் எல்லாம் இழந்தும் கூட வாழும் பாலஸ்தீன மக்கள் தான் உண்மையான பூர்வகுடிகள்...............................

Screenshot-20250622-151721-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை சீனா கடுமையாக கண்டிக்கிறது.................க‌ண்டிப்ப‌தோட‌ நிக்காம‌ க‌ள‌த்தில் இற‌ங்கி அடிக்க‌னும்...............அல்ல‌து ஈரானுட‌ன் சேர்ந்து ம‌றைமுக‌மாக‌ அமெரிக்காவை போட்டு தாக்க‌னும்..................இது ந‌ட‌க்குமா ந‌ட‌ந்தால் இதை விட‌ வேறு என்ன‌ ம‌கிழ்ச்சி என‌க்கு🙏🥰.............................

Screenshot-20250622-135355-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌ர் வேற காமெடி ப‌ண்ணிக்கிட்டு.............மூன்று வ‌ருட‌மா இவ‌ர்க‌ளால் புட்டினின் கால் முடிய‌ கூட‌ புடுங்க‌ முடிய‌ வில்லை , ஈரான் மீது இந்த‌ மிர‌ட்ட‌ல் , ஈரான் இப்ப‌டி ப‌ல‌ நூறு மிர‌ட்ட‌லை பார்த்து விட்டுது ஹா ஹா😁😛.......................

Screenshot-20250622-153456-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானுக்கு அணுகுண்டு கொடுக்க‌ ப‌ல‌ நாடுக‌ள் த‌யார்

ப‌ல‌ நாடுக‌ள் என்றால் , ர‌ஸ்சியா வ‌ட‌கொரியா ,சீனா.................அமெரிக்கா உன‌க்கு இந்த‌ அவ‌மான‌ம் தேவையா😁😛........................அமெரிக்கா இஸ்ரேல் சேர்ந்து ஈரானுக்கு எவ‌ள‌வ‌த்துக்கு அடிக்கின‌மோ அவ‌ள‌வ‌த்துக்கு இஸ்ரேல் எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு அழிவை ச‌ந்திப்பின‌ம்...................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

fake news 😎

ஈரானிய‌ ம‌க்க‌ளோடு நான் அதிக‌ம் ப‌ழ‌கி இருக்கிறேன்................2000ம் ஆண்டு க‌ண‌னி ப‌ற்றி அவ‌ர்க‌ளிட‌த்தில் இருந்து நிறைய‌ க‌ற்றுக் கொண்டேன்.....................எதை வைத்து போலி செய்தி என‌ சொல்லுறீங்க‌ள் , ஆதார‌ம் த‌ர‌வும்😉.......................

ஒரு ஈரானிய‌ன் கெட்ட‌வ‌னாக‌ இருந்தால் ஒட்டு மொத்த‌ ஈரானிய‌ர்க‌ளும் கெட்ட‌வ‌ர்க‌ள் என‌ சித்த‌ரிக்க‌ வேண்டாம்...................ந‌ல் ம‌ன‌தோடு ப‌ழ‌கினால் தான் ந‌ல்ல‌ அன்பு கிடைக்கும்🙏👍.........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.