Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, vasee said:

இந்த இரஸ்சிய ஆய்வு முடிவு முன்னோட்டமானது எனவே நான் குறிப்பிட்டதாக நினைவுள்ளது, அதன் வெற்றி நிச்சயமற்ற ஒன்றுதான் மனித ஆராய்ச்சி முடிவிலேயே தங்கியுள்ளது, பல நிறுவனங்கள் இந்த துறையில் முயற்சிக்கின்றது இதன் பரிசோதனை கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி, பராமரிப்பு வினியோகம் என்பவை மிக செலவான விடயம் ஆனால் அதனை இலவசமாக கொடுப்பதற்கு அரசுகள்தான் முன்வரவேண்டும்,

ஆனால் பெரும்பாலும் இந்த உற்பத்திகளை சில நேரங்களிலே அரசு செய்ய முயற்சித்தாலும் பின்னர் கைவிட்டுவிடுகிறது, காரணம் காசு, ஆனால் இரஸ்சியா இதில் முன்னோடி, பொதுவாக எந்த நல்ல விடயம் யார் செய்தாலு அதனை பாராட்டுவது ஒரு கெட்டபழக்கமாகிவிட்டது.

ரசியா கண்டுபிடிக்கிறது எல்லாம் இரண்டாம் பட்ஷம்

மண் ஓடடாது எங்கள் மீசையை பாதுகாக்கணும் ........ மனிதர்களுக்கு எவ்வளவு பிரச்சனை ?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

மேலே ஓணாண்டியார் இணைத்த மருத்துவத் தகவல் கட்டுரையில் இருக்கும் அதே அடிநாதமான விடயத்தைத் தான் நானும் என் பாணியில் சொல்லியிருக்கிறேன். "இது முன்னோடி" என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், ஆனால் செய்தியைப் பிரசுரித்த அனைத்து இந்திய ஊடகங்களும் "ஊசி பாவிக்க தயார், அனைவருக்கும் இலவசம்" என்று கூறியிருக்கும் தகவலை நீங்கள் சரி பார்த்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், மருந்தைத் தயாரித்த ரஷ்ய அமைப்பின் தளத்தில் என்ரெறோமிக்ஸ் என்பதே mRNA தடுப்பூசியாக அல்லாமல், நான்கு மனிதனுக்குத் தொற்றும் வைரசுகளின் கலவை என்று இருக்கிறது. அதன் கீழ் ஒரு பந்தியில் mRNA தடுப்பூசி செய்கிறோம் என்று இருக்கிறது. இதையெல்லாம் கலந்து கட்டி ஒரு கற்பனைச் செய்தியை சில ஊடகங்கள் போட்டிருக்கின்றன.

இப்படியான செய்திகள் முகநூலில், இன்ஸ்ராவில் ஓடும், யாழில் கஷ்டம் தான்!

11 hours ago, இணையவன் said:

இந்த ஊசியின் விலை 3000 ஈரோவுக்கு மேல் என்று பேசப்படுகிறது. யாருக்கு இலல்வசமாகத் தருவார்கள் என்று பார்க்கலாம்.

48 நோயாளிகளில் 3 மாதங்கள் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளது. ரஸ்ய சுகாதாரத் திணைக்களமே இன்னும் இதன் ஆற்றலை உறுதிப்படுத்தவில்லை. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் புதினுக்கு வாழ்த்துத் தெரிவிக்க முண்டியடிப்பதை என்னவென்று சொல்வது. பிரான்ஸ் அல்லது ஜேர்மனி ஒரு புது அரிய மருந்தைக் கண்டுபிடித்தால் அதனை வைத்து அந்த நாடுகளின் தலைவர்களுடன் விளம்பரம் செய்வார்களா ?

4 hours ago, Maruthankerny said:

ரசியா கண்டுபிடிக்கிறது எல்லாம் இரண்டாம் பட்ஷம்

மண் ஓடடாது எங்கள் மீசையை பாதுகாக்கணும் ........ மனிதர்களுக்கு எவ்வளவு பிரச்சனை ?

மேலுள்ள கட்டுரையில் கூட இது ஒரு Therapeutic vaccine என கூறப்படவில்லை அதனால் பொதுவாக எல்லோருக்கும் குழப்பம் நிலவியிருந்தது, ஆனால் ஆரம்பத்திலேயே இது வழமையான Prophylactic vaccine இல்லை என கூறியதாக நினைவுள்ளது.

அதனால் சாதாரண தடுப்பூசி போல இதனை அனைவரும் போட முடியாது, நோய் ஏற்பட்டவர்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது.

அதனாலேயே இந்த தடுப்பூசிகள் மிக விலை அதிகமாக உள்ளது பொதுவாக கோவிட் தடுப்பூசி போல பெருமளவில் ஒரே தொழில்னுட்பத்தில் பெருமளவில் விலை குறைவாக இதனை தயாரிக்க முடியாது.

மொர்டேனாவின் தடுப்புசியும் இரஸ்சியாவின் இந்த தடுப்பூசியும் கிட்டதட்ட ஒரே மாதிரியானவை என கூறப்படுகிறது, மனித ஆராய்ச்சியில் மொர்டேனா இரண்டாம் கட்டத்தினை முடித்து விட்டதாக கூறுகிறார்கள்.

இந்த இரு தடுப்பூசிகளிலும் இரஸ்சியா கூறும் உற்பத்தி செலவுதான் பெருமளவான சர்ச்சையினை கிளப்பியுள்ளதாக கருதுகிறேன், 3000 யூரோவிற்கு இதனை தயாரிக்க முடியாது, மொர்டேனா தடுப்பூசி ஒரு நோயாளருக்கு 50000 -100000 டொலர் வரை உற்பத்தி செலவாகலாம் எனவும், மொர்டேனா ஒரு வர்த்தக நிறுவனம் என்பதால் ஒரு நோயாளியின் தடுப்பூசி 150000 வரை செல்லலாம் என கருதுகிறேன்.

சில நிறுவனங்கள் இதன் உற்பத்தி செலவினை குறைப்பதற்கு வேறுபட்ட பிளட்போர்மினை பயன்படுத்துவதில் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள் என கருதுகிறேன்.

இவ்வாறு விலை அதிகமான ஒரு தடுப்பூசியினை இலவசமாக கொடுத்தால் யார்தான் வரவேற்கமாட்டார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2025 at 08:48, vasee said:

இது ஒரு தடுப்பூசி இல்லை புற்றுநோய் வந்தவர்களுக்கு வழங்கப்படும் மருந்தாக கூறப்படுகின்றது.

On 9/9/2025 at 08:59, vasee said:

இது ஒரு பிரத்தியேக (Personalized) வடிவமைக்கப்பட்ட தடுப்பூசி.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2025 at 09:46, தமிழ் சிறி said:

இந்த புற்றுநோய் தடுப்பூசியை கண்டு பிடிக்க ஊக்கம் கொடுத்து அதனை வெற்றிகரமாக கண்டு பிடிக்க வைத்தது மட்டுமல்லாது அந்த மருந்தை இலவசமாக கொடுக்க முன் வந்த புட்டின் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும். 👏🏻 🤝 👍🏽

அதனை நடைமுறைப்படுத்தினால் அதில் மாற்றுக்கருத்து இல்லை, போரில் உள்ள ஒரு நாட்டினால் இப்படியான சமூக செலவினை செய்யும் போது ஏன் வளர்ந்த நாடுகள் அதனை பின்பற்றக்கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்

பூட்ரின் உக்ரைன் மீது ஆக்கிரப்பு போரை நடத்தி வருவதால் மிகப் பெரிய செலவு இருக்கின்ற படியால் இந்த அற்புதமான புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை இலவசமாக உலக மக்களுக்கு அவரால் வழங்க முடியவில்லை அதன் காரணமாக ரஷ்ய மக்களுக்கும் இந்தியா ஆபிரிக்க நாடுகளுக்கு மட்டும் இலவசமாக வழங்குவார் என்றும் தெரிய வருகின்றது. எனக்கும் இந்த தடுப்பூசி எடுக்க மிகவும் ஆசை என்ன செய்வது😭

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

பூட்ரின் உக்ரைன் மீது ஆக்கிரப்பு போரை நடத்தி வருவதால் மிகப் பெரிய செலவு இருக்கின்ற படியால் இந்த அற்புதமான புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை இலவசமாக உலக மக்களுக்கு அவரால் வழங்க முடியவில்லை அதன் காரணமாக ரஷ்ய மக்களுக்கும் இந்தியா ஆபிரிக்க நாடுகளுக்கு மட்டும் இலவசமாக வழங்குவார் என்றும் தெரிய வருகின்றது. எனக்கும் இந்த தடுப்பூசி எடுக்க மிகவும் ஆசை என்ன செய்வது😭

அண்ணை, இது தடுப்பூசி அல்ல. நோய் வந்தவர்களுக்கு போட்டால் சுகம் வருதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வழியாக எல்லா "புரின் புரியன்" மாரையும் வகேஷனில் இருந்து இழுத்துக் கொண்டு வந்தாச்சு😎!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

அதனை நடைமுறைப்படுத்தினால் அதில் மாற்றுக்கருத்து இல்லை, போரில் உள்ள ஒரு நாட்டினால் இப்படியான சமூக செலவினை செய்யும் போது ஏன் வளர்ந்த நாடுகள் அதனை பின்பற்றக்கூடாது?

மூவாயிரம் யூரோ செலவாகும் மருந்தை "சும்மா கொடுப்பதை" சொல்கிறீர்களா? ஒரு தடவை யோசித்துப் பாருங்கள்: உலகத்தில் ஏதாவது மருந்து இலவசமாக யாருக்காவது கிடைக்கிறதா? பெற்றுக் கொள்பவர் விலையைக் கொடுக்கா விட்டால் அது சும்மா வருகிறது என்று அர்த்தமல்ல. எங்கோ இருந்து வேறொருவர் விலையைக் கொடுத்திருக்கிறார் , பெறுனர் பயன் பெற்றிருக்கிறார் என்று தான் அர்த்தம். சில வளர்ந்த நாடுகளில் இது பெறுனரே வேறு வழிகளில் செலுத்தும் வரியாக இருக்கும், இலங்கை போன்ற நாடுகளாக இருந்தால், செல்வந்த நாடுகள் கொடுத்த நன்கொடையாக இருக்கும்.

ஒரு முதலைப் போட்டு, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து ஒரு பொருளை உருவாக்கி, அதை சும்மா கொடுத்தால், இந்தப் பொருளை தொடர்ந்து எப்படி உற்பத்தி செய்வது? இதைச் செய்யும் மாயாஜாலம் எதுவும் முதலாளித்துவத்திலோ, சோசலிச, கம்யூனிச அமைப்பிலோ கண்டு பிடிக்கப் படவில்லை. எனவே, வேலை செய்யும் மருந்துகள் விலைக்குத் தான் கிடைக்கும் (வேலை செய்யா போலி மருந்துகள் சும்மா கிடைக்கலாம், அது வேறு கதை😎). ஆனால், பெறுனருக்கு பொருளாதார வசதியில்லா விட்டால், அரசு தலையிட்டு மருந்தைப் பெற்றுக் கொடுக்கும் படி செய்யலாம். அமெரிக்காவிலேயே இந்த மாதிரியான நிவாரணங்கள் இருக்கின்றன.

22 hours ago, குமாரசாமி said:

நம்ம தலைக்கு கோள்வம் வாறதெல்லாம் நடிப்பு. புட்டினுக்கு தல செங்கம்பளம் விரிச்சு வரவேற்கும் போதே ரஷ்யா பக்கம் நூறுவீதம் நியாயம் இருக்கு எண்டதை விளங்கியிருக்க வேணும்.😂

நெதன்யாகுவை ஒன்றுக்கு பல தரம் செங்கம்பளம் விரிச்சு வரவேற்றார் உங்கள் தல. அவர் பக்கமும் நூறு வீதம் நியாயம் இருக்கு என நம்புகின்றீர்கள் தானே..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, நிழலி said:

நெதன்யாகுவை ஒன்றுக்கு பல தரம் செங்கம்பளம் விரிச்சு வரவேற்றார் உங்கள் தல. அவர் பக்கமும் நூறு வீதம் நியாயம் இருக்கு என நம்புகின்றீர்கள் தானே..?

இல்லை.

நெதென்யாகுவிற்கு கதிரை சேவகனாக இருக்கவேண்டிய அவசியம் நம்ம தலைக்கு இருக்கு.உலக அதிகார யூதர்களுக்கு பணிய வேண்டிய அவசியம் அமெரிக்கவிற்கு உண்டு. அது மட்டுமல்ல கட்டாய நிபந்தனையும் கூட.... சொந்த மண்ணில் பொருளாதார வல்லமை இல்லாத நாடு இஸ்ரேல் என்பது பலருக்கும் தெரியும்.அதன் பொருளதார பலம் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே உண்டு.ஆகவே அந்த பலம் எங்கு எப்படி என்பது நாம் இங்கு ஆராய தேவையில்லை.

ஆனால் ரஷ்யாவின் பூகோள அரசியலும் வேறு. பொருளாதார அரசியலும் வேறு.ரஷ்ய அரசியலை விட அதன் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் உக்ரேன் போருக்கு பின்னர் இந்த உலகு நன்கு புரிந்திருக்கின்றது.அது டொனால்ட் ரம்பிற்கும் புரிந்திருக்கின்றது.

இப்போது நிழலிக்கும் புரிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

மூவாயிரம் யூரோ செலவாகும் மருந்தை "சும்மா கொடுப்பதை" சொல்கிறீர்களா? ஒரு தடவை யோசித்துப் பாருங்கள்: உலகத்தில் ஏதாவது மருந்து இலவசமாக யாருக்காவது கிடைக்கிறதா? பெற்றுக் கொள்பவர் விலையைக் கொடுக்கா விட்டால் அது சும்மா வருகிறது என்று அர்த்தமல்ல. எங்கோ இருந்து வேறொருவர் விலையைக் கொடுத்திருக்கிறார் , பெறுனர் பயன் பெற்றிருக்கிறார் என்று தான் அர்த்தம். சில வளர்ந்த நாடுகளில் இது பெறுனரே வேறு வழிகளில் செலுத்தும் வரியாக இருக்கும், இலங்கை போன்ற நாடுகளாக இருந்தால், செல்வந்த நாடுகள் கொடுத்த நன்கொடையாக இருக்கும்.

ஒரு முதலைப் போட்டு, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து ஒரு பொருளை உருவாக்கி, அதை சும்மா கொடுத்தால், இந்தப் பொருளை தொடர்ந்து எப்படி உற்பத்தி செய்வது? இதைச் செய்யும் மாயாஜாலம் எதுவும் முதலாளித்துவத்திலோ, சோசலிச, கம்யூனிச அமைப்பிலோ கண்டு பிடிக்கப் படவில்லை. எனவே, வேலை செய்யும் மருந்துகள் விலைக்குத் தான் கிடைக்கும் (வேலை செய்யா போலி மருந்துகள் சும்மா கிடைக்கலாம், அது வேறு கதை😎). ஆனால், பெறுனருக்கு பொருளாதார வசதியில்லா விட்டால், அரசு தலையிட்டு மருந்தைப் பெற்றுக் கொடுக்கும் படி செய்யலாம். அமெரிக்காவிலேயே இந்த மாதிரியான நிவாரணங்கள் இருக்கின்றன.

பல நாடுகளிலும் இந்த மானிய விலை மருந்து நடைமுறையில் உள்ளது.

இந்த புற்றுநோயிற்கான மருத்துவ முறை மிகவும் விலை கூடிய ஒன்றாகவுள்ளது, ஆரம்ப கட்ட மரபணு தரநிலைப்படுத்தலுக்கு கோவிட் தடுப்பூசியினை விட பலமடங்கு விலை செலுத்தவேண்டும், பின்னர் அந்த தகவலின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவின் மூலம் மரபணு தொகுக்கப்பட்டு மருந்து தயாரிக்கப்பட வேண்டும், அதனை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து வினியோகம் செய்யவேண்டும் என மிக பெரும் செலவான உற்பத்தி முறை.

அவுஸ்ரேலியாவில் கெரி பெக்கர் எனும் தொழிலதிபர் இருதய நோயினால் மருத்துவ ரீதியாக மரண நிலையினை எட்டி உயிர் பிழைத்தார், அப்போது AED உபகரணம் இருந்திருந்தால் அவருக்கு அந்த நிலை ஏற்பட்டிருக்காது என நம்பினார், அதனால் மக்கள் கூடும் இடங்களில் தனது செலவிலே அந்த உபகரணங்களை வைத்தார் அத்துடன் அனைத்து நோயாளர் காவு வண்டியிலும் அதனை வைத்ததாக கூறுவார்கள்.

சீனாவில் மெடிக்கல் கப் எனும் முறைமையினை பயன்படுத்தி மக்கள் அதிகளவில் குறைந்த செலவில் பயன்பெறும் முறை உள்ளது, அதே போல இந்த மருந்து தயாரிப்பு வினியோகத்திற்கும் அதனை பயன்படுத்தலாம், அத்துடன் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ரோபோட்டிக் முறையிலான உற்பத்தி முறை உற்பத்தி செலவினை குறைக்கலாம் என முயற்சிகள் சில நிறுவனங்கள் முயற்சிக்கின்றன என கருதுகிறேன்.

3000 யுரோவில் உற்பத்தி விலையினை குறைத்தால் அது மிக பெரும் சாதனைதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.