Jump to content

மாப்பிள்ளை கொழும்பாம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

குகனும்,மதனும் பாலர் பாடாசலை முதல் உயர்தரம் வரை ஒன்றாக படித்தவர்கள் மதன் இடையில் ஒருவருடம் கொழும்பில் படித்தவன்.இருவருக்கும் மருத்துவராக வேண்டும் என்ற நினைப்பு ஆனால் முயற்சி இல்லாமல் உயர்தரம் மூன்று முறை எடுத்தும் முயற்சி வெற்றி அளிக்கவில்லை.தொடர்ந்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது மதனிம் மாமன் கொழும்பு வரும்படியும் அங்கு ஜ.சி.எம்.ஏ செய்ய வரும் படி கடிதம் போட்டிருந்தார் மதனிற்கு அந்த யோசனை நல்லதாகபட்டது உடனே குகனையும் வரும்படி கேட்டான் குகன் மறுத்துவிட்டான் உயிரியல் பாடம் படித்துவிட்டு எனி முதலே இருந்து கணக்காளர் படிப்பு படிக்க என்னால் முடியாது என்று மறுத்துவிட்டான்.மச்சான் நீ வராவிட்டால் உன்னுடைய ரிசல்ட் சீட் கொப்பி ஒன்றும் தரும்படி கேட்டான் குகன் ஒன்றும் புரியாம முழித்தான்,குகன் முழிப்பதை கண்ட மதன் விசயத்தை சொன்னான் தனக்கு ஜ.சி.எம்.ஏ செய்ய தகுதி காணது ஆகையால் உனது ரிசல்சீடை போட்டொகொப்பி எடுத்து அதில் எனது பெயரை வெட்டி ஒட்டி மீண்டும் போட்டோகொப்பி எடுத்தா அது எனது ரிசல்ட்சீட் மாதிரி இருக்கும் அதை லண்டனிற்கு அனுப்பினா அதை அவர்கள் பெரிதாக கண்டு கொள்ளமாட்டார்கள் ஒரு மாதிரி பதிவு பண்ணிபோடலாம்.பிறகு கொழும்பில் இருந்து டியூசனும் படித்து ஓடிட் நிறுவனத்திலும் வேலை பார்த்தால் பிரயோசனமாக இருக்கு ஆகவே தந்து உதவுமாறு நண்பணிடம் கேட்டான்.குகனும் கொடுத்து உதவினான்.

மதன் கொழும்பு சென்று படிக்க தொடங்கி சம்பளம் இல்லாமல் வேலை செய்வதாக இரண்டும்,முன்று கடிதம் போட்டிருந்தான் பிறகு தொடர்புகள் அற்று விட்டன குகனும் வெளிநாடு சென்று தனது படிப்பை தொடங்கி தொழில் பார்த்து கொண்டிருந்தான்.

குகனின் தந்தை ஒரு நாள் தொலைபேசியில் தங்கை சுதாவிற்கு நல்ல வரண் ஒன்று வந்திருப்பதாகவும் பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்து விசாரிக்கும்படி தந்தை கேட்டு கொண்டார்.பெடியன் சின்ன வயதில் இருந்து கொழும்பில் தான் படித்தது என்றும் சொன்னார்.குகன் தந்தை கொடுத்த இலக்கத்தை சுழற்றினான் மறுமுனையில் சிறிலங்கா ஆங்கில உரையாடல் தொடங்கியது.குகன் தன்னை அறிமுகபடுத்தி தன்னுடைய ஊரையும் தற்போது வெளிநாட்டில் வாழ்பதாகவும் தெரிவித்தான்.மதன் தான் ஒருவருடம் படித்த கொழும்பு பாடசாலையை குறிபிட்டு அங்கு தான் கல்வி பயின்றதாகவும் பெற்றோர்கள் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் விலாசி தள்ளினான்.குகனிற்கு இவனது பெயரையும்,குரலையும்,அவனது பெற்றோர்களின் ஊரை கேட்டதும் புரிந்துவிட்டது மதன் தனது நண்பன் தான் என்று ஆனால் மதனிற்கு காட்டிகொள்ளவில்லை.

தங்கை சுதாவிடம் தொடர்பு கொண்டு கிண்டல் பண்ணிணாண் என்ன மாப்பிளை கொழும்பாம் படித்தது,வளர்ந்தது எல்லாம் கொழும்பாம் என்ற கிண்டலிற்கு பதில் தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள் சுதா திருமண நாளை எதிரிபார்த்து கனவில் மூழ்கி காத்திருந்தாள்.குகனும் அந்த நாளை எதிரிபார்த்து காத்திருந்தான் மதனை கிண்டல் பண்ண.

(யாவும் கற்பனையே.......சீ கற்பனை கலந்த உண்மைகள் சகிக்க முடிந்தா சகித்து கொள்ளவும்)

Posted

நீங்கள் சொல்வது கற்பனை. ஆனால், பலர் இதைவிட மோசமான களவுகள் செய்கின்றார்கள். குறிப்பாக காசு கொடுத்து கள்ள டிகிரிகள் வாங்குவது. பிறகு கம்பியூட்டர் என்ஜினியர் அப்படி இப்படி என்று சொல்வது.

வழமையாக உள்ள சிறிய கம்பியூட்டர் கோர்ஸ்களிற்கும், கம்பியூட்டர் டிகிரியிற்கும் இடையில் பெரும் வித்தியாசம் உள்ளது. கம்பியூட்டரில் சில கோர்சுகள், சேர்டிபிகேட்டுக்கள் எடுப்பவர்கள் இப்படி டிகிரியை பல்கலைக்கழகம் ஒன்றில் முடித்ததாக சொல்லி காசு கொடுத்து வாங்கும்போது கண்டுபிடிக்கமுடியாமல் போகின்றது.

என்றாலும், எல்லாராலும் இப்படி செய்ய முடியாது. இதற்கு கொஞ்சம் மூளை தேவை. இல்லாவிட்டால் மாட்டுப்படவேண்டி வரும்.

Posted

புத்து மாமா கதை நல்லா இருக்கு இது ஒன்றும் சொந்த கதை இல்லை தானே அப்ப சரி :D ......நம்ம சுண்டல் அண்ணா கூட பிறந்தது அவுஸ்ரெலியா அதுவும் "வெஸ்மீட் சில்ரன்ஸ் கொஸ்பிட்டல்" என்று சொல்லி திரியிறார் :lol: !!இதை யாரும் நம்புவீனமோ :lol: !!"பொம்பிளை கொழும்பா இருந்தாலும் பரவாயில்லை" இது யாருக்கு எனக்கு தான் இப்ப என்ன சொல்ல வாரேன் என்று விளங்கிச்சோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உப்பிடித்தான் லண்டனில ஒருவர் பொறியியாளர் என்று சொல்லி கொழுத்த சீதனம் வாங்கி படிச்ச பெண்ணைத் திருமணம் செய்தார். மனைவிக்கு கணவர் பொறியியளாளர் இல்லை என்பது தெரிந்ததினால், பொறியியளாளராக வந்தால் தான் குடும்பம் நடத்துவேன் என்று சொல்ல கணவரும் லண்டன் சிற்றிப் பல்கலைக்கழகத்தில் 3 வருடம் படிக்க வேண்டிய பாடத்தை பரீட்சையில் தோல்வி அடைந்தும் ஒருவாறகா 4,5 வருடமாக படித்து முடித்து குடும்பம் நடாத்துகிறார். இது நடந்தது 10,15 வருடங்களுக்கு முன்பு.

Posted

வெளிநாடு வந்த 99.9 சத வீதமானவர்கள்

ஊரில் அல்லது மற்றவர்களுக்கு சொல்லிக் கொள்வது போல

ஒரேயடியாக உயர் நிலைக்கு வந்தவர்கள் அல்ல.

இதுவே உண்மை.

படிக்க வந்தவர்கள் கூட

எங்காவது அடிமட்ட வேலைகள் செய்திருப்பார்கள்.

வயித்துக்காக அப்படி செய்யவில்லை என்றால்

அவர்கள் திருடித்தான் வாழ்ந்திருக்க வேண்டும்.

அதைவிட ஏதாவது செய்து தம்மை உயர்த்திக் கொண்டவர்கள் மேல்!

அதை கேலி பண்ணுவது தவறு என நினைக்கிறேன்.

உழைத்து வாழும் பாமர மனிதர்களிடம் இருக்கும் நல்ல மனது

பெரிய மனிதர்களிடம் இருப்பதில்லை.

நாம்

மனிதனின் மனதை விட

கல்வி தகமைகளையே பெரிதாக கருத்தில் கொண்டுள்ளோம்.

படித்தவர்களை விட

உலக தரத்தில் உயர்ந்து நிற்போர்

வணிகம் செய்வோராக இருக்கிறார்கள்.

பணக்காரன் என்பவனால் கல்வியாளனைக் கூட விலை கொாடுத்து

வாங்க முடிகிறது.

கல்விமான் யாரோ ஒருவரின் கீழ் பணி செய்யவே முடிகிறது.

ஐரோப்பாவுக்கு புலம் பெயர்ந்து நிறுவனங்களை நடத்துவோரை உதாரணத்துக்கு பார்க்கலாம்.

அதற்காக கல்வியறிவு வேண்டாம் என்பதல்ல.

கல்வியை

கெளரவ பிரச்சனையாக்ககி்க் கொள்வது மடமை!

எமக்கு மனோ ரீதியான கெளரவப் பிரச்சனை என்று ஒன்று உண்டு.

நம்மை பற்றி ( ஊரில் உள்ளவர்களுக்கு) வீடுகளுக்கு பொய் சொல்வது

நாங்கள் கெளரவமாக இருக்கிறோம் என்று சொல்வதற்காக அன்றி வேறில்லை.

சிலரை பார்த்தால் சிரிப்பு வரும்

லட்சங்கள் பற்றி பேசுவார்கள் அல்லது

தான் இல்லை என்றால் தன் வேலையிடத்தில் ஒன்றும் நடவாது என்று வேறு

தொலைபேசிகளில் மட்டுமல்ல எமக்கும் சொல்வோர் உண்டு.

எம்மை நம்பி ஐரோப்பா உதயமானதாக இவர்களது நினைப்பு :unsure:

நான் இங்கு வந்த போது

வேக வீதியில் (எக்ஸ்பிரஸ்வே) உள்ள

உணவகமொன்றில் வேலைக்கு நண்பன் ஒருவன் அழைத்துச் சென்றான்.

போகும் போதே சொன்ன அறிவுரை

என்ன சொன்னாலும் யா (ஆம்) என்று சொல்ங்கோ அண்ண

நயின் (இல்லை) என்று மட்டும் சொல்லாதேங்கோ என்பது...........

அதனால் வந்த வினை

சொன்னது விழங்கியதா என்று கேட்டதுக்கும் "யா" என்றேன்.

எது விளங்கவில்லை என்றதுக்கும் "யா" என்றேன்.

மீண்டும் விழங்கியதா என்று கேட்டதுக்கும் "யா" என்றேன்.

மனேஜர் கோபத்தில் கத்தினார்.

எனக்கு சூனியமாக தெரிந்தது.

என்ன கத்துறார் என்றே தெரியாமல் முழித்தேன்.

அது என்னால் மறக்கவே முடியாதது.

நான் ஆங்கிலத்தில் என் நிலையை விளக்கிய போது

அனைவரும் சிரித்த சிரிப்பு..............

என்னை அழைத்து போனவருக்கு டோஸ் விழுந்தது.

எனக்கு வேலை கிடைத்தது. :unsure:

காலையில் 5.30க்கு பனியில் 4 கிலோ மீட்டர் நடந்து போக வேண்டும்.

போனால் கை இருப்பது தெரியாது.

விறைத்து இருக்கும்.

தமிழர்களிடம் இப்போது போல் 1990களில் கார் எல்லாம் இல்லை.

காலையில் போனதும் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

அது எனக்கு கெளரவ பிரச்சனை.

அதனாலேயே காலம் தாமதித்து இரண்டாம் நாள் வேலைக்கு போனேன்.

நான் போகும் போது

மனேஜர் கழிவறையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

மன்னிக்கவும் என்று நான் சொல்ல

"இதை கிளீன் பண்ணி விட்டேன்.

நீ போய் அடுத்ததை தொடங்கு........." என்று

சர்வ சாதாரணமாக சொன்னதும்

எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

நான் அடுத்த நாள் முதல் ஒழுங்காக வந்து கழுவல் வேலைகளை செய்தேன்.

அகதியாக வருவோருக்கு சுவிஸில்

உணவகம் : வைத்தியசாலை : பாதை வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளுக்கே

போலீஸார் அனுமதி வழங்கினர்.

சில இடங்களில் அதற்கும் இல்லை.

எம்மை சுவிஸ் மக்கள் கறுப்பரும் இல்லை , வெள்ளையரும் இல்லை

்இடைப்பட்ட மக்கள் : கிரகத்திலிருந்து வந்த பிறவியாகவே பார்த்தார்கள்.

எமக்காவது பரவாயில்லை

எமக்கு முன் வந்தவர்கள்

எம்மை விட மிக கஸ்டப்பட்டுருக்கிறார்கள்.

பூனைக்கு போடும் கருவாட்டையும்

குருவிக்கு போடும் தானிய வகைகளையும் சமைத்து உண்டிருக்கிறாா்கள்.

சுவிஸ் சுவர்க்க பூமியாக இருக்கலாம்.

அது அன்று திறந்த வெளி சிறை

இன்றும் நான் swiss is open jail என என் சுவிஸ் நண்பர்களுக்கு சொல்வேன்.

பல காலம் சுவிஸை விட்டு வெளியேற அனுமதியே இல்லை.

எப்போதும் பிடித்து அனுப்பலாம் எனும் நிலை.

வேலை செய்ய முடியாது.

அதுவும் போலீஸ் அனுமதியில்லாமல் வேலை செய்யவே முடியாது.

செய்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சனை அவர்களுடையது..................

லண்டன் போல் அடுத்தவர் நம்பரில் எல்லாம் வேலை செய்ய முடியாது.

அங்கும் கல்வி கற்க வருவோர்

மெக்டொனால்களிலும் , பெற்றோல் செட்களிலும் வாரத்தில் 20 மணி நேரம் வேலை செய்ய அனுமதி உண்டு.

இது ஒரு பொக்கட் மணி ஜொப். வேலை!

ஆனால் அதைவிட அதிகமாக வேலை செய்கிறார்கள்.

சிலர் படிக்க என வந்து

திருட்டு தனமாக வேலை செய்கிறார்கள்.

ஊரில் இருந்து பணம் வருமானால்

அவன் கோடீஸ்வரனாக அல்லது அரசியல்வாதியின் பிள்ளையாக இருக்க வேண்டும்.

இவை ஏனைய புலம் பெயர் நாடுகளுக்கும் பொருந்தும்.

இங்குள்ளவர்களது வாழ்வின் உண்மை நிலை

தமது நாடுகளில் உள்ளவர்களுக்கு தெரியாததற்கு காரணம்

எம்மவர் பொய் கனவு படங்களை காட்டுவதாலேயே?

இதை பொய்யென்று யாராலும் சொல்ல முடியாது?

பெற்றோர்கள் யோசிக்கக் கூடாது என்று

காசை மிச்சப்படுத்தி

"அம்மா நான் நல்லா இருக்கிறேன். யோசிக்காதேங்கோ " என்று

தொலைபேசியில் பேசிவிட்டு குழாய் தண்ணி குடிக்கும் ஒரு சாராரும் இல்லாமல் இல்லை.

இப்போது பெரும்பாலான பெற்றோர்கள் இங்கு வருகிறார்கள்.

அவர்கள் கண்களால் நிலமைகளை அவதானிக்கிறார்கள்.

அவர்களுக்கு புரியவில்லை என இவர்கள் நினைக்கிறார்கள்.

அவர்களோ புரியாதது மாதிரி நடந்து கொள்கிறார்கள்.

அதனால்

வந்தவர்கள் தங்க விரும்புவதில்லை.

அவர்களுக்கு உண்மைகள் தெரிகிறது.

நாம் பொய்யர்களாக வாழ்கிறோம் என்பது அவர்களுக்கு புரிகிறது?

என் சிங்கள நண்பன் ஒருவன் சொன்னது

ஞாபகத்துக்கு வருகிறது.

"எமது பெற்றோருக்கு மோப்ப நாய்களுக்கு போல்

எம்மை மோப்பம் பிடிக்கும்் சக்தி உண்டு.

நாம் என்ன செய்தாலும் அவர்களுக்கு புரியும்" என்று.....

அது உண்மைதான்.

அண்மையில் என்னை சந்தித்த ஒரு நண்பனின்

பெற்றோர் என்னோடு மனம் விட்டு பேசினார்கள்.

அது என்னை ஈர்த்தது.

"என் மகள் 2 குழந்தைகளோடு வீட்டிலே கிடக்கிறாள்.

நாங்கள் என்னவோ சொர்க்கத்தில் மகள் என்று நினைத்தோம்.

அவள் நரகத்தில் வாழ்வது வந்த பின்னர்தாான் புரியுது.

மருமகன் பாவம்

இரவு வேலை செய்து விட்டு வந்து

காலையில் பேப்பர் போடப் போறார்.

வந்து சாப்பிட்டு படுத்தா

இரவு வேலைக்கு போகத்தான் எழும்புறார்.

வாரத்தில லீவு நாளில்

தமிழ் கடைகளுக்கு போய் சாமான் வாங்கவே காலம் போதும்.

குழந்தைகளுக்கு சுகமில்லை என்றால் கூட

அவளுக்கு மொழி தெரியாததால் வைத்தியரிடம் போக முடியாது.

யாராவது நண்பர்கள்தான் உதவுகிறார்கள்.

நாங்க வந்து 2 கிழமையாச்சு

வீட்டை விட்டே வெளிக்கிடல்ல.

இந்தக் குளிரில எங்க போறது தம்பி

எங்களுக்கு சுகமில்லை என்றால் இவங்களுக்குதானே கஸ்ட்டம்.

நாங்க ஏதோ நினைச்சம்.

சுவிஸ் பாஸ்போர்ட் வச்சிருக்கினம்.

அது சந்தோசத்தை தருமா?" என்று கண்டதை பகிர்ந்து கொண்டார்.

இவை பதிவுகளானால்தான்

மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்வர்கள்.

தொலைக் காட்சியிலும் வானோலியிலும்

டை கோட்டோடு நடமாடுறவர்கள் பலர்

பானையும் குழாய் தண்ணியையும் குடித்து விட்டு

வீரனாக திரையில் பேசுகிறான்.

இங்குள்ள பெரிய மனிதர்கள் : பணக்காரர்கள் (ஐரோப்பியர்கள்)

தம் வீட்டு கழிவறையை சுத்தம் செய்வது தனது சுத்தத்துக்கு என நினைக்கிறான்.

நாமோ அது கெளரவ பிரச்சனையாகி

நம்மையே நாசப்படுத்திக் கொள்கிறோம்.

இதுதான் யதார்த்தம்.

உலகத்தை புரிந்து கொள்ள

நாம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.

வாழ வரும் போதும்

வாழ்வை கொடுக்கும் போது

கெளரவத்தையும் பொருத்தத்தையும் சாதியையும் விட

அன்பையும் மனதையும் பாருங்கள்.

இதுதான் தாம்பத்தியம்.

அன்று ஒன்றாக அகதி முகாமில் இருக்கும் போது

சாதி தெரியவில்லை.

உண்டார்கள் : உறங்கினார்கள் : உறவாடினார்கள்

தனியாக குடும்பமான பின்தான்

புலத்தில் - அது

மீண்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாதத்துக்கு 80 மணித்தியாலங்கள். வாரத்துக்கு 20 மணித்தியாலங்கள் என்பதே சரியானது. :unsure:

ஏட்டில வேணும் என்றால் இப்படி எழுதி வைச்சுக்கலாம். ஆனால் நிஜத்தில மனிதர்கள் இப்படி நடப்பாக்களா என்பது.. மிகப் பெரிய கேள்விக்குறி. இப்படி எதிர்பார்த்து ஏமாந்து போவதே அதிகம் நிகழ்கிறது..! :unsure:

நன்றி நெடுக்ஸ்

திருத்தம் செய்துள்ளேன்.

யதார்த்தம் பற்றி உங்கள் கருத்து நியாயமானது.

எனக்குள் அப்படி?

நன்றி!

Posted

மருமகன் பாவம்

இரவு வேலை செய்து விட்டு வந்து

காலையில் பேப்பர் போடப் போறார்.

வந்து சாப்பிட்டு படுத்தா

இரவு வேலைக்கு போகத்தான் எழும்புறார்

வாழ்க்கையில் உயர்நிலையை அடைய எமது மக்கள் மிகவும் தங்களை வருத்தி வேலை செய்கிறார்கள்.

நான் போகும் போது

மனேஜர் கழிவறையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

மன்னிக்கவும் என்று நான் சொல்ல

"இதை கிளீன் பண்ணி விட்டேன்.

நீ போய் அடுத்ததை தொடங்கு........." என்று

சர்வ சாதாரணமாக சொன்னதும்

எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

இந்த மனோநிலையை எடுக்க மிக நீண்ட காலம் எடுக்கும். மேற்கு நாட்டவர்களிடம் இருந்து நிறைய நல்ல விடயங்களை இன்னும் நாங்கள் கற்க வேண்டியுள்ளது.

நன்றி புத்தன் உங்கள் ஒரு நிமிட கதைக்கு. அஜீவன் அண்ணாவின் வாழ்வு அனுபங்களை பகிர்ந்தமைக்கும் நன்றி.

Posted

நன்றி நுண்ணிலவன்

அன்று வந்த தமிழர்கள் தான் வேலை செய்யும் இடத்தில்

வேலைக்கு இன்னொரு தமிழனை கொண்டு சென்று சேர்த்தார்கள்.

இன்று தமிழன் இல்லாத இடத்தில் தமிழர்கள் வேலை தேடுகிறார்கள்.

அல்லது

தமிழன் ஒருவன் வேலைக்கு வருவதை தடுக்க ஏதோவெல்லாம் செய்கிறார்கள்.

அன்று

அவனுக்கு இங்குள்ள மொழி தெரியாது

அவனோடு பேச யாராவது தேவை.

அவனது சுக துக்கங்களை

மன வேதனைகளை பேச யாரோ ஒருவன் அன்று தேவைப்பட்டான்.

அன்று ஊர் : நம்மவர் என்ற உணர்வு ஒரு சிலரிடம் இருந்தது.

ஆனால்

பலர் அன்றும் காட்டிக் கொடுப்பவர்களாகவே இருந்தார்கள்.

அகதி முகாம்களிலேயே அவை அரங்கேறியது.

சற்று ஆங்கிலம் தெரிந்தவர்கள்

அல்லது

அகதி முகாம் பொறுப்பாளர்களுக்கு தேனீர் பரிமாறியவர்கள்

தம்மை உயர்த்திக் கொள்ள

அல்லது அவர்கள் மூலம் வேலை ஒன்றை பெற்றுக் கொள்ள

இவற்றை செய்தார்கள்.

இன்றும் தொடரத்தான் செய்கிறது....

நான் வேலைக்கு போன இன்னொரு இடத்தில்

ஒரு தமிழன்

நான் பாடசாலைக்கே போனதில்லை என்று

செப்பிடம் (பொறுப்பானவரிடம்) சொல்ல

சுவிஸ்காரனான அவர் நம்பிவிட்டார்.

அதற்கு நம்முடையவர்

சுவிஸ்காரருக்கு கொடுத்த விளக்கம்

இவன் பள்ளிக்கு போயிருந்தால்

இவனுக்கு ஜேர்மன் தெரிந்திருக்க வேணுமே? என்பது......

உண்மைதானே? :D

சுவிஸ்காரர்கள் ஒரு வித மடையர்கள்

அவனை ஒன்றில் நம்ப வைத்து விட்டால்

அதன் பின்னர் நம்ப வைத்தவன் சொல்வதெல்லாம் தேவ வாக்கு.

அதுபோல் நம்ம தோஸ்த்து சொன்னதை அவன் மட்டுமல்ல

அடுத்தவர்களும் நம்பி என்னோடு கடுமையாகவே இருந்தார்கள்.

ஆனால் இவன் என்னோடு மிக நட்பாக சிரித்து பேசிக் கொண்டு இருந்தான்.

என்னால் அன்று மட்டுமல்ல அதை இன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு நிகழ்வில்

அந்த வேலைத்தலத்தின் முக்கியமான ஒருவரோடு

நான் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த

செப் (பொறுப்பாளர்)

இவனோடு என்ன மொழியில் பேசுகிறாய் என

அவரிடம் கேட்க

அவர் ஆங்கிலத்தில் என்று பொறுப்பாளருக்கு சொல்ல

இவன் பள்ளிக்கே போனதில்லையே என சொல்லி

நடந்ததை சொன்னார்.

எனக்குள் அதிர்ச்சி!

அவர்களுக்கு சிரிப்பு.

நான் வேலை செய்த இடத்தில் நடந்த

அத்தனை சூழ்ச்சிகளுக்கும்

போட்டுக் கொடுத்தல்களுக்கும்

அவன்தான் அன்றும் இன்றும் காரணம்.

வெளியில் மிக நல்ல மனிதர்களாக காட்சியளிப்பார்கள்

ஆனால் உண்மையில் மிக மோசமானவர்கள் இவர்கள்.

ஆனால் இவை தொடர்ந்தும் பயன் தராது.

எதற்கும் எல்லை உண்டு.

இங்கே இந்த நாட்டு மொழி பேசாதவனை

முட்டாளாகவே நினைக்கிறார்கள்.

மொழி தெரியாவிட்டால் நமக்காக போராட முடியாது?

வெற்றி பெற முடியாது!

நாமோ உலகத்தில் உள்ள அனைத்து வெள்ளையரும்

ஆங்கிலம் பேசுவான் என வாழ்ந்த ஒரு சமுதாயம்?

நாம் உலகத்தை புரிந்து கொள்ளவே இல்லை? :mellow:

அதைவிட நம்மை சுற்றி உள்ளவனை

மிக அவதானமாக புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நமது கருத்துகளை பகிந்து கொண்டால்

நம்மை நமக்கே எதிரியாக்கி விடுவான்.

நேர்மைகள் வெல்லும் என பயணிக்க தெரிய வேணும்!

Posted

நன்றி அஜீவன் அண்ணா.

உண்மையை எழுதியிருக்கீங்க நான் எழுதநினைத்தவிடயம் இது.

வாழ்த்துக்கள்.

Posted

நான் வேலை செய்த ஒரு இடத்தில் 6 தமிழர்கள்.

ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விட்டால்

தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனும்

நிலைக்கு வருவார்கள்.

பிரச்சனை தீர

பெரும்பாலும் நான்தான் முன் வருவேன்

அல்லது

என்னை பேச உசுப்பேத்துவார்கள்.

ஒரு தமிழனுக்கு கெட்ட பெயர் என்றால் எனக்கும்தானே என

பலதை கண் மறைக்கும் :huh:

தமிழர்கள் அவமானப்படக் கூடாது என

தமிழர் விடுதலை விரும்பி போல

போய் பேசுவேன்.

பிரச்சனை முடிந்து சுமுகமானதும்

நிர்வாகத்துக்கு எதிராக ஆட்களை

அணி திரட்டியதே நான்தான் என

போட்டுக் கொடுத்து விடுவார்கள்.

அதுதானே என

பிரச்சனையானவன் சேர்ந்திடுவான்

பேசியவன் குற்றவாளியாகி விடுவான்.

நிர்வாகம் அவர்களோடு நட்பாகி விடும்.

அவர்கள் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெறுவார்கள்.

எனக்கு பிரச்சனைகள் தொடரும்.......

பல ஆண்டுகளுக்கு முன்

ஒருவரை வேலையில் இருந்து நீக்க முடிவெடுத்த போது

என் காலில் ஒருவர் விழுந்து கதறினார்.

நான் மேலிடத்தில் பேசி அவரை இருக்க வைத்தேன்.

அதன் பின்னர்

அவர்தான் என்னை வேலையிலிருந்து நீக்க

நிர்வாகத்துக்கு அனைத்து டிப்ஸ்களையும் கொடுத்தவர்.

அதை நிர்வாகமே என்னிடம் சொன்னது?

எனக்குத் தெரியும் என்றேன்.

எப்படி என கேட்டார்கள்?

அவருக்கு தெரிந்தவை மற்றவர்களுக்கு தெரியாது எனவே தெரியும் என்றேன்.

நான் அவர்களிடம் இவை கூட வந்திருக்குமே என்றதற்கு திகைத்து போனார்கள்?

நான் வேலையிடத்தில் இருந்த தமிழர்களை தொழில் சங்கம் ஒன்றில் இணைத்து விட்டேன்.

அவர்கள் பாதுகாப்புக்காக.........

முதலில் சேர்த்து விட்டவர்கள்

மற்ற தமிழர்களை சேர்த்து விடாதேங்கோ என்றார்கள்.

அவ்வளவு பரந்த மனப்பான்மை!

நானோ வரும் அத்தனை தமிழர்களுக்கும் அதே வழியை காட்டினேன்.

எல்லாம் செய்திட்டு

எங்களுக்கு தெரியாமல் இது நடந்தது.

இதிலெல்லாம் சேர்த்து விட்டது நான் என்று சொன்னால்

என் மேல்தான் நிர்வாகம் கடுமையாகும்.

இதுவும் நான் வேலை செய்த இடத்தின் நிர்வாகம்

என்னை எதிரியாக கருத வழி வகுத்தது.

இதில் மிக வருத்தமானவை

தமிழர் நலனுக்கானவர்களும் இதையே செய்வதே? :wub:

அவை எழுத முடியாது?

நீங்களா புரிந்து கொள்ளுங்கோ :huh:

நான் வேலை செய்த ஒரு இடத்தில்

சேர்விஸ் முடிந்த பின்

பணியாளர்களுக்கு கோப்பி மற்றும் பால் குடிப்பதற்காக

வைப்பது ஒரு வழக்கம்.

இவை எழுத்தில் இல்லாத சட்டம்.

மனிதாபிமானமாக நடைபெறுபவை.........

அப்படி பணியாளர்களுக்கு கொடுக்காமல்

கொட்டுவோர் அல்லது கோப்பி மெசினை நிறுத்துவோர்

நம் தமிழர்கள்தானே தவிர

ஒரு வேற்று நாட்டுக்காரனும் செய்வதில்லை.

இது மனதை வருடும் ஒர் நிகழ்வு!

நம்மவர்களோ சைகோ மாதிரி செய்து விட்டு திருப்திபடுவார்கள்!

இதற்காக நான் தமிழர்களோடு முரண்பட்டு மட்டுமல்ல

தமிழர்களை தாக்கும் நிலைக்கும் போயுள்ளேன்.

ஒரு தமிழனை வேலைத் தலத்தில் தாக்கியும் இருக்கிறேன்.

தாயகத்தில் பசியோடும் பட்டினியோடும் இருக்கிறார்கள்.

இருப்பதை கொட்டாதீர்கள்

அதை இங்காவது பகிர்ந்து கொள்ளுங்கள்

அது அங்குள்ளவர்களுக்கு இறைவனால் கிடைக்கும் என சொல்வேன்.

அதெல்லாம் பலருக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு!

ஒரு சிலர் அதை செய்ய நினைத்தாலும்

ஒரு தமிழன் அவர்களை தடுத்து விடுவான்.

நான் அவனை தள்ளி விட்டு

வேலை செய்பவர்களுக்கு கோப்பி பால் கொடுத்த தருணங்கள் அநேகம்.

ஐயோ என்னை வேலை செய்ய விடாமல் இவன் தடுக்கிறான்

என சேர்விஸ் நேரத்தில் பலர் முன் அவன் அழுவது போல புகார் செய்வான்.

அங்கிருப்பவர்கள் கையை விரித்து எங்களுக்கு தெரியாது என்பார்கள்.

மறுபுறம் எனக்கு கண் அடித்து நீ சரி என எனக்கு சமிக்கை தருவார்கள்.

இவன் வானோலியில் காந்தி போல் பேசுவான்.

வேலை செய்யும் இடத்தில் சாப்பிட மட்டுமல்ல

கொண்டு செல்லவும் திருடுவான்.

பசியோடு வேலை செய்பவர்கள்

எதையாவது சாப்பிட தேடினால்

இருப்பதை எமது தமிழர்கள் கொட்டி விடுவார்கள்.

அல்லது

தனக்கு எடுத்துக் கொண்டு

அனைத்தையும் கலந்து விடுவார்கள்

அல்லது

அதில் துப்பியாவது விடுவார்கள்.

அவ்வளவு மோசமானவர்கள்.

எனக்கு எழுதவே வெறுக்கிறது.

நீங்கள் முன்னமே நாட்டை விட்டு வந்ததால்

உயிரோடு தப்பிட்டீங்க.

இல்லாட்டி எப்பவோ கம்பத்தில தொங்க வச்சிருப்பாங்க என்பேன்.

(லைட் போஸ்ட்டில தூக்கின காலத்தில வந்தவங்க இவங்க :wub: )

நான் முன்னர் வேலை செய்த இடத்தில

என்னை இரு முறை வேலை நீக்கம் செய்திருக்கிறார்கள்.

நான் வழக்காடி வென்று இரு முறையும் மீண்டும் வேலைக்கு போனேன்.

வேலை செய்த இடத்துக்கு லட்சக் கணக்கில் இழப்பு.

எனது மாதாந்த வருமானம்

அவர்களது வக்கீல் செலவு

எனது வக்கீல் செலவு

நீதிமன்ற பணம்

எல்லாம் 1-2 லட்சம் சுவிஸ் பிராங் வரை ஆகும். :wub:

வழக்கு 1 வருடத்துக்கு மேல் நீளும்.

மேல் நீதி மன்றம் எல்லாம் போகும்.

என் சுவிஸ் நண்பர்கள் எனக்கு எப்போதும் உதவியா இருப்பார்கள்.

மீண்டும் வேலைக்கு போவேன்.

நான் ஒரு முறை திரும்பி வேலைக்கு போகவிருந்த போது

அனைவரையும் அழைத்து ஒரு மீட்டிங் நடத்தியிருக்கிறார்கள்

நான் வருவதை எதிர்த்து பேசியவர்கள் தமிழர்கள்தான்.

வர விடாதீர்கள் என்று நிர்வாகத்திடம் சொன்னவர்கள் தமிழர்கள்.

ஏனைய இனத்தவர்கள்

அவன் வருவதில் பிரச்சனையில்லை என்றே சொல்லியிருக்கிறார்கள்.

பெரும்பான்மை முடிவுகளே இங்கு தீர்ப்பு!

நான் போன போது ஏனைய இனத்தவர்கள்

ஓடி வந்து கை கொடுத்தார்கள்.........சந்தோசமா

Posted

ஒரு வீடியோ கமராவும் கழுத்தில் தொங்க போடுற டெக்கும் (VCR)

லண்டனில் இருந்து வந்த போது

தமிழீழ தொலைக் காட்சி பொறுப்பு எனக்கு என பலர் முட்டி மோதிக் கொள்ளத் தொடங்கினர்.

"படம் போட்டு பார்க்க தெரியாத உங்களுக்கு என்ன பொறுப்பு. அதுக்கு பிரசாத்தான் பொறுப்பு"

என்று சொல்லி விட்டு தோழர் முகுந்தன் என்னைப் பார்த்த போது

"பொறுப்பை விட்டு வேலையை செய்வம்" என்றேன்.

அவர் சிரித்து விட்டு போய் விட்டார்.

அந்த வீடியோ டெக்கை கொண்டு சென்று படம் பார்க்க நினைத்து

என்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள் பலர்.

அதில் வாசுதேவாவையும் சங்கிலியனையும் மறக்க முடியாது. :huh:

(உயிரோடு இருப்பவர்களை பாவம் என்று விட்டு விடுகிறேன் :rolleyes: )

சங்கிலியன் (கந்தசாமி)

(சுழிபுரத்தில் போஸ்டர் ஒட்டப் போன விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கொலைக்கு காரணமானவர். இவர் மன்னாரில் வைத்து விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்)

தன்னை இன்டர்லிஜன் பொறுப்பாளர் என்று சொல்லி என்னை வெருட்ட

உன்னைப் போல ஒரு முட்டாளை எவன் இன்டர்லிஜன் என்று சொன்னவன் என்று

சென்னை அம்மன் கோவில் வீட்டில் வைத்து நான் கத்த , பெரிய ரகளை.

தோழர் முகுந்தன் பிரச்சனையை தீர்த்து வைத்தார்.

இருந்தாலும் சாகும்வரை கந்தசாமி என்னில் கண்ணும் கருத்துமாக இருந்தார் :wub:

நான் சொல்லி விட்டு இயக்கத்தை விட்டு வெளியேறினேன்.

ஓடி எல்லாம் ஒழித்தவன் அல்ல.

நான் இலங்கையில் இருக்கும் போதும் சரி

சிங்கப்பூரில் இருக்கும் போதும் சரி

தமிழனுக்கும் சிங்களவனுக்கும்தான் பிரச்சனை என தெரிந்திருந்தேன்.

எப்போ இயக்கத்துக்கு வந்தேனோ

அது முதல்தான் இந்த பாகபிரிவினை பிரிவுகளை மற்றும் பிரிவினைகளை உணர்ந்தேன். :huh:

கடமையை மறந்து தலைமைகளுக்காக அடிபடவே பலருக்கு காலம் போதவில்லை.

புலம் பெயர் நாடுகளில் மேடைகளில் அலங்காரமாக வருவோரில்

பலரது பின்னணியை பார்த்தால் இங்கு எழுதவே முடியாது.

அவை குறித்து தேவையானவர்கள் கருத்தில் கொள்வது நல்லது.

சொல்லும் செயலும் வெவ்வேறாக இருக்கும்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் வேலை செய்த ஒரு இடத்தில் 6 தமிழர்கள்.

ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விட்டால்

தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனும்

நிலைக்கு வருவார்கள்.

பிரச்சனை தீர

பெரும்பாலும் நான்தான் முன் வருவேன்

அல்லது

என்னை பேச உசுப்பேத்துவார்கள்.

ஒரு தமிழனுக்கு கெட்ட பெயர் என்றால் எனக்கும்தானே என

பலதை கண் மறைக்கும் :rolleyes:

தமிழர்கள் அவமானப்படக் கூடாது என

தமிழர் விடுதலை விரும்பி போல

போய் பேசுவேன்.

பிரச்சனை முடிந்து சுமுகமானதும்

நிர்வாகத்துக்கு எதிராக ஆட்களை

அணி திரட்டியதே நான்தான் என

போட்டுக் கொடுத்து விடுவார்கள்.

அதுதானே என

பிரச்சனையானவன் சேர்ந்திடுவான்

பேசியவன் குற்றவாளியாகி விடுவான்.

நிர்வாகம் அவர்களோடு நட்பாகி விடும்.

அவர்கள் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெறுவார்கள்.

எனக்கு பிரச்சனைகள் தொடரும்.......

நீங்கள் எழுதினதை பார்க்கும் போது தமிழர்களுக்கு மட்டும் தான் இந்த குணம் இருப்பது போல தெரிகிறது.புலதிற்கு வர முதல் நானும் அப்படி தான் நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் இங்கு வந்து பல தேசிய இனங்களுடன் பழகும் போது தான் சகலருக்கும் இந்த குணம் இருப்பதை அறியகூடியதாக இருந்தது,அதிலும் ஆசியா கண்டத்தை சேர்ந்தவர்களுக்கு அதிகமாகவே உண்டு அதிலும் பிரித்தானிய காலனித்துவதிற்கு கீழே இருந்தவனுக்கு ரொம்ப ரொம்ப அதிகமாகவே இந்த குணம் உண்டு.

உதாரணத்தை சொல்ல போனா நம்ம பக்கத்துநாட்டு பசங்க அவங்க நாட்டு பக்கத்து பசங்க இப்படியே பட்டியல் நீட்டி கொண்டே போகலாம். :huh:

Posted

வெளிநாடு வந்த 99.9 சத வீதமானவர்கள்

ஊரில் அல்லது மற்றவர்களுக்கு சொல்லிக் கொள்வது போல

ஒரேயடியாக உயர் நிலைக்கு வந்தவர்கள் அல்ல.

இதுவே உண்மை.

படிக்க வந்தவர்கள் கூட

எங்காவது அடிமட்ட வேலைகள் செய்திருப்பார்கள்.

வயித்துக்காக அப்படி செய்யவில்லை என்றால்

அவர்கள் திருடித்தான் வாழ்ந்திருக்க வேண்டும்.

அதைவிட ஏதாவது செய்து தம்மை உயர்த்திக் கொண்டவர்கள் மேல்!

அதை கேலி பண்ணுவது தவறு என நினைக்கிறேன்.

உழைத்து வாழும் பாமர மனிதர்களிடம் இருக்கும் நல்ல மனது

பெரிய மனிதர்களிடம் இருப்பதில்லை.

நாம்

மனிதனின் மனதை விட

கல்வி தகமைகளையே பெரிதாக கருத்தில் கொண்டுள்ளோம்.

படித்தவர்களை விட

உலக தரத்தில் உயர்ந்து நிற்போர்

வணிகம் செய்வோராக இருக்கிறார்கள்.

பணக்காரன் என்பவனால் கல்வியாளனைக் கூட விலை கொாடுத்து

வாங்க முடிகிறது.

கல்விமான் யாரோ ஒருவரின் கீழ் பணி செய்யவே முடிகிறது.

ஐரோப்பாவுக்கு புலம் பெயர்ந்து நிறுவனங்களை நடத்துவோரை உதாரணத்துக்கு பார்க்கலாம்.

அதற்காக கல்வியறிவு வேண்டாம் என்பதல்ல.

கல்வியை

கெளரவ பிரச்சனையாக்ககி்க் கொள்வது மடமை!

எமக்கு மனோ ரீதியான கெளரவப் பிரச்சனை என்று ஒன்று உண்டு.

நம்மை பற்றி ( ஊரில் உள்ளவர்களுக்கு) வீடுகளுக்கு பொய் சொல்வது

நாங்கள் கெளரவமாக இருக்கிறோம் என்று சொல்வதற்காக அன்றி வேறில்லை.

சிலரை பார்த்தால் சிரிப்பு வரும்

லட்சங்கள் பற்றி பேசுவார்கள் அல்லது

தான் இல்லை என்றால் தன் வேலையிடத்தில் ஒன்றும் நடவாது என்று வேறு

தொலைபேசிகளில் மட்டுமல்ல எமக்கும் சொல்வோர் உண்டு.

எம்மை நம்பி ஐரோப்பா உதயமானதாக இவர்களது நினைப்பு :rolleyes:

நான் இங்கு வந்த போது

வேக வீதியில் (எக்ஸ்பிரஸ்வே) உள்ள

உணவகமொன்றில் வேலைக்கு நண்பன் ஒருவன் அழைத்துச் சென்றான்.

போகும் போதே சொன்ன அறிவுரை

என்ன சொன்னாலும் யா (ஆம்) என்று சொல்ங்கோ அண்ண

நயின் (இல்லை) என்று மட்டும் சொல்லாதேங்கோ என்பது...........

அதனால் வந்த வினை

சொன்னது விழங்கியதா என்று கேட்டதுக்கும் "யா" என்றேன்.

எது விளங்கவில்லை என்றதுக்கும் "யா" என்றேன்.

மீண்டும் விழங்கியதா என்று கேட்டதுக்கும் "யா" என்றேன்.

மனேஜர் கோபத்தில் கத்தினார்.

எனக்கு சூனியமாக தெரிந்தது.

என்ன கத்துறார் என்றே தெரியாமல் முழித்தேன்.

அது என்னால் மறக்கவே முடியாதது.

நான் ஆங்கிலத்தில் என் நிலையை விளக்கிய போது

அனைவரும் சிரித்த சிரிப்பு..............

என்னை அழைத்து போனவருக்கு டோஸ் விழுந்தது.

எனக்கு வேலை கிடைத்தது. :huh:

காலையில் 5.30க்கு பனியில் 4 கிலோ மீட்டர் நடந்து போக வேண்டும்.

போனால் கை இருப்பது தெரியாது.

விறைத்து இருக்கும்.

தமிழர்களிடம் இப்போது போல் 1990களில் கார் எல்லாம் இல்லை.

காலையில் போனதும் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

அது எனக்கு கெளரவ பிரச்சனை.

அதனாலேயே காலம் தாமதித்து இரண்டாம் நாள் வேலைக்கு போனேன்.

நான் போகும் போது

மனேஜர் கழிவறையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

மன்னிக்கவும் என்று நான் சொல்ல

"இதை கிளீன் பண்ணி விட்டேன்.

நீ போய் அடுத்ததை தொடங்கு........." என்று

சர்வ சாதாரணமாக சொன்னதும்

எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

நான் அடுத்த நாள் முதல் ஒழுங்காக வந்து கழுவல் வேலைகளை செய்தேன்.

அகதியாக வருவோருக்கு சுவிஸில்

உணவகம் : வைத்தியசாலை : பாதை வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளுக்கே

போலீஸார் அனுமதி வழங்கினர்.

சில இடங்களில் அதற்கும் இல்லை.

எம்மை சுவிஸ் மக்கள் கறுப்பரும் இல்லை , வெள்ளையரும் இல்லை

்இடைப்பட்ட மக்கள் : கிரகத்திலிருந்து வந்த பிறவியாகவே பார்த்தார்கள்.

எமக்காவது பரவாயில்லை

எமக்கு முன் வந்தவர்கள்

எம்மை விட மிக கஸ்டப்பட்டுருக்கிறார்கள்.

பூனைக்கு போடும் கருவாட்டையும்

குருவிக்கு போடும் தானிய வகைகளையும் சமைத்து உண்டிருக்கிறாா்கள்.

சுவிஸ் சுவர்க்க பூமியாக இருக்கலாம்.

அது அன்று திறந்த வெளி சிறை

இன்றும் நான் swiss is open jail என என் சுவிஸ் நண்பர்களுக்கு சொல்வேன்.

பல காலம் சுவிஸை விட்டு வெளியேற அனுமதியே இல்லை.

எப்போதும் பிடித்து அனுப்பலாம் எனும் நிலை.

வேலை செய்ய முடியாது.

அதுவும் போலீஸ் அனுமதியில்லாமல் வேலை செய்யவே முடியாது.

செய்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சனை அவர்களுடையது..................

லண்டன் போல் அடுத்தவர் நம்பரில் எல்லாம் வேலை செய்ய முடியாது.

அங்கும் கல்வி கற்க வருவோர்

மெக்டொனால்களிலும் , பெற்றோல் செட்களிலும் வாரத்தில் 20 மணி நேரம் வேலை செய்ய அனுமதி உண்டு.

இது ஒரு பொக்கட் மணி ஜொப். வேலை!

ஆனால் அதைவிட அதிகமாக வேலை செய்கிறார்கள்.

சிலர் படிக்க என வந்து

திருட்டு தனமாக வேலை செய்கிறார்கள்.

ஊரில் இருந்து பணம் வருமானால்

அவன் கோடீஸ்வரனாக அல்லது அரசியல்வாதியின் பிள்ளையாக இருக்க வேண்டும்.

இவை ஏனைய புலம் பெயர் நாடுகளுக்கும் பொருந்தும்.

இங்குள்ளவர்களது வாழ்வின் உண்மை நிலை

தமது நாடுகளில் உள்ளவர்களுக்கு தெரியாததற்கு காரணம்

எம்மவர் பொய் கனவு படங்களை காட்டுவதாலேயே?

இதை பொய்யென்று யாராலும் சொல்ல முடியாது?

பெற்றோர்கள் யோசிக்கக் கூடாது என்று

காசை மிச்சப்படுத்தி

"அம்மா நான் நல்லா இருக்கிறேன். யோசிக்காதேங்கோ " என்று

தொலைபேசியில் பேசிவிட்டு குழாய் தண்ணி குடிக்கும் ஒரு சாராரும் இல்லாமல் இல்லை.

இப்போது பெரும்பாலான பெற்றோர்கள் இங்கு வருகிறார்கள்.

அவர்கள் கண்களால் நிலமைகளை அவதானிக்கிறார்கள்.

அவர்களுக்கு புரியவில்லை என இவர்கள் நினைக்கிறார்கள்.

அவர்களோ புரியாதது மாதிரி நடந்து கொள்கிறார்கள்.

அதனால்

வந்தவர்கள் தங்க விரும்புவதில்லை.

அவர்களுக்கு உண்மைகள் தெரிகிறது.

நாம் பொய்யர்களாக வாழ்கிறோம் என்பது அவர்களுக்கு புரிகிறது?

என் சிங்கள நண்பன் ஒருவன் சொன்னது

ஞாபகத்துக்கு வருகிறது.

"எமது பெற்றோருக்கு மோப்ப நாய்களுக்கு போல்

எம்மை மோப்பம் பிடிக்கும்் சக்தி உண்டு.

நாம் என்ன செய்தாலும் அவர்களுக்கு புரியும்" என்று.....

அது உண்மைதான்.

அண்மையில் என்னை சந்தித்த ஒரு நண்பனின்

பெற்றோர் என்னோடு மனம் விட்டு பேசினார்கள்.

அது என்னை ஈர்த்தது.

"என் மகள் 2 குழந்தைகளோடு வீட்டிலே கிடக்கிறாள்.

நாங்கள் என்னவோ சொர்க்கத்தில் மகள் என்று நினைத்தோம்.

அவள் நரகத்தில் வாழ்வது வந்த பின்னர்தாான் புரியுது.

மருமகன் பாவம்

இரவு வேலை செய்து விட்டு வந்து

காலையில் பேப்பர் போடப் போறார்.

வந்து சாப்பிட்டு படுத்தா

இரவு வேலைக்கு போகத்தான் எழும்புறார்.

வாரத்தில லீவு நாளில்

தமிழ் கடைகளுக்கு போய் சாமான் வாங்கவே காலம் போதும்.

குழந்தைகளுக்கு சுகமில்லை என்றால் கூட

அவளுக்கு மொழி தெரியாததால் வைத்தியரிடம் போக முடியாது.

யாராவது நண்பர்கள்தான் உதவுகிறார்கள்.

நாங்க வந்து 2 கிழமையாச்சு

வீட்டை விட்டே வெளிக்கிடல்ல.

இந்தக் குளிரில எங்க போறது தம்பி

எங்களுக்கு சுகமில்லை என்றால் இவங்களுக்குதானே கஸ்ட்டம்.

நாங்க ஏதோ நினைச்சம்.

சுவிஸ் பாஸ்போர்ட் வச்சிருக்கினம்.

அது சந்தோசத்தை தருமா?" என்று கண்டதை பகிர்ந்து கொண்டார்.

இவை பதிவுகளானால்தான்

மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்வர்கள்.

தொலைக் காட்சியிலும் வானோலியிலும்

டை கோட்டோடு நடமாடுறவர்கள் பலர்

பானையும் குழாய் தண்ணியையும் குடித்து விட்டு

வீரனாக திரையில் பேசுகிறான்.

இங்குள்ள பெரிய மனிதர்கள் : பணக்காரர்கள் (ஐரோப்பியர்கள்)

தம் வீட்டு கழிவறையை சுத்தம் செய்வது தனது சுத்தத்துக்கு என நினைக்கிறான்.

நாமோ அது கெளரவ பிரச்சனையாகி

நம்மையே நாசப்படுத்திக் கொள்கிறோம்.

இதுதான் யதார்த்தம்.

உலகத்தை புரிந்து கொள்ள

நாம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.

வாழ வரும் போதும்

வாழ்வை கொடுக்கும் போது

கெளரவத்தையும் பொருத்தத்தையும் சாதியையும் விட

அன்பையும் மனதையும் பாருங்கள்.

இதுதான் தாம்பத்தியம்.

அன்று ஒன்றாக அகதி முகாமில் இருக்கும் போது

சாதி தெரியவில்லை.

உண்டார்கள் : உறங்கினார்கள் : உறவாடினார்கள்

தனியாக குடும்பமான பின்தான்

புலத்தில் - அது

மீண்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது?

நீங்கள் எழுதிய விடயங்களும், உங்கள் எழுத்து நடையும் மிகவும் பிடித்திருக்கிறது!!!

வாழ்த்துக்கள்!!!

Posted

நீங்கள் எழுதினதை பார்க்கும் போது தமிழர்களுக்கு மட்டும் தான் இந்த குணம் இருப்பது போல தெரிகிறது.புலதிற்கு வர முதல் நானும் அப்படி தான் நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் இங்கு வந்து பல தேசிய இனங்களுடன் பழகும் போது தான் சகலருக்கும் இந்த குணம் இருப்பதை அறியகூடியதாக இருந்தது,அதிலும் ஆசியா கண்டத்தை சேர்ந்தவர்களுக்கு அதிகமாகவே உண்டு அதிலும் பிரித்தானிய காலனித்துவதிற்கு கீழே இருந்தவனுக்கு ரொம்ப ரொம்ப அதிகமாகவே இந்த குணம் உண்டு.

உதாரணத்தை சொல்ல போனா நம்ம பக்கத்துநாட்டு பசங்க அவங்க நாட்டு பக்கத்து பசங்க இப்படியே பட்டியல் நீட்டி கொண்டே போகலாம். :huh:

ஜாஸ்தியாகலாம் :huh:

புத்தன் ஒரு கதையை கொடுத்து

கதை எங்கோ போயிட்டுது

நீங்கள் சொல்வதில் நியாயம் உண்டு.

இருந்தாலும்

நம்மட ஆக்கள வெல்ல இயலாது. :rolleyes:

நீங்கள் எழுதிய விடயங்களும், உங்கள் எழுத்து நடையும் மிகவும் பிடித்திருக்கிறது!!!

வாழ்த்துக்கள்!!!

நன்றி வெற்றிவேல்

Posted

ஆம் அஜிவன் . உங்கள் அனுபவங்களில் சில எனக்கும் ஏற்பட்டிருக்கின்றது..! அவை என்னை இன்று பக்குவப்படுத்தியுள்ளது...!

Posted

ஆம் அஜிவன் . உங்கள் அனுபவங்களில் சில எனக்கும் ஏற்பட்டிருக்கின்றது..! அவை என்னை இன்று பக்குவப்படுத்தியுள்ளது...!

நன்றி லீ!

முடிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.