Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!  

சிறிலங்காப் பேரினவாத அரசு தமிழீழ மண்ணையும் மக்களையும் அடக்குமுறைக்குள்ளாக்கி, தமிழின அழிப்பைத் தொடர்ந்தமையால், அதற்கெதிராக வீறுகொண்டெழுந்த எரிமலை வெடிப்பே தமிழீழ விடுதலைப்போராட்டமாகும். உலகின் அசைவியக்கத்தில் சுயமாக உருவாகிய எதனையும் எவரும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த பேராண்மையை, தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளே உள்வாங்கிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், இயல்பாகவே உருவாகிய தலைவர்! இவர், உருவாக்கப்பட்டவர் அல்ல! தமிழினத்தின் வழிகாட்டியும் தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும் இவரே. இந்த ஒப்புவமையற்ற எமது தேசியத்தலைவரை வீரச்சாவு என அறிவித்து, விளக்கேற்றி, தமிழீழக் கோட்பாட்டிற்குச் சாவுமணி அடிக்கவேண்டுமென்ற அறிவிப்பின் ஊடாக, தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை  வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை, தமிழினம் இழந்துவிட்டது என தமிழ்மக்களின் ஆழ்மனங்களில் பேரிடியாக இறக்கி, அவர்களின் உளவுரணைச் சிதைத்தழிக்க வேண்டுமென்பதே எதிரிகளின் திட்டமாகும். இதற்குச் செயல்வடிவம் கொடுக்கச் சில குழுக்கள் களமிறக்கப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி, எதிரிகளின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்கான நாளாக ஆகஸ்து 2 இனை, தெரிவுசெய்து அறிவிப்புச்செய்துள்ளனர்.  

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்இ உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை சிறிலங்காவும் எம்மை அழிக்க நினைக்கும் வல்லரசுகளும் பலவிதமானப் புலனாய்வுச்சதிவலைப்பின்னல்களை உருவாக்கியே வந்திருக்கிறார்கள். ஆனால், தேசியத்தலைவரின் தீர்க்கதரிசனத்தின் முன்னே அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. துரோகத்தனங்கள் யாவும் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன. எமது தலைமையின் நிதானமான துணிச்சலான போராட்ட நகர்வுகள், எதிரிகளையும் துரோகிகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் திக்கித் திணறவைத்திருந்தன. 2009 மே 18 உடன், விடுதலைப்புலிகளின் சரித்திரம் முடிந்துவிட்டது என சிறிலங்காவும் பிராந்திய வல்லரசும் ஏகாதிபத்தியமும் பகற்கனவுகள் கண்டன. ஆனால், முள்ளிவாய்க்கால் ஆயுத மெளனிப்பிற்குப் பின்னரும் தமிழீழம் என்ற கோட்பாட்டை இவர்களால் சிதைக்க முடியவில்லை. தொடர்ந்தும், தமிழர்கள் எவ்வாறு பலமாக ஒருங்கிணைந்து போராடுகிறார்கள், இவர்களின் பலம் எது எனப் பகுப்பாய்வு செய்தபோது, மேதகு வே.பிரபாகரன் என்னும் ஒற்றைச் சொல்தான் தமிழர்களின் மாபெரும் உந்துசக்தி என இவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள். எனவே, தமிழீழம் என்ற கோட்பாட்டைச் சிதைத்து அழிக்கவேண்டுமாயின்இ எங்கள் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் என்னும் தமிழீழ விடுதலைக்கவசத்தை முதலில் அழிக்கவேண்டும். மேதகு வே.பிரபாகரன் என்னும் மாபெரும் பலம், மக்கள் மனதிலிருந்து அகற்றப்பட்டால், தமிழீழம் என்னும் இலக்கு நோக்கிய பயணம் தகர்ந்துவிடும். இதுவே, தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழிக்க அவர்கள் தீட்டிய திட்டமாகும். இதன்படியே, கடந்த மூன்று ஆண்டுகளாக எதிரும்புதிருமாக இரு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.  

• ஒன்று தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றார். 

• இரண்டாவது, அவர் 2009 மே 17, 18,19 ஆகிய நாட்களில் வீரச்சாவடைந்துவிட்டார் என்ற அறிவித்தல்கள் வெளியிடப்படுகின்றன.  

இதில் வேதனையான விடயம் என்னவென்றால், யாரை எதிர்த்து நாம் போரிட்டோமோ, அந்த சிங்கள இராணுவத்தளபதிகளை மேற்கோள்காட்டி, இன அழிப்புக் குற்றவாளிகளின் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு, எமது தேசியத்தலைவருக்கு "விளக்கேற்றி", வீரவணக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அதில், மே 17, 18, 19 என தெளிவில்லாமல் சிறு குழுக்களால் வீரச்சாவு நாட்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆகஸ்து 2ம் நாள்தான் வணக்க நிகழ்வு என அறிவித்துள்ளார்கள். ஆனால், சிங்கள இராணுவத்தளபதி கமால் குணரட்ணவின் " Road to nanthikkadal " என்னும் நூலினை ஆதாரமாக வைத்து, மே 18 என முடிவு எடுத்துள்ளனர். இதற்கு, தேசியத்தலைவர் உயிரோடு இருக்கிறார் என்னும் பொய்ப்பரப்புரையை நிறுத்த வேண்டுமாயின் வீரவணக்க நிகழ்வைச் செய்தேயாக வேண்டுமெனவும் இதன் ஏற்பாட்டாளர்கள் நியாயப்படுத்துவதானது அர்த்தமற்றதாகும். 

அன்பிற்குரிய தமிழீழ மக்களே! இரு குழல் துப்பாக்கியின் இலக்கு ஒன்றுதான்.  

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைதான், 2009 மே 18 ஆயுத மெளனிப்பிற்குப் பின்னரும் தமிழீழத் தாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தை வழிநடாத்துகின்றது, என்பதை எதிரிகள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். எனவே, தமிழர்களின் மனங்களிலிருந்து, அந்த வாழும் தமிழீழ விடுதலைச் சித்தாந்தத்தைத் துடைத்து அழிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, தேசியத்தலைவர் இருக்கிறார், அவர் இல்லை என்ற இரண்டு நாசகார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. "விழிப்பே விடுதலையின் முதற்படி" என்னும் தேசியத்தலைவரின் சிந்தனையின் வழியில், தமிழினம் இவ்விரு சவால்களையும் எதிர்கொண்டு, மாவீரர்களின் சக்தியின் துணைகொண்டு மீண்டுவரும். எமது தேசியத்தலைவரின் சிந்தனையானது எமைத்தொடர்ந்தும் வழிநடத்தும். எனவே, தமிழின விடுதலைச் சிந்தனையினைக் குழிதோண்டிப் புதைக்கநினைக்கும் நாசகாரச் சக்திகளினால், ஆகஸ்து 2ஆம் நாளில் சுவிற்சர்லாந்தில் திட்டமிடப்பட்டுள்ள "விளக்கேற்றல்" நிகழ்வினை உறுதியோடு புறக்கணிப்போம்.  

பேரன்புமிக்க எமது மக்களே!  

காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை, நாம் கண்டறிந்துஇ முறியடித்து வருகின்றோம். எனவே, தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படும் உண்மைக்குப் புறம்பான கதையாடல்களைப் புறந்தள்ளி, விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.  

தமிழீழத் தேசியத்தலைவர் என்னும் பேராளுமைச் சிந்தனையின் வழிகாட்டலில், தமிழீழ விடுதலையை நோக்கித் தொடர்ந்தும் பயணிப்போம். அது, எந்நிலையிலும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களில் அகப்படமாட்டாது. எனவே, தமிழினத்தை அழிப்பதற்கான எதிரிகளின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்காமல், மாவீரர்கள் காட்டிய வழித்தடத்தில்,  தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் ஒளிரும் சிந்தனைப் பாதையில் உறுதியுடன் வழிநடந்து, தமிழீழ விடுதலை நோக்கித் தொடர்ந்தும் போராடுவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக!  

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

அனைத்துலகத் தொடர்பகம், 

தமிழீழ விடுதலைப் புலிகள்.  

QZF2VYGIZIKwofduS3De.jpg

zdA38VbXnVSaC1FvLqM4.jpg

https://www.thaarakam.com/news/f0f42314-88cc-4b93-946b-a623da5dec8a

  • Replies 52
  • Views 3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    மாவீரர் நாளினை அனுஷ்ட்டிப்பதை அரசு நேரடியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், போரில் கொல்லப்பட்டவர்களை உறவினர்கள் நினைவுகூர்வதைத் தாம் தடுக்கப்போவதில்லை என்றே கூறுகிறது. போரில் கொல்லப்பட்டவர்கள் என்று கூறும்போ

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தலைவருக்கு வீரவணக்கம் செய்வது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அவர் இப்போது உயிருடன் இல்லை. நானும் புலிகள் தொடர்பில் எழுதத்தொடங்கிய போது - ஆவணங்களில் - 2021ம் ஆண்டு அதைத்தான் எழுதினேன். கோராவில்

  • Justin
    Justin

    கடந்த ஆண்டு மாவீரர் தினத்தில் இருந்தே சில இடங்களில் பிரபாகரன் படமும் வைக்கப் பட்டு அஞ்சலி செய்யப் படும் வழமை ஏற்பட்டிருக்கிறது. பிரபாகரனையும் மாவீரர்களோடு சேர்த்து கௌரவிப்பது தான் முறையாக இருக்கும். அ

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்ல வாறியல் 😡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

தமிழீழ விடுதலையை நோக்கித் தொடர்ந்தும் பயணிப்போம்

இப்பவும் நம்பிக்கை தளராமல் நாலு பேர் இருக்கின்றார்கள் போலிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, கிருபன் said:

தமிழீழ விடுதலையை நோக்கித் தொடர்ந்தும் பயணிப்போம்

இப்பவும் நம்பிக்கை தளராமல் நாலு பேர் இருக்கின்றார்கள் போலிருக்கு

இப்படிக்கு

இந்திய புலனாய்வு.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆண்டு மாவீரர் தினத்தில் இருந்தே சில இடங்களில் பிரபாகரன் படமும் வைக்கப் பட்டு அஞ்சலி செய்யப் படும் வழமை ஏற்பட்டிருக்கிறது. பிரபாகரனையும் மாவீரர்களோடு சேர்த்து கௌரவிப்பது தான் முறையாக இருக்கும். அது தான் அவரது விருப்பமாகவும் இருந்திருக்கும் என அவர் வாழ்ந்த கால எழுத்துக்கள்/பேட்டிகளில் இருந்து ஊகிக்கிறேன். இப்படியான பின்னணியில், ஏன் தனியாக ஒரு நினைவுகூரல் வைக்கிறார்கள் என்று வலுவான விளக்கங்கள் இதை நடத்துவோரிடம் இருந்து இல்லை.

இப்படிக் குழப்பங்கள் இருக்கும் போது, ஆகஸ்ட் 2 நிகழ்வுக்கு ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் பெருவாரியாகப் போகா விட்டால் என்ன வியாக்கியானம் கொடுக்கப் படும்? பிரபாகரனை மக்கள் மறந்து விட்டனர் என்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தன் said:

இப்ப என்ன சொல்ல வாறியல் 😡

வணக்கம் செலுத்துபவர்களிடமும் சரி

செலுத்த வேண்டாம் என்று சொல்பவர்களிடமும் சரி

இருக்கிறார் என்று சொல்பவர்களிடமும் சரி

இல்லை என்று சொல்பவர்களிடமும் சரி

நிரூபிக்க தகுந்த எந்த ஆதாரமும் இல்லை.

எனவே கண்டதை சொல்லி மக்களை ஏமாற்றாமல் மக்களின் தெரிவு எதுவோ அவர் அதுவாகவே இருக்கட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

பிரபாகரனின் இறந்த உடலின் காணொளி மட்டும் தான் "ஆதாரம்" என்ற வகைக்குள் வருகிறது எனக் கருதுகிறேன். எனவே எந்த ஆதாரமும் இல்லை என்பது சரியல்ல. அந்தக் காணொளியில் இருப்பதை நம்ப மறுப்பவர்கள் இருக்கலாம், ஆனால் அது தான் முடிவு செய்ய உதவியாக இருக்கும் ஒரே ஆதாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் உள்ள முன்னாள் போராளிகள் எல்லோரும் வீரச்சாவை உறுதிசெய்கின்றனர். ஆனால்இறுதி நேரத்தில் தலைவரை விட்டு வந்த விட்டோடிகள்மட்டும் வயிறு வளர்க்க

பல முயற்சிகளில்.....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அது ஒரு ஆதாரம் என்பதிலிருந்து தொடங்கலாமே தவிர அதனூடான கேள்விகள் சந்தேகங்கள் மற்றும் சாட்சியங்கள் இதுவரை இல்லை இனியும் கிடைக்கப்போவதுமில்லை.

ஆகையால் இப்போது தொடங்கப்பட்டவை அனைத்தும் இனி பைலை மூடுவோம் என்பதற்கானது மட்டுமே.

என்னைப் பொறுத்தவரை மூடுவதாலோ மூடாமல் விடுவதாலோ எதுவும் மாறப் போவதில்லை. கடவுளாக்கி மக்கள் தொழுவது தொடரும். அதில் நானும் ஒருவன்.

இத்தனைக்கும் தனது உடலை மக்கள் பார்க்கவேண்டும் என்ற தலைவரின் தீர்க்க தரிசனத்தை உணர்ந்தவனான போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருந்திருந்தால் இப்ப அவருக்கு 71 வயதாகி இருக்கும்.

இலங்கையில் ஆண்களின் சராசரி ஆயுள் 73.

அவரோ சுகர் வருத்தகாரன். கட்டுப்பாட்டிலும் இருக்கவில்லை என்பார்கள்.

2009 இல் தப்பி இருந்தால் கூட அவர் இப்போ இயற்கை மரணம் எய்தி இருப்பார்.

இன்னும் இதை வைத்து வண்டி ஓட்டாமல் - நடக்கிற காரியத்தை பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நந்தன் said:

ஊரில் உள்ள முன்னாள் போராளிகள் எல்லோரும் வீரச்சாவை உறுதிசெய்கின்றனர். ஆனால்இறுதி நேரத்தில் தலைவரை விட்டு வந்த விட்டோடிகள்மட்டும் வயிறு வளர்க்க

பல முயற்சிகளில்.....

அப்படியானால் அங்கே இருந்து தான் தலைவருக்கான அஞ்சலி தொடங்கி இருக்கவேண்டும். ஏன் இதுவரை எவருமே தாயகத்தில் அதை செய்யவில்லை...?

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2025 at 13:29, கிருபன் said:

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!  

சிறிலங்காப் பேரினவாத அரசு தமிழீழ மண்ணையும் மக்களையும் அடக்குமுறைக்குள்ளாக்கி, தமிழின அழிப்பைத் தொடர்ந்தமையால், அதற்கெதிராக வீறுகொண்டெழுந்த எரிமலை வெடிப்பே தமிழீழ விடுதலைப்போராட்டமாகும். உலகின் அசைவியக்கத்தில் சுயமாக உருவாகிய எதனையும் எவரும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த பேராண்மையை, தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளே உள்வாங்கிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், இயல்பாகவே உருவாகிய தலைவர்! இவர், உருவாக்கப்பட்டவர் அல்ல! தமிழினத்தின் வழிகாட்டியும் தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும் இவரே. இந்த ஒப்புவமையற்ற எமது தேசியத்தலைவரை வீரச்சாவு என அறிவித்து, விளக்கேற்றி, தமிழீழக் கோட்பாட்டிற்குச் சாவுமணி அடிக்கவேண்டுமென்ற அறிவிப்பின் ஊடாக, தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை  வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை, தமிழினம் இழந்துவிட்டது என தமிழ்மக்களின் ஆழ்மனங்களில் பேரிடியாக இறக்கி, அவர்களின் உளவுரணைச் சிதைத்தழிக்க வேண்டுமென்பதே எதிரிகளின் திட்டமாகும். இதற்குச் செயல்வடிவம் கொடுக்கச் சில குழுக்கள் களமிறக்கப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி, எதிரிகளின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்கான நாளாக ஆகஸ்து 2 இனை, தெரிவுசெய்து அறிவிப்புச்செய்துள்ளனர்.  

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்இ உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை சிறிலங்காவும் எம்மை அழிக்க நினைக்கும் வல்லரசுகளும் பலவிதமானப் புலனாய்வுச்சதிவலைப்பின்னல்களை உருவாக்கியே வந்திருக்கிறார்கள். ஆனால், தேசியத்தலைவரின் தீர்க்கதரிசனத்தின் முன்னே அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. துரோகத்தனங்கள் யாவும் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன. எமது தலைமையின் நிதானமான துணிச்சலான போராட்ட நகர்வுகள், எதிரிகளையும் துரோகிகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் திக்கித் திணறவைத்திருந்தன. 2009 மே 18 உடன், விடுதலைப்புலிகளின் சரித்திரம் முடிந்துவிட்டது என சிறிலங்காவும் பிராந்திய வல்லரசும் ஏகாதிபத்தியமும் பகற்கனவுகள் கண்டன. ஆனால், முள்ளிவாய்க்கால் ஆயுத மெளனிப்பிற்குப் பின்னரும் தமிழீழம் என்ற கோட்பாட்டை இவர்களால் சிதைக்க முடியவில்லை. தொடர்ந்தும், தமிழர்கள் எவ்வாறு பலமாக ஒருங்கிணைந்து போராடுகிறார்கள், இவர்களின் பலம் எது எனப் பகுப்பாய்வு செய்தபோது, மேதகு வே.பிரபாகரன் என்னும் ஒற்றைச் சொல்தான் தமிழர்களின் மாபெரும் உந்துசக்தி என இவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள். எனவே, தமிழீழம் என்ற கோட்பாட்டைச் சிதைத்து அழிக்கவேண்டுமாயின்இ எங்கள் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் என்னும் தமிழீழ விடுதலைக்கவசத்தை முதலில் அழிக்கவேண்டும். மேதகு வே.பிரபாகரன் என்னும் மாபெரும் பலம், மக்கள் மனதிலிருந்து அகற்றப்பட்டால், தமிழீழம் என்னும் இலக்கு நோக்கிய பயணம் தகர்ந்துவிடும். இதுவே, தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழிக்க அவர்கள் தீட்டிய திட்டமாகும். இதன்படியே, கடந்த மூன்று ஆண்டுகளாக எதிரும்புதிருமாக இரு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.  

• ஒன்று தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றார். 

• இரண்டாவது, அவர் 2009 மே 17, 18,19 ஆகிய நாட்களில் வீரச்சாவடைந்துவிட்டார் என்ற அறிவித்தல்கள் வெளியிடப்படுகின்றன.  

இதில் வேதனையான விடயம் என்னவென்றால், யாரை எதிர்த்து நாம் போரிட்டோமோ, அந்த சிங்கள இராணுவத்தளபதிகளை மேற்கோள்காட்டி, இன அழிப்புக் குற்றவாளிகளின் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு, எமது தேசியத்தலைவருக்கு "விளக்கேற்றி", வீரவணக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அதில், மே 17, 18, 19 என தெளிவில்லாமல் சிறு குழுக்களால் வீரச்சாவு நாட்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆகஸ்து 2ம் நாள்தான் வணக்க நிகழ்வு என அறிவித்துள்ளார்கள். ஆனால், சிங்கள இராணுவத்தளபதி கமால் குணரட்ணவின் " Road to nanthikkadal " என்னும் நூலினை ஆதாரமாக வைத்து, மே 18 என முடிவு எடுத்துள்ளனர். இதற்கு, தேசியத்தலைவர் உயிரோடு இருக்கிறார் என்னும் பொய்ப்பரப்புரையை நிறுத்த வேண்டுமாயின் வீரவணக்க நிகழ்வைச் செய்தேயாக வேண்டுமெனவும் இதன் ஏற்பாட்டாளர்கள் நியாயப்படுத்துவதானது அர்த்தமற்றதாகும். 

அன்பிற்குரிய தமிழீழ மக்களே! இரு குழல் துப்பாக்கியின் இலக்கு ஒன்றுதான்.  

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைதான், 2009 மே 18 ஆயுத மெளனிப்பிற்குப் பின்னரும் தமிழீழத் தாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தை வழிநடாத்துகின்றது, என்பதை எதிரிகள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். எனவே, தமிழர்களின் மனங்களிலிருந்து, அந்த வாழும் தமிழீழ விடுதலைச் சித்தாந்தத்தைத் துடைத்து அழிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, தேசியத்தலைவர் இருக்கிறார், அவர் இல்லை என்ற இரண்டு நாசகார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. "விழிப்பே விடுதலையின் முதற்படி" என்னும் தேசியத்தலைவரின் சிந்தனையின் வழியில், தமிழினம் இவ்விரு சவால்களையும் எதிர்கொண்டு, மாவீரர்களின் சக்தியின் துணைகொண்டு மீண்டுவரும். எமது தேசியத்தலைவரின் சிந்தனையானது எமைத்தொடர்ந்தும் வழிநடத்தும். எனவே, தமிழின விடுதலைச் சிந்தனையினைக் குழிதோண்டிப் புதைக்கநினைக்கும் நாசகாரச் சக்திகளினால், ஆகஸ்து 2ஆம் நாளில் சுவிற்சர்லாந்தில் திட்டமிடப்பட்டுள்ள "விளக்கேற்றல்" நிகழ்வினை உறுதியோடு புறக்கணிப்போம்.  

பேரன்புமிக்க எமது மக்களே!  

காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை, நாம் கண்டறிந்துஇ முறியடித்து வருகின்றோம். எனவே, தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படும் உண்மைக்குப் புறம்பான கதையாடல்களைப் புறந்தள்ளி, விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.  

தமிழீழத் தேசியத்தலைவர் என்னும் பேராளுமைச் சிந்தனையின் வழிகாட்டலில், தமிழீழ விடுதலையை நோக்கித் தொடர்ந்தும் பயணிப்போம். அது, எந்நிலையிலும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களில் அகப்படமாட்டாது. எனவே, தமிழினத்தை அழிப்பதற்கான எதிரிகளின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்காமல், மாவீரர்கள் காட்டிய வழித்தடத்தில்,  தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் ஒளிரும் சிந்தனைப் பாதையில் உறுதியுடன் வழிநடந்து, தமிழீழ விடுதலை நோக்கித் தொடர்ந்தும் போராடுவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக!  

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

அனைத்துலகத் தொடர்பகம், 

தமிழீழ விடுதலைப் புலிகள்.  

QZF2VYGIZIKwofduS3De.jpg

zdA38VbXnVSaC1FvLqM4.jpg

https://www.thaarakam.com/news/f0f42314-88cc-4b93-946b-a623da5dec8a

இவர்களை நம்ப முடியா எல்லோருக்கும் தெரிந்த விடயம் ,
AUG -2 நினைவுநாள் கொண்டாட வேண்டிய தேவை என்ன அப்பிடி என்ன அவசரம் மற்ற கோஷ்டியினருக்கு
இப்போதும் இந்த அறிக்கைகளினை இவர்களின் பேரில் வெளியிடுவார் அந்த பத்திரிகையாளர் தானா

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஒன்றயும் ஆரம்பிப்பது இல்லை. தமிழ் அரசியல் செய்பவர்கள் ஒன்ற தொடங்கினால் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அதில் கலந்து கொள்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மே 18 இனவழிப்பு தினம் அல்ல அது தலைவர் பிரபாகரன் மறைந்த நாள்(புலிகள் இயக்க பயங்கரவாத தலைவ்ர் பிரபாகர்ன் மறைந்த நாள் என உலகமக்களுக்கு பிரச்சாரம் செய்ய புலனாய்வு சக்திகள் செயல் ப்டுகின்றனர்...)

ஒரு ஜனநாயக நாட்டுக்கு. இனவழிப்பு என்ற பலிசொல் இருப்பதை அந்த நாட்டின் அதிகார வர்க்கம் விரும்பாது அது ஒர் நீண்ட நாள் கறையாக அந்த நாட்டுக்கு இருக்கும் எனவே இது ஒர் தொடர்கதை...

காளிஸ்தான் போராளிகளை கனடா வரை துரத்தி துரத்தி இந்தியா அழிக்க முயற்ச்கின்றனர்...ஆனால் அவர்கள் இன்றும் செயல்படுகின்றனர்...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

சிரிப்பதா ..அழுவதா என்று தெரியவில்லை ...சுவிசு .வி.பு .அமைப்பு தலைவராம்...ரகுபதி என்பவரி ன் செய்தியில் நான் இப்பதான் தலைவருடன் கதைத்துவிட்டு வருகிறேன் என்று ..அவிழ்த்து விடுகிறார்...என்ன நடக்குது புத்தன் சார்

  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2025 at 06:51, விசுகு said:

அப்படியானால் அங்கே இருந்து தான் தலைவருக்கான அஞ்சலி தொடங்கி இருக்கவேண்டும். ஏன் இதுவரை எவருமே தாயகத்தில் அதை செய்யவில்லை...?

என்னுடைய இந்த கேள்விக்கு ஏன் எவரிடமும் இருந்து பதில் வரவில்லை.......????

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

என்னுடைய இந்த கேள்விக்கு ஏன் எவரிடமும் இருந்து பதில் வரவில்லை.......????

உங்களுக்குப் பதில் தெரியும் என்பதால் யாரும் சொல்லாமல் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

முகநூலில் புலிகளின் இலச்சினையையோ, அல்லது பிரபாகரன் படத்தையோ பகிர்ந்தாலே அவர்களை விசாரணைக்கு அழைக்கும் நிலை இருக்கும் இலங்கையில், பிரபாகரனுக்கு மௌனமாகத் தான் வீர வணக்கம் செலுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும், ஆயுத மோதலில் அல்லாமல் உண்ணாவிரதம் இருந்து மாண்ட திலீபனை நினைவு கூர்வதற்குக் கூட அங்கே நீதிமன்றம் ஏறி இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்த நிலையில் சாதாரணமாக வாழ முயலும் தாயக மக்கள் பிரபாகனுக்கு வெளிப்படையாக அஞ்சலி செலுத்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

இது வெறும் புரட்டு மட்டுமே. மக்கள் எழுச்சியுடன் மாவீரர் நாள் மற்றும் எழுச்சி நினைவுரைகள் தாராளமாகவே நடைபெறும் தாயகத்தில் ஏனைய மாவீரர்கள் மற்றும் தளபதிகள் போன்று பிரபாகரனுக்கும் அஞ்சலி என்பது சாதாரணமாக கடந்து போகக்கூடியதே. பாராளுமன்றத்திலேயே பிரபாகரன் பற்றி பலமுறை பலமணி நேரம் பேசமுடிகிறது என்றால் கொல்லப் பட்டுவிட்டார் என்று அரசாலேயே அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவது எப்படி குற்றமாகும்?????

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

இது வெறும் புரட்டு மட்டுமே. மக்கள் எழுச்சியுடன் மாவீரர் நாள் மற்றும் எழுச்சி நினைவுரைகள் தாராளமாகவே நடைபெறும் தாயகத்தில் ஏனைய மாவீரர்கள் மற்றும் தளபதிகள் போன்று பிரபாகரனுக்கும் அஞ்சலி என்பது சாதாரணமாக கடந்து போகக்கூடியதே. பாராளுமன்றத்திலேயே பிரபாகரன் பற்றி பலமுறை மனபேசமுடிகிறது என்றால் கொல்லப் பட்டுவிட்டார் என்று அரசாலேயே அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவது எப்படி குற்றமாகும்?????

இந்தக் கருத்து, சில புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் இருந்து எவ்வளவு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறார்கள் என்பதை அப்படியே அச்சொட்டாகக் காட்டும் கருத்து என நினைக்கிறேன்😂.

ரணிலும், பின்னர் வந்த என்.பி.பியும் மாவீரர் தினத்தை "தமிழ் குடும்பங்கள் தங்கள் குடும்பத்தில் இறந்த உறவுகளை நினைவு கூரும் நிகழ்வு, எனவே தடுக்க மாட்டோம்" என்று உயர் மட்டத்தில் தீர்மானித்து, வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்கள். கீழ் மட்டத்தில் உள்ளூர் பொலிஸ் இதை விடக் கடுமையாக நடந்து கொள்வதும், தடுக்க முனைவதும் வருடாந்தம் செய்திகளில் வருகிறது.

இலங்கையில் அடுத்த முறை இப்படி ஒரு கேஸ் நீதிமன்றில் வரும் பொழுது இந்த உரையாடலை நினைவு படுத்த முடிகிறதா எனப் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

நீங்கள் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறீர்கள். அங்கே நடக்கும் மாவீரர் நாளும் சரி மற்றும் நினைவு எழுச்சி நினைவுகளும் சரி அசலான புலிகளின் நிறம் மற்றும் பாணியிலேயே நடைபெறுகின்றன. என்னதான் அரசு இவற்றை எச்சரித்த போதும்....

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

நீங்கள் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறீர்கள். அங்கே நடக்கும் மாவீரர் நாளும் சரி மற்றும் நினைவு எழுச்சி நினைவுகளும் சரி அசலான புலிகளின் நிறம் மற்றும் பாணியிலேயே நடைபெறுகின்றன. என்னதான் அரசு இவற்றை எச்சரித்த போதும்....

ஓம்!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

இது வெறும் புரட்டு மட்டுமே. மக்கள் எழுச்சியுடன் மாவீரர் நாள் மற்றும் எழுச்சி நினைவுரைகள் தாராளமாகவே நடைபெறும் தாயகத்தில் ஏனைய மாவீரர்கள் மற்றும் தளபதிகள் போன்று பிரபாகரனுக்கும் அஞ்சலி என்பது சாதாரணமாக கடந்து போகக்கூடியதே. பாராளுமன்றத்திலேயே பிரபாகரன் பற்றி பலமுறை பலமணி நேரம் பேசமுடிகிறது என்றால் கொல்லப் பட்டுவிட்டார் என்று அரசாலேயே அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவது எப்படி குற்றமாகும்?????

எந்த உலகத்தில இருக்கிறியள், அவர்கள் புலிகளை நினைவு கூற முடியும் என்று எங்கேயுமே சொல்லவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2025 at 03:11, victhanan said:

எந்த உலகத்தில இருக்கிறியள், அவர்கள் புலிகளை நினைவு கூற முடியும் என்று எங்கேயுமே சொல்லவில்லை

அப்படியா?

பாராளுமன்ற மன்றத்தில் நான் பிரபாகரனின் ஆள் என்றும் நான் பிரபாகரனின் வீரத் தமிழன் என்றும் பேசமுடியும் என்றால் பிரபாகரனுக்கு அஞ்சலி என்றால் சிறை என்பது உங்கள் கற்பனை மட்டுமே.

பிரபாகரனைப்போல மாவீரர் நாளில் விளக்கேற்றி மாவீரர் நாள் பாடலுக்கு அஞ்சலி செய்யமுடியும் தேசத்தில் பிரபாகரனுக்கும் அஞ்சலி என்பது சிறை தண்டனை என்பதும் உங்கள் கற்பனை மட்டுமே.

உண்மையில் உண்மையை தரிசிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை என்பது மட்டுமே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளினை அனுஷ்ட்டிப்பதை அரசு நேரடியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், போரில் கொல்லப்பட்டவர்களை உறவினர்கள் நினைவுகூர்வதைத் தாம் தடுக்கப்போவதில்லை என்றே கூறுகிறது. போரில் கொல்லப்பட்டவர்கள் என்று கூறும்போது பொதுமக்கள், போராளிகள் என்று அனைவரும் உள்ளடக்கப்படுவார்கள் என்பதை அரசு தெரிந்தே வைத்திருக்கிறது.

தலைவரின் மறைவு குறித்த தெளிவான, தீர்க்கமான வெளிப்படுத்தலினை சிங்கள அரசைத் தவிர வேறு எவருமே இதுவரை செய்யத் தவறியிருக்கும் நிலையில் அவருக்கான அஞ்சலியினைச் செலுத்துவது குறித்த தயக்கம் தமிழ் மக்களிடையே இருந்து வருகிறது. இது அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று நம்பும் அல்லது அவ்வாறு எண்ண விரும்பும் ஒரு தரப்பினரிடையே இருந்துவரும் அழுத்தங்களினால் ஏனைய தரப்புக்கள் இதுகுறித்து எதுவும் பேசாது மெளனமாகக் கடந்து செல்வது நடக்கிறதாகவே நான் எண்ணுகிறேன்.

தாயகத்தில் தலைவரின் உருவப்படம் வைப்பதற்கு இருக்கும் அரச எதிர்ப்பு என்பது சாதாரண போராளி ஒருவரின் மறைவினை நினைவுபடுத்த வைக்கப்படும் ஒளிப்படத்திற்கு நிகரானது என்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தலைவரின் திருவுருவப் படத்தினை தாயகத்தில் எவர் வைத்து வணக்கம் செலுத்தினாலும் நிச்சயமாக அரசு அவர்மீது தனது கவனத்தைத் திருப்பும். தலைவர் வாழ்ந்த வீட்டினை முற்றாக இடித்தழித்து, அவரது வாழ்வுகுறித்த சிறிய அடையாளங்கள் கூட தாயகத்தில் இருக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அரசு, அவரது திருவுருவப் படத்தினை வெளிப்படையாகவே வைத்து கெள‌ரவிக்க அனுமதியளிக்கப்போவதில்லை என்பது திண்ணம். ஆகவேதான் தாயகத்தில் இதுகுறித்த முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் புலத்திலோ அவ்வாறான அரச அழுத்தங்கள் இல்லாதபோதிலும், நான் மேலே கூறிய அவர் இருக்கிறார் என்று நம்பும், நம்ப ஆசைப்படும் ஒரு தரப்பினரிடமிருந்து வரும் எதிர்ப்பும், அவரது மறைவினை வெளிப்படுத்துவதினால் தனிப்பட்ட நலன்கள் பாதிக்கப்படும் என்று அச்சப்படும் ஒரு குழுவினரும் இதனை வெளிப்படையாக அனுஷ்ட்டிப்பதை எதிர்க்கிறார்கள்.

தனிப்பட்ட ரீதியில் தலைவருக்கான அஞ்சலியினை ஒவ்வொரு தமிழரும் தமது மனதில் செய்தாலே போதுமானது என்று நான் எண்ணுகிறேன். அவர் எப்போதும் எமது மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார். அவரை நினைவுகூர நாம் நாள்ப்பார்ரபதைத் தவிர்த்து முன்னோக்கிச் செல்வதே அவருக்குச் செய்யும் உயர்ந்த கெளரவிப்பாக இருக்கும்.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவருக்கு வீரவணக்கம் செய்வது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அவர் இப்போது உயிருடன் இல்லை. நானும் புலிகள் தொடர்பில் எழுதத்தொடங்கிய போது - ஆவணங்களில் - 2021ம் ஆண்டு அதைத்தான் எழுதினேன். கோராவில் திரு. சாத்திரியாரின் 2011ம் ஆண்டு தலைவர் வீரவணக்க படத்தை பாவித்து செய்தேன். யாழ் எழுத்தாளர் நேசக்கரம் சாந்தி அவர்கள் செய்த நிகழ்விற்கு ஆதரவு நல்கினேன்.

இவர்கள் தலைவரின் வீரவணக்க நிகழ்வை செய்த திகதி பற்றி எனக்கு கவலை இல்லை. செய்ய வேண்டும் - செய்தார்கள். நல்லம்.

எனினும் இவர்கள் செய்த நிகழ்வில் சில செயல்களில் எனக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக மக்களும் போராளிகளும் புனிதமாக பார்க்கும் வரிப்புலியை சிறார்களுக்கு அணிவித்து அதனைக் கொண்டு அணிநடை போட விட்டது மிகவும் இழிவான செயலாகும். அவ்வாறு செய்திருக்கக் கூடாது. வரிப்புலி கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மாவீரர்கள் உயிர்விட்டனர். ஆனால் இவர்களோ அதை இவ்வாறு பாவிப்பது ஏற்க முடியாத செயலாகும்.

அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் திகதி செய்யப்போவதாக அறிவித்திருப்பது உண்மையில் மனமெரிய வைக்கும் செயலாகும். மே 18 என்பது இனப்படுகொலை நாளாகும். அதில் இதைக் கொண்டுவந்து செய்தால் - நாளை அது ஓர் பயங்கரவாதி உயிர்நீத்த நாள் என்று உலக நாடுகளாலும் இந்திய சிங்கள கூட்டுக் களவாணிகளாலும் ஒத்தூதப்படும். பின்னர் அந்நாள் தடை செய்யப்படும். இவர்கள இதை சிந்தித்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை தலைவரும் ஆயிரமாயிரம் மாவீரர்கள் போன்று ஓர் மாவீரர்தான். அதே போன்று தான் தலைவருக்கும் நவ. 27இல் தான் ஆண்டாண்டு வீரவணக்கம் இனி செய்ய வேண்டும். மே 18 இல் செய்தால் அது எல்லாவற்றையும் திசை மாற்றி விடும்.

எனவே மே 18இல் செய்யாமல் நவம் 27இல் ஆண்டுதோறும் செய்வது சாலச் சிறந்தது.

மாறி செய்தால் இந்த இவர்களும்*** புலனாய்வுத்துறைகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவது உறுதியாகிவிடும்.

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.