Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

adminJuly 28, 2025

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி காவல்துறையினா்   இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ரிக் ரொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டு வந்துள்ளார்.  குறித்த இளைஞனுடன் ரிக் ரொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி , அவரை காதலித்து வந்துள்ளார்.

அந்நிலையில் தனது காதலனுக்கு , அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காகவும் , காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகவும் , தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகையை களவெடுத்து , அதனை காதலனிடம் கொடுத்துள்ளார்.  வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், யுவதியின் பெற்றோர் சாவகச்சேரி காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா்  , யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் இருந்த நகைகளை தான் களவெடுத்து காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.  யுவதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் , காதலனை கைது செய்த காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை களவெடுத்த யுவதி , அவரது காதலன் , யுவதி வீட்டில்  நகைகளை  களவெடுப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி , நகைகளை விற்க உதவியவர்கள் , நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை  காவல்துறையினா் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும்  காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://globaltamilnews.net/2025/218476/

  • கருத்துக்கள உறவுகள்

ரிக்ரொக் காதலனுக்காக… சொந்த வீட்டில் களவு எடுத்த இந்தப் முட்டாள் பெட்டையை பெத்த தாய் தகப்பன் தான் பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டுப் பெண்

“நான் காதலனையே கல்யாணம் செய்யப் போகிறேன்” என்று அடம்பிடித்து இருந்தால் நகைகள் சீதனமாகவே வந்து சேர்ந்திருக்கவும் வாய்ப்பு வந்திருக்கலாம் அல்லவா??.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா விடுங்க . ......... காதலுக்கு கண் இல்லை எனும்போது பொன் எல்லாம் துச்சம் ........... ! 😀

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Paanch said:

மோட்டுப் பெண்

“நான் காதலனையே கல்யாணம் செய்யப் போகிறேன்” என்று அடம்பிடித்து இருந்தால் நகைகள் சீதனமாகவே வந்து சேர்ந்திருக்கவும் வாய்ப்பு வந்திருக்கலாம் அல்லவா??.

அந்த ரிக் ரொக் ஆசாமிக்கு.... இவவுடன் இன்னும், எத்தனை காதலிகள் இருக்கின்றார்கள் என்று உறுதியாக தெரியாமல் எப்படி கலியாணம் கட்டிக் கொடுப்பது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு உச்ச நீதிமன்றம்போல் இறுதியான தீர்ப்பு வழங்கும் ஈழப்பிரியரை இன்னும் இங்கு காணவில்லையே, வெள்ளத்திற்கு ஓடியவர் இன்னும் திரும்பவில்லையா?🤔

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Paanch said:

இதற்கு உச்ச நீதிமன்றம்போல் இறுதியான தீர்ப்பு வழங்கும் ஈழப்பிரியரை இன்னும் இங்கு காணவில்லையே, வெள்ளத்திற்கு ஓடியவர் இன்னும் திரும்பவில்லையா?🤔

வருவார் கொஞ்சம் பொறுங்கோ! அங்கை இன்னும் விடியேல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யுவதி.... திருடிய நகையின் மதிப்பு 48 லட்சம் ரூபாய் என்றும், இவர் தனது சொந்த வீட்டில் திருடவில்லை என்றும், பிறிதொரு வீட்டில் வேலை செய்வதாகவும்... அந்த வீட்டிலேயே நகையை ஆட்டையை போட்டதாகவும் முகநூலில் செய்தி உலாவுகின்றது.

அந்த வீட்டு உரிமையாளர்கள் நகைகளை காணவில்லை என்றவுடன்... சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து... அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை களவெடுத்த யுவதி , அவரது காதலன், யுவதி வீட்டில் நகைகளை களவெடுப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

நம்ம யாழ்ப்பாணம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

சொந்த வீட்டில் திருடவில்லை என்றும், பிறிதொரு வீட்டில் வேலை செய்வதாகவும்... அந்த வீட்டிலேயே நகையை ஆட்டையை போட்டதாகவும் முகநூலில் செய்தி உலாவுகின்றது.

யாரை நம்பி நான் எழுத பின்னூடம் ஒன்று?.🤥

இப்படிக்கு ஏமாந்த ஓருறவு.😭

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். ரிக்ரொக் காதலனுக்காக நகைகளை திருடிய யுவதி, காதலன், யுவதியின் நண்பி ஆகிய மூவரும் விளக்கமறியலில்

Published By: VISHNU 29 JUL, 2025 | 08:31 PM

image

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான இளைஞன், அந்த இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க,  நகைகளை களவாடிய யுவதி, யுவதிக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

IMG-20250729-WA0091.jpg

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ரிக் ரொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டு வந்துள்ளார். 

IMG-20250729-WA0085.jpg

குறித்த இளைஞனுடன் ரிக் ரொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி , அவரை காதலித்து வந்துள்ளார். 

அந்நிலையில் தனது காதலனுக்கு , அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காகவும், காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காவும், தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகையை களவெடுத்து, அதனை காதலனிடம் கொடுத்துள்ளார். 

வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் இருந்த நகைகளை தான் களவெடுத்து காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். 

யுவதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், காதலனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். 

அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை களவெடுத்த யுவதி, அவரது காதலன், யுவதி வீட்டில்  நகைகளை களவெடுப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய போது, நகைகளை திருடிய யுவதி, அவரது காதலன் மற்றும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் ஏனைய நால்வரையும் பிணையில் செல்ல அனுமதித்தார். 

அதேவேளை, திருடப்பட்ட நகைகளில் ஒரு தொகையும், நகைகளை விற்று வாங்கிய அதிநவீன மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் மீட்டு, சான்று பொருளாக, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியதை அடுத்து, அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/221312#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள மோட்டார் சைக்கிளுக்கு... கோவிலில் பூசையும் நடக்கின்றது. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

காணொளி: 👉 https://www.facebook.com/myjaffna/videos/1410267050249344 👈

களவு எடுத்த நகையை விற்று வாங்கிய புது மோட்டார் சைக்கிளுக்கு

கோவிலில் வைத்து பூசை நடக்கின்றது. 😂

மோட்டார் சைக்கிளில் வெள்ளோட்டம் ஓடுபவர்தான்...

அந்த, மச்சம் உள்ள காதலன். 🤣

ஐயர் மோட்டார் சைக்கிள் ரயரில் தேசிக்காய் வைத்து நசித்தும்... அந்த மோட்டார் சைக்கிள், ரோட்டில் ஓடாமல்... பொலிஸ் ஸ்ரேசனிலை நிற்க வேண்டி வந்திட்டுது. 😜

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2025 at 01:26, Paanch said:

இதற்கு உச்ச நீதிமன்றம்போல் இறுதியான தீர்ப்பு வழங்கும் ஈழப்பிரியரை இன்னும் இங்கு காணவில்லையே, வெள்ளத்திற்கு ஓடியவர் இன்னும் திரும்பவில்லையா?🤔

On 29/7/2025 at 01:38, Eppothum Thamizhan said:

வருவார் கொஞ்சம் பொறுங்கோ! அங்கை இன்னும் விடியேல்லை!

வழக்கு விசாரணையில் உள்ளதால்

இப்போது இதைப்பற்றி கருத்து கூற முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, தமிழ் சிறி said:

யாழில்... காதலி களவெடுத்த காசில் வாங்கிய நவீன மோட்டார் சைக்கிளுக்கு, நல்லவன் மாதிரி சந்நிதியில் அர்ச்சனை!! மன்மதன் இவர்தானா? காதலி உட்பட 3 பேர் சிறைக்குள்!!

நான் பள்ளிக்கூடத்திலை படிக்கேக்க அவையளிட்ட வடை தேத்தண்ணிக்கு காசு அடிக்கடி வாங்கின ஞாபகம் வருது. அந்த காசில தம் அடிச்சது வேற விசயம். இந்த பொடியன் என்னடாவெண்டால் மோட்டச்சைக்கிள் வாங்க அவையளை வளைச்சுப்போட்டிருக்கிறான்...கில்லாடி பெடியன் தான் 😂

இவனெல்லாம் பள்ளிக்கூடம் போனவனோ எண்ட கேள்வி உங்கை கன பேருக்கு வரக்கூடும்.😎

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

யாழில். ரிக்ரொக் காதலனுக்காக நகைகளை திருடிய யுவதி, காதலன், யுவதியின் நண்பி ஆகிய மூவரும் விளக்கமறியலில்

Published By: VISHNU 29 JUL, 2025 | 08:31 PM

image

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான இளைஞன், அந்த இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க,  நகைகளை களவாடிய யுவதி, யுவதிக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

IMG-20250729-WA0091.jpg

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ரிக் ரொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டு வந்துள்ளார். 

IMG-20250729-WA0085.jpg

குறித்த இளைஞனுடன் ரிக் ரொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி , அவரை காதலித்து வந்துள்ளார். 

அந்நிலையில் தனது காதலனுக்கு , அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காகவும், காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காவும், தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகையை களவெடுத்து, அதனை காதலனிடம் கொடுத்துள்ளார். 

வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் இருந்த நகைகளை தான் களவெடுத்து காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். 

யுவதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், காதலனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். 

அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை களவெடுத்த யுவதி, அவரது காதலன், யுவதி வீட்டில்  நகைகளை களவெடுப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய போது, நகைகளை திருடிய யுவதி, அவரது காதலன் மற்றும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் ஏனைய நால்வரையும் பிணையில் செல்ல அனுமதித்தார். 

அதேவேளை, திருடப்பட்ட நகைகளில் ஒரு தொகையும், நகைகளை விற்று வாங்கிய அதிநவீன மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் மீட்டு, சான்று பொருளாக, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியதை அடுத்து, அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/221312#google_vignette

ஏராளன் படத்திலும் சரியாக ஏழுபேர் தெரிகிறார்களே?

என்ன தம்பி ஒரே குழப்பமாக உள்ளதே?

  • கருத்துக்கள உறவுகள்

524909556_1326050235753441_4327123790038

செல்வச் சந்நிதி கோவிலில்... கள்ள மோட்டார் சைக்கிளுக்கு, பூசை செய்துள்ளார்.

525971271_4049941781914453_1149843915824

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நான் பள்ளிக்கூடத்திலை படிக்கேக்க அவையளிட்ட வடை தேத்தண்ணிக்கு காசு அடிக்கடி வாங்கின ஞாபகம் வருது. அந்த காசில தம் அடிச்சது வேற விசயம். இந்த பொடியன் என்னடாவெண்டால் மோட்டச்சைக்கிள் வாங்க அவையளை வளைச்சுப்போட்டிருக்கிறான்...கில்லாடி பெடியன் தான் 😂

இவனெல்லாம் பள்ளிக்கூடம் போனவனோ எண்ட கேள்வி உங்கை கன பேருக்கு வரக்கூடும்.😎

images?q=tbn:ANd9GcQKmPny83ngdwtXhuq98Ml download.jpeg

வட மாகாணத்தில் இருக்கும்... ஊர்களிலேயே,

திடுக்கிடும் பல வகையான செய்திகளை கொடுப்பதில் சாவகச்சேரியை அடிக்க ஏலாது. 😂

அந்த மண்ணில் ஏதோ... விஷயம் இருக்கு. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, தமிழ் சிறி said:

வட மாகாணத்தில் இருக்கும்... ஊர்களிலேயே,

திடுக்கிடும் பல வகையான செய்திகளை கொடுப்பதில் சாவகச்சேரியை அடிக்க ஏலாது. 😂

அந்த மண்ணில் ஏதோ... விஷயம் இருக்கு. 🤣

ஆக்கள் இரட்டை சுழிக்காரர். ஆதாவது சுழியன்கள் 🤣

எழுதுமட்டுவாள் தொடக்கம் நுணாவில் கைதடி நாவற்குளி எண்டு எல்லாம் பெரிய புள்ளிங்கோ 😂

எங்கடை கைதடியார்ர கன நாளாய் காணேல்லை(கந்தையா) கோயில் திருவிழாக்கள் முடியத்தான் வருவார் போல 😄

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

எங்கடை கைதடியார்ர கன நாளாய் காணேல்லை(கந்தையா) கோயில் திருவிழாக்கள் முடியத்தான் வருவார் போல 😄

கைதடிக்காரர் @Kandiah57 அடிக்கடி களத்துக்கு வருவதை கண்டுள்ளேன். ஆனால்... கருத்து எழுதாமல் இருக்கும் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

தினமும் களத்திற்கு வந்து எல்லோருடனும் இனிமையாக பழகும் ஒருவர், திடீரென்று வராமல் இருக்கும் போது... மனதிற்கு சங்கடமாக உள்ளது.

நீங்கள் சொல்வது போல்... சிலவேளை கோயில் திருவிழாக்கள் முடியத்தான் வருவார் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

ஏராளன் படத்திலும் சரியாக ஏழுபேர் தெரிகிறார்களே?

என்ன தம்பி ஒரே குழப்பமாக உள்ளதே?

அவர்கள் மப்டி பொலிஸ் அண்ணை!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

திடுக்கிடும் பல வகையான செய்திகளை கொடுப்பதில் சாவகச்சேரியை அடிக்க ஏலாது. 😂

அந்த மண்ணில் ஏதோ... விஷயம் இருக்கு. 🤣

சும்மா சும்மா சாவகச்சேரியை கிண்டலடிக்கக் கூடாது கண்டியளோ உறவுகளே!

அங்குதான் அருச்சுனா இருக்கிறார் அவர் குறிவைச்சால் தப்பாது கவனம்.😲

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அவர்கள் மப்டி பொலிஸ் அண்ணை!

ரகசியக் காவலர்களையும் எதற்காகப் பரகசியப் படுத்துகிறார்கள் ......... அவ்வளவு படத்துக்கு முகம் காட்டும் ஆசையா ....... ! 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Paanch said:

சும்மா சும்மா சாவகச்சேரியை கிண்டலடிக்கக் கூடாது கண்டியளோ உறவுகளே!

பிறகென்ன உங்கை எல்லாரும் சாவகச்சேரிய தங்கம் விளையுற பூமி எண்டுறாங்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் எவ்வளவு காலமாக யாழிலும் முகநூலிலும் கொடி கட்டிப் பறக்கிறன். ஆகக் கூடியது வடை பிளேன் ரீக்கு மேல ஒன்றையும் காணோம்....🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, விசுகு said:

நானும் எவ்வளவு காலமாக யாழிலும் முகநூலிலும் கொடி கட்டிப் பறக்கிறன். ஆகக் கூடியது வடை பிளேன் ரீக்கு மேல ஒன்றையும் காணோம்....🤣

என்ன விசுகர்! இப்பிடியான சித்திரங்கள் உங்கள் பெயரில் வரணுமா? 😂

jz.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.