Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் 38வது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

15 Sep, 2025 | 12:08 PM

image

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த “தியாக தீபம்” என அழைக்கப்படும் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம், நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில், அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாயின.

01__1_.jpg

இந்த நினைவேந்தலின்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

திலீபன் முன்வைத்த கோரிக்கைகளான

1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2) சிறைக்கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது.

2ffe2514-a1b1-45b0-b305-5fd94a196db3.jpe

39d96db4-bb34-4d4e-85fe-97c54087a5f9.jpe

e3e77fec-e9a3-486f-9070-9ad545af6da6.jpe

01__4_.jpg

https://www.virakesari.lk/article/225126

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு

15 Sep, 2025 | 12:07 PM

image

தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் இன்று திங்கட்கிழமை (15) நடைபெற்றது.

குறிப்பாக தியாகதீபம் திலீபனின்  திரு உருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் மாவீரர் ஒருவரின் தாயாரான செ.தவராணி ஈகைச்சுடரினை ஏற்றி குறித்த நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டதுடன், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/225122

  • கருத்துக்கள உறவுகள்+

இது முஸ்லிம் மதத் தலைவர்களையும் அழைக்கலாம் தானே !!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

இது முஸ்லிம் மதத் தலைவர்களையும் அழைக்கலாம் தானே !!

“இது முசுலீம் மக்களையும் அழைக்கலாம் தானே” என்று கேட்டால் சிறப்பாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலணையில் “தியாக தீபம்” திலீபனின் நினைவேந்தல்

15 Sep, 2025 | 01:44 PM

image

தியாக தீபம் திலீபனின் 38வது நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று (15) காலை  தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது நினைவுத்தூபியில் நடைபெற்றன.

இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். 

IMG_9273.jpeg

IMG_9272.jpeg

https://www.virakesari.lk/article/225134

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, Paanch said:

“இது முசுலீம் மக்களையும் அழைக்கலாம் தானே” என்று கேட்டால் சிறப்பாக இருக்கும்.

அப்படியே ஆகட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் 38ஆவது நினைவேந்தல் திருகோணமலையில் அனுஷ்டிப்பு 

16 Sep, 2025 | 11:38 AM

image

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (16)  நடைபெற்றது. 

இதன்போது வாகனப் பேரணியுடன் திலீபனின் திருவுருவப்படங்கள் பொறிக்கப்பட்டு, உணர்வுபூர்வமாக அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் மாவட்ட கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

download__2_.jpg

https://www.virakesari.lk/article/225215

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் நினைவு ஊர்திப் பயணம்  திருக்கோவிலில் இருந்து ஆரம்பம் 

15 Sep, 2025 | 03:21 PM

image

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் (15) திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பமானது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஊர்திப் பயண ஆரம்ப நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-09-15_at_14.02.54__1

திருக்கோவிலில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் நினைவிடத்தில் சந்திரநேருவின் கல்லறைக்கு மலர்மாலை அணிவித்து நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர் திலீபனின் திருவுருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய வாகனம் தன் பயணத்தை ஆரம்பித்தது.

இந்த நினைவேந்தல் ஊர்தியான திருக்கோவிலில் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று ஆலையடிவேம்பு, காரைதீவு, வளத்தாப்பிட்டி, வீரமுனை, கல்முனை மற்றும் பாண்டிருப்பு ஆகிய அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதேசமெங்கும் பயணத்தினை முன்னெடுத்து குறித்த பிரதேசங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளன.

அதனைத் தொடர்ந்து, இந்த ஊர்தியானது மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி நகரவுள்ளதுடன் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயணம் மேற்கொண்டு இறுதியாக திலீபனின் நினைவேந்தல் தினத்தன்று யாழ். நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் பயணத்தை நிறைவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-09-15_at_14.02.51.jp

WhatsApp_Image_2025-09-15_at_14.02.53.jp

WhatsApp_Image_2025-09-15_at_14.02.52.jp

https://www.virakesari.lk/article/225147

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்

16 Sep, 2025 | 05:14 PM

image

தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (15) நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது.

திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று திங்கட்கிழமை  ஆரம்பிக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்தில்  அனுஷ்டிக்கபட்டது. 

இதன் போது சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

1000476558.jpg

1000476562.jpg

1000476539.jpg

1000476512.jpg

1000476548.jpg

1000476476.jpg

1000476473.jpg

1000476458.jpg

1000476461.jpg

https://www.virakesari.lk/article/225248

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரின் வீதியில்

நடந்தது யாகம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீர் கூட அருந்தாமல்… உண்ணா நோன்பு இருந்த தியாக தீபம் திலீபனுக்கு, நினைவு வணக்கங்கள். 🙏

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அன்னிய நாடு இது

ஆயினும் நீ இங்கு

ஆதிக்கம் செய்திட வந்தாய்...

எங்கள் மன்னன் திலீபனின் கோரிக்கையாவயும்

ஏளனம் செய்துமே கொன்றாய்...

தாகத்தோடு புலிபோனது..

தமிழ் சந்ததியே சூடு கண்டது


தியாக தீபத்துக்கு வீர வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவு வணக்கம்.

தீபனின் கனவு நிறைவேற வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல் 

17 Sep, 2025 | 01:28 PM

image

தியாக தீபம் திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (17) நடத்தப்பட்டது.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி உணவையும் நீரையும் தவிர்த்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், 12ஆவது நாளான 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு தியாக தீபம் உயிர் நீத்தார்.

01__13_.jpg

01__12_.jpg

01__7_.jpg

01__2_.jpg

01__9_.jpg

https://www.virakesari.lk/article/225305

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'தியாக தீபம்' திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் 

18 Sep, 2025 | 11:25 AM

image

"தியாக தீபம்" திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (18)அனுஷ்டிக்கப்பட்டது.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

01__2_.jpg

01__6_.jpg

01__9_.jpg

01__8_.jpg

01__3_.jpg

https://www.virakesari.lk/article/225388

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபனின் 05ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

19 Sep, 2025 | 10:56 AM

image

தியாக தீபம் திலீபனின் 05ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்  வெள்ளிக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்டன.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

01__5___1_.jpg

01__1___1_.jpg

01__4_.jpg

01__3_.jpg

01__10___1_.jpg

01__6_.jpg

https://www.virakesari.lk/article/225485

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி மன்னாரை சென்றடைந்தது

19 Sep, 2025 | 05:36 PM

image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது வெள்ளிக்கிழமை (19) காலை மன்னார் நகரப் பகுதியை வந்தடைந்தது.

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் மன்னார் மக்களில் அஞ்சலிக்காக இன்றைய தினம் வருகை தந்திருந்தது.

இதன்போது பொது மக்கள் அருட்தந்தையர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மன்னார் நகர் பிரதான சுற்றுவட்ட பகுதியில் பொது மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டதுடன் அதனை தொடர்ந்து மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

https://www.virakesari.lk/article/225540

Thileepan Song

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் நினைவு ஊர்தி முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டது

20 Sep, 2025 | 05:40 PM

image

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நினைவு ஊர்திப் பயணமானது வெள்ளிக்கிழமை (19) இரவு வவுனியாவை அடைந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை (20) காலை வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியடியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பொதுமக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதைவேளை குறித்த ஊர்தி பவனியானது இன்றையதினம் முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டுச்சென்றது.

https://www.virakesari.lk/article/225599

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

21 Sep, 2025 | 01:39 PM

image

தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG_20250921_091235293_HDR_AE.jpg

IMG_20250921_091109852_AE.jpg

IMG_20250921_091027273_HDR_AE.jpg

IMG_20250921_090934227_HDR_AE.jpg

IMG_20250921_091000680_AE.jpg

IMG_20250921_090840521_HDR_AE.jpg

IMG_20250921_090811103_HDR_AE.jpg

IMG_20250921_090749689_HDR_AE.jpg

IMG_20250921_090751212_HDR_AE.jpg

IMG_20250921_090549637_AE.jpg

https://www.virakesari.lk/article/225660

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் 8ஆம் நாள் நினைவேந்தல் நல்லூரில் அனுஷ்டிப்பு

22 Sep, 2025 | 11:18 AM

image

தியாக தீபம் திலீபனின் 8ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) அனுஷ்டிக்கப்பட்டது.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG_20250922_090107577_AE.jpg

IMG_20250922_090442403_HDR_AE.jpg

IMG_20250922_090626111_HDR_AE.jpg

IMG_20250922_090735684_AE.jpg

IMG_20250922_090650400_HDR_AE.jpg

IMG_20250922_090542560_HDR_AE.jpg

IMG_20250922_090524676_HDR_AE.jpg

https://www.virakesari.lk/article/225727

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் 9ஆம் நாள் நினைவேந்தல்

23 Sep, 2025 | 03:28 PM

image

தியாக தீபம் திலீபனின் 09ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (23) முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை தியாக தீபத்தின் திருவுருவ படத்தை தாங்கிய ஊர்தியும் நினைவிடத்திற்கு வருகை தந்த நிலையில், ஊர்தியில் இருந்த திருவுருவ படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த ஊர்தியானது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ள நிலையில் , ஊர்தி செல்லும் இடங்களில் மக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_20250923_091137772_HDR_AE.jpg

IMG_20250923_091135941_HDR_AE.jpg

IMG_20250923_090608954_HDR_AE__1_.jpg

IMG_20250923_091225668_AE.jpg

https://www.virakesari.lk/article/225830

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் லெப். கேணல் திலீபனுக்கு வீரவணக்கமும் அஞ்சலிகளும்

Edited by ரதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

24 Sep, 2025 | 03:19 PM

image

தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG_20250924_090141769_HDR_AE.jpg

IMG_20250924_090408669_HDR_AE.jpg

IMG_20250924_090316996_HDR_AE.jpg

IMG_20250924_090301300_HDR_AE.jpg

IMG_20250924_090422896_HDR_AE.jpg

IMG_20250924_090531948_HDR_AE.jpg

IMG_20250924_090603129_HDR_AE.jpg

IMG_20250924_090449303_HDR_AE.jpg

படங்கள் - ஐ. சிவசாந்தன்

https://www.virakesari.lk/article/225954

  • கருத்துக்கள உறவுகள்

கேணல் திலீபனுக்கு வீரவணக்கம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.