Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

என்ன ஆனாலும் எப்போதும் ரஷ்யாவிற்கு ஆதரவாகவே வரும் கருத்துகளையோ, அல்லது எந்த நிலையிலும் எப்போதும் அமெரிக்க ஆதரவாக வரும் கருத்துகளையோ அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது.

அண்ணா உங்களுக்கு இந்தியர்கள் பற்றி மிக அதிகம் தெரியும் நான் மற்றவர்களிடம் இருந்து அறிந்தது அவர்கள் ரஷ்யா எங்கள் உண்மையான நண்பன் ஆகவே ரஷ்யா எப்படியாவது உக்ரேனை அடித்து அழித்து பிடித்துவிட வேண்டும் என்ற நிலையில் இருப்பார்களம் அது திராவிட தமிழனாகவோ சீமான் தமிழனாகவோ ஹிந்திகாரக இருந்தாலும் .

ஆனால் மேற்குலக நாடுகளில் பாதுகாப்பு தேடி வந்து வாழ்கின்ற ரஷ்ய விசுவாசிகள் எம்மவர் சிலரின் நிலை தான் விசித்திரமானது. எமது நாடுகளில் ரஷ்யா பற்றிய செய்திகள் வந்தா அது எல்லாம் சாதிகார வெஸ்டர்ன் நாடுகளின் திட்டமிட்ட சூழ்ச்சி ரஷ்யா என்ற நல்லவனுக்கு எதிரான திட்டமிட்ட ஒரு பிரச்சாரம் எந்த பின்புலமுமில்லாமல் செய்தி. ஆனால் புடினின் தகவல் toolbox ல் இருந்து வருகின்ற ரஷ்ய சார்பு தவறான தகவல்களை பரப்புகின்ற தளங்கள் பிராவ்தா நெட்வொர்க் செய்திகள் தான் உண்மையானவை.

  • Replies 68
  • Views 2.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மக்களே அமைதி அமைதி அமைதி.

  • ரசோதரன்
    ரசோதரன்

    வசீ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லும் எவையும் ஒரு இரவு கூட தாக்குப் பிடிப்பதில்லை. இந்த 28 அம்ச திட்டம் அடுத்த நாளே 19 அம்ச திட்டம் ஆகியது. பின்னர் இந்த வார நீண்ட விடுமுறைக்கு முன்னர் இவை பேசித் தீர்க

  • ரசோதரன்
    ரசோதரன்

    🤣................. ஏராளமான இந்தியர்களின் கதைகளில் ஒன்று இது: என்னுடன், என் அணியிலேயே வேலை செய்து கொண்டிருந்த ஒரு இந்திய நண்பனின் விசாவில் ஒரு சிக்கல் வந்தது. இன்னமும் சில மாதங்களே இருந்தன. அவனும் , மன

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

அண்ணா உங்களுக்கு இந்தியர்கள் பற்றி மிக அதிகம் தெரியும் நான் மற்றவர்களிடம் இருந்து அறிந்தது அவர்கள் ரஷ்யா எங்கள் உண்மையான நண்பன் ஆகவே ரஷ்யா எப்படியாவது உக்ரேனை அடித்து அழித்து பிடித்துவிட வேண்டும் என்ற நிலையில் இருப்பார்களம் அது திராவிட தமிழனாகவோ சீமான் தமிழனாகவோ ஹிந்திகாரக இருந்தாலும் .

ஆனால் மேற்குலக நாடுகளில் பாதுகாப்பு தேடி வந்து வாழ்கின்ற ரஷ்ய விசுவாசிகள் எம்மவர் சிலரின் நிலை தான் விசித்திரமானது. எமது நாடுகளில் ரஷ்யா பற்றிய செய்திகள் வந்தா அது எல்லாம் சாதிகார வெஸ்டர்ன் நாடுகளின் திட்டமிட்ட சூழ்ச்சி ரஷ்யா என்ற நல்லவனுக்கு எதிரான திட்டமிட்ட ஒரு பிரச்சாரம் எந்த பின்புலமுமில்லாமல் செய்தி. ஆனால் புடினின் தகவல் toolbox ல் இருந்து வருகின்ற ரஷ்ய சார்பு தவறான தகவல்களை பரப்புகின்ற தளங்கள் பிராவ்தா நெட்வொர்க் செய்திகள் தான் உண்மையானவை.

எனக்கு உங்களது கருத்துகள் பிடிக்கும், அதனை வாசிக்கும் போது ஒரு வித்தியாசமான நகைசுவையாக இருக்கும், பெரும்பாலும் உங்கள் கருத்து சரியாக இருக்கும்.

ஆனால் உக்கிரேன் பிராவ்தா உக்கிரேன் சார்பான ஊடகம், வெகு அரிதாக அமெரிக்க அதிபர் உக்கிரேனுக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பதற்கு எதிர்வினையாற்றுவார்கள், உக்கிரேன் பிராவ்தா, ஐரோப்பிய பிராவ்தா அமெரிக்க பத்திரிகைகளின் கட்டணம் அறவிடும் பத்திரிகையின் செய்திகளை இலவசமாக தருவதால் அதனை இணைக்கின்றேன்.

இங்கு பெரும்பாலும் உக்கிரேன் பிராவ்தா வோல்ஸ்ரிர் ஜேர்னல், பைனான்ஸ்சியல் டைம்ஸ் போன்ற கட்டண தகவல்களை இலவசமாக தருகிறது, நீங்கள் மீண்டும் உங்கள் நகைசுவையான கருத்தினை இலைமறை காயாக கூறியுள்ளீர்கள் என கருதுகிறேன்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன்ஸ்கா பிராவ்தா அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்

Yevhen Kizilov - 2 அக்டோபர், 20:00

உக்ரைன்ஸ்கா பிராவ்தா அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்

ஈரிக்-நைல்ஸ் கிராஸ். புகைப்படம்: பேஸ்புக்

16062 இல் பிறந்தார்

எஸ்தோனிய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உளவுத்துறைத் தலைவருமான எரிக்-நீல்ஸ் கிராஸ், உக்ரைன்ஸ்கா பிராவ்டாவை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

மூலம்: க்ராஸ் ஆன் எக்ஸ் (ட்விட்டர்)

விவரங்கள்: உக்ரைனில் ஜனநாயக மாற்றத்திற்கும், " ஜனநாயக உலகின் மூலக்கல் " என்று அவர் அழைத்த பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் உக்ரைன்ஸ்கா பிராவ்தாவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்படுவதாக கிராஸ் கூறினார் .

உக்ரைனின் ஜனநாயக மாற்றங்களில் உக்ரைன்ஸ்கா பிராவ்தா ஒரு உந்து சக்தியாக இருந்து வருகிறது , ஊழலை அம்பலப்படுத்துதல், மனித உரிமை மீறல்களைப் புகாரளித்தல், ரஷ்ய போர்க்குற்றங்களை ஆவணப்படுத்துதல் மற்றும் உக்ரைன் பற்றிய உண்மையின் முக்கிய உலகளாவிய ஆதாரங்களில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது என்று அவர் வலியுறுத்தினார்.

" உண்மையைச் சொல்லும் உரிமைக்காக தங்கள் உயிரைக் கொடுத்த " உக்ரைன்ஸ்கா பிராவ்தா பத்திரிகையாளர்களையும் கிராஸ் நினைவு கூர்ந்தார் : பாவ்லோ ஷெரெமெட் என்ற ஊடக நிறுவனத்தை நிறுவிய ஜார்ஜி கோங்காட்ஸே மற்றும் 2024 இல் ரஷ்ய சிறைப்பிடிப்பில் கொல்லப்பட்ட விக்டோரியா ரோஷ்சினா.

மேற்கோள்: " உக்ரைன்ஸ்கா பிராவ்தாவின் நோபல் அமைதிப் பரிசுக்கான பரிந்துரையை நான் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளேன். இது உக்ரைனின் ஜனநாயக மாற்றத்திற்கும், ஜனநாயக உலகின் மூலக்கல்லான பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் அதன் பங்களிப்பிற்கான அங்கீகாரமாகும்.

அவர்களின் தியாகம், பேச்சு சுதந்திரம், எந்த வழியிலும் செல்ல பயப்படாதவர்களின் இரத்தத்திலும் தைரியத்திலும் தங்கியுள்ளது என்பதை ஒரு தெளிவான நினைவூட்டலாகும்."

விவரங்கள்: சுதந்திரத்தின் விலையை நன்கு அறிந்த ஒரு நாடான எஸ்டோனியாவிற்கு, இந்த நியமனம் " உக்ரேனிய மக்களுடனான ஒற்றுமையின் வெளிப்பாடாகவும், உண்மையே ஒரு ஆயுதமாக இருக்கும் இடத்தில் தங்கள் பணியைத் தொடரும் பத்திரிகையாளர்களுக்கு ஆழ்ந்த மரியாதையாகவும்" உள்ளது என்று எம்.பி. மேலும் கூறினார் .

Ukrainska Pravda
No image preview

Ukrainska Pravda nominated for Nobel Peace Prize

Estonian MP and former intelligence chief Eerik-Niiles Kross has nominated Ukrainska Pravda for the Nobel Peace Prize.

விளங்கநினைப்பவன், நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் அமைதிக்கான நோபல் பரிசிற்கு சிபார்சு செய்யப்பட்ட உக்கிரேனின் லங்காபுவத் போன்ற உக்கிரேன் பிராவ்தாவினை புட்டினின் ஆதரவு பத்திரிகை என கூறியுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2025 at 19:23, vasee said:

இந்த இரஸ்சியாவின் உக்கிரேன் ஆக்கிரமிப்பு போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் இரஸ்சியா தனது பாதுகாப்பு உத்தரவாதத்தினை மேற்கிடம் கோரியிருந்தது, போர் ஆரம்பித்த பின்னர், இரஸ்சியாவின் இராணுவ வல்லமையினை பற்றி அன்டனி பிளிங்கன் குறிப்பிடும் போது "இரஸ்சியா உலகில் இரண்டாவது பெரிய இராணுவம் அல்ல, உக்கிரேனில் இரண்டாவது பெரிய இராணுவம் என" (உக்கிரேன் முதலாவது பெரிய இராணுவம்) கூறியிருந்தார், அதனை கள உறவுகள் கூட கருத்தாக கூறியிருந்ததாக நினைவுள்ளது.

ஆனால் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இரஸ்சியா எழுத்து மூலமான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க தயாராக உள்ளதாக கூறுகிற நிலை ஒன்று கொன்று முரணான சமூக ஊடக பிரச்சாரமாக உள்ளதா? அல்லது உண்மையில் இரஸ்சியா அவ்வாறான பலமான நாடா?

குடிகாரன் பேச்சு என்பது போல இந்த அரசியல் செல்கிறது.

ரசியா உக்ரைனுடன் போர் புரியவில்லை ..... சீனா இந்தியா தவிர்த்து உலகின் மிக பலம்வாய்ந்த உலக நாடுகள் அனைத்துடனும் ஒரே நேரத்தில் போர் செய்துகொண்டு இருக்கிறது. தங்களிடம் இருக்கும் அனைத்து தொழில் நுட்பங்களையும் ஆயுதங்களையும் அமேரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஜெர்மனி கொண்டு சென்று உக்ரைனில் கொட்டி வைத்துக்கொண்டுதான் இந்த போரை கடந்த 4 ஆண்டுகளாக செய்துகொண்டு இருக்கிறார்கள். தற்போதைய ரோபாட்டிக் மற்றும் ட்ரான் தொழில் நுடபத்தால் ரசியா பல ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை இழந்தது என்பது உண்மைதான். ஆனாலும் இவற்றைஎல்லாம் கடந்து ரசியா தனக்கு தேவையான பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுபாட்டில்தான் வைத்திருக்கிறது. இப்போது நினைத்தாலும் வெறும் 2 நாட்களில் உக்ரைனை அடித்து தரமடடம் ஆக்க கூடிய ஆயுதம் பலம் ரசியவிடம் உண்டு. சும்மா கூகிளில் டைப் செய்து பார்த்தாலே ரசியாவிடம் என்ன உண்டு என்பது தெரியும்.

மேல்நாட்டு தணிக்கை செய்திகளை வாசித்து உண்மை என்று நம்புபவர்கள் இரான் 2024 இல் தங்கள் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது மிஸைல் அடித்த போது அதை ஒரு எச்சரிக்கை தாக்குதலாகவே செய்தது அதில் சில மிசைல்கள் தடுத்து நிறுத்த படத்தை பார்த்து இங்கு யாழ்களத்தில் அனுமான் வெடிகள் வெடிக்கவில்லை என்று மேலைநாட்டு பிரச்சார செய்திகளை நம்பி எழுதினார்கள் ......... இந்த வருடம் இஸ்ரேல் நேரடியாகவே ஈரானை தக்க எததனித்த போது கொடுத்த பதில் அடியுடன் இஸ்ரேலில் தரைமடடமான படங்களை வீடியோக்களை அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளின் உதவியுடன் (சோசியல் மீடியாவில்) மூடி மறைக்கலாம் என்று எண்ணி .... அமெரிக்க இஸ்ரேல் இருவருமே வாயை மூடிக்கொண்டு இருந்து விடடார்கள் ..... இருப்பினும் பெரியண்ணருக்கு ஏற்படட கவுரவ குறைச்சலால் ஈரானில் உள்ள ஒரு மலையில் போய் இரண்டு குண்டுகளை போட்டுவிட்டு ஈரானின் அணுவாயுத தொழில்நுட்பம் இதோடு முடிந்தது என்று சொல்லி சந்தோச படடார். ( அதில் பகிடி என்னவென்றால் ஈரான் இஸ்ரலில் ஹாஸ்ப்பிட்டல் களை மடடம ஆக்கியது சர்வதேச குற்றம் என்று இஸ்ரேல் ஐநாவில் கூறியது. அப்போ அதை தெளிவாக தெரிந்துகொண்டுதான் காசாவில் தரைமடடம் ஆக்கினீர்களாலா? என்று ஈரான் கேட்ட்துடன் மூடிக்கொண்டு போய் விட்டார்கள்)

  • கருத்துக்கள உறவுகள்
On 29/11/2025 at 22:07, vasee said:

ரசோதரன்,

உக்கிரேன் தனது பிரச்சினையினை கிடைக்கும் ஏதோ ஒரு தீர்வினை முதலில் பெற்று அதன்பின்னர் தனக்கு ஏதுவான தீர்வு நோக்கி செல்லவேண்டும் என கூறியது கூட எமது கல்வி சமூகம் எமது போராட்டம் தொடர்பாக கொண்டிருந்த அதே பார்வையினடிப்படையிலேயே, எமது போராட்டத்தில் மாகாணசபை தீர்வினை பெற்று அதன் பின்னர் எமது தீர்வு நோக்கி நகர்ந்திருக்கவேண்டும் என காலம் கடந்த நிலையில் இப்போதும் கூட பேசப்படுகிறது.

உக்ரேனுக்கும், ஈழத்திற்கும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கின்றது அல்லவா, வசீ. ஒரு நாட்டிலிருந்து பிரிந்து போய் தங்களுக்கென்று ஒரு தனிநாட்டை உருவாக்க ஈழ மக்கள் போராடினார்கள், அதே வேளையில் சுதந்திரநாடாக இருக்கும் உக்ரேன் அதன் மீது இன்னொரு நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுகின்றது.

ஈழ மக்களுக்கு தனிநாட்டை விட குறைந்த ஒரு தீர்வு தான் தற்போதைக்கு சாத்தியமானது என்பது ஈழத்திற்கான போராட்டத்தின் ஒரு மைல் கல் ஆகலாம். ஈழத்துக்கான போராட்டம் அங்கிருந்து அடுத்த கட்டத்துக்கு நகரலாம். ஆனால் உக்ரேன் தனது நிலப்பரப்பை விட்டுக் கொடுக்கும் ஒரு தீர்விற்கு சம்மதிப்பது ஒரு மைல் கல் அல்லவே........... இதில் அடுத்த கட்டம் என்ன........... முழு இறைமையையும் ஆக்கிரமிப்பாளருக்கு விட்டுக் கொடுப்பதா..............

On 30/11/2025 at 01:02, விளங்க நினைப்பவன் said:

அண்ணா உங்களுக்கு இந்தியர்கள் பற்றி மிக அதிகம் தெரியும் நான் மற்றவர்களிடம் இருந்து அறிந்தது அவர்கள் ரஷ்யா எங்கள் உண்மையான நண்பன் ஆகவே ரஷ்யா எப்படியாவது உக்ரேனை அடித்து அழித்து பிடித்துவிட வேண்டும் என்ற நிலையில் இருப்பார்களம் அது திராவிட தமிழனாகவோ சீமான் தமிழனாகவோ ஹிந்திகாரக இருந்தாலும் .

ஆனால் மேற்குலக நாடுகளில் பாதுகாப்பு தேடி வந்து வாழ்கின்ற ரஷ்ய விசுவாசிகள் எம்மவர் சிலரின் நிலை தான் விசித்திரமானது. எமது நாடுகளில் ரஷ்யா பற்றிய செய்திகள் வந்தா அது எல்லாம் சாதிகார வெஸ்டர்ன் நாடுகளின் திட்டமிட்ட சூழ்ச்சி ரஷ்யா என்ற நல்லவனுக்கு எதிரான திட்டமிட்ட ஒரு பிரச்சாரம் எந்த பின்புலமுமில்லாமல் செய்தி. ஆனால் புடினின் தகவல் toolbox ல் இருந்து வருகின்ற ரஷ்ய சார்பு தவறான தகவல்களை பரப்புகின்ற தளங்கள் பிராவ்தா நெட்வொர்க் செய்திகள் தான் உண்மையானவை.

சாதாரண மனிதர்களிடம் கருத்துக்கு விசுவாசமாக இருத்தல் என்னும் ஒரு செயல் அல்லது முயற்சி நடைமுறையில் இல்லையென்றே நினைக்கின்றேன், விளங்க நினைப்பவன். கருத்துகள் வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்ற நிலை இது. 99 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வகையினரே, நான் உட்பட. கருத்துகள் என்பது நாங்களே உருவாக்கிக் கொள்ளும் ஒரு சுய அடையாளம், பெரும்பாலும் கற்பனையான ஒன்றே. பின்னர் அந்த அடையாளத்துடன் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகின்றது. நாங்கள் வாழும் வாழ்க்கைகளுm, எங்களின் பல கருத்துகளும் மலையும், மடுவும் போல.

உலகெங்கும் ஒரு ஒற்றை இலக்குடன் போராடும் போராளிகள் இதற்கு விதிவிலக்கானவர்கள்..............🙏.

ரஷ்யாவிற்கு ஆதரவாக இருப்பவர்களிடம் நீங்கள் ரஷ்யாவுக்கு போய் வாழ்வீர்களா, உங்கள் பிள்ளைகளை ரஷ்யாவிற்கு வாழ அனுப்பிவீர்களா என்று கேட்பதில் எந்தப் பொருளும் கிடையாது. அப்படியொரு முட்டாள்தனத்தை எந்த மனிதனும் செய்யப் போவதில்லை.

'படித்தவர்கள் எல்லோரும் கழனிப் பானைக்குள் விழுந்தார்கள்..................' என்று என் வீட்டில் அன்று பலரும் சொல்லிச் சிரிப்பார்கள். வீட்டிலோ அல்லது சொந்த பந்தத்திலோ பெரிதாக படித்தவர்கள் என்று, 10 வகுப்பு சித்தி அடைந்தவர்கள் கூட, கிடையாது. அவர்கள் எல்லோருமே சேர்ந்து உருவாக்கிய அடையாளம் தான் இந்தக் கழனிப் பானை. ஒரு மன ஆறுதலுக்கு போல. ஆனால் வீட்டில் நடைமுறை வேறாக இருந்தது.............. நாங்கள் எல்லோரும் எப்படியாவது நன்றாகப் படிக்க வேண்டும் என்று தங்களால் ஆன எல்லாவற்றையும் அந்த இடர் மிகுந்த காலங்களிலும் மிகவும் செய்தார்கள். எங்களை கழனிப் பானைக்குள் விழுத்த முயன்றார்கள், ஆனாலும் எங்களில் பலரும் பானைக்குள் விழாமல் தப்பிவிட்டார்கள்...................🤣.

இது போலவே ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா போன்ற நாடுகளுக்கான ஆதரவு நிலைப்பாடுகளும்........................ சொல்லும், செயலும் ஒன்றல்ல.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@ரசோதரன்

குடிபெயர்ந்து நாடு தேடியோர் ஒரு நிலத்தை ஆக்கிரமித்து அங்குள்ள பூர்வீக குடிகளை அழித்து அமெரிக்கா எனும் பெயரில் உலகையே வல்லாதிக்கம் செய்யும் நாட்டிலிருந்து எழுதுகின்றீர்கள். 😂

இது பரமசிவன் கழுத்திலிருந்து கருடா சௌக்கியமா என்பது போல் இருக்கின்றது.😎

ஈழ மக்களுக்கான தீர்வு கிடைக்காமைக்கான வெளிப்படையான உண்மையை பேசாமல் வெறுமனே ஒரு தற்போதைய தீர்வு சாத்தியமானது என்கிறீர்கள். அது என்ன குறைந்த /சாத்தியமான தீர்வு?

உக்ரேனின் தற்போதைய போக்கு தனக்கு பாதுகாப்பில்லை என ரஷ்யா வெளிப்படையாக சொல்லியது. அதை யாரும் கேட்கவில்லை. அதற்காக கருங்கடல் கரையோரங்களை தன் பாதுகாப்பிற்காக சுவீகரித்துக்கொண்டுள்ளது.சுவீகரிக்கப்பட்ட பகுதி ரஷ்ய மொழி பேசுபவர்கள் உள்ள நிலப்பரப்பு. அதை விட பல தடவைகள் உக்ரேனிய அரசால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலப்பரப்பு.

உங்கள் அன்பு அமெரிக்கா 🤣இந்த உலகம் முழுவதும் எத்தனை ஆயிரம் இராணுவ முகாம்களை நிறுவி வைத்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகின்றேன்.ஆனால் ரஷ்யா உலகம் முழுவதும் தன் பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்களை அமைக்கவில்லை.எனவே ரஷ்யா தன் பாதுகாப்பிற்காக தனக்கு வேண்டிய பகுதியை தன் அரணாக்கிக்கொண்டுள்ளது.

எனக்கு உக்ரேன் விடயத்தில் மேற்கின் மீதான கருத்து விசுவாசமும் நன்றி விசுவாசமும் என்றுமே வரப்போவதில்லை. காரணம் எல்லாம் சுரண்டல் அரசியல்.அதை விட எல்லோருக்கும் பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்றால் அது வாழ்க்கை அல்ல.நான் பெரும்பாலான ஜேர்மனியர்கள் பக்கம் நிற்கின்றேன். அவர்கள் உக்ரேன் போரை விரும்பவில்லை.அரசியல்வாதிகள் உக்ரேனுக்காக அதிக நிதி ஒதுக்குவதை விரும்பவில்லை.ஏனைய நாட்டு அரசியலில் மூக்கை நுழைப்பதை விரும்பவில்லை.எனவே நானும் அவர்கள் பக்கம் நிற்கின்றேன்.ஜேர்மனியில் பல கட்சிகள் உக்ரேன் போரை எதிர்க்கின்றார்கள்.அந்த கட்சிகளில் நானும் ஒருவன்.

உக்ரேன் மீதான ரஷ்ய நடவடிக்கையை ஆதரிப்பவன் ஏன் ரஷ்யாவில் குடியேறவில்லை என்ற கேள்வி வரும் போது......

ஸ்ரீலங்காவில் தமிழருக்கு தனிநாடு வேண்டும் என்பவர்கள் ஏன் நாட்டை விட்டு வெளியேறிநார்கள்? அங்கிருந்து போராடியிருக்க வேண்டும் என்றொரு கேள்வி வரும் இல்லையா?

எனவே கருத்துக்கள்/சரி பிழைகள் சொல்ல யாருக்கும் உரிமை உண்டு.சம்பந்தப்பட்ட மண்ணில் நின்றுதான் களமாடவேண்டும் என்ற சிந்தனை ஒருவித பம்மாத்து மட்டுமே.😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

சாதாரண மனிதர்களிடம் கருத்துக்கு விசுவாசமாக இருத்தல் என்னும் ஒரு செயல் அல்லது முயற்சி நடைமுறையில் இல்லையென்றே நினைக்கின்றேன்,

நான் அப்படி நினைக்கவில்லை இந்தியர்களை எடுத்து கொள்வோம் ரஷ்யா கெட்டது என்று தெரிந்தாலும் இந்தியாவின் உண்மையான நண்பன் ரஷ்யா என்று அதற்க்கு தானே விசுவாசமாக இருக்கின்றார்கள் . (பூட்ரின் இம்மாதம் இந்தியா வருகிறார் என்று சொன்னார்கள் ) வெளிநாடு வந்த பின்பு மதம் மாறி இலங்கை தமிழர்களை எடுத்து கொள்வோம் அவர்கள் நம்பி மாறிய புதிய மத கட்டனை படி விசுவாசமாக தானே நடக்கின்றனர். கண்டால் தொடங்கிவிடுவார்கள் Everything is happening according to the .......🤣

4 hours ago, ரசோதரன் said:

ரஷ்யாவிற்கு ஆதரவாக இருப்பவர்களிடம் நீங்கள் ரஷ்யாவுக்கு போய் வாழ்வீர்களா, உங்கள் பிள்ளைகளை ரஷ்யாவிற்கு வாழ அனுப்பிவீர்களா என்று கேட்பதில் எந்தப் பொருளும் கிடையாது. அப்படியொரு முட்டாள்தனத்தை எந்த மனிதனும் செய்யப் போவதில்லை.

அவர்கள் அப்படியொரு முட்டாள்தனத்தை செய்ய மாட்டார்கள். அனால் மற்றவர்களுக்கு ரஷ்யா தான் நேர்மையானவன் நல்லவன் வெஸ்டர்ன் நாடுகள் மோசமான கள்ளர்கள் என்று பிரசாரம் செய்வார்கள்.

4 hours ago, ரசோதரன் said:

ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா போன்ற நாடுகளுக்கான ஆதரவு நிலைப்பாடுகளும்........................ சொல்லும், செயலும் ஒன்றல்ல.

கள்ளு உடலுக்கு தீங்கு என்று நான் குடிக்க மாட்டேன் ஆனால் மற்றவர்களுக்கு அது தான் சத்துணவு நீண்டகாலம் வாழ்வதற்கு ஏற்ற பானம் என்று வழி காட்டுவேன் 😂

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நான் அப்படி நினைக்கவில்லை இந்தியர்களை எடுத்து கொள்வோம் ரஷ்யா கெட்டது என்று தெரிந்தாலும் இந்தியாவின் உண்மையான நண்பன் ரஷ்யா என்று அதற்க்கு தானே விசுவாசமாக இருக்கின்றார்கள் . (பூட்ரின் இம்மாதம் இந்தியா வருகிறார் என்று சொன்னார்கள் ) வெளிநாடு வந்த பின்பு மதம் மாறி இலங்கை தமிழர்களை எடுத்து கொள்வோம் அவர்கள் நம்பி மாறிய புதிய மத கட்டனை படி விசுவாசமாக தானே நடக்கின்றனர். கண்டால் தொடங்கிவிடுவார்கள் Everything is happening according to the .......🤣

அவர்கள் அப்படியொரு முட்டாள்தனத்தை செய்ய மாட்டார்கள். அனால் மற்றவர்களுக்கு ரஷ்யா தான் நேர்மையானவன் நல்லவன் வெஸ்டர்ன் நாடுகள் மோசமான கள்ளர்கள் என்று பிரசாரம் செய்வார்கள்.

கள்ளு உடலுக்கு தீங்கு என்று நான் குடிக்க மாட்டேன் ஆனால் மற்றவர்களுக்கு அது தான் சத்துணவு நீண்டகாலம் வாழ்வதற்கு ஏற்ற பானம் என்று வழி காட்டுவேன் 😂

🤣.................

ஏராளமான இந்தியர்களின் கதைகளில் ஒன்று இது: என்னுடன், என் அணியிலேயே வேலை செய்து கொண்டிருந்த ஒரு இந்திய நண்பனின் விசாவில் ஒரு சிக்கல் வந்தது. இன்னமும் சில மாதங்களே இருந்தன. அவனும் , மனைவியும் திரும்பிப்போக வேண்டிய ஒரு சூழல். மனைவி சில மாதங்கள், நாலோ ஐந்து மாதங்கள், கர்ப்பமாக இருந்தார். அவர்கள் உடனே திரும்பிப் போகவில்லை. சில மாதங்களின் பின் அவன் மட்டுமே திரும்பிப் போனான். மனைவி இங்கேயே தனித்து இருந்தார். பின்னர் குழந்தை பிறந்தது. பின்னர் மனைவி குழந்தையுடன் இந்தியாவுக்கு திரும்பிப் போனார்.

இவை மொத்தமுமே அவர்களின் குழந்தை அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே நிகழ்ந்தது. மருத்துவ காரணங்கள் எதுவுமில்லை.

'அமெரிக்கர்கள் பெரிய திருட்டுப் பயல்கள், சார்.................' என்று சொல்லிக் கொண்டே இங்கு நான் இருக்கும் இடத்திலேயே இரண்டு வீடுகளும், ஒரு வியாபாரமும் வாங்கும் இந்தியர்கள் பலர்.

அமெரிக்க பல்கலைக் கழகங்கள் உருப்படியற்றவை என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த உடனேயே, இங்கிருக்கும் சில பல்கலைக் கழகங்களுக்கு எப்படி அனுமதியைப் பெற்றுத் கொள்வது என்ற ஆராய்ச்சியிலும், முயற்சிகளிலும் இறங்கிவிடுவார்கள். இவர்களில் ஒருவர் கூட மாஸ்கோ பல்கலைக்கழகம் பற்றி அதன் பின்னர் பேசமாட்டார்கள்.

இந்தியர்கள் கோவிட் தொற்றின் போது ஸ்புட்னிக் வக்சீனுக்காக வரிசையில் நின்றார்களா, இல்லையே, ஃபைசர் வக்சீன் தான் வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். இங்கு எவராவது ஸ்புட்னிக் வக்சீன் போட்டார்களா...................

இங்கு களத்திலேயே சில மாதங்களின் முன் ரஷ்யா புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக செய்தி வந்தது. களம் ஆராவாரமாகவும் இருந்தது. உலகில் ஆயிரம் புற்றுநோய்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், இதில் இந்த மருந்து எந்த புற்றுநோய்க்கு என்ற கேள்வி கூட வரவில்லை. ரஷ்யாவை நண்பர்கள் என்று சொல்லும் இந்தியர்களும், இந்தியாவும் இந்த மருந்தை இந்திய மருத்துவமனைகளில் அனுமதித்து விடுவார்களா.............. டி. ராஜேந்தரே இங்கு சன் ஃபிரான்சிஸ்கோ வந்து தான் புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்தார். ஏன், நாங்களும் தான் ரஷ்ய மருந்தை எங்கள் உடலுக்குள் செலுத்த அனுமதிப்போமா...................

இந்தியாவினதும், இந்தியர்களினதும் நட்பும், நடைமுறையும் இவ்வாறு முரண்பட்டதே.............. அவர்களின் கனவு மாஸ்கோவிற்கு போவதல்ல................... அவர்களின் கனவு சிலிக்கன் பள்ளத்தாக்குக்கு போவதே...........

புதிதாக மதம் மாறியவர்கள், அது வேறு ஒரு வகை. எம்ஜிஆர் ரசிகராக இருந்த ஒருவர் திடீரென்று சிவாஜி ரசிகர் ஆனால் என்ன நடக்குமோ அதையே தான் இந்த மதம் மாறியவர்களும் செய்கின்றார்கள். பழையதை எவ்வளவு தூற்ற முடியுமோ அவ்வளவு அதிகமாக தூற்ற வேண்டும்; புதியதை எவ்வளவு போற்ற முடியுமோ அவ்வளவு அதிகமாக போற்ற வேண்டும். இந்த வகையில் பயங்கர ஆக்டிவாக இருப்பார்கள். இவர்களைப் பார்த்து புதுக் கடவுளே பயந்து போய் பதுங்கிவிடுவார்.....................🤣. இது அரசியலில் கட்சி மாறுபவர்களைப் போன்ற ஒன்று.............. இது விசுவாசம் தான்................. அவர்கள் இன்னொன்றை கண்டு கொள்ளும் வரை............................

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

@ரசோதரன்

குடிபெயர்ந்து நாடு தேடியோர் ஒரு நிலத்தை ஆக்கிரமித்து அங்குள்ள பூர்வீக குடிகளை அழித்து அமெரிக்கா எனும் பெயரில் உலகையே வல்லாதிக்கம் செய்யும் நாட்டிலிருந்து எழுதுகின்றீர்கள். 😂

இது பரமசிவன் கழுத்திலிருந்து கருடா சௌக்கியமா என்பது போல் இருக்கின்றது.😎

ஈழ மக்களுக்கான தீர்வு கிடைக்காமைக்கான வெளிப்படையான உண்மையை பேசாமல் வெறுமனே ஒரு தற்போதைய தீர்வு சாத்தியமானது என்கிறீர்கள். அது என்ன குறைந்த /சாத்தியமான தீர்வு?

உக்ரேனின் தற்போதைய போக்கு தனக்கு பாதுகாப்பில்லை என ரஷ்யா வெளிப்படையாக சொல்லியது. அதை யாரும் கேட்கவில்லை. அதற்காக கருங்கடல் கரையோரங்களை தன் பாதுகாப்பிற்காக சுவீகரித்துக்கொண்டுள்ளது.சுவீகரிக்கப்பட்ட பகுதி ரஷ்ய மொழி பேசுபவர்கள் உள்ள நிலப்பரப்பு. அதை விட பல தடவைகள் உக்ரேனிய அரசால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலப்பரப்பு.

உங்கள் அன்பு அமெரிக்கா 🤣இந்த உலகம் முழுவதும் எத்தனை ஆயிரம் இராணுவ முகாம்களை நிறுவி வைத்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகின்றேன்.ஆனால் ரஷ்யா உலகம் முழுவதும் தன் பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்களை அமைக்கவில்லை.எனவே ரஷ்யா தன் பாதுகாப்பிற்காக தனக்கு வேண்டிய பகுதியை தன் அரணாக்கிக்கொண்டுள்ளது.

எனக்கு உக்ரேன் விடயத்தில் மேற்கின் மீதான கருத்து விசுவாசமும் நன்றி விசுவாசமும் என்றுமே வரப்போவதில்லை. காரணம் எல்லாம் சுரண்டல் அரசியல்.அதை விட எல்லோருக்கும் பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்றால் அது வாழ்க்கை அல்ல.நான் பெரும்பாலான ஜேர்மனியர்கள் பக்கம் நிற்கின்றேன். அவர்கள் உக்ரேன் போரை விரும்பவில்லை.அரசியல்வாதிகள் உக்ரேனுக்காக அதிக நிதி ஒதுக்குவதை விரும்பவில்லை.ஏனைய நாட்டு அரசியலில் மூக்கை நுழைப்பதை விரும்பவில்லை.எனவே நானும் அவர்கள் பக்கம் நிற்கின்றேன்.ஜேர்மனியில் பல கட்சிகள் உக்ரேன் போரை எதிர்க்கின்றார்கள்.அந்த கட்சிகளில் நானும் ஒருவன்.

உக்ரேன் மீதான ரஷ்ய நடவடிக்கையை ஆதரிப்பவன் ஏன் ரஷ்யாவில் குடியேறவில்லை என்ற கேள்வி வரும் போது......

ஸ்ரீலங்காவில் தமிழருக்கு தனிநாடு வேண்டும் என்பவர்கள் ஏன் நாட்டை விட்டு வெளியேறிநார்கள்? அங்கிருந்து போராடியிருக்க வேண்டும் என்றொரு கேள்வி வரும் இல்லையா?

எனவே கருத்துக்கள்/சரி பிழைகள் சொல்ல யாருக்கும் உரிமை உண்டு.சம்பந்தப்பட்ட மண்ணில் நின்றுதான் களமாடவேண்டும் என்ற சிந்தனை ஒருவித பம்மாத்து மட்டுமே.😎

அண்ணா,

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பூர்வீகக் குடிகளை அழித்து, குடியேற்றங்கள் நிகழ்த்தி, இன்று வல்லாதிக்கம் செய்வோர்................... ஐரோப்பியர்களே, அண்ணா. அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களே. ஆங்கிலயர்களும், ஜெர்மனியர்களும், ஸ்கண்டினேவியர்களும், வேறு பல ஐரோப்பியர்களுமே அமெரிக்கர்கள். அன்றைய ஐரோப்பாவின் நீட்சி தான் இன்றைய அமெரிக்கா. முன்னர் ஜெர்மனியும், இங்கிலாந்தும், பிரான்சும், ஸ்பெயினும், இன்னும் பல ஐரோப்பிய நாடுகளும் செய்த வல்லாதிக்கத்தையும், கொடுமையையும் தான் இன்றைய அமெரிக்கா வேறு வழிகளில் தொடருகின்றது . இவை எல்லாமே பாவப்பட்ட நிலங்கள் தான். கனடா, ஆஸ்திரேலியா கூட அதுவே.

நான் முன்னர் வேறு ஒரு இடத்தில் எழுதியிருந்தது போல, புலம் பெயர்ந்த தேசங்களில் இருந்து கருத்துகளை எழுதும் நாங்கள் எவரும் இதே கருத்துகளை இவ்வளவு வெளிப்படையாக ஊரிலிருந்தால் எழுதியிருக்க முடியாது. மேற்கு நாடுகளில் குடிபுகுந்திருக்கும் நாங்கள் அனைவருமே பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்புகள் தான். மேற்கு நாடுகள் கொடுக்கும் வசதிகளும், சுதந்திரமும், பாதுகாப்புமே எங்களுக்கு துணிவைக் கொடுக்கின்றன.

இதே காரணங்களே, வசதி - சுதந்திரம் - பாதுகாப்பு, எங்களை இந்த நாடுகளை நோக்கி புலம்பெயர வைத்ததற்கான பிரதான காரணங்கள் கூட. இவை எங்களுக்கும், எங்களின் பின்னால் எங்களின் சந்ததிக்கும் கிடைக்காது என்று கருதப்பட்ட தேசங்களை நாங்கள் குடியேறுவதற்கு உகந்தவை அல்ல என்று தவிர்த்தோம். இந்த மேற்கு நாடுகளில் எங்களினதும், குடும்பத்தினதும், அடுத்த சந்ததிகளினதும் இருப்பையும், எதிர்காலத்தையும் உறுதி செய்து விட்டு, தார்மீக மற்றும் ஆத்மாந்த ஆதரவுகளை எங்களுக்கு பிடித்தமான தேசங்களுக்கும், தலைவர்களுக்கும், கோட்பாடுகளுக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம். இது மிகச் சாதாரண ஒரு மனித இயல்பு. ஒரு நாட்டில் குடி இருந்து கொண்டு இன்னோரு நாட்டுக்கு எப்படி ஆதரவாக இருக்க முடியும் என்பது ஒரு கேள்வியே அல்ல. இது மிக இயல்பானது.

ஈழத்தமிழர்களுக்கு தீர்வு என்று இன்று கல்விச் சமூகம் என்ன சொல்கின்றது என்று வசீ சொல்லியிருந்ததை மட்டுமே மேற்கோளாக எடுத்திருந்தேன். இணைந்த மாகாணசபை போராட்டத்தின், நோக்கத்தின் ஒரு மைல் கல்லாக இருந்திருக்கலாம் என்று தான் சொல்லியிருந்தேன். மற்றபடி இந்த விடயத்தில் கருத்து சொல்வதற்கு என்னால் முடியாது. அதற்கு திராணியும், மனப்பலமும் இல்லை.

ரஷ்ய - உக்ரேன் போரை ஆதரிக்கவில்லை என்னும் உங்களின் நிலைப்பாடு மிகவும் சிறந்தது. இங்கு அமெரிக்காவிலும் அப்படியானவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். அதிபர் ட்ரம்ப் கூட போர்களில் நம்பிக்கை அற்றவர் என்றே தன்னைச் சொல்லிக் கொள்கின்றார். ஆனால், உக்ரேன் தோற்று தன் நிலத்தை இழந்து, ரஷ்யா வென்று தான் இந்தப் போர் முடிவடைய வேண்டும் என்னும் நிலைப்பாட்டுக்கு எதிராகவே நான் கருத்துகளை முன்வைக்கின்றேன். இந்தப் போரை ஆதரித்தல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-0281.jpg

அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

மக்களே அமைதி அமைதி அமைதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

மக்களே அமைதி அமைதி அமைதி.

அன்பரே! உக்ரேன் விடயத்தில் இன்றைய தினங்களில் நடந்து கொண்டிருப்பது அமைதி பேச்சுவார்த்தை அல்ல. பேரம் பேசும் பேச்சுவார்த்தை. இதில் அடி வாங்கப்போவது டொனால்ட் ரம்பருக்கு பிடிக்காத நாடுகளாகவும் இருக்கலாம். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரசோதரன் said:

நான் முன்னர் வேறு ஒரு இடத்தில் எழுதியிருந்தது போல, புலம் பெயர்ந்த தேசங்களில் இருந்து கருத்துகளை எழுதும் நாங்கள் எவரும் இதே கருத்துகளை இவ்வளவு வெளிப்படையாக ஊரிலிருந்தால் எழுதியிருக்க முடியாது. மேற்கு நாடுகளில் குடிபுகுந்திருக்கும் நாங்கள் அனைவருமே பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்புகள் தான். மேற்கு நாடுகள் கொடுக்கும் வசதிகளும், சுதந்திரமும், பாதுகாப்புமே எங்களுக்கு துணிவைக் கொடுக்கின்றன.

நீங்களோ நானோ புலம் பெயர்ந்த மண்ணில் இருந்துதான் எம் மனதில் உதிப்பவற்றை எழுதுகின்றோம்.அது நேர்மறையாக இருந்தாலும்சரி எதிர்மறையாக இருந்தாலும் சரி. நாம் எந்த மண்ணில் இருக்கின்றோமோ அதே மண்ணில் இருப்பவர்களும் உனக்கு ரஷ்யா பிடிக்கும் என்றால் அங்கே போய் இருந்து கதை என்பது போலவும் அங்கே குடியேறி இருக்கவேண்டியது தானே என்பது போல் எழுதும் போதுதான் நன்றி அரசியலை எதிர்க்க வேண்டி வருகின்றது. இதே நன்றி அரசியலைத்தான் ஒரு சில தமிழர்கள் இலங்கை இனவாத அரசியலுக்கு சார்பாக செய்துகொண்டிருக்கின்றார்கள்.

2 hours ago, ரசோதரன் said:

வசதி - சுதந்திரம் - பாதுகாப்பு, எங்களை இந்த நாடுகளை நோக்கி புலம்பெயர வைத்ததற்கான பிரதான காரணங்கள் கூட.

அப்படி பார்த்தால் ஜேர்மனி தான் அதிக புலம்பெயர் ஈழத்தமிழர்கள் வாழும் நாடாக இருந்திருக்க வேண்டும் சரி விடுவோம் அதைப்பற்றி அலச வேண்டாம்.😄

2 hours ago, ரசோதரன் said:

ரஷ்ய - உக்ரேன் போரை ஆதரிக்கவில்லை என்னும் உங்களின் நிலைப்பாடு மிகவும் சிறந்தது. இங்கு அமெரிக்காவிலும் அப்படியானவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். அதிபர் ட்ரம்ப் கூட போர்களில் நம்பிக்கை அற்றவர் என்றே தன்னைச் சொல்லிக் கொள்கின்றார். ஆனால், உக்ரேன் தோற்று தன் நிலத்தை இழந்து, ரஷ்யா வென்று தான் இந்தப் போர் முடிவடைய வேண்டும் என்னும் நிலைப்பாட்டுக்கு எதிராகவே நான் கருத்துகளை முன்வைக்கின்றேன். இந்தப் போரை ஆதரித்தல்ல.

போர் வெற்றிக்காக நான் ரஷ்யாவை ஆதரிக்கவில்லை.உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயம் எனும் பெயரில் நடக்கும் அரசியலையே நான் எதிர்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2025 at 14:07, Maruthankerny said:

ரசியா உக்ரைனுடன் போர் புரியவில்லை ..... சீனா இந்தியா தவிர்த்து உலகின் மிக பலம்வாய்ந்த உலக நாடுகள் அனைத்துடனும் ஒரே நேரத்தில் போர் செய்துகொண்டு இருக்கிறது. தங்களிடம் இருக்கும் அனைத்து தொழில் நுட்பங்களையும் ஆயுதங்களையும் அமேரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஜெர்மனி கொண்டு சென்று உக்ரைனில் கொட்டி வைத்துக்கொண்டுதான் இந்த போரை கடந்த 4 ஆண்டுகளாக செய்துகொண்டு இருக்கிறார்கள். தற்போதைய ரோபாட்டிக் மற்றும் ட்ரான் தொழில் நுடபத்தால் ரசியா பல ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை இழந்தது என்பது உண்மைதான். ஆனாலும் இவற்றைஎல்லாம் கடந்து ரசியா தனக்கு தேவையான பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுபாட்டில்தான் வைத்திருக்கிறது. இப்போது நினைத்தாலும் வெறும் 2 நாட்களில் உக்ரைனை அடித்து தரமடடம் ஆக்க கூடிய ஆயுதம் பலம் ரசியவிடம் உண்டு. சும்மா கூகிளில் டைப் செய்து பார்த்தாலே ரசியாவிடம் என்ன உண்டு என்பது தெரியும்.

மேல்நாட்டு தணிக்கை செய்திகளை வாசித்து உண்மை என்று நம்புபவர்கள் இரான் 2024 இல் தங்கள் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது மிஸைல் அடித்த போது அதை ஒரு எச்சரிக்கை தாக்குதலாகவே செய்தது அதில் சில மிசைல்கள் தடுத்து நிறுத்த படத்தை பார்த்து இங்கு யாழ்களத்தில் அனுமான் வெடிகள் வெடிக்கவில்லை என்று மேலைநாட்டு பிரச்சார செய்திகளை நம்பி எழுதினார்கள் ......... இந்த வருடம் இஸ்ரேல் நேரடியாகவே ஈரானை தக்க எததனித்த போது கொடுத்த பதில் அடியுடன் இஸ்ரேலில் தரைமடடமான படங்களை வீடியோக்களை அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளின் உதவியுடன் (சோசியல் மீடியாவில்) மூடி மறைக்கலாம் என்று எண்ணி .... அமெரிக்க இஸ்ரேல் இருவருமே வாயை மூடிக்கொண்டு இருந்து விடடார்கள் ..... இருப்பினும் பெரியண்ணருக்கு ஏற்படட கவுரவ குறைச்சலால் ஈரானில் உள்ள ஒரு மலையில் போய் இரண்டு குண்டுகளை போட்டுவிட்டு ஈரானின் அணுவாயுத தொழில்நுட்பம் இதோடு முடிந்தது என்று சொல்லி சந்தோச படடார். ( அதில் பகிடி என்னவென்றால் ஈரான் இஸ்ரலில் ஹாஸ்ப்பிட்டல் களை மடடம ஆக்கியது சர்வதேச குற்றம் என்று இஸ்ரேல் ஐநாவில் கூறியது. அப்போ அதை தெளிவாக தெரிந்துகொண்டுதான் காசாவில் தரைமடடம் ஆக்கினீர்களாலா? என்று ஈரான் கேட்ட்துடன் மூடிக்கொண்டு போய் விட்டார்கள்)

On 2/12/2025 at 06:58, ரசோதரன் said:

உக்ரேனுக்கும், ஈழத்திற்கும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கின்றது அல்லவா, வசீ. ஒரு நாட்டிலிருந்து பிரிந்து போய் தங்களுக்கென்று ஒரு தனிநாட்டை உருவாக்க ஈழ மக்கள் போராடினார்கள், அதே வேளையில் சுதந்திரநாடாக இருக்கும் உக்ரேன் அதன் மீது இன்னொரு நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுகின்றது.

ஈழ மக்களுக்கு தனிநாட்டை விட குறைந்த ஒரு தீர்வு தான் தற்போதைக்கு சாத்தியமானது என்பது ஈழத்திற்கான போராட்டத்தின் ஒரு மைல் கல் ஆகலாம். ஈழத்துக்கான போராட்டம் அங்கிருந்து அடுத்த கட்டத்துக்கு நகரலாம். ஆனால் உக்ரேன் தனது நிலப்பரப்பை விட்டுக் கொடுக்கும் ஒரு தீர்விற்கு சம்மதிப்பது ஒரு மைல் கல் அல்லவே........... இதில் அடுத்த கட்டம் என்ன........... முழு இறைமையையும் ஆக்கிரமிப்பாளருக்கு விட்டுக் கொடுப்பதா..............

சாதாரண மனிதர்களிடம் கருத்துக்கு விசுவாசமாக இருத்தல் என்னும் ஒரு செயல் அல்லது முயற்சி நடைமுறையில் இல்லையென்றே நினைக்கின்றேன், விளங்க நினைப்பவன். கருத்துகள் வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்ற நிலை இது. 99 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வகையினரே, நான் உட்பட. கருத்துகள் என்பது நாங்களே உருவாக்கிக் கொள்ளும் ஒரு சுய அடையாளம், பெரும்பாலும் கற்பனையான ஒன்றே. பின்னர் அந்த அடையாளத்துடன் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகின்றது. நாங்கள் வாழும் வாழ்க்கைகளுm, எங்களின் பல கருத்துகளும் மலையும், மடுவும் போல.

உலகெங்கும் ஒரு ஒற்றை இலக்குடன் போராடும் போராளிகள் இதற்கு விதிவிலக்கானவர்கள்..............🙏.

ரஷ்யாவிற்கு ஆதரவாக இருப்பவர்களிடம் நீங்கள் ரஷ்யாவுக்கு போய் வாழ்வீர்களா, உங்கள் பிள்ளைகளை ரஷ்யாவிற்கு வாழ அனுப்பிவீர்களா என்று கேட்பதில் எந்தப் பொருளும் கிடையாது. அப்படியொரு முட்டாள்தனத்தை எந்த மனிதனும் செய்யப் போவதில்லை.

'படித்தவர்கள் எல்லோரும் கழனிப் பானைக்குள் விழுந்தார்கள்..................' என்று என் வீட்டில் அன்று பலரும் சொல்லிச் சிரிப்பார்கள். வீட்டிலோ அல்லது சொந்த பந்தத்திலோ பெரிதாக படித்தவர்கள் என்று, 10 வகுப்பு சித்தி அடைந்தவர்கள் கூட, கிடையாது. அவர்கள் எல்லோருமே சேர்ந்து உருவாக்கிய அடையாளம் தான் இந்தக் கழனிப் பானை. ஒரு மன ஆறுதலுக்கு போல. ஆனால் வீட்டில் நடைமுறை வேறாக இருந்தது.............. நாங்கள் எல்லோரும் எப்படியாவது நன்றாகப் படிக்க வேண்டும் என்று தங்களால் ஆன எல்லாவற்றையும் அந்த இடர் மிகுந்த காலங்களிலும் மிகவும் செய்தார்கள். எங்களை கழனிப் பானைக்குள் விழுத்த முயன்றார்கள், ஆனாலும் எங்களில் பலரும் பானைக்குள் விழாமல் தப்பிவிட்டார்கள்...................🤣.

இது போலவே ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா போன்ற நாடுகளுக்கான ஆதரவு நிலைப்பாடுகளும்........................ சொல்லும், செயலும் ஒன்றல்ல.

ஐரோப்பா 3 ஆண்டுகளுக்கு உக்கிரேனுக்கான போருக்கு தேவையான நிதியினை ஒதுக்க 2024 - 2027 முடிவெடுத்தது, ஐரோப்பிய ஒன்றியம் போரின் மூலமான தீர்வினையே கொண்டுள்ளது, ஆனால் நிலையான சமாதானம் எட்டப்பட வேண்டும் என கூறுகின்றது, இது நியோ லிபரலிசத்தின் பலத்தின் மூலமான சமாதானம் எனும் உக்கிரேனின் நிலைப்பாடாக ஐரோப்பிய ஒன்றியம் கொள்கையுடன் இந்த போரினை தொடர விரும்புகிறது.

தற்போது கூட சமாதானத்தின் பின்னர் 800000 உக்கிரேன் இராணுவத்தினை ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக பேணப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டினை எடுக்க முனைகிறது, ஒரு நடு நிலையான நாடாக உக்கிரேன் ஐரோப்பாவிற்கும் இரஸ்சியாவிற்கும் இடையே உக்கிரேன் இருந்தால் அது அதிகமான அரசியல் ரீதியாகவும் இராணுவரீதியாகவும் ஐரோப்பாவிற்கு பாதுகாப்பினை வழங்கும் எனும் அடிப்படையினை ஏற்காத நிலை காணப்படுகிறது.

தற்போதய இரஸ்சிய இராணுவ வெற்றி அதனை அரசியல் வெற்றியாக்க முடியாவிட்டால் இரஸ்சியாவிற்கு இந்த போரினால் ஏற்பட கூடிய குறைந்த பட்ச நன்மைகள் கூட இல்லை என நான் கருதுகிறேன் (தவறாக இருக்கலாம்), அதற்காகவே அவர்கள் ஆரம்பத்திலிருந்து ஒரு அரசியல் ரீதியான தீர்வினை முன்னகர்த்த முனைகிறார்கள், மறுவளமாக ஐரோப்பிய உக்கிரேன் தரப்பிடம் போர் மூலமான தீர்வு எனும் ஒரே தெரிவே உள்ளது.

துரதிஸ்ரவசமாக தற்போது உக்கிரேன் போர் ஒரு இராணுவ ரீதியான தோல்வியினை நோக்கி செல்கிறது, ஆனால் அரசியல் ரீதியான எந்த தீர்வு திட்டமும் ஐரோப்பிய உக்கிரேன் தரப்பிடம் இல்லை, அதனால் மோதல் உறை நிலை ஒன்றினை ஏற்படுத்தி அதன் பின்னர் உக்கிரேனினை பலப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அமைதி நடவடிக்கையினை விரும்புகிறது.

மறுவளமாக இரஸ்சியா ஒரு நிரந்தர அமைதி தீர்வினை அதனது விருப்பிற்கேற்றவாறு ஏற்படுத்த முனைகிறது, இந்த போரினை உக்கிரேன் தொடர்ந்தால் உக்கிரேன் இதனை விட மோசமான இராணுவ அரசியல் சூழ்நிலையில் சிக்க நேரிடும், அதன் பேரம் பேசும் ஆற்றல் மேலும் மேலும் வீழ்ச்சியடையும், போர் முடிவினை உடனடியாக ஏற்படுத்தாவிடால் 2022 கிடைத்த தீர்வு நிலை போன்ற ஒரு தீர்வு தற்போது சாத்தியமற்றது அதே போல தற்போதுள்ள நிலை போல எதிர்காலத்தில் இருக்காது.

ரசோதரன் நான் கல்வி சமூகம் என கூறியதனை நீங்கள் உங்களை நோக்கியதாக எடுத்து கொண்டுள்ளதாக புரிகிறது நான் கூறவந்தது தமிழ் மென்போக்கு சிந்தனை குழாத்தினரை (அரசியல் துறசார் நிபுணர்கள்), எமது சமூகத்தில் முறைசார் கல்வி துறைசார் கல்வி நிபுணத்தினர் (வெவ்வேறு துறைகளில் பட்டப்படிப்பு படித்தவர்கள்) பொதுவான கல்வி சமூகமாக பார்க்கிறார்கள் ஆனால் வெளிநாடுகளில் துறைசார் நிபுணத்தினர்கள் அனைவரையும் ஒவ்வொரு வேலையிலும் உள்ள துறைசார் நிபுணத்துவர்கள் போலவே அவர்களை பார்க்கிறார்கள், இ மித் ஒப் சிமோல் பிஸ்னஸ் எனும் புத்தகத்தில் அதன் ஆசிரியர் டெக்னீசியன் என வகுக்கிறார், வேறுபட்ட perception வேறுபட்ட புரிதலை உருவாக்கிவிடுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒரு சமரசத்தை எட்டவில்லை என்று கிரெம்ளின் புதன்கிழமை தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட தூதர்களுக்கும் இடையே ஐந்து மணி நேர கிரெம்ளின் சந்திப்புக்குப் பின்னர் இந்த சமரசம் ஏற்படவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிக மோசமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தனது ஜனாதிபதி பதவியின் முழுமையான வெளியுறவுக் கொள்கை நோக்கங்களில் ஒன்றாகும் என்று ட்ரம்ப் பலமுறை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி சில சமயங்களில் புட்டின் மற்றும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆயோரை பாராட்டியும் திட்டியும் உள்ளார்.

https://athavannews.com/2025/1454988

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

ஐரோப்பா 3 ஆண்டுகளுக்கு உக்கிரேனுக்கான போருக்கு தேவையான நிதியினை ஒதுக்க 2024 - 2027 முடிவெடுத்தது, ஐரோப்பிய ஒன்றியம் போரின் மூலமான தீர்வினையே கொண்டுள்ளது, ஆனால் நிலையான சமாதானம் எட்டப்பட வேண்டும் என கூறுகின்றது, இது நியோ லிபரலிசத்தின் பலத்தின் மூலமான சமாதானம் எனும் உக்கிரேனின் நிலைப்பாடாக ஐரோப்பிய ஒன்றியம் கொள்கையுடன் இந்த போரினை தொடர விரும்புகிறது.

தற்போது கூட சமாதானத்தின் பின்னர் 800000 உக்கிரேன் இராணுவத்தினை ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக பேணப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டினை எடுக்க முனைகிறது, ஒரு நடு நிலையான நாடாக உக்கிரேன் ஐரோப்பாவிற்கும் இரஸ்சியாவிற்கும் இடையே உக்கிரேன் இருந்தால் அது அதிகமான அரசியல் ரீதியாகவும் இராணுவரீதியாகவும் ஐரோப்பாவிற்கு பாதுகாப்பினை வழங்கும் எனும் அடிப்படையினை ஏற்காத நிலை காணப்படுகிறது.

தற்போதய இரஸ்சிய இராணுவ வெற்றி அதனை அரசியல் வெற்றியாக்க முடியாவிட்டால் இரஸ்சியாவிற்கு இந்த போரினால் ஏற்பட கூடிய குறைந்த பட்ச நன்மைகள் கூட இல்லை என நான் கருதுகிறேன் (தவறாக இருக்கலாம்), அதற்காகவே அவர்கள் ஆரம்பத்திலிருந்து ஒரு அரசியல் ரீதியான தீர்வினை முன்னகர்த்த முனைகிறார்கள், மறுவளமாக ஐரோப்பிய உக்கிரேன் தரப்பிடம் போர் மூலமான தீர்வு எனும் ஒரே தெரிவே உள்ளது.

துரதிஸ்ரவசமாக தற்போது உக்கிரேன் போர் ஒரு இராணுவ ரீதியான தோல்வியினை நோக்கி செல்கிறது, ஆனால் அரசியல் ரீதியான எந்த தீர்வு திட்டமும் ஐரோப்பிய உக்கிரேன் தரப்பிடம் இல்லை, அதனால் மோதல் உறை நிலை ஒன்றினை ஏற்படுத்தி அதன் பின்னர் உக்கிரேனினை பலப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அமைதி நடவடிக்கையினை விரும்புகிறது.

மறுவளமாக இரஸ்சியா ஒரு நிரந்தர அமைதி தீர்வினை அதனது விருப்பிற்கேற்றவாறு ஏற்படுத்த முனைகிறது, இந்த போரினை உக்கிரேன் தொடர்ந்தால் உக்கிரேன் இதனை விட மோசமான இராணுவ அரசியல் சூழ்நிலையில் சிக்க நேரிடும், அதன் பேரம் பேசும் ஆற்றல் மேலும் மேலும் வீழ்ச்சியடையும், போர் முடிவினை உடனடியாக ஏற்படுத்தாவிடால் 2022 கிடைத்த தீர்வு நிலை போன்ற ஒரு தீர்வு தற்போது சாத்தியமற்றது அதே போல தற்போதுள்ள நிலை போல எதிர்காலத்தில் இருக்காது.

ரசோதரன் நான் கல்வி சமூகம் என கூறியதனை நீங்கள் உங்களை நோக்கியதாக எடுத்து கொண்டுள்ளதாக புரிகிறது நான் கூறவந்தது தமிழ் மென்போக்கு சிந்தனை குழாத்தினரை (அரசியல் துறசார் நிபுணர்கள்), எமது சமூகத்தில் முறைசார் கல்வி துறைசார் கல்வி நிபுணத்தினர் (வெவ்வேறு துறைகளில் பட்டப்படிப்பு படித்தவர்கள்) பொதுவான கல்வி சமூகமாக பார்க்கிறார்கள் ஆனால் வெளிநாடுகளில் துறைசார் நிபுணத்தினர்கள் அனைவரையும் ஒவ்வொரு வேலையிலும் உள்ள துறைசார் நிபுணத்துவர்கள் போலவே அவர்களை பார்க்கிறார்கள், இ மித் ஒப் சிமோல் பிஸ்னஸ் எனும் புத்தகத்தில் அதன் ஆசிரியர் டெக்னீசியன் என வகுக்கிறார், வேறுபட்ட perception வேறுபட்ட புரிதலை உருவாக்கிவிடுகிறது.

ரசிய உக்ரைன் போரில் இராணுவ தீர்வும் கிடையாது ........ அரசியல் தீர்வும் கிடையாது. உண்மையிலேயே உக்ரைன் மீது பற்று உள்ள ஒருவன் அதிபர் ஆகும்வரை அது நிகழ போவதே இல்லை. எரிந்து கொண்டிருக்கும் உக்ரைனை அமெரிக்காவோ அவர்கள் அருவருடிகளான ஐரோப்பிய ஒன்றியமோ நிறுத்த போவதில்லை அது எரியும் வரைதான் இவர்களுக்கு லாபம்.

உக்ரைன் போர் என்பதும் அரசியல் தீர்வு என்பதும் மேற்கு கிழக்கு ஜெர்மனி க்கு இடையிலான தடுப்பு சுவர் இடிந்த நாளில் இருந்து நடக்கிறது. அந்த சுவர் இடிக்கும்போது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சீனியர் ஜோர்க் புஸ் சோவியத் யுனினுக்கு ஒரு வாக்குறுதி எழுத்து வடிவத்திலேயே கொடுத்தார் அதாவது ...... ஜெர்மனியில் இருந்து ஒரு இன்ச் கூட நெட்டொ கிழக்கு பக்கம் வாராது என்பதுதான் அது. அன்றில் இருந்து இன்றுவரை இவர்கள் கொடுத்த ஒவ்வரு வாக்குறுதியும் ஒப்பந்தமும் இவர்களால் மீறப்பட்டுக்கொண்டே வருகிறது. இவர்களின் வாக்குறுதிகளோ ஒப்பந்தகளோ ரசியாவிற்கு புதிது அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

594057636_788350370907583_26266124301057

"பேச்சுவார்த்தை நடத்தக்கூட ஐரோப்பாவில் யாரும் இருக்கமாட்டார்கள்!" - விளாடிமிர் புதின்

அமெரிக்காவின் 28 அம்ச உக்ரைன் அமைதித் திட்டத்தை ஏற்க மறுக்கும் ஐரோப்பிய நாடுகள், ”உக்ரைனுக்கு நியாயமற்ற சமாதானத்தை திணிக்கக் கூடாது,” எனக்கூறி சமாதானத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DW தமிழ்

அப்படி போடு, அருவாளை.... 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ரசிய உக்ரைன் போரில் இராணுவ தீர்வும் கிடையாது ........ அரசியல் தீர்வும் கிடையாது. உண்மையிலேயே உக்ரைன் மீது பற்று உள்ள ஒருவன் அதிபர் ஆகும்வரை அது நிகழ போவதே இல்லை. எரிந்து கொண்டிருக்கும் உக்ரைனை அமெரிக்காவோ அவர்கள் அருவருடிகளான ஐரோப்பிய ஒன்றியமோ நிறுத்த போவதில்லை அது எரியும் வரைதான் இவர்களுக்கு லாபம்.

உக்ரைன் போர் என்பதும் அரசியல் தீர்வு என்பதும் மேற்கு கிழக்கு ஜெர்மனி க்கு இடையிலான தடுப்பு சுவர் இடிந்த நாளில் இருந்து நடக்கிறது. அந்த சுவர் இடிக்கும்போது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சீனியர் ஜோர்க் புஸ் சோவியத் யுனினுக்கு ஒரு வாக்குறுதி எழுத்து வடிவத்திலேயே கொடுத்தார் அதாவது ...... ஜெர்மனியில் இருந்து ஒரு இன்ச் கூட நெட்டொ கிழக்கு பக்கம் வாராது என்பதுதான் அது. அன்றில் இருந்து இன்றுவரை இவர்கள் கொடுத்த ஒவ்வரு வாக்குறுதியும் ஒப்பந்தமும் இவர்களால் மீறப்பட்டுக்கொண்டே வருகிறது. இவர்களின் வாக்குறுதிகளோ ஒப்பந்தகளோ ரசியாவிற்கு புதிது அல்ல.

அந்த எழுத்து வடிவ வாக்குறுதியை இங்கே இணைத்தால் நாம் புரிந்து கொள்ளலாமே மருதர்? "மேற்கில் தணிக்கை செய்து விட்டதால்" நம் போன்றவர்களுக்கு அது தெரியாமல் போயிருக்க கூடுமல்லவா😎?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

நீங்களோ நானோ புலம் பெயர்ந்த மண்ணில் இருந்துதான் எம் மனதில் உதிப்பவற்றை எழுதுகின்றோம்.அது நேர்மறையாக இருந்தாலும்சரி எதிர்மறையாக இருந்தாலும் சரி. நாம் எந்த மண்ணில் இருக்கின்றோமோ அதே மண்ணில் இருப்பவர்களும் உனக்கு ரஷ்யா பிடிக்கும் என்றால் அங்கே போய் இருந்து கதை என்பது போலவும் அங்கே குடியேறி இருக்கவேண்டியது தானே என்பது போல் எழுதும் போதுதான் நன்றி அரசியலை எதிர்க்க வேண்டி வருகின்றது. இதே நன்றி அரசியலைத்தான் ஒரு சில தமிழர்கள் இலங்கை இனவாத அரசியலுக்கு சார்பாக செய்துகொண்டிருக்கின்றார்கள்.

புரின், கிம், சகோதரத் தோழர் கடாபி, குர்திஷ் மக்களைக் கொன்ற சதாம் - இந்த தற்குறித் தலைவர்களை எதிர்ப்போர் இலங்கையில் வாழாமல் அமெரிக்கா, ஐரோப்பா என்று வந்தது புரிந்து கொள்ளக் கூடியது தானே?

புரின், கிம், சகோதரத் தோழர் கடாபி, குர்திஷ் மக்களைக் கொன்ற சதாம், இவர்களையெல்லாம் முன்னுதாரணத் தலைவர்களாகப் புகழும் ஒருவர் ஏன் அந்தந்த உதாரணத் தலைவர்களின் கீழிருக்கும் நாடுகளிலோ அல்லது ராஜபக்சக்களின் இலங்கையிலோ போய் வாழ முனையவில்லை என்பது நியாயமான கேள்வி தானே? இந்த வேறு பாடு புரியாமலா இவ்வளவு நாளும் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

பேச்சுவார்த்தை நடத்தக்கூட ஐரோப்பாவில் யாரும் இருக்கமாட்டார்கள்!" - விளாடிமிர் புதின்

அமெரிக்காவின் 28 அம்ச உக்ரைன் அமைதித் திட்டத்தை ஏற்க மறுக்கும் ஐரோப்பிய நாடுகள், ”உக்ரைனுக்கு நியாயமற்ற சமாதானத்தை திணிக்கக் கூடாது,” எனக்கூறி சமாதானத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்னும் நாலுவருசம் ஐரோப்பிய யூனியன் பல்லை கடிச்சுக்கொண்டு இருக்கப்போயினம் போல கிடக்கு. ரம்ப் அடுத்த தேர்தலில் ஆட்சியை விட்டு போனால் எல்லாம் சுபம் எண்டு நினைக்கினம் போல...அதுக்கிடையிலை ரம்பர் உக்ரேனை ஒரு வழி பண்ணீட்டுத்தான் போவார் எண்டு நினைக்கிறன்.அடுத்தது புட்டின். புட்டின் போனாலும் இல்லை மண்டையை போட்டாலும் புட்டினை விட பெரிய ரஷ்ய விசுவாசிதான் ஆட்சிக்கு வருவார் என பலர் ஊகம் தெரிவிக்கின்றார்கள்.

எனக்கு இப்ப உக்ரேனையும் செலென்ஸ்கியையும் நினைக்கத்தான் கண்ணால தண்ணி தண்ணியாய் வருகுது.😋😂🤣😎

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில போய் படித்தவர்கள்

கொழும்பில் போய் வாழ்ந்தவர்கள்

எல்லோரும் ஈழத்தில் இனப்படுகொலை ஒன்றே நடக்க்கவில்லை

விமானங்களில் அவர்கள் பூக்களை தூவினார்கள் என்றுதான் எழுதவேண்டுமோ என்னமோ ?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Maruthankerny said:

கொழும்பில போய் படித்தவர்கள்

கொழும்பில் போய் வாழ்ந்தவர்கள்

எல்லோரும் ஈழத்தில் இனப்படுகொலை ஒன்றே நடக்க்கவில்லை

விமானங்களில் அவர்கள் பூக்களை தூவினார்கள் என்றுதான் எழுதவேண்டுமோ என்னமோ ?

ஜேர்மன் நண்பரைப் போலவே உங்களுக்கும் விளக்கக் குறைவு போல தெரிகிறது:

1. சிங்களத் தலைவர்களின் இனவாதம், சிங்கள இராணுவத்தின் அட்டூழியம் - இவற்றைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் உயிர் பிழைக்க ஒரு ஈழவர் ரஷ்யா ஊடாகப் பயணித்து அமெரிக்கா வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

2. சில வருடங்களில் அமெரிக்காவில் அவர் தானே விரும்பி பிரஜையாக வந்து விடுகிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

3. அமெரிக்காவின் பிரஜையாக வந்த பின்னர், ரஷ்யாவைப் பார்த்து "எவ்வளவு அருமையான தலைமை அங்கே இருக்கிறது, எவ்வளவு அருமையான உள்ளூர்க் கொள்கைகள் இருக்கின்றன!" என்று விதந்துரைக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.

இதைக் காணும் ஒருவர், "அப்ப ஏன் அவர் ரஷ்யாவிலேயே தங்கவில்லை? அல்லது அங்கே போய்ப் பிரஜையாக முயலவில்லை?" எனக் கேட்பது சாதாரணமாக எதிர்பார்க்கக் கூடியது தானே?

இந்தக் கேள்வி ஏன் சிலருக்குக் கோபமூட்டுகிறது எனில், அவர்களுடைய "நான் சொல்வதைச் செய், ஆனால் நான் செய்வதைக் கண்டு கொள்ளாதே!" 😎 என்ற போலித் தனத்தைத் தோலுரித்துக் காட்டி விடுவதால் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

ஐரோப்பா 3 ஆண்டுகளுக்கு உக்கிரேனுக்கான போருக்கு தேவையான நிதியினை ஒதுக்க 2024 - 2027 முடிவெடுத்தது, ஐரோப்பிய ஒன்றியம் போரின் மூலமான தீர்வினையே கொண்டுள்ளது, ஆனால் நிலையான சமாதானம் எட்டப்பட வேண்டும் என கூறுகின்றது, இது நியோ லிபரலிசத்தின் பலத்தின் மூலமான சமாதானம் எனும் உக்கிரேனின் நிலைப்பாடாக ஐரோப்பிய ஒன்றியம் கொள்கையுடன் இந்த போரினை தொடர விரும்புகிறது.

தற்போது கூட சமாதானத்தின் பின்னர் 800000 உக்கிரேன் இராணுவத்தினை ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக பேணப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டினை எடுக்க முனைகிறது, ஒரு நடு நிலையான நாடாக உக்கிரேன் ஐரோப்பாவிற்கும் இரஸ்சியாவிற்கும் இடையே உக்கிரேன் இருந்தால் அது அதிகமான அரசியல் ரீதியாகவும் இராணுவரீதியாகவும் ஐரோப்பாவிற்கு பாதுகாப்பினை வழங்கும் எனும் அடிப்படையினை ஏற்காத நிலை காணப்படுகிறது.

தற்போதய இரஸ்சிய இராணுவ வெற்றி அதனை அரசியல் வெற்றியாக்க முடியாவிட்டால் இரஸ்சியாவிற்கு இந்த போரினால் ஏற்பட கூடிய குறைந்த பட்ச நன்மைகள் கூட இல்லை என நான் கருதுகிறேன் (தவறாக இருக்கலாம்), அதற்காகவே அவர்கள் ஆரம்பத்திலிருந்து ஒரு அரசியல் ரீதியான தீர்வினை முன்னகர்த்த முனைகிறார்கள், மறுவளமாக ஐரோப்பிய உக்கிரேன் தரப்பிடம் போர் மூலமான தீர்வு எனும் ஒரே தெரிவே உள்ளது.

துரதிஸ்ரவசமாக தற்போது உக்கிரேன் போர் ஒரு இராணுவ ரீதியான தோல்வியினை நோக்கி செல்கிறது, ஆனால் அரசியல் ரீதியான எந்த தீர்வு திட்டமும் ஐரோப்பிய உக்கிரேன் தரப்பிடம் இல்லை, அதனால் மோதல் உறை நிலை ஒன்றினை ஏற்படுத்தி அதன் பின்னர் உக்கிரேனினை பலப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அமைதி நடவடிக்கையினை விரும்புகிறது.

மறுவளமாக இரஸ்சியா ஒரு நிரந்தர அமைதி தீர்வினை அதனது விருப்பிற்கேற்றவாறு ஏற்படுத்த முனைகிறது, இந்த போரினை உக்கிரேன் தொடர்ந்தால் உக்கிரேன் இதனை விட மோசமான இராணுவ அரசியல் சூழ்நிலையில் சிக்க நேரிடும், அதன் பேரம் பேசும் ஆற்றல் மேலும் மேலும் வீழ்ச்சியடையும், போர் முடிவினை உடனடியாக ஏற்படுத்தாவிடால் 2022 கிடைத்த தீர்வு நிலை போன்ற ஒரு தீர்வு தற்போது சாத்தியமற்றது அதே போல தற்போதுள்ள நிலை போல எதிர்காலத்தில் இருக்காது.

ரசோதரன் நான் கல்வி சமூகம் என கூறியதனை நீங்கள் உங்களை நோக்கியதாக எடுத்து கொண்டுள்ளதாக புரிகிறது நான் கூறவந்தது தமிழ் மென்போக்கு சிந்தனை குழாத்தினரை (அரசியல் துறசார் நிபுணர்கள்), எமது சமூகத்தில் முறைசார் கல்வி துறைசார் கல்வி நிபுணத்தினர் (வெவ்வேறு துறைகளில் பட்டப்படிப்பு படித்தவர்கள்) பொதுவான கல்வி சமூகமாக பார்க்கிறார்கள் ஆனால் வெளிநாடுகளில் துறைசார் நிபுணத்தினர்கள் அனைவரையும் ஒவ்வொரு வேலையிலும் உள்ள துறைசார் நிபுணத்துவர்கள் போலவே அவர்களை பார்க்கிறார்கள், இ மித் ஒப் சிமோல் பிஸ்னஸ் எனும் புத்தகத்தில் அதன் ஆசிரியர் டெக்னீசியன் என வகுக்கிறார், வேறுபட்ட perception வேறுபட்ட புரிதலை உருவாக்கிவிடுகிறது.

28 அம்ச சமாதான திட்டம் என்பது ரஷ்யாவினாலேயே தயாரிக்கப்பட்டது. அதை அவர்கள் அமெரிக்காவிடம் கொடுத்தார்கள். அதிபர் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டார். ஆனால் மார்க் ரூபியோவும், அதிபரின் குடியரசுக்கட்சியின் பிரதிநிதிகளும் கூட இந்த 28 அம்ச சமாதான திட்டத்தை நியாயம் அற்றது என்று ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தத் திட்டம் உக்ரேன் முற்று முழுதாக ரஷ்யாவிடம் சரண் அடையும் நிலை என்றே அமெரிக்க பிரநிதிகளால் நிராகரிக்கப்பட்டது.

பின்னர் மார்க் ரூபியோவின் தலைமையில் 28 அம்ச திட்டம் 19 அம்ச திட்டமாக மாற்றப்பட்டது. இதை ரஷ்யா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இங்கு எவருமே அவர்களின் இலக்கை அடையாமல் போரை நிறுத்தி சமாதானத்துக்கு தயாராக இல்லை என்பதே உண்மை. நான்கு தரப்பிற்கும் வெவ்வேறான இலக்குகள் உள்ளன என்றே தெரிகின்றது:

  1. அமெரிக்கா - வழமை போலவே அமெரிக்காவிற்கு கிடைக்கப் போகும் குறுகிய மற்றும் நீண்ட கால பொருளாதார நலன்களே அமெரிக்காவின் பிரதான இலக்கு. அரசியல் பலம் மற்றும் ரஷ்யாவைப் பலவீனப்படுத்தல் என்பன அடுத்த இலக்குகள். அதிபர் ட்ரம்ப் வந்த பின் அவரினதும், அவரைச் சார்ந்தவர்களினதும் (அவரது கட்சியினர் அல்ல) நலன்களும், அவர்கள் அடையப் போகும் பயன்களும் இன்னொரு இலக்காகி உள்ளது. இந்தச் சண்டையில் நோபல் பரிசு பெறுவது என்பது கூட ஒரு இலக்கு என்பது முகம் சுளிக்க வைக்கும் நிஜம்.

  2. ரஷ்யா - அதிபர் புடின் ஒரு பலமான ரஷ்யாவை, சோவியத் ஒன்றிய காலத்தில் இருந்ததைப் போல, உருவாக்க நினைக்கின்றார். ரஷ்யாவிடம் இருக்கும் அணு ஆயுதங்கள், இரசாயன ஆயதங்கள் போன்றவற்றை தவிர்த்துப் பார்த்தால், இன்றைய உலக ஒழுங்கில் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் அருகில் கூட வரமுடியாத நிலையிலேயே ரஷ்யா உள்ளது. உக்ரேனுடன் சண்டை போடுவதற்கே ரஷ்யாவிற்கு வட கொரியாவின் பத்தாயிரம் வீரர்கள் களத்தில் தேவைப்படுகின்றார்கள். அதை விட வேலை வாய்ப்புகள் என்று சொல்லி அழைத்து வரப்பட்ட இலங்கை இளைஞர்கள் கூட கட்டாயமாக களத்துக்கு ரஷ்யாவால் அனுப்பப்படுகின்றார்கள். நேற்று தென் ஆபிரிக்காவில் இதே விடயத்தில், ரஷ்யாவின் போருக்கு ஆட்களை சேர்த்த குற்றத்திற்காக, சில பிரபலமான தென் ஆபிரிக்கர்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், அதிபர் புடினின் நோக்கம் ஒன்றே. அது சமாதானம் அல்ல. அவருடைய நோக்கம் முழு உக்ரேனையும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே.

  3. ஐரோப்பா: யாராவது சண்டை பிடித்துக் கொள்ளட்டும், யாராவது அவர்களின் வளங்களை செலவழித்துக் கொள்ளட்டும், நாங்கள் அப்படியே இருந்து விடுவோம் என்று நினைக்கின்றார்கள். அத்துடன் ரஷ்யாவின் மீதும், அதிபர் புடினின் மீதும் பயமும் இருக்கின்றது. பலம் என்பதை விட, அதிபர் புடினின் மூர்க்கத்தனமே அவர்களை யோசிக்க வைக்கின்றது. அதிபர் புடினின் சாத்தான் - 2 நீண்ட தூர ஏவுகணை பரிசோதனை இந்த வாரமும் வெற்றியளிக்கவில்லை. அதிபர் புடின் இதை தொடரப் போவதாகவே சொல்லியிருக்கின்றார். ஐரோப்பாவும், அமெரிக்காவும் இப்படியான ரஷ்யாவின் நடவடிக்கைகளை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக எதிர்க்கவே போகின்றார்கள். உக்ரேன் அவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பம்.

  4. உக்ரேன்: உக்ரேனியர்கள் தங்கள் இறைமைக்காகவே போராடுகின்றார்கள். உலகில் மிகப் பெரிய நாடுகளின் அருகில் அமைந்திருக்கும் சிறிய நாடுகளுக்கு தெரிவுகள் மிகக் குறைவு. உக்ரேனுக்கும் அதுவே நிலை. அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஆதரவளிக்கா விட்டால், உக்ரேன் இன்றே முடிந்தது. ஒரு தேசிய இனமே இந்த உலகில் இருந்து மெதுமெதுவாக மறைந்துபோகும்.

    நீங்கள் கல்விச் சமூகம் என்று சொன்னதை நான் என்னை நோக்கியதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் பொதுவாக படித்து பட்டம் பெற்றவர்களையே நீங்கள் சொல்லுகின்றீர்கள் என்று நினைத்துவிட்டேன். துறைசார் நிபுணர்களை என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை என்று நீங்கள் சொல்லியிருப்பது சரியே. பட்டங்கள் பெறுபவர்கள் எல்லோரும் கல்விச் சமூகமாக ஆவதில்லை.................. போகும் வழியில் கிடைத்த பட்டங்களாக எடுத்துக் கொண்டு, ஒரு புதிய சமூகமாக மாறாமல், தங்கள் வழியிலேயே வாழ்ந்து முடிப்பவர்களும் பலர் இருக்கின்றார்கள்......................

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்போ புலிக்காய்ச்சலால் நலிந்து மெலிந்து போகிறார்வர்கள் ....

தத்துவம் சொல்லி தருகிறார்கள் ......... நோர்வேயில் குளிர் என்று உண்மையை சொல்வது என்றால் அவர்கள் ஆப்பிரிக்க போய்தான் சொல்ல வேண்டுமாம்.

சிரித்து சாகவேண்டும் என்பது எங்கள் விதியோ என்னமோ ?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

அப்பப்போ புலிக்காய்ச்சலால் நலிந்து மெலிந்து போகிறார்வர்கள் ....

தத்துவம் சொல்லி தருகிறார்கள் ......... நோர்வேயில் குளிர் என்று உண்மையை சொல்வது என்றால் அவர்கள் ஆப்பிரிக்க போய்தான் சொல்ல வேண்டுமாம்.

சிரித்து சாகவேண்டும் என்பது எங்கள் விதியோ என்னமோ ?

"புரின் சர்வாதிகாரி" என்று சொல்லும் அதே ஆட்கள் தான் - குறைந்த பட்சம் இந்தக் களத்திலாவது- "ட்ரம்ப் ஒரு மெலிதான (lite) சர்வாதிகாரி" என்றாவது எழுதுகிறார்கள். கறுப்பின மக்கள் மேல் நடத்தப் பட்ட, நடத்தப் படும் அடக்கு முறையையும் அவர்கள் தான் இங்கே கண்டித்திருக்கிறார்கள். பெண்கள் - ஓம், பெண்கள்😉 - மேல் நடத்தபடும் அடக்கு முறைகள், மாற்றுப் பாலினர் மேல் நடத்தபடும் அடக்கு முறைகள் இவையெல்லாவற்றையும் இங்கே கண்டிக்கிறார்கள்.

உங்கள் "காய்ச்சல் இல்லாத கண்ணுக்கு" இவற்றுள் எதையாவது "புரின் புரியன்மார்" இங்கே பேசியதாக தெரிந்திருந்தால் ஒரு தடவை சுட்டிக் காட்டுங்கள்! புலிகள் மீது இருந்த குறைகளை சொல்வோரால் புலிகளின் பெயர் நாறியதை விட, அந்தப் பிழைகளுக்கு முரட்டு முட்டுக் கொடுக்கும் "மண் லாறி" களால் தான் அவர்கள் பெயர் இங்கே மிகவும் நாறியிருக்கிறதென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் எழுத்தில் இல்லாத ஒரு விதி இருக்கிறது

எங்கள் கருத்துக்களை நாங்கள் எழுத முடியாது ......... இவர் என்ன எழுதுவார் என்று மூன்றாம் நபர் எழுதுவார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.