Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலைஞருக்கு வாழ்த்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்செல்வனையும் போராளிகளை இழந்த துயர்ப் பொழுதில் ஈழத் தமிழருக்கு ஆறுதலான கலைஞருக்கு நன்றி.

கலைஞருக்கு வாழ்த்து

-வ.ஐ.ச.ஜெயபாலன்

காலத்தில் சோழனுக்கு

நீர் ஏந்திக் கல்லணை

நிழலேந்திக் கோவில்.

சேரனுக்கோ

சிலம்பேந்தி வந்த தமிழிச்சி.

பாண்டடியற்கோ சங்கம்.

அடையா நெடுங்கதவும்

ஆஞ்சல் எனும் சொல்லுமாய்

எம் புகலான தமிழகத்தின் தலைவனுக்கு?

கலைஞா உனக்கு

காலச் சுவடாக

விலங்கொடித்தால் ஈழம் இருக்கும்

ஐயா நீ உலகுள்ள வரை வாழ்வாய்

visjayapalan@gmail.com

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம், ஆறுதல் கவிதை எழுதியமைக்கு நன்றி. தமிழ்ச்செல்வனைக் கொல்லப் பாவித்த குண்டுகள் சாதனங்களை மத்திய அரசு கொடுத்துதவிய போது வாளாவிருந்தமைக்கும் நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியை அண்ணாத்துரை "நீ உறையில் உள்ள உடைவாள் " என்று கூறியது ஞாபகப்படுத்த தக்கது.

கவிதை எழுதுவது கலைஞருக்கு பெரியவிடயம் இல்லை. தமிழ்நாட்டில் வாழும் விடுதலைப்புலிகளின் அனுதாபிகளின் வோட்டை பாட்டாளிமக்கள்கட்சியிடமோ வைக்கோவிடமோ விட்டுக்கொடுக்க விரும்பவில்லை கலைஞர். உண்மையான அன்பு இது அல்லவே. உணவின்றி வாடும் எமதுறவுகளுக்கு உணவை அனுப்பிவைக்க நெடுமாறன் ஐயா முனைந்தபோது ஆக்கபூர்வமாக என்ன செய்தார்.

ஒரு தடவை தனிநாடு கிடைத்தால் சந்தோசம் என்றார். இது எப்படியென்றால் பசித்த பிள்ளைகளுக்கு உணவு இட்டு பசியாற்றாது அவர்கள் எவ்வழியிலாவது பசியாறினால் சந்தோசம்என்பதுபோல்தொனித்தத

மன்னிக்கவும்

Edited by Ponniyinselvan

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் இரங்கள் கவிதையை விமர்சிக்கும் நேரமில்லை இது.

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் மறைவின் போது, இலண்டன் அலேக்ஸாண்டா மண்டபத்தில் நடைபெற்ற அஞ்சலிக்கூட்டத்தில் தொல் திருமாவளவன், மதிமுக உறுப்பினர் ஒருவரும் கலந்து கொண்டார்கள். தேசத்தின் குரலுக்கு தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி, வைகோ, வீரமணி, இராமதாஸ், விஜயகாந்த உட்பட பலர் இரங்கல் தெரிவித்தார்கள். வன்னியில் இருந்து போராளிகள் பாலசிங்கம் அவர்களுக்கு வழங்கிய இரங்கல் அலேக்ஸாண்டா மண்டபத்தில் காண்பிக்கப்பட்டது. அப்பொழுது பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள், தேசத்தின் குரலுக்கு இரங்கல் தெரிவித்தமைக்காக தமிழக சகோதர்களுக்கு குறிப்பாக முதன்மையாக கலைஞர் அவர்களுக்கே நன்றி செலுத்தினார். அகவே இங்கு கலைஞர் அவர்களை விமர்சிப்பது தமிழ்ச்செல்வன் அவர்கள் மறைந்த தற்காலத்தில் அழகல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பொழுது பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள், தேசத்தின் குரலுக்கு இரங்கல் தெரிவித்தமைக்காக தமிழக சகோதர்களுக்கு குறிப்பாக முதன்மையாக கலைஞர் அவர்களுக்கே நன்றி செலுத்தினார். அகவே இங்கு கலைஞர் அவர்களை விமர்சிப்பது தமிழ்ச்செல்வன் அவர்கள் மறைந்த தற்காலத்தில் அழகல்ல.

நன்றி கந்தப்பு,

இந்த பக்கத்தை வாசிக்கிற தமிழக நண்பர்கள் உங்களுக்கு நன்றி சொல்வார்கள். எப்போதும் வட்டத்தைப் பெருப்பிக்கிறதுதான் விடுதலைக்கு நம்மால் இயன்ற பங்களிப்பாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது தோழி கவிஞர் கனிமொழியின் இரங்கல் சேதி மனதுக்கு ஆறுதல் தருகிறது. இந்திய கம்பூனிஸ்ட் கட்ச்சி தோழர் மகேந்திரன் ஈழத் தமிழர்களின் நீண்ட நாள் நண்பர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சசியின்ன ஆதரவுக் குரலுக்காக ஈழத் தமிழர்கள் தோழர்கள் மகேந்திரனுக்கும் நல்ல்லகண்ணுவ்வுக்கும் த.பாண்டியனுக்கும் நன்றி சொல்லவேண்டும். தோழி கனிமொழியையும் தோழர்கள் மாகேந்திரன், நநல்லகண்ணு, பாண்டியன் முதலானவர்களையும் ஈழத் தமிழர்கள் என்றும் நன்றியுடன் நினைவு கூருவார்கள். இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் எளுச்சி மாக்சிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களின் கண்களையும் திறக்க வேண்டும்.

கலைஞரின் தேவை நமக்கு உண்டு ஆகவே வீணாண விவாதங்களை தவிர்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் , ஈழதமிழ் மக்களுக்கு என்ன செய்கிறார் என்பதில் தமிழ் நாட்டு சகோதரர்களே சந்தேகம் கொள்ளும் போது நாம் எம்மாத்திரம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறையிலுள்ள உடைவாள்?? இந்த வாள் உறையை விட்டு எமக்காக வெளிவராது. ஒரு கலைஞர் ரிவி ஆரம்பித்து நமிதா ஸ்ரேயா போன்றோரின் புதுப்பாடல்கள் போடத்தான் இந்த வாளின் கூர்மை இப்போது பயன் படுகிறது.இதன் போலிக்கண்ணீருக்கும் வார்த்தை ஜாலத்திற்கும் உண்மையான அர்த்தம் புரியாமல் தமிழ்நெற் தலைவணங்கியிருப்பது அதிசயமாயிருக்கிறது எனக்கு.

<<

மிகச் சரியாகச் சொன்னீர்கள் கலைஞரின் கவிதைக்கு நல்ல பதில் கவிதை ஒன்றை முத்தமிழ் என்ற குழுமத்தைச் சேர்ந்த திரு: வைத்தியர் சங்கர் குமார் எழுதி இருக்கின்றார் இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்:

எங்கு சென்றாய் எனக் கேட்கும் தலைவா

அங்கு நீயின்னும் செல்லாததாலன்றோ

பொங்குதமிழ்க் கவி புனைந்து

விஞ்சு புகழ் பாடுகின்றாய்!

நாற்பது எம்ப்பீக்கள் உன்கையில்

நாநிலம் நடப்பதுமோ உன் தயவில்

என்ன செய்தாய் இதுவரையில்

தமிழீழம் கிடைப்பதற்கு

போக்குவரத்துத்துறை கிடைக்க

போர்க்கொடி நீ பிடித்தாய்

தனியறையில் மறைந்துகொண்டு

தனித்துவம் நீ பெற்றாய்!

தமிழீழம் பற்றியொரு

தனிக்குரல் கொடுத்ததுண்டா

இதுவரையில் சொல்லப்பா

சொல்லின் செல்வனே!

தமிழ்ச்செல்வன் போனாலென்ன

செல்வங்கள் பலவற்றை

விதித்துத்தான் சென்றிட்டான்

அதுபற்றிக் கவலை வேண்டா!

முகஸ்துதியாய் வார்த்தைகளை

கொட்டுவதை விடுத்திட்டு

தனியீழம் பற்றியொரு

மசோதாவைக் கொண்டுவந்து

அதுதோற்கினும் உன்புகழை

தமிழனுக்குக் குரல் கொடுத்த

தனிப்பெரும் தலைவனெனும்

பெயரினை நீ பெற்றிட்டால்

அதுவே நீ வாழ்ந்த

எண்பதாண்டுக்குப் பெருமை

இதை நீ உணரமாட்டாய்

உன் கவலை இதுவல்ல

எம்தமிழர் ஒவ்வொன்றாய்

செத்தாலும் உனக்கிங்கு

கவலையில்லை ஏனென்றால்

உன்கையில்தான் தமிழிருக்கே

பாடிடு இன்னொரு இரங்கல் கவிதை

மூடிடு உன் இதயக் கதவை

தொடர்ந்திடும் எம்தமிழர் போராட்டம்

விடிந்திடும் ஓர்நாள் தமிழீழம்

நன்றி: வைத்தியர் சங்கர் குமார்.

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள், தேசத்தின் குரலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தமைக்காக கலைஞர் கருணாநிதிக்கு நன்றிகள் சொல்லி இருந்தார். கருணாநிதி அவர்களின் ஈழ ஆதரவு குறைவாக இருந்தாலும் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் கருணாநிதி அவர்களை நட்புடன் அரவணைக்கவே விரும்புகிறது. கருணாநிதி அவர்கள் வை.கோ, நெடுமாறன், திருமாவளவன், மருத்துவர் தமிழ்குடிதாங்கி போன்றவர்களைப் போல ஆதரவு தரவில்லை என்றாலும் விடுதலைப்புலிகள் நட்புடன் கலைஞரை அழைப்பதினால் நாமும் கலைஞர் அவர்களை விமர்சிப்பதைக் குறைக்கலாம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள், தேசத்தின் குரலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தமைக்காக கலைஞர் கருணாநிதிக்கு நன்றிகள் சொல்லி இருந்தார். கருணாநிதி அவர்களின் ஈழ ஆதரவு குறைவாக இருந்தாலும் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் கருணாநிதி அவர்களை நட்புடன் அரவணைக்கவே விரும்புகிறது. கருணாநிதி அவர்கள் வை.கோ, நெடுமாறன், திருமாவளவன், மருத்துவர் தமிழ்குடிதாங்கி போன்றவர்களைப் போல ஆதரவு தரவில்லை என்றாலும் விடுதலைப்புலிகள் நட்புடன் கலைஞரை அழைப்பதினால் நாமும் கலைஞர் அவர்களை விமர்சிப்பதைக் குறைக்கலாம் தானே.

கந்தப்பு, சரியாகச் சொன்னீர்கள்!

எனது கருத்தும் இதுவே.

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் மறைவின் போது, இலண்டன் அலேக்ஸாண்டா மண்டபத்தில் நடைபெற்ற அஞ்சலிக்கூட்டத்தில் தொல் திருமாவளவன், மதிமுக உறுப்பினர் ஒருவரும் கலந்து கொண்டார்கள். தேசத்தின் குரலுக்கு தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி, வைகோ, வீரமணி, இராமதாஸ், விஜயகாந்த உட்பட பலர் இரங்கல் தெரிவித்தார்கள். வன்னியில் இருந்து போராளிகள் பாலசிங்கம் அவர்களுக்கு வழங்கிய இரங்கல் அலேக்ஸாண்டா மண்டபத்தில் காண்பிக்கப்பட்டது. அப்பொழுது பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள், தேசத்தின் குரலுக்கு இரங்கல் தெரிவித்தமைக்காக தமிழக சகோதர்களுக்கு குறிப்பாக முதன்மையாக கலைஞர் அவர்களுக்கே நன்றி செலுத்தினார். அகவே இங்கு கலைஞர் அவர்களை விமர்சிப்பது தமிழ்ச்செல்வன் அவர்கள் மறைந்த தற்காலத்தில் அழகல்ல.

கலைஞர் கருணாநிதி தமிழ் மக்களிற்கு உதவி செய்ய நினைத்தாலும் அவரால் செய்ய முடியாது ஏனெனில் அவர்களிடம் அதிகாரம் இல்லை,ஒரு இரங்கல் கவிதைக்கே ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூறும் எதிர்கட்சிகள் எப்படி எமது மக்களிற்கு உதவி செய்ய விடுவார்கள்.

அப்பு கந்தப்பு எல்லாரும் இரங்கல் செய்தி தந்துள்ளார்கள் அது ஏன் கலைஞருக்கு மட்டும் வாழ்த்துபாட வேண்டும்.அப்படி பார்க்க போனால் சகலருக்கும் அல்லோ வாழ்த்து கவிதை தெரிவித்து இருக்க வேண்டும் வைகோ, வீரமணி, இராமதாஸ், விஜயகாந்,பாரதிராஜா இவர்களும் இரங்கல் அனுப்பி உள்ளார்கள் இவர்களுக்கு ஏன் வாழ்த்துகவிதை எழுதவில்லை எமது போராட்டத்தை பொறுத்தவரையில் இவர்களால் என்ன செய்யமுடியுமோ அதையே தான் கருணாநிதியாலும் செய்ய முடியும் அதை மிஞ்சி ஒன்றும் செய்ய முடியாது.

முகஸ்துதியாய் வார்த்தைகளை

கொட்டுவதை விடுத்திட்டு

தனியீழம் பற்றியொரு

மசோதாவைக் கொண்டுவந்து

அதுதோற்கினும் உன்புகழை

தமிழனுக்குக் குரல் கொடுத்த

தனிப்பெரும் தலைவனெனும்

பெயரினை நீ பெற்றிட்டால்

அதுவே நீ வாழ்ந்த

எண்பதாண்டுக்குப் பெருமை

இதை நீ உணரமாட்டாய்

அருமையான வரிகள்.

சோகத்தில் பங்கெடுத்த எல்லாத் தமிழர்க்கும் நன்றி. தமிழீழத்

தாகத்தில் பங்கெடுத்தால் இன்னும் கோடி நன்றி. :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞருக்கு வாழ்த்து கலைஞருக்கு மட்டுமன்றி தமிழ் கூறும் உல்கம் முழுவதும் பரவலாகச் சென்றடைந்துள்ளது. பலர் மீழ் பிரசுரம் செய்துள்ளனர். சாதகமான எதிர் வினைகள் கிடைத்திருக்கிறது.

இந்தக் கவிதையை வெளியிட்ட யாழ் இணையத்துக்கு எனது நன்றிகள்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

உறையிலுள்ள உடைவாள்?? இந்த வாள் உறையை விட்டு எமக்காக வெளிவராது. ஒரு கலைஞர் ரிவி ஆரம்பித்து நமிதா ஸ்ரேயா போன்றோரின் புதுப்பாடல்கள் போடத்தான் இந்த வாளின் கூர்மை இப்போது பயன் படுகிறது.இதன் போலிக்கண்ணீருக்கும் வார்த்தை ஜாலத்திற்கும் உண்மையான அர்த்தம் புரியாமல் தமிழ்நெற் தலைவணங்கியிருப்பது அதிசயமாயிருக்கிறது எனக்கு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30800

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிப் பரணி கவிதை உண்மையில் போராளிக் கவிஞர் கருணாகரனுடன் மசேஞ்சரில் அளவளாவும்போது துண்டு துண்டாக மசெஞ்சரில் எழுதி பின்னர் வெட்டி ஒட்டி இணைத்தது. உண்மையில் உணர்வு பூர்வமாக ஒரே மூசில் எழுதப் பட்ட அஞ்சலி இது. கவிதை உள்ளடக்கம் உருவம் எல்லாம் சடில் எழுதுகிற வேகத்தில் வந்தமைந்ததுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைன்னரின்கவிதை தொடர்பாக அரசியல் துறை பொருப்பாளர் பா.நடேசன் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

கேள்வி: தமிழ்ச்செல்வனுக்குத் தமிழக முதல்வர் இரங்கல் கவிதை எழுதினார். அந்தக் கவிதை ஈழத் தமிழரிடம் வரவேற்பையும் தமிழகத்தில் சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறதே?

பதில்: தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் கவிதை வரிகள் தமிழகத்தின் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது. எங்கள் காயங்களுக்குக் களிம்பு தடவுவதாக இருந்த அந்தக் கவிதைக்கு ஈழத்தமிழர்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். மற்றபடி இந்த இரங்கல் கவிதையை முன்வைத்து எழுப்பப்படும் சர்ச்சைகள் பற்றி நான் கூற எதுவும் இல்லை.

அவருட்டிய கருத்தை வரவேற்க்கிறேன்

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யழ்கள நண்பர்கள் பொறுமையாக மீண்டும் என் கவிதையையும் விமர்சனக் கருத்துக்கலையும் மீண்டும் வசியுங்கள். நாழைக்காக சிந்திப்பதும் அவசியமல்லவா.

  • 1 month later...

-வ.ஐ.ச.ஜெயபாலன்

ஏன் உங்கள் கவிதைகளை இங்கு காணவில்லை.... உங்கள்கவிதைகளை சுவைக்கும் ரசிகன் நான்...அதிகம் காத்திருக்க வைக்காதீர்கள்-அன்புடன் எல்லாள மஹாராஜா

Edited by எல்லாளன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.