Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01 Dec, 2025 | 04:50 PM

image

(எம்.மனோசித்ரா)

தித்வா சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட அதிதீவிர மோசமான நிலைமை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தத் தீர்மானத்தின்படி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கொழும்பில் உள்ள பிளவர் வீதி அரசியல் அலுவலகத்தில்  புதன்கிழமை (03) கூடவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இது தொடர்பில் குறிப்பிடுகையில், ஒரு கடுமையான இயற்கை அனர்த்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

2003 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவின் போதும், வெள்ளத்திற்குப் பிந்தைய காலப்பகுதியிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமளிக்கவுள்ளார்.

இந்தக் கடுமையான பேரழிவிற்குப் பிறகு, பாராளுமன்றத்திலும் வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒரே இடத்தில் அழைப்பது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும் என்றாகும். 

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

நாடு இந்தபாடு படுகிறது, சேர்ந்து கைகொடுப்போமென்றில்லாமல் பாராளுமன்றத்தில் கூப்பாடு போட்டுகொண்டு வெளியேறுதுகள் மந்தைக்கூட்டம். எதிர் பேரணி என்றவுடன், திருடர் பிடிபட்டவுடன் ஒன்று கூடி தெருவில் இறங்கி, ஆர்ப்பாட்டம் பண்ணி நாட்டை பிளவுபடுத்துதுகள். இதுகளெல்லாம் ஒன்று கூடி இதைவிட பேரழிவை ஏற்படுத்தத்தான் முயற்சி பண்ணுவார்கள். இதே தமிழருக்கெதிரான கலவரம் என்றால்; கட்சி பேதமின்றி ஒன்றுகூடி கைகொடுத்து அழிப்பார்கள், வீரவசனம் பேசுவார்கள். வரலாறு காணாத, நாடு தழுவிய வெள்ளம். இதற்குள் புலிகளை அழித்த படையினர், கொரோனாவை விரட்டிய படையினர், வெள்ளத்தையும் கடப்பர் என்று வீரவசனம் பேசியிருப்பார் மஹிந்தாவாக இருந்திருந்தால்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழட்டுக்

குஞ்சரனுக்கு

அறளை

பெயரலாச்சே ...!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, satan said:

நாடு இந்தபாடு படுகிறது, சேர்ந்து கைகொடுப்போமென்றில்லாமல் பாராளுமன்றத்தில் கூப்பாடு போட்டுகொண்டு வெளியேறுதுகள் மந்தைக்கூட்டம். எதிர் பேரணி என்றவுடன், திருடர் பிடிபட்டவுடன் ஒன்று கூடி தெருவில் இறங்கி, ஆர்ப்பாட்டம் பண்ணி நாட்டை பிளவுபடுத்துதுகள். இதுகளெல்லாம் ஒன்று கூடி இதைவிட பேரழிவை ஏற்படுத்தத்தான் முயற்சி பண்ணுவார்கள். இதே தமிழருக்கெதிரான கலவரம் என்றால்; கட்சி பேதமின்றி ஒன்றுகூடி கைகொடுத்து அழிப்பார்கள், வீரவசனம் பேசுவார்கள். வரலாறு காணாத, நாடு தழுவிய வெள்ளம். இதற்குள் புலிகளை அழித்த படையினர், கொரோனாவை விரட்டிய படையினர், வெள்ளத்தையும் கடப்பர் என்று வீரவசனம் பேசியிருப்பார் மஹிந்தாவாக இருந்திருந்தால்.

இன அழிப்பிற்கு மட்டும் தான் சிங்களவன் ஒற்றுமையானவன்.. இதர கொசுறு வேலைகளுக்கெல்லாம் தமிழனுக்கு நிகரானவன்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்

அனுரா வெள்ள அனர்த்தத்திற்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லையாம். ஏன் ஒவ்வொரு அரசியல்வாதியும் தன பிரிவில் நடவடிக்கை எடுத்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை? அனுரா தடுத்தாரா? இல்லை முன்னெப்போதும் இப்படியான அனர்த்தங்கள் நடைபெறவில்லையா? அப்போ இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்திருந்தார்கள்? மழையை எச்சரித்திருக்க வேண்டுமா அல்லது குளங்களை உடைப்பெடுக்க வேண்டாமென தடுத்திருக்க வேண்டுமா? எதிலும் எதிர்ப்பு தெரிவிப்பதும் அதில் அரசியல் செய்வதுமே இவர்களது வேலை. அனுரா மக்களை கொலை செய்துவிட்டாராம். இனப்படுகொலை செய்யும்போது பாராட்டு தெரிவித்தார்கள், முன்நடவடிக்கை ஏதுமில்லாமல் மக்களை முட்கம்பி வேலிக்குள் மந்தைபோல் அடைக்கும்போது யாரும் கேள்வி கேட்கவில்லை. இது இயற்கை அழிவுக்கு அனுராவை குற்றம் சாட்டிக்கொண்டு வெளியேறுகிறார்கள். இதுதான் மக்கள் மட்டில், நாட்டில் இவர்களுக்குள்ள பொறுப்பு. தன்னிடம் நாட்டை ஒப்படைக்கும்படி சஜித் அழைப்பு விடுக்கிறார். கோத்தா நாட்டை பொறுப்பெடுக்கும்படி இவரை அழைத்தபோது மறுப்பு தெரிவித்த இவருக்கு, இப்போ ஜானாதிபதியாசை வந்துவிட்டது. அனுரா ஆட்சி நடத்தினால் இனிமேல் யாருக்கும் ஜானாதிபதி பதவி கிடைக்கப்போவதில்லையென்றா? அல்லது இனி அரசியலே செய்யமுடியாதென்றா இந்த ஆசை இப்போ வந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

அனுராவிற்க்கு ஆதரவு அதிரிக்கின்றது👍

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, உடையார் said:

அனுராவிற்க்கு ஆதரவு அதிரிக்கின்றது👍

இல்லை, தவறு. அரசியல்வாதிகளின் சுயநலத்தை, கோமாளித்தனத்தை, செயலற்ற பேச்சை சுட்டிக்காட்டினேன். வகைதொகையின்றி, மக்களை மூச்சுவிடக்கூட அவகாசம் கொடுக்காமல், இறந்த உறவுகளை அடக்கம் செய்ய விடாமல் கொன்று குவித்தபோது, ஆதரவு, பாராட்டு, முட்டுக்கொடுத்தவர்களும், அதே கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு மூச்சுவிடாமல் நிஞாயப்படுத்தியவர்களும் கூட இயற்கை அழிவை, ஜனாதிபதியின் மேல் குற்றம்சாட்டும் விநோதத்தை கூறினேன், அவ்வளவுதான். விடுதலைப்போர் முடிவுக்கு வந்தவுடன் மஹிந்தவுக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாகவும் அவரது செயற்திட்டங்களில் தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தவர்கள் எல்லாம், இன்று தமது பொறுப்பை, பங்களிப்பை தட்டிக்கழித்துவிட்டு வெளியேறுகிறார்களே, அது ஏன்? அப்படியென்றால் தமிழரை அழிப்பதற்குத்தான் இவர்களது ஆதரவும் பங்களிப்புமா? என்று கேள்வி எழுப்புகிறேன். இதில் அனுராவை எங்கு நான் பாராட்டினேன்? உங்களின் இந்தக்கருத்தை கண்டவுடன் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிக்கொண்டு ஒருவர் ஓடோடி வரப்போகிறார்!

13 hours ago, satan said:

அனுராவை குற்றம் சாட்டிக்கொண்டு வெளியேறுகிறார்கள். இதுதான் மக்கள் மட்டில், நாட்டில் இவர்களுக்குள்ள பொறுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, உடையார் said:

அனுராவிற்க்கு ஆதரவு அதிரிக்கின்றது👍

அதில். என்ன. தப்பு. ? இலங்கை. தமிழர்கள். இரண்டு. சிறந்த. தமிழ் தலைவர்களை. பெற்று இருந்தார்கள்.

அகிம்சைக்கு. தந்தை. செல்வா.

ஆயுதப் போராட்டத்துக்கு. தலைவர் பிரபாகரன். எந்த. நன்மையும். தீர்வையும் பெற முடியவில்லை. இனியும். பெற முடியாது. என்னைப் பெறுத்த வரையில். இலங்கை. தமிழருக்கு ஒரு. சிறந்த. சிங்களத்தலைவர். தேவை. வேண்டும். அந்த தலைவர் தமிழருக்கு. பிரச்சனைகளுண்டு. என்றும். அதை நான். தீர்ப்பேன். என்றும். நாடு. முழுவதும். தமிழ். சிங்கள. முஸ்லிம். மக்கள் மத்தியில். சொல்ல வேண்டும். இதற்க்கு அனுர. சிறந்த. நபர். அவர். சொல்லியும். உள்ளார். எனவே ஆதரிக்கலாம். அல்லவா. ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு இந்த நாட்டில் பிரச்சனையுண்டு, சிங்கள அரசியல்வாதிகளால் அவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள், அநிஞாயம் செய்யப்பட்டிருக்கிறார்கள், அது தீர்க்கப்படவேண்டும், அவர்களும் இந்நாட்டின் குடிமக்கள், சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வெளிப்படையாக, அரச கதிரையில் இருந்து கொண்டு பகிரங்கமாக ஏற்றுக்கொள்கிறார். பதவியிழந்த பின் நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் மத்தியில் காலந்தாழ்த்தியேனும் உணர்ந்தது வரவேற்கத்தக்கது, தைரியமானது. அதை நான் வரவேற்கிறேன், எனது ஆதரவு அவருக்குள்ளது. அதற்காக மற்றவர்களும் ஆதரிக்க வேண்டுமென பரப்புரையோ, வற்புறுத்தலோ பண்ண மாட்டேன். அவரது கை பலம் பெற்றால் நல்லது நிகழ வாய்ப்புண்டு காலந்தாழ்த்தியேனும். அதற்காக அவர் நிறைய சவால்களை சந்திக்க, கடக்க வேண்டியது நிதர்சனம். அவர் தன் சொந்தக்கட்சிக்காரர்களாலேயே விமர்ச்சிக்கவும் பழி சுமத்தவும் படலாம். ஏன் உயிருக்கு கூட உத்தரவாதமில்லை. அப்பாவிபோலிருந்த சஜித் எப்படி குரைக்கிறார் பாருங்கள். மற்றவர்கள் சும்மா விடுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

இல்லை, தவறு. அரசியல்வாதிகளின் சுயநலத்தை, கோமாளித்தனத்தை, செயலற்ற பேச்சை சுட்டிக்காட்டினேன். வகைதொகையின்றி, மக்களை மூச்சுவிடக்கூட அவகாசம் கொடுக்காமல், இறந்த உறவுகளை அடக்கம் செய்ய விடாமல் கொன்று குவித்தபோது, ஆதரவு, பாராட்டு, முட்டுக்கொடுத்தவர்களும், அதே கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு மூச்சுவிடாமல் நிஞாயப்படுத்தியவர்களும் கூட இயற்கை அழிவை, ஜனாதிபதியின் மேல் குற்றம்சாட்டும் விநோதத்தை கூறினேன், அவ்வளவுதான். விடுதலைப்போர் முடிவுக்கு வந்தவுடன் மஹிந்தவுக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாகவும் அவரது செயற்திட்டங்களில் தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தவர்கள் எல்லாம், இன்று தமது பொறுப்பை, பங்களிப்பை தட்டிக்கழித்துவிட்டு வெளியேறுகிறார்களே, அது ஏன்? அப்படியென்றால் தமிழரை அழிப்பதற்குத்தான் இவர்களது ஆதரவும் பங்களிப்புமா? என்று கேள்வி எழுப்புகிறேன். இதில் அனுராவை எங்கு நான் பாராட்டினேன்? உங்களின் இந்தக்கருத்தை கண்டவுடன் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிக்கொண்டு ஒருவர் ஓடோடி வரப்போகிறார்!

நீங்கள் தவறாக விளங்கிவீட்டீர்கள், அனுராவிற்கு மக்கள் ஆதரவு கூடுகின்றது, அவ்வளவே. ஏன் வீட்டில் கூட அவருக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கின்றது, அண்மை யாழ் போன போது பலர் அவரைபற்றி நன்றாக கதைத்தார்கள்.

3 hours ago, Kandiah57 said:

அதில். என்ன. தப்பு. ? இலங்கை. தமிழர்கள். இரண்டு. சிறந்த. தமிழ் தலைவர்களை. பெற்று இருந்தார்கள்.

அகிம்சைக்கு. தந்தை. செல்வா.

ஆயுதப் போராட்டத்துக்கு. தலைவர் பிரபாகரன். எந்த. நன்மையும். தீர்வையும் பெற முடியவில்லை. இனியும். பெற முடியாது. என்னைப் பெறுத்த வரையில். இலங்கை. தமிழருக்கு ஒரு. சிறந்த. சிங்களத்தலைவர். தேவை. வேண்டும். அந்த தலைவர் தமிழருக்கு. பிரச்சனைகளுண்டு. என்றும். அதை நான். தீர்ப்பேன். என்றும். நாடு. முழுவதும். தமிழ். சிங்கள. முஸ்லிம். மக்கள் மத்தியில். சொல்ல வேண்டும். இதற்க்கு அனுர. சிறந்த. நபர். அவர். சொல்லியும். உள்ளார். எனவே ஆதரிக்கலாம். அல்லவா. ?

8 minutes ago, உடையார் said:

நீங்கள் தவறாக விளங்கிவீட்டீர்கள், அனுராவிற்கு மக்கள் ஆதரவு கூடுகின்றது, அவ்வளவே. ஏன் வீட்டில் கூட அவருக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கின்றது, அண்மை யாழ் போன போது பலர் அவரைபற்றி நன்றாக கதைத்தார்கள்.

இதே நிலை தான் என் வீட்டில், நண்பர்கள மத்தியில், உறவுகள் மத்தியிலும்.

இன்று புலிகள் இல்லை. செயல்திறன் அற்ற தமிழ் அரசியல் கட்சிகள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. ஏனைய சிங்கள கட்சிகள் மீதும் நம்பிக்கை இல்லை.

அனுர மீது மட்டும் தான் நம்பிக்கை என்பது அவர்களின் நிலைப்பாடு.

அனுர மீதான நம்பிக்கை, அவர் சார்ந்த கட்சி மீது இல்லை என்பதும், தனி மனிதன் மீதான நம்பிக்கை ஆபத்தானது என்பதையும் காலம் அவர்களுக்கு காட்டாமல், அவர்களின் நம்பிக்கை நடைமுறை சாத்தியமாகும் வாய்ப்புகள் வாய்க்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

நீங்கள் தவறாக விளங்கிவீட்டீர்கள், அனுராவிற்கு மக்கள் ஆதரவு கூடுகின்றது, அவ்வளவே.

தவறாக விளங்கிக்கொண்டமைக்கு வருந்துகிறேன். பின்னர்தான் நீங்கள் இட்ட குறியீட்டை கவனித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2025 at 15:16, பிழம்பு said:

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

நிலாவைக் காட்ட நரி நண்டுகளை அழைத்த கதையை, அம்புலிமாமாவில் என் சிறுவயதில் படித்துள்ளேன்.🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

அனுர மீது மட்டும் தான் நம்பிக்கை என்பது அவர்களின் நிலைப்பாடு ]

இந்த அநுர குமார திசாநாயக்க என்பவர் செம்ரம்பர் 2024 முன்பும் அரசியலில் தீவிரமாக இருந்திருக்கின்றார். தனி மனித நம்பிக்கை சொல்லி ஆட்சிக்கு ஆதரவு திரட்டுவது பேய்காட்டுவது சுலபம். ஜேவிபி மிக பெரிய அளவில் இணைய தளங்கள் மூலம் தமிழில் பிரசாரம் நடத்துகின்றது. ஒரு காணொளி பார்த்தேன் அதன் தலைப்பு

தேரர்களை கம்பெடுத்து விரட்டிய சிங்கள மக்கள் - தென்னிலங்கையில் கடும்பதற்றம்.

இப்படியானதை பார்த்தால் தமிழர்கள் மிகவும் சந்தோசம் அடைவார்கள் என்று தான் அப்படி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

அனுர மீது மட்டும் தான் நம்பிக்கை என்பது அவர்களின் நிலைப்பாடு ]

கடல்நீரில் தத்தளிப்பவன் சிறு துரும்பைக் கண்டாலும் அதனைப்பற்றி தன் உயிர் காப்பாற்றவே முயல்வான். துரும்புபற்றி ஆராயமாட்டான். சொல்லவெண்ணா துன்பங்களை அனுபவித்துவரும் தமிழர்களும் அப்படித்தான். கோத்தபாயாவே அனுரா வடிவில் வந்தாலும் பற்றிக்கொள்ளவே முயல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

கடல்நீரில் தத்தளிப்பவன் சிறு துரும்பைக் கண்டாலும் அதனைப்பற்றி தன் உயிர் காப்பாற்றவே முயல்வான். துரும்புபற்றி ஆராயமாட்டான். சொல்லவெண்ணா துன்பங்களை அனுபவித்துவரும் தமிழர்களும் அப்படித்தான். கோத்தபாயாவே அனுரா வடிவில் வந்தாலும் பற்றிக்கொள்ளவே முயல்வார்கள்.

அதுதான் அங்குள்ள பலரின் நிலமை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.