Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2026 ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட நேபாளம், ஓமான் தகுதி

16 Oct, 2025 | 08:10 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் கூட்டாக நடத்தப்படவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்கு நேபாளம், ஓமான் ஆகிய நாடுகள் தகுதிபெற்றுள்ளன.

ஆசிய பிராந்தியத்திலிருந்து மூன்றாவது நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் தகுதிபெறுவதற்கான வாயிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

ஓமானின் அல் அமீரத்தில் நடைபெற்றுவரும் ஆசிய - கிழக்கு ஆசிய பசுபிக் பிராந்திய ரி20 உலகக் கிண்ண தகுதிகாணின் சுப்பர் 6 சுற்று நிறைவடைவதற்கு முன்னரே நேபாளமும் ஓமானும் ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டுள்ளன.

இந்த இரண்டு அணிகளும் சுப்பர் 6 சுற்றில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்தே அவை ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளன.

இப் பிராந்தியத்திலிருந்து மேலும் ஒரு அணி ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதிபெறும்.

அல் அமீரத்தில் இன்று நடைபெற்ற சமோஆ உடனான போட்டியில் அமோக வெற்றியீட்டிய ஐக்கிய அரபு இராச்சியம்  சுப்பர் 6 சுற்று அணிகள் நிலையில் 3ஆம் இடத்தில் இருக்கிறது.

ஓமானும் நேபாளமும் முதலிடத்தில் இருப்பதுடன் அவற்றின் நிலைகளை நிகர ஓட்ட வேகம் வேறுபடுத்துகிறது.

ஐக்கிய அரபு இராச்சியம் தனது அடுத்த சுப்பர் 6 சுற்று போட்டியில் ஜப்பானை நாளை எதிர்த்தாடவுள்ளது.

சுப்பர் சிக்ஸ் சுற்றில் கத்தாரும் பங்குபற்றுகிறது.

இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் வரவேற்பு நாடுகளாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளும் 2024 உலகக் கிண்ணத்தில் வரவேற்பு நாடுகளை விட முதல் 7 இடங்களைப் பெற்ற ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய  நாடுகளும்    ஐசிசி ரி20 தரவரிசைப் பிரகாரம் அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய  நாடுகளும்   ஐசிசி ரி20 உலகக் கிண்ணம் - 2026இல் நேரடியாக விளையாட தகுதிபெற்றன.

தகுதிகாண் சுற்றுகள் மூலம் கனடா (அமெரிக்க வலயம்), இத்தாலி மற்றும் நெதர்லாந்து (ஐரோப்பிய வலயம்), நமிபியா மற்றும் ஸிம்பாப்வே (ஆபிரிக்க வலயம்), நேபாளம் மற்றும் ஓமான் (ஆசிய வலயம்) ஆகியன ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட தகதிபெற்றுள்ளன.

கடைசி அணியாக ஐக்கிய அரபு இராச்சியம் தகுதிபெறும் என நம்பப்படுகிறது.

1610_nepal_and_oman_qualify_for_t20_wc_2

https://www.virakesari.lk/article/227929

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

2026 டி20 உலக கோப்பைக்கு இந்தியாவில் 5 மைதானங்கள் தேர்வு - இறுதிப்போட்டி எங்கே தெரியுமா?

மொத்தமுள்ள 55 ஆட்டங்கள் இந்தியாவில் குறைந்தது 5 நகரங்களிலும், இலங்கையில் இரு இடங்களிலும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

அவ்வகையில் இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய 5 மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெறும் என்றும் ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில், இறுதி ஆட்டத்தை கொழும்புக்கு மாற்றவும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

https://www.maalaimalar.com/news/sports/cricket/bcci-shortlists-5-cities-for-t20-world-cup-796228

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு கடினமான குழு, இந்தியாவுக்கு இலகுவான குழு; ஒரே குழுவில் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான்

Published By: Digital Desk 3 24 Nov, 2025 | 04:44 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கையிலும் இந்தியாவிலும் கூட்டாக நடத்தப்படவுள்ள 10ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இணை வரவேற்பு நாடுகளான இலங்கை கடினமான குழுவிலும் இந்தியா இலகுவான குழுவிலும் இடம்பெறுவதனை உத்தியோகப்பற்ற தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

அதேவேளை, பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரே குழுவில் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

உலகம் முழுவதும் கிரிக்கெட்டை வியாபிக்கச் செய்யும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் குறிக்கோளுக்கு அமைய 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கப்பட்டிருந்தது.

2022இல் ரி20 உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்பட்ட முறைப்படியே இந்த வருட உலகக் கிண்ணப் போட்டி  நடத்தப்படும்.

இந்த 20 அணிகளும் நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டு முதல் சுற்று லீக் போட்டிகள் நடத்தப்படும்.

அணிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவை தரவரிசையில் 8ஆம் இடத்தில் உள்ள இணை வரவேற்பு நாடும் முன்னாள் சம்பியனுமான இலங்கை, ஐசிசியில் பூரண அந்தஸ்துபெற்ற அவுஸ்திரேலியா (2), ஸிம்பாப்வே (11), அயர்லாந்து (12) ஆகிய அணிகளுடன் சற்று கடினமான குழுவில் இடம்பெறுகின்றது. இந்தக் குழுவில் ஓமான் (20) அணியும் இடம்பெறுகின்றது.

பிரதான வரவேற்பு நாடும் நடப்பு ரி20 உலக சம்பியனுமான இந்தியாவுடன் பூரண அந்தஸ்துபெற்ற பாகிஸ்தான் (7) ஒரே குழுவில் இடம்பெறுகின்றது. இந்த இரண்டு அணிகளுடன் நெதர்லாந்து (13), நமிபியா (15), ஐக்கிய அமெரிக்கா (18) ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன.

ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால் இந்தியாவும் பாகிஸ்தானும் எவ்வித சிரமும் இன்றி சுப்பர் 8 சுற்றில் கால்பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு குழுவில் தலா இரண்டு தடவைகள் சம்பியனான இங்கிலாந்து (3), மேற்கிந்தியத் தீவுகள் (6) ஆகியவற்றுடன் பங்களாதேஷ் (9), நேபாளம் (17), இத்தாலி (28) ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன.

ஐக்கிய அமெரிக்காவில் 2024இல் நடைபெற்ற மிகவும் பரபரப்பான ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்து உப சம்பியனான தென் ஆபிரிக்காவுடன் நியூஸிலாந்து (4), ஆப்கானிஸ்தான் (10), ஐக்கிய அரபு இராச்சியம் (16), கனடா (18) ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.

ஐசிசிக்கும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கும் இடையில் ஏற்கனவே காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான லீக் போட்டி கொழும்பில் நடைபெறும்.

கிரிக்பஸ் இணையத்தளத்திற்கு அமைய மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி, அஹமதாபாத் ஆகிய இந்திய மைதானங்களிலும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு, எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கு, கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய இலங்கை மைதானங்களிலும் உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்படும்.

ஒருவேளை பாகிஸ்தான் இறுதிவரை முன்னேறினால் பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட அரை இறுதியும் இறுதி ஆட்டமும் கொழும்பில் நடைபெறும்.

பாகிஸ்தான் இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறினால் அரை இறுதிகள் மும்பையிலும் கொல்கத்தாவிலும் இறுதிப் போட்டி அஹமதாபாத்திலும் நடைபெறும்.

இதில் மாற்றங்கள் ஏற்படாது என நம்பப்படுகிறது.

ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை நாளை 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024_world_cup.png

sri_lanka.png

https://www.virakesari.lk/article/231307

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்: இலங்கைக்கு சொந்த மண்ணில் முதல் சுற்று

Published By: Vishnu

25 Nov, 2025 | 09:51 PM

image

(நெவில் அன்தனி)

10ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் 2026 பெப்ரவரி 7ஆம் திகதி இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ள முதல் 3 போட்டிகளுடன் ஆரம்பமாகிறது.

20 நாடுகள் பங்குபற்றும் பத்தாவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் மிகவும் கடினமான பி குழுவில் இடம்பெறும் முன்னாள் சம்பியன் இலங்கை தனது நான்கு முதல் சுற்று போட்டிகளை சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.

இலங்கை சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெறும் அதன் பட்சத்தில் அதன் போட்டிகள் அல்லது சில போட்டிகள்  கொழும்பில் அல்லது கண்டியில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி ரி20 உலகக் கிண்ணத் தொடருக்கான உத்தியோகபூர்வ குழுப்படுத்தலையும் போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டது,

எவ்வாறாயினும் அணிகளின் குழு நிலைகளை வீரகேசரி ஒன்லைன் நேற்றைய தினமே வெளயிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தனது முதலாவது போட்டியில் அயர்லாந்தை கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் பெப்ரவரி 8ஆம் திகதி எதிர்த்தாடும்.

தொடர்ந்து ஓமானை பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி இலங்கை சந்திக்கும்.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டியும் பல்லேகலையில் பெப்ரவரி 16ஆம் திகதி நடைபெறும்.

இலங்கை தனது கடைசி முதல் சுற்றுப் போட்டியில் ஸிம்பாப்வேயை கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் பெப்ரவரி 19ஆம்  திகதி  எதிர்த்தாடும்.

icc_t20_wc_grougps.png

ரி20 உலகக் கிண்ணத்தில் குழு நிலையில் (முதல் சுற்று) 40 போட்டிகளும் சுப்பர் 8 சுற்றில் 12 போட்டிகளும் நடைபெறும்.

அவற்றைவிட இறுதிச் சுற்றில் 2 அரை இறுதிகளும் ஓர் இறுதிப் போட்டியுமாக 3 போட்டிகள் நடைபெறும்.

இதற்கு அமைய மொத்தம் 55 போட்டிகள் நடைபெறும்.

இலங்கைக்கான போட்டிகள் உட்பட 14 முதல் சுற்று போட்டிகள் கொழும்பிலும் கண்டியிலும் நடைபெறவுள்ளன.

தொடர்ந்து சுப்பர் 8 சுற்றில் 6 போட்டிகள் இலங்கையில் அரங்கேற்றப்படும்.

முதல் சுற்றிலும் சுப்பர் 8 சுற்றிலும் 32 போட்டிகள் இந்தியாவில் நடைபெறும். 

இந்தியாவில் அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கு, சென்னை எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கு, புதுடில்லி அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கு, மும்பை வான்கேட் விளையாட்டரங்கு,  கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கு ஆகிய ஐந்து  இடங்களில் போட்டிகள் நடைபெறும். 

icc_fixtures_1.png

icc_fixtures_2.png

icc_fixtures_3.png

போட்டியின் ஆரம்ப நாளான பெப்ரவரி 7ஆம் திகதியன்று ஏ குழுவில் இடம்பெறும் பாகிஸ்தானுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான போட்டி எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

சி குழுவில் இடம்பெறும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான போட்டி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. ஏ குழுவில் இடம்பெறும் வரவேற்பு நாடுகளில் ஒன்றான இந்தியாவை மும்பையில் ஐக்கிய அமெரிக்கா எதிர்த்தாடும்.

முதல் சுற்றுப் போட்டிகள் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை நடைபெறும்.

முதல் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 8 சுற்றில் பெப்ரவரி 21இலிருந்து மார்ச் முதலாம் திகதிவரை விளையாடும்.

பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் ஒரு அரை இறுதிப் போட்டியும் (மார்ச் 4), இறுதிப் போட்டியும் (மார்ச் 8) கொழும்பில் நடைபெறும்.

பாகிஸ்தான் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகாவிட்டால் ஒரு அரை இறுதிப் போட்டி கொழும்பு அல்லது கொல்கத்தாவிலும் மற்றைய அரை இறுதிப் போட்டி மும்பையிலும் (மார்ச் 5) நடைபெறும்.

இறுதிப் போட்டி மார்ச் 8ஆம் திகதி அஹமதாபாத் அல்லது கொழும்பில் நடைபெறும்.

https://www.virakesari.lk/article/231443

  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2025 at 00:25, ஏராளன் said:

ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு கடினமான குழு, இந்தியாவுக்கு இலகுவான குழு; ஒரே குழுவில் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான்

Published By: Digital Desk 3 24 Nov, 2025 | 04:44 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கையிலும் இந்தியாவிலும் கூட்டாக நடத்தப்படவுள்ள 10ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இணை வரவேற்பு நாடுகளான இலங்கை கடினமான குழுவிலும் இந்தியா இலகுவான குழுவிலும் இடம்பெறுவதனை உத்தியோகப்பற்ற தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

அதேவேளை, பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரே குழுவில் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

உலகம் முழுவதும் கிரிக்கெட்டை வியாபிக்கச் செய்யும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் குறிக்கோளுக்கு அமைய 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கப்பட்டிருந்தது.

2022இல் ரி20 உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்பட்ட முறைப்படியே இந்த வருட உலகக் கிண்ணப் போட்டி  நடத்தப்படும்.

இந்த 20 அணிகளும் நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டு முதல் சுற்று லீக் போட்டிகள் நடத்தப்படும்.

அணிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவை தரவரிசையில் 8ஆம் இடத்தில் உள்ள இணை வரவேற்பு நாடும் முன்னாள் சம்பியனுமான இலங்கை, ஐசிசியில் பூரண அந்தஸ்துபெற்ற அவுஸ்திரேலியா (2), ஸிம்பாப்வே (11), அயர்லாந்து (12) ஆகிய அணிகளுடன் சற்று கடினமான குழுவில் இடம்பெறுகின்றது. இந்தக் குழுவில் ஓமான் (20) அணியும் இடம்பெறுகின்றது.

பிரதான வரவேற்பு நாடும் நடப்பு ரி20 உலக சம்பியனுமான இந்தியாவுடன் பூரண அந்தஸ்துபெற்ற பாகிஸ்தான் (7) ஒரே குழுவில் இடம்பெறுகின்றது. இந்த இரண்டு அணிகளுடன் நெதர்லாந்து (13), நமிபியா (15), ஐக்கிய அமெரிக்கா (18) ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன.

ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால் இந்தியாவும் பாகிஸ்தானும் எவ்வித சிரமும் இன்றி சுப்பர் 8 சுற்றில் கால்பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு குழுவில் தலா இரண்டு தடவைகள் சம்பியனான இங்கிலாந்து (3), மேற்கிந்தியத் தீவுகள் (6) ஆகியவற்றுடன் பங்களாதேஷ் (9), நேபாளம் (17), இத்தாலி (28) ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன.

ஐக்கிய அமெரிக்காவில் 2024இல் நடைபெற்ற மிகவும் பரபரப்பான ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்து உப சம்பியனான தென் ஆபிரிக்காவுடன் நியூஸிலாந்து (4), ஆப்கானிஸ்தான் (10), ஐக்கிய அரபு இராச்சியம் (16), கனடா (18) ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.

ஐசிசிக்கும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கும் இடையில் ஏற்கனவே காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான லீக் போட்டி கொழும்பில் நடைபெறும்.

கிரிக்பஸ் இணையத்தளத்திற்கு அமைய மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி, அஹமதாபாத் ஆகிய இந்திய மைதானங்களிலும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு, எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கு, கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய இலங்கை மைதானங்களிலும் உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்படும்.

ஒருவேளை பாகிஸ்தான் இறுதிவரை முன்னேறினால் பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட அரை இறுதியும் இறுதி ஆட்டமும் கொழும்பில் நடைபெறும்.

பாகிஸ்தான் இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறினால் அரை இறுதிகள் மும்பையிலும் கொல்கத்தாவிலும் இறுதிப் போட்டி அஹமதாபாத்திலும் நடைபெறும்.

இதில் மாற்றங்கள் ஏற்படாது என நம்பப்படுகிறது.

ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை நாளை 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024_world_cup.png

sri_lanka.png

https://www.virakesari.lk/article/231307

சிம்பாவே அணி இலங்கை அணியினை விட பலமான அணியா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

சிம்பாவே அணி இலங்கை அணியினை விட பலமான அணியா?

அண்ணை, அண்மையில் அவர்களிடம் தோற்றதால் கடினமான அணியாகத் தோன்றுகிறதோ?!

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2025 at 18:35, ஏராளன் said:

அண்ணை, அண்மையில் அவர்களிடம் தோற்றதால் கடினமான அணியாகத் தோன்றுகிறதோ?!

சிம்பாவே அணி இலங்கையணிக்கு சவாலாக உருவெடூத்துள்ளது, சிம்பாவே அணியும் இலங்கை அணி போல நிண்டகாலமாக விளையாடும் அணிதான், புதிதாக வரும் அணிகள் வெகு வேகமாக முன்னேறிவருகிறார்கள் சில அணிகள் பின் தங்கி விடுகிறன்றன, இல்லங்கை அணி தகுதி சுற்றினை இலகுவாக கடந்து விடும் என கருதுகிறேன்,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2026 ரி20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் சுற்றுக்கான முன்கூட்டிய நிரல்படுத்தலில் இலங்கை, இந்தியாவுடன் 8 நாடுகள்

26 Nov, 2025 | 02:08 PM

image

(நெவில் அன்தனி)

பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தை முன்னின்று நடத்தவுள்ள வரவேற்பு நாடுகளான இலங்கை, இந்தியாவுடன் 8 நாடுகள் சுப்பர் சுற்றுக்கான முன்கூட்டிய நிரல்படுத்தலில் பெயரிடப்பட்டுள்ளன.

உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதிபெற்றுள்ள 20 அணிகளுக்கான தரிவரசையை ஐசிசி வெயிட்டுள்ளதுடன் ரி20 உலகக் கிண்ணத்துக்கான குழு நிலைகள் மற்றும் போட்டி அட்டவணை ஆகியன ஐசிசி தலைவர் ஜெய் ஷாவின் பிரசன்னத்துடன் மும்பையில் நேற்று உத்தியோகபூர்மாக வெளியிடப்பட்டது. 

icc_t20_wc_2026_begins_on_feb_7.jpg

சர்வதேச ரி20 கிரிக்கெட்டுக்கான அணிகள் தரவரிசையில் நடப்பு சம்பியன் இந்தியா (272 புள்ளிகள்), முன்னாள் சம்பியன்களான அவுஸ்திரேலியா (267) மற்றும் இங்கிலாந்து (258),  நியூஸிலாந்து (251), தென் ஆபிரிக்கா (240), முன்னாள்  சம்பியன்களான   மேற்கிந்தியத் தீவுகள் (236), பாகிஸ்தான் (235),  மற்றும்   இலங்கை (228) ஆகியன முதல் 8 இடங்களில் இருக்கின்றன.

இதற்கு அமைய இந்த அணிகள் சுப்பர் சுற்றுக்கு தெரிவானால் X குழுவில் இந்தியா (X 1), அவுஸ்திரேலியா (X 2), மேற்கிந்தியத் தீவுகள் (X 3), தென் ஆபிரிக்கா (X 4) ஆகியனவும் Y குழுவில் இங்கிலாந்து (Y 1), நியூஸிலாந்து (Y 2), பாகிஸ்தான் (Y 3), இலங்கை (Y 4) ஆகியனவும் நிரல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அணிகளை விட வேறு அணிகள் சுப்பர் சுற்றுக்கு தெரிவானால் வெளியேறும் அணிகளின் இடங்களை அவை நிரப்பும்.

icc_t20_team_rankings.png

ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் மற்றைய 12 அணிகளின் தரவரிசை நிலைகள் வருமாறு:

பங்களாதேஷ் (223 புள்ளிகள் 9ஆம் இடம்), ஆப்கானிஸ்தான் (220 புள்ளிகள் 10ஆம் இடம்), அயர்லாந்து (201 புள்ளிகள் 11ஆம் இடம்), ஸிம்பாப்வே (200 புள்ளிகள் 12ஆம் இடம்), நெதர்லாந்து (182 புள்ளிகள் 13ஆம் இடம்), நமிபியா 181 புள்ளிகள் 15ஆம் இடம்), ஐக்கிய அரபு இராச்சியம் (176 புள்ளிகள் 16ஆம் இடம்), நேபாளம் (176 புள்ளிகள் 17ஆம் இடம்), ஐக்கிய அமெரிக்கா (175 புள்ளிகள் 18ஆம் இடம்), கனடா (154 புள்ளிகள் 19ஆம் இடம்), ஓமான் (154 புள்ளிகள் 20ஆம் இடம்), இத்தாலி (115 புள்ளிகள் 28ஆம் இடம்)

பத்தாவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் இலங்கை, பாகிஸ்தான் ஆகியவற்றின் சகல போட்டிகளும் கொழும்பிலும் கண்டியிலும் நடைபெறும்.

ஒருவேளை, இந்த இரண்டு அணிகளும் இரண்டு அரை இறுதிகளுக்கு தெரிவானால் பாகிஸ்தானின் அரை இறுதிப் போட்டி இலங்கையிலும் வேறு ஒரு நாட்டுடனான இலங்கையின் அரை இறுதிப் போட்டி இந்தியாவிலும் நடைபெறும்.

பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தெரிவானால் அது இந்தியாவுடனான போட்டியாக இருந்தாலும் அப் போட்டி கொழும்பில் நடைபெறும்.

இலங்கையும் வேறு ஒரு நாடும் இறுதிப் போட்டிக்கு தெரிவானல் அப் போட்டியும் பெரும்பாலும் கொழும்பில் நடைபெறும்.

இந்தியாவும் வேறு ஒரு நாடும் அரை இறுதிக்கும் இறுதிப் போட்டிக்கும் தெரிவானால் அந்த இரண்டு போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும்.

https://www.virakesari.lk/article/231491

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பமானது.

ஆரம்ப விலை 

இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரின் டிக்கெட்டுகளின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

@கிருபன் @கந்தப்பு போட்டியை இருவரில் ஒருவர் முன்வந்து நடத்தலாமே.

அடுத்து ஐபிஎல் லும் வருகிறது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம்

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பமானது.

ஆரம்ப விலை 

இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரின் டிக்கெட்டுகளின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம் | Ticket Sales For Twenty20 World Cup Begin

ஆரம்ப விலை (இந்தியா): 100 இந்திய ரூபா,

ஆரம்ப விலை (இலங்கை): 1000 ரூபா ஆகும்.

ஐ.சி.சி.யின் இந்த நடவடிக்கை, கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் குறைந்த செலவில் உலகத் தரம் வாய்ந்த போட்டிகளை மைதானத்தில் சென்று பார்ப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tamilwin
No image preview

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு...

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பம...
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் சிறப்பாக கடந்த T20 போட்டியினை நடாத்தியதினால் அவரை மீண்டும் இம்முறையும் போட்டியை நடாத்தும் படி வேண்டிகொள்கிறேன்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கந்தப்பு said:

கிருபன் சிறப்பாக கடந்த T20 போட்டியினை நடாத்தியதினால் அவரை மீண்டும் இம்முறையும் போட்டியை நடாத்தும் படி வேண்டிகொள்கிறேன்.

@கிருபன் உடனடியாக மேடைக்கு வரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

@கிருபன் உடனடியாக மேடைக்கு வரவும்.

பெப் 07 தானே ஆரம்பம். கிறிஸ்மஸுக்கு முன்னர் கேள்விக்கொத்து தயாரிக்கலாம். மழையால்️ எத்தனை போட்டிகள் தடைப்படும் என்றும் ஒரு கேள்வி போடலாம்.🤣

20 பேர் வரை கலந்துகொண்டால்தான் சுவாரஸ்யம்😁

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

20 பேர் வரை கலந்துகொண்டால்தான் சுவாரஸ்யம்😁

சந்தோசம்.

ரம் வரி என்று வெருட்டுற மாதிரி

நீங்களும் ஒவ்வொரு போட்டியிலும் இதைச் சொல்லியே வெருட்டுறீர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பெப் 07 தானே ஆரம்பம். கிறிஸ்மஸுக்கு முன்னர் கேள்விக்கொத்து தயாரிக்கலாம். மழையால்️ எத்தனை போட்டிகள் தடைப்படும் என்றும் ஒரு கேள்வி போடலாம்.🤣

20 பேர் வரை கலந்துகொண்டால்தான் சுவாரஸ்யம்😁

Iplஇல் வெற்றிக்கோப்பை இன்னும் வந்து சேரல 🥲

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

20 பேர் வரை கலந்துகொண்டால்தான் சுவாரஸ்யம்😁

குவாட்டரும் பிரியாணியும் குடுத்து ஆக்களை வீரப்பையன் கூட்டி வருவார்🤣(நகைசுவைக்காக கூறியது கள உறவுகளையோ வீரப்பையனையோ காயப்படுத்தும் நோக்கம் இல்லை).

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

குவாட்டரும் பிரியாணியும் குடுத்து ஆக்களை வீரப்பையன் கூட்டி வருவார்🤣(நகைசுவைக்காக கூறியது கள உறவுகளையோ வீரப்பையனையோ காயப்படுத்தும் நோக்கம் இல்லை).

அப்படி காயப்பட்டால் அதற்க்கு இன்னொரு குவாட்டர் கொடுத்தால் போச்சு.😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.