Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2025-11-19-171232.jpg?resize=

ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது

தமிழரசுக் கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் நடாளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன் ஞா.ஸ்ரீநேசன் எஸ் ஸ்ரீதரன் உள்ளிட்ட 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்

அரசியல்தீர்வு மாகாண சபை தேர்தல் தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சியினர் இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் ஆட்சிப்பொறுப்பெடுத்து ஆண்டொன்று நிறைவடைந்தும் நிறைவேற்றப்படாதிருக்கும் நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு தனது மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானித்திருந்தது.

அதனையடுத்து தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை குறித்து நேரடியாகப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தாருங்கள் என்று கோரி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பமிட்டு கடிதம் ஒன்றை கடந்த செப்டெம்பர் மாதத்தின் இறுதியில் அனுப்பியிருந்தனர்.அதேநேரம், சிவஞானம் சிறிதரனும், இராசமாணிக்கம் சாணக்கினும் ஜனாதிபதியுடன் சந்திப்பை நடத்துவதற்கான கோரிக்கையை விடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையிலேயே இன்றையதினம் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது .

https://athavannews.com/2025/1453284

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் படம் போட்டு 3 மணி நேரமாகிறது! @satan நலமாக இருக்கிறாரா? எங்கே காணவில்லை😇?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சுமந்திரனின் படம் போட்டு 3 மணி நேரமாகிறது! @satan நலமாக இருக்கிறாரா? எங்கே காணவில்லை😇?

நாய்க்கு கல் எறிவதே உங்க வேலையா போச்சு.

அப்புறம் துரத்துது கடிக்குது என்று முறைப்பாடு வேற.

எதுக்கும் சாத்தான் வருமட்டும் பொறுத்திருப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் ஆட்சிப்பொறுப்பெடுத்து ஆண்டொன்று நிறைவடைந்தும் நிறைவேற்றப்படாதிருக்கும் நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு தனது மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானித்திருந்தது.

தமிழர் தரப்பு அரசியல்வாத்திகள் 50,60 வருட காலமாக தமிழர் யாப்பு போல் எழுதி வைத்திருக்கும் வசனங்கள் இவை.

சந்தர்ப்பங்களை தவற விட்டது மட்டுமல்லாமல்....பேரம் பேசும் அரசியல் ஒரு துளி கூட இல்லாதவர்கள்.

போகத்திற்கு போகம் வரும் சிங்கள இனவாத அரசியல் தலைவர்களை ஆதரிப்பதே இவர்கள் பிழைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

நாய்க்கு கல் எறிவதே உங்க வேலையா போச்சு.

அப்புறம் துரத்துது கடிக்குது என்று முறைப்பாடு வேற.

எதுக்கும் சாத்தான் வருமட்டும் பொறுத்திருப்போம்.

அப்படி இவர் என்னத்தை பெரிதாக சாதித்து விட்டார், சாத்தான் வந்து கருத்தெழுதுவதற்கு? எப்போதும் உள்ளதையே செய்திருக்கிறார்கள், மாற்றி ஒன்றும் செய்யவில்லை. இதோ பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அழைப்பு வரப்போகிறது எனக்காத்திருந்தார், வரவில்லை. சவால் விட்டுப்பார்த்தார் பயனில்லை, எச்சரிக்கை செய்தார், மசியவில்லை. நாமலோடு பேச்சுவார்த்தை நடத்தினார், எதுவும் நடைபெறவில்லை. கடிதம் அனுப்பி கோரிக்கை வைத்து ஒருமாதிரி கதவு திறந்தாயிற்று. உள்நுழைந்தவர்கள் ஏதாவது கதிரை எதிர்பார்ப்பார்கள், ஒரு ஓரத்தில் பார்வையாளராக அனுமதித்தாலும் பரவாயில்லை என்பார்கள். மாகாண தேர்தலை நடத்த வேண்டுமாம், தான் முதலமைச்சர் கதிரையில் அமரவேண்டும். ஏன் ராஜபக்ச காலத்தில் மாகாண தேர்தல் கிரமமாக நடத்தப்பட்டதா? அப்போது இவர் தனது அதிருப்தியை வெளியிட்டாரா? ஏன் வெளியிடவில்லை? அன்று வெளியிட்டிருந்தால் பதவியில்லை, இன்று பதவி கொடுத்திருந்தால் இந்த கோரிக்கை எழுந்திருக்காது. இங்கு இரண்டுபேர் சுமந்திரனுக்காக காவடி எடுக்கிறார்கள் அதிலும் தூக்குக்காவடி!

21 hours ago, தமிழ் சிறி said:

அரசியல்தீர்வு மாகாண சபை தேர்தல் தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சியினர் இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இன்றுதான் இந்தப்பிரச்சனைகள் உருவாகியதா? கடந்தகாலத்தில் இதை வலியுறுத்த மறந்ததேன்? இப்போ என்ன? அனுராவோடு கைகுலுக்கி படம் போட வேண்டும் அவ்வளவுதான். அது நடந்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என அறிக்கை வரும், வந்து கொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை வரும். அப்போது ஏதாவது கட்சிக்கு ஆதரவு கொடுத்து அமைச்சுப்பதவியைப்பெறலாம் என்று கனவுகண்டார். ஆனால் முடிவுகள் வேறுமாதிரி வந்தது மட்டுமல்லாமல் அவர் பாரளுமன்றத்திற்கு ஒரு எம்பியாகத்தானும் தெரிவு செய்யப்படாமல் மக்களால் நிராகரிக்கப்பட்டார்.ஆனால் அவரால் அப்படிப்பதவி இல்லாமல் இருக்க முடியாது. ஆகவே முதலமைச்சர் கனவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அனுரவிடம் கேட்கிறார். அரசியல் னகதிகள் விடுதலை புத்தசிலை விகாரம்பற்றி பேசினாரோ தெpயவில்லை. அதுபற்றி பேசியிருந்தால் நல்லது. மகிந்த கூட மாகாணசபைத் தேர்தலை நடத்தினார். ஆனால் நல்லாட்சி என்று நரியாட்சி நடத்திய ரணிலுடன் தேனிலவு நடத்திய நேரத்தில் இந்த மாகாண சபைத் தேர்தல்களை ஒழுங்காக நடத்துமாறு ரணிலைக் கேட்க திராணியில்லை. பொழுது போக்குக்கு அரசியல் செய்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தகாலங்களில் பார்பெர்மீட் எடுத்த ஆட்களின் விபரங்களை வெளியிடுமாறு ஜனாதிபதியை சுமத்திரன் கேட்டாரா? அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

அவர் கடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை வரும். அப்போது ஏதாவது கட்சிக்கு ஆதரவு கொடுத்து அமைச்சுப்பதவியைப்பெறலாம் என்று கனவுகண்டார். ஆனால் முடிவுகள் வேறுமாதிரி வந்தது மட்டுமல்லாமல் அவர் பாரளுமன்றத்திற்கு ஒரு எம்பியாகத்தானும் தெரிவு செய்யப்படாமல் மக்களால் நிராகரிக்கப்பட்டார்.ஆனால் அவரால் அப்படிப்பதவி இல்லாமல் இருக்க முடியாது. ஆகவே முதலமைச்சர் கனவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அனுரவிடம் கேட்கிறார். அரசியல் னகதிகள் விடுதலை புத்தசிலை விகாரம்பற்றி பேசினாரோ தெpயவில்லை. அதுபற்றி பேசியிருந்தால் நல்லது. மகிந்த கூட மாகாணசபைத் தேர்தலை நடத்தினார். ஆனால் நல்லாட்சி என்று நரியாட்சி நடத்திய ரணிலுடன் தேனிலவு நடத்திய நேரத்தில் இந்த மாகாண சபைத் தேர்தல்களை ஒழுங்காக நடத்துமாறு ரணிலைக் கேட்க திராணியில்லை. பொழுது போக்குக்கு அரசியல் செய்கிறார்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது பாராளுமன்றில் உறுப்பினரல்லாத இருவரே ஜனாதிபதியின் அருகிலிருந்து பேசுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

இன்றுதான் இந்தப்பிரச்சனைகள் உருவாகியதா? கடந்தகாலத்தில் இதை வலியுறுத்த மறந்ததேன்? இப்போ என்ன? அனுராவோடு கைகுலுக்கி படம் போட வேண்டும் அவ்வளவுதான். அது நடந்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என அறிக்கை வரும், வந்து கொண்டே இருக்கும்.

கடந்த காலங்களில் சுமந்திரனும் தமிழரசுக் கட்சியும் இதைக் கோரிக்கையாக வைத்த ஆதாரங்களை இங்கே முன் வைத்தால், என்ன செய்து விடப் போகிறீர்கள்? வழமை போலவே நைசாக கடையை மூடி விட்டுப் போய் விடுவீர்கள்😂. பின் அடுத்த படத்தைக் கண்டதும் வந்து ஏதோ அலட்டுவீர்கள்!

ஒவ்வொரு முறையும் ஒன்றைச் சொல்வீர்கள், அதற்கு படங்கள் இணைத்துக் கூட ஆதாரங்கள் தந்தால் "எஸ்" ஆவதைத் தவிர நீங்கள் ஒன்றும் உருப்படியாக விமர்சனம் வைப்பதில்லை. இதை வாசகர்கள் கவனிக்க வேண்டுமென்பதற்காகவே இங்கே அழைத்தேன்!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

எப்போதும் உள்ளதையே செய்திருக்கிறார்கள், மாற்றி ஒன்றும் செய்யவில்லை.

10 hours ago, Justin said:

கடந்த காலங்களில் சுமந்திரனும் தமிழரசுக் கட்சியும் இதைக் கோரிக்கையாக வைத்த ஆதாரங்களை இங்கே முன் வைத்தால், என்ன செய்து விடப் போகிறீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுத்துமாத்து சுமந்திரனின் தமிழரசு கட்சி,

திருகோணமலையில்... புத்தர் சிலை போராட்டம் நடக்கும் போது,

பொந்துக்குள் ஒளித்து இருந்து விட்டு,

ஜனாதிபதியை சந்திக்க அடுத்த நாள்,

எல்லோரும் தவறாமல் வரிசை கட்டி போயிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2025 at 05:38, satan said:

இன்றுதான் இந்தப்பிரச்சனைகள் உருவாகியதா? கடந்தகாலத்தில் இதை வலியுறுத்த மறந்ததேன்? இப்போ என்ன? அனுராவோடு கைகுலுக்கி படம் போட வேண்டும் அவ்வளவுதான். அது நடந்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என அறிக்கை வரும், வந்து கொண்டே இருக்கும்.

அப்ப இதை எழுதியது யார்😂? நீங்கள் எழுதும் ஒரு கருத்திலேயே உங்களோடு நீங்களே முரண்பட்டுத் தான் எழுதுகிறீர்கள் என்றால், உங்கள் கருத்துகளை வேறு யார் கவனிக்கப் போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், ஒவ்வொரு ஜனாதிபதியையும் சந்தித்து தன்னை முதன்மைப்படுத்துவதற்கு இந்தகாரணங்களை கையாளுகிறார். அவர் முண்டு கொடுத்த ஜானாதிபதிகளின் காலத்திலும் இந்தப்பிரச்சனையையே காவிக்கொண்டு திரிந்தார். ஏன் அதற்கு தீர்வை காண அவரால் முடியவில்லை? அன்றே அதை தீர்க்க முடியாதவர் இன்று அனுராவை சந்தித்து தீர்த்துவிடவா போகிறார்? இந்தப்பிரச்சனை தொடர்ந்து கொண்டே போகிறது. அது தீர்க்கப்படாது என்று அவரே உறுதி செய்ததை, காவிக்கொண்டு ஒரு வருடமாக அனுராவை சந்திக்க மெத்த பிரயத்தனப்பட்டு, இப்போதான் மெல்ல உள் நுழைந்திருக்கிறார், பாப்போம் கதிரை கிடைக்குமா அல்லது வெளிவருவரா என்று? அதற்குள் எதற்கு ஆரவாரம்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.