Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பவர் கட், ஆம்புலன்ஸ் படையெடுப்பு.. கரூர் சம்பவத்தில் பல சந்தேகங்கள்.. எடப்பாடி பழனிசாமி கேள்வி

Pavithra ManiUpdated: Sunday, September 28, 2025, 9:28 [IST]

Edappadi Palanisamy Karur

கரூர் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 39 மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். குழந்தைகள், இளைஞர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர், குடியரசுத் தலைவர்கள், பல மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பாதுகாப்பு குறைபாடு

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "பொதுக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்பட்டது. எங்களுக்கு ஊடகங்கள் மூலம் வந்த தகவலின்படி நெரிசல் ஏற்பட்டபோது அங்கு மின் நிறுத்தம் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பு தவெக 4 மாவட்டங்களில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அங்கு எல்லாம் மக்கள் கூட்டம் இருந்தது என்பதை ஆய்வு செய்து அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொலைக்காட்சியில் பார்க்கும்போதே உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த அரசு ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் நடந்து கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பல ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றது. எல்லாவற்றுக்கும் நாங்கள் உரிய பாதுகாப்பு கொடுத்தோம். திமுக ஆட்சியில் போராட்டம் நடத்தவே நீதிமன்றம்செல்ல வேண்டியிருக்கிறது.

விலை மதிக்க முடியாத

அதிமுக கூட்டங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு கொடுப்பதில்லை. என்னுடைய கூட்டங்களுக்கும் இதே நிலை தான். உரிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் பலியை தடுத்திருக்கலாம், மனித உயிர் விலை மதிக்கத்தக்கது. அதனால் அரசியல் கட்சிகளும் மக்களின் உயிரின் மதிப்பை உணர்ந்து, கடந்த கால கூட்டங்களை ஆராய்ந்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மிகுந்த வேதனையுடன் இந்தக் கருத்தை பகிர்கிறேன். மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு கூட்டம் வந்தால், எப்படி சமாளிப்பது என்ற அனுபவம் உள்ளது. அதை இவர்களும் கடைபிடிக்க வேண்டும். மெரினா கடற்கரை வான் சாகச நிகழ்ச்சியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாத காரணத்தால் பலர் உயிரிழந்தனர். அதில் இருந்து அரசு பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது.

சந்தேகம்

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்றிருக்க கூடாது. அரசு கடமையில் இருந்து தழுவியது தான் உயிரிழப்புக்கு காரணம். விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே இடையில் பல ஆம்புலன்ஸ்கள் வந்தன. இது எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு பேச வேண்டும். இனி எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடைபெறாமல் பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்தது இதற்கு முன்பு நடைபெற்றதாக தெரியவில்லை. ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

https://tamil.oneindia.com/news/karur/edappadi-palanisamy-raised-doubt-on-dmk-government-over-karur-stampede-738965.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards


கரூர் விஜய் பரப்புரை: ஆம்புலன்ஸ் கூட போகாத இடத்தில் அனுமதி! ஆட்சியர், எஸ்பியை சஸ்பெண்ட் பண்ணுங்க.. அண்ணாமலை அட்டாக்

Mani Singh SUpdated: Sunday, September 28, 2025, 19:01 [IST]

karur-vijay-rally-annamalai-demands-suspension-of-collector-sp-for-allowing-event-where-even-ambul

கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் 40 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டு உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் வருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அண்ணாமலை பேசியதாவது:- கரூர் சம்பவத்தில் 40 அப்பாவி உயிர்களை பறிகொடுத்துள்ளோம். மருத்துவமனையில் இன்னும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு முன்பு இப்படி நடந்தது கிடையாது, இனியும் இப்படி நடக்கக் கூடாது - அண்ணாமலை

மருத்துவ உதவி தேவைப்பட்டால் பாஜகவினர் செய்வார்கள். எதோ பல தவறுகள், சில குளறுபடிகள் நடந்திருக்கிறது. மக்கள் கூட்டத்தை சரியாக கையாள்கின்றோமா என்று பார்த்தால் இல்லை.. எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீது தான். வேலுச்சாமிபுரம் என்பது மிக குறுகலான இடம். அங்கு ஏன் போலீசார் அனுமதி கொடுக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் கூட போக முடியாத இடத்தில் போலீசார் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து அரசு தவறி வருகிறது.. 500 போலீசார் பாதுகாப்புக்கு வந்து இருப்பதாக சொல்கிறார்கள், ஆனால் அங்கு 100 பேர் கூட இல்லை. ஸ்பாட்டில் 100 போலீசார் கூட இல்லை.

மாவட்ட ஆட்சியர், எஸ்பியை முதலில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் பதவியில் இருந்து விலக வேண்டும். விஜய் தான் அக்யூஸ்டு நம்பர் ஒன் என்று நான் சொல்ல மாட்டேன். வீக் எண்ட் அரசியலில் இருந்து விஜய் வெளியே வர வேண்டும். கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

https://tamil.oneindia.com/news/karur/karur-vijay-rally-annamalai-demands-suspension-of-collector-sp-for-allowing-event-where-even-ambul-739095.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

பிரேமலதா, எடப்பாடி, அண்ணாமலை அனைவரும் உடைத்து பேசுகிறார்கள்.

விஜை மட்டும் சைலண்ட் மோடில்.

  • Replies 237
  • Views 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யாயினி
    யாயினி

    Vijay Really Waste Fellow ..இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேணும். ஒரு நடிகனை நம்பி கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், வயோதிபர்கள், இயலாதவர்கள் என்று பல்வேறு பட்டவர்களளும் இவ்வாறன கூட்ங்களுக்கு செல்வதை

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய் அரசியலுக்கு உகந்தவர் கிடையாது என்பது ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒன்று. அவரைச் சுற்றி இருப்பவர்களின் முதிர்ச்சியற்ற மற்றும் பேராசைகளுக்கு விஜய் இன்று பலியாகிக் கொண்டிருக்கின்றார். புஸ்ஸி ஆனந்த, ஆத

  • ரசோதரன்
    ரசோதரன்

    முண்டி அடித்து நெருங்கி ஒருவர் மேல் ஒருவர் என்று ஒருவர் மேல் அறுவர் என்று வீழ்ந்து இறந்து போன உடல்களில் ஆறு அழகாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு புத்தம் புதிய வெள்ளைகளால் முழுவதும் சுற்றப்பட்டு புதிய நீ

  • கருத்துக்கள உறவுகள்

தனது 13 வயது மகனை பறிகொடுத்த தாய் ஒருவர் பத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுக்கின்றார் நாங்கள் விஜய் சேரை பார்க்க தான் வந்தோம் விஜய் சேர் மேல எந்த குறையும் சொல்ல மாட்டோம்.

நிலைமை தொடரலாம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியொன்றும் கெட்டுப்போகவில்லை

300 கோடி சம்பளத்தை விட்டு அரசியலுக்கு வருகிறான் என் தலீவன்

ஒரு 30,000 அணில்குஞ்சுகளையாவது பலி கேட்காதா என்ன...?

(பாகுபலி நாசர் டோனில் வாசிக்கவும் )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டு அரசியல் அறிவும் இல்லாமல்....உலக அரசியல் அறிவும் இல்லாமல் தனது ரசிக தோழர்களின் ஒழுக்கமின்மை இல்லாதவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்கிறீர்கள்?😝

ஒழுங்கான சினிமா நடிகர் கூட இல்லாதவர். சும்மா பிரமாண்டம் காட்டும் நடிகர் அவர்.😎

இதனால் தான் ரசிகர்கள் மரங்களிலும் வீட்டு கூரைகளிலும் வீட்டு மதில்களிலும் ஏறி காயமடைந்தார்கள் இது அண்மை நாட்களாக வந்த செய்தி. இப்போது உயிரிழப்புகள். இப்படி மக்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறிதான்.

எல்லாம் இருக்கட்டும்.....

தங்கள் அபிமான நடிகர் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றால் ஏன் சீமானுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது?😋

என்னது விஜை என் அபிமான நடிகரா….

ஆனாலும் என் மேல் இப்படி அவதூறு பரப்ப கூடாது.

என் அபிமான நடிகன் என்றால் அது எப்போதும் நம்ம பரட்ட சார்தான்.

“ கு…கு..கூ…கூலி பவர் ஹவுசூ”


இங்கே உங்களுக்கும் இன்னும் சிலருக்கும் அனைவருக்கும் எனையோரை பற்றி சில மட்டமான பார்வை இருக்கிறது.

  1. இவர் ஒரு நடிகரின் அரசியல் வரவை ஆதரிக்கிறார் ஆகவே இவர் ஒரு விசிலடிச்சான் குஞ்சு

  2. ஒரு நடிகர் எனவே அவர் மொக்கனாகதான் இருப்பார்

இவை இரெண்டுமே உங்கள் போன்றோரின் மேட்டுகுடிவாதம்.

அரசியல் என்பது எந்த நிலையில் இருப்பவராலும் செய்ய முடியும் அவருக்கு அந்த தன்மை இருப்பின்.

முக முத்து அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் என்ன முக்கியும் முடியவில்லை.

ஆனால் சம்பந்தமே இல்லாத துறையில் இருந்து வந்த ஜெ அரசியலில் மிளிர்ந்தார்.

அதே போல் நல்லாட்சியை கொடுத்த ரீகனும், சுவாஸ்னேகரும் கூட நடிகர்கள்தான்.

என்னை பொறுத்தவரை நான் எவரையும் அவரின் தொழிலை பார்த்து எதிலும் ஒதுக்குவதில்லை.

விஜை கொள்கைகள் என்ன, அவரின் அரசியல் எதை ஆதரிக்கிறது எதை எதிர்கிறது என ஆராய்ந்த போது அது எனக்கு ஏற்புடையதாக தெரிந்ததால் ஆதரித்தேன்.

இதையேதான் ஆரம்பத்தில் சீமான் களத்துக்கு வந்த போதும் செய்தேன்.

ஆதரவு அவரை இனம் கண்ட பின் எதிர்ப்பாக மாறியது.

நாளைக்கு விஜை தடம்புரண்டாலும் இதுவே.

எங்களுக்கு டவுட்.. இரவோடு இரவாக உடற்கூறு ஆய்வு ஏன்? அத்தனை டாக்டர் எப்படி? தவெக வழக்கறிஞர் கேள்வி

Rajkumar RUpdated: Monday, September 29, 2025, 14:16 [IST]

41 Dead in Karur Crowd

மதுரை: தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் இந்திய முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் இரவோடு இரவாக கரூர் வந்ததோடு, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவோடு இரவாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த அனைவரின் உடல்களையும் ஒரே நாளில் உடற்கூராய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர் என தவெக தரப்பு வழங்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சம்பவம் உலுக்கியுள்ள நிலையில், மருத்துவமனையில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவோடு இரவாக உடற்குறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக கரூர் மற்றும் அதனைச் சுற்றி இருந்த மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

Also Read

கேமரா வெளிச்சம் கண்ணை மறைக்க.. ப்ளாப் ஆன விஜயின் 'அரசியல்' படம்! உங்களுக்கு CRPF.. ரசிகர்களுக்கு?

இந்நிலையில், உயிரிழந்த அனைவரின் உடல்களையும் ஒரே நாளில் உடற்கூராய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர் என தவெக தரப்பு வழங்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரையில் கிளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்? அதுவும் ஒரே நாளில் அனைவரையும் உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

Recommended For You

வதந்தி பரப்பிய.. இன்ஃப்ளுயன்சர்கள், இன்ஸ்டா பிரபலங்கள் கைதாக வாய்ப்பு? ஸ்டாலின் முக்கிய திட்டம்!

குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்கூறாய்வு செய்யக்கூடாது என்பது விதி, உயிரிழந்தவர்களுக்கு தகுதியான மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தார்களா? விஜய் கரூரில் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்த இடத்திற்கு அதிக அளவில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. இதனால் சந்தேகம் இருக்கிறது. விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள் என்று காவல்துறையினர் சொல்வது அப்பட்டமான பொய்." என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/41-dead-in-karur-crowd-crush-at-vijay-s-campaign-tvk-lawyer-raised-questions-on-medical-procedures-739283.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரூரில் அரசியல் பலத்தை காட்ட விஜய் தாமதமாக வந்தார்.. எப்.ஐ.ஆரில் போலீசார் பரபரப்பு தகவல்

Mani Singh SUpdated: Monday, September 29, 2025, 13:20 [IST]

vijay-came-late-to-show-off-his-political-strength-in-karur-shocking-information-in-police-fir

கரூர்: அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக விஜய் வேலுசாமிபுரம் வந்தார் என்று போலீஸ் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தவெக தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர். மரக்கிளை முறிந்த‌தால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர். ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை, நீண்ட நேரம் காத்திருப்பு, தண்ணீர், மருத்துவ வசதி இல்லை என எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read

கரூரில் விஜய் செய்த தவறு.. உண்மையில் நடந்தது என்ன? போலீஸ் முதல்கட்ட விசாரணையில் ஷாக் தகவல்

"அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாம‌தம்.
மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர், மரக்கிளை முறிந்த‌தால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர் - அசாதாரண சூழல்
* ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை, நீண்ட நேரம் காத்திருப்பு, தண்ணீர், மருத்துவ வசதி இல்லை
* கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அழுத்த‌த்தால் மக்கள் உடல் நிலை சோர்வு. கீழே விழுந்தவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்" என்று எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

எப்.ஐ.ஆர் அறிக்கை

போலீஸ் எப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பதாவது:- கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 கரூர் அவர்களுக்கு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது. கரூர் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளராகிய நான் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ புறக்காவல் நிலைய ருந்து 21.00 மணிக்கு கிடைக்கப்பட்ட மருத்துவமனை தகவலீ, அடிப்படையில் வழதிவு செய்த விபரம் பின்வருமாறு.

தமிழக வெற்றிக்கழகம் மேற்கு மாவட்ட அவர்கள் அவரது கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் கரூர் மாவட்டத்தில் செயலாளர் திரு.மதி பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு கொடுத்த விண்ணப்பத்தின் (456/Pet/1/5DOP/KRR/2025 Dt. 26.09.25) அடிப்படையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 ம் தேதி கரூர் நகர உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் ந.க.எண்.278/கா.து.கா/கா.உ./கரூர்/2025 நாள்.26.09.25 செயல்முறை ஆணையின்படி 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு இன்று 27.09.2025 ம் தேதி கனம் காவல் துறைத்தலைவர் மத்திய மண்டலம் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் ஊர்க்காவல்படையை சேர்ந்த சுமார் 500 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

Recommended For You

பல உயிர் போய் இருக்கு! விஜய் கைது? திட்டவட்டமாக ஸ்டாலின் எடுத்த முடிவு.. அதிரும் கோட்டை!

எச்சரித்தும் அறிவுரை வழங்கினேன்

தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியும் அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் திணறல் உயிர் சேதம் ஏற்படும் என்று தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகளிடமும் பொது செயலாளர் புஷி ஆனந்திடமும் மற்றும் இணை செயலாளர் CTR நிர்மல்குமாரிடமும் மற்றும் தவெக நிர்வாகிகள் பலரிடமும் நானும் காவல் துணைக்கண்காணிப்பாளர் பலமுறை எச்சரித்தும் அறிவுரை வழங்கினேன்.

நாங்கள் சொன்னதை கேளாமல் தொடர்ந்து அசாதாரண செயல்களில் மடுபட்டதால், போதிய பாதுகாப்பில் போலீசார் வழங்கியபோதும், தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர கையாளவில்லை. ரோட்டில் அருகிலுள்ள கடைகளுக்கு நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி தகர கொட்டகை உடைந்தும் மரம் முறிந்ததால் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே விழுந்தனர்.

வேண்டும் என்றே லேட் ஆக வந்த விஜய்

கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்ததால் பொதுமக்களில் பெரும்பாலோனோருக்கு மூச்சு திணரல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. தவெக கட்சியின் கரூர் ஏற்பட்டாளர்களுக்கு விஜய் அவர்களின் பொதுக்கூட்டத்திற்கு மாலை 03.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

You May Also Like

விஜய் பேசும்போது மின்சாரத்தை.. துண்டிக்க கோரிக்கை வைத்ததே தவெக தான்! மின் வாரியம் முக்கிய விளக்கம்

குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்த போதிலும் அதிக மக்கள் கூட்டத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் அவர்கள் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தியும் அந்த நீண்ட தாமரத்தின் காரணமாக இவை நேர்ந்தன.. என்று கூறபப்ட்டுள்ளது.

https://tamil.oneindia.com/news/karur/vijay-came-late-to-show-off-his-political-strength-in-karur-shocking-information-in-police-fir-739261.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரூர் சம்பவத்தின் கதாநாயகன் விஜய் சார் இன்னும் பாதிக்கப்பட்டவர்களை போய் சந்திக்கவே இல்லையாம்.

ரொம்பத்தான் ஷாக் ஆயிட்டார் போல....

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டுமென்றே ட்ரான் ஷாட்டில் மக்கள் கூட்டத்தை திரளாக படம் பிடித்து மாஸ்காட்ட ஆசைப்பட்டு அணில் குஞ்சுகளை கொலை செய்திருக்கிறது T VK கொலைக்கும்பல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, அக்னியஷ்த்ரா said:

வேண்டுமென்றே ட்ரான் ஷாட்டில் மக்கள் கூட்டத்தை திரளாக படம் பிடித்து மாஸ்காட்ட ஆசைப்பட்டு அணில் குஞ்சுகளை கொலை செய்திருக்கிறது T VK கொலைக்கும்பல்

இதெல்லாம் 15 வருடமாக முக்கியும் டிரோனில் காட்டும் அளவுக்கு கூட்டம் வரவில்லை என்ற வெப்பு 😂

  • கருத்துக்கள உறவுகள்

556642243_874884031886467_16134515973151

556047344_818985617468608_83519629636093

557154558_812546417928624_49445951825614

கரூர் படுகொலையை பின்புறமாக இருந்து செயல்படுத்தியவர்களின் முகம் தெரிகிறது.

நன்கு திட்டமிடல் இருக்கும் போல.

எல்லாத்தையும் மறச்ச நீ கொண்டைய மறைக்கலயே என்கிற கதையா சம்பவத்திற்கு பிறகு நடக்கிற ஒவ்வொரு நாடகங்களும் சந்தேகத்தை மேலும் மேலும் உறுஜிதப்படுத்துகிறது.

புரிஞ்சவன் பிஸ்தா

குகன் அருமைநாட்டார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

557154558_812546417928624_49445951825614

கரூர் படுகொலையை பின்புறமாக இருந்து செயல்படுத்தியவர்களின் முகம் தெரிகிறது.

நன்கு திட்டமிடல் இருக்கும் போல.

எல்லாத்தையும் மறச்ச நீ கொண்டைய மறைக்கலயே என்கிற கதையா சம்பவத்திற்கு பிறகு நடக்கிற ஒவ்வொரு நாடகங்களும் சந்தேகத்தை மேலும் மேலும் உறுஜிதப்படுத்துகிறது.

புரிஞ்சவன் பிஸ்தா

குகன் அருமைநாட்டார்

இந்த பேனரும், இந்த செய்தியும் நாம் தமிழர் தம்பிகள் வீட்டில் தயாரித்த கப்ஸா என நினைக்கிறேன்.

திக வோ, வீரமணியோ, சுபவீ யோ இப்படி அறிக்கை விட்டதாகவோ, அல்லது பேனருடன் போராட்டம் நடத்தியதாகவோ நான் வாசிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/v/168YHEgZUF/

இத்தனை உயிரிழப்புகளின் பின்னரும் சென்னை விமான நிலையத்தில் சிரித்தபடி செல்ஃபி .....

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

இதெல்லாம் 15 வருடமாக முக்கியும் டிரோனில் காட்டும் அளவுக்கு கூட்டம் வரவில்லை என்ற வெப்பு 😂

அண்ணன் தனியே நின்று நம்ம அணிலுக்கு டிபெண்டர் ஓடும்போதே தெரிகிறது நம்ம அண்ணன் ஒரு நடுநிலை சிகரம் என்று , கொஞ்சம் வேகத்தை குறைச்சு ஓட்டுங்க அண்ணை கொண்டை தெரிகிறது. அப்படியே விஜய் எதற்கு 7,8 மணி லேட்டாக வந்தார் என்று ஆதாரபூர்வமாக காரணம் சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம். Stampede நடக்கும் என்று காவல்துறை ஆதவ் அர்ஜுனாவிடம் தெரிவித்ததாகவும் வேண்டுமென்றே ஜனக்கூட்டத்திற்கு நடுவில் வாகனத்தை குறிப்பிட்ட இடத்திற்கு செலுத்தியதாகவும் அறிக்கை வந்துள்ளது தவறாக , பொய்யாக இருந்தால் விஐய் வழக்கு தொடர்ந்து அதனை பொய் என்று நிரூபிக்கலாம். விஜய் தலை தெறிக்க ஓடியதிலேயே பய தான் கேப்மாரி என்று தெரிகிறது. அதுவரை மக்களை கொலை செய்தது அணில் தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணன் தனியே நின்று நம்ம அணிலுக்கு டிபெண்டர் ஓடும்போதே தெரிகிறது நம்ம அண்ணன் ஒரு நடுநிலை சிகரம் என்று , கொஞ்சம் வேகத்தை குறைச்சு ஓட்டுங்க அண்ணை கொண்டை தெரிகிறது.

என்ன தம்பி,

போன முறை யாழுக்கு வந்த போது நான் திமுக சொம்பு என்று தேவாரம் பாடினீங்க? இப்ப அணில் என்றீங்க?😂

பிரபல வசனம் “என் கேரக்டரயே நீங்க புரிஞ்சுகொள்ளலேயே” தான் இங்கே உங்களுக்கும் இன்னும் சிலருக்கும் பொருந்தும்.

நான் ஒரு மனிதருக்கு ஆதரவு என்றால் - அது கோஷானுக்கு மட்டும்தான் மீதி எவரும் நிபந்தனை அற்ற ஆதரவுக்கு உரித்துடையவர் அல்ல.

ஆனால் திராவிட கொள்கை, ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு, தமிழ் தேசியம் - இதில் ஒன்றையோ அல்லது பலதையோ யாரும் வரித்து கொண்டால் அவர்களுக்கு என் வரவேற்பு இருக்கும்.

அதே சமயம் இந்த கொள்கைகளை உள்ளிருந்து நீர்த்து போக செய்வோருக்கும் என் எதிர்ப்பு இருக்கும்.

தவிர நான் எப்போதும் தமிழக அரசியலில் என்னை நடுநிலையாளன் என சொல்லிகொண்டதே இல்லை.

அப்போதைக்கு யார் தமிழகத்தில் சனாதனத்தை எதிர்க்க தோதான சக்தி என படுகிறதோ. அவர்களை நான் ஆதரிப்பேன். அது திமுக, அதிமுக, சீமான், விஜை, வேல்முருகன் யாராயினும்.

இதை புரிந்துகொள்ளமையால்தான் நீங்கள் என்னை உபி என ஒருநாளும், அணில் என மறுநாளும் அந்நியன் போல் மாறி மாறி பட்டம் சூட்டி கொள்ளும் அவல நிலை உருவாகியுள்ளது😂.

இந்த திரியில் கூட புலவருக்கு பதிலாக எழுதியுள்ளேன்.

விஜை பாஜக கூட்டணிக்கு போவதாயின், அதற்கு திமுகவே ஆட்சியில் தொடரலாம் என.

ஒரு தலைவர், ஒரு இயக்கம் என தனிமனித வணக்கத்துக்கு பழகிவிட்ட சிலருக்கு புரியாமல் இருப்பது கூட ஓக்கே.

ஆனால் புலிகள், கருணா, பிள்ளையான், அமல், அனுரா என 80 களின் ஹீரோயின் பாட்டு கட்டத்தில் ஆடை மாற்றுவது போல் அரசியல் நிலைப்பாட்டில் அங்கிறுதட்டும் உங்களுக்குமா இது விளங்கவில்லை😂.

  • கருத்துக்கள உறவுகள்

மாநில அரசு பத்து இலட்சம்..
விஜய் இருப்பது இலட்சம்...
காங்கிரஸ் இரண்டு இலட்சம்
மத்திய அரசு இரண்டு இலட்சம்
ஏறத்தாழ உயிரிழந்த ஒருவருக்கு தலா முப்பத்தைந்து இலட்சம்...
உசுரக் கொடுத்து பயிரை விளைவிக்கும் விவசாயி.
பாம்பு கடிச்சு செத்தா
இரண்டு இலட்சம்..
கரண்ட்ல மாட்டி செத்தா
மூணு இலட்சம்...
வனவிலங்க தாக்கி செத்தா
ஐந்து இலட்சம்...

வெளஞ்ச வெள்ளாமை வெள்ளத்தில் போனா ஏக்கருக்கு ஐயாயிரம் ரூபா..
இப்போ சொல்லுங்க நான் விவசாயம் செஞ்சு சாகவா??
இல்லை
கள்ளச்சாராயம் குடித்து சாகவா???
இல்லை
விஜயைப் பார்க்க போய்
சாகவா?

-️ #ஈஷ்

படித்ததில் பிடித்தது.அப்பாவி விவசாயிகளும் மீனவர்களும் சாகும் பொழுது வேடிக்கை பார்க்கும் கட்சிகள் கொழுப்பில் புதிய அரசியல் நடிகனைப் பார்க்கப் போய் இறந்தவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்.இது தேர்தல் நேரம் என்று பிண அரசியல் செய்கிறார்கள்.

https://x.com/tholarbalan/status/1972595305842614478?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A

சமூக நீதிக்காவலர்கள் கிளம்பிவிட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, அக்னியஷ்த்ரா said:

7,8 மணி லேட்டாக வந்தார் என்று ஆதாரபூர்வமாக காரணம் சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம்

நான் என்ன அவரின் பட்லரா ?

ஆனால் தமிழர் ஒரு கலியாணத்தை கூட முகூர்த்த டைமுக்கு செய்ய, சொன்ன நேரத்தில் விருந்தினர் வர தவறும் ஆட்கள்.

இதுதான் தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே நேரம் தவறி முதல் கூட்டமா?

சும்மா வெப்பில் எதை வேண்டுமானாலும் எழுத கூடாது.

நேரம் பிந்துவதுதான் அங்கே அரசியல் கூட்டங்களில் மட்டும் எல்ல சகல பொது நிகழ்வுகளிலும் யதார்த்தம்.

இதை வைத்து கூட்டம் கூட்ட நேரம் பிந்தினார்…அடுத்த படி போய் கொலை செய்தார் என எழுதுவதெல்லாம் சீமான் தம்பிகளின் பழைய கறள்.

41 minutes ago, அக்னியஷ்த்ரா said:

Stampede நடக்கும் என்று காவல்துறை ஆதவ் அர்ஜுனாவிடம் தெரிவித்ததாகவும் வேண்டுமென்றே ஜனக்கூட்டத்திற்கு நடுவில் வாகனத்தை குறிப்பிட்ட இடத்திற்கு செலுத்தியதாகவும் அறிக்கை வந்துள்ளது தவறாக , பொய்யாக இருந்தால் விஐய் வழக்கு தொடர்ந்து அதனை பொய் என்று நிரூபிக்கலாம்.

நிச்சயமாக யார் பக்கம் தவறு அதிகம் என்பது தீர ஆராயப்பட வேண்டும்.

அருணா கமிசன் விசாரிக்கிறது, பொலிஸ் எப் ஐ ஆர் போட்டுள்ளது. தவெக மதுரையில் உச்ச நீதிமன்றை அணுகி உள்ளது.

இரு பகுதியும் தவறு என்பது வெள்ளிடமலை.

யார் மேல் அதிகம் என வரும் தரவுகளை வைத்து நாம் முடிவு செய்யலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, அக்னியஷ்த்ரா said:

விஜய் தலை தெறிக்க ஓடியதிலேயே பய தான் கேப்மாரி என்று தெரிகிறது.

நிச்சயமாக நான் மேலே எழுதியதை வாசிக்கவில்லையா?

விஜை ஒரு நெஞ்சுரம் இல்லாத கோழை - முதல்வராக ஆசைப்பட்ச்க்கூடாது என எழுதியுள்ளேன்.

நீங்கள் அதையே சென்னைபாசையில் எழுதி உள்ளீர்கள்.

ஆனால் நீங்கள் ஓக்கே, நான் டிபெண்டர் ஓடும் அணில்?😂

46 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அதுவரை மக்களை கொலை செய்தது அணில் தான்

சீமான் கூட இதை விபத்து என்றே சொல்லி உள்ளார்.

விஜை மீது நேரடியாக கொலை பழி போடுவது, கேவலமான பிண அரசியல்.

கருணா ஆதரவாளர்களுக்கு இது கைவந்த கலைதான்.

59 minutes ago, விசுகு said:

https://www.facebook.com/share/v/168YHEgZUF/

இத்தனை உயிரிழப்புகளின் பின்னரும் சென்னை விமான நிலையத்தில் சிரித்தபடி செல்ஃபி .....

இது போன கிழமை எடுத்த வீடியோ என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கரூர் படுகொலையை பின்புறமாக இருந்து செயல்படுத்தியவர்களின் முகம் தெரிகிறது.

நன்கு திட்டமிடல் இருக்கும் போல.

எல்லாத்தையும் மறச்ச நீ கொண்டைய மறைக்கலயே என்கிற கதையா சம்பவத்திற்கு பிறகு நடக்கிற ஒவ்வொரு நாடகங்களும் சந்தேகத்தை மேலும் மேலும் உறுஜிதப்படுத்துகிறது.

புரிஞ்சவன் பிஸ்தா

விஜைக்கு எதிராக வீரமணி, சுபவீ போராட்டம் என்ற நாதகவின் தம்பிகள் பரப்பிய செய்தி, வழமை போலவே கஞ்சா, கப்ஸா கதை என்பது நிரூபணமாகியுள்ளது.

ஆளுனருக்கு எதிரான போராட்டத்தை மாற்றி அடித்துள்ளார்கள்.

பார்க்கவே பொய் என தெரியும் செய்தியை இணைத்தமைக்கு சிறி அண்ணா எந்த மன்னிப்பும் கேட்க மாட்டார் என்பதை நான் உத்தரவாதப்படுத்துகிறேன்😂.

No image preview

தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் கி.வீரமணி தலைமையில் நடந்தது.

பிகு

இணைப்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

ஆனால் திராவிட கொள்கை, ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு, தமிழ் தேசியம் - இதில் ஒன்றையோ அல்லது பலதையோ யாரும் வரித்து கொண்டால் அவர்களுக்கு என் வரவேற்பு இருக்கும்.

அதே சமயம் இந்த கொள்கைகளை உள்ளிருந்து நீர்த்து போக செய்வோருக்கும் என் எதிர்ப்பு இருக்கும்.

தவிர நான் எப்போதும் தமிழக அரசியலில் என்னை நடுநிலையாளன் என சொல்லிகொண்டதே இல்லை.

அப்போதைக்கு யார் தமிழகத்தில் சனாதனத்தை எதிர்க்க தோதான சக்தி என படுகிறதோ. அவர்களை நான் ஆதரிப்பேன். அது திமுக, அதிமுக, சீமான், விஜை, வேல்முருகன் யாராயினும்.

கொஞ்சம் பொறுங்கோ அணிலுக்கு துணையாக நிறைய இராமார்கள் களமிறங்கி இருக்கிறார்கள். நைட்டோட நைட்டாக அணில் இராமரிடம் சரணாகதி என்று கதை வருது.

இல்லை அண்ணை நீங்கள் உ.பி யும் இல்லை அணிலும் இல்லை ஆனால் சீமான் போபியாவால் பாதிக்கப்பட்டதால் இவை எல்லாவற்றிலும் இருப்பீர்கள். அதாவது கூத்தமைப்பு போபியாவால் பாதிக்கப்பட்ட என்னைப் போல் ,இப்போது அணிலுக்கு ஆதரவாக இராமர்கள் குதித்திருப்பதால் உங்களின் அடுத்த தெரிவு எது என்று பார்க்க ஆசை.

மற்றைய தலைவர் , அமல் , கருணா பிள்ளையான், சாணக்கியன், அர்ஜ்ஜுனா, அனுர இதெல்லாம் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஈழ தமிழரும் தவிலடிக்கும் விடையம் யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே .

England இல இருந்திருந்தால் இலங்கை அரசியலில் ஏகபத்தினி விரதனாக இருந்திருக்கலாம். இலங்கையில் இருப்பதால் தசரதனாக தான் இருக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

மாநில அரசு பத்து இலட்சம்..
விஜய் இருப்பது இலட்சம்...
காங்கிரஸ் இரண்டு இலட்சம்
மத்திய அரசு இரண்டு இலட்சம்
ஏறத்தாழ உயிரிழந்த ஒருவருக்கு தலா முப்பத்தைந்து இலட்சம்...

அண்மையில் துப்பரவு தொழிலாளர்கள் கொஞ்ச சம்பளம் கூடக் கேட்டுப் போராடினார்களே என்னாச்சு?

உயிரோடு இருக்கும் போது ஒத்தை ரூபா கொடுப்பதானாலும் கணக்கு பார்க்கிறார்கள்.

சாராயத்தைக் குடித்தோ இப்படி ஏதாவது வழியில் இறப்பவர்களுக்கு லட்சக் கணக்கில் வாரி இறைக்கிறார்கள்.

இனிமேல் கூட்டங்களுக்கு போகும்போது

வீட்டார் ஆள் திரும்ப வருதா?

அல்லது பணம் வருதா என்று ஏங்கப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் தமிழர் ஒரு கலியாணத்தை கூட முகூர்த்த டைமுக்கு செய்ய, சொன்ன நேரத்தில் விருந்தினர் வர தவறும் ஆட்கள்.

இதுதான் தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே நேரம் தவறி முதல் கூட்டமா?

சும்மா வெப்பில் எதை வேண்டுமானாலும் எழுத கூடாது.

நேரம் பிந்துவதுதான் அங்கே அரசியல் கூட்டங்களில் மட்டும் எல்ல சகல பொது நிகழ்வுகளிலும் யதார்த்தம்.

காலை முகூர்த்தத்திற்கு இரவு 8 மணிக்கு போய் தாலி கட்டு என்று சொல்லும் அரைப்போதை அணில்கள் என்று தமிழர்களை விழித்து எழுதியிருப்பதை கண்மையாக வண்டிக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

கொஞ்சம் பொறுங்கோ அணிலுக்கு துணையாக நிறைய இராமார்கள் களமிறங்கி இருக்கிறார்கள். நைட்டோட நைட்டாக அணில் இராமரிடம் சரணாகதி என்று கதை வருது.

இப்படி நடக்ககூடும் என இதே திரியில், சம்பவம் நடந்து சில மணிகளுக்குள் எழுதியுள்ளேன்.

அப்படி நடந்தால் சீமானுக்கு வழமையாக கட்டும் டின்னில் ஒண்டை எடுத்து விஜைக்கு கட்டிவிட வேண்டியதுதான்😂.

நீங்களும், புலவரும் என்னை மீளவும் 200 உபி என சொல்ல ஆரம்பிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

அண்மையில் துப்பரவு தொழிலாளர்கள் கொஞ்ச சம்பளம் கூடக் கேட்டுப் போராடினார்களே என்னாச்சு?

உயிரோடு இருக்கும் போது ஒத்தை ரூபா கொடுப்பதானாலும் கணக்கு பார்க்கிறார்கள்.

“உசிரு போற நேரத்திலும் ஊத்த மாட்டான் பாலை,

நீ காலை நீட்டி படுத்துகிட்டா எவ்ளோ பெரிய மாலை”…

எஸ்பிபி பாடிய பாடல்.

அந்த எஸ்பிபிக்கே இருக்கும் போது வழக்கு போட்ட இசைஞானி செத்த பின் அண்ணாமலையில் தீபம் ஏற்றவில்லையா.

விஜயகாந்த், உடல் நலம் குன்றிய பின்னும், எப்போதும் போதையில் இருக்கும் தெலுங்கன் அவருக்கெலாம் தமிழகத்தை ஆள ஆசை வருவது காலக்கொடுமை என மேடையில் அவமானப்படுத்திவிட்டு, செத்தவுடன் “வானத்தை போல மனம் படைத்த மன்னவனே” என பாடி கூலிக்கு மாரடித்தாரே இன்னொருவர்.

இதுதான் இவர்களின் இரெட்டை முகம். இவர்களையும் நல்லவர்கள் என நம்பி அலையும் ஒரு கூட்டம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரூர் சம்பவம்.. செந்தில் பாலாஜி காரணம்.. கடிதம் எழுதிவிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்ட விஜய் ரசிகர்

Velmurugan PUpdated: Monday, September 29, 2025, 20:29 [IST]

Senthil Balaji is the reason behind the Karur incident What Vijay fan did after writing a letter

விழுப்புரம்: கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன் என்பவர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. அதேநேரம் இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளை யாருமே எடுக்கவே கூடாது என்பதற்காகவே இந்த பதிவு.

இது 1970களில் இருந்து இன்று வரை தொடர்கிறது. எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி, ரஜினி கமல், அடுத்ததாக விஜய், அஜித் வரை இருக்கிறது.இனி வரும் காலத்திலாவது இது மாறினால் சிறப்பாக இருக்கும். ஆனால் இப்போது உள்ள சூழலில் நடிகர்களை நடிகர்களாக பார்க்காமல் கடவுளாக பார்க்கும் அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சில ரசிகர்கள் அவர் மீது உள்ள அன்பின் மிகுதியில் செய்யும் விஷயங்கள் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது.

Also Read

கரூரில் விஜய்யின் வாகனத்தை மையப் பகுதிக்குள் போக நிர்பந்தம் செய்ததே காரணம்.. கிருஷ்ணசாமி புகார்

நடிகர் விஜய்க்கு அந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை பார்த்தால் போதும், அவரது பேச்சை கேட்டால் போதும் என்று கூட்டம் கூட்டமாக தவெக நடத்தும் அரசியல் கூட்டங்களுக்கு ரசிகர்கள் வருகிறார்கள். அப்படித்தான் நடிகர் விஜய் நடத்திய கரூர் கூட்டத்திற்கும் பல ஆயிரம் பேர் வந்தார்கள். காலை முதலே விஜய்யை பார்க்க காத்திருந்த ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் தண்ணீர் கிடைக்காமலும், மூச்சுவிடக்கூட முடியாமலும் பரிதவித்து போனார்கள்.

Recommended For You

விடை தெரியாத கேள்விகள்.. விஜய் நினைத்தவுடன் கிளம்ப விமானம் கால் டாக்ஸி அல்ல.. நெட்டிசன்

விஜய் வந்துவிட்டு கிளம்பி செல்லும் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் பலர் மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். சிலர் மிதிப்பட்டும் இறந்து போனார்கள். ஒட்டுமொத்தமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம்சாட்டி தவெகவினர் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதேநேரம் அரசும் குறுகிய இடத்தில் தான் தங்களுக்கு இடம் தந்ததாகவும் தவெகவினர் குற்றம்சாட்டுகிறார்கள் . மேலும் சதி என்றும் பரப்பி வருகிறார்கள். இதனை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில் கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன் என்பவர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார். இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளை ஒருபோதும் எடுக்காதீர்கள்..

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

https://tamil.oneindia.com/news/villupuram/senthil-balaji-is-the-reason-behind-the-karur-incident-what-vijay-fan-did-after-writing-a-letter-739387.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

👆என்னத்த சொல்ல🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோக்கியமான விவாதங்களும், கருத்து பரிமாற்றங்களும், ஆக்கங்களும் இடம்பெறும் ஒரு தளத்தில், அவசரப்பட்டு, பெரும்பாலும் ஒரு பிரச்சார நோக்கில், பொய்ச் செய்திகளை இணைப்பது நியாயம் இல்லை அல்லவா......... நீண்ட நாட்களாக களத்தில் பிதாமகர்கள் போன்று இருப்பவர்களே இப்படிச் செய்யலாமா..............

ஆதவன், தமிழ்வின் போன்ற பொய்யும், புனைவுகளும் நிறைந்த ஊடகங்கள் போன்றே இந்தக் களமும் போய் விடும் அல்லவா..............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.