Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

adminOctober 17, 2025

suresh-premachanran.jpg?fit=1170%2C659&s

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , பிறகு 13ஆம் திருத்த சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே உண்மை என  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

சவிற்ஸ்லாந்தில் இடம் பெற்ற சமஸ்டி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது சுவிஸ் அரசாங்கம் சமஸ்டித் தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்க இருப்பது போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்

ஆனால் உண்மை அதுவல்ல அங்கே பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்களை சுவிஸ் அரசாங்கம் அழைத்தது சமஸ்டி தொடர்பான ஒரு கற்பிதத்தை வழங்குவதற்கு மாத்திரமே தவிர வேறு எதற்கும் அல்ல.

அங்கு அதிகம் வந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் எனவே அவர்கள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விடயங்களை முன் கொண்டு செல்வதாக தெரிவித்தார்கள்.

ஆனால் அது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை எனவே இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அத்துடன் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி எமக்கு கிடைக்கின்ற குறைந்தபட்ச அதிகாரமான மாகாண சபை தேர்தலை நடத்தி அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.  அதனால் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாங்கள் அதிலே போட்டியிடுவோம். தேர்தல் தொடர்பில் பேசப்பட வேண்டும் என்று கூறுகிற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 13ஆம் திருத்தச் சட்டம் தேவை இல்லை என கூறி வருகின்றனர். எனவே இது தொடர்பில் அவர்களுக்கு சரியான கருத்துக்கள் இல்லை என்றார்.

https://globaltamilnews.net/2025/221656/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியவையும் அதன் அடிவறுடிகளையும் தவிர யாருமே 13 ஏற்க்கவில்லை. 13 என்ன நடந்தது எண்டு தெரியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

13 ம் திருத்த சட்டத்தனுன் மூலம் மாகாணசபைகள் அமைக்கபடுவதை மட்டும் தான் அண்ணன் கஜேந்திரகுமார். எதிர்கிறார். மாகாணசபை தேர்தலையோ அதில் வரும் பதவிகளையோ அல்ல. மாகாணசபை தேர்தல் வந்து நம்மவர்களை போட்டியிட வைத்தால் தானே நம்மோடு நாலு பேர் நிப்பாங்க. அப்பப்ப போராட்டம் என்று நாம் அறிவித்தால் வந்து கோஷம் போடுவாங்க. இது கூட தெரியாமல் நீங்க ஏம்பபா சலூன் கடைக்கு வாறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

13 ம் திருத்த சட்டத்தனுன் மூலம் மாகாணசபைகள் அமைக்கபடுவதை மட்டும் தான் அண்ணன் கஜேந்திரகுமார். எதிர்கிறார். மாகாணசபை தேர்தலையோ அதில் வரும் பதவிகளையோ அல்ல. மாகாணசபை தேர்தல் வந்து நம்மவர்களை போட்டியிட வைத்தால் தானே நம்மோடு நாலு பேர் நிப்பாங்க. அப்பப்ப போராட்டம் என்று நாம் அறிவித்தால் வந்து கோஷம் போடுவாங்க. இது கூட தெரியாமல் நீங்க ஏம்பபா சலூன் கடைக்கு வாறீங்க.

அவராவது தன்னுடைய கட்சியில் உள்ளவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகப் போட்டியிடுவோம் என்று சொல்கிறார்.அதில் பிழையில்லை.ஆனால் சுரேஸ் சுமத்திரன் போன்ற மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மாகாணசபைத் தேர்தலிலாவது ஏதாவது பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக போட்டியிடுகிறார்கள். முன்ளணி போட்டியிட்டால் தங்கள் வெற்றி வாய்ப்பினை பாதிக்கும் அஞ்சுவதாலேயே இப்படிப் புலம்புகிறார்கள்.13 இல் அதிகாரம் இல்லை என்று சம்பந்தரே திருவாய் மலர்திருக்கிறார். ஆனால் தேர்தல்களில் அவரது கட்சி போட்டியிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புலவர் said:

அவராவது தன்னுடைய கட்சியில் உள்ளவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகப் போட்டியிடுவோம் என்று சொல்கிறார்.அதில் பிழையில்லை.ஆனால் சுரேஸ் சுமத்திரன் போன்ற மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மாகாணசபைத் தேர்தலிலாவது ஏதாவது பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக போட்டியிடுகிறார்கள். முன்ளணி போட்டியிட்டால் தங்கள் வெற்றி வாய்ப்பினை பாதிக்கும் அஞ்சுவதாலேயே இப்படிப் புலம்புகிறார்கள்.13 இல் அதிகாரம் இல்லை என்று சம்பந்தரே திருவாய் மலர்திருக்கிறார். ஆனால் தேர்தல்களில் அவரது கட்சி போட்டியிட்டது.

அப்போ கஜேஸ் ஏன் போன மாகாணசபை தேர்தலை புறக்கணித்தனர்?

அதனால் அவர்கள் ஈட்டிய அரசியல் இலாபம்தான் என்ன?

பொன்னம்பலம் குடும்பத்தின் வாரிசு அரசியலுக்காகவும் கஜனின் ஒற்றை எம்பி கதிரைக்காகவும் நடத்தபடும் கம்பெனிதான் காங்கிரஸ்.

வாரிசு அரசியலை ஒழிப்பதாயின் முதலில் எமது நாட்டில், எமது ஊரில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

அப்போ கஜேஸ் ஏன் போன மாகாணசபை தேர்தலை புறக்கணித்தனர்?

அதனால் அவர்கள் ஈட்டிய அரசியல் இலாபம்தான் என்ன?

பொன்னம்பலம் குடும்பத்தின் வாரிசு அரசியலுக்காகவும் கஜனின் ஒற்றை எம்பி கதிரைக்காகவும் நடத்தபடும் கம்பெனிதான் காங்கிரஸ்.

வாரிசு அரசியலை ஒழிப்பதாயின் முதலில் எமது நாட்டில், எமது ஊரில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

புலிகள் புறக்கணித்த மாகாணசபையை நாமும் புறக்கணிப்போம் என்று கோஷம் எழுப்பினால் பாராளுமன்ற் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என று எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை. மக்கள் திரும்பிக் கூடப் பார்ககவில்லை. இனி இந்த தந்திரத்தை நம்புவது வேலைகாகாது கடைசியில் அதுவும் இல்லை இதுவும் இல்லை என்று இருக்காமல் ஜதார்த்தமக சிந்தித்து இரண்டு பதவிகளையும. பெறுவதே புத்திசாலித்தனமானது என்று இந்த முடிவுக்கு வந்தினர். தமது முதலுக்கு நட்டம் என்றால் மட்டும் இந்த தீவிர தமிழ் தேசிக்காய்கள் ஜதார்த்தமாக சிந்திப்பது வழமை தானே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அதனால் அவர்கள் ஈட்டிய அரசியல் இலாபம்தான் என்ன?

நல்ல கேள்வி முதல்மாகாணசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைகட கூட்டணி போட்டியிடவில்லை.அது போகட்டும் கிழக்குமாகாண சபைத் ரே;தலையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது. அதன்காரணமாக பிள்ளையான் முதலமைச்சர் ஆனார். அடடா வடை போச்சே! என்று அடுத்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டார்கள். அந்தக்காரணம் ஏற்புடையதாகவில்லை. வாரிசு அரசியல் என்று சொல்வதை ஒரளவு ஏற்றுக் கொண்டாலும். ஜீஜீ செய்த மாதிரி கனவான் அரசியலை கஜேந்திரகுமார் செய்யவில்லை. போராட்டக்களங்களில் நிற்கிறார்.பலமுறை தோற்றும் சோரம் போகாத அரசியலைச் செய்கிறார். எவரும் நல்ல அரசியல்வாதியாக இல்லாதிருப்பதால்தான் என்பிபியும் அர்ச்சுனாவும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.வாரிசு அரசியல்மாதிரியே அனைத்து தமிழ்கட்சிளிலும்ஒரே ஆட்களே தொடர்ந்து போட்டியிடுகிறார்கள். இது என்னமாதிரியான அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

நல்ல கேள்வி முதல்மாகாணசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைகட கூட்டணி போட்டியிடவில்லை.அது போகட்டும் கிழக்குமாகாண சபைத் ரே;தலையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது. அதன்காரணமாக பிள்ளையான் முதலமைச்சர் ஆனார். அடடா வடை போச்சே! என்று அடுத்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டார்கள். அந்தக்காரணம் ஏற்புடையதாகவில்லை

கேள்வி நல்ல கேள்வி என்பதால் கேட்டேன்🤣 (பொதுவாக இண்டர்வியூக்களை நான் நடத்தும் போது எவராவது it’s a good question என சொன்னாலே - பதில் தெரியவில்லை, பதில்போல் எதையாவது எப்படி சடையலாம் என யோசிக்க டைம் எடுக்கிறார்கள் என்பதே அர்த்தம்🤣).

ஆனால் நான் தமிழ் காங்கிரசை பற்றி கேள்வி கேட்க நீங்கள் கூட்டணி, கூட்டமைப்பு பற்றி பதில் ஏன் எழுதுகிறீர்கள்.

அவர்கள் பிஸ்கோத்துகள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

கேள்வி காங்கிரசார் பற்றியது.

மீள முயலவும்🤣

2 hours ago, புலவர் said:

ஜீஜீ செய்த மாதிரி கனவான் அரசியலை கஜேந்திரகுமார் செய்யவில்லை

அதுக்கு கனவானாக இருக்க வேண்டுமே🤣.

என்னதான் இருந்தாலும் ஜிஜி கெட்டிக்காரன்.

கோர்ட்டு பக்கம் தலைவைத்தும் படுக்காத பாரிஸ்டருக்குத்தான் கனவான், குணவான், தட்டி வான் எந்த அரசியலும் செய்யத்தெரியாதே🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

போராட்டக்களங்களில் நிற்கிறார்

அது மட்டுமே செய்கிறார்.

மிச்சம் எல்லாம் ஒரு நாடு ஒண்டறை தேசம் என 2009க்கு முன்பே கூட சாத்தியப்படாத கொள்கைகள்தான்.

இவை ஒரு நாளும் கைகூடாது என்பது கஜனுக்கும் தெரியும் ஆனால் உங்களை போல் இருக்கும் 15% யாழ் மாவட்ட வாக்காளரை கவர் பண்ணினால் தனக்கு ஒரு கதிரை நிச்சயம் என கணக்கு போட்டு அதை மட்டுமே செய்கிறார்.

மக்கள் அனுராவிடம் போக கூட்டமைப்பு, மான், மீன் போலவே கஜனும் சம காரணி.

ஒரு எம்பி கதிரையை தவிர 2009 இல் இருந்து கஜன் சாதித்தது என்ன?

கேள்வி வேறு ஆட்களை பற்றி அல்ல.

கஜன் கட்சியின் அறிவிக்கப்படாத யாழ்கள அமைப்பாளர் என்ற வகையில், அந்த கட்சி பற்றி உங்களிடம் கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

13 ஐ கேட்டு தீர்வின் தரத்தை குறைக்கும், சில தமிழ்த்தேசியக் கட்சிகள்

--- ---- ---- -----

தமிழரசுக் கட்சி மதில் மேல் பூனை

2017 இல் மாகாண சபைத் தேர்தலை நிறுத்தியது யார்?

ஜேபிவியும் 2017 இல் இருந்து13 கைவிடலாம் என்ற நிலைப்பாட்டில்

----- ---- -----

இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு அன்று கடும் எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி, 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக ஜனநாயக அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட நாள் முதல், மாகாண சபை தேர்தல்களிலும் போட்டியிட்டு ஆசனங்களை கைப்பற்றி வந்தது.

13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கைத்தீவை பிளவுபடுத்தும் எனவும் தமிழ் ஈழம் அமையும் என்று கோசம் எழுப்பி அன்று எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் மாகாண சபைகள் முறையை நன்றாக அனுபவித்து அதனைத் தங்கள் கட்சி அரசியல் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொண்டது.

2009 ஆண்டு மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில், மாகாண சபைகள் தேவையில்லை. குறிப்பாக 13 ஆவது திருத்தச் சட்டம் அவசியம் இல்லை என்ற தொனியல் ஜேவிபி குறிப்பாக அதன் முன்னாள் தலைவர் அமரர் சோமவன்ச அமரசிங்க மற்றும் பொதுச் செயலாளர் ரில்வின் ரில்வா ஆகியோர் அவ்வப்போது கூறியிருந்தனர்.

2017 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் ஆட்சியின்போது மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டன. ஜேவிபி, தேசிய மக்கள் சக்தியாக தன்னை மாற்றிக் கொண்டு, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஒருபோதும் கோரியதில்லை.

அதாவது, 2017 இல் மாகாண சபைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்ட நாள் முதல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் எதிர்க்கட்சியாக இருந்த காலங்களில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஜேவிபி ஒருபோதும் கேட்டதும் இல்லை ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுமில்லை.

ஆகவே ---

1988 ஆம் ஆண்டு 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்த மன நிலை தற்போதும் ஜேவிபிக்கு உள்ளது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்தாலும், அடிப்படையில் ஜேவிபி என்ற மன நிலை அதுவும் தமிழ் மக்கள் சார்ந்த விவகாரங்களில் அந்த மன நிலை இருப்பதையே சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன.

இப் பின்னணியில் முன்னாள் ஆயுத இயக்கங்களான ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ, ஆகியவை மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என தொடர்ந்து கோருவதுடன் கூட்டங்களையும் யாழ்ப்பாணத்தில் நடத்தி வருகின்றன.

இந்த முன்னாள் இயக்கங்கள் 1988 ஆம் ஆண்டே மாகாண சபை முறைமையை இனப் பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொண்டிருந்தன.

ஆனாலும் விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக போராடியதால், தமது நிலைப்பாட்டை மாற்றி மாகாண சபை முறைமை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது எனவும் ஆனாலும் ஆரம்ப புள்ளியாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கற்பிதம் செய்தன.

ஆனால் --

மிகச் சமீப நாட்களில் மாகாண சபைத் தேர்தல் முறைமை பற்றி அதிகமாக இந்த முன்னாள் இயக்கங்கள் உரையாட ஆரம்பித்துள்ளன.

இந்த முன்னாள் இயக்கங்கள் ---

2022 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியிருந்தன. யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தியது.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோருடன் தொடர்ச்சியாக உரையாடி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரி அக் கடிதத்தை அனுப்பியிருந்தன.

ஆனால் --

அக் கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்குகொள்ளவில்லை. அவர்கள் அதனை கடுமையாக எதிர்த்திருந்தனர். தமிழரசுக் கட்சி சில திருத்தங்களுடன் மோடிக்கு கடிதம் அனுப்பி செயற்பாட்டில் பங்குபற்றியிருந்தது.

ஆகவே, இங்கு புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், 13 ஆவது திருத்தச் சட்டத்தையோ மாகாண சபை முறைமையையோ சிங்கள அரசியல் தலைவர்கள் எவரும் விரும்பில்லை என்பதுதான்.

ஏனெனில் ---

2009 இற்குப் பின்னரான சூழலில் இனப்பிரச்சினை என ஒன்று இல்லை என்பதும், ஆயுதப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அதனை சமாளிக்க அதுவும் இந்தியாவைச் சமாளிக்க இந்த 13 என்பதையும் மாகாண சபை முறைமைகள் என்பதையும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அவ்வப்போது ஆட்சியில் இருந்து சிங்கள தலைவர்கள் நடத்திக் காண்பித்திருந்தனர்.

ஆனால், போர் முடிவுக்கு வந்த பின்னரான சூழலில் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து தீர்மானம் நிறைவேற்றியபோது, 13 ஐ அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் 13 இருந்தது. ஆனால், மகிந்த ராஜபக்சவோ 2015 ஆட்சிக்கு வந்த ரணில் - மைத்திரி அரசாங்கமோ அதனை கவனத்தில் எடுக்கவில்லை.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, 2013 இல் முதன் முறையாக வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்திருந்தது. ஆனால், முதலமைச்சர் நிதியம் உள்ளிட்ட மாகாணங்களுக்குரிய பல அதிகாரங்களை செயற்படுத்த கொழும்பு நிர்வாகம் அனுமதித்திருக்கவிலலை.

வடக்கு கிழக்கு தனித் தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்ட பின்னர், 2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூட அதிகாரங்கள் இல்லை என்றே குறை கூறியிருந்தார்.

இணைந்த வடக்கு கிழக்கில் முதன் முதலாக முதலமைச்சராக பதவி வகித்திருந்த வரதராஜப்பெருமாளும் போதிய அதிகாரங்கள் இல்லை எனவும் அதிகாரங்கள் தெளிவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார்.

இப் பின்புலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென முன்னாள் ஆயுத இயங்கள் மீண்டும் கோருகின்றன.

ஆனால் ---

இதுவரைக்கும் கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் கட்சிகளோ, முஸ்லிம் கட்சிகளோ மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வற்புறுத்தவில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு அவசியம் இல்லை.

2009 இற்குப் பின்னரான சூழலில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து குறைந்தது 15 இற்கும் மேற்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசினால் ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீளப் பெறப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கல் தொடருகின்றது. இராணுவ முகாம்களின் எண்ணிக்கையும் இராணுவத்தின் எண்ணிக்கைகளும் குறைக்கப்படவில்லை.

இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினாலும், அதனை உரிய முறையில் செயற்படுத்த முடியாது. ஆகவே, தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒருமித்த குரலில் அரசியல் விடுதலைக்கான கோரிக்கைகளை அழுத்தம் திருத்தமாக முன்வைக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி என்பதை உயர்வான அரசியல் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும்.

ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட 13 ஐ கோரும் போதும், தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழ் நிர்வாக அதிகாரங்களை மாத்திரம் வழங்கினால் போதும் என்ற மன ஓட்டம் சிங்கள அரசியல் தலைவர்களிடம் வந்துவிடும்.

இப்போது கூட அவ்வாறான மன நிலையில் இருந்து கொண்டுதான் 2017 இன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த ரணில், கோட்டாபய ஆகியோர் விரும்பயிருக்கவில்லை. அதனையே அநுரகுமார திஸாநாயக்கவும் பின்பற்றுகிறார்.

13 ஐ அமுல்படுத்தி இருக்கின்ற அதிகாரங்கள் ஊடாக வடக்கில் கிழக்கில் எதனையும் சாதிக்க முடியும் என சில தமிழ்த்தேசியக் கட்சிகள் குறிப்பாக முன்னாள் ஆயுத இயக்கங்கள், தங்கள் அரசியல் வறுமையை பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றன என்ற முடிவுக்கு வரலாம்.

ஆனால் --

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அந்த நிலைப்பாட்டில் இல்லை. தமிழரசுக் கட்சி மதில் பூனை போன்று உள்ளது.

ஆகவே ---

இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை என்று கோரும் நிலையில், எதுவுமே இல்லாத மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது ஏற்புடைய அரசியல் அல்ல. அதுவும் உள்ளக பொறிமுறை என ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், மாகாண சபை கோரிக்கைகள் தமிழ்த்தரப்பை மேலும் பலவீனப்படுத்தும்.

வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு தான் பொருத்தமானது என்பதை இந்தியா விரும்பாது என இந்த முன்னாள் தமிழ் ஆயுத இயக்கங்களுக்குத் தெரியும்.

ஆனால் ---

தொடர்ச்சியாகவும் வலுவானதாகவும் கோரிக்கைகளை ஒருமித்த குரலில் முன்வைக்கும் போது அதற்குச் செவிசாய்க்கும் நிலை உருவாகும்.

1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத்துடன் சிங்கள அரசியல் தலைவர்கள் ஆரம்பித்த இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பை அவர்கள் 2009 இற்குப் பின்னரான சூழலில் மிக இலகுவாக வலுப்படுத்தி வருகின்றனர். நியாயப்படுத்தியும் வருகின்றனர். உலகமும் அதனை ஏற்கிறது.

ஆனால், மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று கேட்டு தங்கள் அரசியல் விடுதலைக் கோரிக்கையின் உயர் தரத்தை தாங்களே தரம் தாழ்த்துவது பொருத்தமான அரசியல் உத்தி அல்ல.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/share/17AyiaTkxM/?mibextid=wwXIfr

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகவே, தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒருமித்த குரலில் அரசியல் விடுதலைக்கான கோரிக்கைகளை அழுத்தம் திருத்தமாக முன்வைக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி என்பதை உயர்வான அரசியல் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும்.

ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட 13 ஐ கோரும் போதும், தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழ் நிர்வாக அதிகாரங்களை மாத்திரம் வழங்கினால் போதும் என்ற மன ஓட்டம் சிங்கள அரசியல் தலைவர்களிடம் வந்துவிடும்.

வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு தான் பொருத்தமானது என்பதை இந்தியா விரும்பாது என இந்த முன்னாள் தமிழ் ஆயுத இயக்கங்களுக்குத் தெரியும்.

ஆனால் ---

தொடர்ச்சியாகவும் வலுவானதாகவும் கோரிக்கைகளை ஒருமித்த குரலில் முன்வைக்கும் போது அதற்குச் செவிசாய்க்கும் நிலை உருவாகும்.

நிக்சனுக்கு வயசு போட்டுது 🤣.

அத்தனை வடக்கு-கிழக்கு தமிழர் பிரதிநிதிகளும் ஒரே குடையில் வந்து, மக்களும் 80% ஆதரித்து, இன்னுமொரு வட்டுகோட்டை தீர்மானம் நிறைவேற்றினாலும் ———

சிங்களவர் மட்டும் அல்ல….

இந்தியாவோ….

வேறு எவருமோ இதை இன்றைய நிலையில் ஆதரிக்க போவதில்லை.

நாம் சிறுவராக இருந்த போது எத்தனையோ விடயங்களை எமது பெற்றாரிடம் மிகவும் ஆணித்தரமாக கேட்டிருப்போம்….ஆனால் அவர்கள் தருவதில்லை என முடிவு எடுத்தால் அவ்வளவுதான்.

நாம் கேட்பதை எம்மால் அடித்து பறிக்க முடியாது. அடங்கி விடுவோம்.

இங்கேயும் அதுவே நிலமை.

தமிழர் ….கேட்கலாம்…

எவ்வளவும் கேட்கலாலம்….

ஆனால் பலன்?

கேளுங்க, கேளுங்க….கேட்டுகிட்டே இருங்க என்பது மட்டுமே.

சில சமயம் யோசித்தால்…

எப்படி, இப்படி ஒட்டு மொத்த இனமும் யதார்தத்தை புரிந்து கொள்ளாத கற்பனைவாதிகளாக இருக்கிறார்கள் என வியப்பாக இருக்கும்.


ஆனால் அனுரவின் உண்மை முகத்தை சும்மா டர்….என கிழித்துள்ளார் நிக்சன்.

அனுர செவ்வந்தியை பிடிக்கிறார், செண்பகத்கை பிடிக்கிறார், இராமராஜனை பிடிக்கிறார் என காவடி தூக்குபவட்கள் கவனத்துக்கு.


இங்கே குறிப்பிடப்படும் முன்னாள் மண்டையன் குழுவினர் மீது எனக்கு எந்த நல்ல அபிப்பிராயமும் இல்லை.

ஆனால் 13 ஐ முழுமையாக அமல் படுத்த கேட்பதே இப்போ எடுத்து போட கூடிய ஒரே துரும்பு.

காலம் அப்படியே நின்று விடாது.

ஒரு நூறு வருடத்தில் இந்த மாகாணசபையை ஒரு பெடரல் மாநிலமாக, ஒரு சுயநிர்ணய கொன்பெடரல் தேசமாக நாம் மாற்றி அமைக்கலாம், சூழமைவும் கெட்டித்தனமும் இருந்தால்.

ஆனால் நிக்சன் சொல்வது போல், இப்போ 13 ஐ காலால் உகைத்து விட்டு மணந்தால் சுயநிர்ணயதேவன் இல்லையேல் மரணதேவன் என நாம் இருந்தால்…..

நமக்கு மாவட்ட சபை கூட தரக்கூடாது என்ற ஜேவிபி உட்பட்ட அத்தனை இனவாதிகளிம் வேலையும் மிக இலகுவாக, விரைவாக முடிந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நாம் சிறுவராக இருந்த போது எத்தனையோ விடயங்களை எமது பெற்றாரிடம் மிகவும் ஆணித்தரமாக கேட்டிருப்போம்….ஆனால் அவர்கள் தருவதில்லை என முடிவு எடுத்தால் அவ்வளவுதான்.

நாம் கேட்பதை எம்மால் அடித்து பறிக்க முடியாது. அடங்கி விடுவோம்.

உங்களிடம் உங்கள் பிள்ளைகள் நாய்க் குட்டி வாங்கித்தர கேட்ட மாதிரி.😄

சும்மா பகிடிக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

கேளுங்க, கேளுங்க….கேட்டுகிட்டே இருங்க என்பது மட்டுமே.

சில சமயம் யோசித்தால்…

எப்படி, இப்படி ஒட்டு மொத்த இனமும் யதார்தத்தை புரிந்து கொள்ளாத கற்பனைவாதிகளாக இருக்கிறார்கள் என வியப்பாக இருக்கும்.

இப்போ ஊடகவியலாளர்கள் யுரியுப்காரர்களாகவும் வந்துவிட்டார்கள் தானே கற்பனைகளை மேலும் நன்றாக வளர்க்க ஊக்குவிப்புகள் செய்துவருகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதே 🤣. சுவை அண்ணா🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்போ ஊடகவியலாளர்கள் யுரியுப்காரர்களாகவும் வந்துவிட்டார்கள் தானே கற்பனைகளை மேலும் நன்றாக வளர்க்க ஊக்குவிப்புகள் செய்துவருகின்றார்கள்.

இவ்வாறான கற்பனைகளுக்காக, இந்தக் கற்பனைகளின் பிதாமகரான மூத்த உடகவியலாளர் நிலாந்தன் மாஸ்டர் பெயரில் ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் வழங்கப்படவேண்டும். மற்றுமொரு ‘லப்பாம் டப்பாம்’ ஊடகவியலாளர் தமிழரசுவின் பெயரில் விசேட புலைமைப் பரிசில் தரப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

On 19/10/2025 at 14:18, வாலி said:

இவ்வாறான கற்பனைகளுக்காக, இந்தக் கற்பனைகளின் பிதாமகரான மூத்த உடகவியலாளர் நிலாந்தன் மாஸ்டர் பெயரில் ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் வழங்கப்படவேண்டும். மற்றுமொரு ‘லப்பாம் டப்பாம்’ ஊடகவியலாளர் தமிழரசுவின் பெயரில் விசேட புலைமைப் பரிசில் தரப்படவேண்டும்.

அட உங்களுக்கும் லப்பாம் டப்பாம் மை தெரியுமா😂

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2025 at 08:38, விளங்க நினைப்பவன் said:

இப்போ ஊடகவியலாளர்கள் யுரியுப்காரர்களாகவும் வந்துவிட்டார்கள் தானே கற்பனைகளை மேலும் நன்றாக வளர்க்க ஊக்குவிப்புகள் செய்துவருகின்றார்கள்.

ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் யூரியூப்பர்களாக மாறிக் கொண்டு வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பராளுமன்ற எம்பி அர்ச்சுனாவும் ஐரோப்பா சுற்றுலா பயண யுரியுப் காணொளிகள் பல வெளியிட்டு கொண்டிருக்கின்றாராம் 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.