Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளதாக தெரிவித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

சஞ்சீவ படுகொலை

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்  இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார். 

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது | Ishara Sevvanthi Arrested Ganemulla Sanjeewa

இந்நிலையில், இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Tamilwin
No image preview

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது - தமிழ்வின்

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தே...
  • Replies 103
  • Views 4.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Thumpalayan
    Thumpalayan

    எனக்கு ஜெவிபி யை ஆரம்பித்தில் இருந்தே பிடிப்பதில்லை, ஆனால் இப்போது அவர்களின்நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது. எல்லா அரசியல் கடசிகளையும் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. இர

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    நிச்சயமாக குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிலும் இவர்களின் குழு…. பெருமளவில் போதைப் பொருள் கடத்தல், கொலை என்று…. தங்களுடைய பணத் தேவைக்கும், சொகுசு வாழ்க்கைக்க

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    1988 முதல் 1990 வரை தெற்கில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கவே இந்திய இராணுவம் வருகிறது, ஆகவே அவர்களை திருப்பியனுப்புங்கள் என்று கோரி

  • கருத்துக்கள உறவுகள்

பல மாதங்களாக, அரசாங்கதுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்த செவ்வந்தி…. இறுதியில் பிடிபட்டார். 😁

அனுரா அரசாங்கத்துக்கு, ஒரு… ஓ…. போடுங்க. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது!

adminOctober 14, 2025

Ishara.jpeg?fit=1170%2C658&ssl=1

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர், நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

25 வயதான பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தி இந்தக் கொலையில் உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.இவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வழிநடத்தியதாகவும், திட்டத்தைத் திட்டமிட்டதாகவும் காவற்துறை  விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து இவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று காவற்துறை  தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று (14.10.25) நேபாள காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


https://globaltamilnews.net/2025/221475/

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-159.jpg?resize=750%2C375&ssl

இஷாரா செவ்வந்தி நேபாளத்திற்கு எப்படி சென்றார்; பொலிஸாரின் மேலதிக தகவல்!

திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் கணேமுல்லா சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் இராஜதந்திர அனுசரணையில் விசேட குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (14) பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எப்.யூ. வுட்லர் இதனைக் கூறினார்.

இதற்கிடையில், நாட்டை விட்டு தப்பிச் சென்ற 40 குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த ஆண்டு அவர்களில் 18 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறினார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் விடே பொலிஸ் குழு, பொலிஸ்மா அதிபரின் நேரடித் தலையீட்டின் கீழ் நடத்திய கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து, இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரைத் தவிர, மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பரும் அவர்களில் ஒருவர்.

இந்தக் குழுவில், இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த தமிழர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளிகள் அடுத்த சில நாட்களில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கடந்த பெப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையை கெஹல்பத்தர பத்மேவின் குழுவினர் செய்ததாக நம்பப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமாங்க, அதே நாளில் புத்தளம், பகுதியில் விசேட படையினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் விசாரணை அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி கமராக்களை சோதனை‍ே செய்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவி செய்ய ஒரு பெண்ணும் வந்திருப்பதைக் கண்டறிந்தனர்.

குறித்த பெண், சட்டத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு புத்தகத்திற்குள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கொண்டு வந்திருப்பது தெரியவந்தது,

அதன்படி, பொலிஸார் நடத்திய விசாரணைகளில், அவர் மினுவாங்கொடையைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண் என்பது தெரியவந்தது.

குற்றத்தைச் செய்த பின்னர், இஷாரா செவ்வந்தி மித்தேனியாவிலிருந்து ஜே.கே. பாய் என்ற நபரின் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல அவர் சுமார் 6.5 மில்லியன் ரூபாய் செலவிட்டதாகவும், அங்கு அவர் சுமார் மூன்று வாரங்கள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர், அங்கிருந்து அவர் நோபாளத்துக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இறுதியில் அவர் நேபாளத்தின் மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் தங்கியிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டு, நேற்று (13) கைது செய்யப்பட்டார்.

https://athavannews.com/2025/1450367

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

பல மாதங்களாக, அரசாங்கதுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்த செவ்வந்தி…. இறுதியில் பிடிபட்டார். 😁

அனுரா அரசாங்கத்துக்கு, ஒரு… ஓ…. போடுங்க. 😂 🤣

நானும் இதைத் தான் நினைத்தேன்.

நிச்சயம் அனுரா அரசை பாராட்டியே ஆகணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.

“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட  இரகசிய நடவடிக்கையாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலமைறைவாக இருந்த  நிலையில் நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். 

இந்த கைது நடவடிக்கையானது பல மாத காலமாக திட்டமிடப்பட்டதாகும்.

இந்த கைது நடவடிக்கைக்கு நேபாள அரசாங்கமும் சர்வதேச பொலிஸாரும் ஒத்தழைப்பு வழங்கியிருந்தனர்.

வெளிநாடுகளில் உள்ள பாதாள உலக கும்பலை கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் தொடர்ந்தும் எமக்கு உதவி செய்து வருகின்றனர். 

இஷாரா செவ்வந்தியுடன் மேலும் ஒரு பெண்ணும் 4 ஆண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்டவர்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் | Virakesari.lk

ஆனாலும் ஆனாலும் இஷாரா கைதானது எனக்கு இனிப்பான செய்தியே அல்ல..

இப்படிக்கு,

அகில உலக இஷாரா விசிறிகள் சங்கத் தலைவர்

நிழலி

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

ஆனாலும் ஆனாலும் இஷாரா கைதானது எனக்கு இனிப்பான செய்தியே அல்ல..

இப்படிக்கு,

அகில உலக இஷாரா விசிறிகள் சங்கத் தலைவர்

நிழலி

இவர் கடைசி சனிக்கு எள் எண்ணை எரிக்கேல்ல என்று நினைக்கிறேன் ........! 😇

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தில் இஷார செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த யாழ் தமிழர்கள்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

October 14, 2025 3:45 pm

நேபாளத்தில் இஷார செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த யாழ் தமிழர்கள்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இஷார செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நேபாளத்தில் இஷார செவ்வந்தி உள்ளிட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த யாழ்ப்பாணத்தை ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி நடந்த கொலை தொடர்பாக நீதிமன்றத்தால் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை இலங்கை பொலிஸின் சிறப்பு குழு கைது செய்துள்ளது.

இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் முக்கிய சந்தேக நபரும் மேலும் பல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேக நபரான இஷார செவ்வந்தியை கைது செய்வதற்காக சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணை மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், பல நீண்ட இரகசிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் துறை (CID), சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் வெளிநாடுகளின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, நேபாள அரசாங்கத்தின் ஆதரவுடன், களத்தில் கிடைத்த தொழில்நுட்பம் மற்றும் உளவுத்துறை தகவல்களைப் பயன்படுத்தி இலங்கை பொலிஸ் குழு சந்தேக நபரைக் கைது செய்ய முடிந்தது.

சந்தேக நபரான இஷார செவ்வந்தி, அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் பல்வேறு கொலைகளைத் திட்டமிட்ட ஒருவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கெஹல்பத்தர பத்மேவிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இஷார செவ்வந்தி நேபாளத்தில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, மேற்கு வடக்கு குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல உள்ளிட்ட பொலிஸ் குழு நேபாளம் சென்றிருந்தது.

உள்ளூர் பொலிஸாரின் உதவியுடன், இஷார செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்தனர்.

நேபாளத்தில், இஷார செவ்வந்தியுடன் மற்றொரு தமிழ் ஆணும், பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இருவரையும் தவிர, சந்தேக நபர் மற்றும் தங்குமிடம் வழங்கிய சந்தேக நபர் உட்பட மேலும் நான்கு பேரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நான்கு பேரில் மூன்று பேர் ஆண்கள், ஒருவர் பெண் என ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு பெண் சந்தேக நபர்கள் மற்றும் நான்கு ஆண் சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு ஆகும்.

இஷார செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட மற்றையப் பெண் இஷார செவ்வந்தியை ஒத்த தோற்றமுடையவராக இருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னைப் போல் தோற்றமுடைய பெண்ணை பயன்படுத்தி இஷார செவ்வந்தி நேபாளத்தில் இருந்து வேறு நாட்டிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட பின்னர் இஷார செவ்வந்தி நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மித்தெனி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் மறைந்திருந்த அவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.

கெஹல்பத்தர பத்மேவி ஆலோசனையின் பேரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்த நபர் உதவிகள் அனைத்தையும் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மூன்று வாரங்கள் தங்கியிருந்த இஷார செவ்வந்தி அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பிச் செற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்திற்கு தப்பிச் செல்வதற்கும் கெஹல்பத்தர பத்மே உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில். வெளிநாடுகளில் உள்ள இந்த சந்தேக நபர்கள் தொடர்பாக இராஜதந்திர மட்டத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் பெறுவதில், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜயபால, பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் ரவி செனவிரத் ஆகியோரின் சிறப்பு பங்களிப்பும் கிடைத்திருந்தன.

கைது செய்யப்பட்ட அனைவரும் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

பல்வேறு நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் உடன்படிக்கை மூலம் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் அவர்களை விரைவாக இலங்கைக்கு அழைத்து வர முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

https://oruvan.com/jaffna-tamils-who-gave-shelter-to-ishara-sewwandi-in-nepa/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இஷார செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட மற்றையப் பெண் இஷார செவ்வந்தியை ஒத்த தோற்றமுடையவராக இருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

.

இங்கைதான் ..எங்கையோ உதைக்குது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இஷாரா செவ்வந்தி எப்படி தப்பினார்: முழு விபரம்

image_13ec237b4a.jpg

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று, இந்தியாவில் சுமார் மூன்று வாரங்கள் தங்கி, சாலை வழியாக நேபாளத்திற்குச் சென்று, தப்பிக்க கிட்டத்தட்ட ரூ.6.5 மில்லியன் செலவிட்டதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து  தெரியவந்துள்ளது.

காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) மற்றும் ஐ.ஜி.பி.யின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும் சிறப்பு காவல் குழுவால் செவ்வந்தி, கண்டுபிடிக்கப்பட்டு நேபாளத்தில் காவலில் எடுக்கப்பட்டார்.

2025 பிப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சஞ்சீவா குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்லா சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜே.கே. பாய் என்ற கூட்டாளியின் உதவியுடன் செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல சுமார் ரூ.6.5 மில்லியன் செலவிட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் தங்கி, நேபாளத்தை அடைய பல்வேறு வழிகள் வழியாக பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்தார்.

நேபாளத்தின் மலைப்பாங்கான பகுதியில் உள்ள ஒரு பல மாடி வீட்டின் மேல் தளத்தில் மறைந்திருந்தபோது, திங்கட்கிழமை செவ்வந்தி கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

மற்றொரு பெண், கெஹல்பத்தர பத்மேவின் மூன்று நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு தமிழ் நபர் உட்பட நான்கு பேர் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் அடுத்த சில நாட்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கெஹல்பத்தர பத்மேவின் குற்றவியல் வலையமைப்பால் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் கொலை தொடர்பாக செவ்வந்தி தேடப்பட்டு வந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்கா, துப்பாக்கிச் சூடு நடந்த அதே நாளில் புத்தளம், பலாவியாவில் சிறப்புப் பணிப் படையினரால் கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு ஒரு பெண் துப்பாக்கியை சட்டப்  புத்தகத்திற்குள் மறைத்து வைத்து உதவியதாக சிசிடிவி காட்சிகள் பின்னர் வெளிப்படுத்தின, பின்னர் அவர் மினுவங்கொடயைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்டார்.

எல்லைகளைத் தாண்டிச் செல்லவும், கைது செய்வதைத் தவிர்க்கவும் செவ்வந்தி மற்றொரு பெண்ணின் பெயரில் போலி கடவுச்சீட்டைத் தயாரித்ததாகவும் பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இலங்கை அதிகாரிகள் இன்டர்போல் மூலம் அவரை கைது செய்ய சிவப்பு அறிவிப்பை வெளியிட்டதாக ஏஎஸ்பி வூட்லர் கூறினார்.

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 40 குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 18 பேர் இந்த ஆண்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 2021 மற்றும் 2024 க்கு இடையில், அரசாங்கம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சொந்தமான ரூ. 3.9 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளது என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், "பஸ் லலித்" என்று பரவலாக அறியப்படும் லலித் கன்னங்கர, ஒரு குற்றவியல் கும்பலின் உறுப்பினராக, துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவிசாவலை, ஹோமாகம மற்றும் கடுவெல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடையவர் அவர்.

ஆகஸ்ட் 12 ஆம் திகதி பாதுக்கவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த முன்னாள் ஹோமாகம பிரதேச சபை உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ மீது துப்பாக்கிச் சூடு நடத்த பஸ் லலித் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/இஷாரா-செவ்வந்தி-எப்படி-தப்பினார்-முழு-விபரம்/175-366312

  • கருத்துக்கள உறவுகள்

565116865_1390190489339415_3875389053794

📌👉ஒரு தொலைபேசி அழைப்பை நம்பி மறைவிடத்திலிருந்து வெளியே வந்த செவ்வந்தி நேபாளத்தில் சிக்கியது இப்படித்தான்‼️‼️‼️
நேபாள காவல்துறையினருடன் இணைந்து நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் மூன்று இடங்களில் இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு இலங்கை சந்தேக நபர்களும் இன்று அல்லது நாளை நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
இந்த சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர மேலதிகமாக குற்றப் புலனாய்வுத் துறையின் இரண்டு அதிகாரிகள் இன்று நேபாளத்தின் காத்மாண்டுவுக்குச் செல்ல உள்ளனர்.
மேற்கு மாகாணத்தின் வடக்கு மாவட்ட குற்றப் பிரிவின் இயக்குநர், உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் ஒரு அதிகாரி ஆகியோர் நேபாளத்தில் அந்நாட்டு காவல்துறையினருடன் இணைந்து நடத்திய நடவடிக்கையின் விளைவாக இந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய முடிந்தது.
செவ்வந்தியும் மற்றொரு பெண்ணும், மேலும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மற்றப் பெண் இஷாரா செவ்வந்தியுடன் சிறிது தோற்ற ஒற்றுமையைக் கொண்டுள்ளார் என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினார்.
இஷாரா மற்றும் அந்தப் பெண்ணைத் தவிர, கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு மற்றும் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கெஹல்பத்தர பத்மேவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் போதைப்பொருள் கும்பலில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தியைப் போன்ற சந்தேக நபர் விசாரணைக்கு முக்கியமான நபர் என்றும், அவரை நாட்டிற்கு அழைத்து வந்த பிறகு விசாரிப்பதன் மூலம் பல தகவல்கள் வெளிப்படும் என்றும் சிஐடி நம்புகிறது.
இஷாரா சேவ்வந்தியைத் தவிர மற்ற சந்தேக நபர்கள் நாட்டிற்கு நாடு கடத்தப்பட உள்ளனர் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் நேபாளத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள். இஷாரா செவ்வந்தியை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ள அதே விமானத்தில் அவர்கள் நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதற்காக ஏற்கனவே இலங்கை விமானம் ஒன்று தயாராக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
செவ்வந்தி கைதான நேரத்தில் அவரிடம் இருந்து ஒரு வெளிநாட்டு பாஸ்போர்ட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாஸ்போர்ட்டில் இஷாராவின் புகைப்படம் இருந்தது, ஆனால் போலியான பெயர். பாஸ்போர்ட்டின் படி, அவர் தனது அடையாளத்தை இலங்கையர் அல்லாதவராக மாற்றியிருந்தார். பாஸ்போர்ட் தொடர்பாக இன்டர்போலின் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெப்ரவரி 19 அன்று அளுத்கடே மாஜிஸ்திரேட் நீதிமன்ற எண் 05 இன் கூண்டில் கனேமுல்லே சஞ்சீவவை சட்டத்தரணி போல் வேடமிட்டு வந்த பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுட்டுக் கொன்றார். இஷாரா செவ்வந்தி தண்டனைச் சட்டத்தின் ஒரு பக்கத்தை வெட்டி அதில் மறைத்து வைத்து, நீதிமன்ற வளாகத்திற்கு துப்பாக்கியைக் கொண்டு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் கொடுத்தது தெரியவந்தது. சில மணி நேரங்களுக்குள் சிலாபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை காவல்துறை சிறப்புப் படை கைது செய்த போதிலும், இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு ஓடிவிட்டார்.
கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரால் கனேமுல்லே சஞ்சீவவின் கொலை, அவர் வெளிநாட்டில் இருந்தபோது நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில் கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலகக் குற்றவாளிகள் இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவு, கனேமுல்லே சஞ்சீவவின் கொலை உட்பட பல கொலைகள் குறித்த தகவல்களைக் கண்டறிய முடிந்தது.
கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இஷாரா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக கெஹல்பத்தர பத்மே விசாரணையின் போது தெரிவித்திருந்தார். அவர் படகு மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தியாவில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் வலுக்கட்டாயமாக நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கெஹல்பத்தர பத்மே தெரிவித்தார். போலி வெளிநாட்டு பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி நேபாளத்திலிருந்து ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு அவளை கடத்துவதே திட்டமாக இருந்தது. இதற்காக கெஹல்பத்தர பத்மே பெரும் செலவில் பல ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும், இந்தோனேசியாவில் அவர் கைது செய்யப்பட்டபோது இவை அனைத்தும் நிறுத்தப்பட்டன.
இஷாரா செவ்வந்தி மற்றும் பலர் ஏற்கனவே நேபாளத்தில் சிக்கியுள்ளதாக கெஹல்பத்தர பத்மே தெரிவித்ததை அடுத்து, சிஐடி அதிகாரிகள், இன்டர்போலின் உதவியுடன், அந்தக் குழுவைப் பிடிக்க நேபாள காவல்துறையிடம் உதவி கோரியுள்ளனர். கெஹல்பத்தர பத்மேவின் விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில், இஷாரா செவ்வந்தியின் மறைவிடம் பற்றிய தகவல்களைக் கண்டறிந்த சிஐடி அதிகாரிகள், இது குறித்து நேபாள காவல்துறையினருக்கும் தகவல் அளிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்படி, இஷாரா செவ்வந்தி காத்மாண்டுவில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பது நேபாள காவல்துறையினரின் உதவியுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் கடந்த சனிக்கிழமை நேபாளத்திற்குச் சென்றனர். செவ்வந்தியை கைது செய்வதற்கான இரகசிய நடவடிக்கையின்படி, அவர் ஏற்கனவே தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டார்.
ஒரு குறிப்பிட்ட நபரிடமிருந்து இஷாரா செவ்வந்திக்கு வந்த தொலைபேசி அழைப்பின்படி, அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே வந்து நெடுஞ்சாலைக்கு வந்தபோது பொலிசார் அவரைக் கைது செய்தனர். நேபாள காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் செந்ந்தியை அடையாளம் கண்டுள்ளனர். அவரது விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில், நேபாளத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது விசாரணை மற்றும் கெஹல்பத்தர பத்மே வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மற்ற நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சந்தேக நபர்களில், இஷாரா செவ்வந்திக்கு மட்டுமே சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது, எனவே அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொண்டு நாட்டிற்கு அழைத்து வர நேபாளம் சென்றதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சோதனையின் போது, அவளிடம் இருந்து ஒரு வெளிநாட்டு பாஸ்போர்ட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாஸ்போர்ட்டில் இஷாராவின் புகைப்படம் இருந்த ஒரு வெளிநாட்டு பாஸ்போர்ட் இருந்தது. பாஸ்போர்ட்டின் படி, அவள் தனது அடையாளத்தை இலங்கையர் அல்லாதவராக மாற்றியிருந்தாள். பாஸ்போர்ட் தொடர்பாக இன்டர்போலின் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற 5 சந்தேக நபர்களும் சட்டவிரோதமாக நேபாளத்தில் இருந்தவர்கள். எனவே, அவர்களை இந்த நாட்டிற்கு நாடு கடத்துவது எளிதாகிவிட்டது. இஷாரா சேவ்வண்டி உள்ளிட்ட இந்த சந்தேக நபர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வந்த பிறகு, நிறைய தகவல்கள் வெளியாகும் என்று போலீசார் நம்புகின்றனர்.

நம்ம யாழ்ப்பாணம்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

ஆனாலும் ஆனாலும் இஷாரா கைதானது எனக்கு இனிப்பான செய்தியே அல்ல..

இப்படிக்கு,

அகில உலக இஷாரா விசிறிகள் சங்கத் தலைவர்

நிழலி

இ.கா.மாஅதிபர்,

கனம் ஐயா கனடாவிலும் ஒருவர் பதுங்கி இருப்பதாக தெரிகிறது! தயவு செய்து ஆளணியை வீணடிக்க வேண்டாம், அவர் தானாகவே பிணை எடுக்க கொழும்பு வருவார் என தெரிய வருகிறது!

இப்படிக்கு தங்கை இ.செ எதிர்ப்புச் சங்க தலைவர்(பெண் பிள்ளைகள் வீட்டிற்குள் ரகளை செய்யலாம் ஆண்கள் தாங்குவினம் நாடு தாங்குமா?!)

  • கருத்துக்கள உறவுகள்

இஷாரா செவ்வந்தி; பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கி பயணம்!

15 Oct, 2025 | 01:44 PM

image

இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கி பயணித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலமைறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டார். 

நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி கைதுசெய்யப்பட்டார். 

இஷாரா செவ்வந்தியுடன் ஜேகே பாய் உட்பட மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கி புதன்கிழமை (15) பயணித்துள்ளனர்.

இஷாரா செவ்வந்தி இன்று இரவுக்குள் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/227791

பிள்ளை படத்துக்கு போஸ் கொடுப்பதைப் பார்த்து பல விசிறிகள் வரப்போகினம்!!🤪

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் - இஷாரா செவ்வந்தி.

நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் - இஷாரா செவ்வந்தி

15 Oct, 2025 | 05:39 PM

image

“நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும்” என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார். 

நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட போதே இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

“நேபாளத்தில் நான் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தேன். இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. இங்கு இருப்பதைவிட எனது நாட்டிற்கு செல்வது சுகம் என நினைத்தேன். எப்போது எனது நாட்டிற்கு செல்வேன் என்று இருந்தேன். ஆனால் நான் எனது நாட்டிற்கு சென்றால் பொலிஸார் என்னை கைதுசெய்வார்கள் என்பதால் விருப்பமின்றி நேபாளத்தில் இருந்தேன்” எனவும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலமைறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டார். 

நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி கைதுசெய்யப்பட்டார். 

இஷாரா செவ்வந்தியுடன் ஜேகே பாய் உட்பட மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கி புதன்கிழமை (15) பயணித்துள்ளனர்.

இஷாரா செவ்வந்தி இன்று இரவுக்குள் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் - இஷாரா செவ்வந்தி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார் இஷாரா செவ்வந்தி

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்றுமுன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 182 ரக விமானத்தின் ஊடாக காத்மண்டுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று மாலை அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக முன்னதாக விசேட அதிரடிப் படையின் இரண்டு அதிகாரிகள் நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றிருந்தனர்.

ஏற்கனவே நேபாளத்தில் உள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) குழுவிற்கு உதவுவதற்காக அவர்கள் இவ்வாறு சென்றிருந்தனர்.

நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, நேபாள பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.

இஷாரா செவ்வந்தியுடன் மற்றொரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் தற்போது பொலிஸ் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியும் ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன, அல்லது ‘கணேமுல்ல சஞ்சீவ’ கடந்த பிப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்றிருந்த நிலையில் நீண்ட நாட்களாக தேடப்பட்டிருந்தார்.

இந்தக் கொலை கெஹெல்பத்தர பத்மேவின் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

https://adaderanatamil.lk/news/cmgs1jqla010nqplpz3k5npfr

  • கருத்துக்கள உறவுகள்

image_13ec237b4a.jpg

செவ்வந்தி... "மேக்கப்" எல்லாம் போட்டுக் கொண்டு,

ஜாலியாகத்தான் இருந்திருக்கின்றார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

🚨 Ishara Sewwandi brought back to Sri Lanka from Nepal | Rj Chandru Report">Ishara Sewwandi brought back to Sri Lanka from Nepal | Rj Chandru Report

  • கருத்துக்கள உறவுகள்

இஷாரா யாழ்ப்பாணமூடாகத் தப்பிச் சென்ற விவகாரத்தில் சுமந்திரனுக்குத் தொடர்பிருப்பதாகச் சுட்டும் செய்திகள், தகவல்கள் எவையும் எங்கள் யாழ் கள சுமந்திரன் லவ்வர்சுக்குக் கிடைக்கவில்லையோ😎? Just a thought!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

image_13ec237b4a.jpg

செவ்வந்தி... "மேக்கப்" எல்லாம் போட்டுக் கொண்டு,

ஜாலியாகத்தான் இருந்திருக்கின்றார்.

நிழலி இன்னும் பார்க்கவில்லைப் போல.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நிழலி இன்னும் பார்க்கவில்லைப் போல.

@நிழலி …. இனி, செவ்வந்தியை பார்க்கிறது என்றால்,

“வெலிக்கடை” மறியலுக்குள் போய்த்தான் பார்க்க வேணும். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

565611263_820211207163718_22893517979951

செவ்வந்தி... கள்ளத் தோணியில் இந்தியா சென்று,

நேபாளத்தில் இருந்து, விமானம் மூலம் இலங்கை வருகின்ற வழியில் எடுத்த படம்.

பிள்ளை.... சரியாய் பயந்து போச்சுது போலை கிடக்கு. 😂

கறுப்பு உடையுடன் இருப்பவர் சாவகச்சேரியை சேர்ந்த... தக்சி என்று முகநூலில் உள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Ishara.jpeg?fit=1170%2C658&ssl=1

565611263_820211207163718_22893517979951

செவ்வந்தி... புதிதாக மூக்குத்தி குத்தி உள்ளார்.

இது, இந்தியாவில் குத்தப் பட்டதா, நேபாளத்தில் குத்தப் பட்டதா என்று,

யாழ் கள புலநாய்வாளர்கள், தீவிரமாக புலனாய்வு செய்கிறார்கள். 😂 🤣

54 minutes ago, ஈழப்பிரியன் said:

நிழலி இன்னும் பார்க்கவில்லைப் போல.

47 minutes ago, தமிழ் சிறி said:

@நிழலி …. இனி, செவ்வந்தியை பார்க்கிறது என்றால்,

“வெலிக்கடை” மறியலுக்குள் போய்த்தான் பார்க்க வேணும். 😂 🤣

பார்த்தேன், மனசுடைந்தேன்.

வெலிக்கடைக்கு சென்று பார்ப்பது ஒன்றும் எனக்கு புதுசு இல்லை.😊

4 minutes ago, தமிழ் சிறி said:

Ishara.jpeg?fit=1170%2C658&ssl=1

565611263_820211207163718_22893517979951

செவ்வந்தி... புதிதாக மூக்குத்தி குத்தி உள்ளார்.

இது, இந்தியாவில் குத்தப் பட்டதா, நேபாளத்தில் குத்தப் பட்டதா என்று,

மூக்குத்தியை மூக்கில் தான் குத்த முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.