Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

04 Aug, 2025 | 07:12 PM

image

மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது மன்னார் - மதவாச்சி பிரதான வீதியூடாக  கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மக்கள் திங்கட்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடினர்.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரின் அழைப்பிற்கு இணங்க அருட்தந்தையர்கள், மூர்வீதி ஜும்மா பள்ளி பிரதம மௌலவி, பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடினர்.

இந்த நிலையில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர்  அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் ஆகியோர் சென்று மாவட்ட அரசாங்க அதிபர் கா.கனகேஸ்வரனுடன் கலந்துரையாடினர். இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நிர்வாகம் எம்.பிரதீப் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது தற்போது மன்னார் நகர பகுதியில் சில கிராமங்களில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களுக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை (3) மன்னார் நகருக்குள் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்த காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் மடு பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பொருட்களை மன்னாருக்குள் கொண்டு வர மக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற நிலையில் குறித்த விடயங்கள் குறித்தும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

குறித்த கலந்துரையாடலின் போது குறித்த மின் திட்ட நடவடிக்கைக்கான அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப் பட்டமை தெரியவந்துள்ளது.குறித்த வேலைத்திட்டத்தை அரச அதிகாரிகள் தடுத்து நிறுத்தும் பட்சத்தில் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில்  மேலதிக செலவீனங்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்ற விடையமும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஒன்றுகூடிய மக்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டமையினால் சட்ட ரீதியாக குறித்த விடயத்தை அணுக வேண்டி இருக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக நாங்கள் ஏனைய சட்டத்தரணிகளுடனும் உரையாடி இருக்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பாக எதிர் வரும் புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை வழக்கு ஒன்றை தாக்கல் செய்து சில கட்டளைகளை பெற்றுக்கொள்ள உள்ளோம். எவ்வித ஆவணங்களும் இல்லாமல் உடனடியாக மாவட்ட நீதிமன்றத்தை நாடுகின்ற போது எமக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

எனவே எதிர்வரும் புதன்கிழமை வரை மக்களின் எதிர்ப்பை முன்னெடுக்கவேண்டிய தேவை உள்ளது. குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக நீதி மன்றத்தின் கட்டளையை பெற்றுக் கொள்ளும் வரை எமது நடவடிக்கைகளை தொடர வேண்டும்.

குறித்த திட்டங்களினால் எதிர்கால சந்ததிகள் பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க உள்ளனர்.இந்த நிலையிலே குறித்த விடயம் தொடர்பாக சட்ட ரீதியாக சில நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட ரீதியில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் குறுகிய நேரத்தில் அதனை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலின்போது மன்னாருக்கு வருகை தந்து கூறியிருந்தார். மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை மின் உற்பத்தி திட்டம் முன்னெடுக்கப்படாது என்று குறித்த திட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என கூறி இருந்தார்.

இந்த நிலையிலே குறித்த திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் மக்களின் ஒத்துழைப்பு எமக்கு தேவை என தெரிவித்தார்.

இந்த நிலையில் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடியவர்கள் மன்னார் நகர சுற்று வட்ட பகுதிக்குச் சென்று ஒன்றுகூடினர்.

எதிர்வரும் புதன்கிழமை வரை தொடர்ச்சியாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பை தெரிவிப்பது என்றும் மன்னார் நகருக்குள் குறித்த காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்காக கொண்டு வரும் பொருட்களை நகருக்குள் கொண்டுவர அனுமதிப்பதில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.

மக்களுக்கு ஆதரவாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_2442__1_.JPG

DSC_2435.JPG

DSC_2411.JPG

DSC_2417__1_.JPG

https://www.virakesari.lk/article/221820

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் காற்றாலை கோபுரங்களுக்கு எதிர்ப்பு : இரண்டாவது நாளாக தொடரும் கடையடைப்பு போராட்டம்

Published By: Digital Desk 2

05 Aug, 2025 | 01:57 PM

image

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக நிறுவப்படவுள்ள இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று செவ்வாய்க்கிழமை (05) இரண்டாவது நாளாக முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியூடாக காற்றாலை கோபுரங்களுக்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும், இரண்டாம் கட்ட காற்றாலை திட்டங்களை மன்னாரில்  நிறுவுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தத் திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளாரின் தலைமையில் இந்த அமைதியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் நகரில் உள்ள ஒரு சில உணவகங்களைத் தவிர அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மீனவர்களும் கடலுக்குச் செல்லாமல் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இரண்டாவது நாளாக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் அருட்தந்தையர்கள், பொது அமைப்புகள், சிவில் அமைப்புகள், மீனவ அமைப்புகள், வர்த்தகர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

நேற்று திங்கட்கிழமை ( 04) இரவு, காற்றாலை கோபுரங்களைக் கொண்டுவருவதற்காக மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள வீதிகள் திடீரென புனரமைக்க முயற்சிக்கப்பட்டது. 

ஆனால், மக்களின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக அந்தப் பணிகள் உடனடியாக  இடை நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

DSC_2450.JPGDSC_2468.JPGDSC_2488.JPGDSC_2476.JPGDSC_2453.JPGDSC_2457.JPGDSC_2483.JPG

https://www.virakesari.lk/article/221874

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்காப்பணம் எண்ட கதை போலத்தான் உந்த காற்றாலை திட்டங்களும்.வருவாயை விட செலவுதான் அதிகமாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

download-6.jpg?resize=750%2C375&ssl=1

மன்னாரில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட காற்றாலை பாகங்கள்!

மன்னாரில் மக்களின் கடுமையான  எதிர்ப்பிற்கு  மத்தியில், நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் உற்பத்திக்கான கோபுர பாகங்கள் இன்று  அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை பாகங்களை, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும், பொலிஸாரின்  கடும் பாதுகாப்புடன் நகருக்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 3) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள், குறித்த பாகங்களை நகருக்குள் எடுத்து வரக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தொடர்ச்சியாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் போராட்டங்கள் தொடரப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் மன்னார் பஜார் பகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.

இதேநிலையில்,இன்று அதிகாலை   மக்கள் கண்காணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதும் , பொலிஸாரின் கடும் பாதுகாப்புடன், காற்றாலை பாகங்களை ஏற்றிய வாகனங்கள் நகருக்குள் உள்நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

https://athavannews.com/2025/1442009

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் காற்றாலை அமைத்தல், கனிய மணல் அகழ்வுக்கு எதிராக தொடர் போராட்டம் : பேசாலை கிராம மக்களும் இணைவு

09 AUG, 2025 | 02:46 PM

image

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2வது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (9) 7 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராம மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் தீவு பகுதியில் 2வது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் மன்னார் தள்ளாடி சந்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த  நிலையில் தள்ளாடி சந்தி மற்றும் மன்னார் சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக மக்களும்,பொது அமைப்புக்கள் இணைந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில்,மக்களின் எதிர்ப்பையும் மீறி காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் மன்னார் நகர பகுதிக்கு பலத்த பொலிஸாரின் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது.

எனினும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம் பெற்று வந்தது.இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துகள் மூலம் இன்றைய தினம் சனிக்கிழமை (09) வருகை தந்து குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினர்.

குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் ஏற்கனபேவ அமைக்கப்பட்ட காற்றாலை மின் கோபுரங்களினால் மீனவர்கள் பாரிய அளவில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு,காற்றாலைகள் காணப்படும் பகுதிகளில் வசித்து வருகின்ற மக்கள்,குறிப்பாக வயோதிபர்கள்,சிறுவர்கள்,கர்ப்பிணித்தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் காற்றாலை கோபுரங்கள் அமைத்ததன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பேசாலை கிராமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய வெள்ள நீர் தேங்கிய நிலையில் அவற்றை கடலுக்குள் செலுத்த தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.

மேலும் மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் கணிய மணல் அகழ்வுக்கு நாங்கள் ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் எனவும் மன்னார் தீவை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் குறித்த இரு திட்டங்களையும் நிறுத்த ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து பதாகைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலக பிரதான வீதியூடாக சென்று மீண்டும் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர்.

பின்னர் நகர சுற்றுவட்ட பகுதியில் தமது போராட்டத்தை தொடர்ந்து  முன்னெடுத்து வருகின்றனர்.

DSC_2680.JPG

DSC_2744.JPG

DSC_2723.JPG

DSC_2699.JPG

DSC_2680.JPG

https://www.virakesari.lk/article/222161

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 9ஆம் நாளாகத் தொடர் போராட்டம்: பல்வேறு கிராம மக்கள் ஆதரவு

Published By: DIGITAL DESK 2

11 AUG, 2025 | 04:16 PM

image

மன்னாரில் மக்களின் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் 2வது கட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகிய திட்டங்களுக்கு எதிராக, மன்னார் பஜார் பகுதியில் கடந்த ஒன்பது நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று திங்கட்கிழமை, இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கிராம மக்களும் கலந்துகொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை (11) மன்னார் தீவுப் பகுதியில் 2வது கட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டபோது, தள்ளாடி சந்தியில் மக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதிலிருந்து, தள்ளாடி மற்றும் மன்னார் சுற்றுவட்டப் பகுதிகளில் பொது அமைப்புகள் மற்றும் மக்கள் சுழற்சி முறையில் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, காற்றாலை கோபுரங்களுக்கான பாகங்கள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் நகரத்திற்குள் கொண்டு வரப்பட்டபோதும், மக்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது.

இன்று, கீளியன் குடியிருப்பு, நடுக்குடா, கட்டுக்காரன் குடியிருப்பு, பருத்திப்பன்னை, பாவிலுப்பட்டான் குடியிருப்பு உள்ளிட்ட கிராம மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும், மன்னார் மாவட்ட ஒளிக்கலை ஒன்றியமும் முழுமையான ஆதரவை வழங்கியதோடு, அதன் உறுப்பினர்களும் போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் முழுமையான ஒத்துழைப்புடன், மன்னார் மக்களும் இளைஞர்களும் இரவு பகல் பாராது இந்தப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

DSC_2802.JPG

DSC_2802.JPGDSC_2803.JPGDSC_2860.JPGDSC_2827.JPGDSC_2880.JPGDSC_2875.JPGDSC_2861.JPGDSC_2864.JPG

https://www.virakesari.lk/article/222318

  • கருத்துக்கள உறவுகள்

mannaar-2.jpg?resize=750%2C372&ssl=1

காற்றாலை மின்திட்ட விவகாரம்: மன்னாரில் பதற்றம்.

மன்னாரில் இரண்டாம் கட்டமாக,  நேற்று நள்ளிரவு காற்றாலை மின் திட்டத்திற்கான, காற்றாலை கோபுரங்களுக்கு தேவையான பாகங்கள், பொலிஸார்  மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் நகர் பகுதிக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் மன்னார் பஜார் பகுதியில்  பதட்டமான சூழல் நிலவியது.

குறிப்பாக காற்றாலை கோபுரங்களுக்கு தேவையான பாங்களை ஏற்றிவந்த வாகனங்களுக்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் அப்பகுதியில்  குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. தற்போது குறித்த வாகனம் மன்னார் நீதி மன்ற பிரதான வீதியில் பொலிஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பொது அமைப்பினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளடங்களாக பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் மாவட்ட  பொலிஸார் குறித்த வாகனத்தை மன்னார் நகருக்குள் கொண்டு செல்ல முயற்சித்த போதும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் வாகனம் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த காற்றாலைக்கான உதிரி பாகங்களை ஏற்றிவந்த பாரிய வாகனம் சுமார் 50க்கும் மேற்பட்ட பொலிசாரின் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற பிரதான வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இரண்டு வீதிகளுக்கும் அருகாமையில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1442633

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் கடும் பதற்ற நிலை - குவிக்கபட்டுள்ள பொலிஸார்.!

Vhg ஆகஸ்ட் 12, 2025

AVvXsEhn6pLwe1eQeiXf-zVstI9qzxtBYlkNcj03-b6AMxqLFS4EBAZtKfvx_90dtl8fVsncYlaZbFf959UUNx8cvbzSfQisdYT-qWySInwYiuBIspFNGDx3nSyduck52R8M7ZMkzL51SR4Qyjo0hlO4GXo5pns2jNn6l_WRQu8c_SAYuA-hc0_eGE3bkH_6RaA3

மன்னார் பஜார் பகுதியில் சற்று முன் (செவ்வாய் நள்ளிரவு) பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது.

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் ஏற்றி வரப்பட்டு கொண்டிருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது.

AVvXsEh2nLr9VLIBZS8pPLeUg89KDdQYmqoQhyqALTg-axnNmqMhbfPcpnSc3Fdvg8oIyqUA3vac-tl3OI8_TTkAu2itoxG6qdRdtfogssXT9l_QSksOF80yob9WEj7oFbub5uoei0IMkeUtiuXY8Yir2OXfwf7inmll9v8aeFJYf6pz6CQYyHJp31xi9TM1zHuL

பொலிஸ் பாதுகாப்பு

தற்போது குறித்த வாகனம் மன்னார் நீதி மன்ற பிரதான வீதியில் பொலிஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

மக்கள் பொது அமைப்பினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளடங்களாக பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் சற்று வரை இந்த போராட்டத்தில் இணைந்திருக்கின்றார்கள்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிசார் குறித்த வாகனத்தை மன்னார் நகருக்குள் கொண்டு செல்ல முயற்சித்த போதும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் இந்த வாகனம் கொண்டு செல்ல முடியவில்லை.

தொடர்ந்தும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் குறித்த காற்றாலைக்கான உதிரி பாகங்களை ஏற்றிவந்த பாரிய வாகனம் சுமார் 50க்கும் மேற்பட்ட பொலிசாரின் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற பிரதான வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இரண்டு வீதிகளுக்கும் அருகாமையில் அமைதியாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.battinatham.com/2025/08/blog-post_80.html

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2025 at 13:40, ஏராளன் said:

இந்தத் திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளாரின் தலைமையில் இந்த அமைதியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

காற்றாலை மின் உற்பத்தியினால் அப்படி என்ன சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்பதை மன்னார் மக்களும் , மாக்கஸ் அடிகளாரும் யாழ்களத்தில் விளங்கபடுத்த வேண்டும்

குறைந்தபட்ச CO2 வை உருவாக்கும் காற்றாலை மின்சாரத்தின் பங்கு மேற்குலகநாடுகளில் மின்சார உற்பத்தியில் அதிகமாக அதிகரித்து வருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றாலை, கனிய மணல் அகழ்வு திட்டங்களுக்கு எதிராக மன்னாரில் 10-வது நாளாக தொடர் போராட்டம்

Published By: DIGITAL DESK 2

12 AUG, 2025 | 04:41 PM

image

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்தக் கோரி, மன்னார் மாவட்ட மக்கள், பொது அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தி வரும் போராட்டம் செவ்வாய்க்கிழமை (12) 10-வது நாளாகத் தொடர்கிறது.

இப்போராட்டத்தில் மன்னார் தாழ்வுபாடு கிராம மக்கள் இன்றைய தினம் சுழற்சி முறையில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

நேற்று (11) நள்ளிரவு, காற்றாலை திட்டங்களுக்கான பாரிய உபகரணங்களை, பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் தீவுக்குள் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, உபகரணங்களை ஏற்றி வந்த பார ஊர்தி உள்ளே நுழைய முடியாமல் தடைபட்டது.

இதன்போது, போராட்டக்காரர்களை அச்சுறுத்தி, புகைப்படம் எடுத்து அங்கிருந்து வெளியேற்ற பொலிஸார் முயற்சித்தபோதும், போராட்டக்காரர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக, அந்த வாகனம் மன்னார் நீதிமன்ற வளாகம் முன்பாக நிறுத்தப்பட்டது.

இந்த போராட்டம் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக, மன்னார் பொலிஸார் தடை உத்தரவு பெறுவதற்காக இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். 

இந்த வழக்கில் போராட்டக்காரர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

c66b1b47-0cbe-41a7-9b33-48d8fa8de7a6.jpec66b1b47-0cbe-41a7-9b33-48d8fa8de7a6.jpe89b33f4f-7a62-48fb-a12e-074b1d09440f.jpede42c9ae-9f97-4aad-8dc1-0f51ba32e305.jpe

https://www.virakesari.lk/article/222410

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் சொர்க்கம் இல்லை - காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கு ஆபத்து இல்லை - எரிசக்தி அமைச்சர்

12 AUG, 2025 | 05:00 PM

image

மன்னாரில் காற்றாலை மின்திட்டத்தினால்  பறவைகளிற்கும் இயற்கை சமநிலைக்கும் பாதிப்பு ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் குமாரஜயக்கொடி தெரிவித்துள்ளமைக்கு சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கு ஆபத்து என தெரிவிக்கப்படுவது ஆதாரமற்ற விடயம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நான் அந்த பகுதிக்கு சென்றுள்ளேன் காற்றாலைமின்திட்டத்தினால் பறவைகளிற்கு பாதிப்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை,மன்னார் முதல் பூநகரி வடக்கு முதல் அரசகாணி என தெரிவித்துள்ளார்.

மன்னாரை சில தரப்பினர் ஒரு சொக்கம் எனவும் அது காற்றாலை விசையாழிகளால் அழிக்கப்படலாம் என தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மன்னார் முதல் பூநகரி வடக்கு முதல் காணப்படும் பகுதி ஒரு தரிசு நிலம் மக்கள் பறவைகளை பற்றி பேசுகின்றனர், ஆனால்  அந்த பாதையில் பறவைகள் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கருத்து குறித்து பதிவிட்டுள்ள சூழல் ஆர்வலர் மெலனி குணதிலக மழைக்காலத்தில் புவிவெப்பமடைதல் உண்மையா என அமைச்சரிடம் கேட்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சரின் கருத்து குறித்து பதிவிட்டுள்ள ரெகான்ஜயவிக்கிரம 2025 இல் அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான பதில்களில் இதுவே தலைசிறந்தது என குறிப்பிடலாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Screenshot-2025-08-11-132343.png

https://www.virakesari.lk/article/222424

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் அகதியார் தான் செற்றிலாகிய வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மேற்குலகநாடுகளின் மின்சார உற்பத்தியில் காற்றாலை மின் உற்பத்தி பெரும் பங்கு வகிக்கிறது என்பதோடு அதிகரித்தும் வருகின்றது என்பதை அறியாதவராக இருக்கின்றாரா அல்லது மன்னார் மக்களுக்கு அது எல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறாரா ?

  • கருத்துக்கள உறவுகள்

பசுமை மின்சாரம் = காற்றாலை மின்சாரம்

*******************************************************

காற்றாலை மின்சாரத்தை பசுமை மின்சாரம் அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனவும் அழைக்கின்றனர். ஒப்பீட்டு ரீதியில் சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதிப்பு குறைந்த ஒரு துறையாகும் இது.

ஆனாலும் இதிலும் ஒரு சில பாதிப்புக்கள் உண்டு. இருப்பினும் அந்த பாதிப்பு ஏனைய துறைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்போடு ஒப்பிடும் போது இந்த காற்றாலையால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை ஒரு பாதிப்பாக கருத முடியாது என்கின்றனர் சூழலியலாளர்கள்.

காற்றாலையால் பறவைகள் வனவிலங்களின் வாழ்விடங்களில் மாற்றம். ஒலி மாசுப்படுதல், சூழல் அமைப்பு தோற்றத்தில் மாற்றம் போன்றவற்றை குறிப்பிடலாம் அத்தோடு வலசைப் பறவைகளின் வழிதடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் இந்த பாதிப்புக்கள் எல்லாம் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்தியாவில் கர்நாடகாவில் நடந்த ஆய்வில் காற்றாலையால் பறவைகளுக்கு ஏற்பட்டபாதிப்பு 0.1 வீதம் மட்டுமே என தெரியவந்துள்ளது.

நீர் மின்சாரம், அனல் மின்நிலையங்கள், அணுமின்நிலையங்கள், சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற வழிகளில் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்படுகிறது. இதில் காற்றாலை மின்சாரமே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத துறையாகும்.

உலகில் அபிவிருத்தியில் உச்ச நிலைக்கு சென்ற சென்றுக்கொண்டிருக்கின்ற, அறிவியல்துறையில் வளர்ச்சி அடைந்த நாடுகள் எல்லாம் காற்றாலை மின்சார திட்டத்தையே அதிகம் ஊக்குவித்து வருகின்றன. இந்த திட்டத்தில் உலகில் சீனா முதல் இடத்திலும்,அமெரிக்க இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும், தொடர்ந்து ஜேர்மன், ஸ்பெயின், இங்கிலாந்து, கனடா, அவுஸ்ரேலியா,பிறேசில் என நாடுகள் காணப்படுகின்றன. கடலோர காற்றாலை மின் உற்பத்தியில் பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது.

சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி இப்போது உள்ளது போல ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சியைத் தொடர்ந்து அடைந்து வந்தால் உலக வெப்ப மயமாதலை 1.5 பாகை செல்சியசாக குறைக்கலாம் எனவும் ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.

எனவே எந்த விடயத்தையும் விஞ்ஞானபூர்வமாக, அறிவுபூர்வமாக ஆராயவேண்டும். அதனை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆதாரபூர்வமான தெளிவுப்படுத்த வேண்டும். ( விரிவான கட்டுரை ஒன்றில் சந்திப்போம்)

Murukaiya Thamilselvan

##################### ######################## ######################

மன்னார் ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பறவை இடம்பெயர்வு பாதையாக (migratory bird flyway) இருப்பதால், இலங்கை வனவிலங்கு திணைக்களமும் BirdLife International மும் வெளியிட்ட ஆய்வுகளின்படி, திட்டம் நிறுவப்பட்ட பின்பு சில வலசைப் பறவைகளின் பாதைகள் மாறியுள்ளதாகவும், சிலவற்றின் இடம்பெயர்வு பழக்கங்கள் பாதிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை ஊக்குவிப்பதோடு, அவை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) மற்றும் வனவிலங்கு கண்காணிப்பு திட்டங்கள் போன்றவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும். மன்னார் திட்டத்திற்கான பரிந்துரைகளில் பறவைகள் அதிகம் பறக்கும் காலங்களில் (peak migration season) சில காற்றாலைகளை நிறுத்தி வைக்கும் நடைமுறை மற்றும் பறவைகளின் பறக்கும் உயரத்துக்கு ஏற்ப வடிவமைப்பு மாற்றங்கள் இடம்பெற வேண்டும் .

மன்னார் போன்ற உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில், பசுமை சக்தி மற்றும் உயிரியல் பாதுகாப்பு இரண்டும் சமநிலையில் இருக்க வேண்டும். அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய, வெளிப்படையான திட்ட மேலாண்மை மட்டுமே மக்களின் நம்பிக்கையை உருவாக்கும்.

Kumanan Kana  ·

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்த நாடுகளில் காற்றாலை அமைக்கும் போது

அண்மையில் குடியிருப்புக்கள் இல்லாத

காற்று விழக் கூடிய இடங்களில்

பாதுகாப்பான வேலிகள் போட்டு அமைக்கிறார்கள்.

மன்னாரில் எப்படியான இடங்களில் இந்த காற்றாலைகள் அமைக்கப் போகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

எனவே எந்த விடயத்தையும் விஞ்ஞானபூர்வமாக, அறிவுபூர்வமாக ஆராயவேண்டும். அதனை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆதாரபூர்வமான தெளிவுப்படுத்த வேண்டும். ]

அப்படி எல்லாம் செய்ய வேண்டிய தேவை இல்லை செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் பொய்களை அடித்துவிட்டால் போதும் காற்றாலை மின் உற்பத்தி கழுத்திற்கு தூக்கு என்று தங்கள் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக் கொண்டும்

எங்கள் ஆணி வேர் அழிக்கபடுகின்றது

காற்றாலை மின் உற்பத்தி எங்கள் உயிரை குடிப்பது

மீண்டும் ஒரு மனித புதை குழி வேண்டாம் 🙄 என்று சொல்லி கொடுத்ததை திரும்ப சொல்லி கொண்டு ஆர்பாட்டம் ஊர்வலம் போகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

எனவே எந்த விடயத்தையும் விஞ்ஞானபூர்வமாக, அறிவுபூர்வமாக ஆராயவேண்டும். அதனை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆதாரபூர்வமான தெளிவுப்படுத்த வேண்டும். ]

அப்படி எல்லாம் செய்ய வேண்டிய தேவை இல்லை செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் பொய்களை அடித்துவிட்டால் போதும் காற்றாலை மின் உற்பத்தி கழுத்திற்கு தூக்கு என்று தங்கள் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக் கொண்டும்

எங்கள் ஆணி வேர் அழிக்கபடுகின்றது

காற்றாலை மின் உற்பத்தி எங்கள் உயிரை குடிப்பது

மீண்டும் ஒரு மனித புதை குழி வேண்டாம் 🙄 என்று சொல்லி கொடுத்ததை திரும்ப சொல்லி கொண்டு ஆர்பாட்டம் ஊர்வலம் போகிறார்கள்ளா

ஆமா 10 நாளா சனம் கத்துது...இந்த முல்லா தொப்பி ,முட்டாக்கு போட்ட சனத்தையோ காணவில்லை..அவை மதில்மேல் பூனைகளோ....அல்லது இந்த காத்தாடி மூலம் அவையின் வீட்டுப் பான் தேவை நிறைவு செய்யப்படுமோ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் காற்றாலைத் திட்டம் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்படுகிறது; ஜனாதிபதியுடனான சந்திப்பில் தீர்மானம்

Published By: VISHNU

14 AUG, 2025 | 02:05 AM

image

மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தி வைப்பதுடன், அதற்குள் குறித்த காற்றாலைத் திட்டம் தொடர்பாக உரிய தரப்பினர் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களை பெறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

InShot_20250813_230054997.jpg

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழுவர் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் புதன்கிழமை (13) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடலொன்றை நாடாத்தியிருந்தனர்.

இக்கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கலந்துரையாடல் தொடர்பில் தெரியவருகையில்,

மன்னார் தீவில், மக்கள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் இத்தகைய காற்றாலைத் திட்டங்கள் தேவையில்லை என இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், மன்னார் பிரஜைகள்குழுப் பிரதிநிதிகளாலும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு மன்னார் மக்கள் எதிரானவர்களில்லையெனவும், மன்னார்த் தீவிற்குள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைக்கும் செயற்பாட்டையே மன்னார் மக்கள் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதியிடம் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்தகால இனவாத அரசாங்கங்கள் இத்தகைய காற்றாலை மின்உற்பத்திக் கோபுரங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதிகளை வழங்கியுள்ளபோதும், கற்றாலை அமைப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்டறியப்படவில்லை எனவும் இதன்போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டதுடன், காற்றாலைத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன், இவ்விடயத்தில் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் இதன்போது மன்னார் காற்றாலைத் திட்டத்தால் ஏற்படும் சிக்கல் மற்றும் பாதிப்பு நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டள்ளது.

இந்நிலையில் குறித்த காற்றாலைத் திட்டத்தை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்தி, மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சந்திப்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரிஷாட் பதியுதீன், உபாலி சமரசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், மன்னார் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/222533

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் போராட்டத்தை ஆதரித்து ஒன்று திரண்ட மன்னார் முஸ்லிம் மக்கள்

Published By: VISHNU

15 AUG, 2025 | 10:09 PM

image

மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும்  கனிய மணல் அகழ்வு உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து 13 ஆவது  நாளாக  வெள்ளிக்கிழமை (15) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மதியம் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-08-15_at_6.58.36_PM.

வெள்ளிக்கிழமை(15) மதியம் நடைபெற்ற ஜும்மா தொழுகை நிறைவடைந்த நிலையில், முஸ்லிம் மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

WhatsApp_Image_2025-08-15_at_6.58.34_PM_

மன்னார் நகர பிரதான சுற்றுவட்ட பகுதியில் 13 வது நாளாக மக்களினால் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் இடம் பெற்று வருகிறது.

WhatsApp_Image_2025-08-15_at_6.58.33_PM_

அண்மையில் இடம் பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் காற்றாலை செயற்திட்டங்களை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதியினால் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் உறுதியான முடிவு வரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்றைய தினம் போராட்டம் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-08-15_at_6.58.31_PM_

https://www.virakesari.lk/article/222650

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் எப்படி நாசூக்காக காற்றாலைகளை நிறுவ இலங்கை அரசு முயல்கிறது என்று ஒரு விரிவான காணொளி.

மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடக்க மாட்டேன் என்ற அனுர

மின்சாரத்துக்காக நாம் ஒரு பகுதியை இழந்தேயாக வேண்டும் எனும் நிலைக்கு வந்துவிட்டார்.

சிங்கள பிரதேசங்களில் எவ்வளவோ இடங்கள் இருக்கும் போது

ஏன் தமிழ் பிரதேசங்களை நாடுகிறார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் 14 ஆவது நாளாக தொடரும் போராட்டம் : கறுப்புப் பட்டி அணிந்து காற்றாலை, கனிய மணல் அகழ்வுகளுக்கு எதிராக கோஷம்

16 AUG, 2025 | 01:19 PM

image

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம்  சனிக்கிழமை (16) 14 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு சனிக்கிழமை (16)  ஆதரவு வழங்கும் வகையில் வங்காலை மற்றும் தலைமன்னார் கிராமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

சனிக்கிழமை (16) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

DSC_3138.JPG

DSC_3132.JPG

DSC_3053__1_.JPG

DSC_3066.JPG

https://www.virakesari.lk/article/222678

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு சோலர் பூட்ட அனுமதி தாறாங்கள் இல்லை.அங்கை அடம் பிடிக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

எங்களுக்கு சோலர் பூட்ட அனுமதி தாறாங்கள் இல்லை.அங்கை அடம் பிடிக்கிறாங்கள்.

அப்புறம் மின்சாரத்தை யாரிடம் விற்பது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

எங்களுக்கு சோலர் பூட்ட அனுமதி தாறாங்கள் இல்லை.அங்கை அடம் பிடிக்கிறாங்கள்.

என்ன காரணத்திற்காக அனுமதி இல்லை?

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் பகுதியில் நடைபெற்று வரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் தொடர்பாக மக்கள் எதிர்ப்பு தொடர்ந்து வலுத்துக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, அரசாங்கம் திட்டத்தை நிறுத்தாமல், பேச்சுவார்த்தைக்கு இடம் கொடுத்து ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.

மக்களின் சுற்றுச்சூழல் கவலைகளும், வாழ்வாதாரப் பிரச்சினைகளும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் உரிய தீர்வை கண்டுபிடிக்க முடியுமா என்பது அடுத்தடுத்த வாரங்களில் தீர்மானிக்கப்படும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.