Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் தடுப்பு முகாமில் வைத்து கருணா நையப்புடைக்கப்பட்டார்?

Featured Replies

வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பிரிட்டனில் கைது

British Home office confirms Karuna arrest

The Home Office of Britain confirmed that Vinayagamoorthy Muralitharan alias Karuna Amman was arrested in London this morning for traveling under a forged passport.

Last Updated 6.46 p.m. / Nov 02

http://www.dailymirror.lk

Edited by இணையவன்

  • Replies 50
  • Views 16.9k
  • Created
  • Last Reply

லண்டனில் பலரை படுகொலை செய்யும் திட்டத்துடந்தான் "எடுப்பார் கைப்பிள்ளை" கருணா போலிப் பாஸ்போட்டுடன் வந்ததாக சொல்லப்படுகிறது. சொ..யின் குடும்பம் ஏற்கனவே காட்வஸ்ஷேயரில்(பானற் என்று கூறுகிறார்கள்) இருப்பதாக தகவல்.

கருணாவின் லண்டன் முகவர் "உண்டியலான்" ஜெயதேவனும் தலைமறைவாம்!!!

.......

சிறிலங்கா இராணுவத்தினரால் இரகசியமாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணா, போலி கடவுச்சீட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதியற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

இனித்தான் இங்கு புலத்திலுள்ள எம்மவர்களின் பங்கு முக்கியம்!! பிடிபட்ட எடுபார்கைப்பிள்ளையை திரும்ப சிறிலங்காவிற்கு பிரிட்டன் அனுப்பப் போவதாக ஒரு தகவல்!!!

இத்தருனத்தில் நாம் இங்குள்ள உட்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், ஸ்கொட்லன்ட்யாட் ஆகியவற்றிற்கு கொடுக்கும் அழுத்தங்களின் மூலம் கருணாவை சட்டத்தின் முன் கொணரலாம்! கடத்தல்கள், கொலைகள், கற்பளிப்புகள், கொள்ளைகள் எல்லாம் சிறிலங்கா அரசின் பின்னனியுடந்தான் நடந்ததையும் உலகிற்கு உணர்த்தலாம்!!!

Edited by இணையவன்

இந்த வெள்ளைக்காரங்கள் கருணாவைத் திரும்ப இலங்கைக்கு நாடு கடத்தி என்ன ஆகப்போகிறது?

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி வெளிவந்துள்ளது

http://eelamforum.com/viewtopic.php?t=15&a...d3b14b97fd04695

கருணாவின் கைதை பிரித்தானிய உள்துறை அமைச்சு உறுதி செய்துள்ளது

கருணா ஒட்டுக்குழுவின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் கைது செய்யப்பட்டுள்ளதை பிரித்தானிய உள்துறை அமைச்சு (Home Office of Britain) உறுதிப்படுத்தியுள்ளது.

போலியான கடவுச்சீட்டுடன் முரளிதரன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கருணாவுடன் சில உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு ஏமாற்று நடவடிக்கை...கருணாவைபாதுகாக்க நடத்தபட்ட நடவடிக்கை என்றே கருத தோன்றுகின்றது...

ஒருவரைப் பாதுகாப்பதுக்கு இப்பிடியும் கைது செய்து அரசியல் பாதுகாப்புக் கொடுக்கலாம் எண்டு லண்டன் பொலிசுக்கும் தெரிஞ்சுபோட்டுது.....................

Britain confirms Karuna Arrest The British Home office today confirmed that Karuna was arrested in London and is being held at the Metropolitan police. In an email to the Daily Mirror the press officer of the Home Office Zoe Paxton said Amman was arrested following a joint operation between the BIA and Metropolitan Police but refused to comment further."Karuna Amman has been arrested following a joint operation between the BIA and Metropolitan Police. He is now being held in immigration detention it would not be appropriate to comment further." Zoe Paxton told the Daily MirrorThe Daily Mirror has learnt that Amman was arrested with a forged passport and is likely to be deported to Colombo.http://www.dailymirror.lk/2007/11/02/news/br13.aspடெய்லி மிரர், கருங்காலி கருணா விமான நிலையத்தில் பிடிபட்டது போன்ற விதத்தில் செய்தியை வெளியிட்டு இருந்தாலும், இங்கு சிலர் கூறுகிறார்கள், கருங்காலி மனைவியுடன் இருக்கும் போதுதான் மாட்டுப்பட்டதென்று!! பிடிபடும்போதும் கைத்துப்பாக்கியும் அம்பிட்டதாகத் தகவல்!!! உறுதி செய்ய முடியவில்லை!!!

  • கருத்துக்கள உறவுகள்

போட்டிக் குழுத் தலைவர் கருணா லண்டனில் திடீர் கைது

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து போட்டிக் குழுவை தொடங்கிய முரளீதரன் என்கிற கர்னல் கருணா, லண்டனில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். போலி பாஸ்போர்ட்டில் லண்டனுக்கு வந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பிரிவு தளபதியாக இருந்தவர் கருணா. திடீரென பிரபாகரனுக்கு எதிராக திரும்பிய கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்ற போட்டிக் குழுவைத் தொடங்கினார்.

இலங்கை ராணுவத்தின் முழு ஆதரவோடு புலிகள் இயக்கத்திற்கு எதிராக செயல்படத் தொடங்கினார். இவரது ஒத்துழைப்புடன்தான் கிழக்கில் சில வெற்றிகளை இலங்கை படைகள் பெற முடிந்தது என்று கூறப்பட்டது.

சமீப காலமாக கருணா குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. அவரை இலங்கைப் படைகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாகவும், காவலில் அவர் இருப்பதாகவும் கூட செய்திகள் வந்தன.

சமீபத்தில் அவர் லண்டனுக்குத் தப்பி ஓடி விட்டதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் இன்று காலை லண்டனில் கருணாவை, குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போலி பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கருணா கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு லண்டனில் வைத்து அவரை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடித்துள்ளனர். போலியான பாஸ்போர்ட் மூலம் லண்டனுக்கு வந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கருணா கைது செய்யப்பட்டிருப்பதை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தற்போது அவர் மெட்ரோபாலிடன் போலீஸாரின் பிடியில் இருப்பதாக உள்துறை அமைச்சக அலுவலக தலைவர் ஜோ பாக்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இங்கிலாந்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும், போலீஸாரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் கருணா சிக்கினார். இதுகுறித்து இலங்கை அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். மேல் விவரங்களைத் தர அவர் மறுத்து விட்டார்.

கருணாவை இலங்கைக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் கருணாவை இலங்கை போலீஸார் கைது செய்வர். அவர் மீது இலங்கை பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

காட்டிக் கொடுத்ததா இலங்கை?

இத்தனை காலம் இலங்கை அரசின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்த கருணா, திடீரென லண்டன் கிளம்பிப் போனதும், அங்கு திடீரென கைது செய்யப்பட்டிருப்பதும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

கருணாவை இலங்கை அரசே லண்டனுக்கு அனுப்பி வைத்து தற்போது அவரை இங்கிலாந்து போலீஸாரிடம் மாட்டி விட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தமிழ்ச் செல்வன் மரணம், கருணாவின் கைது என அடுத்தடுத்து நடந்துள்ள இந்த சம்பவங்களால் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

thatstamil.com

:icon_idea::icon_idea: உந்த கருணா Watford Shopping Centre பக்கம் உலாவியதை சிலர் பார்த்ததாக சொல்கிறார்கள். அப்படியாயின் கருணா அந்த ஏரியாவிலேயே இருந்திருக்க வேண்டும். முன்பும் கருணா குடும்பம் Hertfordshire இல் இருப்பதாகத்தான் செய்தியும் வந்தது.

மற்றும் கருணாவின் கைது தொடர்பாக பல கதைகள் உலாவுகின்றது.

1) சிலர் கருணாவை பின் தொடர்ந்து, இடத்தை அறிந்து பிரித்தானிய கவுன்ஸிலர் ஒருவருக்கு தகவல் கொடுத்து, அவர் அதை பிரித்தானிய அமைச்சர் ஒருவரின் மூலம் உள்துறை அமைச்சருக்கு கொடுத்த அழுத்தமே, கருணா கம்பி எண்ணுகிறாராம்.

2) இங்குள்ள ஈ.என்.டி.எல்.எப் கும்பல் கருணாவை மோப்பம் பிடித்துத்தானாம் போட்டுக் கொடுத்தது.

3) கருணா, அடித்துக் கொண்டுவந்த காசில், யாரோ ஒரு கிழக்கு மாகாணத்தவரின் பெயரில் தானாம் வீடு(பங்களா) வாங்கியதாம்.(கருணா இங்கு வந்ததே வேறுபெயரில், போலிப் பாஸ்போட்டில் பிரான்ஸ் மூலமாம். சொந்தப் பெயரில் வீடு வாங்க முடியாது, போதிய ஆவணங்கள் இல்லை). இறுதியில் வாங்கப் பெயர் கொடுத்த ஆசாமியே போட்டுக் கொடுத்து விட்டு வீட்டை அபேஸ் பண்ணும் சதியாம்!!

கருணா இண்று "நூலறுந்த பட்டமோ", "சிறகு வெட்டப்பட்ட பறவை" கணக்குத்தான்! கருணாவுக்கோ, கருணாவை வைத்திருந்த கூட்டத்துக்கோ ஒண்று மட்டும் தெரிந்திருக்கும் "பரமசிவன் கழுத்தில் பாம்பு இருக்கு மட்டும்தான், பாம்புக்கு மரியாதை", பாம்பானது, தான் பரமசிவன் கழுத்திலிருந்து கொண்டே கருடனை பார்த்து "சவுக்யமா?" என்று கேள்வி கேட்டனான், பரமசிவன் இல்லாட்டியும் கேட்பேன் என நினைத்தால் ...புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............ தான் வரும்.:icon_idea::)

பண்பற்ற சொற்கள் மாற்றப்பட்டுள்ளன. - இணையவன

Edited by இணையவன்

Breakaway leader of Sri Lanka's Tamil Tiger rebels arrested in Britain

LONDON: A breakaway leader of Sri Lanka's Tamil Tiger rebels has been arrested in Britain, the government said Saturday.

The Home Office said Vinayagamoorthi Muralitharan, also known as Col. Karuna, was detained in a joint operation by police and immigration officials.

A spokesman said he was being held in immigration detention, but refused to say where he was detained or whether Sri Lanka would begin extradition proceedings.

Karuna was a top leader of the Tamil Tigers, who have been fighting for more than two decades for a homeland for the minority Tamil community in the north and east of the Indian Ocean island. More than 70,000 people have been killed in the fighting.

Karuna defected in 2004 with thousands of his men and formed his own militia. The next year, Karuna's group joined the Sri Lankan government in the fight against their old comrades.

Foreign Office minister Kim Howells said in May that Britain believed Karuna to be responsible for "extra-judicial killings, abductions, intimidation of displaced persons and child recruitment."

http://www.iht.com/articles/ap/2007/11/03/...Lanka-Rebel.php

பரமசிவன் கழுத்தில் பாம்பு இருக்கு மட்டும்தான், பாம்புக்கு மரியாதை", பாம்பானது, தான் பரமசிவன் கழுத்திலிருந்து கொண்டே கருடனை பார்த்து "சவுக்யமா?" என்று கேள்வி கேட்டனான், பரமசிவன் இல்லாட்டியும் கேட்பேன் என நினைத்தால் ...புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............ தான் வரும்.

100% உண்மை நான் எப்படி இருந்தேன் இப்படி ஆகிட்டேன் என வடிவேல் ஸ்ரைலில் சொல்லுவார்

  • கருத்துக்கள உறவுகள்

பிடிபட்டுள்ள கருணாவை பிரித்தானியாச் சிறைகளில் நீண்டநாட்களுக்கு தள்ளுவதற்கு விரும்பினால் அதைத் தற்போது செய்திட முடியும்.

துரோகம் செய்த பிற்பாடு ஏதாவது கொலை தொடர்பாக கொல்லப்பட்டவரின் உறவினர்கள், நியாயம் கேட்டு நீதிமன்றத்தை நாடமுடியும்.

இதனால் நீதிமன்ற விசாரணை முடியும்வரை உள்ளுக்குள்ளேயே அடைபட்டு, அல்லது குற்றவாளியாக இனம் காணப்பட்டால் தண்டனை பெறவும் வழியுண்டு.

தேவை ஏற்பட்டால் செய்யலாம். இதற்கு வழக்கறிஞர்ளின் ஆலோசனைசந்திப்பது மிக நல்லது

UK police and immigration services have arrested a prominent

Sri Lankan rebel figure and placed him in immigration detention, British officials say.

more:-

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7076248.stm

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் கருணாவிற்கு எதிராக வீசா நிராகரிக்கப்பட்ட பாதிக்கபட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தால் கருணாவிற்கு லண்டனில் சட்டநடவடிக்கை - பிரித்தானிய கவுன்சில் வட்டாரங்கள் நிதர்சனத்தின்ஊடாக தகவல்.

ஜ திங்கட்கிழமைஇ 5 நவம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

தாயகத்தில் கருணாவால் பாதிக்கபட்டு லண்டனில் அகதி விண்ணப்பம் நிராகரிக்கபட்டவர்கள் உங்கள் அகதி விண்ணப்பத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் கருணாவிற்கு எதிராக லண்டனில் உங்கள் வதிவிடத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் எதிர்வரும் திங்கட் கிழமைக்கு இடையில் முறைப்பாடு செய்தால் தற்போது கைது செய்து சிறையில் வைக்கபட்டிருக்கும் கருணாமீது வழக்கு பதிவாகலாம் என்று பிரித்தானிய தகவல்கள் தெரிவித்தன. இதனால் வீசா நிராகரிக்கபட்டவர்கள் உங்கள் வீசா பெறுவதற்கான சந்தாப்பத்தை மேலும் அதிகரிக்கமுடியும். முக்கியமாக நீங்கள் கொடுத்த வாக்குமூலத்தில் கருணா தொடர்பாக முன்னதாகவே அகதி அந்தஸ்து முறைப்பாட்டில் வாக்குமூலம் கொடுத்திருந்தால் அதிகம் உங்களுக்கு சாதகமாக அமையும். கருணா குடிவரவு குடியகல்வு அமைச்சின் ஆதரவுடன் பொலிசார் இனைந்து கைது செய்திருந்த செய்தியை நாம் பிரசுரித்திருந்தோம். கருணா கைதாவதற்குமுதல் கருணா விவகாரம் குடிவரவு குடியகல்வு அமைச்சரை சந்தித்த தமிழ் கவுன்சிலர் தயா ஊடாக பரிமாறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

UK detains breakaway Tamil leader

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7076248.stm

nitharsanam.com

இப்ப யோசிப்பான் துரோகி இலங்கை அரசும் கம்பி நீட்டிவிட்டது என

இராஜதந்திரியாக தலைவரின் ஆசீர்வாதத்துடன் பல நாடுகள் சுற்றியவனுக்கு

கள்ள பாஸ்போட்டுடன் ஐரோப்பா வர வேண்டிய நிலைமை :icon_idea: :icon_idea: :lol:

இந்த கானல் கருணனுக்கு இதைவிடவும் சீரழிவுகள் இருக்கிறது

Edited by இணையவன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 04-11-2007 03:50 மணி தமிழீழம் [தாயகன்]

கருணா போர்க்குற்றம் புரிந்தவர் - நியூயோர்க் மனித உரிமை அமைப்பு

சிறுவர்களைக் கடத்தி, கட்டாயப் பயிற்சி வழங்கிவரும் கருணா ஒட்டுக்குழுவின் தலைவரான முரளிதரன் விநாயகமூர்த்தி மீது போரியல் குற்றத்தின் கீழ் பிரித்தானியா சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா, ஒட்டுக்குழுவாக இயங்கி சிறுவர்களைக் கடத்திச் சென்று கட்டாய பயிற்சி வழங்குதில் வல்லுனராக திகழ்ந்து வருவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக றொயிற்றர் செய்திச் சேவைக்கு மேலும் கருத்துரைத்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த சட்ட ஆலோசகர் ஜிம் றோஸ், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சிறுவர் கடத்தல், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்கு கருணா மீது பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுத்த பின்னரே சிறீலங்காவிற்கு அவரை நாடு கடத்துவது பற்றி சிந்திக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக்கிழமை கருணா கைது செய்யப்பட்ட போது அவர் இராஜதந்திரிகள் பயன்படுத்தும் கடவுச்சீட்டை வைத்திருந்தாரா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

கருணாவிடம் இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டு? [திங்கட்கிழமை, 05 நவம்பர் 2007, 06:36 AM ஈழம்] [ப.தயாளினி] பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக்கிழமை கருணா கைது செய்யப்பட்ட போது அவர் இராஜதந்திரிகள் பயன்படுத்தும் கடவுச்சீட்டை வைத்திருந்தாரா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக்கிழமை (02.11.07) சிறிலங்கா அரசின் துணை இராணுவக்குழுவின் தலைவரான கருணா திடீரென கைது செய்யப்பட்டது மிகுந்த ஆச்சரியமானது.விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மரணத்துடன் எதுவும் நடக்கலாம் என்பதனால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இதுவா? தமிழ்க் குழுக்களுக்கு இடையில் மோதல்கள் உருவாகலாம் என்று பிரித்தானியா அஞ்சுகின்றதா? போன்ற கேள்விகள் இதன் மூலம் எழுந்துள்ளன.வெள்ளிக்கிழமை இரவு வரையிலும் கருணா கைது செய்யபப்பட்டது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும், ஊடகங்களினூடாகவே தாம் அதனை அறிந்து கொண்டதாகவும் பிரித்தானியாவில் உள்ள சிறிலங்காத் தூதரகம் தெரிவித்தது.பிரித்தானியாவின

சீரியசான லிடயம் சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுங்கள்

லண்டனில் பிடிபட்ட கருணாவின்மீது ஏதாவது குற்ரவிசாரணை வந்தால் அதை புலிகள் மீது போட மறைமுகமாக சதி நடக்கிறதா?

இதை வாசித்துப்பாருங்கள்

http://ramwatchintamil.blogspot.com/2007/1...-post_2330.html

  • கருத்துக்கள உறவுகள்

கருணா மீது எவ்வாறு விசாரணை அமையும்?

குடிவரவு விதிகளை மீறினார் என்று குற்றச் சாட்டின் பேரில் பிரிட்டிஷ் பொலிஸாரினால் கடந்த வெள்ளியன்று கைது செய்யப்பட்ட கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், இலங்கைக்கு நாடு கடத்தப்படுவாரா? பிரிட்டனின் சட்ட விதிகளுக்கு அமைவாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா? அல்லது போர்க்குற்றத்தின் அடிப்படையில் விசாரணைக்குட்படுவாரா என பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

கடந்த வெள்ளியன்று பிரிட்டனில் பிரிட்டிஷ் பொலிஸாரினாலும் மற்றும் பிரித்தானிய எல்லை குடிவரவு முகவர்களினாலும் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கை ஒன்றில் இவர் கைது செய்யப்பட்டார். எனினும் இவரது கைது குறித்து உடன் அறிவிக்கப்படவில்லை என லண்டனிலுள்ள இலங்கைக்கான தூதுவராலயம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும்,

குடிவரவு குற்றச்சாட்டின் பேரிலேயே கருணா அம்மான் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. அவரிடம் போலியான கடவுச்சீட்டு இருந்ததாகவும், எனினும் சட்டபூர்வமான விசாவை அவர் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,கட்டுப்பாடுகள் நிறைந்த ஹீத்ரோ விமான நிலையத்தை எவ்வாறு இவர் கடந்து லண்டனுக்குள் பிரவேசித்தார்? என்றும் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் அவரது நடவடிக்கைகள் லண்டனில் மிகவும் அவதானமாகக் கண்காணிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகின்றது. லண்டனின் வட பகுதியில் அமைந்துள்ள ஹேர்ட்போர்ட் சயரிலும், அவரது அலுவலகம் ஈஸ்ட்ஹேம் பகுதியிலும் அமைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. அத்துடன் கடந்த வார முற்பகுதியில் லண்டனில் அமைந்துள்ள இந்துக்கோவில் ஒன்றில் காணப்பட்டதாகவும் தகவகள் கூறுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போரியல் குற்றத்தின் கீழ் பிரித்தானியா சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென நியூயோர்க்கை தளமாகக்கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் இதுவரை பிரிட்டிஷ் பொலிஸார் எதனையும் உறுதியாகக்கூறவில்லை. பிரிட்டிஷ் குடிவரவு சட்டத்தை மீறினார் என்ற பெயரில் விசாரிக்க அல்லது நாடு கடத்த முடியும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

-வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.