Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sssaaaaaaa.jpg?resize=543%2C307&ssl=1

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த  பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு காரணமாக இன்று   கொழும்பில்  காலமானார்.

வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வைத்தியர் சுதர்சனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

https://athavannews.com/2025/1443164

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

📌👉யாழின் பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் திடீர் மரணம்‼️‼️‼️
மருத்துவதுறையின் ஒரு தூண் சரிந்தது..! சிறந்த மருத்துவ ஆளுமை 😭
ஆழ்ந்த இரங்கல்கள் ..! சத்திர சிகிச்சை நிபுணர் Dr.சுதர்சன் மாரடைப்பால் மரணம் 😭😭😭 ( இன்று - 15-08-2025 ) கொழும்பில் காலமானார் 😭 யாழ் மண்ணிற்கு பேரிழப்பு 😭😭
யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் V. சுதர்சன் அவர்கள் மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதர். நோயாளர்களை மிகவும் அன்புடன் கவனிப்பவர். அவரது மரணம் மிகவும் கவலையாக இருக்கின்றது. ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பயிற்சி பட்டறை ஒன்றுக்காக சென்றிருந்த அவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .எனினும் அவர் உலகத்தை விட்டு பிரிந்து விட்டார்.
அவரது பிரிவால் வாடும் அவர் தம் குடும்ப உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

முகநூலில் இருந்து....

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் சுதர்சனுக்கு யாழ்.வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இரங்கல்

15 AUG, 2025 | 04:53 PM

image

மரணவாசல் அருகிலும் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து பலரை மீட்டவர், வைத்தியர் சுதர்சன். அவரின் திடீர் மறைவு, யாழ் போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவ துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகச் சேவையாற்றிய, உயர் திறமையுடன் கூடிய சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் அவர்கள், இன்று திடீரென உயிரிழந்தார் என்ற செய்தி, மருத்துவ உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மருத்துவம் என்பது ஒரு சேவையாகவும், ஒரு ஒப்பற்ற தர்மமாகவும் இருந்த காலத்தில், மனிதாபிமானமும், உயிருக்காக போராடும் உறுதியும் கூடிய மருத்துவராக டாக்டர் சுதர்சன் விளங்கினார்.

அவசர சத்திர சிகிச்சைகள், அரிய வகை அறுவை சிகிச்சைகள், மற்றும் மருத்துவக் கல்வி பயிற்சிகளில் அவர் செய்த பங்களிப்பு, யாழ் மருத்துவக் குடும்பத்தில் நீண்ட நாள் நினைவுகூரப்படும்.

அவரது பணிவும், நோயாளிகளுடன் கொண்ட நெருக்கமான உறவும், அவரை நோக்கி வரும் எதுவும் ஒரு "மருத்துவரின் மேன்மை" என்பதற்கான சான்றாக இருந்தது. மருத்துவ மாணவர்களிடையே அவர் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

மரணவாசல் அருகிலும் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து பலரை மீட்டவர்; அவரின் திடீர் மறைவு, யாழ். போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவ துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது.

அவரது குடும்பத்தாருக்கும், சக ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், உணர்வுபூர்வமான அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

"ஒரு நல்ல வைத்தியர் ஆயுள் நீட்டிக்கிறார். ஆனால் ஒரு சிறந்த மருத்துவர் நம்பிக்கையை உயிராக்குகிறார். வைத்தியர் சுதர்சன் அந்த சிறந்தவர்களில் ஒருவராகவே இருந்தார். இரங்கல் செயதியில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/222619

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதர்சன் திடீர் மறைவு – மருத்துவ சமூகத்திற்கு பேரிழப்பு.

..................................................................................

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகச் சேவையாற்றிய, உயர் திறமையுடன் கூடிய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதர்சன் அவர்கள், இன்று திடீரென உயிரிழந்தார் என்ற செய்தி, மருத்துவ உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மருத்துவம் என்பது ஒரு சேவையாகவும், ஒரு ஒப்பற்ற தர்மமாகவும் இருந்த காலத்தில், மனிதாபிமானமும், உயிருக்காக போராடும் உறுதியும் கூடிய மருத்துவராக டாக்டர் சுதர்சன் விளங்கினார். அவசர சத்திர சிகிச்சைகள், அரிய வகை அறுவை சிகிச்சைகள், மற்றும் மருத்துவக் கல்வி பயிற்சிகளில் அவர் செய்த பங்களிப்பு, யாழ் மருத்துவக் குடும்பத்தில் நீண்ட நாள் நினைவுகூரப்படும்.

அவரது பணிவும், நோயாளிகளுடன் கொண்ட நெருக்கமான உறவும், அவரை நோக்கி வரும் எதுவும் ஒரு "மருத்துவரின் மேன்மை" என்பதற்கான சான்றாக இருந்தது. மருத்துவ மாணவர்களிடையே அவர் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

மரணவாசல் அருகிலும் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து பலரை மீட்டவர்; அவரின் திடீர் மறைவு, யாழ் போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவ துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது.

அவரது குடும்பத்தாருக்கும், சக ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், உணர்வுபூர்வமான அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

"ஒரு நல்ல மருத்துவர் ஆயுள் நீட்டிக்கிறார்; ஆனால் ஒரு சிறந்த மருத்துவர் நம்பிக்கையை உயிராக்குகிறார். டாக்டர் சுதர்சன் அந்த சிறந்தவர்களில் ஒருவராகவே இருந்தார்."

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.


Thangamuthu Sathiyamoorthy


  • கருத்துக்கள உறவுகள்

ஈடுசெய்ய முடியாத இழப்பு.

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈடுசெய்ய முடியாத இழப்பு.

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

அவருடைய வயது மற்றும் எது சம்பந்தப்பட்ட துறை நிபுணர் என்பது தெரியவில்லை. ஆனாலும் சிறந்த வைத்திய நிபுணருக்கே தனக்கு வர இருக்கும் மாரடைப்பை முன்னரே அறிந்து தவிர்க்க முடியாது இருந்து இருப்பது தான் எமது உடல் கூற்றின் தன்மை??

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ....... !

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

ஆழ்ந்த இரங்கல்கள்

அவருடைய வயது மற்றும் எது சம்பந்தப்பட்ட துறை நிபுணர் என்பது தெரியவில்லை. ஆனாலும் சிறந்த வைத்திய நிபுணருக்கே தனக்கு வர இருக்கும் மாரடைப்பை முன்னரே அறிந்து தவிர்க்க முடியாது இருந்து இருப்பது தான் எமது உடல் கூற்றின் தன்மை??

49 வயது என்பது கேள்வி....அதுவும் பிரபலமான் இதய அறுவை சிகிச்சௌ நிபுணர்....அவருடைய உடல்பருமனை வைத்தாவது ..தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பது என் கவலை....இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ...எங்கடை வைத்தியர் அப்படிச் சொன்னவர் ...இப்படிச் சொன்னவர் என்று...நாம் யாருமே சந்தோசப்பட முடியாது....எல்லாம் அவன் செயல்

மீண்டும் எமது இனத்திற்கு ஏற்பட்ட பேரீழப்பின் ஒன்றிற்கு அழ்ந்த கவலையடைகின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

உயிர்பிச்சை கொடுத்து.... பாடம் சொல்லி தருபவர்களுக்கே இந்த நிலை என்றால்....?

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் சுதர்சனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் .🙏


  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் சுதர்சன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது உறவினர் நண்பர்கள் பயனாளிகள் அனவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

வைத்தியர் சுதர்சன் பல காலம் இலைமறை காயாய் இருந்து சேவை செய்துள்ளார் போல் தெரிகிறது. எமது கலச்சாரத்தில் மனிதர்களை வாழும்போதே போற்றுவதற்கு பழக்கப்பட்டவர்களுமில்லை. இப்படி எத்தனை நல்ல மனிதர்கள் எங்கள் சமூகத்தில் இன்னும் எமது இனத்துக்காக சேவைசெய்கிறார்களோ தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

531764602_10233999067370991_270310571732

யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதர்சன் திடீர் மறைவு – மருத்துவ சமூகத்திற்கு பேரிழப்பு.

..................................................................................

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகச் சேவையாற்றிய, உயர் திறமையுடன் கூடிய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதர்சன் அவர்கள், இன்று திடீரென உயிரிழந்தார் என்ற செய்தி, மருத்துவ உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மருத்துவம் என்பது ஒரு சேவையாகவும், ஒரு ஒப்பற்ற தர்மமாகவும் இருந்த காலத்தில், மனிதாபிமானமும், உயிருக்காக போராடும் உறுதியும் கூடிய மருத்துவராக டாக்டர் சுதர்சன் விளங்கினார். அவசர சத்திர சிகிச்சைகள், அரிய வகை அறுவை சிகிச்சைகள், மற்றும் மருத்துவக் கல்வி பயிற்சிகளில் அவர் செய்த பங்களிப்பு, யாழ் மருத்துவக் குடும்பத்தில் நீண்ட நாள் நினைவுகூரப்படும்.

அவரது பணிவும், நோயாளிகளுடன் கொண்ட நெருக்கமான உறவும், அவரை நோக்கி வரும் எதுவும் ஒரு "மருத்துவரின் மேன்மை" என்பதற்கான சான்றாக இருந்தது. மருத்துவ மாணவர்களிடையே அவர் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

மரணவாசல் அருகிலும் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்து பலரை மீட்டவர்; அவரின் திடீர் மறைவு, யாழ் போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவ துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது.

அவரது குடும்பத்தாருக்கும், சக ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், உணர்வுபூர்வமான அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

"ஒரு நல்ல மருத்துவர் ஆயுள் நீட்டிக்கிறார்; ஆனால் ஒரு சிறந்த மருத்துவர் நம்பிக்கையை உயிராக்குகிறார். டாக்டர் சுதர்சன் அந்த சிறந்தவர்களில் ஒருவராகவே இருந்தார்."

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

Thangamuthu Sathiyamoorthy ·

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

534224040_10238459920014127_868216138039

ஒரு சிறந்த சத்திர சிகிச்சை நிபுணரை யாழ் போதனா வைத்தியசாலையும் யாழ் சமூகமும் இழந்து நிற்கின்றன, 50 வயதில் ஒரு இளம் குடும்பத்தை தவிக்க விட்டு இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றதை நினைத்து மனம் கனக்கின்றது. சுவாமி விவேகானந்தர், சுப்பிரமணிய பாரதி போன்றோர் 40 வயதில் பலதைச் சாதித்துச் சென்றது போல சுதர்சனும் 50 வயதில் நிறைய சாதித்து பலரின் அபிமானத்தை பெற்றுள்ளது சமூக வலைப்பதிவுகளில் இருந்து தெரிகின்றது. மாதம் ஓரிரு பதிவுகள் மட்டுமே போடும் வகையைச் சேர்ந்த ஒருவராக எனது முகநூல் நண்பராகவும் இருந்துள்ளார்.
அன்னாருக்கு எனது அஞ்சலிகளையும், அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உறவினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஓம் சாந்தி, சாந்தி சாந்தி!😢

Kumar Ganesh 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஐம்பது வயதைக் கூட அவர் எட்டவில்லை. பள்ளிக் காலத்திலிருந்தே அவரைப் பல வழிகளில் போட்டிகள், கழகங்கங்கள், தனியார் வகுப்புக்கள் என அவதானித்ததிலிருந்து மிகவும் பண்பான அமைதியான சுபாவம் கொண்ட மிகுந்த தன்னடக்கமுடைய மாணவன். கடின மான உழைப்பாளி. உயிரியல் துறையில்மிக இக்கட்டான வசதிகளற்ற போராட்ட காலத்தில் அதிசிறந்த புள்ளிகள் நிலைகளைப் பெற்றதால் நாடளாவிய தெரிவுப் பட்டியலில் கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்குச் சென்ற விரல்விட்டு எண்ணக்கூடிய வைத்திய மாணவர்களில் அவரும் ஒருவர். நான் புலம்பெயர்ந்த தேசத்திற்கு வந்தபின்னர் யாழ்.வைத்தியசாலையிலோ அல்லது நோர்த்தேர்ண் இதர பல வைத்தியசாலைகளிலோ அவர் கையாலே மருத்துவம் சத்திரசிகிச்சை பெற்று குணமடைந்த ஏத்தனையோ பேர் அவரை வாயார வாழ்த்தி புகழ்ந்ததைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து இருக்கின்றேன். சில ஆண்டுகளிற்கு முன்னர் என் சகோதரனிற்கு ஒரு சத்திரசிகிச்சை முடிந்த போது மிகச் சாதாரணமாக பல கவனிப்புகள் பற்றி அக்கறையாக சற்று சாவகமாகவே உரையாடினார். இன்னும் எத்தனையோ பேர் இவரின் சத்திர சிகிசாசைக்காக காத்திருப்புப் பட்டியலில் இருந்து கொண்டிருப்பதாக அப்பப்போ கூறுவர். கண்ணூறு பட்டது போல காலையிலே காலன் காவு கொண்ட செய்தி காதுகளில் எட்டியும் கண்களில் பட்டும், இன்னும் நெஞ்சம் நம்ப மறுக்கின்றது. ஜனவரியில் பிறந்ததால் ஆண்டொன்று முந்தியே கற்க வாய்ப்புக்கிடைத்தது. ஆனாலும் அகவை ஐம்பதை அடைய முன்னர் அவசரப்பட்டு யமதர்மன் அகாலத்தில் அக்கரைக்கு அழைத்ததேனோ. அவர் தம் பாரியார், குழந்தைகளுக்கு ஆறுதல் கூறவே முடியாது நம்மால். ஆண்டவன் அவர்களுக்கு மிகுந்த தாங்கும் சக்தியுள்ள மனவலிமையைக் கொடுக்க வேண்டும். அன்னாரின் இழப்பு யாழ் . மருத்துவ சமூகத்திற்கு ஒரு ஈடுசெய்யப்பட முடியாத ஒரு பேரிழப்பாகும்.. அன்னாரின் ஆத்மா பரிபூரண சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவவனைப் பிரார்த்திப்போமாக.

Sarulatha Ramachandran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

532976430_4067134686861829_8560838699721

இப்படியான இளமரணங்களுக்கு எமது சமுதாயமும் சேர்ந்து தான் பொறுப்பெடுக்க வேண்டும்.

தங்களை கவனிப்பதற்கு முதல் மற்றவர்களை

கவனிப்பதற்கு எமது சமூகம், குடும்பம் போன்றவற்றால் பிள்ளைகள் வடிவமைக்கப்படுகிறார்கள்.

அதுதான் சரியெனவும் தொடர்ந்து கதைத்து பப்பாவில் ஏத்துவதால் பிள்ளைகளும் நல்லபிள்ளை எண்டால் தன்னை கவனியாமல்

மற்றவர்களை பார்ப்பதென நினைத்துக்கொள்கிறார்கள்,

அவ்வாறு வடிவமைக்கப்படுகிறார்கள்.

நம்மாக்கள் தங்களை

தாங்களே கவனிப்பது பிழையெனவும் நினைத்துக்கொள்கிறார்கள்.

தங்களை கவனிப்பதை விடுத்து மற்ற அனைவரையும் பார்ப்பதற்காகவே மறைமுகமாக

குடும்பங்களால் வடிவமைக்கப்படுகிறோம்.

யாரும் இறந்தால் அவர் அவரை வடிவாய் பார்த்தவர், அவவை வடிவா பார்த்தவர் என்பதில்

ஆரம்பிக்கிறது இப்படியான Design கள்.

சுயம், சுயசிந்தனை,சுயமரியாதை, சுயநலன்.

இதுகளை மறந்து மற்றவர்களுக்காகவே Design செய்யப்படுகிறோம்.

கடவுளை வெளியில் தேடுவது போல்

எங்களை நாங்களே கவனிப்பதில் இருந்து

விலகி நாடு, தமிழ், வீடு, தொழில் போன்றவற்றை

வளர்த்து கொள்வதற்காக வடிவமைக்கப்படுகிறோம்.

எல்லாவற்றிற்கும் முதல் எங்களை நாங்களே

கவனிக்க வேண்டும் என்பதை செய்வதில்லை.

அதை பார்த்து கொண்டிருக்கும் பிள்ளைகளும் அதே போல் வந்து விடுகிறார்கள்.

அதுதான் சரியென கற்பிக்கப்படுகிறார்கள்.

அல்லது மற்றவர்களை பார்ப்பதற்காக தங்களை கவனியாமல், தங்களை வளர்த்து கொள்ளாமல்

குடும்பபங்களை இளவயதில் தொழில்களால் பொறுப்பெடுப்பதால் தொடர்ந்தும் அதே

இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

தங்களை தாங்களே கவனியாததால்

அவர்களை கவனிப்பதற்கு சேர்ந்து இருப்பவர்

முறியவேண்டிவரும்.

அல்லது போராடவேண்டிவரும்.

தங்களை தாங்களே கவனியாததால்

நேற்று இறந்த வைத்தியர் போன்ற இளமரணங்களை நமது சமுதாயம்

எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆழ்ந்த அநுதாபங்கள்.

முகப்புத்தகம் முழுக்க இப்படி ஓர் மரணத்திற்காக அழுததை கவனிக்க கூடியதாக இருந்தது.

மாறி வடிவமைத்திருந்தால் தானும் வாழ்ந்து தொடர்ந்து சமூகத்திற்காகவும் சேவையாற்றியிருக்கலாம்.

ஆக்கம் : Kalichelvi Paskaran

உண்மை உரைகல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

534269062_2109524902867837_2346355083084

💐 நினைவஞ்சலி 💐
யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் சிறந்த சத்திரசிகிச்சை நிபுணராகப் பணியாற்றி,
அமைதியான பண்பும், அர்ப்பணிப்பும், அன்பும் கொண்டிருந்த
யாழ். இந்துவின் பெருமைமிகு மைந்தர்,
வைத்தியர் வெங்கடாசலம் சுதர்சன் அண்ணா அவர்கள்,
சுகயீனம் காரணமாக எம்மை விட்டு பிரிந்துச் சென்றார்.
மருத்துவத் துறையில் தமது ஆற்றலும் அறிவும் முழுமையாக அர்ப்பணித்து,
நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிர் காக்கக் காரணமாக இருந்து,
சமூகத்தின் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்த
அன்னாரின் திடீர் பிரிவு எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அன்னாரின் இனிய நினைவுகள் என்றும் எம்முடன் நிலைத்திருக்கும்.
இறைவன் அன்னாரின் ஆன்மாவை சாந்தியடைய அருள்புரிவானாக.
துயருற்ற குடும்பத்தினருக்கும், உறவினருக்கும்,
எமது இதயபூர்வமான அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
🙏 ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏

Yarl Gulan 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

533390791_1734610347186763_9210995076116

குழாய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் சத்திர சிகிச்சை நிபுணர் அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று காலை 11.00 க்கு கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

Shanmuganathan Piratheepan Theepan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

534990226_3596230337352462_6327469635599

533340396_3596230350685794_3685989022328

533654695_3596230364019126_2994696030779

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.