Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்

16 October 2025

1760582563_1355590_hirunews.jpg

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பது என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 

இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில், தமிழ் கட்சிகளின் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. 

சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட முக்கிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் கருத்துரைத்தார். 

இதன்போது, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்தார்.

https://hirunews.lk/tm/425595/discussion-on-tamil-parties-joining-forces-in-the-jaffna-provincial-council-elections

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டிகள் கட்டிய மடம் போலுள்ளது. 😁

இவர்களுக்கு, கட்டுக்காசும் கிடைக்குமோ தெரியாது. 😂

முன்னாள் ஒட்டுக் குழுக்களும்… தேர்தல் என்றவுடன், “நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு” மோப்பம் பிடித்து வந்து விடுகின்றார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில், தமிழ் கட்சிகளின் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. 

இதற்க்கு மேல என்ன விளக்கம் வேணும்

முன்னாள் ஒட்டுக் குழுக்களும்… தேர்தல் என்றவுடன், “நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு” மோப்பம் பிடித்து வந்து விடுகின்றார்கள். 🤣

இல்லை இவங்களோட மிக அவதானமாக இருக்க வேணும். உவையிண்டை வரலாற்றை தெரியும் தாணே.

Edited by ரதன்
திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம் - கூடி ஆராய்ந்தது தமிழ் கட்சிகள்

16 Oct, 2025 | 02:05 PM

image

மாகாண சபை தேர்தலை தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து எதிர்கொள்வது என்பது தொடர்பில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கட்சிகளுக்கு இடையிலான கூட்டம் நேற்று புதன்கிழமை (15) நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டத்திற்கு தமிழ் மக்கள் கூட்டணியினருக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர்கள் சமூகமளிக்கவில்லை எனவும், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூட்டத்திற்கு வருவதாக கூறிய நிலையில் இறுதி நேரத்தில் சுகவீனம் காரணமாக கூட்டத்திற்கு வருகை தர முடியவில்லை என அறிவித்து, கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.

மாகாண சபை தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வடமாகாண சபை தேர்தலை தமிழ் காட்சிகள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் ஆராயும் முகமாகவே இக் கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

குறித்த கூட்டத்தில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் உள்ளிட்டவர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். 

IMG-20251015-WA0090.jpg

IMG-20251015-WA0092.jpg

IMG-20251015-WA0093.jpg

https://www.virakesari.lk/article/227880

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்

16 October 2025

1760582563_1355590_hirunews.jpg

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பது என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 

இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில், தமிழ் கட்சிகளின் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. 

சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட முக்கிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் கருத்துரைத்தார். 

இதன்போது, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்தார்.

https://hirunews.lk/tm/425595/discussion-on-tamil-parties-joining-forces-in-the-jaffna-provincial-council-elections

டைரக்சன் தயாரிப்பு கதைவசனம்

இந்தியா.

28 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு, என்ன… மண்டையிலையா சுகமில்லை. 😂

அப்படி என்றால்…. மந்திகை அல்லது அங்கோடையில் கொண்டு போய் காட்டினால் சுகம் வந்து விடும். 🤣

முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரனை தெரிவு செய்தால்

சுமந்திரன் களமிறங்குவார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரனை தெரிவு செய்தால்

சுமந்திரன் களமிறங்குவார்.

முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளும்,

முதலமைச்சர் போட்டியில் இருக்கும் போது…

சுமந்திரனை முதலமைச்சர் வேட்பாளாராக அறிவிக்க இந்தியா சம்மதிக்காது.

இதிலும் சுமந்திரன்… “இலவு காத்த கிளி” தான்.

சுமந்திரனுக்கு இனி அரசியலில் எதிர்காலம் இல்லை. அதற்கு எப்போதோ முடிவுரை எழுதப்பட்டு விட்டது.

“தான் வெட்டிய குழியில்… தானே விழுந்து உத்தரிக்கும்” சீவன் என்றால் அது சுமந்திரன் தான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கற்காலத்துக்கு போகப் போகினம்..இனி முதல்லையிருந்து இரத்தப்பொட்டு வைப்போ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் திருந்தப்போவதில்லை.இந்தியாவின் ஆட்டத்துக்கு ஆடும் பொம்மைகள். இந்தியா மாகாணசபை முதல்வராக ஒரு பொம்மை முதலமைச்சரைத் தெரிவு செய்வதில் காட்டும் ஆர்வத்தை விட்டு விட:டு 13ஆம் திருத்தச்சட்டதை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம் அதற்கு இந்தியாவுக்கு கடப்பாடு உள்ளது.சமுன்னணியைக் கூப்பிட வேண்டாம் என்று இந்தியா சொல்லி விட்டதோ?அது சரி வரதராஜப்பெருமாள் பிரகடனப்படுத்திய தமிழீழப் பிரகடனம் என்னாச்சு?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புலவர் said:

காத்தோடு போயாச்சு...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

கற்காலத்துக்கு போகப் போகினம்

ஒரு காலத்தில் பலர் இலங்கை அரசுகளுடன் இருந்தவர்கள்

இப்போது அரசிற்கு எதிரணியாக வெளியே வருகின்றார்கள்

எல்லாமே தலை கீழாக மாறியது போல ஒரு மாயை உருவாக்கப்படுகின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

எங்க எங்கண்ட பார் ஶ்ரீதரனைக் காணேல்ல்லை?🤔

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, வாலி said:

எங்க எங்கண்ட பார் ஶ்ரீதரனைக் காணேல்ல்லை?🤔

விளிம்புநிலை தமிழ் மக்களின் உயர்வுக்காக பாடுபடுகின்ற நேர்மையான தலைவர் அவர் இதற்குள் வரமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

ஒரு காலத்தில் பலர் இலங்கை அரசுகளுடன் இருந்தவர்கள்

இப்போது அரசிற்கு எதிரணியாக வெளியே வருகின்றார்கள்

எல்லாமே தலை கீழாக மாறியது போல ஒரு மாயை உருவாக்கப்படுகின்றதா?

என்ன போதைபொருள் கடத்தல்மன்னர்கள் மட்டுமா தேசிய ந்ல்லிணக்கத்துடன் செய்ல்பட வேணும் என்ற சட்டம் இருக்கா? மார்று கொள்ள்கை மாணிக்கங்கள் நாங்களும் தேசிய நல்லிணக்கத்துடன் செயல் பட்டு தீவை வளர்ர்சி பாதையில் நடத்துவோமல்ல...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.