Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Trump told Europeans that Putin wants all of Ukraine's Donbas in exchange for end of war

Russian President Vladimir Putin spelled out his demands for “land swaps” with Ukraine during his nearly three-hour summit with US President Donald Trump yesterday, including his insistence Ukraine gives up the Donbas region in eastern Ukraine, according to European officials familiar with Trump’s accounting of the meeting to his counterparts afterward.

Putin said in exchange, he would be willing to freeze the current front lines in the rest of Ukraine — in the regions of Kherson and Zaporizhzhia — and agree to a promise not to attack Ukraine or other European nations again.

But he didn’t back away from a demand to eliminate what Russia calls the “root causes” of the war in Ukraine — code for reducing the size of Kyiv’s military, abandoning its aspirations to join NATO and becoming a neutral state.

The details of Putin’s conditions emerged when Trump briefed European leaders on the talks as he was arriving back in Washington early this morning. Trump said he believed a deal could be reached quickly if Putin’s conditions were met, and that he would discuss the matter with Ukrainian President Volodymyr Zelensky at the White House on Monday, the officials said.

https://www.cnn.com/politics/live-news/trump-putin-meeting-news-08-16-25#cmeecgnxb00073b6omudrlidp

நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான கிட்டத்தட்ட மூன்று மணி நேர உச்சிமாநாட்டின் போது, உக்ரைனுடன் "நில பரிமாற்றங்கள்" செய்வதற்கான தனது கோரிக்கைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விளக்கினார். கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியை உக்ரைன் கைவிட வேண்டும் என்ற அவரது வலியுறுத்தல் உட்பட, இந்த சந்திப்பை டிரம்ப் பின்னர் தனது சகாக்களிடம் தெரிவித்ததாக ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு ஈடாக, உக்ரைனின் மீதமுள்ள பகுதிகளில் - கெர்சன் மற்றும் சபோரிஷியா பகுதிகளில் - தற்போதைய முன்னணிப் படைகளை முடக்கவும், உக்ரைனையோ அல்லது பிற ஐரோப்பிய நாடுகளையோ மீண்டும் தாக்குவதில்லை என்ற வாக்குறுதியை ஏற்கவும் தயாராக இருப்பதாக புடின் கூறினார்.

ஆனால், உக்ரைனில் போரின் "மூலக் காரணங்கள்" என்று ரஷ்யா அழைப்பதை நீக்குவதற்கான கோரிக்கையிலிருந்து அவர் பின்வாங்கவில்லை - கியேவின் இராணுவத்தின் அளவைக் குறைத்தல், நேட்டோவில் சேருவதற்கான அதன் விருப்பங்களைக் கைவிட்டு நடுநிலை நாடாக மாறுவதற்கான குறியீடு.

டிரம்ப் இன்று அதிகாலை வாஷிங்டனுக்குத் திரும்பும்போது பேச்சுவார்த்தைகள் குறித்து ஐரோப்பியத் தலைவர்களுக்கு விளக்கியபோது புடினின் நிபந்தனைகளின் விவரங்கள் வெளிப்பட்டன. புடினின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்று தான் நம்புவதாகவும், திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதாகவும் டிரம்ப் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழாக்கம் கூகிள் ஆண்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

விரிவாக்கப்பட்ட அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன

விரிவாக்கப்பட்ட அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன

16.08.2025 05:43

அலாஸ்காவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையேயான விரிவாக்கப்பட்ட வடிவப் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன, இதனால் தலைவர்களின் உச்சிமாநாடு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.

அது ஸ்கை நியூஸின் கூற்றுப்படி , உக்ரின்ஃபார்ம் நிருபர் ஒருவர் தெரிவிக்கிறார்.

"கிரெம்ளின் மற்றும் வெள்ளை மாளிகை இரண்டும் கடந்த சில நிமிடங்களில் சமூக ஊடகங்களில் டிரம்ப்-புடின் உச்சிமாநாடு முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளன. அவர்கள் தங்கள் மூத்த அணிகளுடன் ஒரு வேலை மதிய உணவை உட்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் அது ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் மூன்றுக்கு மூன்று பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடந்தன," என்று அந்த ஊடகம் எழுதியது.

விளாடிமிர் புடின் ஏற்கனவே தனது விமானத்தில் ஏறி ரஷ்யாவுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருப்பதாக ஸ்கை நியூஸ் மேலும் கூறியது.

மேலும் படிக்க: புடினுடனான சந்திப்பை 'பயனுள்ள' என்று டிரம்ப் கூறுகிறார், ஜெலென்ஸ்கியை அழைக்க திட்டமிட்டுள்ளார்

டிரம்ப் மற்றும் புதின் இடையே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, "பரஸ்பர புரிதல்" மட்டுமே விளைவாக அறிவிக்கப்பட்டது. புதினுடனான தனது சந்திப்பு குறித்து விவாதிக்க நேட்டோ உறுப்பினர்களையும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியையும் விரைவில் தொடர்பு கொள்வதாக டிரம்ப் உறுதியளித்தார்.

ரஷ்ய சர்வாதிகாரி புடினுடனான தனது பேச்சுவார்த்தைகள் "மிகவும் பயனுள்ளதாக" இருந்ததாக டிரம்ப் கூறினார்.

இதன் அர்த்தம் பேச்சுவார்த்தை சரியான உடன்பாடு எட்டப்படாததனால் அடுத்த கட்ட தீர்விற்கான அலுவலக ரீதியான பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை, இது ஒரு தோல்விகரமான பேச்சுவார்த்தை என கூறியுள்ளது உக்ரின்போர்ம் இணையம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர் பிரச்சனையை.....உலகில் உள்ள எல்லா ஆக்கிரமிப்பு பிரச்சனைகளுடனும் ஒப்பிட நினைப்பதால் தான் நாம் இன்னும் ஒரு படி கூட நகர முடியாமல் இருக்கின்றது.

ஆக்கிரமிப்பு என்பது எந்த வகையில் வந்தாலும் எவர் செய்தாலும் நண்பர்கள் உடன்பிறப்புகள் என்று கிடையாது. அவர்கள் எதிரிகளே. எமக்கு ஆதரவு தேவை என்பதற்காக கண்டும் காணாமலும் செல்வோமானால் ஆக்கிரமிப்பு சார்ந்து அழுகுரல் எழுப்பும் தகமையை இழக்க நேரிடும். உன் தவறுகளை ஏற்று நான் மண்டியிடாவிட்டால் என்னை சுடுவாய் என்றால் நின்று கொண்டே சுடு என்பது தான் சரியானது. மற்றது அனைத்தும் அடிமையானது தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தம் வேண்டுமா?; எனக்கு டொனெட்ஸ்க் வேண்டும்!; டிரம்பிடம் புடின் வைத்த நிபந்தனை

putin-mesi.jpg

போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சில நிலப்பரப்புகளை விட்டுத் தர வேண்டும் என்று டிரம்பிடம் புடின் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலையான அமைதி ஒப்பந்தம்

உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையே நடைபெற்ற 3 மணி நேர பேச்சுவார்த்தை நிலையான முடிவு எதுவும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து கருத்து தெரிவித்த டிரம்ப், ரஷ்யா மிகப்பெரிய சக்தி, உக்ரைன் ஆனால் அப்படி இல்லை என தெரிவித்தார்.

மேலும் இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக தனது “ட்ரூத் சோஷியல்” சமூக வலைதள பக்கத்தில், பெரும்பாலான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் நிலைப்பது இல்லை, உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர போர் நிறுத்த ஒப்பந்தத்தை விட, நிலையான அமைதி ஒப்பந்தமே சிறந்தது என அனைத்து தரப்பினராலும் முடிவு செய்யப்பட்டுள்ளது என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

டொனெட்ஸ்க் பிராந்தியத்தை விட்டுத் தர வேண்டும்

பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதியுடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உரையாடிய நிலையில், போர் நிறுத்தத்திற்கு மாற்றாக உக்ரைன் தங்களின் நிலப்பரப்பு சிலவற்றை ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த உரையாடல் குறித்து நம்பகமான ஆதாரங்கள் வழங்கிய தகவலில், ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் டொனெட்ஸ்க்(Donetsk) பிராந்தியத்தை விட்டுத்தர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் முன்மொழிந்து இருப்பதாக தெரிகிறது.

ஆனால் இந்த முன்மொழிவை உக்ரைனிய ஜனாதிபதி முழுவதுமாக நிராகரித்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை வாஷிங்டனில் சந்தித்து பேசவுள்ளார்.

ரஷ்யா ஏற்கனவே உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், முக்கிய மூலோபாய நகரான டொனெட்ஸ்க் பிராந்தியத்தை கோருவது உக்ரைனை வேதனையில் தள்ளியுள்ளது.

2024ம் ஆண்டு இந்த பிராந்தியத்திற்கு நுழைந்த ரஷ்ய படைகள் ஏற்கனவே டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கால் பங்கை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

https://akkinikkunchu.com/?p=337240

  • கருத்துக்கள உறவுகள்

நாளை அமெரிக்காவில் டிரம்புக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் இடையில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையில் யேர்மன் ஜனாதிபதி Merz ம் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் வான் டெர் லேயனும் பங்கேற்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நாளை அமெரிக்காவில் டிரம்புக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் இடையில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையில் யேர்மன் ஜனாதிபதி Merz ம் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் வான் டெர் லேயனும் பங்கேற்பார்கள்.

இதன் அர்த்தம் உக்ரைன் தனியே இல்லை என்பதை சொல்வதாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, விசுகு said:

ஆக்கிரமிப்பு என்பது எந்த வகையில் வந்தாலும் எவர் செய்தாலும் நண்பர்கள் உடன்பிறப்புகள் என்று கிடையாது. அவர்கள் எதிரிகளே. எமக்கு ஆதரவு தேவை என்பதற்காக கண்டும் காணாமலும் செல்வோமானால் ஆக்கிரமிப்பு சார்ந்து அழுகுரல் எழுப்பும் தகமையை இழக்க நேரிடும். உன் தவறுகளை ஏற்று நான் மண்டியிடாவிட்டால் என்னை சுடுவாய் என்றால் நின்று கொண்டே சுடு என்பது தான் சரியானது. மற்றது அனைத்தும் அடிமையானது தான்.

உலகம் முழுவதும் பல,பல விதமான ஆக்கிரமிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அவற்றுக்கெல்லாம் வாய் மூடி இருந்து கொண்டு......உக்ரேனுக்காக மட்டும் ஐயோ,குய்யோ,முய்யோ என அலறுவதுதான் எரிச்சலை தருகின்றது.

அண்மையில் ஈழப்போராட்டத்திற்கு சமமான இன்னொரு விடுதலை இயக்கத்தை அழித்து விட்டார்கள். அதெல்லாம் உக்ரேன் விசுவாசிகளுக்கு தெரிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

"புதினுக்கு வெற்றி, டிரம்புக்கு ஏமாற்றம்" : சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

டிரம்ப்-புடின், அலாஸ்கா சந்திப்பு, யுக்ரேன் போர், ஊடகங்கள், ரஷ்யா, அமெரிக்கா

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, போர் நிறுத்தம் பற்றிய எந்த அறிவிப்பும் அலாஸ்கா உச்சிமாநாட்டில் இடம்பெறவில்லை.

5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆகஸ்ட் 15 ஆம் தேதி அலாஸ்காவில் நடைபெற்ற டிரம்ப்-புதின் உச்சிமாநாடு மீது ஒட்டுமொத்த உலகின் கவனம் இருந்தது.

யுக்ரேன் மோதலை முடிவுக்கு கொண்டு வர ஆக்கப்பூர்வமான பாதைக்கு இந்த பேச்சுவார்த்தை இட்டுச் செல்லும் என சந்திப்பிற்கு முன்பு நம்பப்பட்டது. ஆனால் போர்நிறுத்தம் பற்றி எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை, அமைதி ஒப்பந்தமும் அறிவிக்கப்படவில்லை.

அலாஸ்கா சந்திப்பிற்குப் பிறகு டிரம்பும் புதினும் கூட்டாக செய்தி அறிவிப்பை வாசித்தனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையால் ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான விளைவுகள் பற்றி எந்த தகவலும் கொடுக்கவில்லை. இருவரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.

இந்த சந்திப்பு பற்றி உலகம் முழுவதும் உள்ள இணையதளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெவ்வேறு மதிப்பீடுகள் வெளிவந்துள்ளன.

சில மதிப்பீடுகள் இது புதினுக்கு வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளன. சில செய்திகள் டிரம்ப் சந்திக்கும் கடினமாக கேள்விகள் பற்றி பேசியுள்ளன. பல கட்டுரைகள் இந்த சந்திப்பு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கான தளத்தை தயார் செய்துள்ளது எனக் கூறியுள்ளன. ஆனால் தற்போதைக்கு முடிவுகள் அளவானதாகவே இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளன.

புதினுக்கு வேண்டியது கிடைத்துவிட்டது - சிஎன்என்

அமெரிக்க தொலைக்காட்சியான சிஎன்என், அலாஸ்காவில் புதின் எதிர்பார்த்த அனைத்தும் அவருக்கு கிடைத்துவிட்டது எனத் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த செய்தி, "புதினுக்கு தனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்த அனைத்து முடிவுகளும் கிடைத்துவிட்டன. அதற்கு மாறாக டிரம்புக்கு சந்திப்புக்கு முந்தைய அவரின் சொந்த எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளது.

டிரம்புக்கு சிறிய பலன்கள் மட்டுமே கிடைத்துள்ளதா? என சிஎன்என் செய்தியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்படும் எதிர்கால அமைதி ஒப்பந்தத்தில் யுக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அடித்தளத்தை அவர்கள் உருவாக்கிவிட்டார்களா என்கிற கேள்வியும் உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"டிரம்ப் நிறைய முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்திப்பிற்கு 10/10 மதிப்பெண் வழங்குவதாகவும் கூறினார். ஆனால் இவை அனைத்தும் ரஷ்ய அதிபருக்கு தான் பெரிய வெற்றி கிடைத்துள்ளதையே காட்டுகின்றன" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பிரமாண்ட வரவேற்பு, ஆனால் ஆக்கப்பூர்வமான முடிவுகள் இல்லை'

அமெரிக்க செய்தித்தாளான வால் ஸ்ட்ரீட் ஜர்னல், அலாஸ்காவில் புதினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தும் டிரம்புக்கு எந்த ஆக்கப்பூர்வமான முடிவுகளும் கிடைக்கவில்லை என தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

அந்த செய்தியில், "அலாஸ்காவில் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு, ராணுவ சாகசம் மற்றும் தனது வாகனத்தில் சவாரி கொடுத்து வரவேற்றார் டிரம்ப். இது பிரம்மாண்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் வாஷிங்டனுக்கு திரும்புகையில் காட்டுவதற்கு டிரம்பிடம் எதுவுமில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் பதவியேற்றதும் முதல் நாளிலே போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்த டிரம்ப் தற்காலிக போர்நிறுத்தத்தை எட்டுவதில் கூட தோல்வியைச் சந்தித்துள்ளார் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சந்திப்பு மாஸ்கோவில்?

ஷார்ட் வீடியோ

Play video, "டிரம்பை மாஸ்கோவுக்கு அழைத்த புதின்", கால அளவு 0,20

00:20

p0lxbk23.jpg.webp

காணொளிக் குறிப்பு, டிரம்பை மாஸ்கோவுக்கு அழைத்த புதின்

"டிரம்ப் தனது விருந்தாளியான புதினை வரவேற்றார். ஆனால் இந்த சந்திப்பின் ஒரே முடிவு 'அடுத்த முறை மாஸ்கோவில்' என புதின் கூறியதைப் போல" அவர்கள் மீண்டும் சந்திக்க ஒப்புக்கொண்டது மட்டும் தான்" என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக ரஷ்ய அதிபர் அமெரிக்க மண்ணில் கால் பதித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலாஸ்காவில் ராணுவ தளத்தில் இரு தலைவர்களுக்கும் இடையே சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. நான்கு அமெரிக்க போர் விமானங்களின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டார் புதின்.

"இத்தகைய இணக்கமான வரவேற்பு, இரு தலைவர்களும் ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி ஒப்பந்தத்தை அடைய முடியுமா என்கிற கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை" என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில் "டிரம்ப் மீண்டும் மீண்டும் சுற்றியிருந்த மேடையை நோக்கியும், செய்தியாளர்களை காண்பித்தும், அமெரிக்க வலிமையின் காட்சிப்படுத்தலை நோக்கியும் சைகை செய்தார். சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த தலைவர்கள், மேலே பறந்து சென்ற பி2 ஸ்டீல்த் போர் விமானங்களை மேல்நோக்கி பார்த்தபடி நடந்து சென்றனர்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப்-புடின், அலாஸ்கா சந்திப்பு, யுக்ரேன் போர், ஊடகங்கள், ரஷ்யா, அமெரிக்கா

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, அடுத்த சந்திப்பை மாஸ்கோவில் நடத்தலாம் என புதின் தெரிவித்துள்ளார்.

புகைப்படங்கள் மீதான விமர்சனம் - தி டெலிகிராப்

இந்த சந்திப்பின்போது வெளியான சில புகைப்படங்கள் விமர்சனத்திற்கான காரணமாக மாறியது என பிரிட்டன் செய்தித்தாளான தி டெலிகிராப் தெரிவித்துள்ளது.

"அமெரிக்க வீரர்கள், புதினின் விமானம் முன்பாக குனிந்து சிவப்பு கம்பளத்தை விரித்த காட்சிகள் பலருக்கும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த ஒட்டுமொத்த நிகழ்வின் இறுதியில் புதினுக்கு வேண்டிய முடிவு கிடைத்தது. அமெரிக்க அதிபர் உடன் தான் கை குலுக்கும் புகைப்படத்திற்கு ஆசைப்பட்டார் புதின். உலகளாவிய அரசியலின் மிக முக்கியமான மேடையில் ரஷ்யா தற்போதும் உள்ளது என அவர் உலகிற்கு காட்ட விரும்புகிறார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய தலைவர்கள் யுக்ரேனுக்கு ஆதரவளிக்க தவறினால் அவர்கள் வரலாற்றுக்குப் பதில் சொல்ல வேண்டி வரும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Play video, "உலகமே உற்று நோக்கிய டிரம்ப், புடின் இடையேயான அலாஸ்கா பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது.", கால அளவு 4,35

04:35

p0lxc39f.jpg.webp

காணொளிக் குறிப்பு, உலகமே உற்று நோக்கிய டிரம்ப், புடின் இடையேயான அலாஸ்கா பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது.

யாருக்கும் தெரியாது - லா மோண்ட்

பிரெஞ்சு செய்தித்தாளான லா மோண்டில் வெளியான செய்தி ஒன்று இந்த சந்திப்பை தோல்வி என விவரித்துள்ளது

அந்த செய்தியின்படி, "அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என யாருக்கும் தெரியாது. எந்த ஒப்பந்தமும் பொதுவெளியில் வைக்கப்படவில்லை."

"புதினுக்கு அழுத்தம் கொடுக்க தவறிய டிரம்ப், அதற்கு மாறாக யுக்ரேன் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்" என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் கருத்துக்கள் குழப்பத்தை உண்டாக்கியது

ஹாங்காங்கைச் சேர்ந்த செய்தித்தாளான சௌத் சைனா மார்னிங் போஸ்ட் இந்த சந்திப்பிற்குப் பிறகு எழுந்த குழப்பத்தை குறிப்பிட்டு காட்டியுள்ளது.

"இந்த சந்திப்பிற்குப் பிறகான டிரம்பின் கருத்துக்கள் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள யுக்ரேனின் பகுதிகளை அவர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார் என்கிற பிம்பத்தை உருவாக்கியது" என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில் "கூட்டு செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. ஆனால் டிரம்பும் சரி புதினும் சரி, யாருமே ஆக்கப்பூர்வமான முடிவுகள் அல்லது தகவல்களைப் பகிரவில்லை. அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை" எனக் கூறப்பட்டுள்ளது.

ஷார்ட் வீடியோ

Play video, "நிருபரின் கேள்விக்கு சைகை மூலம் பதிலளித்த புதின்", கால அளவு 0,21

00:21

p0lxbj0v.jpg.webp

காணொளிக் குறிப்பு, நிருபரின் கேள்விக்கு சைகை மூலம் பதிலளித்த புதின்

இந்த சந்திப்பு முக்கியமானதாக அமைந்தது - குளோபல் டைம்ஸ்

சீன செய்தித்தாளாக குளோபல் டைம்ஸ் இந்த சந்திப்பை ஒரு அடையாள வெற்றி என அழைத்துள்ளது.

"புதினும் டிரம்பும் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் சுமார் மூன்று மணி நேரம் சந்தித்தனர். ஆனால் அந்த சந்திப்பு யுக்ரேன் நெருக்கடி மீது எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் முடிந்தது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன வல்லுநர்கள் இந்த சந்திப்பு ஒரு அடையாளகரமானது எனக் கூறியதாக அந்த செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு சர்வதேச அளவில் ரஷ்யாவின் தனிமைப்படுத்தலை உடைத்துள்ளது என்றும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான களத்தை உருவாக்கியுள்ளது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

'விரைவாக முடிந்த சந்திப்பு'

Play video, "டிரம்ப் - புதின் சந்திப்பில் நடந்தது என்ன?", கால அளவு 3,55

03:55

p0lxbcgm.jpg.webp

காணொளிக் குறிப்பு, டிரம்ப் - புதின் சந்திப்பில் நடந்தது என்ன?

ரஷ்ய செய்தித்தாளான மாஸ்கோவ்ஸ்கி கொம்சோமால்ட்ஸின் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று இந்த சந்திப்பு விரைவாக முடிந்ததாக தெரிவித்துள்ளது.

"இருவரும் மிகவும் இணக்கமாகச் சந்தித்து, இரவு உணவு கூட ஒன்றாக உண்ணாமல் இணக்கமின்றி பிரிந்து சென்றனர்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்கானது என சிலர் கூறி வந்த நிலையில் அத்தகைய கூற்றுக்கள் வெறும் யூகங்களாக முடிந்துவிட்டன என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்திக்குறிப்பில் "இரு தரப்பிலிருந்தும் ஐந்து கேள்விகள் எடுத்துக் கொள்ளப்படும் என பத்திரிகையாளர்களிடம் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் டிரம்பும் புதினும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமலே சென்றுவிட்டனர், இதனால் பலர் கோபமும் ஏமாற்றமும் அடைந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c209dpnvx1no

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள்கிழமை ட்ரம்ப் மற்றும் செலன்ஸ்கி சந்திப்பில் செலன்ஸ்கி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக உருசுலா வொன்டலைன் கலந்து கொள்வதாகவும் தன்னுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என கூறியுள்ளார்.

உருசுலா அமெரிக்க எரிபொருளை சந்தை விலையினைவ்ட பலமடங்கு அதிகமாக வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அண்மையில் கைசாத்திட்டிருந்தார், ஜேர்மன் அதிபரும் திங்கள்கிழமை நடைபெறும் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜேர்மன் தரப்பு கூறியுள்ளது.

இரஸ்சியாவின் மீதான பொருளாதார தடையின் அவசியம் பற்றி இச்சந்திப்பில் பேசப்படும் என ஜேர்மன் தரப்பு கூறியுள்ளது, புட்டின் ட்ரம்ப் சந்திப்பின் பின்னர் ட்ரம்பிற்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்கள் செலன்ஸ்கியுடன் ட்ரம்ப் தொலை தொடர்பு உரையாடலில் ஈடுபட்டிருந்தார் எனும் நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்கள் ட்ரம்புடனான திங்கள்கிழமை சந்திப்பில் உக்கிரேன் சார்பான பார்வையினை ட்ரம்பிடம் வலியுறுத்த விரும்புவதாக கூறிய்ள்ளனர்.

கடந்த 3 வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்ட இந்த கொள்கைகளே பல உயிரிழப்பு பொருளிழப்பு என்பவற்றிற்கு காரணமாக அமைந்து உக்கிரேன், இரஸ்சியா, ஐரோப்பா, ஒட்டு மொத்த உலகிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பழைய பாதையில் தொடர்ந்து பயணிக்க விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்கள் நிலைப்பாடாக உள்ளது.

இந்த நிகழ்வில் புகழ்பெற்ற ஓவல் சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதியும் (ஜெ டி வான்ஸ்) கலந்து கொள்ளவுள்ளார், கடந்த ஐரோப்பிய ஒன்றிய மானாட்டில் அவர் பேசிய மக்கள் விருப்பிற்கெதிராக மக்களால் தெரிவு செய்யப்படும் ஐரோப்பியநாடுகளின் தலைவர்கள் நீக்கப்படுவது ஜனநாயக விரோத போக்கு என கூறியிருந்தார்.

ஐரோப்பாவில் பலவீனமான கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் கட்சிகளின் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் இருப்பதாக கருதுகிறேன், அதன் மூலம் தனது அதிகாரத்தினை பேண முயற்சிக்கும் ஒரு முயற்சியாக இதனை பார்க்கமுடிகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் இந்த போரை தொடர விரும்புவது கூட அதன் ஒரு தொடர்ச்சியாக இருக்கலாம், இந்த சந்திப்பில் பின்லன்ட் அதிபர் அலெக்சான்டர் ஸ்டப் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது, ருமேனிய அதிபர் கலந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

போரை தொடர முயற்சிக்க இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இரஸ்சியாவினை பலவீனப்படுத்துவதன் மூலம் போரை வெல்லலாம் எனும் அடிப்படையில் மேலதிக பொருளாதார தடை பற்றி விவாதிக்க விரும்புகின்றார்கள், அத்துடன் உக்கிரேனிற்கான பாதுகாப்பு உறுதியினை அமெரிக்காவிடம் கோரவும் முடிவு செய்துள்ளார்கள்.

இந்த முயற்சி ஒரு புறமிருக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை வோஸிங்டனில் புடின், ட்ரம்ப், செலன்ஸ்கி என ஒரு முத்தரப்பு சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது ட்ரம்ப் தனது முடிவில் உறுதியாக இருப்பது போல தெரிந்தாலும் திங்கள்கிழமை சந்திப்பின் பின்னரே போரா சமாதானமா என்பது தெரியவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

https://x.com/AGPamBondi/status/1956829431831605620/photo/1

மெலனி ட்ரம்ப் புட்டினுக்கு அனுப்பிய கடிதத்தில் இரஸ்சியாவினால் கடத்தப்பட்ட உக்கிரேனிய குழந்தைகள் பற்றி கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ரொய்டர்ஸ் ஊகத்தினடிப்படையில் இரஸ்சிய நிபந்தனைகள்.

  1. டொனஸ்க்ட் பிராந்தியத்தில் உக்கிரேன் வெளியேற்றம்.

  2. கேர்சன் சப்பரோசியா பகுதியில் நிலைகளில் மேலதிக முன்னேற்றம் மேற்கோள்ளப்படாது.

  3. சுமி, கார்கோவ் பகுதிகளை உக்கிரேனிடமே திரும்ப கொடுப்பது.

  4. நிலையான தீர்வு எட்டப்படும் வரை போர் நிறுத்தம் இல்லை.

  5. கிரிமியாவினை இரஸ்சிய பகுதியாக அங்கீகரித்தல்.

  6. பகுதி பொருளாதார தடை விலக்கல்.

  7. உக்கிரேன் எப்போதும் நேட்டோவில் இணையமுடியாது.

  8. ஆனால் அதற்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கல்.

  9. உக்கிரேனில் இரஸ்சிய மொழிக்கு உத்தரவாதம் மற்றும் பழமையான கிறிஸ்தவ ஆலய பாதுகாப்பு (உக்கிரேனில் இரஸ்சிய மொழி பேசுபவர்கள் மீது கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்)

மறுவளமாக செலன்ஸ்கி

1. உடனடி போர்நிறுத்தம் பின்னரே பேச்சுக்கள்.

2. தற்போதுள்ள முன்னிலைகளின் அடிப்படையிலேயே பேச்சுக்களை ஆரம்பிக்கலாம்.

3.டொனஸ்க்ட் இனை வழங்கமுடியாது.

4. பாதுகாப்பு உத்தரவாதம் அவர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புருமையினை தற்போது கோருகிறார் (நேட்டோ பற்றி குறிப்பிடப்படவில்லை)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, vasee said:

ரொய்டர்ஸ் ஊகத்தினடிப்படையில் இரஸ்சிய நிபந்தனைகள்.

  1. டொனஸ்க்ட் பிராந்தியத்தில் உக்கிரேன் வெளியேற்றம்.

  2. கேர்சன் சப்பரோசியா பகுதியில் நிலைகளில் மேலதிக முன்னேற்றம் மேற்கோள்ளப்படாது.

  3. சுமி, கார்கோவ் பகுதிகளை உக்கிரேனிடமே திரும்ப கொடுப்பது.

  4. நிலையான தீர்வு எட்டப்படும் வரை போர் நிறுத்தம் இல்லை.

  5. கிரிமியாவினை இரஸ்சிய பகுதியாக அங்கீகரித்தல்.

  6. பகுதி பொருளாதார தடை விலக்கல்.

  7. உக்கிரேன் எப்போதும் நேட்டோவில் இணையமுடியாது.

  8. ஆனால் அதற்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கல்.

  9. உக்கிரேனில் இரஸ்சிய மொழிக்கு உத்தரவாதம் மற்றும் பழமையான கிறிஸ்தவ ஆலய பாதுகாப்பு (உக்கிரேனில் இரஸ்சிய மொழி பேசுபவர்கள் மீது கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்)

ரஷ்யாவின் நிபந்தனைகள் நியாயமான நிபந்தனைகள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

10 hours ago, விசுகு said:

இதன் அர்த்தம் உக்ரைன் தனியே இல்லை என்பதை சொல்வதாகும்.

உக்ரேனுக்கு ஐரோப்பிய முதலாளித்துவம் மட்டுமே ஆதரவு. ஆனால் ரஷ்யாவிற்கோ உலகளாவிய ரீதியில் ஆதரவும் செல்வாக்கும் உள்ளது.

5 hours ago, ஏராளன் said:

புதினுக்கு வேண்டியது கிடைத்துவிட்டது - சிஎன்என்

அமெரிக்க தொலைக்காட்சியான சிஎன்என், அலாஸ்காவில் புதின் எதிர்பார்த்த அனைத்தும் அவருக்கு கிடைத்துவிட்டது எனத் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த செய்தி, "புதினுக்கு தனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்த அனைத்து முடிவுகளும் கிடைத்துவிட்டன. அதற்கு மாறாக டிரம்புக்கு சந்திப்புக்கு முந்தைய அவரின் சொந்த எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளது.

டிரம்புக்கு சிறிய பலன்கள் மட்டுமே கிடைத்துள்ளதா? என சிஎன்என் செய்தியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சிஎன் என் ஊடகத்துக்கு டொனால்ட் ரம்ப கண்ணிலையும் காட்டக்கூடாது. அதே போல் டொனால்ட் ரம்புக்கும் அந்த ஊடகத்த கண்ணிலையும் காட்டக்கூடாது. அதை விட சீச்சீ என் என் சொல்லுறதெல்லாம் உண்மை கண்டியளோ..🤣

  • கருத்துக்கள உறவுகள்

Trump tells Zelensky to give up Crimea and agree to never join NATO.

European leaders head to US: Ukrainian President Volodymyr Zelensky will be joined by key European leaders when he meets with Donald Trump on Monday. Trump has previewed the message he’ll deliver: Zelensky must agree to some of Russia’s conditions — including that Ukraine cede Crimea and agree never to join NATO — for the war to end.

https://www.cnn.com/politics/live-news/trump-putin-zelensky-ukraine-news-08-17-25

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

செலென்ஸ்கி… ஆப்பிழுத்த குரங்கின் நிலைமையில் உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

including that Ukraine cede Crimea and agree never to join NATO — for the war to end.

இதை முன்னரே செய்திருந்தால் இந்த சண்டையே வந்திருக்காது போல.

45 minutes ago, தமிழ் சிறி said:

செலென்ஸ்கி… ஆப்பிழுத்த குரங்கின் நிலைமையில் உள்ளார்.

இவருக்கு மட்டுமல்ல ஐரோப்பாவுக்கும் ஆப்பு தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

இதை முன்னரே செய்திருந்தால் இந்த சண்டையே வந்திருக்காது போல.

இதைத்தான் அன்று தொடக்கமே சொல்லி வருகின்றோம்

18 hours ago, ஈழப்பிரியன் said:

இவருக்கு மட்டுமல்ல ஐரோப்பாவுக்கும் ஆப்பு தான்.

சோவியத் ஒன்றியத்தை பல கூறுகளாக்கி விட்டு இவர்கள் மட்டும் ஐரோப்பிய ஒன்றியம் என விரிவடைந்தால் ரஷ்யன் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டிருப்பானா?

விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யாவை பலவீனமாக தப்புக்கணக்கு போட்டது ஐரோப்பா. விழித்துக்கொண்டது அமெரிக்கா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 18/8/2025 at 06:00, தமிழ் சிறி said:

செலென்ஸ்கி… ஆப்பிழுத்த குரங்கின் நிலைமையில் உள்ளார்.

ரசித்தேன் சிரித்தேன்....😂

Gys-W6ml-WIAMN9v-R.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 18/8/2025 at 07:47, குமாரசாமி said:

ரஷ்யாவின் நிபந்தனைகள் நியாயமான நிபந்தனைகள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இரு தரப்பும் சரிநிகர் சம பங்காளிகளாகக்கருதப்பட வேண்டும், இந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஈடுபடும் அமெரிக்கா தாம் போருக்கான ஆயுத உதவி வழங்கவில்லை, ஆயுதங்களை விற்கிறோம் என கூறி ஒரு நடுவுநிலைமையினை வலிந்து உருவாக்க முயலுகின்றனர், ஆனால் அவர்களது பொருளாதார தடை இன்னமும் அமுலில் உள்ளநிலையில் எவ்வாறு ஒரு நடுவு நிலையான மஸ்தியஸ்தராக இருக்கமுடியும்?

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பின்லாந்து அதிபர் அலெக்ஸ்சான்டர் ஸ்டப் தான் இந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சேர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன் என்பதற்கு அவர் கூறிய காரணம், சிறிய நாடான பின்லாந்து நீண்ட எல்லையினை இரஸ்சியாவுடன் கொண்ட நாடாக இருந்து நீண்ட காலமாக நிலவிய பிரச்சினையினை 8 ஆண்டுக்களுக்கு முன்னர் முடிவிற்கு கொண்டு வந்ததாக கூறியிருந்தார் அது ஒரு நடுவு நிலையான நாடாக பின்லாந்து மாறியதனை குறிப்பால் கூறியிருந்தார், ஆனால் அண்மையில் பின்லாந்து நேட்டோவில் இணைந்ததனை பற்றி கூறவிலை.

உக்கிரேன் அவசரகால அதிபர் செலன்ஸ்கி, உக்கிரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தின் பின்னரே ஒரு தேர்தலை நடத்த முடியும் என கூறியுள்ளார்.

உக்கிரேனை தொடர்ந்து போர் பாதையில் கொண்டு செல்ல வைப்பதற்காக உக்கிரேனை மீண்டும் இராணுவரீதியாக கட்டியெழுப்ப வேண்டும் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விருப்பினையே செலன்ஸ்கியும் பிரதிபலிக்கின்றார்.

உக்கிரேன் தன்னை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பி இரஸ்சியாவிற்கு பொருளாதார ரீதியாக சவாலாக அமைய வேண்டும் மேலும் மேலும் போருக்கு தன்னை ஈடுபடுத்தினால் உக்கிரேன் தேசத்திற்கான எதிர்காலம் இல்லாமல் போய்விடும்.

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி குறிப்பிட்டுள்ளார், ஏற்கனவே நேட்டோ எனும் அமைப்பு இருக்கும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எஜமானர்களின் பலத்தினை அதிகரிக்க எடுக்கும் ஒரு முயற்சியாகவும் இருக்கலாம்.

மத்திய கிழக்கு போல ஒரு சிக்கலான நிலையினை நோக்கி ஐரோப்பாவினை இந்த ஐரோப்பிய ஒன்றியம் அழைத்து செல்கிறதோ என தோன்றுகிறது.

நிலையான போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் மீண்டும் ஒரு மின்ஸ்க் உடன்படிக்கை போன்ற ஒன்றை உருவாக்கி இன்னுமொரு போரை தொடங்கும் சமாதானமாக இல்லாமல் இருக்கவேண்டும்.

உக்கிரேன் தன்னை பொருளாதார வளர்ச்சி நோக்கி முன்னகர்த்த சிறுபான்மை உக்கிரேனியர்களான போலிஸ், கங்கேரியன், ருமேனியன் சிறுபான்மை சமூகத்திற்கும் சேர்த்து ஒரு நல்ல தீர்வை இந்த தீர்வுத்திட்டத்துடன் சேர்த்து சமாந்தரமாக வழங்கப்படவேண்டும்.

9 hours ago, குமாரசாமி said:

ரசித்தேன் சிரித்தேன்....😂

Gys-W6ml-WIAMN9v-R.jpg

இந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்கள் 7 மந்திரகுள்ளர்கள் (seven dwarfs) 🤣என இணையத்தில் வர்ணிக்கிறார்கள்.

முடிவு எடுப்பதில் செலன்ஸ்கி தனது நாட்டினை பிரதிபலிக்கும் தலைமைத்துவ பண்பை வெளிப்படுத்த வேண்டும், இப்படி ஒரு அணியினை அழைத்து சென்று ஒரு சேவகனாக காட்டிக்கொண்டுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, vasee said:

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பின்லாந்து அதிபர் அலெக்ஸ்சான்டர் ஸ்டப் தான் இந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சேர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன் என்பதற்கு அவர் கூறிய காரணம், சிறிய நாடான பின்லாந்து நீண்ட எல்லையினை இரஸ்சியாவுடன் கொண்ட நாடாக இருந்து நீண்ட காலமாக நிலவிய பிரச்சினையினை 8 ஆண்டுக்களுக்கு முன்னர் முடிவிற்கு கொண்டு வந்ததாக கூறியிருந்தார் அது ஒரு நடுவு நிலையான நாடாக பின்லாந்து மாறியதனை குறிப்பால் கூறியிருந்தார், ஆனால் அண்மையில் பின்லாந்து நேட்டோவில் இணைந்ததனை பற்றி கூறவிலை

ஐரோப்பிய ஒன்றியத்தினர் பின்லாந்தினது நேட்டோ இணைவினை வரலாற்று நிகழ்வாக கொண்டாடினர்.

நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் விரிவடைய வேண்டும் ஆனால் சோவியத் ஒன்றியம் சிதறுண்டது மட்டுமல்லாமல் தற்போதைய ரஷ்யாவும் சிதறி சுக்கு நூறாக வேண்டும்.மேற்குலகின் நல்ல சிந்தனை.

51 minutes ago, vasee said:

உக்கிரேன் அவசரகால அதிபர் செலன்ஸ்கி, உக்கிரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தின் பின்னரே ஒரு தேர்தலை நடத்த முடியும் என கூறியுள்ளார்.

செலென்ஸ்கி பதவியில் இருப்பதினால் தான் இவ்வளவு பிரச்சனையும் அவலங்களும் என ஜேர்மனிக்கு அகதி விருந்தாளிகளாக வந்த உக்ரேன் மக்களே சொல்ல கேள்விப்பட்டுளேன்

55 minutes ago, vasee said:

உக்கிரேனை தொடர்ந்து போர் பாதையில் கொண்டு செல்ல வைப்பதற்காக உக்கிரேனை மீண்டும் இராணுவரீதியாக கட்டியெழுப்ப வேண்டும் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விருப்பினையே செலன்ஸ்கியும் பிரதிபலிக்கின்றார்.

உக்கிரேன் தன்னை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பி இரஸ்சியாவிற்கு பொருளாதார ரீதியாக சவாலாக அமைய வேண்டும் மேலும் மேலும் போருக்கு தன்னை ஈடுபடுத்தினால் உக்கிரேன் தேசத்திற்கான எதிர்காலம் இல்லாமல் போய்விடும்.

ஐரோப்பிய ஒன்றியம் வளர்ந்து வரும் போதே உக்ரேன் எனும் சேறு நிறைந்த சாக்கடைக்குள் கால் வைத்து விட்டது. நிமிர்வது வலு கஷ்டம். ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றிய உருவாக்கம் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் எரிச்சலை கொடுத்த விடயம்.

1 hour ago, vasee said:

மத்திய கிழக்கு போல ஒரு சிக்கலான நிலையினை நோக்கி ஐரோப்பாவினை இந்த ஐரோப்பிய ஒன்றியம் அழைத்து செல்கிறதோ என தோன்றுகிறது.

இன்றைய ஜேர்மனி ஊடக செய்திகளை பார்த்தால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது. உக்ரேனுக்கு மிண்டு கொடுக்கப்போய் ஒட்டு மொத்த ஐரோப்பாவையும் நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றார்கள். ஜேர்மனி தன் படைகளை உக்ரேன் பாதுகாப்பிற்கு அனுப்ப வேண்டுமாம்.

ஐரோப்பிய ஒன்றியம் முதலில் உக்ரேனில் போர் நிறுத்தம் வேண்டும் என்கிறார்கள்.அதன் பின் பேச்சுவார்த்தைகளை தொடரலாம் என்பது போல் நிற்பந்தத்தை உருவாக்க முனைகின்றார்கள்.

போர் நிறுத்தத்தால் வந்த விளைவுகள் என்ன என்பதை ஈழத்தமிழர்கள் நன்கு அறிவார்கள். கத்தி எடுத்தவன் கத்தியை கீழே வைத்தால் என்ன நடக்கும் என்பதை புட்டின் நன்கு அறிவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Gysn-ALe-XEAEGNQi.jpg

அமெரிக்கா இல்லாமல் ஐரோப்பா இயங்க முடியாது என்பதற்கு ஒட்டு மொத்த சாட்சியும் இதுதான்.

நேட்டோ உட்பட....

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஈடுபடும் அமெரிக்கா தாம் போருக்கான ஆயுத உதவி வழங்கவில்லை, ஆயுதங்களை விற்கிறோம் என கூறி ஒரு நடுவுநிலைமையினை வலிந்து உருவாக்க முயலுகின்றனர்,

இந்த ஆயுதங்களுக்கு ஐரோப்பா பணம் கொடுக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஐரோப்பிய ஒன்றியத்தினர் பின்லாந்தினது நேட்டோ இணைவினை வரலாற்று நிகழ்வாக கொண்டாடினர்.

நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் விரிவடைய வேண்டும் ஆனால் சோவியத் ஒன்றியம் சிதறுண்டது மட்டுமல்லாமல் தற்போதைய ரஷ்யாவும் சிதறி சுக்கு நூறாக வேண்டும்.மேற்குலகின் நல்ல சிந்தனை.

செலென்ஸ்கி பதவியில் இருப்பதினால் தான் இவ்வளவு பிரச்சனையும் அவலங்களும் என ஜேர்மனிக்கு அகதி விருந்தாளிகளாக வந்த உக்ரேன் மக்களே சொல்ல கேள்விப்பட்டுளேன்

ஐரோப்பிய ஒன்றியம் வளர்ந்து வரும் போதே உக்ரேன் எனும் சேறு நிறைந்த சாக்கடைக்குள் கால் வைத்து விட்டது. நிமிர்வது வலு கஷ்டம். ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றிய உருவாக்கம் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் எரிச்சலை கொடுத்த விடயம்.

இன்றைய ஜேர்மனி ஊடக செய்திகளை பார்த்தால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது. உக்ரேனுக்கு மிண்டு கொடுக்கப்போய் ஒட்டு மொத்த ஐரோப்பாவையும் நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றார்கள். ஜேர்மனி தன் படைகளை உக்ரேன் பாதுகாப்பிற்கு அனுப்ப வேண்டுமாம்.

ஐரோப்பிய ஒன்றியம் முதலில் உக்ரேனில் போர் நிறுத்தம் வேண்டும் என்கிறார்கள்.அதன் பின் பேச்சுவார்த்தைகளை தொடரலாம் என்பது போல் நிற்பந்தத்தை உருவாக்க முனைகின்றார்கள்.

போர் நிறுத்தத்தால் வந்த விளைவுகள் என்ன என்பதை ஈழத்தமிழர்கள் நன்கு அறிவார்கள். கத்தி எடுத்தவன் கத்தியை கீழே வைத்தால் என்ன நடக்கும் என்பதை புட்டின் நன்கு அறிவார்.

ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய சிந்தனை அடிப்படையில் சிறப்பான ஒன்று, நாடுகளுக்கிடையே தங்குதடையற்ற வர்த்தகம், ஒரே பரிமாற்று நாணயம் என பொருளாதார ரீதியிலமைந்த அதன் பங்கு மெல்ல மெல்ல ஆட்சி அதிகாரம் நோக்கி மெல்ல்ல நகரத்தொடங்கியிள்ளது.

அத்துடன் ஒரு நாட்டினை போல பாதுகாப்பு விடயங்களிலும் தமது ஆதிக்கத்தினை செலுத்துகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படாத தலைவர்களாக இருக்கிறார்கள், அதனால் அவர்கள் மக்களின் விருப்பிலிருந்து விலகி செல்கிறார்களோ என கருதுகிறேன்.

ருமேனியா, போலன்ட், செக் குடியரது, கங்கேரி என உள்நாட்டு தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள் அந்த நாட்டு சட்டத்துறையால் மறுக்கப்பட்ட நிகழ்வின் பின்னணியில் இந்த ஐரோப்பிய ஒன்றியம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகாரத்தினை பேணுவதற்கான முயற்சியில் சில பல தவறான முடிவுகளை இந்த அமைப்பு எடுக்கிறதாக கருதுகிறேன், ஐரோப்பிய ஒன்றியம் அது ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து விலகி ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்கும் நாடுகளுக்கே சவாலாக மாறிவருகிறதாக கருதுகிறேன்.

ஆரம்பத்தில் புட்டின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொதுவான பாதுகாப்பு உத்தரவாதம் (தற்போது கூறப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொதுவான பாதுகாப்பு உத்தரவாதத்தினை முன்னரே புட்டின் கூறியுள்ளார்) மற்றும் இரஸ்சியா நேட்டோவில் இணைவதற்கும் விருப்பம் தெரிவித்திருந்தார், அப்படி இரஸ்சியா அப்போதே நேட்டோவில் இணைந்தால் தற்போதய பிரச்சினை வந்திருக்காது என கருதுகிறேன்.

இரஸ்சிய இரும்பு அதிகாரத்தின் மூலம் இரஸ்சியாவின் வளங்கல் தேசியமயப்பட்டமையால் ஏற்பட்ட பிரச்சினையாக இருக்கலாம் என கருதுகிறேன்.

இது தற்போது ஐரோப்பா இரண்டுபட்டுள்ள நிலமைக்கு இட்டு சென்றுள்ளது, இரஸ்சியாவில் நிலவும் இத்தகைய ஆட்சி பொறிமுறைமை ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறைக்கு நேர் எதிராக இருப்பதனால் ஒரு உறையில் இரண்டு வால் இருக்கமுடியாது எனும் நிலையில் தற்போதய உக்கிரேன் திட்டம் தோல்வியில் முடிந்தாலும் வேறு ஒரு வகையில் இரஸ்சியாவிற்கிடையே வேறு வகையான வடிவத்தில் மறைமுக போர் இடம்பெறலாம் என கருதுகிறேன்.

தற்போது இரஸ்சியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் உக்கிரேனிற்கும் தம்மால் ஆபத்து ஏற்படாது எனும் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க உள்ளதாக கூறுகிறார்கள், அதற்கு தற்போதுள்ள அடிப்படை பிரச்சினைகள் தீர்வு காணப்பட வேண்டும் என கூறப்படுவதாக கூறப்படுகிறது, அடிப்படையில் இரஸ்சியா ஒன்றும் பெரிய பலமான சக்தி இல்லை என கருதுகிறேன், ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய நாட்டு தலைவர்களும் மக்களை இரஸ்சியா பற்றிய பயத்தினை உருவாக்கி தமது தேவைகளை நிறைவேற்றுகிறார்களோ என கருதுகிறேன்.

ருமேனியா, கிறீஸ் போல ஒரு பொருளாதார வங்குரோத்து நோக்கி நகர்வதாக கூறுகிறார்கள், பல்நாட்டு நிறுவனங்கள் சாமானிய மக்களின் வாழ்க்கைதரத்தினை பொருளாதார ரீதியாக மோசமாக்குவதாக கருதுகிறேன், அதற்கு ஏற்ப ஐரோப்பிய ஒன்றிய சட்டதிட்டங்கள் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும் சாமானியர்களுக்கு எதிராகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது ஐரோப்பாவிற்கு ஆபத்து இரஸ்சியாவினால் வரும் என கருதவில்லை ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வரலாம் என கருதுகிறேன் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

10 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த ஆயுதங்களுக்கு ஐரோப்பா பணம் கொடுக்கும்?

90 பில்லியனுக்கு ஆயுதங்களை செலன்ஸ்கி எதிர்பார்க்கிறார், அதற்கான பணத்தினை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வழங்கவேண்டும், அமெரிக்க கருவூல செயலாளர் உக்கிரேனுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினூடாக வழங்கப்படும் ஆயுதங்கள் 10% விலை அதிகரிப்பு காணப்படலாம் என கூறியுள்ளாராம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.