Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம் - உலக நாடுகள் வர்த்தக உறவுகளை துண்டிக்கவேண்டும் - ஐநா அறிக்கையாளர்

03 JUL, 2025 | 03:52 PM

image

காசா நிலவரம் தொடர்பில் உலக நாடுகள் இஸ்ரேலுடனான வர்த்தக தொடர்புகளை துண்டிக்கவேண்டும் என ஐநாவின் அறிக்கையாளர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ள உரையாற்றியுள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன பகுதிகளிற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம் என தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் நிலைமை ஊழிக்காலம் போன்றது என அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவை உறுப்பினர்கள் அவரது உரைக்கு கைதட்டி பாராட்டை வெளியிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/219100

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமக்கு நிகழ்ந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு நிற்கும் ஈழத்தமிழர்களே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்!

7 hours ago, vasee said:

இலங்கையில் தமக்கு நிகழ்ந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு நிற்கும் ஈழத்தமிழர்களே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்!

இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதிய யாரும் இஸ்ரேலின் படுகொலைகளை ஆதரித்ததாக அல்லது நியாயப்படுத்தியதாக நான் அறியவில்லை.

ஆக்கிரமிப்புக்கு உள்ளான தமிழினத்தவர்கள் 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களைப் பலிகொண்டு தொடரும் ரஸ்ய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, இணையவன் said:

ஆக்கிரமிப்புக்கு உள்ளான தமிழினத்தவர்கள் 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களைப் பலிகொண்டு தொடரும் ரஸ்ய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்

சர்வாதிகார மதவாத ஆட்சியாளர்ளையும் ஆதரிக்கின்றனர்

இந்தியர்கள் தங்களது நாட்டின் நன்மை கருதி அப்படி செய்கிறார்கள் என்பது விளங்கி கொள்ள கூடியதே ஈழத்தமிழர் எங்கே வாழ்ந்து கொண்டு செய்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, இணையவன் said:

இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதிய யாரும் இஸ்ரேலின் படுகொலைகளை ஆதரித்ததாக அல்லது நியாயப்படுத்தியதாக நான் அறியவில்லை.

ஆக்கிரமிப்புக்கு உள்ளான தமிழினத்தவர்கள் 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களைப் பலிகொண்டு தொடரும் ரஸ்ய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஒரு ஊரில் பெரிய ரவுடி ஒருவர் இருந்தால் அவருக்கு கீழ் சில ரவுடிகள் இருப்பார்கள், அந்த ரவுடிகளினை தெரிந்தவர்கள் அவர்களை தெரிந்தவர்க்ளெல்லாம் சும்மா இருப்பவர்களிடம் நான் யார் தெரியுமா? எங்கள் அண்ணன் யார் தெரியுமா என பயமுறுத்தி வம்பிழுப்பார்கள்.

இவர்களும் பெரிய ரவுடியுடன் எதற்கு வம்பு என இந்த ஏப்பை சாப்பைகளை சகித்து கொண்டிருப்பார்கள், ஆனாலும் அவர்கள் விடமாட்டார்கள் அவர்களை தொடர்ந்தும் வம்பிழுப்பார்கள் ஒரு கட்டத்தில் அது முற்றி சாது மிரண்டால் காடு கொள்ளாது நிலை ஆகிவிடும்.

மத்திய கிழக்கு நிலையும் கிழக்காசிய நிலையும் வேறு வேறல்ல, இரண்டிடத்திலும் பலவீனமானவர்களை அல்லக்கைகள் வம்பிழுக்கின்றன (பலவீனமானவர்கள் இருக்கும் வரைதான் ரவுடிக்கு வேலை நடக்கும்).

மரங்கொத்தி பறவைக்கு தனது ஆற்றலில் மிகையான நம்பிக்கை இருக்கும், பார்க்கும் மரமெல்லாவற்றினையும் கொத்தும் ஆனால் வாழைமரத்தில் அலகு இறுகி மாட்டுப்பட்டுவிடும்.

நேட்டோ இரஸ்சியாவினை தொடர்ச்சியாக அழுத்தி ஒரு போரினை ஆரம்பிக்க விரும்பியது, ஏற்கனவே பொருளாதார தடையில் இருக்கும் இரஸ்சியாவினை ஒரு போரின் மூலம் இலகுவாக உடைக்கலாம் என நம்பியது.

இரஸ்சியாவின் பலத்தினை தொடர் அழுத்தம் மூலம் அழிக்கலாம் என எதிர்பார்த்தது அதற்கு இரஸ்சியாவின் பாதுகாப்பு, பொருளாதாரத்தின் மீதான மீள்தகவு நெகிழ்தன்மையினை (Elastic resistance) தொடர் அழுத்தம் மூலம் உடைக்கலாம் (Break point) என நம்பியது.

அது நிகழவேண்டுமாயின் இரஸ்சியாவின் பொருளாதாரம் உடைய வேண்டும் ஆனால் அது நிகழவில்லை.

இரஸ்சியா 2014 பின்னர் தனது பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் மூலம் ஒரு உறுதியான பொருளாதாரமாக மாறியிருந்தது.

முக்கியமாக தற்போதய உலகில் காணப்படும் பலவீனமான நிழல் வங்கி முறையினை மாற்றியமைத்தது (Shadow banking system), இன்று பெரிய முக்கிய பொருளாதார சக்தியாக திகழும் அமெரிக்கா, சீனா உள்ளடங்கலாக நாடுகளில் உள்ள இந்த பலவீனமான அமைப்பை மாற்றி அமைத்தது, இதன் மூலம் பொருளாதார பேரிடர் ஏற்படாமல் தவிர்க்கலாம் (2008 அமெரிக்க பொருளாதார பேரிடர் போன்றதோர்).

அத்துடன் இந்த நிழல் வங்கி முறைமையில் மிக மிக குறைந்தளவிலான வெளித்தொடர்பினை பேணுதல் மற்றும் முழுக்க முழுக்க நாடு சார்ந்த வங்கி அமைப்பு, இறுக்கமான நாணய கொளகை, தனியான வர்த்தக பரிமாற்று சேவை என பல விடயங்களை மாற்றி அமைத்தார்கள்.

தற்போது எப்படி ஒரு எலாஸ்ரிக் பாண்டினை அதன் முழு சக்திக்கு அப்பால் இழுத்தால் அறுந்து விடுமோ அதே போல அந்த அழுத்தத்தினை பாதியில் விட்டால் அது தெறித்து இன்னொரு வகையான சேதத்தினை ஏற்படுத்துமோ அந்த நிலையில் உலகை தள்ளி விட்டுள்ளார்கள் (இதில் பலியாக போவது அல்லக்கைகள், ரவுடி ஏற்கனவே கழண்டுவிட்டார்), எதிராளி பற்றிய சரியான புரிதல் இல்லாமல் குடைச்சல் கொடுத்ததன் விளைவாக நிலமை தலைகீழாகி அதே பிரச்சினை திரும்பியுள்ளது.

இரஸ்சியாவினை அழிக்கவேண்டுமாயின் (போரில் தோற்கடிக்க) அவர்களின் பொருளாதாரத்தினை முதலில் அழிக்க வேண்டும், ஆனால் இந்த பொருளாதார தடைகளால் அதனை நிறைவேற்ற முடியாது.

எதிர்காலத்தில் பல போர் அழிவுகள், பொருளாதார பேரழிவுகள் ஏற்படலாம் அதனை தவிர்க்க சமாதானமே சரியான வழி.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் உலகமயமான திறந்த பொருளாதார கொள்கையினை முன்னிறுத்திய அமெரிக்கா தற்போது தனது சுய சார்பு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலைக்கு சென்றுள்ள காரணம் என்ன என ஜெய்சங்கர் கேள்வியினை கேட்டுள்ளார்.

திறந்த பொருளாதார கொள்கை அடிப்படையில் மிக சிறப்பான கொள்கை, அதன் மூலம் உலக பொருளாதாரம் வேகமாக வளரும், அதற்காகவே பொருளாதார நிபுணர்களால் பிரட் அன்ட் வூட் தீர்மானத்தின் மூலம் அதனை முன்னிலை படுத்தினார்கள், அப்போது உலக வர்த்தகத்தில் காற்பங்கு கொண்ட அமெரிக்காவினை முதன்மைபடுத்தி அந்த திட்டம் உருவாக்கம் பெற்றிருந்த்தது, ஆனால் அமெரிக்கா அந்த நிலையினை ஒவ்வொரு கட்டத்திலும் தந்து தேவைக்காக மாற்றங்கள் செய்து அதனை முழுக்க ஒரு சுரண்டல் பொருளாதார கொள்கையாக மாற்றி தற்போது அதனையே தூக்கியெறியும் நிலைக்கு வந்துள்ளது.

உக்கிரேன் இரஸ்சிய போர் ஆரம்பமான காலகட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அஸ்தமனகாலம் என கூறப்பட்டபோது அதனை ஒரு ஆரோக்கியமான சந்தேகத்துடன் அதற்கெதிரான வாதப்பிரதிவாதங்களான (நம்ப முடியாத நிலையில்) விடயங்கள் தற்போது இலகுவாக கடந்து செல்லும் நிலைக்கு மாற்றங்கள் உணரும்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய ஒழுங்கு இதுவரைகாலமும் காணப்பட்ட அடிப்படையான விடயங்கள் இனி அவற்றிற்கான தேவைகள் இல்லாமல் போய் விட்டுள்ளது, இனி வரவுள்ள கூட்டு நாடுகளின் (Block countries)ஆதிக்கமுடைய புதிய ஒழுங்கு நோக்கி தமிழினம் தன்னை தயார்படுத்தி கொள்ளவேண்டும்.

எமது சமுதாயம் ஒரு மெதுவாக தன்னை தயார்படுத்தும் சமூகமாக உள்ளது (Late adopters), பொதுவாக உயர் கல்விநிலை உள்ள சமூகத்தின் பொதுவான இயல்பு இது, சவால்களை எதிர்கொள்ளும் சமூகத்தின் பிரதிநிதிகள் பெருமளவில் போரினால் அழிவடைந்ததால் எமது சமூகம் ஒரு சிக்கலான சமூக பிரச்சினைக்குள் உள்ளதாக உணருகிறேன் (Late adopters ஒரு சமூகத்தில் 34% இருக்க வேண்டிய நிலை, எமது சமூகத்தில் 60% இற்கும் அதிகமாக இருக்கலாம் என கருதுகிறேன்).

On 5/7/2025 at 00:11, vasee said:

ஒரு ஊரில் பெரிய ரவுடி ஒருவர் இருந்தால் அவருக்கு கீழ் சில ரவுடிகள் இருப்பார்கள், அந்த ரவுடிகளினை தெரிந்தவர்கள் அவர்களை தெரிந்தவர்க்ளெல்லாம் சும்மா இருப்பவர்களிடம் நான் யார் தெரியுமா? எங்கள் அண்ணன் யார் தெரியுமா என பயமுறுத்தி வம்பிழுப்பார்கள்.

நீங்கள் சொல்ல வரும் ரவுடிக் கதை புரியவில்லை. பெரிய ரவுடி அமெரிக்காவை எதிர்க்க சின்ன ரவுடி ரஸ்யாவை ஆதரிப்போம் என்கிறீர்களா ? தமிழர்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டது நீங்கள்தான். அதற்கு ரஸ்யாவையும் ஆதரிக்கிறார்கள் என்று எழுதியவுடன் பெரிய சிறிய ரவுடி என்று ஒப்பீடு செய்கிறீர்கள்.

இரு தரப்பினராலும் மனித உயிர்களல்லவா இழக்கப்படுகின்றது. மக்களின் மேல் அனுதாபம் இருந்தால் எந்த நாடாக இருந்தாலும் மனித இழப்புகள் ஏற்படும்போது கண்டிக்கலாம். ஒரு நாட்டினை அல்லது அதன் தலைவரை ஆதரித்து அதைவிட இது பரவாயில்லை என்ற வாதம் ஒரு பக்கச் சார்பானதாக இருக்கும்.

அடுத்து, நீங்கள் இணைத்த ஜெய்சங்கர் கூறிய அமெரிக்க சுய சார்பு பொருளாராதம் மற்றும் இனி வரப்போகும் பிறிக்ஸ் நாடுகள் மீதான மேலதிக வரிகள் அழுத்தங்கள் போன்றவை நீங்கள் விரும்பிய ரஸ்ய சார்புடைய ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததனால் எற்பட்டவை.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, இணையவன் said:

முன்னாள் ருமேனிய பிரதமர் தெரிவித்த கருத்து ஒன்றில், ஐரோப்பிய ஒன்றியத்தில் ருமேனியா இணைந்ததால் ஏற்பட்ட வருமானம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

18 ஆண்டுகால ருமேனிய ஐரோப்பிய ஒன்றிய இணைவில் 33 பில்லியன் யுரோவினை ஐரோப்பிய ஒன்றியத்திற்காக செலவிட்டுள்ளது, ஆனால் 101 பில்லியன் பெறுமதியான முதலீடுகளை பெற்றுள்ளது அதில் 3 குறிப்பிட்ட துறைகளில் கணிசமான அளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு இருந்துள்ளது.

1.நெடுஞ்சாலை

2.நீர் முகாமைத்துவம்

3.100000 நிறுவனங்களுக்கான முதலீடுகள்

68 பில்லியன் வருமானமாக கிடைத்துள்ளதாக கூறுகிறார்.

இது எவ்வகையான பொருளாதார மாற்றத்தினை ருமேனியாவிற்கு ஏற்படுத்தியது?

சோவியத் ஒன்றிய உடைவின் பின்னர் அந்த பொருளாதார கொள்கையிலிருந்து விடுபட்டு இரஸ்சியா, ருமேனியா, போலந்து போன்ற நாடுகள் தாராளவாத பொருளாதார நிலைக்கு மாறியது (இரஸ்சியா முக்கிய வளங்களை தொடர்ந்து அரச கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த்தது).

1991, 1992 மிக பெரிய பொருளாதார வீழ்ச்சியினை இந்த நாடுகள் சந்தித்தன அதற்கு காரணம் மிக வேகமாக மத்திய திட்டமிடல் பொருளாதார முறைமையில் இருந்து தடாலடியாக சந்தை பொருளாதாரத்திற்கு மாறியமை, இந்த இரண்டு வருட காலத்தில் 20% பொருளாதார சுருக்கத்தினை ருமேனியா சந்தித்தது.

அதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இனையும் வரை கிட்டத்தட்ட 45% பொருளாதார வளர்ச்சி கண்டது (13 ஆண்டில்) ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தபின் 2007 - 2022 வரை 48% பொருளாதார வளர்ச்சியினை (15 ஆண்டுகளில் பெற்றுள்ளது).

அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியினை பொறுத்தவரை பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என கூறலாம்.

ஆனால் அடிப்படையில் ருமேனிய மக்களின் பொருளாதார நிலை என்னவாகியிருந்தது இந்த இரு வேறுபட்ட காலத்தில்?

குறிப்பாக ருமேனிய விவசாயிகள் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகள் விவசாயம் பண்ணை தொழில் இருந்து விரட்டி அடித்து அந்த இடத்திற்கு வெளிநாட்டு பெருநிறுவனங்கள் வந்தன.

ஒரு நாட்டின் தேசிய சொத்துக்களின் மீதான ஆதிக்கம் பிறநாட்டு நிறுவனங்களுக்கே இருந்த்து, நிறுவனங்கள் ஒரு அமைப்பாக செயற்பட்டு எவ்வாறு ஒரு ஏகபோக சந்தையினை உருவாக்குகிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் அவுஸ்ரேலியாவில் அதிகளவில் சூரிய மின் சக்தி பெருமளவில் பாவிக்கப்படுகிறது.

இந்த போக்கு ஒரு புதிய பரிணாமத்திற்கு செல்ல தொடங்கியுள்ளது மக்கள் சூரிய மின் சக்தியுடன் மின் சேமிப்பு கலனையும் பாவிப்பதால் மின்சாரம் வழங்கும் நிறுவனங்களின் வியாபாரத்தில் ஏற்படப்போகும் சரிவினை தவிர்ப்பதற்காக ஒரு புதிய நடை முறையினை அறிமுகப்படுத்தவுள்ளார்கள் அதனை சூரிய வரி என கூறுகிறார்கள், சூரிய மின், மின் சேம்ப்பு கலத்தில் சேமிக்கப்பட்ட எஞ்சியவை மின் கம்பிகளினூடாக மின்சார வழங்குனருக்கு செல்லும் அதற்கு கட்டணம் வசூலிக்க உள்ளார்கள்.

இரஸ்சியா தனது வளங்களை தொடர்ந்து தன்னகத்தே அரச உடமையாக வைத்திருப்பதுதான் தற்போது நிலவும் பிரச்சினைக்கு அச்சாணி.

ஒரு காலத்தில் உலகமயமாக்கப்பட்ட சந்தை பொருளாதாரத்தினை முதன்மை படுத்தின நாடுகள் சுயசார்பு பொருளாதாரம், வழங்கல் பாதை பாதுகாபு மற்றும் உள்நாட்டு வர்த்தக நலன் போன்றவைகளை முதன்மை படுத்துவதற்கான காரணம்.

இன்றைய யதார்த்தம் பலதுருவ (Block countries) உலக ஒழுங்கே.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2025 at 01:04, vasee said:

இலங்கையில் தமக்கு நிகழ்ந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு நிற்கும் ஈழத்தமிழர்களே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்!

On 4/7/2025 at 08:12, இணையவன் said:

இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதிய யாரும் இஸ்ரேலின் படுகொலைகளை ஆதரித்ததாக அல்லது நியாயப்படுத்தியதாக நான் அறியவில்லை.

வசி தானும் நல்லவன், நியாயவான் என காட்ட வேண்டாமா🤣.

அப்படியாயின் இப்படி இல்லாத வில்லன்களை கற்பனையில் உருவாக்கி கம்பு சுத்தித்தான் ஆகவேண்டும்.

#அற-காட்டாப்பு

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

இந்தப் பதில் உங்கள் ஒற்றைப் பரிமாணப் பார்வையாகத் தான் தெரிகிறது.

33 பில்லியன் ரூமேனியா செலவழித்து ஒன்றியத்தில் இணைந்தால் உடனே 100 பில்லியன் வருமானம் அடுத்த 5 ஆண்டுகளில் கிடைத்து விடும் என்று ரூமேனியார்களே நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், தங்கள் வாழ்க்கைத் தரம் ஐரோப்பிய தரத்திற்கு உயரும் என்று நம்பியதால் இணைவை ஆதரித்திருப்பார்கள். முதலில், அந்த 33 பில்லியன்களை ரூமேனிய செலவழிக்கக் காரணம், ரூமேனியாவில் (அருகில் இருக்கும் பல்கேரியாவிலும் கூட) இருக்கும் ஊழல், சட்ட ஆட்சி சீர்குலைவு என்பன தான் காரணமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மன்னர்கள் ஆட்சியில் இருந்த ரூமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய தேசங்கள், சோவியத் ரஷ்யாவினால் பலவந்தமாக இணைக்கப் பட்ட பின்னர் அங்கே செல்வம் கொழிக்கவில்லை. மாறாக தனியார் உடைமைகள் பறிக்கப் பட்டு, மக்களும் ஊக்கம், உழைப்புக் குறைந்து பொருளாதாரம் தேங்கிய நிலை தான் உருவானது. அந்தப் பின்னணியில் தான் ரூமேனியர்களும், பல்கேரியர்களும் ஊழல், இலவசங்களை எதிர்பார்க்கும் மனப் பாங்கு என்பவற்றைப் பெற்றுக் கொண்டார்கள்.

சீரழித்ததே ரஷ்யாவின் முன்னோடி தேசமான சோவியத் ஒன்றியமாக இருக்கும் போது, மேற்கையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குற்றம் சொல்வதற்கு காரணங்கள் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2025 at 10:04, vasee said:

இலங்கையில் தமக்கு நிகழ்ந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு நிற்கும் ஈழத்தமிழர்களே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்!

மிகவும் நடுநிலையாக எழுதும் நீங்களே இப்படி எழுதலாமா?

இஸ்ரேல் பலஸ்த்தீனர்கள் மீது நடத்துவது அப்பட்டமான இனவழிப்பு என்பதை இங்கே மறுத்தவர்கள் யார்? பலஸ்தீனர்களுடனான இஸ்ரேலின் போரில் அதனை ஆதரித்தவர்கள் யார்?

ஆனால், ஈரானுடனான இஸ்ரேலின் போரில் இஸ்ரேலினை நான் உட்பட இன்னும் சிலர் இங்கே ஆதரித்தது உண்மைதான். ஏனென்றால், மத அடிப்படைவாதிகளின் கைகளில் நாசகார ஆயுதங்கள் போய்விடக்கூடாதென்பதற்காக. மதத்திற்காக எந்தளவு தூரத்திற்கும் ஈவு இரக்கமின்றி இவர்கள் செயற்படுவார்கள் என்பதற்கான சான்றுகளை உலக வரலாற்றில் இருந்து நாம் பார்த்தே வருகிறோம், அதனால்த்தான் அந்த நிலைப்பாட்டினை எடுக்கவேண்டி இருந்தது.

ஆனால் நீங்கள் இவை இரண்டையும் ஒன்றாக முடிச்சுப்போட்டு விட்டிருக்கிறீர்களே? அது ஏன்?

உக்ரேன் மீதான‌ ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றே நினைத்து இருந்தேன், ஆனால் உங்களின் அண்மைய கருத்துக்கள் மேற்கிற்கு எதிராக இருக்கின்றன. அப்படியானால் நீங்கள் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை ஆத‌ரிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? ஏனென்றால், ஈரானுடனான போரில் இஸ்ரேலை சிலர் ஆதரித்தமைக்காக அவர்களை பலஸ்த்தீனப் படுகொலையினை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் கருதும்போது, நீங்கள் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பைச் சரியென்று நினைப்பதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இந்தப் பதில் உங்கள் ஒற்றைப் பரிமாணப் பார்வையாகத் தான் தெரிகிறது.

33 பில்லியன் ரூமேனியா செலவழித்து ஒன்றியத்தில் இணைந்தால் உடனே 100 பில்லியன் வருமானம் அடுத்த 5 ஆண்டுகளில் கிடைத்து விடும் என்று ரூமேனியார்களே நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், தங்கள் வாழ்க்கைத் தரம் ஐரோப்பிய தரத்திற்கு உயரும் என்று நம்பியதால் இணைவை ஆதரித்திருப்பார்கள். முதலில், அந்த 33 பில்லியன்களை ரூமேனிய செலவழிக்கக் காரணம், ரூமேனியாவில் (அருகில் இருக்கும் பல்கேரியாவிலும் கூட) இருக்கும் ஊழல், சட்ட ஆட்சி சீர்குலைவு என்பன தான் காரணமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மன்னர்கள் ஆட்சியில் இருந்த ரூமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய தேசங்கள், சோவியத் ரஷ்யாவினால் பலவந்தமாக இணைக்கப் பட்ட பின்னர் அங்கே செல்வம் கொழிக்கவில்லை. மாறாக தனியார் உடைமைகள் பறிக்கப் பட்டு, மக்களும் ஊக்கம், உழைப்புக் குறைந்து பொருளாதாரம் தேங்கிய நிலை தான் உருவானது. அந்தப் பின்னணியில் தான் ரூமேனியர்களும், பல்கேரியர்களும் ஊழல், இலவசங்களை எதிர்பார்க்கும் மனப் பாங்கு என்பவற்றைப் பெற்றுக் கொண்டார்கள்.

சீரழித்ததே ரஷ்யாவின் முன்னோடி தேசமான சோவியத் ஒன்றியமாக இருக்கும் போது, மேற்கையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குற்றம் சொல்வதற்கு காரணங்கள் இல்லை!

2023 இல் ருமேனியா 5 பில்லியன் பெறுமதியான காய்கறிகளை ஐரோபிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது,நெடுஞ்சாலைகளின் நோக்க்கம் அடிப்படையில் வர்த்தகநலனடிபடையானது, மற்றும் நிறுவனங்களின் முதலீடு இவை போன்றகாரணிகளில் ஆர்வம் காட்டும் நிலை பன்னாட்டு நிறுவனங்களின் தேவைகள் கணக்கிலெடுக்கப்படும் அதே நேரம் சிறிய விவசாயிகள் அவர்கள் தொழிலில் இருந்து விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.

ருமேனியாவின் தாராளமய பொருளாதார கொள்கை காலத்தினை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன், இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இனைந்த பின்னரான காலகட்டத்தில் உள்நாட்டு மக்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் எனவே குறிப்பிட்டுள்ளேன், அடிப்படையில் நாட்டின் வளஙகல் பிறநாட்டு பெரும் நிறுவனங்களின் கைகளில் உள்ளது என்பதை குறிப்பிட்டு தற்போதய உலகில் எதற்காக போர் நிகழ்கிறது என்பதனை சூசகமாக குறிப்பிடவே அந்த உதாரணம்.

7 minutes ago, ரஞ்சித் said:

மிகவும் நடுநிலையாக எழுதும் நீங்களே இப்படி எழுதலாமா?

இஸ்ரேல் பலஸ்த்தீனர்கள் மீது நடத்துவது அப்பட்டமான இனவழிப்பு என்பதை இங்கே மறுத்தவர்கள் யார்? பலஸ்தீனர்களுடனான இஸ்ரேலின் போரில் அதனை ஆதரித்தவர்கள் யார்?

ஆனால், ஈரானுடனான இஸ்ரேலின் போரில் இஸ்ரேலினை நான் உட்பட இன்னும் சிலர் இங்கே ஆதரித்தது உண்மைதான். ஏனென்றால், மத அடிப்படைவாதிகளின் கைகளில் நாசகார ஆயுதங்கள் போய்விடக்கூடாதென்பதற்காக. மதத்திற்காக எந்தளவு தூரத்திற்கும் ஈவு இரக்கமின்றி இவர்கள் செயற்படுவார்கள் என்பதற்கான சான்றுகளை உலக வரலாற்றில் இருந்து நாம் பார்த்தே வருகிறோம், அதனால்த்தான் அந்த நிலைப்பாட்டினை எடுக்கவேண்டி இருந்தது.

ஆனால் நீங்கள் இவை இரண்டையும் ஒன்றாக முடிச்சுப்போட்டு விட்டிருக்கிறீர்களே? அது ஏன்?

உக்ரேன் மீதான‌ ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றே நினைத்து இருந்தேன், ஆனால் உங்களின் அண்மைய கருத்துக்கள் மேற்கிற்கு எதிராக இருக்கின்றன. அப்படியானால் நீங்கள் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை ஆத‌ரிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? ஏனென்றால், ஈரானுடனான போரில் இஸ்ரேலை சிலர் ஆதரித்தமைக்காக அவர்களை பலஸ்த்தீனப் படுகொலையினை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் கருதும்போது, நீங்கள் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பைச் சரியென்று நினைப்பதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

இரண்டாம் உலக யுத்ததின் பின்னரான இந்த சிக்கல் நிலைக்கு மேற்குதான் காரணம் (மேற்கின் ஆட்சியினை தமது தேவைக்கு ப்யன்படுத்தும் பெரும் நிதிநிறுவனங்கள்) இடம், காரணிகள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் அடிப்படை பிரச்சினை அதிகாரங்களில் உள்ளவர்களின் தவறான முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

2023 இல் ருமேனியா 5 பில்லியன் பெறுமதியான காய்கறிகளை ஐரோபிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது,நெடுஞ்சாலைகளின் நோக்க்கம் அடிப்படையில் வர்த்தகநலனடிபடையானது, மற்றும் நிறுவனங்களின் முதலீடு இவை போன்றகாரணிகளில் ஆர்வம் காட்டும் நிலை பன்னாட்டு நிறுவனங்களின் தேவைகள் கணக்கிலெடுக்கப்படும் அதே நேரம் சிறிய விவசாயிகள் அவர்கள் தொழிலில் இருந்து விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.

ருமேனியாவின் தாராளமய பொருளாதார கொள்கை காலத்தினை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன், இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இனைந்த பின்னரான காலகட்டத்தில் உள்நாட்டு மக்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் எனவே குறிப்பிட்டுள்ளேன், அடிப்படையில் நாட்டின் வளஙகல் பிறநாட்டு பெரும் நிறுவனங்களின் கைகளில் உள்ளது என்பதை குறிப்பிட்டு தற்போதய உலகில் எதற்காக போர் நிகழ்கிறது என்பதனை சூசகமாக குறிப்பிடவே அந்த உதாரணம்.

இதைத் தான் "ஒற்றைப் பரிமாணப் பார்வை" என்றேன். அதையே மீண்டும் எழுதியிருக்கிறீர்கள். மீள மீள எழுதுவதால் ஒரு ஆய்வுக்கு பல பரிமாணங்களும் ஆழமும் கிடைத்து விடாது. அரசுகள் எப்படி இருந்தாலும், முன்னாள் சோவியத் குடியரசுகளாக இருந்த நாடுகளின் மக்கள் இப்போது ஐரோப்பிய ஒன்றியம் நோக்கி நகர முற்படுவதன் காரணங்கள் மனித அபிவிருத்தி சார்ந்தது. இதை எவ்வளவு விவசாயிகள் உள்நாட்டில் தொழிலை இழந்தார்கள் என்ற இலக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு தீர்ப்பிட முடியாது. சில தீமைகள் இருக்கும், பல நன்மைகள் இருக்கும். நிகர விளைவை அந்த நாடுகளின் நிலைமைகளே தீர்மானிக்கும்.

கடந்த இரு ஆண்டுகளாக, அமெரிக்காவின் டொலர் கடன் காரணமாக உலகில் செல்வாக்கிழக்கும் என்று கூட நீங்கள் எழுதிய நினைவு. அதுவும் ஒரு பரிமாணப் பார்வை என்று சுட்டிக் காட்டியிருந்தேன். அமெரிக்க டொலரை உலகம் நம்பி, சேமிப்பு நாணயமாக வைத்திருக்க அமெரிக்காவின் பொருளாதாரம்/கடன் நிலை மட்டும் காரணமல்ல என்று சுட்டிக் காட்டியிருந்தேன். இன்னும் உங்களுக்கு ஒட்டு மொத்தமாக ஒரு விடயத்தை அணுகும் கலை வாய்க்கவில்லையென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

விடயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதனை பற்றியதல்ல சொந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் வழங்கலில் ஆதிக்கம் இல்லாமல் வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் ஆளுமை செலுத்துகின்றன.

அமெரிக்க பண்புகளுக்காக அமெரிக்க கடன்முறிகளை மற்ற நாடுகள் வாங்குகின்றன என்பது போன்ற ஒரு கருத்தினை நீங்கள் கூறியிருந்தீர்கள், அதற்கு அமெரிக்க பணமுறி தங்கத்தினை விட திரவத்தன்மை அதிகம் அத்துடன் தங்கத்தினை விட மேலதிகமாக வட்டி எனும் வகையிலான வருமானம் வருவதால் ம்ற்றும் இருப்பு, நாணய வலுக்குறைப்பு போன்ற காரணங்களுக்காக வாங்குவதாக கூறியிருந்தேன்.

அத்துடன் 2032 இல் அமெரிக்கா தனது உலகின் முதனிலையினை இழந்து விடும் என்பதற்காக 2022 இல் இருந்த கடன் அடிப்படையில் அதற்கு செலுத்தப்படும் வட்டி மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தினடிப்படையில் ஒரு மாதிரி கணிப்பீட்டினையும் பதிந்திருந்தேன் அதற்கு கூறிய காரணம் அப்போது கடன் மொத்த தேசிய வருமானத்தினை விட அதிகமாக இருந்தததன் அடிப்படையில் 2032 இல் கடன் தொகை 250% உயர்வடைந்துவிடும் எனவும் இங்கிலாந்து 2 உலக போரின் முடிவின் பின்னர் கடன் மொத்த தேசிய வருமானத்தில் 250% இருந்த போது அது தனது காலனித்துவத்தினை கைவிட்டதனை குறிப்பிட்டிருந்தேன்.

அப்போது 120% இருந்ததாக கருதுகிறேன் இரண்டு ஆண்டுகளின் பின்னர் 124% உள்ளது, அமெரிக்கா சரியான பாதையிலேயே செல்கிறது, ஆனால் அமெரிக்கா உலகின் முதனிலையினை அதற்கு முன்னராகவே வேறு காரணங்களால் இழக்கலாம் அல்லது 2032 இலும் தொடர்ந்து முதனிலையினை செலுத்தலாம்.

கணிப்பில் ஆண்டிற்கு 5% கடனதிகரிப்பு ஏற்படலாம் என கணித்ததாக நினைவுள்ளது, தற்போது ஆண்டிற்கு 2% கடனதிகரிப்பு ஏற்படுகிறது (கடந்த 2 ஆண்டில்), 2032 இனை விட சில ஆண்டுகள் அதிகரிக்கலாம் ஆனால் அது நிகழும் என்பதாகவே நான் உணருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2025 at 05:01, goshan_che said:

வசி தானும் நல்லவன், நியாயவான் என காட்ட வேண்டாமா🤣.

அப்படியாயின் இப்படி இல்லாத வில்லன்களை கற்பனையில் உருவாக்கி கம்பு சுத்தித்தான் ஆகவேண்டும்.

#அற-காட்டாப்பு

என்னை அநியாயத்திற்கு புகழுகிறீர்கள்.🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின் அடையாளம் அல்ல குற்ற உணர்வின் அடையாளம் - அமெரிக்காவின் தடை குறித்து ஐநா அறிக்கையாளர்

Published By: RAJEEBAN

11 JUL, 2025 | 12:35 PM

image

குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின் அடையாளம் அல்ல குற்ற உணர்வின் அடையாளம் என இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்தமைக்காக அமெரிக்காவின் தடையை எதிர்நோக்கியுள்ள ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகபதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாங்கள் ஒன்றாக நிமிர்ந்துநிற்போம் என தெரிவித்துள்ள அவர் காசா எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைவரினது கண்களும் தொடர்ந்தும் பிள்ளைகள் பட்டினி காரணமாக தாய்மாரின் கரங்களில் உயிரிழக்கும் - உணவு தேடும் போது அவர்களின் தந்தைமாரும் சகோதரர்களும் குண்டுவீச்சில் துண்டுதுண்டாக்கப்படும் காசா மீது இருக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரான்செஸ்கா மிடில் ஈஸ்ட் ஐயின் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கையில் நான் யாரையோ பதற்றமடையச்செய்திருக்கின்றேன் போல தோன்றுகின்றது, நான் இங்கு பேசிக்கொண்டிருக்கும்போது காசாவில் மக்கள் மரணித்துக்கொண்டிருக்கின்றார்கள் ஐக்கிய நாடுகளால் அதனை நிறுத்த முடியாமல் உள்ளது என்பதே எனது கரிசனை என குறிப்பிட்டுள்ளார்.

காசாமீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்கர்கள் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ஐசிசி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் செயற்பட்டமைக்காக பிரான்செஸ்காவிற்கு எதிராக தடைகளை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ  ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஐநா அறிக்கையாளராக செயற்படுவதற்கு பிரான்செஸ்கா பொருத்தமற்றவர் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி, பிரான்ஸ், கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்திருந்தார். சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் அதனை பலவீனப்படுத்தும் அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ் கிரேக்க இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/219717

  • கருத்துக்கள உறவுகள்

75 வருடங்களாக ஒரு மக்கள் குழுமத்தினை அகதிகளாக்கினவர்கள், தற்போது அதே நிலையில்..........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.