Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30/10/2025 at 19:57, island said:

இங்கு புலிகள் செய்த செயல்களுக்கு தமிழர்கள் பொறுப்பேற்க முடியாது.

நான் அறிய..

விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறு பயிற்சிகளுடன் காவலரண் காப்பாளர்களாக இருந்தவர்களும்,சிறு சிறு அமைப்புகளுக்குள் இருந்தவர்களும் தனிப்பட்ட காரணுங்களுக்காக பல துஷ்பிரயோகங்களை செய்துள்ளார்கள் என நான் அறிந்துள்ளேன். இவையெல்லாம் தலைமை பீடத்திற்கோ அல்லது அது சார்ந்தவர்களுக்கோ தெரிய வாய்ப்பில்லையாம். நம்பி விடப்பட்டவர்கள் செய்த செயலுக்கு ஒட்டு மொத்த இயக்க நடவடிக்கைகளுக்குள் கொண்டு வருவது நியாயமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரால் தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது பார்வையாளர், கொள்ளையடிக்கப்படும்போது பங்குதாரர், போர் நடக்கும்போது நாடு இரண்டுபடக்கூடாது, தமிழர் அடிமைகளாக நடத்தபடவேண்டும் தாம் பாதிக்கப்படக்கூடாது ஆகவே தோள் கொடுப்பது. தமிழர் தீர்வு கேட்கும்போது நமக்கும் ஒரு அலகு வேண்டும். அப்போது நாடு இரண்டுபடாது? சிங்களம் அவர்களை அடிக்கும் போது குரல் கொடுக்க, தோள் கொடுக்க தமிழன் வேண்டும். ஏனெனில் தாமும் தமிழராம். சுத்த பச்சோந்தித்தனம்!

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, satan said:

சிங்களவரால் தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது பார்வையாளர், கொள்ளையடிக்கப்படும்போது பங்குதாரர், போர் நடக்கும்போது நாடு இரண்டுபடக்கூடாது, தமிழர் அடிமைகளாக நடத்தபடவேண்டும் தாம் பாதிக்கப்படக்கூடாது ஆகவே தோள் கொடுப்பது. தமிழர் தீர்வு கேட்கும்போது நமக்கும் ஒரு அலகு வேண்டும். அப்போது நாடு இரண்டுபடாது? சிங்களம் அவர்களை அடிக்கும் போது குரல் கொடுக்க, தோள் கொடுக்க தமிழன் வேண்டும். ஏனெனில் தாமும் தமிழராம். சுத்த பச்சோந்தித்தனம்!

கொஞ்சம் ஒரு முஸ்லீமாக இருந்து யோசித்து பாருங்கள்.

இது பச்சோந்திதனம் அல்ல. தம் இனத்தின் நல்வாழ்வுக்கு எது தேவை என்ற சுய நலன் மட்டுமே.

சிங்களவன் எம்மைத்தான் அடித்தான். அவர்கள் ஏன் அதற்கு சிங்களவனோடு முண்ட வேண்டும்?

கோட்டா காலத்தில் அவர்கள் தாக்கப்பட்ட போது நாம் பார்வையாளராத்தான் இருந்தோம் இல்லையா?

சிங்களவர்-முஸ்லிம்களின் 1900 களில் ஏற்பட்ட பிணக்கை, முஸ்லிம் விரோதமாக, சிங்களவர் ஆதரவாக தீர்க்க உதவினார் என்றுதானே இராமனாதனை மனிதர்கள் வண்டி இழுத்து போனார்கள்?

முஸ்லிம்கள் நாடெங்கிலும் பரந்து வாழ்கிறார்கள். எம்மைபோல் நாட்டில் எங்கு வாழ்ந்தாலும் வடக்கு அல்லது கிழக்கில் “அடி” உடையோர் அல்ல அவர்கள். அவர்களில் பலருக்கு பேருவளையும், காலியும், வெலிகமவும், இன்ன இடங்களும்மே சொந்த இடங்கள்.

எனவே அவர்கள் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை.

இதை எப்படி பிழை என்றோ, பச்சோந்திதனம் என்றோ கூற முடியும்.

அவர்கள் தமது இனநலன் கருதியே செயல்படுகிறனர்.

அவர்களை பொறுத்தவரை:

  1. தற்போது இருப்பது அல்லது 1948 இன் பின் இருப்பது போல இருக்க சம்மதம். அதாவது சிங்கள மேலாண்மையின் கீழ் இருக்க சம்மதம்.

  2. ஆனால் தமிழர் மேலாண்மையின் கீழ் இருக்க சம்மதம் இல்லை.

  3. தமிழருக்கு ஒரு அலகு கொடுக்கின், எமக்கும் அதுபோல் வேண்டும்.

இதில் என்ன தவறு உள்ளது.

அவர்கள் மிகதெளிவாக தமது இனநலன் சார்ந்து கூட்டு முடிவெடுக்கிறார்கள்.

நாம் அவர்கள் எமது இனநலனுக்கு முடிவை மாற்றி எடுக்க வேண்டும் என நினைப்பதுதான் தவறானது.

பிகு

1. நாட்டை பிரித்து அதில் ஒரு துண்டை எமக்கு தாருங்கள் என எந்த முஸ்லீமும், எப்போதும் கோரவில்லை. மாறாக நாட்டை பிரிக்காமல் தமிழருக்கு இனப்பரம்பல் அடிப்படையில் ஒரு அலகை கொடுக்கின், எமக்கும் அப்படியே தாருங்கள் என்பதே அவர்கள் கோரிக்கை.

  1. அதேபோல் சிங்களவர் அவர்களை அடித்த போதும், முஸ்லிம்கள் நாமும் தமிழர் என எம்மிடம் உதவி கோரவில்லை. உங்களை போல நாமும் ஒரு சிறுபான்மை இனம் என்றே சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

3. நான் பேசிப்பார்த்தவரை பல முஸ்லிம்களின் மனநிலை - சிங்களவரும் தமிழரும் ஒன்றே என்பதே. இது அவர்கள் மத அடிப்படையில், அனுபவ அடிப்படையில் அடைந்த முடிவு. இதில் நாம் முரண்படலாம். ஆனால் முடிவை திணிக்க கூடாது. திணிக்க முடியாது என்பதே கள யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நன்னிச் சோழன் said:

சரி ஐயனே, அப்ப இந்த விடையத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று தாங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?

எனது வேலையில் ஒரு இந்திய இஸ்லாமியர் வேலை செய்கிறார், அவர் தொழுகைக்கு செல்லும் போது கழிப்பறைக்கு செல்வதாக சொல்லிவிட்டு செல்வார், அதனை உணர்ந்ததால் அவரிடம் எப்போதும் வேண்டுமானாலும் சென்றுவாருங்கள் என கூறியிருந்தேன்.

வேலையில் அனைவருக்கும் கடைசி ஓய்வு எடுக்க விருப்பம், அவருக்கும் அந்த விருப்பம் இருந்தது அதனால் எப்போதும் கடைசியாக போக விரும்புவார் பொதுவாக என்னுடனேயே வேலை செய்ய விரும்புவார், அதற்கு காரணம் பல நாள்களில் அவர் உபவாசம் இருப்பததால் பெரிதாக வேலை செய்யமாட்டார், அந்த வேலைகளையும் சேர்த்து நானே செய்வதுண்டு.

இரண்டு வாரத்திற்கு முன்னர் முதலாவது ஓய்விற்கு சென்றுவிட்டேன், மறு நாள் கடைசி ஓய்விற்கு சென்றுவிட்டேன் (அணித்தலைவர் முடிவு) அதனால் அவர் என்னுடன் கதைக்கவில்லை.

நான் அதனை திட்டமிட்டு செய்யவும் இல்லை ஆனால் அவருக்கு அது தெரிந்திருந்தும் எனது தவறாக எனக்கு சித்தரித்துக்காட்ட முயல்வதற்காக அவ்வாறு செய்தார் என கருதுகிறேன், இரண்டு மூன்று தடவை வேலை விடயமாக கதைத்த போது கூட பதில் கூறவில்லை, அதன் பின்னர் அவரை அப்படியே விட்டு விட்டேன் பின்னர் தானாக வந்து பேசுகிறார்.

அதனாலேயே அவ்வாறு பதிலளித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, vasee said:

.

நான் அதனை திட்டமிட்டு செய்யவும் இல்லை ஆனால் அவருக்கு அது தெரிந்திருந்தும் எனது தவறாக எனக்கு சித்தரித்துக்காட்ட முயல்வதற்காக அவ்வாறு செய்தார் என கருதுகிறேன், இரண்டு மூன்று தடவை வேலை விடயமாக கதைத்த போது கூட பதில் கூறவில்லை, அதன் பின்னர் அவரை அப்படியே விட்டு விட்டேன் பின்னர் தானாக வந்து பேசுகிறார்.

இதுதான் அய்யா அவர்கள் குணம் ...எமது இனப்பிரச்சினை விசயத்திலும் இதைத்தான் செய்கின்றார்கள் ... தை விளங்கிக் கொண்டும் நாம் முட்டுக் கொடிக்கப் போனால் மூக்குடைவது நமது இனம்தான் ...நீதி என்றால் அவர்களுக்குவேப்பங்காய்....சுயநலம் என்பது இரத்தத்தில் ஊறிய்தொன்று....உதாரணம் அவையின் இடப்பெயர்வில் ஆண்டுகள் பல் முடிந்துவிட்டாலும் ...இப்பவும் பல புதுப்புது விடையங்களை கொண்டுவந்து ...எம்மை கீழ்நிலைக்கு கொண்ட்வருவதே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்....எம்மில் பிழையிருக்கலா ம்....அதனை நாம் இங்கு பதிவிடுவதால் ...அவர்களுக்கே நாம் தீனி போடுகிறோம்...என்னை பொறுத்தவரை யாழில் இப்படியான செய்திகளை இணைத்து ...அதிகப்படியான நன்மைகள்தான் அடைகின்றார்கள் என்பது என் கருத்து...

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் அங்குமிங்கும் பார்வையாளராகவும் பங்குதாரராகவும் இருந்து தம்மை வளப்படுத்த நினைக்கிறார்கள். ஹிஸ்புல்லா அறிக்கையை, அண்மையில் ஹக்கீமின் கருத்தை பார்த்தால் புரியும். இந்துக்கோவிலை அழித்து மீன் சந்தை, தமிழர் நிலத்தில் தமது ஆதிக்கம், அதற்கு விசேட அதிகாரம். எங்கிருந்து கிடைத்தது, ஏன் கிடைத்தது? தமிழர் தாக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, போராடி தமது விடுதலையை தேடுகிறார்கள், இவர்கள் சும்மாவிருந்து சுகம் தேட நினைப்பது எந்த விதத்தில் நிஞாயம்?

2 hours ago, goshan_che said:

கோட்டா காலத்தில் அவர்கள் தாக்கப்பட்ட போது நாம் பார்வையாளராத்தான் இருந்தோம் இல்லையா?

அவர்கள் அடித்துக்கொள்கிறார்கள், அணைக்கிறார்கள் இதில் நமக்கென்ன? கோத்தாவின் ஊர்காவற்படையில் இருந்து தமிழரை அழித்தது யார்? ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை நடத்தி கோத்தாவை அரியணை ஏற்றியது யார்? அவர்கள் நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று. முஸ்லிம்களுக்கும் சிங்கள அரசுக்குமிடையில் 98% உடன்பாடுள்ளது, முஸ்லிம்களுக்கும் தமிழ் பேரினவாதிகளுக்குமிடையில் 98% முரண்பாடுள்ளது என்கிறார் முபாரக் அப்துல் மஜித். முஸ்லீம் ஆண்கள் சிங்களப்பெண்களை மணந்து தங்களோடு இணைந்து வாழ்வதாக சிங்கள அரசியால்வாதியொருவர் கூறுகிறார், பிறகேன் அவர்களுக்கு ஒரு தனியலகு? அவர்கள் கிழக்கில் தங்கள் வியாபர தலங்களை, மத வழிபாட்டு தலங்களை சுதந்திரமாக அமைக்கிறார்கள், தமிழர் நிலங்களை பறிக்கிறார்கள், தமிழர் அப்படி செய்ய முடியுமா? அவர்களுக்கு என்ன பிரச்சனை? தமிழரை எதிர்த்து, அழித்து, தம் இருப்பை தக்க வைத்துக்கொள்கிறார்கள். தமிழர் பிரிந்து போனால், அடுத்த குறி தாம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் எங்களோடு சேர்ந்து வாழவும் மாட்டார்கள், பிரிந்து போகவும் விடமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/10/2025 at 15:12, colomban said:

சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர்.

இதை நம்புகிறீர்களா கோஷான் அவர்களே? அடுத்த ஆண்டு இதோடு வேறொரு கதை சோடித்துக்கொண்டு வருவார்கள். ஏதோ தாம்தான் பாதிக்கப்பட்டவர்கள், தமிழர் எதிலும் பாதிக்கப்படவில்லை என்றொரு அனுதாபத்தை தேடுவதும், தமிழரை குற்றவாளிகளாக்குவதுமே அவர்களின் எண்ணம். அவர்களை அன்று வெளியேற்றாமல் விட்டிருந்தால்; கிழக்கை விட பலமடங்கு அழிவு வடக்கில் ஏற்பட்டு நிலைமை மோசமடைந்து இருக்கும். அவர்கள் எப்போதும் தம்மை பெரிது படுத்துவதற்கு, தமது குற்றங்களை மறைப்பதற்கு இப்படியான கூக்குரல்கள் உதவுமென எண்ணுகிறார்கள். சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழர் ஒதுக்கப்பட்டும், தாக்கப்பட்டும் ஒழிக்கப்பட்டும் வருகிறார்கள். ஆகவே தமிழரை தாக்குவதால் தம்மை யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற துணிவு அவர்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

இதுதான் அய்யா அவர்கள் குணம் ...எமது இனப்பிரச்சினை விசயத்திலும் இதைத்தான் செய்கின்றார்கள் ... தை விளங்கிக் கொண்டும் நாம் முட்டுக் கொடிக்கப் போனால் மூக்குடைவது நமது இனம்தான் ...நீதி என்றால் அவர்களுக்குவேப்பங்காய்....சுயநலம் என்பது இரத்தத்தில் ஊறிய்தொன்று....உதாரணம் அவையின் இடப்பெயர்வில் ஆண்டுகள் பல் முடிந்துவிட்டாலும் ...இப்பவும் பல புதுப்புது விடையங்களை கொண்டுவந்து ...எம்மை கீழ்நிலைக்கு கொண்ட்வருவதே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்....எம்மில் பிழையிருக்கலா ம்....அதனை நாம் இங்கு பதிவிடுவதால் ...அவர்களுக்கே நாம் தீனி போடுகிறோம்...என்னை பொறுத்தவரை யாழில் இப்படியான செய்திகளை இணைத்து ...அதிகப்படியான நன்மைகள்தான் அடைகின்றார்கள் என்பது என் கருத்து...

குறித்த ஒரு மதத்தின் பெயரால் நான் கூட அவரை ஒரு குழுமமாக பார்த்துள்ளேன், இது எமது பார்வை தவறு, ஒரு இரண்டு வார காலத்திற்கு முன்னர் எனது வங்கிக்கு சென்றிருந்தேன், வங்கியில் எனது கணக்கின் பெயர் மாற்றத்திற்காக.

அங்கு புதிதாக ஒரு இளைஞ்சருக்கு அந்த செயற்பாட்டை கொடுத்திருந்தனர், அவருக்கு பயிற்சியாளர் என்பதால் சில கட்டுப்பாடுகள் காணப்பட்டதால் ஒரு தாடி வைத்த இந்திய தோற்றம் உள்ள 🤣 ஒருவரை அணுகினார், அவருக்கு அந்த நடைமுறை பற்றிய புரிதல் இல்லாமல்; வர்த்தக ஒருங்கிணைப்பு அமைப்பிடம் பேசினீர்களா என கேட்டார் (அந்த அமைப்பினால் ஏற்கனவே பெயர் மாற்றப்பட்டாயிற்று, ஆனால் வங்கிக்கணக்கில் மாற்றப்படவில்லை) அதனை கூறிய போது அது புரியாமல் அந்த இளைஞ்சரிடம் கூறினார் " இந்த மனிதர்களை நம்பாதே, பின்னர் நீதான் சிக்கலில் மாட்டிவிடுவாய் என்றார்", அவர் கூறியது என்னை பாதித்தது பின்னர் வேறு வங்கியில் கணக்கினை ஆரம்பித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதிய கருத்தின் பின்னர் வசி உட்பட பலர் எழுதியவை.

  1. தாம் ஒருவரோடு, அல்லது பலரோடு பழகிய அனுபவத்தை மட்டும் வைத்து ஒட்டு மொத்த இனத்தையே எடை போடுகிறார்கள். இது 1990 இல் புலிகள் எடுத்த அதே அணுகுமுறை. அதாவது தனிமனிதர்களின் அல்லது குழுக்களின் தவறுக்கு இனத்தையே பழிகூறுவது. நாம் வாயளவில் மன்னிப்பு கேட்டாலும், பலரின் முஸ்லிம்கள் பற்றிய பார்வை 1990 இல் இருந்து அப்படியே உள்ளது என்பதை இது காட்டுகிறது.

  2. சாத்ஸ்சுக்கான பதில் - கோட்ட காலத்தில் முஸ்லிம் ஊர்காவல் படை இருக்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் பலர் அரச படையுடன் சேர்ந்து இயங்கினர். அமைச்சராகவும் இருந்தனர். ஆனால் இதை 1990 காலத்தோடு ஒப்பிட முடியாது. 1990 போலன்றி இது அவர்கள் அமைப்பாக அல்லது, தனி மனிதர்களாக அரசுக்கு ஆதரவழித்த நிகழ்வு. டக்லஸ், கருணா என பல தமிழர்களும் ஆதரவழித்தனர். அதை வைத்து ஒட்டுமொத்த தமிழரை குற்றம் சொல்ல இயலாதே.

  3. புதிதாக ஒவ்வொரு வருடமும் ஒரு கதை சேர்ப்பது பற்றி ஏலவே என் கருத்தை முதலாம் பதிவிலே கூறிவிட்டேன்.

  4. நீங்கள் சொல்வது உண்மையே ஆகினும் (எனது தனிப்பட்ட வாழ்வில் சுயநலமிகளை இன வேறுபாடின்றி சகல இனத்திலும் கண்டுள்ளேன்) அதனால் மட்டும் அவர்களுக்கு அவர்கள் வாழிடத்தில் இருக்கும் உரிமையை நாம் இல்லை என மறுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழ் முஸ்லீம் முரண்பாடுகள் என்பது 1977 முன்பு பாரியளவில், அதாவது நாடு தழுவிய ரீதியில் இருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் ஒரு சில பகுதிகளில் சில தகராறுகள் இருந்தன. அவை அவ்வப்போது கிளம்பும் போது இரு பகுதியினரிலும் சிவில் சமூகத்தினர் பேசி அதை முடிவுக்கு கொண்டுவருவர். இது கிட்டத்தட்ட யாழ்பாணத்தில் அதே காலப்ப்பகுதியில் அவ்வப்போது கிளம்பும் சாதி சண்டைகள் போன்றதாக இருக்கும்.

ஆனால் இது இருபகுதி மக்களிடையே பாரிய விரிசலாக, ஒருவர் மீது ஒருவர் வன்மம் கொண்டதாக மாறியது ஆயுத போராட்ட இயக்கங்கள் தோன்றிய பின்னரே. வடக்கு மகாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றிய சம்பவம் இரு பகுதி மக்களிடையே பாரிய இடைவெளியை ஏற்படுத்தியதோடு தமிழர்களின் போராட்டதிற்கும் இதனால் பாரிய அரசியல் ரீதியான பின்னடைவு ஏற்பட்டது. பிள்ளையார் பிடிக்க போக அது குரங்காக மாறிய கதையாக ஆயுத போராட்ட தேவைக்காக முஸ்லீம்களை வெளியேற்றி அவர்களது சொத்துகளை அபகரித்த செயல் அதே விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாக சர்வதேச ரீதியாக பலத்த அடியை கொடுத்தது என்பதை உலகளாவிய அரசியல் பார்வையற்ற புலிகளால் அன்று உணர்ந்து கொள்ள முடியவில்லை. இலங்கை அரசுக்கு தமிழர் போராட்டத்துக்கு எதிரான பரப்புரை செய்ய உதவியையே அன்று புலிகள் செய்தனர்.

ஆனால் இன்று கூட இதை புரிந்து கொள்ளாதவர்களாகவே தமிழ் அரசியலில் பலர் உள்ளார்கள். முஸ்லீம்களை வெளியேற்றியது மாத்தயாவின் தவறான அரசியல் தீர்மானத்தால் என்றும், கிழக்கில் அனைத்துக்கும் கருணா தான் காரணம் என்றும், பிரபாகரன் ஒன்றுமே அறியாத அப்பாவி என்றும் இக்கட்டுரை கூறி இருந்தால் இங்கு கருதெழுதிய பலர் இதனை ஆதரித்திருப்பார்கள். கட்டுரை எழுதிய இக்பாலுக்கு பாராட்டு மழை பொழிந்திருக்கும் இவர்கள் பிரபாகரனின் வக்கீல்களாக இங்கு ஆஜராகினார்களே தவிர நாட்டின் இனப்பிரச்சளைக்கு தீர்வு காணவேண்டும் என்றோ எதிர்கால தமிழ் சந்ததி இலங்கையில் மகிழ்சியாக இனப்பாகுபாடற்ற ஒரு தேசத்தில் வாழவேண்டும் என்ற அக்கறையிலோ இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அரசியல் போக்கே என்பிபியை நோக்கி மக்கள் வாக்குகள் திரும்பக் காரணம்.

யுத்தம் காரணமாக பாரிய வீழ்சசியடைந்தி ருந்த தமிழர் சனத்தொகை மெதுவாக வளர்சசியடைய தொடங்கியுள்ளது . இது ஒரு நல்ல அறிகுறி. நாம் விரும்பியோ விரும்பாமலோ இலங்கை என்ற நாட்டிற்குள் தான் தமிழ் மக்கள் வாழ்வு . நாட்டில் வாழும் அனைத்து இனங்களினதும் புரிந்துணர்வின் அடிபடையிலேயே ஒரு தீர்வு அமையப்பெறலாம். அதற்கேற்ப நல்லுறவை கட்டியெழுப்புவதும் சிறுபான்மையான இனங்கள் இரண்டும் புரிந்துணர்வின் அடிபடையில் அரசியல் பலத்தை கட்டியெழுப்புவதும் காலத்தின் தேவை.

ஆகவே, இது ஒரு இயக்கத்தின் தவறு மட்டுமே தவிர ஒட்டுமொத்த தமிழர்களின் தவறல்ல என்ற நிலைப்பாட்டுடன் உறுதியாக இவ்வாறான ஒரு சிலரின் சீண்டல்களை புறந்தள்ளி எமது சமுதாயத்தை வட கிழக்கில் கல்வி, தொழில்நுட்ப, வர்த்தக பொருளாதார அரசியல் ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும். ஏற்கனவே இரண்டு தலைமுறையை நாசப்படுத்திய வழியில் சிந்திகாது புதிய தலைமுறையாவது அறிவார்ந்த அரசியலை விளங்கிக் கொள்ளும் ஆற்றலை நோக்கி நகருவதற்கான ஆரம்ப வழியையாவது சமைத்து கொடுக்க வேண்டும்.

அண்மையில் தாயகம் சென்ற போது அவதானித்த விடயம் 2000 ம் ஆண்டுகளில் பிறந்த ஆற்றலுள்ள பல திறமை சாலியான இளைஞர்கள்/ யுவதிகள் பலர் பல கற்கை நெறிகளில் பயின்று தமிழர் அரசியலில் ஆர்வம் அற்று தமிழர் அரசியலில் ஈடுபடுவோர் எல்லாம் படிபறிவற்ற காடையர்கள் என்ற கணக்கில் அந்தப் பக்கம் திரும்பி பார்கதவர்களாக உள்ளனர். நல்வாய்பாக இன மத வெறுப்புக்கு ஆட்படாதவர்களாக அவர்கள் இருப்பது சிறந்த பாராட்டப்படவேண்டிய விடயம் என்றாலும் அவர்கள் அரசியலில் அக்கறையற்று இருப்பது தமிழர் அரசியலுக்கு உணமையில் நல்லதல்ல. ஆனால், அவ்வாறு அவர்கள் சிந்திக்க வைத்தவர்கள் பொறுப்பற்ற விதத்தில் வெறுப்பு அரசியலைப் பரப்பும் புலம் பெயர்/ தாயக தமிழ் தேசிய அரசியல் வியாபாரிகளே.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

1983 july

எமது கடை தாக்குதலுக்கு உள்ளான போது நாங்கள் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தபோது கதவை உடைக்க முடியாததால் முதலாம் மாடிக்கு பெற்றோல் குண்டு வீசப்பட்டு படியால் இறங்கமுடியாத நிலை வருகிறது. எனவே முதலாம் மாடியின் பின்புறமாக சென்று அங்கிருந்து பக்கத்தில் உள்ள குடிசைகளின் கூரை மீது நடக்க ஆரம்பித்தேன். சில வீடுகள் தாண்டியதும் கீழே இறங்க ஒரு இடம் கிடைத்தது. இறங்கி தப்பலாம் என்று காலை வைத்தபோது இறங்கினால் வெட்டுவேன் என்று ஒருத்தன் தமிழில் கத்தியபடி கத்தி எடுக்க ஓடுகிறான் அவன் எனக்கு நன்கு அறிமுகமானவன். நேற்று வரை என் அண்ணனின் தோளில் கை போட்டபடி நட்புடன் இருந்தவன். அப்பொழுது பிரபாகரன் அவர்களுக்கு என்ன தீமை செய்திருந்தார். அவன் ஏன் என் முதுகில் குத்தினான். நான் தமிழன் என்பதை தவிர என்ன செய்தேன்......?

மீண்டும் கூரைகள் மீது நடந்து சிங்கள பாடசாலையின் மைதானத்திற்குள் குதித்து தப்பினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்று, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால்; கிழக்கின் நிலைமைதான் வடக்கிலும் நிகழ்ந்திருக்கும். கோவில்களில் மீன் சந்தையும், கருவூலங்களில் மாட்டிறைச்சிக்கடையும் அமைந்து, பல முஸ்லீம் கிராமங்கள் தோன்றி, பலர் முஸ்லிம்களாக மாறியிருப்பர். அப்போ பெரிய சந்தோசம். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள், மீண்டும் மன்னிப்பு கோரி மீள குடியேற அழைத்தார்கள். இவர்கள் அப்படியா? பிச்சைக்காரனின் புண்போல அப்பப்போ பிரிச்சுக்காட்டி, வெவ்வேறு புனைகதைகளை புனைந்து, எந்தக்காலத்திலும் நல்லிணக்கம் ஏற்படாமல் பாத்துக்கொள்கிறார்கள். அப்படி இருக்கும்போதே அவர்கள் தம் இருப்பையும் சலுகைகளையும் தக்க வைத்துக்கொள்கிறார்கள். இப்போ அதற்கான சந்தர்ப்பம் குறைந்து வருகிறது என்றே நான் நினைக்கிறன்.

On 30/10/2025 at 15:12, colomban said:

வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம்.

சரி, புலிகள் இல்லாத காலத்தில் ஏன் இவற்றை ஆண்டுதோறும் புதுப்புதுக் கதைகள் புனைகிறார்கள்? அவர்கள் உயிரோடு இல்லாதபடியால் தாம் நினைத்தபடி கதை எழுதலாமென்றா? "உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுங்கூட மிதிக்கும்."

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.