Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

மேலும்.....

Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital

  • Israel has carried out a strike on senior Hamas leaders in Qatar's capital Doha

  • A Hamas official says its negotiating team was targeted during a meeting

  • Explosions are heard and smoke is rising above Doha

Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital - BBC News

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் எலிமினேட் செய்யப்படவேண்டும். வெல்டன் இஸ்ரேல்! யாஹ்வே நிஸ்ஸி!

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளது போல் தெரிகின்றதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, நியாயம் said:

இஸ்ரேலின் தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளது போல் தெரிகின்றதே.

இஸ்ரேலுக்கு இந்த தாக்குதலில் வெற்றியோ தோல்வியோ அல்லது வெறியோ ஒரு புறம் இருக்க......

இந்த யுகம் இருக்கும் வரைக்கும் இஸ்ரேல் நிம்மதியாக நித்திரை கொள்ள சந்தர்ப்பங்கள் மிக மிக அரிது.ஏனென்றால் இஸ்ரேலுக்கு எதிரிகள் அதிகரிக்கின்றார்களே ஒழிய குறைய சந்தர்ப்பங்கள் இல்லை.

இந்த உலகில் அமெரிக்க ஆதிக்கம் குறையுமானால் இஸ்ரேலுக்கு என் முன்கூட்டிய அனுதாபங்கள்.

இன்றைய உலகில் எல்லா நாடுகளும் எல்லாவற்றையும் செய்ய பழகி விட்டார்கள்.அண்மைய சீனாவின் இராணுவ அணிவகுப்பு பல செய்திகளை சொல்லிவிட்டு சென்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

Doha blasts: Israel carried out an attack against Hamas leadershipin the capital of Qatar, which has been a key mediator in Gaza ceasefire talks.

Hamas says negotiators targeted: Hamas said the strike killed five members but failed to assassinate the negotiating delegation.

• Official responses: Qatar’s prime minister was visibly angry as he described the strike as “state terrorism” while Israel’s Prime Minister Benjamin Netanyahu said the attack “can open the door to an end of the war in Gaza.”

• Trump weighs in: US President Donald Trump sought to distance himself from the attack, saying that by the time his administration learned of it and told the Qataris, there was little he could do to stop it.

தோஹா குண்டுவெடிப்பு: காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய மத்தியஸ்தராக இருந்து வரும் கத்தார் தலைநகரில் ஹமாஸ் தலைமைக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. •

பேச்சுவார்த்தையாளர்கள் குறிவைக்கப்பட்டதாக ஹமாஸ் கூறுகிறது: இந்த தாக்குதலில் ஐந்து உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், பேச்சுவார்த்தை குழுவை படுகொலை செய்யத் தவறியதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. •

அதிகாரப்பூர்வ பதில்கள்: கத்தார் பிரதமர் தாக்குதலை "அரசு பயங்கரவாதம்" என்று விவரித்தபோது கோபமாக இருந்தார், அதே நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த தாக்குதல் "காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும்" என்று கூறினார்.

• டிரம்ப் இதில் கவனம் செலுத்துகிறார்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தாக்குதலில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள முயன்றார், அவரது நிர்வாகம் இதைப் பற்றி அறிந்து கத்தார் மக்களுக்குத் தெரிவிக்கும் நேரத்தில், அதைத் தடுக்க அவரால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினார்.

https://www.cnn.com/world/live-news/israel-qatar-attack-09-09-25

I’m not thrilled about the whole situation," Trump says about the Israeli attack in Doha.

US President Donald Trump said he was not happy about how Israel’s attack on Hamas leadership inside Qatar transpired today, potentially putting Gaza ceasefire talks on uncertain ground.

“I’m not thrilled about the whole situation. It’s not a good situation. But I will say this, we want the hostages back, but we are not thrilled about the way that went down,” Trump told reporters Tuesday evening.
“I’ll be giving a full statement tomorrow, but I will tell you this — I was very unhappy about every aspect,” he added.

The day’s events underscored the fragile nature of Trump’s attempts to broker peace in Gaza, his often-frustrating relationship with Prime Minister Benjamin Netanyahu and his efforts to maintain strong ties with the US allies in the Gulf.

Some of Trump’s advisers are also angry over Israel’s decision to strike inside Doha, with many particularly frustrated that they weren’t able to weigh in or warn the Qataris.

Trump was informed of the strike only shortly before it began — and not by Israel itself, but by Chairman of the Joint Staff Gen. Dan Caine, according to a US official. He immediately told White House special envoy Steve Witkoff to brief them, according to another US official. Witkoff has a longstanding relationship with the Qataris.

However, by the time Witkoff was able to reach them, it was too late, a US official told CNN. Adding to the ire, Witkoff had met Monday with one of Netanyahu’s top advisers, Ron Dermer, but was not alerted of the impending strikes during those talks.

https://www.cnn.com/world/live-news/israel-qatar-attack-09-09-25

ரம்பின் விலாங்கு விளையாட்டு அமெரிக்காவுக்கு பெரு நஸ்டமாக போகிறது.

அண்மையில்த் தான் அரபு நாடுகளுக்கு போய் பலவிதமான வியாபார ஒப்பந்தங்கள் செய்துகொண்டு வந்தார்.

எல்லாவற்றையும் காற்றிலே பறக்கவிடப் போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நடக்குது இங்கை. போன மதம் தானே US இக்கு ஒரு Air Force 1 குடுத்து நல்லுறவு வளர்த்தங்கள். இப்ப அவனே கை விட்டுடான? அவனை தான் நம்பி உக்கிரேன் பக்கத்துவீட்டோடை மல்லு கட்டினான்.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-127.jpg?resize=750%2C375&ssl

கட்டாரில் ஹமாஷ் தலைவர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்; ட்ரம்ப் அதிருப்தி!

செவ்வாயன்று கட்டார் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி ஹமாஸின் அரசியல் தலைவர்களைக் கொல்ல இஸ்ரேல் முயன்றதுடன், மத்திய கிழக்கில் அதன் இராணுவ நடவடிக்கையை அதிகரித்தது.

தாக்குதல் குறித்து பதிலளித்துள்ள வொஷிங்டன், இது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களை முன்னேற்றாத ஒருதலைப்பட்ச தாக்குதல் என்று விவரித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலினால் தான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், புதன்கிழமை (10) இந்த விவகாரம் குறித்து முழு அறிக்கையை வெளியிடுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸைத் தாக்குவது ஒரு தகுதியான இலக்காகக் கருதுவதாக ட்ரம்ப் கூறினார்.

ஆனால் இந்தத் தாக்குதல் வளைகுடா அரபு நாட்டில் நடந்ததைக் கண்டு அவர் வருத்தப்பட்டார்.

கட்டார் வொஷிங்டனின் முக்கிய நேட்டோ அல்லாத நட்பு நாடாகும், பாலஸ்தீன இஸ்லாமியக் குழு நீண்ட காலமாக அதன் அரசியல் தளத்தை அங்கு கொண்டுள்ளது.

இதனிடையே தாக்குதல் குறித்து வருத்தம் வெளியிட்டுள்ள கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான், வான்வழித் தாக்குதல்கள் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே கட்டார் மத்தியஸ்தம் செய்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தடம் புரளச் செய்யும் என்று கூறினார்.

இந்தத் தாக்குதலுக்கு சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளையும், கிட்டத்தட்ட இரண்டு வருட கால மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவு காண ட்ரம்பின் முயற்சியையும் இது தடம் புரளச் செய்யும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கட்டார் அமெரிக்காவின் பாதுகாப்புப் பங்காளியாகும்.

மேலும் மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமான அல்-உதெய்த் விமானத் தளத்தை நடத்துகிறது.

காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எகிப்துடன் இணைந்து மத்தியஸ்தராகச் செயல்பட்டது.

ஹமாஸின் நாடுகடத்தப்பட்ட காசா தலைவரும் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளருமான கலீல் அல்-ஹய்யாவின் மகன் உட்பட, தனது ஐந்து உறுப்பினர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறியது.

தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்பு அமெரிக்க இராணுவத்திடமிருந்து தாக்குதல் குறித்து ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை வந்தது என்று அமெரிக்க ஜனாதிபதி முன்னதாக சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

எனினும், அமெரிக்க இராணுவத்திற்குத் தெரிவித்தது இஸ்ரேல்தானா என்று அவர் கூறவில்லை.

Israel carries out strike targeting Hamas leadership in Qatar | CNN

https://athavannews.com/2025/1446590

  • கருத்துக்கள உறவுகள்

கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?

கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல்: அமெரிக்காவின் பங்கு இருப்பதாக அரபு ஊடகங்கள் கூறுவது ஏன்?

Reuters

10 செப்டெம்பர் 2025, 10:05 GMT

புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

செப்டம்பர் 9 அன்று கத்தாரின் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், அமெரிக்காவின் பங்கு இருந்ததாக அரபு மற்றும் பிராந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த தாக்குதல், உயர்நிலை ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

செளதி அல் அரேபியா டிவியின் செய்தித் தொகுப்பில், இஸ்ரேல் ஊடகங்களில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி, தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும், அதிபர் டிரம்ப் அதற்கு "பச்சைக்கொடி காட்டினார்" என்றும் ஒரு அதிகாரி கூறியதைத் தெரிவித்தது.

மேலும், பெயர் வெளியிட விரும்பாத ஹமாஸ் தலைவர் ஒருவரின் கூற்றைச் சுட்டிக்காட்டிய அந்த தொலைக்காட்சி, தாக்குதல் தோல்வியடைந்தது, பேச்சுவார்த்தை குழுவினர் உயிர் பிழைத்தனர் என்றும் தெரிவித்தது.

"தோல்வியடைந்த தாக்குதல்" என்று அல் அரேபியா சேனல் விவரித்ததைப் பற்றி விவாதிக்க பாதுகாப்பு ஆய்வாளர் ரியாட் கஹ்வாஜியை அழைத்தது.

இந்த தாக்குதல் இஸ்ரேலின் தவறான மதிப்பீடு மற்றும் உளவுத்துறை தோல்வியைக் காட்டுகிறது அல்லது பேச்சுவார்த்தை குழுவினருக்கு உளவியல் அழுத்தம் கொடுத்து பயத்தை ஏற்படுத்தி, அவர்களை சமரசம் செய்யத் தள்ளும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது என கஹ்வாஜி கூறினார்.

அல் அரேபியா, தொடர்ச்சியாக வெளியிட்ட முக்கிய செய்திகளில், இந்த தாக்குதல் குறித்து செளதி அரேபியா தெரிவித்த கண்டனத்தையும் பதிவு செய்தது

"கத்தார் எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஆதரிக்க எங்களின் திறன் அனைத்தையும் வழங்குவோம். இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என செளதி அரசு எச்சரித்ததாகவும் அந்த தொலைக்காட்சி கூறியது.

இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி இயக்கத்தின் அல்-மசிரா டிவி சேனல் தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஆரம்பத் தகவல்களின் படி இந்தத் தாக்குதல் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டதாக கூறியது.

AL ARABIYA TV கத்தாரின் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், அமெரிக்காவின் பங்கு இருந்ததாக அரபு மற்றும் பிராந்திய ஊடகங்கள் கூறுகின்றன

'அமெரிக்காவை நம்ப வேண்டாம்'

இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி இயக்கத்தின் அல்-மசிரா டிவி சேனல் தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், ஆரம்பத் தகவல்களின்படி இந்தத் தாக்குதல் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டதாக கூறியது.

இதற்கிடையில், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஒரு நிபுணர், அரபு நாடுகளின் பங்கைப் பற்றி பேசினார்.

"ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் அல்-உதீத் ராணுவத் தளத்தை குறிவைத்த இரானிய ராக்கெட்டுகளைத் தடுத்த அரபு பாதுகாப்பு அமைப்புகள் இப்போது எங்கே?" என்று கேள்வி எழுப்பினார் அவர்

மேலும், அரபு நாடுகள் வெளியிடும் அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி, "'நாங்கள் கண்டிக்கிறோம். நாங்கள் கோருகிறோம்' போன்ற வார்த்தைகளே அதிகம் உள்ளது" என்றார் அவர்.

ஹூத்தி உச்ச அரசியல் கவுன்சில் (SPC) தலைவர் மஹ்தி அல்-மஷாத், "குற்றவாளி டிரம்பின் அனுமதி இல்லாமல் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்காது" என்று கூறி, அமெரிக்கா உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ஹூத்தி கட்டுப்பாட்டில் உள்ள சபா செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "சியோனிச எதிரி (இஸ்ரேல்) இருக்கும் வரை பிராந்தியத்தில் அமைதியோ, நிலைத்தன்மையோ இருக்க முடியாது என்பதை இந்தச் சம்பவம் எந்த சந்தேகமும் இல்லாமல் நிரூபித்துள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல்: அமெரிக்காவின் பங்கு இருப்பதாக அரபு ஊடகங்கள் கூறுவது ஏன்?

Reuters

மேலும், இது அனைத்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது என்றும், "தாமதமாகிவிடும் முன் எச்சரிக்கையாக இருங்கள். சியோனிச அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாம் ஒன்றுபடாவிட்டால், தோஹாவில் நடந்தது மற்ற நாடுகளிலும் மீண்டும் மீண்டும் நடக்கும்" என்றும் மஷாத் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இஸ்லாமியர்களே, அமெரிக்காவை நம்பாதீர்கள். அது சியோனிசத்தின் ஆதரவாளரும், பணியாளரும் ஆகும்'' என்றார்.

லெபனானின் ஹெஸ்பொலா இயக்கத்தின் அல்-மனார் டிவி, லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உட்பட பல பிராந்திய தலைவர்களின் கண்டன அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டது.

அந்த சேனல், கத்தாரின் மத்தியஸ்தர் பங்கு குறித்து ஒரு நிபுணருடன் விவாதித்தது.

"அரபு நாடுகளின் பங்கு சரியான பாதைக்கு திரும்ப வேண்டும். எங்களுக்கு இப்போது உண்மையான, தீவிரமான பங்கு தேவை. பாதிக்கப்பட்டவருக்கும் தண்டனை வழங்குபவருக்கும் இடையில் நீங்கள் மத்தியஸ்தராக இருக்க முடியாது" என்றார் அந்த நிபுணர்.

லெபனான் அரசு செய்தி நிறுவனமான என்என்ஏ (NNA), அதிபர் அவுனின் அறிக்கையை மேற்கோள் காட்டியது.

கத்தார், அதன் தலைமை மற்றும் மக்களுடன் தனது நாட்டின் ஒற்றுமையை அதில் வலியுறுத்தினார் அதிபர் அவுன்.

மேலும், ''இந்தத் தாக்குதல், இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாகும். இது, பிராந்திய நாடுகளில் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தகர்க்கும் நடவடிக்கை" என்று கூறியிருந்தார்.

ஹெஸ்போலா சார்பு கொண்ட அல்-அக்பர் பத்திரிகையும், இந்த தாக்குதலுக்கு எதிராக வெளியான பரவலான சர்வதேச மற்றும் அரபு கண்டனங்களை முன்னிலைப்படுத்தியது.

இது, "பிராந்தியத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விரிவாக்கமாக கருதப்படுகிறது" என்று அது குறிப்பிட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd72dxe9d2eo

  • கருத்துக்கள உறவுகள்

545607908_4092648607643770_1435392841894

இந்த வருடம் மே மாதத்தில் டிரம்பிற்கு 1.2 டிரில்லியன் டாலர்களை அள்ளி வழங்கியது கத்தார்.

அதுமட்டுமா 400 மில்லியன் டாலர் பெருமதியான அதி சொகுசு போயிங் 747-8 விமானத்தை அந்த பைத்தியத்திற்கு பரிசாக வழங்கியது.

அதற்கு பரிசாக இன்று, தோஹா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் ட்ரம்பின் அனுமதியோடு அவனது மேற்பாரவையில் சிறப்பாக இடம் பெற்றது.

உண்மை உரைகல்

Trump வந்தால் மத்திய கிழக்கில் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமெரிக்கா நடந்து கொள்ளும் என எதிர்பார்த்து வாக்களித்த பெருவாரியான முஸ்லிம்கள் இப்ப என்ன நினைகினம் என அறிய ஆவலாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

Trump வந்தால் மத்திய கிழக்கில் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமெரிக்கா நடந்து கொள்ளும் என எதிர்பார்த்து வாக்களித்த பெருவாரியான முஸ்லிம்கள் இப்ப என்ன நினைகினம் என அறிய ஆவலாக உள்ளது.

இதோ, உங்கள் ஆவலுக்கு "அவல்!அருமையான பின்னூட்டங்கள் வீடியோவின் கீழே!

(அவை காசாவை அமெரிக்கா எடுத்துக் கொள்ளும் என்ற அறிவிப்போடவே "உப்புக் கிணறு கிண்டினோம்"😎 என்று எங்கள் யாழ் கள ட்ரம்ப் விசிறிகள் போல அழ ஆரம்பித்து விட்டார்கள்).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரான் கட்டாரில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமுக்கு அடிச்சால் நாங்களும் அந்த இலக்கை நோக்கி அடிக்கும் வல்லமை இருக்கு என இஸ்ரேல் செய்து காட்டியிருக்கு போல...

என்னமோ...

ஒரு காலத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இன்றி இந்த உலகம் இயங்காது என்றொரு நிலை இருந்தது.அது இன்றில்லை என என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகின்றது.

உலக அரசியல் பொருளாதார மாற்றங்கள் இன்னொரு சக்தியை நம்பி இருக்கப்போவதில்லை என தெரிகிறது.

இருந்தாலும் நான் பெரிது நீ பெரிது...எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற குண்டுச்சட்டி சுழியோட்டங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நிழலி said:

Trump வந்தால் மத்திய கிழக்கில் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமெரிக்கா நடந்து கொள்ளும் என எதிர்பார்த்து வாக்களித்த பெருவாரியான முஸ்லிம்கள் இப்ப என்ன நினைகினம் என அறிய ஆவலாக உள்ளது.

இன்றைய அல்லது அன்றைய இன்றைய அரசியல் என்பது யாரும் வீரம் பேச முடியாத விடயம்.உண்மையான அரசியல்வாதிகளும் இன்றில்லை. உண்மையாக இருந்தாலும் கொன்று விடுவார்கள். இதுதான் உலக அரசியல் வரலாறு.

பட்டம் விட்டுக்கொண்டிருக்கலாமே தவிர பட்டத்தில் ஏறி அமர முடியாது.பொய்யும் பிரட்டும் உள்ள உலகில் நான் மட்டும் ஏன் நீதி தேவனாகவும் நியாயமானவனாகவும் ஒழுக்கமானவனாகவும் இருக்க வேண்டும்?

டொனால்ட் ரம்ப் அவர்கள் நினைத்ததும் நடைபெறவில்லை.புட்டின் நினைத்ததும் நடைபெறவில்லை. ஐரோப்பா நினைத்ததும் நடைபெறவில்லை.

எதிர்வு கூறல் சுலபம். அது நடைமுறைக்கு வருமா என்பது சந்தேகம்.

ஆசிய அரசியலில் இந்தா தாறம் வெட்டுறம் புடுங்கிறம் தீர்த்து வைக்கிறம் என்பார்கள் ஏதாவது நடந்ததா? அது போல் தான் மேற்கத்தைய அரசியலும்.

  • கருத்துக்கள உறவுகள்

கத்தாரில் இஸ்ரேல் குறிவைத்த ஹமாஸ் தலைவர் எங்கே? - உலக நாடுகளை பகைத்து நடத்திய தாக்குதல் தோல்வியா?

ஹமாஸின் பேச்சுவார்த்தை குழு தலைவர் கலீல் அல்-ஹய்யா

Getty Images ஹமாஸின் பேச்சுவார்த்தை குழு தலைவர் கலீல் அல்-ஹய்யா

கட்டுரை தகவல்

  • டேவிட் கிரிட்டன்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

செவ்வாயன்று தோஹாவில் மூத்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காணாமல் போன இரண்டு பேரைத் தேடி வருவதாகவும், மனித எச்சங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் சர்ச்சைக்குரிய இந்த தாக்குதல் வெற்றி பெறவில்லை என்ற கவலை இஸ்ரேல் ராணுவ வட்டாரங்களில் உள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தெரிவித்த ஐந்து கீழ்மட்ட உறுப்பினர்களில் மூவரின் உடல்களை, கத்தார் உள்துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது, அவர்களோடு ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளார்.

தனது பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்த இந்த தாக்குதல் தோல்வியடைந்ததாக ஹமாஸ் கூறியுள்ளது.

சின்என்-க்கு அளித்த பேட்டியில், ஹமாஸின் தலைமை பேச்சுவார்த்தையாளர் கலீல் அல்-ஹய்யாவின் நிலை குறித்து கத்தார் பிரதமர் எதையும் வெளிப்படுத்தவில்லை.

"இதுவரை... எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை," என்று ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி புதன்கிழமை மாலையில் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேலின் நடவடிக்கை "அரச பயங்கரவாதம்" எனக் கருதப்பட வேண்டியதாகவும், கத்தாரின் பிராந்திய கூட்டாளிகள் "கூட்டாகப் பதில்" அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் "பயங்கரவாத மூளையாக இருந்தவர்களை" குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் நியாயமானது என்று தெரிவித்தார்.

அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போரில், காஸாவில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 64,656 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதியில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சின்என்-க்கு அளித்த பேட்டியில், ஹமாஸின் தலைமை பேச்சுவார்த்தையாளர் கலீல் அல்-ஹய்யாவின் நிலை குறித்து கத்தார் பிரதமர் எதையும் வெளிப்படுத்தவில்லை.

AFP மிகவும் சர்ச்சைக்குரிய இந்த தாக்குதல் வெற்றி பெறவில்லை என்ற கவலை இஸ்ரேல் ராணுவ வட்டாரங்களில் உள்ளது என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் முக்கிய பிராந்தியக் கூட்டாளியாக இருக்கும் கத்தாரில், பெரிய அமெரிக்க விமானத் தளம் அமைந்துள்ளது. 2012 முதல் ஹமாஸ் அரசியல் பணியகம் அங்கு செயல்பட்டு வருகிறது. மேலும், அமெரிக்கா மற்றும் எகிப்துடன் இணைந்து, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகளில் கத்தார் மத்தியஸ்தராகவும் இருந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் வடக்கு தோஹாவில் நடந்த வான்வழித் தாக்குதல், ஹமாஸ் அரசியல் பணியகத்தின் பல உறுப்பினர்கள் வசித்த குடியிருப்பு வளாகத்தை குறிவைத்ததாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்போது அவர்கள், அமெரிக்கா முன்மொழிந்த சமீபத்திய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தைப் பற்றி ஆலோசித்து வந்தனர்.

இந்த நடவடிக்கையை "ஆபரேஷன் சம்மிட் ஆஃப் ஃபயர்" என அழைத்த இஸ்ரேலிய அதிகாரிகள், அதன் முடிவுகள் குறித்து தொடக்கத்தில் நம்பிக்கையுடன் இருந்ததாக இஸ்ரேலிய ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

ஆனால் புதன்கிழமை வந்த தகவல்கள், அந்த தாக்குதல் அவர்கள் நினைத்த அளவுக்கு வெற்றிகரமாக அமையவில்லை என்ற சந்தேகங்களை வெளிப்படுத்தின. சில அதிகாரிகள், ஹமாஸ் தலைவர்கள் கட்டிடத்தின் வேறு பகுதியில் இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஹமாஸ், இந்த "கொடூரமான குற்றத் தாக்குதலில்" தனது ஐந்து உறுப்பினர்கள் உயிரிழந்ததாகக் கூறியது.

கலீல் அல்-ஹய்யாவின் மகன் ஹுமாம், ஹய்யாவின் அலுவலக இயக்குநர் ஜிஹாத் லபாத், மற்றும் பாதுகாப்பு வீரர்கள் மோமன் ஹசௌனா, அப்துல்லா அப்துல் வாஹித், அகமது அல்-மம்லுக் ஆகியோர் தான் அந்த ஐவர்.

"பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள எங்கள் சகோதரர்களை கொல்லும் முயற்சி தோல்வியடைந்தது," என்று ஹமாஸ் கூறியிருந்தாலும், அதற்கான எந்த ஆதாரத்தையும் அது வெளியிடவில்லை.

புதன்கிழமை மாலை, ஹுமாம் அல்-ஹய்யா, லபாத், ஹசௌனா, மேலும் கத்தார் உள்நாட்டு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கார்ப்ரல் பத்ர் அல்-ஹுமைடி ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

"காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு நபர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்றும், "பல்வேறு இடங்களில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கலீல் அல்-ஹய்யாவின் இருப்பிடத்தைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் வெளிப்படவில்லை. அவர் இன்னும் பொதுவெளியிலும் தோன்றவில்லை.

கத்தார் ஹமாஸ் தலைவர்களுக்கு "பாதுகாப்பான புகலிடத்தை" வழங்கியதால், அவர்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

"பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் கத்தார் உட்பட அனைத்து நாடுகளுக்கும் நான் கூறுகிறேன், அவர்களை வெளியேற்றுங்கள் அல்லது நீதியின் முன் நிறுத்துங்கள். இல்லையெனில், நாங்களே நடவடிக்கை எடுப்போம்," என்று அவர் எச்சரித்தார்.

இதற்கு பதிலளித்த கத்தார் பிரதமர் ஷேக் முகமது, "நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியது நெதன்யாகு தான். அவர் தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தேடப்பட்டு வருபவர்," என்று சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, காஸாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நெதன்யாகுவும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்டும் குற்றவியல் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளதாகக் கூறி, ஐசிசி நீதிபதிகள் இருவருக்கும் கைது வாரண்டுகளை பிறப்பித்தனர்.

ஆனால் இஸ்ரேலிய அரசும், அந்த இருவரும் அக்குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

இஸ்ரேலின் சமீபத்தியத் தாக்குதல், காஸாவில் மீதமுள்ள 48 பணயக்கைதிகள் மீதான நம்பிக்கையை "கொன்றுவிட்டது" என தாம் அஞ்சுவதாகவும், அதில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுவதாகவும் ஷேக் முகமது தெரிவித்தார்.

தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன், ஒரு பணயக்கைதியின் குடும்பத்தினரை சந்தித்ததாகவும், அவர்கள் "இந்த போர்நிறுத்த மத்தியஸ்தத்தையே முழுமையாக நம்பியிருந்தனர், அவர்களுக்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை" எனக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் நடவடிக்கை "போருக்கு முடிவு காணும் கதவைத் திறக்கக்கூடும்" என்று நெதன்யாகு செவ்வாயன்று கூறினார்.

மேலும், அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாகவும் உறுதிப்படுத்தினார். அதேசமயம் காஸா மக்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

கத்தார் இப்போது ஹமாஸ் அலுவலகத்தை மூடுமா என்ற கேள்விக்கு, தனது அரசு "எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்து வருகிறது" என்றும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் "விரிவான உரையாடல்" நடத்தி வருவதாகவும் ஷேக் முகமது கூறினார்.

இந்தத் தாக்குதலின் ஒவ்வொரு அம்சத்திலும் தான் மிகவும் அதிருப்தியடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியும் இறையாண்மை கொண்ட நாடான கத்தாருக்குள் ஒருதலைப்பட்சமாக குண்டுவீசுவது, அமைதியை நிலைநாட்ட எங்களுடன் கடினமாகவும் துணிச்சலாகவும் ஆபத்துகளை எதிர்கொண்டு செயல்படும் ஒரு நாட்டுக்கு எதிராகச் செய்யப்படும் நடவடிக்கை. இது இஸ்ரேலின் இலக்குகளையோ அல்லது அமெரிக்காவின் இலக்குகளையோ முன்னேற்றாது", "ஆனால், காஸாவில் வாழும் மக்களின் துயரத்திலிருந்து லாபம் ஈட்டிய ஹமாஸை ஒழிப்பது ஒரு நியாயமான குறிக்கோள்"என்று டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ராணுவத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும், வரவிருக்கும் தாக்குதல் குறித்து கத்தாருக்குத் தெரிவிக்குமாறு சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அது "மிகவும் தாமதமாகிவிட்டது" என்றும் டிரம்ப் கூறினார்.

அமெரிக்கா "தாக்குதல் நடந்த 10 நிமிடங்களுக்குப் பிறகு தான்" கத்தாரைத் தொடர்பு கொண்டதாக ஷேக் முகமது தெரிவித்தார்.

கத்தாரின் சக அரபு நாடுகளும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

புதன்கிழமை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஒற்றுமையை வெளிப்படுத்த தோஹாவிற்கு விமானம் மூலம் சென்றார்.

கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியிடம், இஸ்ரேலின் "குற்றவியல் தாக்குதல்" மத்திய கிழக்கின் "பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் அமைதிக்கான வாய்ப்புகளை" அச்சுறுத்துவதாக கூறியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டபுள்யூஏஎம் (WAM) செய்தி நிறுவனம் தெரிவித்தது.

வியாழக்கிழமையன்று தோஹாவுக்கு வரவிருக்கும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத், இஸ்ரேலின் "கொடூரமான ஆக்கிரமிப்பு" நடவடிக்கைக்கு பதில் தேவைப்படுவதாகக் கூறினார்.

ஷேக் முகமதுவின் கூற்றுப்படி, பிராந்திய ரீதியான பதிலை விவாதிக்க விரைவில் கத்தாரில் ஒரு உச்சிமாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c931lw7e8zwo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.