Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

கோரஸ் பாடுபவர்களிடம் கொள்கை விளக்கம் கேட்கும் நம்மில்தான் பிழை.

அதெண்டா நீங்கள் சொல்வது உண்மைதான். அப்போ, எந்தக்கட்சி பதவிக்கு வந்திருக்க வேண்டும் என்கிறீர்கள்? மகிந்த, மைத்திரி, ரணில், கோத்தா, சந்திரிகா? இவர்களெல்லாம் பதவியையிழந்தபின் குற்றம் சாட்டுபவர்கள். அனுராவுக்கும் ஒரு சந்தர்ப்பம். இல்லையெனில் பத்தோடு பதினொன்று! நீங்கள்தான் ஆட்சிக்கு வந்தாலும், தமிழர் பிரச்சனை முழுதாக தீர்க்க முடியாது, இதுதான் யதார்த்தம். ஆரம்பத்தில் விட்டு தவறு, மீண்டும் சரிசெய்வது முடியாத காரியம்.

  • Replies 103
  • Views 4.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Thumpalayan
    Thumpalayan

    எனக்கு ஜெவிபி யை ஆரம்பித்தில் இருந்தே பிடிப்பதில்லை, ஆனால் இப்போது அவர்களின்நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது. எல்லா அரசியல் கடசிகளையும் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. இர

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    நிச்சயமாக குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிலும் இவர்களின் குழு…. பெருமளவில் போதைப் பொருள் கடத்தல், கொலை என்று…. தங்களுடைய பணத் தேவைக்கும், சொகுசு வாழ்க்கைக்க

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    1988 முதல் 1990 வரை தெற்கில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கவே இந்திய இராணுவம் வருகிறது, ஆகவே அவர்களை திருப்பியனுப்புங்கள் என்று கோரி

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-200.jpg?resize=750%2C375&ssl

கிளிநொச்சிக்கு அழைத்து செல்லபடும் இஷாரா செவ்வந்தி!

ஒருங்ககமைக்கப்பட்ட குற்ற கும்பலை சேர்ந்த  கணேமுல்ல சஞ்சீவ  கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவிலில் உள்ள இஷாரா செவ்வந்தி விசாரணைக்காக கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இஷாரா செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்படும் விசாரணையில் பல தகவல்கள் வெளிவருகின்றன .

அதன்படி  சஞ்சீவ கொலைக்குப் பின்னர் அவர் பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தற்போது கிளிநொச்சி பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் இஷாராவைப் போன்ற தோற்றமுடைய ஒரு இளம் பெண்ணைத் தேடிய ஜப்னா சுரேஷ், ‘தக்ஷி’ என்ற பெண்ணைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

அவருக்கு சிங்களம் பேசத் தெரியாத நிலையில், வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகவும் கூறி சுரேஷ் அந்த பெண்ணை நேபாளத்திற்கு அழைத்துச் சென்றதாக விசாரணையல் தெரியவந்ததாக   பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தக்ஷிக்கு தெரியாமலேயே அவர் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

https://athavannews.com/2025/1450767

  • கருத்துக்கள உறவுகள்

தக்ஷியை ஏமாற்றி நேபாளத்திற்கு அழைத்துச் சென்றேன் - இஷாரா செவ்வந்தி

20 Oct, 2025 | 03:36 PM

image

இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட தக்ஷி என்ற பெண் தொடர்பில் இஷாரா செவ்வந்தி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. 

இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். 

நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். 

இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்”, தக்ஷி என்ற பெண் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். 

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில், இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இஷாராவின் முகத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட பெண் ஒருவரை தேடி வந்த காலப்பகுதியில் “ஜாஃப்னா சுரேஷ்” என்பவருக்கு தக்ஷி என்ற பெண் அறிமுகமானதாகவும், வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி தக்ஷியை ஏமாற்றி நேபாளத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

தக்ஷி என்ற பெண்ணுக்கு பெரிதளவு சிங்கள மொழி தெரியாததால் அவருக்கு எதுவும் கூறாமல் அவரை நேபாளத்திற்கு ஏமாற்றி அழைத்துச் சென்றதாக இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

இதனையடுத்து  இஷாரா செவ்வந்தி கிளிநொச்சியில் தலைமறைவாக இருந்த இடத்தை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/228205

  • கருத்துக்கள உறவுகள்

“கணேமுல்ல சஞ்சீவ”வை கொலை செய்ய உடந்தையாக இருந்ததற்கு காரணம் இதுதான் - இஷாரா செவ்வந்தி

20 Oct, 2025 | 04:09 PM

image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ”வை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தமைக்கான காரணத்தை இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார். 

“எனக்கு ஐரோப்பாவுக்கு செல்ல ஆசை. பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கெஹெல்பத்தர பத்மே' என்பவர் என்னை ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்தார். அதனால் தான் நான் பணத்தை பெற்றுக்கொள்ளாமல்  'கணேமுல்ல சஞ்சீவ'வை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தேன்“ என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

“நேபாளத்தில் தலைமறைவாக இருக்கும் போது ஐரோப்பாவுக்கு செல்வதற்காக போலி கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டது“ எனவும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. 

இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். 

நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். 

இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்”, தக்ஷி என்ற பெண் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். 

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/228222

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாட்டு மோகத்தை தூண்டி, ஒரு அப்பாவியை பலிக்கடா ஆக்கியுள்ளார்கள்.

பாவம் செய்திகளில் குடு கும்பலோடு ஒருவராக படம் எல்லாம் வந்து அசிங்கபட்டுள்ளார் தக்‌ஷி.

இதற்கு துணைபோன ஜப்னா சுரேஸ்சுக்கு உண்மை தெரிந்தும், இந்த பெண்ணை இப்படி ஏமாற்றி உள்ளான் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

565133513_802168072561625_39182477711673

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

550311437_1260437199444650_2722192480180

எனக்கு ஐரோப்பாவுக்கு செல்ல ஆசை. கெஹெல்பத்தர பத்மே என்னை, ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்தார். அதனால் தான் நான் 'கணேமுல்ல சஞ்சீவ'வை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தேன் - செவ்வந்தி

Jaffna Muslim 

  • கருத்துக்கள உறவுகள்

564602376_2123463708404251_3210906869893

தெற்கின் அரசியல் சூத்திரம்

அம்பலம் ஆகுமா |||||•••••••••

••••••••••••••••••••••••••••••

செவ்வந்தி மித்தெனிய சென்று தப்பிச் செல்ல மனம்பேரியின் உதவி பெற்றாரா?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நேபாளத்தில்.. தமிழினி எனும் பெயரில் அறிமுகமாகி கைதான செவ்வந்தி பாதாளக் குழு தற்போது வெவ்வேறு விசாரணை குழுக்களினால் துருவித் துருவி தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன

கனேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு இலங்கை பாதுகாப்புத் துறைக்கு சவாலாக தண்ணி காட்டிய செவ்வந்தி, பெகோ சமந்த பத்மேயின் உதவியுடன் நீர்கொழும்புக்கு தப்பிச் சென்று தனது சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார்.

செவ்வந்தி மித்தெனியவுக்கு தப்பிச் சென்று.. அங்கு யார் யாருடைய உதவிகளைப் பெற்றுள்ளார் என்பதையும்... இந்தியாவுக்கும், நேபாளத்துக்கு தப்பிச் சென்றார்.

அத்துடன் கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற கொலைக்கு 12 மணித்தியாலங்களுக்கு முன்பு ராஜபக்ஷ வலவ்வையின் காவல்காரன் கஜ்ஜா தனது பிள்ளைகளுடன் கொலை செய்யப்படல் போன்றதுடன்...

கஜ்ஜா கொலைக்கு மனம்பேரியுடன் தொடர்புபட்டு ஆயுதங்களை வழங்கிய பெகோ சமந்த அடுத்து வந்த பாதாள சம்பவங்களுக்கும் மனம்பேரியுடன் இணைந்து செயல்பட்டாரா?

மனம்பேரி தொடர்பு இல்லாமல் செவ்வந்தி தப்பித்திருக்க முடியாது என பாதுகாப்புதரப்பு தீவிரமாக நம்புவதுடன்... கஜ்ஜா மற்றும் செவ்வந்தி இடையிலான தொடர்புகள் வெளிவந்தால் தெற்கு அரசியலின் ஆயுத பாதாள கொலைக் கலாசாரத்தின் இரகசியங்கள் வெளி வந்து விடலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது

Fais Journalist 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வெளி நாட்டு மோகத்தை தூண்டி, ஒரு அப்பாவியை பலிக்கடா ஆக்கியுள்ளார்கள்.

பாவம் செய்திகளில் குடு கும்பலோடு ஒருவராக படம் எல்லாம் வந்து அசிங்கபட்டுள்ளார் தக்‌ஷி.

இதற்கு துணைபோன ஜப்னா சுரேஸ்சுக்கு உண்மை தெரிந்தும், இந்த பெண்ணை இப்படி ஏமாற்றி உள்ளான் என எண்ணுகிறேன்.

ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம்.

தக்சியின் (முன்னாள்) புரியன் சலீம் என்ற இஸ்லாமியப் பெயரில் நடமாடும் போதைபொருள் வியாபாரி. இது ஒரு பெரிய நெட்வேர்க். தக்சியை கசக்கிற கசக்கில பல உண்மைகள் வெளிவரும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம்.

தக்சியின் (முன்னாள்) புரியன் சலீம் என்ற இஸ்லாமியப் பெயரில் நடமாடும் போதைபொருள் வியாபாரி. இது ஒரு பெரிய நெட்வேர்க். தக்சியை கசக்கிற கசக்கில பல உண்மைகள் வெளிவரும்!

ஓ..,அப்படியா😡

தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நானும் “கமாண்டோ சலிந்து”வும் மித்தெனியவில் இருந்த போது “கெஹெல்பத்தர பத்மே” எங்களை உடனடியாக கொழும்புக்கு செல்லுமாறு கூறினார் - இஷாரா செவ்வந்தி

20 Oct, 2025 | 04:33 PM

image

நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

' பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ”வை படுகொலை செய்வதற்கு முன்னைய நாள் அதாவது பெப்ரவரி 18 ஆம் திகதி அன்று நானும் “கமாண்டோ சலிந்து”வும் மித்தெனிய பிரதேசத்தில் தங்கியிருந்தோம். இதன்போது “கெஹெல்பத்தர பத்மே” என்பவர் எங்களை உடனடியாக கொழும்புக்கு செல்லுமாறு கூறினார். பின்னர் நானும் “கமாண்டோ சலிந்து”வும் கொழும்புக்கு சென்றோம். இதனையடுத்து நான் சட்டத்தரணி வேடத்தில், புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சென்று “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை கொலை செய்ய உதவி செய்தேன்' என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

இஷாரா செவ்வந்தியும் “கமாண்டோ சலிந்து”வும் அருண விதானகமமகே ஹேவத் கஞ்சா என்பரை கொலைசெய்வதற்காக மித்தெனியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பின்னர் திட்டம் மாற்றப்பட்டு “கணேமுல்ல சஞ்சீவ”வை கொலைசெய்வதற்காக இருவரும் கொழும்புக்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. 

இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். 

நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். 

இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்”, தக்ஷி என்ற பெண் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். 

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/228226

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

வெளி நாட்டு மோகத்தை தூண்டி, ஒரு அப்பாவியை பலிக்கடா ஆக்கியுள்ளார்கள்.

பாவம் செய்திகளில் குடு கும்பலோடு ஒருவராக படம் எல்லாம் வந்து அசிங்கபட்டுள்ளார் தக்‌ஷி.

இதற்கு துணைபோன ஜப்னா சுரேஸ்சுக்கு உண்மை தெரிந்தும், இந்த பெண்ணை இப்படி ஏமாற்றி உள்ளான் என எண்ணுகிறேன்.

எனக்கும் இது கவலையாக தான் இருந்தது தமிழ் பிரதேசத்தில் சிங்களம் தெரியாது என்று ஒரு தமிழன் ஜப்னா சுரேஸ் ஏமாற்றி இருக்கிறானே

தக்‌ஷியை தாங்கள் திட்டம் போட்டு ஏமாற்றினோம் என்று தான் செவ்வந்தி சொல்லியுள்ளாள்.தக்‌ஷி சொல்லியிருக்கிறா தனக்கு நேபாளத்தில் இருந்து ஐரோப்பா செல்ல ஜேகே பாய் ஏற்பாடுகள் செய்வார் என்று சொல்லபட்டதாம்.

ஐரோப்பா செல்ல என்றால் முதலாவது யுகே அல்லது சுவிஸ் பிரானஸ் தானே 😂

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இஷாரா செவ்வந்திக்கு உதவியவர்கள் கைது!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை கொலைசெய்த பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு இஷாரா செவ்வந்திக்கு உதவி செய்ததாக கூறப்படும் 7 சந்தேக நபர்கள் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த கிளிநொச்சி பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே  சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. 

இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். 

நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். 

இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்” உட்பட மேலும் பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். 

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இஷாரா செவ்வந்திக்கு உதவியவர்கள் கைது! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

நடுகடலில் கதறினேன்: செவ்வந்தி

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு வேறொரு பெண்ணுடன் ஒரு சிறிய படகில் மேற்கொண்ட பயணம் ஒரு பயங்கரமான அனுபவமாகவும், அது மிகவும் சோர்வான பயணம் என்றும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

பயணத்தின் போது, படகு கவிழ்ந்து, தான் மூழ்கிவிடுவேனோ என்ற பயத்தில் தான் அலறினேன். படகு கவிழ்ந்து தான் மூழ்கிவிட்டதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள்  இஷாரா செவ்வந்தியை கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் சென்று, இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு முன்பு அவர் தங்கியிருந்த இரண்டு வீடுகளில் சோதனை நடத்தினர்.

இஷாரா செவ்வந்தி தங்கியிருந்த வீடுகளில் ஒன்றில் தங்கியிருந்த ஒருவரை கொழும்பிலிருந்து சென்ற காவல்துறை குழு கைது செய்தது.

மற்றொரு வீடு பூட்டப்பட்டிருந்ததாகவும், அந்த நேரத்தில் யாரும் வீட்டில் இல்லை என்றும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tamilmirror Online || நடுகடலில் கதறினேன்: செவ்வந்தி

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2025 at 23:37, goshan_che said:

இனவாதத்தை பொறுத்தவரை…..

தமிழருக்கு எதுவும் கொடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டில்…..மகிந்தவுக்கும் அனுரவுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை.

இப்படி சிந்தித்த ஒரே சிங்கள தலைவர் டாக்டர் விக்ரமபாகு கருணாரட்ன மட்டுமே.

ஆனால் அவரை சிங்களவர்கள் ஒரு மாநகரசபை உறுப்பினராகா கூட ஆக்கவில்லை.

இதுதான் மாறாத சிங்கள பேரினவாதம்.

இது மாறிவிட்டது….

அல்லது அனுர மாற்ற முயல்கிறார் என்பதற்கு ஒரு குண்டு மணி அளவு கூட ஆதாரம் இல்லை.

நீங்கள் சும்மா கற்பனையில் அடித்து விடும் கதைகள் மட்டுமே.

எனக்கு ஜெவிபி யை ஆரம்பித்தில் இருந்தே பிடிப்பதில்லை, ஆனால் இப்போது அவர்களின்நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது.

எல்லா அரசியல் கடசிகளையும் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. இருந்த தேய்வுகளில் அனுர சிறந்த தெரிவு. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு தீர்வு வரப்போவதில்லை. செம்மணிக்கு நீதி கிடைக்கப்போவதில்லை, காணாமல் போனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. இப்போதைய நிலையில் மக்களின் பொருளாதாரம் மேம்பாட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்குவதே தேவையானது.

காலா காலமாக புரையோடிப் போயிருந்த ஊழல் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. போலீஸ் உட்பட தவறு செய்தாலும் முறையிட முடிகிறது. நீதித்துறை ஓரளவு சுயாதீனமாக இயங்குகிறது. சுற்றுலாத்துறை உட்பட நாட்டின் அந்நிய செலாவணி நன்கு அதிகரித்திருக்கிறது. நாட்டை விட்டுப் போன பலர் திரும்ப வருகிறார்கள். அந்நிய முதலீடுகள் வருகின்றன. நாடு முன்பை விட சுத்தமாக இருக்கிறது.

காசிருந்தா வெள்ளவத்தையில் ஒரு பிளட் எடுத்து விடுங்கோ, ஓய்வு காலங்களை ஊரிலயும் கொழும்பிலயும் கழிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் கொழும்பில் அப்பாட்மெற் வாங்கவும் யாழ்பாணத்தில் புது வீடு கட்டவும் , கொலிடேஸ்சில் செல்வதற்கும் 10 - 12 வருடங்களுக்கு முன்பே தொடங்கி விட்டார்கள். அதற்கு அநுரகுமார திசாநாயக்க ஆட்சி வேண்டியது இல்லை.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வந்தி விவகாரம்: ஐவர் கைது

image_e1ce1d3e84.jpg

திட்டமிட்ட குற்றத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் உள்ள வீட்டின் உரிமையாளர், சந்தேக நபரை தப்பிச் செல்ல ஏற்பாடு செய்தவர் என்றும், படகை வழங்கியவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஒன்பது பேரை பொலிஸார்இதுவரை கைது செய்துள்ளனர்.

பிப்ரவரி 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த பின்னர், தொடங்கொட மற்றும் மித்தெனிய பகுதிகளில் இருந்த சந்தேக நபரான செவ்வந்தி, மே 6 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நாளில் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வழங்கிய நபருக்கு அதற்காக 2.5 மில்லியன் ரூபாய் பணம் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு உதவுவதற்காக, படகை வழங்கிய நபர் மூன்று இளைஞர்களை வேலைக்கு அமர்த்தியிருப்பது விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/செவ்வந்தி-விவகாரம்-ஐவர்-கைது/175-366642

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Thumpalayan said:

எனக்கு ஜெவிபி யை ஆரம்பித்தில் இருந்தே பிடிப்பதில்லை, ஆனால் இப்போது அவர்களின்நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது.

எல்லா அரசியல் கடசிகளையும் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. இருந்த தேய்வுகளில் அனுர சிறந்த தெரிவு. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு தீர்வு வரப்போவதில்லை. செம்மணிக்கு நீதி கிடைக்கப்போவதில்லை, காணாமல் போனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. இப்போதைய நிலையில் மக்களின் பொருளாதாரம் மேம்பாட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்குவதே தேவையானது.

காலா காலமாக புரையோடிப் போயிருந்த ஊழல் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. போலீஸ் உட்பட தவறு செய்தாலும் முறையிட முடிகிறது. நீதித்துறை ஓரளவு சுயாதீனமாக இயங்குகிறது. சுற்றுலாத்துறை உட்பட நாட்டின் அந்நிய செலாவணி நன்கு அதிகரித்திருக்கிறது. நாட்டை விட்டுப் போன பலர் திரும்ப வருகிறார்கள். அந்நிய முதலீடுகள் வருகின்றன. நாடு முன்பை விட சுத்தமாக இருக்கிறது.

காசிருந்தா வெள்ளவத்தையில் ஒரு பிளட் எடுத்து விடுங்கோ, ஓய்வு காலங்களை ஊரிலயும் கொழும்பிலயும் கழிக்கலாம்

தமிழருக்கு எதுவும் நடக்காது ஆனால் நாடு ஒட்டுமொத்தமாக நல்லாக இருக்கிறது அதுவே எனக்கு போதும் - என்ற இந்த நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது.

ஆனால் இங்கே பலரிடம் இது இல்லை.

அனுரவுக்கும் ஆதரவு…

ஆனால் தாம் தமிழ் தேசிய ஆர்வலர் என காட்டி கொள்ளவும் வேண்டும்….

ஆகவே அனுர கட்டம் கட்டமாக இனவாத பேய்க்கு முடிவாரி பூச்சூடுவார் என கதை அளப்ப்போர் மீதுதான் என் விமர்சனம்.

பிகு

வெள்ளவத்தை ஓவர் கிரவுடட், அங்குலான வரை இப்போ எங்கள் ஆட்கள் போகிறார்கள். இனி பாணதுற தான்😂.

கொஞ்சம் விலை அதிகம் ஆனால் வாதுவ போன்ற இடங்களில் அதி சொகுசு மாடிகள் கடற்கரையோடு கட்டுகிறார்கள். ஸ்பா, சுவிம்பூல் எல்லாமும் இருக்குமாம்.

பாப்பம் சஞ்சீவ் சூசைபிள்ளை மாதிரி ஏதாவது மெகா ஊழல் செய்துவிட்டு ஓடிவிட வேண்டியதுதான்😂.

  • கருத்துக்கள உறவுகள்

இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கமைய பிரதான ஆட்கடத்தல்காரர் கைது!

22 Oct, 2025 | 03:23 PM

image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களை நாடு கடத்துவதற்கு உதவி செய்த பிரதான ஆட்கடத்தல்காரர் ஒருவர் கிளிநொச்சி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த கிளிநொச்சி பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே  சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலைசெய்யப்பட்டதையடுத்து இஷாரா செவ்வந்தி சுமார் மூன்று நாட்களாக கிளிநொச்சியில் தலைமறைவாக இருந்துள்ள நிலையில் குறித்த ஆல்கடத்தல்காரரின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து நேபாளத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குறித்த ஆல்கடத்தல்காரர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பலரை இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. 

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். 

நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். 

இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்” உட்பட மேலும் பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். 

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/228387

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு என்று பொங்கல் இருக்கின்றது . தமிழ் முஸ்லிம்களுக்கு ரமடான் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் சிங்களவர்களுக்கு பெரகரா என்று இருக்கின்றது ஆனால் ஸ்ரீ லங்கனுக்கு என்று கொண்டாடுவதற்கு என்ன இருக்கின்றது என்று கவலைபட்ட அனுரகுமார திசாநாயக்க டிசம்பர் 12 , 13 மற்றும் 14 ல் கொழும்பில் பிரமாண்டமான ஸ்ரீ லங்கன் தினம் கொண்டாட இருக்கின்றார். 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆனால் ஸ்ரீ லங்கனுக்கு என்று கொண்டாடுவதற்கு என்ன இருக்கின்றது என்று கவலைபட்ட அனுரகுமார திசாநாயக்க .

அப்ப பெப்ரவரி 4 ம் தேதி பூட்டான்காரனுக்கா😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

தமிழருக்கு எதுவும் நடக்காது ஆனால் நாடு ஒட்டுமொத்தமாக நல்லாக இருக்கிறது அதுவே எனக்கு போதும் - என்ற இந்த நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது.

ஆனால் இங்கே பலரிடம் இது இல்லை.

அனுரவுக்கும் ஆதரவு…

ஆனால் தாம் தமிழ் தேசிய ஆர்வலர் என காட்டி கொள்ளவும் வேண்டும்….

ஆகவே அனுர கட்டம் கட்டமாக இனவாத பேய்க்கு முடிவாரி பூச்சூடுவார் என கதை அளப்ப்போர் மீதுதான் என் விமர்சனம்.

பிகு

வெள்ளவத்தை ஓவர் கிரவுடட், அங்குலான வரை இப்போ எங்கள் ஆட்கள் போகிறார்கள். இனி பாணதுற தான்😂.

கொஞ்சம் விலை அதிகம் ஆனால் வாதுவ போன்ற இடங்களில் அதி சொகுசு மாடிகள் கடற்கரையோடு கட்டுகிறார்கள். ஸ்பா, சுவிம்பூல் எல்லாமும் இருக்குமாம்.

பாப்பம் சஞ்சீவ் சூசைபிள்ளை மாதிரி ஏதாவது மெகா ஊழல் செய்துவிட்டு ஓடிவிட வேண்டியதுதான்😂.

அனுர விரும்பினாலும் ஒன்றுமே முடியாது. ஆனால் மகிந்த குரூப்புக்கு இருக்கு ஆப்பு. ஒருவரின் சொல் பேச்சையும் கேக்காமல் விஜேராமயில இருந்த மகிந்தவை எழுப்பி அனுப்பியதே ஒரு வெற்றி. அதோட மகிந்த அரசில் இருந்த பல ஊழல் அமைச்சர்கள் எம்பி இப்ப சிறையில. பந்து பல கால்களுக்கு மாறித்தான் கோல் அடிக்க முடியும்.

அண்ணை, வெள்ளவத்தை தானே எங்கட இதய பூமி. சண்முகாசில காலம்பிற மசாலா தோசை, றோயல் பேக்கரில மத்தியானம் சோறு கறி, இரவு ஒமேகால ஒரு பியர், சவொயில படம், தமிழ்ச்சங்க புத்தக வெளியீடு, கடற்கரையில ஒரு நடை. அங்கால தெற்குப்பக்கம் தள்ளிப் போனா உதெல்லாம் கஸ்டமண்ணை. ஒருகாலத்தில விக்கவேணும் எண்டாலும் உடனேயே விக்கலாம், காசையும் வெளிநாட்டிலேயே வாங்கி எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

🎉 ஸ்ரீ லங்காவின் புதிய பண்டிகை – டிசம்பர் 12, 13 & 14! 🇱🇰
https://www.youtube.com/shorts/rkdwz1WDazA

அநுரகுமார திசாநாயக்க ஆதரவு தமிழ் தேசியவாதிகள் படு பிஸி 😂

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வந்திக்கு படகு சேவை – அந்தோணிப்பிள்ளை ஆனந்தனிடம் ஆயுதங்கள் மீட்பு!

adminOctober 23, 2025

திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு படகுகளை வழங்கிய நபரின் கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு-கண்டி சாலையில் உள்ள திஹாரியவின் ஓகோடபொல பகுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்தோணிப்பிள்ளை ஆனந்தன் 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் சந்தேக நபர் விசாரணையின் போது சுட்டிக்காட்டியதன் பேரில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சந்தேக நபர் 19.04.2019 அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களுடன் கடல் வழியாகத் தப்பிச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் சிலோன் பாய் எனப்படும் முகமது ரிஸ்வி என்ற நபரின் ஆலோசனையின் பேரில் சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வசதிகள் வழங்கப்பட்டதாக மேலும் தெரியவந்துள்ளது.

https://globaltamilnews.net/2025/221869/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். அரியாலையில் தங்கிய இஷாரா - கைதுசெய்யப்பட்ட ஆனந்தன்: 5 லட்சத்துக்கு நடந்த கடத்தல்

இஷாரா செவ்வந்தி இந்தியா செல்ல உதவிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் இன்று அல்லது நாளை கைது செய்ய்ப்படுவார் என கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லும் ஒரு வலையமைப்பை அடையாளம் கண்டுள்ளது.

இந்த குழுவின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உட்பட சுமார் 100 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

குழுவின் மூளையாகச் செயல்

இந்தக் கும்பலைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். அரியாலையில் தங்கிய இஷாரா - கைதுசெய்யப்பட்ட ஆனந்தன்: 5 லட்சத்துக்கு நடந்த கடத்தல் | Ishara Stayed In Ariyalai Jaffna Anandan Will Soon

சகோதரர்களில் மூத்தவரான ஆனந்தன், இந்தக் குழுவின் மூளையாகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் பிடிக்கப்பட்டு இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 6 பேரில் இஷாரா செவ்வந்தியும் ஆனந்தனால் இந்தியாவிற்குக் கடத்தப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவால் கைது

யாழ்ப்பாணத்தின் அரியாலையில் இருந்து இஷாரா செவ்வந்தி ஒரு மீன்பிடிப் படகில் ஏற்றப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டதுடன் அங்கு அழைத்துச் செல்ல அவரிடம் ரூ. 5 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

யாழ். அரியாலையில் தங்கிய இஷாரா - கைதுசெய்யப்பட்ட ஆனந்தன்: 5 லட்சத்துக்கு நடந்த கடத்தல் | Ishara Stayed In Ariyalai Jaffna Anandan Will Soon

அந்தப் பணத்தை ஜே.கே. பாய் கொடுத்தது தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஆனந்தன் என்ற கடத்தல்காரரின் இரண்டு வீடுகளில் தங்கியிருந்துள்ளார்.

இஷாரா செவ்வந்திக்கு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் வழங்கி நாட்டை விட்டு வெளியேற உதவிய நான்கு பேரும் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தங்குமிடம்

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்கு எடுத்துச் சென்ற படகையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்தப் படகையும் ஆதாரமாக காவல்துறையினரின் காவலில் எடுக்கப்பட உள்ளது.

யாழ். அரியாலையில் தங்கிய இஷாரா - கைதுசெய்யப்பட்ட ஆனந்தன்: 5 லட்சத்துக்கு நடந்த கடத்தல் | Ishara Stayed In Ariyalai Jaffna Anandan Will Soon

இவ்வாறு, ஆனந்தன் சகோதரர்களின் பாதுகாப்புடன் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு ஜே.கே. பாய் மற்றும் சிலோன் பாய் ஆகியோர் இந்தியாவில் தங்குமிடம் மற்றும் வசதிகளை வழங்குகிறார்கள்.

விசாரணையில், ஆனந்தனும் அவரது சகோதரர்களும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக காவல்துறையினரால் தேடப்படுபவர்களை இந்த வழியில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவும் வகையில் 500,000 முதல் 1000,000 ரூபாய் வரை வசூலிப்பது தெரியவந்துள்ளது.

https://ibctamil.com/article/ishara-stayed-in-ariyalai-jaffna-anandan-will-soon-1761124302

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.