Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2025 at 23:15, குமாரசாமி said:

எனக்கு தமிழ்நாட்டு வாக்குரிமை இருக்குமெண்டால்....என்ரை வாக்கு ஈழத்து மருமோனுக்குத்தான்.😎

நானும் தான்,...

  • Replies 68
  • Views 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    முதலில் கடல்வள கொள்ளையர்களை ஈழத்தமிழரின் கடல் எல்லைக்குள் வந்து வயிற்றில் அடிக்க வேண்டாம் எனச் சொல்லவும்.

  • பெருமாள்
    பெருமாள்

    அவர்களிடம் கேட்டு பலனில்லை ஏன்னென்றால் இந்த பாரிய மீன்வள கொள்ளை சுரண்டல் இரு நாட்டு அரசுகளின் ஆதரவுடன் தான் நடை பெறுகிறது மன்னார் வளைகுடா பகுதியில் ஐ நாவால் பாதுகாக்கப்பட்ட பவள பாறை தொகுதிகளை இந்த உலக

  • பெருமாள்
    பெருமாள்

    தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பால் அழிந்து வரும் அரிய வகை பவளப்பாறைகள் https://www.maalaimalar.com/news/state/2020/10/23144019/1996584/Rare-type-Corals-Will-be-destroyed.vpf தடை செய்யப்பட்ட வலைக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, நிழலி said:

இதே யாழில் இதே கேள்வியை , என் கருத்தை எல்லா தமிழக கட்சியினரிடமும் கேட்டுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை தமிழக கட்சிகள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இந்த விடயத்தில்.

நீங்கள் அப்படி எழுதியதை நான் வாசிக்க தவற விட்டுவிட்டேன் என நினைக்கின்றேன்.

மற்றும் படி தமிழக கட்சிகள்,இந்திய கட்சிகளை பொறுத்தவரை உங்கள் கருத்துத்தான் எனது எண்ண நிலைப்பாடுகளும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, island said:

இலங்கை தமிழர் பிரச்ச்சனைக்கு தமிழநாட்டு அரசியல்வாதிகள் எவராலும் ஒரு ஆணியை கூட பிடுங்க முடியாது என்பதே ஜதார்ததம். சீமான் போன்றவர்கள் இதை வைத்து தமிழ் நாட்டு தற்குறிகளை ஏமாற்றி ஏதும் தரகு அரசியலை செய்து பிழைத்து வருகின்றனர். அதை பார்தத விஜையும் அதே சீமான் வகையறாகளின் அரசியலை பின்பற்றி இந்த விடயத்தை வைத்து ஏதும் இலாமடையலாமோ என்று எண்ணுவதே இந்த விஜயின் பேச்சு.

கருணாநிதி,எம்ஜிஆர் தொடக்கம் இதர சிறு அரசியல்வாதிகள் அனைவரும் ஈழத்தமிழர் அரசியல் செய்தவர்கள் தான். சினிமாக்காரர்கள் ,தொலைக்காட்சிகள் கூட ஒரு சில லாபங்களுக்காக ஈழத்தமிழர் பிரச்சனைகளை கையில் எடுக்கின்றார்கள். எடுக்கிறார்கள். அது பற்றி யாருமே கொதிப்பதில்லை. அது ஈழத்தமிழர் பிரச்சனை உலகிற்கு தெரியப்படுத்துகின்றோம் என வாதிட ஒரு குழு இருக்கின்றது.

இருப்பினும் சீமான் அரசியலில் மட்டும் மூன்று முடிச்சு போட்டு குத்தி முறியும் ஒரு சில புலம்பெயர் ரமிலர்கள் ஏன் எப்படி எதற்கு என புரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நானும் தான்,...

வணக்கம் சகோதரம்.

மிக நீண்ட நாட்களின் பின் களத்தில் கண்டது சந்தோசம்.

எங்காவது போகும்போது ஒரு சொல்லு சொன்னா என்ன குறைந்தா விடுவீர்கள்.?

இணைந்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் சகோதரம்.

மிக நீண்ட நாட்களின் பின் களத்தில் கண்டது சந்தோசம்.

எங்காவது போகும்போது ஒரு சொல்லு சொன்னா என்ன குறைந்தா விடுவீர்கள்.?

இணைந்திருங்கள்.

ஒருடமும். போகவில்லை அண்ணை வீட்டில் தான் இருக்கிறேன்,....வேலை தேடினேன் முதலாளி சொன்னார் உன்னோட வேலை சுப்பர் முழு நேரம் செய்கிறாயா. என்று சரி ஒம் என்றேன்,....அப்படியே பொழுது போகுது இரண்டு வருடங்களுக்கு வரமாட்டேன் இடையிடை வந்து பார்க்கிறேன் சீமான் திரியை பார்க்க வேணும் போல இருந்தது எல்லோரும் கோஷசானுடன். இணைந்து சீமானை கழுவி ஊத்துகிறார்கள் .....உங்கள் ஐனதிபதி எப்படி ?????? 😂

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Kandiah57 said:

சீமானை கழுவி ஊத்துகிறார்கள் ..

பிரயோசனம் இருந்தா நானும் கழுவி ஊற்றலாம்.

இலங்கை அரசியலிலேயே நாங்க செல்லாக் காசு.

51 minutes ago, Kandiah57 said:

உங்கள் ஐனதிபதி எப்படி

ஆரியகுளத்து பொன்ராசா மாதிரி நிற்கிறார்.

பதவி முடிவடைவதற்குள் வடகொரிய தலைவரை மிஞ்சுவார்.

53 minutes ago, Kandiah57 said:

ஒருடமும். போகவில்லை அண்ணை வீட்டில் தான் இருக்கிறேன்,....வேலை தேடினேன் முதலாளி சொன்னார் உன்னோட வேலை சுப்பர் முழு நேரம் செய்கிறாயா. என்று சரி ஒம் என்றேன்,....அப்படியே பொழுது போகுது இரண்டு வருடங்களுக்கு வரமாட்டேன்

நல்லது சந்தோசமாக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

இலங்கை தமிழர் பிரச்ச்சனைக்கு தமிழநாட்டு அரசியல்வாதிகள் எவராலும் ஒரு ஆணியை கூட பிடுங்க முடியாது என்பதே ஜதார்ததம். சீமான் போன்றவர்கள் இதை வைத்து தமிழ் நாட்டு தற்குறிகளை ஏமாற்றி ஏதும் தரகு அரசியலை செய்து பிழைத்து வருகின்றனர். அதை பார்தத விஜையும் அதே சீமான் வகையறாகளின் அரசியலை பின்பற்றி இந்த விடயத்தை வைத்து ஏதும் இலாமடையலாமோ என்று எண்ணுவதே இந்த விஜயின் பேச்சு.

இதில் எனக்கு உடன் பாடில்லை.

ஈழதமிழரிடம் திரள்நிதி எடுத்து, தலைவர் மாவீரரை வைத்து கல்லா கட்டும் சீமானின் அரசியலும்…

தனது நிலை, இடம், பொருள், காலம், ஏவல் அறிந்து, ஈழ தமிழ் உறவுகளுக்கு உறுதுணையாக இருப்போம் என விஜை சொல்வதும் ஒன்றல்ல.

வைகோ, விஜயகாந்த், ராமதாஸ், நெடுமாறன், வீரமணி போல (பல விமர்சனங்கள் இருந்தாலும்) ஈழதமிழர் பற்றி உண்மையான கரிசனை கொண்ட பல அரசியல்வாதிகள் முன்பே சொன்னவைதான் இவை.

ஒரு தமிழக அரசியல்வாதி ஈழதமிழருக்கு தார்மீக ஆதரவு கொடுப்பது வரவேற்க பட வேண்டியது,

அனைவரையும் ஒரே சட்டியில் போட்டு நாமே வறுக்க கூடாது.

36 minutes ago, ஈழப்பிரியன் said:

பிரயோசனம் இருந்தா நானும் கழுவி ஊற்றலாம்.

200 INR கிடைக்கும்.

ஆர்வம் இருந்தால் சொல்லவும்😂

  • கருத்துக்கள உறவுகள்

22 minutes ago, goshan_che said:

இதில் எனக்கு உடன் பாடில்லை.

ஈழதமிழரிடம் திரள்நிதி எடுத்து, தலைவர் மாவீரரை வைத்து கல்லா கட்டும் சீமானின் அரசியலும்…

தனது நிலை, இடம், பொருள், காலம், ஏவல் அறிந்து, ஈழ தமிழ் உறவுகளுக்கு உறுதுணையாக இருப்போம் என விஜை சொல்வதும் ஒன்றல்ல.

வைகோ, விஜயகாந்த், ராமதாஸ், நெடுமாறன், வீரமணி போல (பல விமர்சனங்கள் இருந்தாலும்) ஈழதமிழர் பற்றி உண்மையான கரிசனை கொண்ட பல அரசியல்வாதிகள் முன்பே சொன்னவைதான் இவை.

ஒரு தமிழக அரசியல்வாதி ஈழதமிழருக்கு தார்மீக ஆதரவு கொடுப்பது வரவேற்க பட வேண்டியது,

அனைவரையும் ஒரே சட்டியில் போட்டு நாமே வறுக்க கூடாது.

200 INR கிடைக்கும்.

ஆர்வம் இருந்தால் சொல்லவும்😂

நன்றி கோசான்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

200 INR கிடைக்கும்.

ஆர்வம் இருந்தால் சொல்லவும்😂

அதை விட திரள்நிதி சேர்தது அனுப்பினால் வாற கொமிசன் உபரி கூட வரும். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்து மருமோன் வீட்டிலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் பரிசோதனையாம். ஒழுங்காய் வரி கட்டேல்லையாம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

ஈழத்து மருமோன் வீட்டிலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் பரிசோதனையாம். ஒழுங்காய் வரி கட்டேல்லையாம் 😁

இந்த வருமான வரி சோதனை செய்பவர்களுக்கு… ஸ்ராலின், உதயநிதி, சபரீசன் வீடுகள் ஒன்றும் கண்ணுக்கு தெரியாதோ… 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஈழத்து மருமோன் வீட்டிலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் பரிசோதனையாம். ஒழுங்காய் வரி கட்டேல்லையாம் 😁

அண்ணை அவசரத்தில செய்தியை வடிவா வாசிக்கேல்லையோ?

முன்னர் கொடுத்த வருமான வரி தண்ட நோட்டீசுக்கு எதிரான விஜை இடைக்கால தடை பெற்றார் - அதன் வாய்தா விசாரணை இன்று.

On 21/9/2025 at 17:50, புலவர் said:

நாளைக்கு காங்கிரசுடன் கூட்டணி அமைப்பாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

  1. விஜை காங்கிரஸ் கூட்டணி வருமா தெரியாது.

ஆனால் ஈழத்தமிழர்களின் ரத்தம் குடித்த கட்சி, இன எதிரிகள் என தன்வாயால் கூறிய காங்கிரஸின் தற்போதைய மாநில தலைவர் செல்வபெருந்தகையுடன் ஒரே மேடையில் பேசி, அண்ணன் தம்பியாக கட்டி குழாவி, அணில் என இருவரும் சக தமிழ் தேசியம் பேசும் விஜை நக்கல் அடித்த தருணம் (இன்று நடந்தது).

  • கருத்துக்கள உறவுகள்
  1. 2. விஜை தந்தை ஜெ வெற்றிக்கு விஜை “அணிலாக” இருந்து உதவினார் என்பதை வைத்து விஜையை யார் வேணாலும் நக்கல் அடிக்கலாம்.

    ஆனால் அதே தேர்தலில் இலை மலர்ந்தால் ஈழம் மலரும், ஈழத்தாய் என சொன்ன சீமானுக்கு மட்டும் அந்த அருகதை இல்லை.

17 hours ago, குமாரசாமி said:

இருப்பினும் சீமான் அரசியலில் மட்டும்

இவர் மட்டும்தான் ரோ ஏஜெண்ட்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் தலைவர் பிரபாகரன் என்று விஜய் சொல்வதும் அதை இங்கே பலரும் ஆமோதிப்பதும் தமிழகத்தில் தலைவருக்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது என்பதை தான் சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

ஈழத்தமிழர்களின் தலைவர் பிரபாகரன் என்று விஜய் சொல்வதும் அதை இங்கே பலரும் ஆமோதிப்பதும் தமிழகத்தில் தலைவருக்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது என்பதை தான் சொல்கிறது.

அப்படியான ஒரு வாக்கு வங்கி பிரபாகரனுக்கு இருப்பதால் தான் போலும், உண்ணாவிரத நாடகமாடிய கருணாநிதியின் திமுகவும், புலிகளை வெளிப்படையாகவே பயங்கரவாதிகள் என்று கூறிய ஜெ யின் அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெறுகின்றன என நினைக்கிறேன்😂!

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரசோதரன் said:
  1. இந்தி எதிர்ப்பு

  2. நீட் தேர்வு எதிர்ப்பு

  3. ஊழலை அடியோடு அழித்தல்

  4. சமூகநீதியை ஏற்படுத்தல்

  5. இலங்கை கடற்படையிடம் இருந்து அப்பாவி தமிழக மீனவர்களை பாதுகாத்தல்

  6. கச்சதீவை மீட்டல்

  7. இலங்கை தமிழ் மக்களின் அகதிமுகாம்களை மேம்படுத்தல்

  8. ........

மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் தமிழ்த்தேசியம்.மரங்கள்>மலைகள்>இயற்கைவிவசாயம்>ஆடுமாடுவளர்ப்பு நீர்லோண்மை>ஆண்பெண்சமத்துவம்>கோவில்களில் தமிழில் குடமுழுக்கு>அனத்து இடங்களிலும் தமிழுக்கு முன்னுரிமை>ஆரியம்திராவிடத்தித்தின் முகமூடியைக் கிழித்தல்.வாக்குக்கு பணம்கொடுக்காமை கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டிஎன்று விஜை உட்பட எந்த அரசியல்வாதிகளும்பேசாத விடயங்களை நாதகவும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானும் செய்கின்றனர்.அதை விட்டவிட்டு விட்டீர்கள்.கச்ச தீவை இலங்கைக்கு கொடுத்த கட்சியும் அதற்கு மெளனமாக சம்மதம் கொடுத்த கட்சியும் ஒரே கூட்டணியில் இருக்கின்றனர். நீட்டுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டு விட்டோட் ஆட்சிக்கு வந்ததும் முதல்கையெழுத்து நீட்டை விலத்துவதற்கு என்று சொல்லிவிட்டு ஒன்றுமே செய்யாமல் இருப்பது. அரசியல் மேடைகளில் கவர்ச்சிப் பெண்களின் குத்தாட்டம்> காசு கொடுத்து கூட்டத்துக்கு ஆள் பிடிப்பது.குடும்ப அரசியல்>இப்படித்தில்லுமுல்லுகள்>எதிர்க்கட்சிகள் மீது ஊடகங்களை வைத்து பொய்ப்பிரச்சாரம் செய்தல். எதிர்க்கட்சிகளுக்கு ஊடக இருட்டடிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த்த தேர்தலில் விஜை வெற்றி பெறுவார். தோற்றாலும் ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும்.கவலை வேண்டாம்.அடுத்த கமல்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, புலவர் said:

இந்த்த தேர்தலில் விஜை வெற்றி பெறுவார். தோற்றாலும் ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும்.கவலை வேண்டாம்.அடுத்த கமல்.

கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதும், சீமானுக்கு கவர் எடுக்க இனிமேலும் முடியவில்லை, ஆகவே இப்படி ஒரு கருத்து என்பது புரிகிறது.

ஆனால் உங்களை போல் கண்மூடித்தனமாக நான் யாரையும் ஆதரிப்பதில்லை.

ஒரளவு நியாயமான திராவிட, தமிழ் தேசிய சக்தி, அதிமுக, திமுகவுக்கு மாற்றாக வரவேண்டும் என்பது 2009 ற்கு முன்பே என் அவா. கனவு.

அதை விஜை நிறைவேற்ற கூடும்.

ஆகவே வரவேற்கிறேன்.

அவரும் சீமான் போல் பெட்டி…

அல்லது கமல் போல் ராஜ்யசபா சீட்டுக்கு விலை போனால்…அவரையும் விமர்சிப்பேன்.

பிகு

திமுக, அதிமுக, காங்கிரஸ் ஓடு விஜை கூட்டு வைக்கலாம். அது அரசியல் ….இவர்கள் அரசியல் எதிரிகள்.

ஆனால் கொள்கை எதிரி என அறிவித்த பாஜகவோடு சேர்ந்தால், அல்லது ஆர் எச் எஸ் சுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க பெரியாரை விமர்சனம் செய்வது என இறங்கினால்…வெளுவை நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

ஈழத்தமிழர்களின் தலைவர் பிரபாகரன் என்று விஜய் சொல்வதும் அதை இங்கே பலரும் ஆமோதிப்பதும் தமிழகத்தில் தலைவருக்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது என்பதை தான் சொல்கிறது.

அப்படி வாக்கு வங்கியாக இல்லை.

ஒரு 5% வாக்காளருக்கு எமது பிரச்சனை பத்து முக்கிய பிரசனையில், 10 வது பிரச்சனை.

அந்த வாக்காளரை கவரவும், நிஜமாகவே சில தலைவர்கள் எம் மீது கொண்ட கரிசனையுமே இப்படி பேச காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

ஒரு 5% வா

உண்மை தான்,......ஒரு தமிழக உறவுடன். கருத்து எழுத வேண்டி வந்தது ...அவர் ஒரு கருத்து எழுதினார் இலங்கை தமிழர்கள் வெளிநாட்டில் இருந்து தமிழக அரசியல் தலைவர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று இதனால் இலங்கை தமிழருக்கு இருந்த ஆதரவு குறைத்து விட்டது ஒருவருக்கு பணம் கொடுத்து மற்றையோரின். ஆதரவை இழந்து விட்டோம் இது கவலையளிக்கிறது 🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் தமிழ்த்தேசியம்.மரங்கள்>மலைகள்>இயற்கைவிவசாயம்>ஆடுமாடுவளர்ப்பு நீர்லோண்மை>ஆண்பெண்சமத்துவம்>கோவில்களில் தமிழில் குடமுழுக்கு>அனத்து இடங்களிலும் தமிழுக்கு முன்னுரிமை>ஆரியம்திராவிடத்தித்தின் முகமூடியைக் கிழித்தல்.வாக்குக்கு பணம்கொடுக்காமை கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டிஎன்று விஜை உட்பட எந்த அரசியல்வாதிகளும்பேசாத விடயங்களை நாதகவும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானும் செய்கின்றனர்.அதை விட்டவிட்டு விட்டீர்கள்.கச்ச தீவை இலங்கைக்கு கொடுத்த கட்சியும் அதற்கு மெளனமாக சம்மதம் கொடுத்த கட்சியும் ஒரே கூட்டணியில் இருக்கின்றனர். நீட்டுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டு விட்டோட் ஆட்சிக்கு வந்ததும் முதல்கையெழுத்து நீட்டை விலத்துவதற்கு என்று சொல்லிவிட்டு ஒன்றுமே செய்யாமல் இருப்பது. அரசியல் மேடைகளில் கவர்ச்சிப் பெண்களின் குத்தாட்டம்> காசு கொடுத்து கூட்டத்துக்கு ஆள் பிடிப்பது.குடும்ப அரசியல்>இப்படித்தில்லுமுல்லுகள்>எதிர்க்கட்சிகள் மீது ஊடகங்களை வைத்து பொய்ப்பிரச்சாரம் செய்தல். எதிர்க்கட்சிகளுக்கு ஊடக இருட்டடிப்பு.

நீங்கள் நாதகவினர் மட்டுமே மேடைகளில் பேசும் கொள்கைகளையும், விடயங்களையும் பட்டியல் இட்டுள்ளீர்கள், புலவர். நீங்கள் சொல்லுவது சரியே. ஆனால் நான் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும், பாஜக தவிர, பேசும் விடயங்களை மட்டுமே பட்டியலாக்கினேன். நான் குறிப்பிட்டவை எல்லா தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானவை.

ஒவ்வொரு கட்சிக்கும் மட்டுமே உரித்தான தனித்தனியான விடங்கள் அல்லது கொள்கைகள், திட்டங்கள் என்று பார்த்தால், அது இன்னொரு நீண்ட பட்டியலாகப் போகும். உதாரணமாக, பாமகவின் வன்னிய மக்களுக்கான 20 வீத உள் ஒதுக்கீடு. தமிழ் நாட்டை இரண்டாகப் பிரிப்பது கூட பாமகவின் இனனொரு கொள்கை மற்றும் திட்டம். விசிகவுக்கும் அவர்களுக்கே மட்டும் உரியதாக சில தனிக் கொள்கைகள் இருக்கும். நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் கட்சியின் கொள்கைக் கையேட்டை வாசித்தால், அங்கும் அவர்களுக்கென்று சில பிரத்தியேக கொள்கைகளும், திட்டங்களும் இருக்கும்.

தலைநகரை சென்னையிலிருந்து மதுரைக்கு மாற்றுவது கூட ஏதோ ஒரு கட்சியின் கொள்கையாக, திட்டமாக இருக்கக்கூடும்.

ஆதரவு - எதிர் என்னும் நிலையைக் கடந்து, சாத்தியங்களையும் குறுகிய மற்றும் நீண்டகால விளைவுகளையும் நான் பார்க்க முற்படுகின்றேன். ஆதரவாக இருப்போர் அவர்களுடைய தரப்பின் எல்லா நடவடிக்கைகளையும் ஆதரிப்பார்கள்; எதிராக இருப்போர் அந்த தரப்பின் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்ப்பார்கள். இந்த ஒற்றைப்படையான நிலைப்பட்டால் நாங்கள் எங்களின் சுயத்தை கூட இழந்து போகும் அபாயம் உள்ளது.

நாதகவின் நீர் மேலாண்மை பற்றிய அறிக்கையை நான் இன்னமும் வாசிக்கவில்லை. அப்படி ஒரு அறிக்கை வந்ததா என்றும் தெரியவில்லை. ஆடு மாடுகள் வளர்க்கும் திட்ட அறிக்கை போல நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்றாக இருக்கும் என்பதே இவர்களுடனான என் அனுபவம். தமிழ்நாடு ஒரு நியூசிலாந்தோ அல்லது டென்மார்க்கோ அல்ல. வருடத்தின் பெரும் பகுதியில் அனல் புழுதி பறக்கும் மாவட்டங்களே தமிழ்நாட்டில் அதிகம்.

இயற்கை விவாசாயம் என்று உலகம் போயிருந்தால், 70ம் ஆண்டுகளின் பின் உலகமே ஒரு கொடிய பஞ்சத்தில் அழிந்திருக்கும். இன்றும் கூட 800 கோடிக்கு மேற்பட்ட உலக மக்களுக்கு தேவையான உணவை நாங்கள் உற்பத்தி செய்யக் கூடியதாக இருப்பதன் பின்னால் இருப்பது மரபணுக்கள் மாற்றப்பட்ட அல்லது அவற்றின் திறனை அதிகரித்த விஞ்ஞான நடவடிக்கைகளே. கோதபாயாவின் ஒரு வருடம் மட்டுமே நீடித்த இயற்கை விவசாயத் திட்டம் முழு இலங்கயையுமே பட்டினிக்குள் தள்ளியதை சமீபத்தில் பார்த்தோமே.

தமிழ்த்தேசியத்தை யார் பேசுவது என்றில்லையா............. தன் பிள்ளைகளை ஆங்கிலப் பாடசாலையில் படிப்பித்துக் கொண்டு, தமிழ்த்தேசியம் பேசுவது அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம் இல்லையா...........

இப்படியே ஒவ்வொரு கட்சியினரின் ஒவ்வொரு கொள்கைகளையும், திட்டங்களையும் ஆராய்ந்து பார்க்கமுடியும். அந்த அந்த கட்சிகளின் ஆதரவாளர்கள் அசௌகரியப்பட்டு எதிர்வினை ஆற்றுவார்கள்; எதிர்த்தரப்பினர் கைதட்டுவார்கள். இவை இரண்டையும் தாண்டி, தமிழ்நாடும் அந்த மக்களும் முன்னேற வேண்டும் என்பதே என் விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லை கொடுத்து அடி வாங்குவது

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

அப்படியான ஒரு வாக்கு வங்கி பிரபாகரனுக்கு இருப்பதால் தான் போலும், உண்ணாவிரத நாடகமாடிய கருணாநிதியின் திமுகவும், புலிகளை வெளிப்படையாகவே பயங்கரவாதிகள் என்று கூறிய ஜெ யின் அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெறுகின்றன என நினைக்கிறேன்😂

நீங்கள் குற்றம் கண்டு பிடிக்கும் அவசரத்தில் வாக்கு வங்கி என்பதை ஆட்சி என்று வாசிப்பது வழமையே. உங்களின் பார்வைக்கு எதுவும் எழுத முடியாது பிரயோசனமில்லை. யாரும் நித்திரையாக கிடப்பார்களை முயற்சிப்பது தான் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சும்மா இதுகளுக்கு சண்டை பிடிப்பான்? கொஞ்சம் பொறுங்கோ.

ரஜனி, கமல், விஜய் இந்த வரிசை அடுத்த தேர்தலில் இன்னும் ஒரு நடிகருடன் தொடரும்.

ஒரு அரசும் அதனை சார்ந்து இயங்குகின்ற உளவுத்துறையும் சும்மாவே! 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.